அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
கொழும்பிலுள்ள வெளிநாட்டுத்தூதுவர்கள் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்வதும், அங்கு சந்திப்புகளை நிகழ்த்துவதும் வழக்கமானதொரு விடயமாக இருந்தாலும், கடந்த வாரம் சீனத் தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தை வழக்கமானதொன்றாக எடுத்துக்கொள்ள முடியாது. சீனத் தூதுவர் யி ஷியான்லியாங், சீனத் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் லி செங்லின் உள்ளிட்ட தமது அதிகாரிகளுடன், கடந்த 14ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார். அவர் அங்கு மூன்று முக்கிய தரப்பினரைச் சந்தித்துப் பேசினார். வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட குரே, யா்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன். சீனத் தூதுவர் ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு மே…
-
- 0 replies
- 718 views
-
-
ஆர்ப்பாட்டம் ஒரு ஜனநாயக உரிமை என்.கே. அஷோக்பரன் இலங்கையில், ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி செய்து கொண்டிருந்த 1992ஆம் ஆண்டு காலப்பகுதி. 1977 இலிருந்தே ஐக்கிய தேசிய கட்சிதான் தொடர்ந்து ஆட்சியிலிருந்தது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்தது. எப்படியாவது ஆட்சியை மீண்டும் பிடித்துவிட, அவர்கள் பகீரதப் பிரயத்தனத்தை முன்னெடுத்த காலகட்டம் அது. இதன் ஒரு படியாக, அதிகரித்து வரும் விலைவாசி, ஊழல், தனியார்மயமாக்கல், அதிகரிக்கும் கடத்தல்கள், படுகொலைகள் உள்ளிட்ட காரணங்கள் தொடர்பிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஒரு புதுவிதமான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது. அதுதான் ‘ஜன கோஷா’. அரசாங்கத்துக்கு தன…
-
- 0 replies
- 718 views
-
-
நல்லூர் துப்பாக்கிச் சூடு; எது உண்மை? நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தென்மேற்கு மூலையில், கடந்த சனிக்கிழமை மாலை 5.10 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இலங்கைத் தமிழர்கள் வாழுகின்ற பல்வேறு நாடுகளிலும் கூட, இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் முன்பாக இந்தச் சம்பவம் நடந்தமை; அவரது மெய்க்காவலர்களில் ஒருவர் சூடுபட்டு இறந்தமை, மற்றொருவர் காயமடைந்தமை; இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் பின்னணி; இதுபோன்ற பல்வேறு காரணங்களால், இந்தச் சம்பவம், மக்…
-
- 1 reply
- 717 views
-
-
"தமிழீழ முழக்கத்துடன் மீண்டும் சிலிர்த்து எழும் தமிழ் இளையோர்" உலகில் தமிழர்களுக்கென்று ஒரு நாடு அமைவதற்கான அக, புற நிலைகளை இலங்கைத் தீவில் உருவாக்கிய பெருமை சிங்கள வன்கொடுமையாளர்களையே சாரும். அது மட்டுமல்லாமல், இலங்கைத் தீவில் தமது வர்நிலையை மேம்படுத்துவதற்கான தேவைகளைக் குறிவைத்து அமைதி வாழ்வு வாழ்ந்த ஈழத் தமிழர்களைப் புலியாகப் பாயவைத்த பெருமையும் சிங்கள இனவாதிகளுக்கே சேரும். சிங்கள இனவாத, வன்கொடுமைகளுக்கு ஈழத் தமிழர்கள் அனைத்தையும் இழந்து நின்ற முள்ளிவாய்க்காலின் பின்னரான காலங்களிலும் சிங்கள இனவாதம் தன்னை மறு ஆய்விற்கு உள்ளாக்கவில்லை. மாறாக, பெரும் இன அழிப்புப் போர் ஒன்றினால் பெற்ற வெற்றியின் போதையில், அதை இன்னொரு மகாவம்ச வெற்றியாகக் கணித்துக்கொண்ட சிங்…
