Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஜெனீவா தீர்மானம்: இனிமேல் நடக்கப்போவது என்ன? முத்துக்குமார் ஜெனீவாவில் இந்தத் தடவை கழுத்துமுறிப்பு இடம்பெறாது, சற்று வலிமையான காதுதிருகல்தான் இடம்பெறும் என முன்னரும் இப் பத்தியில் கூறப்பட்டுள்ளது. அதுதான் உண்மையில் நடைபெற்றிருக்கின்றது. தீர்மானத்தின் ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கம் நம்பகரமான, சுதந்திரமான விசாரணையை நடாத்தவேண்டும் எனக் கூறியிருந்தது. இறுதியில் மனித உரிமை ஆணையாளர் சுதந்திரமான விரிவான விசாரணையை மேற்கொள்ளவேண்டும் எனக் கூறியுள்ளது. இவ்வாறு இரு இடங்களில் விசாரணை பற்றி கூறியதன் அர்த்தம், இலங்கை அரசாங்கம் சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ளாவிடில்தான் மனித உரிமை ஆணையாளர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தல் வேண்டும் என்பதே. இதன்படி பார்த்தால் இலங்கை அரசாங்கத்திற்கு மீ…

  2. கொரோனாக் காலத்தில் வன்முறை கொரோனாத் தொற்றினை அடுத்து நாட்டிலே பல்வேறு விதமான வன்முறைச் சம்பவங்கள் தலைதூக்கி வருகின்றன. ஊரடங்கின் போது உணவுப் பொருட்களை வாங்கவும், குடி தண்ணீர் அள்ளவும் சென்ற, தமது அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முற்பட்டவர்களும், பொலிஸாரின் வன்முறைக்கு இலக்காகியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விமர்சனக் கருத்துக்களை முன்வைப்போர் அச்சுறுத்தப்படுகிறார்கள். அல்லது அவர்களுக்கு எதிரான கருத்துக்கள் திட்டமிட்ட முறையிலே பரப்பப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களிலே ஒரு சிலர் தாம் எதிர்கொண்ட வன்முறை குறித்து மனித உரிமை அமைப்புக்களுக்கு முறையிட்டுள்ளதாகவும் சில செய்தி அறிக்கைகளிலே சொல்லப்பட்டுள்ளது. மறுபுறத்தில் பெண்கள், சிறுவர் மீதான வீட்டு வன்முறையும், ச…

  3. அரசியலமைப்பும் அபிலாஷைகளும் எஸ்.மோகனராஜன் சட்டத்தரணி இலங்கையில், 1995, 1997, 2000ஆம் ஆண்டு ஆகிய மூன்று சந்தர்ப்பங்களில் அரசியலமைப்பு வரைபுகள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. 1995ஆம் ஆண்டு, சந்திரிகா அம்மையாரால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்பு, எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோடு பேசி, நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கும் அரசியலமைப்பினை புதுப்பித்து மாற்றம் கொண்டுவர சுதந்திரக் கட்சி முன்வந்தபோதும் ஐ.தே.க எவ்வித ஒத்துழைப்பையும் வழங்கவில்லை. அவ்வரைவு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு முன்வைக்கப்பட்டதன் பின், அவர்களுடனும் எவ்வித ஒருமைப்பாடும் ஏற்படாத நிலையில், 1995ஆம் ஆ…

  4. [size=4]எம்ஜிஆரின் தொண்டர்களைக் காப்பாற்ற தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பதாக எம்.ஜிஆருக்கு தான் கொடுத்த வாக்குறுதியைத் தன் மனசாட்சிக்குத் தெரிந்தவரை இதுவரை நிறைவேற்றியிருப்பதாக ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.[/size] [size=4]அரசியலில் மனசாட்சியைப் பற்றி முதலில் பேசியவர் காந்திதான். அதற்கு அவர் உள்ளுணர்வு என்று பெயர் வைத்திருந்தார்.பல முக்கியமான அரசியல் நிகழ்வுகளின்போதெல்லாம் தன் உள்ளுணர்வின் குரல் என்ன சொல்கிறது என்று காத்திருந்து அதைக் கேட்டு அதனபடியே முடிவுகளை எடுத்ததாக அவர் சொல்லியிருக்கிறார். [/size] [size=4]காந்திக்கு வெளியிலும் ஒரு மனசாட்சி இருந்தது. ராஜாஜிதான் அந்த மனசாட்சி. [/size] [size=4]காந்தியின் பல முடிவுகள் பற்றிய மாறுபட்ட கருத்துகளை நேரடியாக அவருடன் …

