Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தேர்தல் மனோநிலை -க. அகரன் உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் இலங்கையும் சிக்கித் தவித்திருந்தாலும், தற்போது தன்னைக் கம்பீரம் மிக்க நாடாகக் காட்டிக்கொள்ள எத்தனிப்பதாகத் தோன்றுகின்றது. அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்கள் மத்தியில், இலங்கை ஜனநாயகப் போராட்டத்துக்குள் செல்ல முயற்சிக்கின்ற நிலையில், எப்போது தேர்தல் என்ற கேள்வி, பலருக்கும் எழுந்துள்ளது. எனினும், இந்தத் தேர்தலை மக்கள் இயல்பான மனநிலையுடன் எதிர்கொள்வார்களா என்ற சந்தேகம் காணப்பட்டாலும் கூட, சுகாதார அமைச்சினது ஆலோசனையின் பிரகாரம், தேர்தல் ஆணையாளர் மிகவிரைவில் தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதாகக் கூறியுள்ளார். இச்சூழலில், வேட்பாளர்களின் செயற்பாடுகளால், வாக்காளர்களின் மனோபா…

  2. வேல் தர்மா: அரசியல் அலசல்: சீனாவின் (அஞ்சுவது) அஞ்சாமை துணிவுள்ளவனுக்கு அச்சமில்லை என்பது கொன்பியூசியசின் போதனையாகும். சீனாவின் புள்ளிவிபரங்கள் அதிசயிக்கத் தக்கன. உலகிலேயே பெரிய மக்கள் தொகை, உலகிலேயே அதிக அளவு வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு, இரண்டாவது பெரிய பொருளாதாரம், மிகப் பெரிய படைத்துறை ஆளணி, இரண்டாவது பெரிய படைத்துறை, விண்வெளியில் பல சாதனைகள், அதிக நீர் மூழ்கிக்கப்பல்கள், மிகப் பெரிய அருங்காட்சியகம், மிகப் பெரிய நீன் மின் உற்பத்தி நிலையம், மிகச் சிறந்த தொடருந்துக் கட்டமைப்பு, உலகில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளுடன் மிகப் பெரிய வர்த்தகம், உலக தொழில்துறை உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு சீனாவில் செய்யப்படுகின்றது, இரண்டாவது பெரிய அந்நிய முதலீ…

  3. சமூக இடைவெளியும் சமூகங்களின் இடைவெளியும் காரை துர்க்கா / 2020 ஜூன் 09 எங்கள் வாழ் நாளில், காலத்துக்குக் காலம், புதிது புதிதாகப் பெயர்கள் வருகின்றனளூ உதடுகளில் வாழ்கின்றனளூ மறைந்து விடுகின்றன. அந்தவகையில், தற்போதைய கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில், 'சமூக இடைவெளி' என்ற சொல், அடிக்கடி எல்லோராலும் பயன்படுத்தப்படுகின்ற பிரபல்யமான சொல்லாகப் பரிணமிக்கின்றது. அதாவது, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து எம்மையும் எம்மைச் சுற்றி உள்ளவர்களையும் பாதுகாக்கும் பொருட்டு, தனிநபர்கள் தங்களுக்கிடையே பேணிக்கொள்ள வேண்டிய இடைவெளியே (தூரம்) 'சமூக இடைவெளி' ஆகும். ஆனாலும், எங்கள் சமூகத்தில், 'சமூக இடைவெளி' பிரமாணத்துக்கு ஏற்றவாறு பேணப்படுகின்றதா என்பது, முற்றிலும் கேள்விக்குரியதாகவே காணப்…

  4. சென்னையிலிருந்து வெளிவரும் பார்பணீய நாளிதழும், தமிழர் விரோத சக்தியுமான "தி ஹிந்து" பத்திரிக்கையில் 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி நிருபமா சுப்ரமணியன் எழுதிய கட்டுரையில் இந்தியா போர் தொடர்ந்து நடைபெற்று புலிகள் முற்றாக அழிக்கப்படுவதை விரும்பியதாகவும், இதன்பொருட்டு, சர்வதேசத்திலிருந்து வரும் போரினை நிறுத்தும் அழுத்தங்களை இந்தியா சாதுரியமாகத் தடுத்து நிறுத்தி, போர் தங்கு தடையின்றி நடைபெறுவதை உறுதிப்படுத்திக்கொண்டதாகவும் கூறுகிறார். அக்கட்டுரையிலிருந்து சில பகுதிகள் இதோ....... "யுத்தத்தின் இறுதிநாட்களில், இந்தியா பல்வேறு தளங்களில் இலங்கைக்குச் சார்பாகச் செயலாற்றிக்கொண்டிருந்தது. அதில் முக்கியமானது இலங்கையின் போர் நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச நாடுகள் கொண…