-
- 2 replies
- 717 views
-
-
ஹர்த்தால் விளையாட்டில் சோடை போன கட்சிகள் October 12, 2023 — கருணாகரன் — சட்டமா அதிபரின் (அரசு) அழுத்தத்தத்தினால் பதவியைத் துறந்ததாகச் சொல்லப்படும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு ஆதரவு தெரிவித்தும் அரசின் செயற்பாடுகளை எதிர்த்தும் பல விதமான போராட்டங்கள் தமிழ்ப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் போராட்டங்களில் வடக்குக் கிழக்கிலுள்ள தமிழ் அரசியற் கட்சிகளும் அவற்றின் ஆதரவாளர்களும் கலந்து கொள்கின்றனர். சில போராட்டங்களை இவற்றில் சில தரப்புகள் முன்னெடுப்பதையும் காண முடிகிறது. அதில் ஒரு போராட்டம், “நீதி தேவதைக்கு அரோஹரா”, ”இலங்கைக்கு அரோஹரா..” என்று கொக்குவிலில் நடந்தது. இந்தப் போராட்டத்தை நடத்தியவர்கள் என்ன கருதினார்களோ தெரி…
-
- 2 replies
- 717 views
- 1 follower
-
-
2020 தேர்தலில் மேலும் மோசமடைந்துள்ள பெண்களின் பிரதிநிதித்துவம் - என்.சரவணன் நடந்து முடிந்தத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மொத்தம் 12 பேர் மாத்திரமே இம்முறை தெரிவாகியுள்ளனர். எட்டு பேர் பொதுஜன முன்னணி சார்பிலும், இருவர் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பிலும், தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தலா ஒவ்வொருவரும் தெரிவாகியுள்ளனர். இவர்களில் ஐவர் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டிருப்பவர்கள். சிறுபான்மை இனங்களில் இருந்து எவருமே தெரிவு செய்யப்படவில்லை. சென்ற பாராளுமன்றத்தில் 13 பேர் (5.77%) இருந்தனர். கீதா குமாரசிங்கவின் உறுப்புரிமை பறிபோனதோடு அதுவும் பின்னர் 12 ஆக சுருங்கியது. இம்முறை 4.4.% வீதமாக சுருங்கிவிட்டது. இம…
-
- 1 reply
- 717 views
-
-
தாராளமற்ற சனநாயக எழுச்சியும் கிழக்கு வல்லரசுகளும்: உலக விதியை நிர்ணயிக்குமா இந்தியா? JUL 10, 2018by புதினப்பணிமனைin கட்டுரைகள் அண்மைய காலங்களில் சர்வதேச அளவில் சனநாயகம் வீழ்ச்சி கண்டு வருவது குறித்து தாராள சனநாயக சித்தாந்த ஆதரவாளர்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளனர். அரசியல் சுதந்திரம், சனநாயகம், திறந்த சந்தை, திறந்த சமூக அமைப்பு என கவலையற்ற நிலையில் இனிமேல் மேலைத்தேய தாராள சனநாயகம் வாழ்ந்திருக்க முடியாத நிலை உருவாகி வருகிறது. இந்த அம்மணமான உண்மையை மறுக்க முடியாதுள்ளது என்ற சர்வதேச சனநாயக நெறிமுறைகள் குறித்த கவலையை அவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். கடந்த ஜூன் 22ஆம் திகதி டென்மார்க் தலைநகரான கொப்பனேகனிலே ஒரு ஆய்வு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு முன்னைய நா…
-
- 0 replies
- 717 views
-
-