    • 0 replies
    • 705 views
  5. மனித நேய தொண்டர்கள் பற்றி எப்பொழுதும் எனக்கொரு மரியாதையுண்டு. அந்தவகையில் ஐல்லிக்கட்டுத்தடை தொடங்கியதிலிருந்து நாமும் இந்த விளையாட்டில் கொஞ்சம் வலிகளை ஏற்படுத்துகின்றோமோ அதனால் தான் பீட்டா(Peta) அமைப்பினருக்கு வலிக்கிறதோ என்ற சிறு சந்தேகம் இருந்தது. ஆனால் Peta வை சேர்ந்த ராதா ராஜன் அவர்கள் பேசிய ஒரு வரியில் எல்லாமே உடைந்துபோயிற்று. அவரது தூற்றுதல் என்பது தனது இனத்தை (பெண்களையே) குறி வைப்பதாக உள்ளது. இவ்வாறு தனது பெண்மை சார்ந்து மனிதாபிமானத்தோடு சிந்திக்க தெரியாத ஒருவர் மாட்டின் மீது பற்று வைக்கிறார் என்பதெல்லாம் வெறும் பாசாங்கு. பணத்தைக்கண்டால் பிணமும் வாய் திறக்கும் என்பதை தவிர வேறொன்றுமில்லை. பணம் துட்டு மணி மணி..... இனி ஆண்டவனாலும் தமிழிச்சிகளிடமிருந்து இவ…

  6. கூட்டமைப்பின் ஏகபோகம் உடையுமா? July 5, 2020 நிலாந்தன் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு விவசாயியிடம் கேட்டேன் “இந்தமுறை யாருக்கு வாக்களிப்பீர்கள்?” அவர் சொன்னார் “யாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதில்லை. ஆனால் எல்லாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதாக வாக்குறுதி தருகிறார்கள். “இதில் யாரை நம்புவது?” நான் கேட்டேன், “அப்படி என்றால் யாருக்குமே வாக்களிக்க மாட்டீர்களா”? அவர் சொன்னார் “இல்லை வாக்களிப்பேன் யாருக்கு வாக்களித்தால் நமது எதிர்ப்பைக் கூடுதலாக காட்டலாமோ அவருக்கு வாக்களிப்பேன்” நான் திரும்ப கேட்டேன் “அப்படி நீங்கள் யாரை தமிழ் எதிர்ப்பின் கூர்மையான வடிவம் என்று கருதுகிறீர்கள் ?” என்று. அவர் சொன்னார் “இதுவரையிலும் யாரையும் அப்படி நான் கருதவில்லை” என்று. “முடி…

    • 3 replies
    • 705 views
  7. வெள்ளை வேன் சுமந்து சென்ற ப்ரியாவின் எதிர்பார்ப்பு : ப்ரியந்த லியனகே அவர் பூபாலசிங்கம் உதயகுமார். அவரது மனைவி ப்ரியா உதயகுமார். ‘தாய்’ எனும் கிரீடத்துக்கு உரிமை கொண்டாட அவருக்கு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே இருந்தன. உதயகுமாரின் சாயலையொத்த அழகிய பிஞ்சுக் குழந்தையொன்றை உதயகுமாருக்குப் பரிசளிக்க அவர் கனவு கண்டார். அக் குழந்தையினதும் ப்ரியாவினதும் எதிர்காலத்தை சிறப்பாக்குவதே உதயகுமாரின் இலட்சியமாக இருந்தது. அதற்காக அவர்கள் நிறைய கனவுகள் கண்டார்கள். அவர்களது அழகிய அக் கனவுகள் மேல் ஷெல் மழை பொழிகையில் அவர்கள் தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பியோட வேண்டியிருந்தது. எனினும், தமது பாதுகாப்புக்காகத் தப்பியோடுவதைக் கூட அவர்களால் செய்ய முடியாதிருந்தது. ஏனெனில், விடுதலைப…

