அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
ஐக்கிய இராச்சியமும், ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்பமிட்ட வணிக இணக்கப்பாடு: இதன் உள்ளடக்கம் என்ன? – தமிழில் ஜெயந்திரன் 112 Views இருபத்தேழு நாடுகளைக் கொண்டதும் பிரித்தானியாவின் மிகப்பெரிய வணிகக் கூட்டாகவும் விளங்குகின்ற ஐரோப்பிய ஒன்றியக் கட்டமைப்பிலிருந்து வெளியேறுவதற்கு சரியாக ஒரு வாரத்துக்கு முன்னதாக பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய இரு தரப்புகளையும் சார்ந்த பிரதிநிதிகள் இறுதியாக ஒரு வணிக ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டிருக்கிறார்கள். இவ்வாறாக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற போதிலும், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக இருந்த காலத்துடன் ஒப்பிடும் போது, வணிகச் செயற்பாடுகள் உரிய…
-
- 0 replies
- 925 views
-
-
ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிரேமதாசாக்களின் போராட்டங்கள் வீ.தனபாலசிங்கம் கடுமையான சவால்களுக்கு முகங்கொடுத்து தந்தையார் ரணசிங்க பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தைப் பெற்றதைப் போன்று மூன்று தசாப்தங்களுக்கு பிறகு மகன் சஜித் பிரேமதாசவும் எதிர்ப்புக்களை முறியடித்து அதே கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார். கட்சி நியமனத்தை வழங்குகிறதோ இல்லையோ 1988 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டே தீருவதென்று முடிவெடுத்த தந்தையார் தனது நீண்டகால அரசியல் விசுவாசியான சிறிசேன குரேயிடம் தேர்தலைச் சந்திக்கத் தயாராகுமாறு கூறியது பழைய அரசியல் அவதானிகளுக்கு நன்கு நினைவிருக்கும். அதே போன்றே மகனும் தன்னை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான பிரதமர் …
-
- 0 replies
- 639 views
-
-
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் வீ.தனபாலசிங்கம் இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்த பிறகு நான்கு தசாப்தகாலத்தில் 7 ஜனாதிபதி தேர்தல்களை நாடு சந்தித்திருக்கிறது.இவ்வருட இறுதியில் நடைபெறவிருப்பது 8 வது ஜனாதிபதி தேர்தலாகும். ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்திலேயே ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை காலமும் ஜனாதிபதி தேர்தல்களுக்கு (போட்டியிடுவதை தவிர்த்த இரு சந்தர்ப்பங்களை தவிர)அதன் வேட்பாளரைத் தெரிவுசெய்வதில் ஐக்கிய தேசிய கட்சி பிரச்சினைகளை எதிர்நோக்கியதில்லை. 1977 ஜூலை பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றிபெற்று ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை அமைத்தபோது பிரதமராக பதவியேற்ற ஜே.ஆர்.ஜெயவர்தன இருமாத காலத்…
-
- 0 replies
- 410 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் பிளவினால் ஏற்படக்கூடிய விளைவுகள் பி.கே.பாலசந்திரன் கொழும்பு (நியூஸ் இன் ஏசியா😞திர்வரும் ஏப்ரல் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கியப்பட்டுப் பலம்பொருந்தியதாக இருந்தால் மாத்திரமே தங்களால் ஆசனங்களை வென்றெடுக்க முடியுமென நம்பிக்கொண்டிருக்கும் சிலர், கடைசி நேரத்திலாவது கட்சிக்குள் பிளவு தவிர்க்கப்படுமென இன்னமும் நம்புகின்றார்கள். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள் எந்த நேரத்திலும் பிளவு உறுதியாக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்த்தவாறு இருக்கிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் (சமகி ஜனபல வேகய) தேர்தலில் போட்டியிடுவதற்கான அவற்றின் நோக்கங்களைத் தெரியப…
-
- 3 replies
- 1.1k views
-
-
புதிதாக ஒரு அமைப்பு உருவாகிறதோ இல்லையோ கட்டாயம் இப்படி ஒன்று உருவாக வேண்டும்.