தீர்வுக்கான அழுத்தங்களை கொடுப்பதற்கு முயலவேண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையிலான முரண்பாடுகள் காரணமாக தமிழ் மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வாய்ப்புக்கள் அனைத்துமே தட்டிப்பறிக்கப்படுகின்றன. எனவே ஜனாதிபதியும் பிரதமரும் ஓரணியாக இணைந்து தமிழர் பிரச்சினைக்கு முதலில் தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்று தமிழரசுக்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்திருக்கின்றார். அரசாங்கத்தின…
-
- 0 replies
- 717 views
-
-
பேர்லின் சுவர்: இருந்த காலமும் இறந்த காலமும் இருந்தாலும் அழிந்தாலும் சில வரலாற்றுச் சின்னங்கள் பிறவற்றிலும் முக்கியமானவை. அவற்றின் தொன்மையை விட, வரலாற்றுப் பெருமை அவற்றுக்கு அவ்விடத்தை வழங்குகிறது. உலக அரசியல் வரலாற்றில் தமக்கெனத் தனியிடம் பிடித்த சின்னங்கள் வெகுசில. குறிப்பாகத் தேச அரசாங்கங்களின் தோற்றமும் மன்னராட்சியின் முடிவும் விளைவித்த, புதிய அரசு முறையும் அதன் விருத்தியும் அப்போக்கில் நடந்த உலகப் போர்களின் அவலங்களுக்குப் பிந்திய, தத்துவார்த்த அரசியல் வரலாற்றுச் சின்னங்கள் முக்கியமானவை. ஆனால், அவைபற்றிப் பேசுதல் குறைவு. அவற்றுள் ஒன்று, இன்றுவரை முரண்படும் கதையாடல்களால், கட…
-
- 0 replies
- 716 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலக்கு என்ன? அவர்களின் பயணம் எப்படிச் செல்லுகின்றது என்பது தொடர்பில் அந்தக் கட்சியில் இருக்கும் சிலரிடையே தெளிந்தவொரு நிலைப்பாடு இல்லாமல் இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு என்ன வாக்குறுதி அளித்தது? 2009இற்குப் பின்னரான கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதனைச் சாதித்தது? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பயணம் எந்தளவுக்கு சாத்தியமளித்தது? இவைகள் பற்றிய பொறுப்பின்றி தமது பதவி இருப்பு குறித்த பதற்றத்தில் உள்ளது கூட்டமைப்பு. அண்மையில் கிளிநொச்சி பளையில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், அண்மைக்காலத்தில் உருவாகி வரும் கூட்டணி என்பது இலங்கை அரசா…
-
- 0 replies
- 716 views
-
-
[size=4]இலங்கை ஜனாதிபதியின் இந்தப் பயணத்தை அனுமதித்த இந்திய அரசின் செயல், தமிழக மக்களின் உணர்வுகளை படுமோசமான முறையில் அவமானப் படுத்தி விட்டதாக அமைகின்றது. மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் ஒரு சாதகமான விளைவையும் இந்திய மத்திய அரசைப் பொறுத்தவரையில் பாதகமான விளைவுகளையுமே ஏற்படுத்தியுள்ளது[/size] [size=2] [size=4]இந்தியாவிலுள்ள சாஞ்சியில் நிறுவப்படவுள்ள ஒரு பௌத்த பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாடும் விழாவில் கலந்துகொள்வதற்காக இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கான ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதேசமயத்தில் இந்தப் பயணத்தின்போது இவர் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.[/size][/size] …
-
- 0 replies
- 716 views
-
-
