அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
"பயங்கரவாதம் குறித்த எனது சொந்தக் கருத்து என்றைக்கும் மாறியதில்லை, இனிமேலும் மாறாது. பயங்கரவாதம் வெல்வதற்கு ஒருக்காலும் இடம் கொடுக்க முடியாது. அப்படி நடந்தால், அது ஜனநாயகத்தின் முடிவாக கருதப்படும். பிரிட்டனைப் போன்று, இலங்கையிலும் ஜனநாயகம் உள்ளது. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களால், ஜனநாயக வழியிலேயே பிரச்சினை தீர்க்கப் பட வேண்டும்." - மார்கரெட் தாட்சர் (1985 ம் ஆண்டு, இலங்கைக்கு விஜயம் செய்த பொழுது, விக்டோரியா அணைக்கட்டை திறந்து வைத்து ஆற்றிய உரை.) மார்கரெட் தாட்சர் தனது பிரதமர் பதவிக் காலம் முழுவதும், செல்வந்தர்களின் மீட்பராகவே இருந்தார். ஆனால், பொது மக்களுக்கு முன்னால், மிகவும் எளிமையானவராக காட்டிக் கொண்டார். தொலைக்காட்சி காமெராவுக்கு முன்னால், பொது இடங்களில் குப்பை…
-
- 1 reply
- 676 views
-
-
சர்வதேச அரங்கைச் சரியாக கையாளக் கூடிய தரப்பாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மாத்திரம் தான்! Posted on June 30, 2020 by தென்னவள் 46 0 ;தமிழ் அரசியலில் நேர்மையான மாற்று அணி என்பது கடந்த-11 வருடங்களாகத் தங்களை சரியாக வழிநடாத்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தமிழ் மக்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்க கூடாது என்பதற்காகப் பல தரப்புக்களைத் திட்டமிட்டுக் களமிறக்கியுள்ள போதிலும் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் எங்கள் மக்கள் மிகத் தெளிவாக எம்மை மாற்று அணியாக அடையாளப்படுத்தியுள்ளனர் என தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ;இதனால், வட- கிழக்கில் இரண்டாம் பெரும் கட்சியாக நாங்களிருக்கின்றோம் என்றும் கூறுகின்றார்…
-
- 0 replies
- 676 views
-
-
ஜீ 20 மாநாட்டில் விட்டுக்கொடுக்காத வல்லரசுகள் தமிழர்களும் பலஸ்தீனியர்களும் ஒற்றையாட்சியுடன் ஒத்துப்போக வேண்டும் என்று மாத்திரம் போதனை ரசிய - உக்ரெயன் போரை இந்தியா இதுவரை பகிரங்கமாகக் கண்டிக்காத நிலையில், ஜீ இருபதின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு இந்த மாதம் இரண்டாம் திகதி வியாழக்கிழமை மாலை வரை புதுடில்லியில் நடைபெற்றுள்ளது. தலைமைப் பொறுப்பை நரேந்திரமோடி ஏற்றதால் புதுடில்லியில் இடம்பெற்ற மாநாட்டில், உக்ரெய்ன் மீதான போரை நிறுத்த இந்தியா, ரசியாவுக்குப் புத்தி சொல்ல வேண்டும் என்ற இறுமாப்புடனேயே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பங்குபற்றியிருந்தன. வெள்ளிக்கிழமை வெளியான இந்த நாடுகளின் நாளிதழ்களி…
-
- 0 replies
- 676 views
-
-