  5. பொலிஸ் வன்முறையும் அடிப்படை உரிமைகளும் என்.கே. அஷோக்பரன் / 2020 ஜூன் 08 அமெரிக்கா, மினியாபொலிஸ் நகரத்தில் ஜோர்ஜ் ஃபுளொய்ட் என்ற கறுப்பின நபர், வௌ்ளையினப் பொலிஸ் அதிகாரியின் வன்முறைத் தாக்குதலால், படுகொலையானமையின் எதிரொலியானது அமெரிக்கா மட்டுமல்லாது, உலகமெங்கும் இனவெறிக்கெதிரான குரலாக, ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஜோர்ஜ் ஃபுளொய்டின் படுகொலை தொடர்பில், இரண்டு அம்சங்கள் முக்கியமாகக் கவனிக்கத்தக்கவை. முதலாவது, கறுப்பர்கள் மீதான இனவெறி; இரண்டாவது, பொலிஸ் வன்முறை. இந்த இரண்டினதும் துர்ப்பாக்கிய கலவைதான், ஜோர்ஜ் ஃபுளொய்ட்டின் படுகொலைக்குக் காரணமாக அமைந்துள்ளது. இந்தப் படுகொலை, இனவெறிக்கு எதிரான பெருங்குரலை, உலகெங்கும் ஒலிக்கவைத்திருக்கும் நிலையில், மறுபுற…

  6. தேர்தல் களம் தமிழ்த் தேசிய அரசியலுக்கான பரீட்சைக் களமா? - யதீந்திரா நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தமிழ்த் தேசிய கட்சிகளை பொறுத்தவரையில் ஒரு பரிட்சைக்களமாகும். இந்தத் தேர்தல் முடிவுகள் சிலருக்கு தெளிவான செய்தியாகவும், சிலருக்கு அவர்களது அரசில் வாழ்வின் அஸ்தமனமாகவும் போகலாம். அது யார் – யார் என்பதை தேர்தல் முடிவுகள் கூறும். தேர்தல் களத்தை பொறுத்தவரையில் வடக்கு கிழக்கு என்று பிரித்தே நோக்க வேண்டும். ஏனெனில் வடக்கையும் கிழக்கையும் தங்கள் வாக்குகளின் பலத்தால் இணைக்கக் கூடிய மாற்று கட்சிகள் எவையும் இல்லை. ஒப்பீட்டடிப்படையில் வாக்குகளால் வடக்கு – கிழக்கையும் இணைக்கக் கூடிய ஒரேயொரு கட்சி இலங்கை தமிழரசு கட்சி மட்டும்தான். அவர்களுக்குத்தான் வடகிழக்கு என்னும் அடிப்படையில் ஒரு…

  7. -ஹரிகரன் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள இந்தச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகள் சிலவற்றையாவது, இந்தியாவிடம் இருந்து மீளப் பெற்று விடுகின்ற முயற்சியில் அரசாங்கம் தீவிரமாக இறங்கியிருக்கிறது. இந்தியாவின் புதிய தூதுவராக பொறுப்பேற்ற கோபால் பாக்லே இலங்கை அரசாங்கத் தரப்புடன் அதிகாரபூர்வ சந்திப்புகளை நடத்த ஆரம்பித்துள்ள நிலையில், இந்த விவகாரமும் முக்கியமான பேசுபொருளாக மாறியுள்ளது. அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் உரையாடிய போது, இலங்கையின் பொருளாதாரத்தை துரிதமாக மீளமைப்பதற்கான வழிகள் குறித்தும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதன்போது, குறைந்து போயுள்ள இலங…

    • 0 replies
    • 488 views
  8. தனது இனவெறுப்பு பிரச்சாரத்தால் ஜேர்மனியை நாசிஜேர்மனியாக கருக்கொள்ள வைத்த வரலாற்றை மருதன் எழுதிய இரண்டாம் உலகப்போர் என்ற நூல் பதிவு செய்துள்ளது. அந்த புத்தகதில் இருந்து சில பக்கங்களை இங்கு இணைத்துள்ளேன். அன்றைய உலக மக்கள் தொகையில் 3 வீத‍த்தை பலிகொண்ட அதாவது ஏறத்தாள 85 மில்லியன் மக்களை பலிகொண்ட இரண்டாம் உலக யுத்த‍த்தின் ஆரம்பப்புள்ளியின் ஒரு சில பக்கங்களை இப்பதிவு கூறுகிறது. முதல் உலகப்போர் முற்றுப்பெற்ற 1918 ம் ஆண்டு தொடங்கி 1921 வரையான காலகட்டத்தை உடன்படிக்கைக் காலகட்டம் என்று அழைக்க முடியும். ஜேர்மனி மட்டுமல்ல தோற்றுப்போன அத்தனை தேசங்களுடனும் தனித்தனியே ஒப்பந்தங்கள் போட்டுக்கொள்ளபட்டன. · செப்ரெம்பர் 10, 1919 ல் Treaty of Trianon – ஹங்கேரிய…