  8. மாற்றுத் தலைமை குறித்து தீர்மானிக்க வேண்டியவர்கள் தமிழ் மக்களே வடக்குக் கிழக்கு அரசியலில் பரபரப்பான திருப்பங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உருவாகி வருகின்றன. வடக்குக் கிழக்கு அபிவிருத்திக்கான அரசதலைவர் செயலணி தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்குமிடையே இடம்பெற்ற கடிதப் பரிமாற்றம் இதற்குப் பிள்ளையார் சுழியை இட்டு வைத்துள்ளது. விக்னேஸ்வரன் கூட்டமைப்பிலிருந்து விலகி மாற்றுத் தலைமையொன்றை உருவாக்கும் முயற்சிகளை ஆரம்பித்துள்ளார் என்று நம்பிக்கை யான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னோடியாகவே தமிழ…

  9. மாலைத்தீவு மையவாடியா? -எம்.எஸ்.எம். ஐயூப் இலங்கையில், கொவிட்- 19 நோயால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, மாலைத்தீவில் அடக்கம் செய்ய வசதி செய்து கொடுக்க வேண்டும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, மாலைத்தீவு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தாரா? மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷஹீத், தமது ‘டுவிட்டர்’ கணக்கில், வெளியிட்டு இருந்த ஒரு தகவலின்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, அவ்வாறானதொரு கோரிக்கையை விடுத்துள்ளார். ‘இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபயவின் வேண்டுகோளுக்கு இணங்க, கொவிட்-19 நோயால் உயிரிழக்கும் இலங்கை முஸ்லிம்களின் இறுதிக் கிரியைகளை, மாலைத்தீவில் நடத்தும் விடயத்தில், இலங்கைக்கு உதவும் முகமாக, ஜனாதிபதி சொலிஹ் உரிய அதிகாரிகளுடன் பேச்ச…

  10. தமிழ் மக்களின் தேசிய ஐக்கியத்தைச் சிதைப்பது? நிலாந்தன். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆவிக்குரிய சபைப் போதகர் ஒருவரை பலாலி விமான நிலையத்தில் கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலங்கள் விசாரித்த பின் யாழ்ப்பாணத்துக்குள் வர அனுமதித்திருக்கிறார்கள். அவர் வியாபார விசாவில் வந்தபடியால் அதை மத நோக்கங்களுக்கு பயன்படுத்த முடியாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. அதனால் குறிப்பிட்ட போதகர் ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்ட அந்த மத நிகழ்ச்சியில் பங்குபற்றாமல் நாடு திரும்பிவிட்டார். இத்தனைக்கும் அவர் நேரடியாக இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வரவில்லை.கொழும்புக்கு வந்து அங்கே நான்கு நாட்கள் தங்கியிருந்த பின்னர்தான் யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கிறார்.தமிழ்நாட்டி…

  11. மாற்றுத்தலைமை சாத்தியமா? – செல்வரட்னம் சிறிதரன்:- இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கும், தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள ஏனைய பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதற்கும் நல்லாட்சி அரசாங்கம் வழி வகுக்கும். உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் – என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இருந்து படிப்படியாகக் கரைந்து கொண்டிருக்கின்றது. அதேவேளை, இப்போதுள்ள தமிழ் அரசியல் தலைமையின் நிலை என்ன, அது தொடர்ந்து மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான முறையில் செயற்பட முடியுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது. ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கி…

  12. அப்பட்டமான சாட்சியம் – பி.மாணிக்கவாசகம் September 25, 2019 முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணிக்கு அருகில் கொலம்பே மேதாலங்காதேரருடைய சடலம் பலாத்காரமாக எரியூட்டப்பட்டதன் மூலம் நீதித்துறையின் முகத்தில் கரிபூசப்பட்டிருக்கின்றது. நீதிமன்றத்தின் உத்தரவைப் புறக்கணித்து, அதற்கு முரணான வகையில் ஓர் இந்து ஆலய தீர்த்தக்கரையில் பௌத்த பிக்கு ஒருவருடைய சடலம் இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளது. பேரின மத அகங்காரத்துடன் மேற்கொள்ளப்பட்ட அப்பட்டமான பௌத்த மதத் திணிப்பையே இது வெளிப்படுத்தி உள்ளது. சிங்கள பௌத்த தேசியத்தை முழு மூச்சாகக் கொண்டுள்ள பௌத்த மதச் சண்டித்தனம் இந்தச் சம்பவத்தில் மிகக் கோரமாக தலை நிமிர்த்தி இருக்கின்றது. சிங்…