2015இலங்கை ஜனாதிபதி தேர்தல் குறித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் தொடரும் இந்த வேளையில் இலங்கையில் இருந்து யாதவன் நந்தகுமாரன் இந்தப் பதிவை அனுப்பி வைத்துள்ளார்.... நீங்களும் இந்த விவாதத்தை முன்கொண்டு செல்ல முடியும்... ஆரோக்கியமான முன்னர் வெளியாகாத புதிய பதிவுகளை அனுப்பிவைத்தால் பிரசுரிக்கப்படும்... ஆ.ர் அன்புடையீர் குளோபல் தமிழுக்காக எழுதப்பட்டது பிரசுரித்து உதவுக நன்றி. யாதவன் நந்தகுமாரன். இலங்கையில் சனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ் அரசியற் பரப்பிலும் ஊடகப் பரப்பிலும் பல்வேறுபட்ட கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ் அரசியற் பிரமுகர்கள் முதல் சிவில் சமூகத்தவர்கள் வரை இரு வேட்பாளர்களையும் ஒரே தராசினில் வைத்து இனவாத சிந்தனையில் தமிழர்களுக்கு எந்…
-
- 1 reply
- 676 views
-
-
மொழியாலும் ஆக்கிரமிக்கின்றதா சீனா? இலங்கையர்களும் சீன மொழியைக் கற்க வேண்டிய தேவை ஏற்படுமோ ? ஆசிய பொலிஸ்காரனாகும் சகல தகுதிகளும் சீனாவுக்கு இருக்கின்றது. அந்த இடத்தைப்பிடிப்பதற்குரிய தகுதி இன்னும் இந்தியாவுக்கு இருக்கின்றதா என்றால் சந்தேகமே. சகல துறைகளிலும் இன்று ஆசியாவில் முதலிடத்திலிருக்கும் சீனா அமெரிக்காவிற்கு சவாலாக உருவெடுத்துள்ளது. எவ்வாறு ஒரு நாட்டிற்குள் உட்புகுந்து அந்நாட்டின் சகல விடயங்களையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்பதை சீனாவிடம் தான் கற்க வேண்டும். சீனாவின் ஆக்கிரமிப்பு ஒரு நாட்டின் பொருளாதார சந்தை மட்டுமல்ல மொழி,கலாசாரம், அரசியல் ஆகியவற்றிலும் அது தனது கையை ஓங்கச்செய்துள்ளது என்பது இலங்கையைப்பொறுத்தவரை பொருத்தமாகத்தான் …
-
- 0 replies
- 676 views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கி, ஜனாதிபதியின் அழைப்பு – நிலாந்தன்! ஏறக்குறைய ஒரே காலப்பகுதியில் இரண்டு ராஜபக்ச சகோதரர்களும் மேற்கு நாடுகளுக்கு விஜயம் செய்திருக்கிறார்கள்.ஜனாதிபதி கோட்டபாய அமெரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கி உள்ளக விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். உள்நாட்டு பொறிமுறைக்கு ஒத்துழைக்குமாறு உள்நாட்டில் உள்ள மக்கள் பிரதிநிதிகளை நோக்கிக் கேட்காத நாட்டின் தலைவர் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை நோக்கி ஏன் கேட்கிறார் ? சில மாதங்களுக்கு முன் அவருடைய அரசாங்கம் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சிலவற்றையும் தனி நபர்களையும் தடை செய்து ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தது. ஒரு பெரும் தொற்றுநோய்க் காலத்தில் மேற்குநாடுகளில் வாழ…
-
- 0 replies
- 676 views
-
-
கூட்டமைப்பு கைக்கூலிகளின் கூட்டு ஆகிறதா? புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ‘ரணில்- ராஜபக்ஷ’ கூட்டடம், விலை போய்விட்டதாக புகைந்து கொண்டிருந்த சந்தேகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எண்ணைய் ஊற்றியிருக்கிறார். சர்வகட்சி அரசாங்கத்தினை அமைப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளை அழைத்து ரணில் சந்தித்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பை கடந்த வாரம் நிகழ்த்தினார். இதன்போதே, ஜனாதிபதித் தெரிவின் போது, டலஸுக்கு ஆதரவளிப்பது என்ற கூட்டமைப்பின் தீர்மானத்தினைத் தாண்டி, சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்தாக கூறியிருக்கிறார். இதனை, கூட்டமைப்ப…