  9. ஸ்ரீலங்கா அரசாங்கம் சீனாவின் பின்புலத்துடன் தொடர்ச்சியாக செல்பட்டுவருவதாக அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் சுட்டிக்காட்டியிருக்கிறார். சமகால அரசியல் போக்கு தொடர்பில் எமது ஊடகத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசியல் களம் குறித்தும் மேலும் பல அரசியல் நகர்வுகள் தொடர்பிலும் அவர் எம்மோடு பேசியிருக்கிறார். இது குறித்து அவர் பேசியதாவது, https://www.ibctamil.com/srilanka/80/144776?ref=home-imp-parsely

    • 0 replies
    • 466 views
  10. இது சற்று நீண்ட கட்டுரை தான். சில தவறுகளும் இருக்கலாம். ஆனால் மன்னிப்பு கேட்கமாட்டேன். புரிந்து கொள்வது உங்கள் திறமை! பிழை விடாமல் எதையும் சரி செய்ய முடியாது தோழர்களே! நான் அறிந்த விடயங்களை விட அறியாத விடயங்களும் விடைகளுமே அதிகம்... ஆனால் நடுநிலைப் போக்கில் நிகழும் விடயங்களைக் கொண்டு பல யதார்த்தங்களை எம்மால் உணர முடியும் என்பது உள்ளார்ந்தமாக ஏற்றுக் கொள்ளக் கூடியதே... "மனிதன் ஓர் அரசில் பிராணி" என்ற அரிஸ்ட்டோட்டிலின் கருத்தை நான் பிள்ளைப் பருவத்தில் கேட்டதும் "என்னையும் சேர்த்து அல்லவா அவர் மிருகம் என்றிருக்கிறார்!" என்று அவர் மீது எனக்குளேயே கோபப்பட்டுருக்கிறேன்... பிராணி என்ற சொல்லின் விம்பங்கள் கொடுக்கும் அர்த்தங்களை அறிந்த பிறகு…

    • 0 replies
    • 404 views
  11. யாழ் நூலக எரிப்பு : உண்மைகளும் மாயைகளும் நினைவுக் குறிப்புகள் – நிலாந்தன்.. June 7, 2020 கடந்த முதலாம் திகதி யாழ் நூலக எரிப்பு நினைவு கூரப்பட்டது. எதிரியை எங்கே தாக்கினால் நிலை குலையச் செய்யலாமோ அந்த இடத்தில் தாக்குவதுதான் பொதுவான இயல்பு. இன்னும் கூர்மையாக சொன்னால் எதிர்த்தரப்பின் உயிர்நிலை எதுவோ அங்கே தாக்குவது. ஈழத் தமிழர்களின் உயிர் நிலை அல்லது குறிப்பாக யாழ்ப்பாணத்தவர்களின் உயிர் நிலை கல்விதான் என்று கருதிய காரணத்தினாலேயே யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தவர்களின் உயிர்நிலை கல்விதானா என்ற கேள்விக்கு உரிய விடையைத் தனியாக ஆராய வேண்டும்.ஆனால் சிங்கள அரசியல்வாதிகள் அப்படித்தான் நம்பினார்கள். அதனால்தான் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. இந்த அடிப…

  12. படைமய சூழலுக்குப் பழக்கப்படுதல் கே. சஞ்சயன் / 2020 ஜூன் 05 கொரோனா வைரஸ் தொற்றால், கடந்த மூன்று மாதங்களாக, உலகளாவிய ரீதியாகப் பொருளாதார உற்பத்திகள் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், புதிய அச்சுறுத்தல் ஒன்று, வெட்டுக்கிளிகளின் வடிவத்தில் வந்திருக்கிறது. சோமாலியா, எதியோப்பியா போன்ற ஆபிரிக்க நாடுகளில், வெட்டுக்கிளிகள் பயிர்களுக்குப் பேரழிவுகளை ஏற்படுத்துவது வழக்கம். உள்நாட்டுப் போர், வறுமை, பொருளாதார வளமின்மை போன்ற காரணிகளால், இந்த நாடுகள் பலமான உணவுப் பாதுகாப்புக் கட்டமைப்பைக் கொண்டிருப்பதில்லை. இதனால், இங்கு வெட்டுக்கிளிகள் கட்டுக்கடங்காமல் பரவுகின்றன. இந்த வெட்டுக்கிளிகள், அவ்வப்போது உலகத்துக்கே அச்சுறுத்தலாகவும் மாறுகின்றன. ஒரு நாளைக்கு 150 கி.மீ வ…