-
- 1 reply
- 532 views
- 1 follower
-
-
ஐக்கிய நாடுகள் சபையில் கோட்டாவின் அறிவிப்புகளும் அபத்தங்களும் புருஜோத்தமன் தங்கமயில் உள்ளகப் பொறிமுறை ஊடாகப் பாதிக்கப்பட்ட (தமிழ்) மக்களுக்கு நீதி வழங்க முடியும் என்று, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரஸ்தாபித்திருக்கிறார். அத்தோடு, இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக, புலம்பெயர் (தமிழர்கள்) தரப்புகள் முன்வர வேண்டும் என்றும் கோரியிருக்கின்றார். ராஜபக்ஷர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து நிற்கின்ற நிலையில், கோட்டாவின் இந்த அறிவிப்புகள் கவனம் பெறுகின்றன. தென் இலங்கையில் பேரினவாதத்தின் காவல் முகங்களாக, ராஜபக்ஷர்கள் பார்க்கப்படுகிறார்கள். அவர்களின் ஆட்…
-
- 0 replies
- 345 views
-
-
ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வாழாவிருத்தல் மொஹமட் பாதுஷா ஒற்றுமை பற்றி, முஸ்லிம்கள் நூற்றாண்டுகளாகப் பேசி வருகின்றனர். இஸ்லாமிய மார்க்கத்திலும் அது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், நிஜத்தில், ‘ஒற்றுமை ஒற்றுமை’ என்று பேசிப்பேசியே, பல அடிப்படைகளில் பிரிக்கப்பட்ட இனக் குழுமங்களுள் ஒன்றாகவே, இலங்கை முஸ்லிம்கள் இன்றிருக்கின்றனர் என்பதை, திரும்பவும் சொல்ல வேண்டியுள்ளது. அரசியல் ரீதியாகவும், மார்க்க ரீதியாகவும், இப்போது புவியியல் அடிப்படையிலும் பல பிரிவுகளாக, முஸ்லிம்கள் பிரித்தாளப்படுவதைக் காணமுடிகின்றது. முக்கியமான தருணங்களில், ஒற்றுமையின் பலத்தை, முஸ்லிம்களால் வெளிப்படுத்த முடியாமல் போயிருக்கின்றது. மார்க்க அடிப…
-
- 0 replies
- 605 views
-
-
ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியலமைப்பு திருத்த வரைபு என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபு ஒன்றை, வியாழக்கிழமை (21) சபாநாயகரிடம் கையளித்துள்ளதுடன், அந்த வரைபையும் வௌியிட்டுள்ளது. அரசியலமைப்புக்கான 21ஆவது திருத்த சட்டமூல வரைபாக இது அமைந்துள்ளது. ‘கோ ஹோம் கோட்டா’, ‘கோ ஹோம் ராஜபக்ஷஸ்’ போராட்டங்கள் கடுமையாகியுள்ள நிலையில், இலங்கை அடுத்த கட்டம் நோக்கி நகர்வதற்கும், இலங்கை அரசியல் ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்வதற்குமான முதற்படியாக, அரசியலமைப்பு மாற்றம் அவசியம் என்ற அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தியால் இந்தத் திருத்த வரைபு முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த வரைபின…
-
- 6 replies
- 651 views
-
-
இலங்கையின் அரசியல் வரலாற்றில் மீண்டும் ஐக்கிய முன்னணி ஒன்றின் அவசியம் குறித்து பரவலாக உரையாடப்படுகின்றது. குறிப்பாக இது மூன்று தளங்களில் நடைபெறுகின்றது. முதலாவது தமிழ் தேசத்தில் செயற்படுகின்ற கட்சிகளுக்கு இடையிலான ஐக்கிய முன்னணி குறித்து முன்னெடுக்கப்படுகின்றன. இரண்டாவது முஸ்லிம் தேசத்துடனான முன்னணி குறித்து உரையாடப்படுகின்றன. மூன்றாவது சிங்கள தேசத்துடனனான ஐக்கிய முன்னணி குறித்தது சிந்திக்கப்படுகின்றன. இதைவிட மலையகத்துடனான ஐக்கிய முன்னணி தொடர்பாகவும் அக்கறை செலுத்தப்படுகின்றது. இன்றைய சுழ்நிலையில் மட்டுமல்ல எந்த சுழ்நிலையிலும் ஐக்கிய முன்னணி ஒன்றின் அவசியம் தவிர்க்க முடியாதது. ஆனால் இவ்வாறான ஐக்கிய முன்னணி எந்தடிப்படைகளில் கட்டமைக்கப்படவேண்டும் என சிந்திப்பது முன்நிபந்தனை…
-
- 1 reply
- 694 views
-
-