  13. இதயத்தால் சிந்தித்த சில எண்ணங்கள் (இடிந்தகரைக் கடிதம்-2) இடிந்தகரை மார்ச் 28, 2013 அன்பார்ந்த தமிழ்ச் சொந்தங்களே: வணக்கம். கூடங்குளம் போராட்டம் தொடங்கி கிட்டத்தட்ட 600 நாட்கள் ஆகிவிட்டன. நானும், நண்பர்கள் ராயன், மை.பா., முகிலன், மில்டன், கெபிஸ்டன் உள்ளிட்டோர் இடிந்தகரைக்குள் முடக்கப்பட்டு ஒரு வருடத்துக்கும் மேலாகிவிட்டது. கடந்த ஆண்டு மார்ச் 18-ஆம் நாள், சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நடந்த அன்று, வைராவிக்கிணறு கிராமம் நோக்கி ஒரு பேரணி நடத்திக் கொண்டிருந்தோம். சரியாக மாலை 4:45 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் கைப்பேசியில் தொடர்பு கொண்டு, “ஆட்சித்தலைவர் டாக்டர் செல்வராஜ் உங்களையும், அருட்தந்தை செயக்குமார்…

  14. சம்பந்தனும் ஏமாற்றப்படுவாரா? - யதீந்திரா படம் | ASIAN TRIBUNE தனது காலத்தில் ஒரளவு திருப்திகரமான அரசியல் தீர்வொன்றை காண முடியும் என்பதில் சம்பந்தன் உண்மையிலேயே நம்பிக் கொண்டிருந்தார். தனது அதீத நம்பிக்கையின் விளைவாகவே ஆட்சி மாற்றத்தின் போது கூட எந்தவொரு உடன்பாடுமின்றி ஆட்சி மாற்றத்தை ஆதரித்து நின்றார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது 2016 இல் தீர்வு நிச்சயம் என்று வழமைபோல் மேசைகளில் அடித்து, ஒலிவாங்கி அதிரும் வகையில் கூறிக் கொண்டிருந்தார். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் வேறு எவரும் அவ்வாறு கூறியிருக்கவில்லை. சம்பந்தனது நடவடிக்கைகளுக்குப் பக்கபலமாக இருந்துவரும் சுமந்திரன் கூட அவ்வாறு எங்குமே கூறியிருக்கவில்லை. ஆனால், …

  15. ''ஆயிரம் சமர்களின் ஜெயிப்பதை விடவும் உன்னை நீயே ஜெயிப்பது சிறந்தது. அந்த வெற்றி உனக்கே உரியது. அதை உன்னிடமிருந்து யாரும் எடுக்க முடியாது. தேவதைகளாலோ அல்லது அசுரர்களாலோ அல்லது சொர்க்கத்தாலோ அல்லது நரகத்தாலோ அதை உன்னிடமிருந்து எடுக்க முடியாது' -புத்தர் - மூன்றாவது ஜெனிவாத் தீர்மானத்தில் தமிழர்கள் என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டிருந்தது. ஆனால், சிறுபான்மை மதங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து அதில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. அத்தீர்மானத்துக்கமைய மனித உரிமைகள் ஆணையாளரது விசாரணைப் பொறிமுறை ஒன்றிற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன. ஓர் அனைத்துலகத் தீர்மானத்தில் அப்படி சிறுபான்மை மதங்கள் மீதான தாக்குதல்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில்…