  13. சமகால அரசியல் சமதளம் இலட்சுமணன் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அரசியல் சிக்கல் நிலைமைகள் தொடர்பாக பொருளாதார ரீதியில் நாடு எதிர்பாராத சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அரசாங்கம் இந்த சிக்கல் நிலைமைகளில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தேர்தலை உடனடியாக நடத்த வேண்டிய தேவை உள்ளதை உணர்ந்துள்ளது. இதற்குக் காரணம் தனது அரசியல் அதிகார பலத்தின் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட வேண்டியது அதற்கு உள்ளது. அந்த வகையில் தற்போதைய சூழலில் கொரோனா தொற்றை எதிர்கொண்ட விதம் தொடர்பான மக்களின் வரவேற்பும் கொரோனா நிவாரணம் தொடர்பான மக்களின் அதிருப்தியையும் தற்போதைய அரசு சம்பாதித்திருக்கிறது. இதை விட பொருளாதார ரீதியில் நொந்துபோயுள்ள பாமர மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிப்பு எ…

  14. இழவு அரசியல்: மரணங்கள் புனிதமாக்கா... இலங்கை அரசியலில் இழவு அரசியலுக்கு ஒரு வரலாறு உண்டு. அது சில தருணங்களில் அதிகாரத்துக்கான அவாவாக வெளிப்பட்டுத் தொலைக்கும். அந்த அபத்தத்தை கடந்த வாரம் கண்டோம். ஒரு மரணத்தை முதலீட்டாக்கி, அரசியல் இலாபம் பார்க்கும் செயல், 'இலங்கை அரசியல்' அதன் அடியாளத்தில் தேக்கி வைத்திருப்பது, பேராசையையே என்பதைத் தெட்டத் தெளிவாகக் காட்டியது. "மலை சரிந்துவிட்டது" என்போர், கடந்த 20 ஆண்டுகளில் மலையக மக்களின் வாழ்வில், எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டது என்பதை முதலில் சொல்லட்டும். அதன் பின்னர், சரிந்தது மலையா, வேறெதுவுமா என்பதைப் பற்றிப் பார்க்கலாம். மரணம் ஒருவரைப் புனிதனாக்கமாட்டா. உணர்வுபூர்வமான கதைகளும் அனுபவப் பகிர்வுகளும் பத்திரிகை…

  15. அமெரிக்காவும் ஈழத்தமிழரும்: முன்னை இட்ட தீ தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஜூன் 05 எதிர்வுகூறல்கள் சரிவரும் போது, மகிழ்ச்சியை விட, சோகமே மிகுதியாகிறது. உலகம் தொடர்ந்தும் நியாயத்துக்காகப் போராடிக் கொண்டே இருக்கிறது. மனிதனை மனிதன், மனிதனாக மதிக்காத ஒரு மனிதகுலத்தின் அங்கமாக நாம் இருக்கிறோம் என்பதில் அச்சப்படவும் வெட்கப்படவும் நிறையவே இருக்கின்றன. இக்கணத்திலும், அநியாயத்துக்கும் அடக்குமுறைக்கும் எதிராகக் குரல் கொடுக்காமல், மௌனியாகவே ஏராளமான மனித மனங்கள் இருக்கின்றன. அடக்குமுறையையும் அநியாயத்தையும் ஆதரிக்கும் குரல்கள் இப்போது, அமெரிக்காவில் நடப்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்;கும் நகைச்சுவையும் இங்கு நடந்தேறுகிறது. மறவாதீர்! ஓர் அநியாயத்தை ஆ…

    • 2 replies
    • 1.1k views
  16. கடவுள் அவர்கள் பக்கம் | அச்சம் தரும் எதிர்காலம் மியான்மாரின் பாதையில் இலங்கை அரசியல் அலசல்: சிவதாசன் ஜூன் 2ம் திகதி ஜனாதிபதி ராஜபக்சவினால் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் உருவாக்கப்பட்ட, கிழக்கு மாகாணத்துக்கான தொல்பொருளியல் பாரம்பரிய முகாமைத்துவப் பணிக்குழுவில் தமிழர்களோ, முஸ்லிம்களோ சேர்க்கப்படாதது அங்குள்ள சிறுபான்மை மக்களிடையே அச்சத்தைத் தோற்றியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் மூன்றில் இரண்டு பங்கினர் தமிழ், முஸ்லிம் மக்களாக இருக்கும்போது ஜனாதிபதியின் இந் நடவடிக்கையின் பின்னால் பூர…