ஐதேக வாக்குகளைச் சுரண்டிய மைத்திரி அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான அதிகாரப் போராட்டமானது இருவரையும் மிகவும் மோசமாகப் பாதித்துள்ளதுடன் இவ்விருவரினதும் நீண்டகால அரசியல் மூலோபாயங்களின் வரையறைகளையும் வெளிப்படுத்தியுள்ளதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்விரு தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற அதிகாரப் போட்டியானது சிங்கள பௌத்த இனவாதம் நாட்டில் தலைவிரித்தாடுவதற்கும் நாட்டில் வன்முறைகள் ஏற்படுவதற்குமான போலித்தனமான வெற்றியைக் கொடுத்துள்ளது. எனினும், பெப்ரவரி 10 அன்று நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தேசிய அரசாங்கத்தில் நிலவும் ஒற்றுமையின்மை வெளிப்படுத்தப்பட்டமை மக்கள் இலகுவாக மறந்துவிட முடியாது. இத்தேர…
-
- 0 replies
- 458 views
-
-
ஆட்டம்: அமெரிக்கா Vs சிறீலங்கா இடம்: ஐநா மனித உரிமைகள் பேரவை. கோப்பை: சிறீலங்காவில் மனித உரிமைகளை மேம்படுத்துவது.. இனங்களிடையே புரிந்துணர்வை கட்டி எழுப்பி.. பச்ச மண்ணையும் சுட்ட மண்ணையும்.. ஒன்றாக சிறீலங்கன் என்று ஒட்ட வைக்கும் வெற்றிக்கிண்ணம். (ஈழத்தமிழர்.. தமிழினம்.. இனப்படுகொலை.. தமிழின அழிப்பு.. போர்க்குற்றம்.. காணி சுவீகரிப்பை நிறுத்தல்.. சிறீலங்கா படைவிலக்கல்.. சுதந்திர வாக்கெடுப்பு.. வடக்குக் கிழக்கு தமிழர் தாயகம்.. வடக்குக் கிழக்கு இணைவு.. சுயநிர்ணய உரிமை.. 13+.. போராளிகள்.. அரசியல் கைதிகள் விடுவிப்பும்... புனர்வாழ்வும்.. தமிழீழம்.. இதை எல்லாம் தூக்கி நிரந்தரமாவே குப்பையில கடாசியாச்சு.) முடிவு: 23: 12 என்ற அடிப்படையில் அமெரிக்காவுக்கு வெற்றி. கொசுறு: …
-
- 0 replies
- 621 views
-
-
ஐநா கூட்டத் தொடரின் பின்னணியில் நிலம் பற்றிய உரையாடல்கள் பகுதி -1 – நிலாந்தன். March 27, 2021 கடந்த சில கிழமைகளுக்குள் நிலம் அதாவது தாயகம்தொடர்பாக இரண்டு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன. முதலாவது இம்மாதம் ஒன்பதாம் திகதி யாழ்ஊடக அமையத்தில் நடந்த ஒரு மெய்நிகர் நிகழ்வு. இதில் அமெரிக்காவின் கலிபோர்னியாவை தளமாகக் கொண்டியங்கும் ஒக்லாண்ட் என்று அழைக்கப்படும் ஒரு சிந்தனைக் குழாம் முதல்நாள் எட்டாம் திகதிவெளியிட்ட ஓர் ஆவணத் தொகுப்பு தாயகத்தில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. முடிவற்ற யுத்தம் என்ற பெயரிலான இந்த ஆவணத் தொகுப்பு தமிழ்ப்பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு பற்றிய தகவல்களைத் திரட்டித் தருகிறது. 2009க்கு பின் தமிழ் பகுதிகளில் …
-
- 1 reply
- 622 views
-
-
ஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு - நிலாந்தன் கடந்த திங்கட்கிழமை இலங்கைத் தீவின் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே The debrief என்ற யூடியூப் சனலில் ரோயல் ரெய்மெண்ட்டிற்கு மிக நீண்ட நேர்காணலை வழங்கியிருந்தார்.நேர்காணலில் அவர் பல விடயங்களைப் பற்றியும் கதைக்கிறார். அதில் ஓரிடத்தில் அவர் கூறுகிறார்….”இலங்கை ஒரு சிறிய நாடு அதன் பொருளாதாரமும் சிறியது ஆனால் அதன் அமைவிடம் காரணமாக அதற்குள்ள கேந்திர முக்கியத்துவத்தை கருதிக்கூறின் அது ஒரு பெரிய நாடு”என்று. அதுதான் உண்மை. இந்துமகா சமுத்திரத்தில் இலங்கைத் தீவின் அமைவிடம்தான் அதன் பலம். அதேசமயம் அதுதான் அதன் துயரமும். இது சிங்கள மக்களுக்கும் பொருந்தும் தமிழ் மக்களுக்கும் பொருந்தும். கடந்த பல தசாப்தங்களாக தமிழ் …
-
- 0 replies
- 539 views
-
-