    • 0 replies
    • 703 views
  16. திலீபனைத் தத்தெடுப்பது? – நிலாந்தன். கடந்த 13 ஆண்டுகளாக நினைவுகூர்தல் பரப்பில் ஏற்படும் எல்லா சர்ச்சைகளும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நினைவு நாட்களோடு தொடர்புடையவை தான்.இதில் மே 18ம்கூட அவ்வாறு கருதப்படுவதனால்தான் சர்ச்சைகள் ஏற்படுகின்றன.மே 18ஆம் தேதி புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் உயிர் துறந்த நாள் என்ற அடிப்படையில் அந்த நாளும் புலிகள் இயக்கத்துக்கு உரிய ஒரு நினைவு நாளாக கருதும் தரப்புகளுக்கு இடையிலான முரண்பாடுதான் மே 18இற்கான பொதுக்கட்டமைப்பு குறித்த முரண்பாடுகளும் ஆகும். இவ்வாறான கடந்த 13 ஆண்டு கால முரண்பாடுகளின் பின்னணியில்தான் இம்முறை திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிியைச் சேர்ந்த இரண்டு அணிகளுக்கு இட…

  17. 13உம் இனவாதமும் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தின் மீதான விவாதத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் அல்லது 13+ இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்று அறுதியிட்டு ஜே.வி.பியின் மிக நீண்டகால நிலைப்பாட்டை மீள வலியுறுத்திக் கருத்துரைத்திருந்தார். 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புச் சட்டமோ அல்லது அதில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களோ மக்கள் வாக்கெடுப்பின் மூலம் அங்கிகரிக்கப்படவில்லை என்ற அநுர குமார, வடக்கு மற்றும் தெற்கில் உள்ள மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் புதிய அரசியலமைப்பின் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என பாராளுமன்றத்தி…

  18. #தமிழ்தேசியம்: வாழ்வுரிமையை முன்னிறுத்துவது தேசிய இன அரசியல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன. இ…

  19. இம்மாதம் 6ஆம் திகதி கனடாவின் ஒன்றாரியோ மாநில சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1984 ஆம் ஆண்டு இந்தியாவில் சீக்கியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளை அத்தீர்மானம் ஓர் இனப்படுகொலை என்று சித்திரித்திருந்தது. இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையிலான உறவுகளை நெருக்கடிக்குள்ளாக்கியிருக்கும் மேற்படி தீர்மானம் கனடாவில் உள்ள சக்திமிக்க சீக்கிய டயஸ்பொறாவிற்குக் கிடைத்த ஒரு மகத்தான வெற்றியாகும். 1984இல் அப்போது இந்தியப்பிரதமராக இருந்த திருமதி இந்திராகாந்தி அவருடைய மெய்க்காவலர்களான இரு சீக்கியர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதையடுத்து தலைநகர் டில்லியிலும், பிற பகுதிகளிலும் சீக்கியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். இப்படுக…

    • 0 replies
    • 703 views
  20. சிறிதரனின் ‘குறளி வித்தை’ புருஜோத்தமன் தங்கமயில் இன்றைய தமிழர் அரசியலில், தமிழரசுக் கட்சிக்குள் இருப்பவர்கள், ‘குறளி வித்தை’ காட்டும் அளவுக்கு, வேறு யாரும் காட்டுவதில்லை. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தொடங்கி, அந்தக் கட்சியின் பெரும்பாலான தலைவர்களும், நாளொரு வண்ணமும் பொழுதொரு நடிப்புமாக, வித்தை காட்டிக் கொண்டிருப்பார்கள். கடந்த சில நாள்களாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், நடிகர் திலகமாகவே மாறி நின்று அரங்காற்றிக் கொண்டிருந்தார். சிறிதரன், அரசியலுக்கு வந்த கடந்த ஒரு தசாப்த காலத்தில், தன்னையொரு நல்ல நடிகரென்று பலமுறை நிரூபித்திருக்கிறார். ஆனால், கடந்த வாரம் அவர் வெளிப்படுத்திய நடிப்பு, நடிகர் திலகத்தை மீஞ்சும் அளவுக்கானது. ஐக்கிய நாடுகள…