-
- 1 reply
- 676 views
-
-
யாக்குப் மேனன் இறுதி ஊர்வலம் முஸ்லிம்கள் அதிக அளவில் பங்கு பற்றுகின்றார்கள்
-
- 2 replies
- 676 views
-
-
விண்வெளி ஆதிக்கத்துக்கான போட்டி: போரின் புதிய களம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜனவரி 31 வியாழக்கிழமை, மு.ப. 01:37Comments - 0 மண்ணில் ஆடும் ஆட்டங்கள் போதாதென்று, விண்ணிலும் அதற்கான ஆட்டங்கள் தொடங்கியுள்ளன. மண்ணில் தனது ஆதிக்கத்தை இழப்போர், விண்ணிலாவது தமது ஆதிக்கத்தைத் தக்கவைக்க முனைகின்றனர். உலகம் பட்டினியில் தவிக்கையில், மிகுந்த பொருட்செலவில் விண்வெளி ஆதிக்கத்துக்கான போட்டி தொடங்கியுள்ளது. “மண்ணை வெற்றி கொண்ட மனிதன், விண்ணையும் வெற்றி கொள்வான்” என்ற பெருமைப் பேச்சுகளுடன், இந்தப் போட்டி அரங்கேறுகிறது. கேள்வி யாதெனில், நாம் மண்ணை வெற்றி கொண்டோமா என்பதுதான். இன்று, நாம் வாழும் பூமி, நமது எதிர்கால சந்ததியினர் வாழ இயலாத இடமாக மாறியிர…
-
- 0 replies
- 676 views
-
-
-
நன்றி: ஆனந்த விகடன் - 13 Aug, 2014. வரலாற்றின் குப்பைத் தொட்டியை நோக்கி ஓட ஆரம்பித்திருக்கும் மகிந்த ராஜபக்ஷேவுக்கு, வலியப் போய் மலர் மாலைகள் சூட்டவிருக்கிறது இந்தியா! ராஜபக்ஷேவை உலகின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கானதருணம் நெருங்கிக்கொண்டிருக்கும்போது, அவரிடம் ராணுவப் பாடம் கேட்பதற்குத் தயாராகிறது இந்தியா. இந்த மாதம் 18-20 தேதிகளில், கொழும்பில் நடக்கும் ராணுவக் கருத்தரங்குக்கு இந்தியப் பிரதிநிதிகள் செல்லப் போவதாகத் தகவல். செப்டம்பர் மாதம் 18-21 தேதிகளில், ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு ஒன்றைக் கூட்டி, 'ஆசிய சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்புதல்’ என்பது பற்றி பேச இருக்கிறார் ராஜபக்ஷே. போகிற போக்கைப் பார்த்தால், அதற்கும் பா.ஜ.க தனது பிரதிநிதியை அனுப்பக்கூடும்ப…
-
- 0 replies
- 675 views
-
-
சீனத் தூதுக் குழுவின் கொழும்பு வருகையும் 50 கோடி டொலர்கள் கடனுதவி குறித்த பேச்சுவார்த்தையும் Bharati October 14, 2020 சீனத் தூதுக் குழுவின் கொழும்பு வருகையும் 50 கோடி டொலர்கள் கடனுதவி குறித்த பேச்சுவார்த்தையும்2020-10-14T12:42:23+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore சீனாவின் உயர்மட்ட தூதுக் குழுவொன்று இலங்கைக்கு வந்து திரும்பிய கையோடு பெய்ஜிங்குடன் கொழும்பு 50 கோடி டொலர்கள் கடனுதவி குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்திருக்கிறது. இலங்கை வெளிநாடுகளிடமிருந்து இதுவரைப் பெற்றிருக்கும் கடனில் 450 கோடிடொலர்களை அடுத்த வருடம் திருப்பிச் செலுத்துவதற்கு ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் நிலையிலேயே இந்தக் கடனுதவிப் ப…