ஒரு புத்தக வெளியீடும் தலைவர்களும் தமிழ் மக்களும் நிலாந்தன் வவுனியாவில், அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசுவின் நூல் வெளியீட்டின் போது கஜேந்திரகுமார் பின்வரும் தொனிப்படப் பேசியிருந்தார். '2001 இலிருந்து நான் அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். எனது அரசியல் வாழ்வில் அரசியல் தலைவர்களும், மக்களும் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் இந்தளவுக்கு புவிசார் அரசியலைப்பற்றி உரையாடப்பட்டது இதுதான் முதற் தடவை. அந்த வகையில் இது ஒரு வித்தியாசமான மேடை' என்று. அந்த அரங்கு ஒரு சமநிலையற்ற அரங்கு என்று வடமாகாண சபை அமைச்சர் ஐங்கரநேசன் விமர்சித்திருந்தார் அந்தக் கூட்டத்தில் தமிழரசுக்கட்சி அதிருப்தியாளர்களும் தமிழரசுக்கட்சிக்கு எதிரானவர்களுமே பங்கேற்றிருந்தபடியால் …
-
- 2 replies
- 716 views
-
-
தெரிவுகளற்ற அனைத்துலகச் சமூகம் - நிலாந்தன் 29 ஏப்ரல் 2013 நந்திக் கடலில் தோற்கடிக்கப்பட்டது விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டும் அல்ல. இலங்கைத் தீவில் அரசாங்கத்திற்கு எதிராகக் காணப்பட்ட அனைத்து எதிர்ப்புச் சக்திகளும் தோற்கடிக்கப்பட்டு விட்டன. தகவல் புரட்சி நாடுகளையும் கண்டங்களையும் திறந்து வருகின்றது. நிதி மூலதனமும் நாடுகளையும் கண்டங்களையும் திறந்து வருகிறது. தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம் என்பவற்றின் அடிப்படையில் கூறின் உலகம் மேலும் மேலும் திறக்கப்பட்டு வருகிறது. இப்பொறிமுறைக்கு எதிராக நாடுகளையும் சமூகங்களையும் மூடமுற்படும் அரசாங்கங்களோ அல்லது அமைப்புக்களோ இப்பொறிமுறையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முற்படும் நாடுகளோடு அல்லது நாடுகளின் கூட்டமைப்…
-
- 2 replies
- 716 views
-
-
தமிழ்த் தேசியர்களின் இரட்டைப் போக்கும் தமிழ் மக்கள் பேரவையும்! கலாநிதி சர்வேந்திரா கடந்த வாரம் இளம் நோர்வேஜிய ஆய்வாளர் ஒருவர் தாயக நிலமைகள் குறித்தும் தமிழ் டயாஸ்பொறாவின் தாயக ஈடுபாடு குறித்தும் என்னுடன் கலந்துரையாடினார். இவர் அண்மையில் இரண்டு வாரங்கள் இலங்கைப் பயணம் செய்து பலரையும் சந்தித்து உரையாடி தரவுகள் சேகரித்து வந்தவர். இப் பயணத்தின்போது இவர் சந்தித்து உரையாடிய தமிழர்கள் பலரும் ஆட்சிமாற்றத்தின் பின் தமிழர் வாழ்வுநிலை சார்ந்து மிகுந்த நம்பிக்கையுடன் பேசவில்லை எனவும், ஓர் எச்சரிக்கை கலந்த உணர்வுடன்தான் பேசினார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மாறாக இவர் சந்தித்துப் பேசிய சிங்கள சமூகத்தினர் ஆட்சிமாற்றம் குறித்து கூடுதல் மகிழ்வுடன் பேசியதாகவும் த…
-
- 0 replies
- 716 views
-
-
திருமதி சசிகலா ரவிராஜ் அவர்கள் கூட்டமைப்பில் தேர்தலில் நிறுத்தப்பட போகிறார் என்றவுடன் முல்லை மதி எழுதியது. அம்மா உனக்கு சொன்னால் கேளு வேணாம் இந்த வம்பு. காசும் பணமும் தும்பு மானம் ஒன்றே கொம்பு. ஔவை சொன்தை கேளு நீ ஆரியமானை நம்பு. (அம்மா நீ) ஆனந்தியைக் இழுத்துவந்து அசிங்கப்படுத்தினார் அன்று அடுத்த பெயராய் உன்னையிவர் களங்கப்படுத்துவார் இன்று. குப்பை மேட்டில் வந்து நின்று என்ன தேடுவாய் குண்டுமணியுமில்லை என்ன காணுவாய் சொல்லு ஔவை சொன்தை கேளு நீ ஆரியமானை நம்பு. (அம்மா நீ) கணவன் காத்த நல்ல பெயரை சீரழிக்க கூடாது. கருத்தில்லா கூட்டத்தில் மறந்து உன் காலை வைக்கக் கூடாது. வாக்கு பெறும் இயந்திரமாய் உன்னை நாட்டுவார். வாசலோ விரட்டியடித்து …
-
- 1 reply
- 716 views
-
-