  21. இந்தியாவில் ஜனநாயகம் செயல்படுமா? - அம்பேத்கர் பதில்

    • 0 replies
    • 703 views
  22. மாலைதீவின் புதிய ஜனநாயகத்தின் மீது விரும்பத்தகாத நிழலை வீழ்த்தும் இலங்கை அரசியல் நெருக்கடி - பிரமா ஷெலானி இலங்கையில் தீவிரமடைந்திருக்கும் அரசியல் நெருக்கடியை இந்தியா அக்கறையுடன் அவதானித்துக்கொண்டிருக்கும் வேளையில், பிரதமர் நரேந்திர மோடி மாலைதீவின் புதிய ஜனாதிபதி இப்ராஹிம் முஹம்மது சோலீயின் பதவியேற்பு வைபவத்தில் ( நவம்பர் 17) கலந்துகொள்வதற்காக மாலே சென்றிருந்தார். மோடியின் இந்த விஜயம் இரு மாதங்களுக்கு முன்னர் தேர்தலில் அதிர்ச்சிகரமான தோல்வியடைந்த எதேச்சாதிகார ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு அதிகாரத்தை புதியவரிடம் கையளிப்பதைத் தவிர வேறுவழி கிடையாது என்பதை உறுதிப்படுத்தியது. இந்தியா இராணுவரீதியில் தலையீடு செய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் உட்பட ஜனநா…

  23. முஸ்லிம்கள் மீதான பல்கோண ‘நெருக்குதல்கள்’ மொஹமட் பாதுஷா / 2019 ஜூன் 02 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 08:40 Comments - 0 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பிறகு, முஸ்லிம்கள் மீதான நெருக்குவாரங்கள், பல வழிகளிலும் அதிகரித்திருக்கின்றன. முஸ்லிம் பெயர்தாங்கிகள்தான், இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர் என்றாலும்கூட, நிஜத்தில், இத்தாக்குதல் முஸ்லிம் சமூகத்துக்கே பெரும் சிக்கல்கள் நிறைந்த நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது. இலங்கை முஸ்லிம்கள் மீது, இன்னுமொரு கட்ட ஒடுக்குமுறையைப் பிரயோகிப்பதற்கும், அதற்கு நியாயம் கற்பிப்பதற்குமான ஒரு களச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. ஒரு குழுவினர் செய்த, வரலாற்றுத் தவறான பயங்கரவாத நடவடிக்கையைக் காரணமாகக் கூறி, 2…

  24. அம்மாக்களுக்கு அப்பாக்களுக்கு பயமில்லையா? அண்மைய நாட்களாக நீங்களும் பார்த்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்கள்… இளைஞர்கள் 11 பேர் கடத்திச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டமையுடன் தொடர்புடைய விசாரணை, வழக்கு, அந்த இளைஞர்களுடைய அம்மாக்களின் வேதனை மற்றும் அதனோடு தொடர்புடைய செய்திகளை. நானும் ஒரு தாய் என்பதால், இந்தச் சம்பவம் தொடர்பாகவும், இளைஞர்களை தேடியலையும் தாய்மார்கள் படும் வேதனை தொடர்பாகவும் ஊடகங்களில் ஏதாவது செய்தி வந்தால் வாசிப்பேன். எமது நாடு, எமது சமூகம், பாதுகாப்புப் படைப் பிரிவில் ஒரு சில அதிகாரிகள், நாட்டின் தலைவர்கள் பற்றி உடம்பை நடுங்கவைக்கும் தகவல்கள் அந்தச் செய்திகளில் அடங்கியிருக்கும். கப்பம் பெறும் நோக்கில் 2008 கடத்திச்செல்லப்பட்ட 11 இளைஞர்களுள் …

  25. விக்கியின் வியாக்கியானங்கள் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், திருகோணமலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில், “...சம்பந்தன் எந்தவொரு பிரச்சினையையும் உடனடியாகத் தீர்ப்பதில்லை. ‘பேசுவோம், பார்ப்போம்’ என்று கூறி, விடயத்தைத் தட்டிக்கழிப்பார். அதனாலேயே, பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கின்றன...” என்று, தெரிவித்திருக்கிறார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தொடர்பிலான விக்னேஸ்வரனின் மேற்கண்ட கூற்றில், பெருமளவு உண்மையுண்டு. அது, சுய அனுபவங்களின் சார்பில் வருவது. ஏனெனில், இன்றைக்கு விக்னேஸ்வரன் அரசியல் கட்சியொன்றின் தலைவராக, மாற்றுத் தலைமைக்கான போட்டியில் இருப்பதற்கு ஒரே காரணம், சம்பந்தன் மட்டுமே! 2015ஆம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.