-
- 0 replies
- 675 views
-
-
-
- 0 replies
- 675 views
-
-
முதலமைச்சரின் இறுதித் தெரிவு எதுவாக இருக்கும்? ஆதித்தன் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்து முரண்பாடுகளை வளர்த்துச் சென்றதைத் தவிர வெறெதுவும் செய்யவில்லை என்கின்ற விமர்சனம் இன்று பலராலும் முன்வைக்கப்படுகின்ற நிலையில் அவர் நீதியரசர் என்ற நிலையிலிருந்தும் தன்னைத் தாழ்த்திக் கொண்டுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. வட மாகாணசபை உறுப்பினர் பா. டெனிஸ்வரன் தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமை தவறானது எனத் தெரிவித்து தாக்கல் செய்த வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில் எதிராளிகளாக விக்…
-
- 1 reply
- 675 views
-
-
அடுத்த தேர்தலில் தமிழர்கள் என்.கே. அஷோக்பரன் / 2020 பெப்ரவரி 24 இன்னொரு நாடாளுமன்றத்தின் பதவிக்காலம், நிறைவுக்கு வருகின்றது என்று எதிர்பார்க்கலாம். ஆளும் அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில், ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தைத் தனது விருப்பின்படி கலைக்கக்கூடிய அதிகாரம், நாடாளுமன்றத்தின் பதவிகாலத்தில், நான்கரை வருடங்கள் பூர்த்தியானதன் பின்னரே வரும் என்ற அடிப்படையில், மார்ச் மாதத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இந்த நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். அதன் மூலம், பொதுத் தேர்தலைச் சந்தித்து, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை, முடிந்தால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதே, ராஜபக்ஷக்களின் நிச்சயமான திட்டம் என்பதில் ஐயமேது…
-
- 3 replies
- 675 views
-
-
-
- 1 reply
- 675 views
-
-
சீன மொழியால் தமிழுக்கு ஆபத்தா? என்.கண்ணன் இலங்கையில் சீனாவின் பொருளாதார, முதலீட்டு ஆதிக்கம் பற்றி வெளிநாடுகளில் அதிகமாகப் பேசப்பட்டு வரும் நிலையில், அதனைத் தவிர்ந்த வேறு விடயங்களிலும் சீனாவின் தலையீடுகள் குறித்த கரிசனைகள் உள்நாட்டில் ஏற்படத் தொடங்கியிருக்கின்றன. ஒரு காலத்தில் சீனா தனது விலைமதிப்புக் குறைந்த உற்பத்திப் பொருட்களால், உலகின் பெரும்பாலான நாடுகளின் சந்தைகளை நிரப்பியது. இப்போது, முதலீடுகள் மற்றும் தனது தொழிற்படையின் மூலம், வெளிநாடுகளை நிரப்பத் தொடங்கியிருக்கிறது. அவ்வாறானதொரு நிலையைச் சந்தித்திருக்கும் நாடு தான் இலங்கையும். இலங்கையில் அதிகரித்து வரும் …
-
- 0 replies
- 675 views
-
-