ஐநா தீர்மானமும் தமிழகமும்: தமிழகம் ; புது டில்லி ; ஜெனிவா - நிலாந்தன் “சிறிலங்கா தொடர்பான ஐநா மனிதவுரிமை பேரவையின் 60/1 தீர்மானம் நீதியைப் பெற்றுத் தராது! தமிழர்கள் தம்மை ஒருங்கிணைத்துக் கொள்வதே முதல் பணி!’ இது ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையின் தலைப்பாகும். ஈழப் போராட்டத்திற்காகத் தம்மை அர்ப்பணித்துச் செயற்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஈழ உணர்வாளர்கள் இணைந்து உருவாக்கிய கட்டமைப்பே ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பாகும். கடந்த 13ஆம் திகதி அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் மணி கையெழுத்திட்டு வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கையின் ஒரு பகுதி கடைசியாக நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானம் தொடர்பாக பின்வருமாறு கூறுகிறது. “இந்த தீர்மானம் முந்தைய தீர்மானங்களில…
-
- 1 reply
- 243 views
- 1 follower
-
-
ஐநா தீர்மானம்:மருத்துவர் மனோகரனின் விழிகள் எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன - நிலாந்தன் மருத்துவர் மனோகரன் அண்மையில் தனது 84ஆவது வயதில் லண்டனில் உயிர் நீத்தார். அவர் யார் என்றால், “ரிங்கோ 5” என்று அழைக்கப்படுகின்ற, திருகோணமலை நகரில் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரின் தந்தை. திருக்கோணமலையில் மக்கள் அதிகம் வாழும் மையமான ஒரு பகுதியில், 2006ஆம் ஆண்டு ஐனவரி இரண்டாந்திகதி இந்த ஐந்து மாணவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்ட தனது மகனுக்காக இறக்கும்வரை மனோகரன் போராடினார். அவர் அணுகாத மனித உரிமை அமைப்பு இல்லை. ஐநா மனித உரிமைகள் பேரவைவரை அவர் போனார். ஆனால் அவருக்கு இறக்கும்வரை நீதி கிடைக்கவில்லை. இடையில் 2015இல் ரணில் மைத்திரி அரசாங்கத்தின் காலத்தில், அதாவது நல்ல…
-
- 0 replies
- 165 views
-
-
ஐநா பிரேரணையும் தமிழ்த்தரப்பின் பொறுப்பும்’ – பி.மாணிக்கவாசகம் 44 Views ஐநா மனித உரிமைப் பேரவையின் பிரேரணையை தமிழ் மக்கள் எதிர்கொள்வது எப்படி, அதனை எவ்வாறு கையாளலாம் என்பது இப்போது முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. பொறுப்பு கூறும் விடயங்களிலும் மனித உரிமை நிலைமைகள் மற்றும் நீதி, சட்டவாட்சி, சிவில் நிர்வாக, ஜனநாயக நிலைமைகளிலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் காரசாரமாக விபரித்திருந்தார். இதனால் அவருடைய அறிக்கை பரந்த அளவில் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது. அரசாங்கம் உள்ளிட்ட பலதரப்பினருக்கு அது அதிர்ச்சியளிக்கத்தக்காக அமைந்திருந்தது. பாதிக்கப்பட்ட தரப்பினராகிய த…
-
- 0 replies
- 282 views
-
-
ஐநாவில் தமிழ்த் தரப்பு பலமாக உள்ளதா? நிலாந்தன். அண்மையில் நோர்வேயில் அந்த நாட்டின் துணை வெளி விவகார அமைச்சர் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு பகுதினரோடு உரையாடியுள்ளார். இதன்போது அவர் இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். முதலாவது, இலங்கைதீவின் நல்லிணக்க முயற்சிகள் இப்பொழுது நோர்வே நாட்டின் முன்னுரிமை பட்டியலுக்குள் உள்ளன என்பது. இரண்டாவது, தமிழ் மக்கள் ஒருமுகமாக உலக சமூகத்தை அணுகுவதில்லை என்பது. இதில் இரண்டாவது விடயம்,அதாவது தமிழ் ஐக்கியத்தைப் பற்றிய விடயம்.அதனை நோர்வே மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, ஐரோப்பிய சமூகம் மட்டுமல்ல,உலகில் பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் பொழுது அல்லது தமிழ்ச் சிவில் சமூகங்களைச் …
-
- 0 replies
- 137 views
-
-