2009இற்குப் பின்னரான காலத்தில் அறிவாலும் சிந்தனையாலும் நமது உரிமைகளை வெல்ல வேண்டிய ஒரு சூழலுக்குள் ஈழத் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது. மௌனிக்கப்பட்ட வலுவான ஒரு ஆயுதப் போராட்டத்தின் நியாயத்தை அறிவால் மாத்திரமே எடுத்துக் கூறும் சூழலும் ஈழத் தமிழர்களின்பால் சூழப்பட்டது எனலாம். எனினும் 2009இற்குப் பின்னரான காலத்தின் அரசியலில் அறிவையும் தெளிந்த சிந்தனையையும் பயன்படுத்துவதைத்தான் காண முடியவில்லை. சிங்கள தேசத்தின் பிரதான ஆட்சியாளர்கள் மாத்திரமல்ல, பல்வேறு அரசியல்வாதிகளும் பேரினவாத நோக்கம் கொண்ட போலியான வரலாற்றாசிரியர்களும் இலங்கையின் வரலாறு குறித்து பொய்யான தகவல்களை பரப்பியபோது, அதனை வரலாற்று ரீதியாக பேச எமது பேராசிரியர்கள் எவரும் முன்வரவில்லை. காரணம் தமது பதவி…
-
- 1 reply
- 716 views
-
-
திலீபன் கொலையாளி என்றால் டக்ளஸ் தேவானந்தா யார்..? எம்.கே.சிவாஜிலிங்கம் செயலாளர் நாயகம் த.தே.கட்சி வை.தவநாதன் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர்
-
- 0 replies
- 716 views
-
-
'பாலை' மறவராவோம் தமிழீழம் பெறுவோம் [ கீற்று ] - [ Jan 06, 2012 15:10:05 GMT ] தமிழ் சினிமாவின் ஆராம்ப காலங்களில் புராணக் கதைகளும், தேசபக்தி இந்திய சுதந்திர போராட்ட கதைகளும் அதிக அளவில் ஆக்கிரமித்திருந்தன. அதன் பிறகு, திராவிட இயக்க உணர்வு பெற்றவர்கள் திரை உலகை ஆக்கிரமித்து, பிறகு பழைய மரபை உடைத்தனர். (பராசக்தி, நாடோடி மன்னன், வேலைக்காரி). நடுத்தர மற்றும் மேட்டுக்குடி வர்க்க நலன்களை மையப்படுத்தியும், குடும்ப உறவுகளுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் திரைப்படங்களை வடிவமைத்தவர் கே.பாலசந்தர். இட ஒதுக்கீட்டை விமர்சிக்கும் அரசியலை திரையில் புகுத்தியதில் முன்னோடி இவரே. தமிழ்த்திரையை கிராமத்து மனிதர்களின் களமாகவும், கிராமங்களை தமிழ்த்திரையின் தவிர்க்கமுடியாத அங்க…
-
- 0 replies
- 716 views
-
-
நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி உலகில் அரசியல் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் அரசுகள் தமது செல்வாக்கை பலப்படுத்தும் முகமாக பல்வேறு இதர அரசுகளுடனும் கூட்டு வைத்துக் கொள்வது சர்வதேச அரசியலில் ஒரு முக்கியமான அங்கமாக பார்த்து கொள்ளப்படுகிறது. இத்தகைய கூட்டுகள் அரசுககள் மத்தியில் ஏற்படக் கூடிய புரிந்துணர்வுகளின் அடிப்படையிலும், அரசுகள் ஒன்றுடன் ஒன்று மேவும் தன்மையும் உள்ள இடங்களில், தமது நலன்களை அடிப்படையாக வைத்து பிரதானமாக செய்து கொள்ளப்படுகிறது. கூட்டுகளில் பாத்திரம் வகிக்கும் அரசுகள் தம்மத்தியிலே உள்ள நடத்தைகளை ஒழுங்கமைப்பு செய்து கொள்ள வேண்டியதன் தேவையை உணர்ந்து, பொதுவான பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரும் முகமாக குறிப்பிட்ட …
-
- 0 replies
- 716 views
-
-
-
- 0 replies
- 715 views
-
-