விக்னேஸ்வரன் - மகாநாயக்கர்கள் சந்திப்பு: நாட்டுக்கு இன்று தேவையானது வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடந்த வெள்ளிக்கிழமை (15.09.2017) இலங்கையின் இரண்டு பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்களுடனும் சந்திப்புகளைச் செய்திருந்தார். இந்தச் சந்திப்புகள் இலங்கையின் அரசியல் வட்டாரங்களில் கவனிப்பைப் பெற்றிருந்தன. இது தொடர்பாக இலங்கையின் தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்களும் பல்வேறு கோணங்களில் செய்திகளை வெளியிட்டிருந்தன. கடந்த சில நாட்களாக இந்தச் சந்திப்புகளைப் பற்றித் தமிழ்த்தரப்பிலும் சிங்களத்தரப்பிலுமாக அரசியல் ஆய்வாளர்களும் விமர்சகர்களும் தாராளமாகப் பல ஆய்வுகளையும் விமர்சனங்களையும் முன்வைத்திருக்கிறார்கள். இன்னும் இந்த அலை ஓயவில்லை. தமிழ் ஊடக…
-
- 0 replies
- 675 views
-
-
தென்னிலங்கையில் மீண்டும் பெரும்பான்மையினவாத அணிதிரட்டல் முயற்சிகள்! Veeragathy Thanabalasingham on February 8, 2023 Photo, Colombo Telegraph தேசிய இனப்பிரச்சினைக்கு துரிதமாக அரசியல் தீர்வொன்றைக் கண்டுவிடும் நோக்குடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட்டும் நாடாளுமன்ற கட்சிகளின் மகாநாடு இதுவரையில் இரு தடவைகள் கூட்டப்பட்டது. முதற்சுற்று கடந்த டிசம்பர் 13ஆம் திகதியும் இரண்டாவது சுற்று ஜனவரி 26ஆம் திகதியும் இடம்பெற்றன. இந்த மகாநாட்டில் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) கலந்துகொள்வதில்லை. அதன் தலைவர்கள் மகாநாட்டில் கலந்துகொள்ளாதமை பெரும்பாலும் காரணம் காட்ட இயலாததாகும். அவர்கள் கலந்தகொண்டிருக்கமுடியும்; கலந்துகொண்டிருக்கவு…
-
- 0 replies
- 675 views
-
-
-
- 2 replies
- 675 views
- 1 follower
-
-
வூகான் உச்சிமாநாடு இந்திய சீன உறவுகள் பலமடையுமா? இந்தியா, சீனா என்னும் இரண்டு பழம்பெருமை வாய்ந்த இரு நாகரிகங்களும் இன்று உலகில் அதிவேகமாக பொருளாதார விருத்தியில் முன்னேறும் நாடுகளாகும். உலக சனத்தொகையில் நாற்பது வீதத்துக்கு மேற்பட்டோர் இவ்விரு தேசங்களிலும் வாழ்கின்றனர். இந்து பள்ளத்தாக்கு நாகரிகத்துக்கு பெயர் போன இந்தியா பல மொழிகளுக்கு, மதங்களுக்கு, பல வேறுபட்ட கலாசாரங்களுக்கு தாயகமாக விளங்குகின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக உலகின் பெரும் ஜனநாயக நாடு என வர்ணிக்கப்படுகிறது. சனத்தொகை 120 கோடியைத் தாண்டிவிட்டது. தரையாலும் கடலாலும் சூழப்பட்ட நாடாகும். இந்தியாவின் தெற்கு இந்து சமுத்திரத்தால் சூழப…
-
- 0 replies
- 675 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பை நெருங்கிவரும் ஆபத்து? - யதீந்திரா படம் | TAMILGUARDIAN தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு தனிக் கட்சியாக பதிவுசெய்வது தொடர்பான விவகாரம் மீண்டும் தலைநீட்டியிருக்கிறது. கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவுசெய்ய வேண்டும் என்னும் கோரிக்கை கடந்த ஜந்து வருடங்களாக முன்வைக்கப்பட்டு வருகிறது. எனவே, இது ஒரு புதிய கோரிக்கையோ அல்லது அரசியல் வாசகர்கள் அறியாத சங்கதியோ அல்ல. ஆனால், இதுவரை இந்தப் பிரச்சினைக்கான காத்திரமான தீர்வை எவராலும் காண முடியவில்லை. இதனை கூட்டமைப்பிலுள்ள தலைவர்கள் எவ்வாறு பரபஸ்பர விட்டுக்கொடுப்புடன் கையாளப்போகின்றனர் என்பதிலும் தெளிவற்ற ஒரு நிலையே காணப்படுகிறது. கூட்டமைப்பை ஒரு தனி அரசியல் கட்சியாக மாற்றியமைப்பதில் உள்ள தடைகள் என்ன? தமிழ் த…