ஐநாவுக்குக் கடிதம் எழுதும் கட்சிகள் ? நிலாந்தன். March 6, 2022 கடந்த ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி கூட்டாகக் கடிதம் அனுப்பிய கட்சிகள் இம்முறை ஐநாவுக்கு தனித்தனியாகவும் கூட்டாகவும் கடிதங்களை அனுப்பியுள்ளன. கடந்த ஆண்டு அனுப்பிய கடிதத்தின் விளைவாக என்ன நடந்தது? அக்கூட்டுக் கடிதத்தில் பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போகவேண்டும் என்று மூன்று கட்சிகளும் கேட்டிருந்தன. கடந்த ஓராண்டு காலப் பகுதிக்குள் அவ்வாறு பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போகும் விடயத்தில் உண்மையாக உழைத்த கட்சி எது? இதுவிடயத்தில் தமிழ்க் கட்சிகள் முதலில் தமது மக்களுக்கு பொறுப்புக்கூறுமா? உக்ரைன் விவகாரம் மீண்டும் ஒரு தடவை ஐநாவின் கையாலாகாத்தனத்தை…
-
- 0 replies
- 455 views
-
-
ஐநாவுடன் இணைந்து செயற்படுவதற்கான அறிவித்தல் ஐநாவுடன் இணைந்து செயற்படுவதற்கான அறிவித்தல் என்பதானது இலங்கை அரசு மனித உரிமைகள் நிலைமைகளைச் சீர் செய்வதற்கு ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற சர்வதேச கோரிக்கைக்கு ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச செவி சாய்த்து, அண்மையில் பதிலளித் துள்ளமை பலரையும் ஏறிட்டு நோக்கச் செய்திருக்கின்றது. பௌத்த சிங்கள பேரின தேசிய வாதத்தில் ஊறி, இராணுவ மனோபாவ சர்வாதிகார ஆட்சியில் ஆழ்ந்துள்ள அவருடைய போக்கிற்கு முரணாக இந்தக் கருத்து வெளிப்பாடு அமைந்திருப்பதே இதற்குக் காரணமாகும். பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டை உதறித் தள்ளி, ஜனநாயக விழுமியங்களுக்கு மாறாக சர்வாதிகார ஆட்சிப் போக்கில் செல்கின்ற அவர், பொறுப்புக் கூறல் விடயத்தி…
-
- 0 replies
- 587 views
-
-
ஐநாவைக் கையாள்வது ? - நிலாந்தன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தயாரித்த கூட்டுக் கடிதத்தில் தமிழரசுக் கட்சி கைகழுத்திடவில்லை. அதனால் அக்கூட்டுக் கடிதத்தில் முன்னணியும் அதன் தோழமைக் கட்சிகளும் சிவில் சமூகங்களும் கையெழுத்திட்டு அனுப்பி உள்ளன. தமிழரசுக் கட்சியின் கையெழுத்து இல்லை என்பது அடிப்படையில் ஒரு பலவீனம். அதேசமயம் கடிதத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்ற முடிவை அறிவித்த பொழுது சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களின்படி தமிழரசுக் கட்சியானது மனித உரிமைகள் பேரவையோடு தனிக் கட்சியாக என்கேஜ் பண்ணப் போகிறது என்று தெரிகிறது. இந்த நிலைப்பாடு, தன்னை ஒரு பெரிய அண்ணனாகக் கருதும் மனோ நிலையில் இருந்துதான் தோன்றுகிறது. கடந்த 16 ஆண்டுகளாக தமிழரசுக் கட்சி அவ்வாறான மூத்த அண்ணன் மனோநிலையைத்…
-
- 0 replies
- 164 views
-
-
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் : பெறோர்கள் எழுதும் பரீட்சை ? - நிலாந்தன் கடந்த வாரத்துக்கு முதல் வாரம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளிவந்தன. பெற்றோரும் உறவினர்களும் தங்களுடைய பிள்ளைகளின் பரீட்சைப் பெறுபேறுகளை முகநூலில் பகிர்ந்து கொண்டாடினார்கள். இந்த இடத்தில் எனது நண்பர் ஒருவர் கூறிய உரையாடல் ஒன்று எனக்கு நினைவுக்கு வந்தது. அந்த உரையாடல் நடந்த இடம் யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபல்யமான தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் வாசலில். புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் தங்கள் பிள்ளைகளுடைய வகுப்பு முடியும் வரையிலும் தனியார் கல்வி நிறுவனத்தின் வாசலில் காத்துக் கொண்டிருந்த பெற்றோருக்கு இடையிலான உரையாடல் அது. இந்த உரையாடலை அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த எனது நண்பரு…