"இங்கு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறிலங்கா அரசாங்கமானது நாட்டில் 'இறுதியான நிலையான அரசியற் தீர்வொன்றை' முன்வைப்பதற்குப் பதிலாக 'வீதிகளுக்கு தரைவிரிப்புக்களை (carpeting the road)' போடும் பணியில் ஈடுபட்டுள்ளது" என றெக்னோ அடிகளார் குறிப்பிட்டார். இவ்வாறான அதிருப்தியான உணர்வுகளுடன் வடக்கில் மக்கள் வாழ்கின்றனர். இவ்வாறு ucanews.com correspondent, யாழ்ப்பாணத்திலிருந்து தெரிவிக்கின்றார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவின் வடக்கில் வாழும் பெரும்பாலான தமிழ் மக்களைப் போன்று, கடந்த நான்கு ஆண்டுகளாக அருட்திரு றெக்னோ பேர்னாட் அடிகளார் நாட்டில் நல்லதொரு சூழல் வருமென்ற எதிர்பார்ப்புடன் பொறுமையாகக் காத்திருக்கிறார். நல்லதொரு சமிக்கையான…
-
- 0 replies
- 715 views
-
-
தொலைவாகும் தமிழர்கள்…!! பதிவேற்றிய காலம்: Feb 3, 2019 யாழ்ப்பாணத் தமிழர் மத்தியில் நிலவிவரும் அபிப்பிராயங்களில் ஒன்று யாழ்ப்பாணம் இலங்கைத் தீவின் தலை என்பது. தலைப் பகுதியில் வாழ்பவர்கள் நாட்டின் போக்கைத் தீர்மானிப்பர் என்று தமிழர்கள் நினைக்கின்றனர். இது சற்று அபரிமிதமான கற்பனை என்பதைத்தான் கடந்த 70ஆண்டுகள் நிரூபித்துள்ளன. யாழ்ப்பாணத் தமிழரின் 100வீதத் திறமையையும் கொழும்புடன் ஒப்பிடும்போது 15வீத அடைவுகூட இல்லை. தென் னிந்தியாவில் இருந்து ஆரம்பக் குடியிருப்புகள் நிகழ்ந்தபோது பூநகரி, மன்னார்ப் பகுதிகளுக்கு ஊடாகவே மக்கள் இலங்கைத் தீவுக்குள் நுழைந்த தற்கான ஆதாரங்கள் உண்டு. ஆதி மக்…
-
- 1 reply
- 715 views
-
-
நேட்டோ படையினரை குறிவைத்து தாக்கிய ரஸ்யா | அரசியல் களம் | ஆய்வாளர் அருஸ் | இலக்கு | ILC
-
- 0 replies
- 715 views
-
-
மஹிந்தவும் மைத்திரிபாலவும் ஒன்றுதானா? திருச்சிற்றம்பலம் பரந்தாமன் படம் | ALJAZEERA மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்குமாறு கேட்டால், அனேக தமிழர்கள் புண்படக்கூடும். அவ்வாறு கேட்கின்றவர் மீது ஐயமுறக்கூடும். அதே நேரத்தில் – அதே அனேக தமிழர்களிடம் எழுந்திருக்கின்ற கேள்வி – மைத்திரிபாலவுக்கு வாக்களிப்பதால் ஆகப்போகின்ற பயன்தான் என்ன…? மைத்திரிபாலவின் வரவோடு – ரணில், சந்திரிகா, பொன்சேகாவுக்கு வரக்கூடிய தனிப்பட்ட நலன்களுக்கு அப்பால் – ஒட்டுமொத்தமான இலங்கையில் குடும்ப ஆட்சி ஒன்றின் வீழ்ச்சியும், ஜனநாயகத்தின் எழுச்சியும், நீதித்துறையின் உயர்ச்சியும் எதிர்பார்க்கப்பட்டாலும், குறிப்பாகத் தழிழர்களுக்கு என்று கிடைக்கப்போகின்ற அரசியற் செழிப்பு என்ன…? போர் நிகழ்ந்த காலத்தின…
-
- 1 reply
- 715 views
-
-
சிங்கப்பூரின் சிற்பி என்று வர்ணிக்கப்படுபவர் அந்த நாட்டின் முன்னாள் தலைமை அமைச்சர் லீ குவான் யூ. சுமார் 30 ஆண்டுகள் நாட்டை ஆண்டவர். சிங்கப்பூர் என்கிற நாட்டைக் கட்டியெழுப்பியவரே அவர்தான் என்கிறார்கள். தன்னுடைய காலத்திலேயே மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றாக இருந்த சிங்கப்பூரை முதலாவது உலக நாடுகளில் ஒன்றாக மாற்றிக் காட்டியவர். அதுவும் ஒரே தலைமுறைக் காலத்துக்குள் அதைச் சாத்தியமாக்கிக் காட்டியவர். இலங்கையில் போர் நிறைவுக்கு வந்த சமயத்தில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில், ‘‘போரை இலங்கை அரசு வென்றிருந்தாலும் தமிழர்கள் அடங்கிப் போவார்கள் என்று நான் நம்பவில்லை.’’ என்று அவர் சொன்னார். …
-
- 1 reply
- 715 views
-