-
- 0 replies
- 675 views
-
-
வரம் கொடுப்பாரா பூசாரி? Gavitha / 2020 ஓகஸ்ட் 04 , பி.ப. 01:14 தங்களை, தாங்களே ஆளத் தகுதி உள்ளவர்களின் கூட்டுணர்வையே, தேசியம் அல்லது ஜனநாயகம் என்று அழைக்கிறோம். தேசியம் என்பதற்குள், அனைத்து இன மக்களுக்குமான பொதுவான பிரதேசம், கலாசாரம், பொருளாதாரம், ஆகிய அனைத்தும் உள்ளடக்கப்படுகின்றன. இவை அனைத்தும் நாட்டிலுள்ள அனைத்து இனங்களின் அடையாளமாகும். இந்த இனம் என்று வரும்போது, பொதுவாக மலையகத்தை எடுத்துக்கொண்டால், பெரும்பாலான தமிழர்கள், பெருந்தோட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் ஆகவும் அவர்களைச் சார்ந்தவர்களுமாகவே இருக்கின…
-
- 0 replies
- 674 views
-
-
முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது ஈழத் தமிழரின் அரசியலில், தமிழரின் தாயக இருப்பியலில், தமிழ்த்தேசியம் என்னும் கருத்தியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இத்தகைய ஒரு தாக்கம் ஏற்படும் என தமிழ் அரசறிவியலாளர்கள் குறிப்பிட்டு அதனைக் கையாண்டு வெற்றி கொள்ளக் கூடிய உபாயங்களை தெரிவித்திருந்தும் கூட அரசியல்வாதிகள் எனப்படுவோர் அதனை சாட்டை செய்யாது , இதனை ஒரு கருத்தியலாக ஏற்க மறுத்ததன் விளைவுகள் 2024 பொதுத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்களினதும் அவர்களுடைய செயற்பாடுகளும் எதிர்காலத்தில் தமிழ் தேசியத்தை கட்டமைக்க முடியுமா? என்ற ஐயப்பாட்டை தோற்றுவித்திருக்கிறது. மக்கள் சேவைகள் ஏதேனிலும் ஈடுபட்டார்களா.. அந்த அளவிற்கு தமிழர் தாயக பரப்பெங்கும் தமிழ்த் தேசிய…
-
-
- 4 replies
- 674 views
-
-
சிங்கள ராஜதந்திரத்தில் "முடிந்தால் குடுமியைப்பிடி முடியாவிட்டால் காலைப்பிடி" என்று ஒரு பழமொழி உண்டு. இதனை அனைத்து சிங்களத் தலைவர்களும் தமக்கு நெருக்கடி வருகின்ற போதெல்லாம் பயன்படுத்தி நிலைமைகளை சமாளித்துக் கொள்ளும் ராஜதந்திர உத்தியை பிரியோகிக்க தவறுவதில்லை. இலங்கை தீவில் இன்றுள்ள பொருளாதார நெருக்கடியும், இந்தோ-பசுபிக் பிராந்திய வலுச்ச சமநிலை இலங்கைத்தீவில் மையம் கொண்டுள்ளதால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க சிங்களத் தலைவர்களை அனைத்து எதிர் சக்திகளிடமும் பணிந்து அவர்களின் காலைப்பிடிக்கும் தந்திரத்தை தற்போது கையாளுகின்றனர். காலில் விழுந்து காலை தடவுவார்கள் அரசியலில் எப்போது எதிரி பலம் இழந்திருக்கிறானோ அப்போதுதான் அவன் தன் எதிர்த்தரப்பினரை நோக்கி பணிந்த…
-
- 4 replies
- 674 views
-