-
- 0 replies
- 210 views
-
-
ஐந்து கட்சிகளின் கூட்டு: அடுத்தது என்ன ? நிலாந்தன்… October 19, 2019 ஜனாதிபதித் தேர்தலில் முழு அளவிலான தமிழ் பேரத்தை பிரயோகிப்பது என்றால் ஒரே தெரிவு ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர்தான். ஆனால் அதற்கு எந்த ஒரு தமிழ்க் கட்சியும் தயாராக இருக்கவில்லை. அப்படி ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று சிந்தித்த சுயாதீனக் குழுவும் மிகவும் பிந்தி விட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் அதைவிட பிந்தி விட்டார்கள். சுயாதீன குழு கட்சித் தலைவர்களை சந்தித்தபோது அவர்கள் என்ன சொன்னார்கள்? ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு காலம் பிந்தி விட்டது என்றுதானே சொன்னார்கள்? அப்படி என்றால் அதை குறித்து முதலில் சிந்தித்திருக்க வேண்டியது யார்? சில ஆயர்களும் சில சாமியார்க…
-
- 0 replies
- 526 views
-
-
ஐந்து கண்கள்: மானுட யாப்பின் மீறல் சேரன் 2006இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எஸ்.ஏ. - 18 வகையைச் சேர்ந்த ஏவுகணைகளையும் வேறு போர்க்கலங்களையும் வாங்க முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் ஈழத் தமிழ் இளைஞர்கள் மூன்று பேரை நியூயோர்க்கில் அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான எஃப்பிஐ கைதுசெய்தது. ஆயுத விற்பனையாளர்களிடம்தான் போர்க்கலங்களை வாங்குகிறோம் என அவர்கள் எண்ணியிருந்தார்கள். ஆனால் எஃப்பிஐ உளவாளிகள்தான் ஆயுத விற்பனையாளர்கள் போலத் தொழிற்பட்டு அந்த இளைஞர்களைச் சிக்கவைத்துவிட்டார்கள். பிற்பாடு, வேறு இரு ஈழத் தமிழ் இளைஞர்களும் ‘பயங்கரவாதம்’ பரவ உதவிசெய்தார்கள் எனக் கூறியும் கனடிய அரசால் கைதுசெய்யப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். எல்லா இளைஞர்களும் கனடியக் குடி…
-
- 0 replies
- 754 views
-
-
ஐந்து தமிழ் கட்சிகளின் தலைவர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவான நிலைப்பாட்டை முன்வைத்து தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு ஐந்து தமிழ் தேசியக்கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. இதற்கான ஆவணத்திலும் இந்த ஐந்து கட்சிகளினதும் தலைவர்கள் கைச்சாத்திட்டுள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அனைத்து கட்சிகளும் பொதுநிலைப்பாட்டுக்கு வரவேண்டியதன் அவசியம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது. யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியத்தின் முயற்சியையடுத்…
-
- 0 replies
- 597 views
-
-
ஐந்து நூற்றாண்டுகளுக்குள் மூன்று தடவைகள் பிடுங்கி எறியப்பட்ட சமூகம் – நிலாந்தன். கடந்த செப்டம்பர் மாதம் சுவிற்சலாந்தில் ஏற்பாடு செய்யப்பட்ட,இலங்கைத் தீவில் உள்ள அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட சந்திப்பின்போது நடந்த ஒரு விடயத்தைப்பற்றி ஒரு தமிழ்க் கட்சிப் பிரமுகர் என்னிடம் சொன்னார்.அந்தச் சந்திப்பில் அரசுசார்பு பிரதிநிதியாக கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் ஒரு கட்டத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரித்து உண்மை காணப்பட வேண்டும் என்ற பொருள்படப் பேசியுள்ளார்.அப்பொழுது அங்கு அவரோடு வந்திருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளராகிய ஒரு தமிழர் சொன்னாராம்,பழைய காயங்களை திரும்பத்திரும்ப கிண்டிக் கொண்டிருக்கக்கூடாது. …
-
- 0 replies
- 216 views
-