    • 0 replies
    • 394 views
  17. உரிமையா, அபிவிருத்தியா? தமிழர் நலன்காப்பது எந்தவழி அரசியல்? அடுத்துவரும் ஓகஸ்ட் மாதத்தில், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குள், நாட்டுமக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். மூவினங்கள் வாழும் இந்த நாட்டில், நாடாளுமன்றத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகளும் சிந்தனைகளும் அபிலாஷைகளும், ஓரினத்தைப்போல் மற்றைய இனத்துக்குக் கிடையாது. ஒவ்வொரு இனத்தினுடைய, தேர்தல் குறித்த அணுகுமுறைகள், வேறுவேறானவை. சிங்கள மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதன் நோக்கத்துக்கும், முஸ்லிம் மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் நோக்கத்துக்கும் தமிழ் மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் அபிலாஷைகளுக்கும்…

  18. சிங்கள மக்களின் உதவியை நாடும் இலங்கைத் தமிழ் தாய்மார்கள்... எதாற்காக ? - சிவா பரமேஸ்வரன் (முன்னாள் மூத்த செய்தியாளர் பி.பி.சி. ) இலங்கையில் பதினோரு ஆண்டுகளுக்கு முன்னர் கொடூரமாக முடிவடைந்த யுத்தத்தின் கடைசி நாட்களில் காணாமல்போன மற்றும் கையளிக்கப்பட்ட உறவுகளைக் கண்டுபிடிக்க சிங்கள மக்களின் உதவியை இப்போது தமிழ்த் தாய்மார்கள் கோரியுள்ளனர். தமது உறவுகளை கண்டுபிடித்துக்கொடுக்குமாறு கோரி கடந்த 1200 நாட்களாக அவர்கள் சுழற்சி முறையின் உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடி வருகின்றனர். எண்ணற்றவர்களை உயிர்ப்பலி கொண்ட கொடூரமான அந்த யுத்தம் 18 மே 2009 அன்று முடிவடைந்துவிட்டதாக அரசு அறிவித்த நிலையில், ஏராளமானவர்கள் அதற்கு முன்னரும் பின்னரும் அரச படைகளிடம் `சரணடைந்தனர்…

  19. சங்கக் கடையைத் திரும்பிப் பார்க்க வைத்த வைரஸ் - நிலாந்தன் கோவிட் -19காலத்தில் வீட்டுத் தோட்டத்த்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதைப் போல கூட்டுறவு வாழ்க்கை குறித்தும் இயற்கைக்கு மீளத் திரும்புவது குறித்தும் உரையாடத் தொடங்கியுள்ளோம். குறிப்பாக சமூகத்தின் அன்றாடங் காய்சிகளுக்கும் நலிவுற்ற பிரிவினருக்கும் பாரபட்சமற்ற விநியோகத்தை மேற்கொள்வதற்கு கூட்டுறவுச் சங்கங்களை புதுப்பிக்க வேண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.. உண்மைதான். யுத்த காலங்களில் சங்கக் கடை மைய வாழ்க்கை ஒன்று இருந்தது. அந்நாட்களில் கூப்பன் கார்ட்டும் அடையாள அட்டையும் தொலைக்க முடியாத ஆவணங்களாக காணப்பட்டன. குடும்ப அட்டை என்பது நிவாரண அட்டையாகவும் நீட்சி பெற்றிருந்தது. குடும்ப …

  20. அமெரிக்காவின் துயர நிகழ்வுகள் இலங்கைக்கு பாடமா? இல்லை பாதையா? – சுரேந்திரன் உலகின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் இனவாதமும் நிறவெறியும் இந்த நவீன யுகத்திலும் தொடர்வது இந்த பூகோளத்தின் சாபக்கேடேயாகும். அதன் விளைவுகளை தற்போது உலக வல்லரசான அமெரிக்கா அனுபவித்து வருகின்றது. இது ஏனைய உலக நாடுகளுக்கு சிறந்த பாடமாக அமைந்துள்ளது. இவ்வாறு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், ‘அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜாேர்ஜ் ஃப்ளாய்ட் என்பவர், பொலிஸ் பிடியில் இருந்தபோது கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் தொடர்கின்றன. இதனால் அமெரிக்காவில் நாற்பது நகரங்கள…

    • 1 reply
    • 447 views
  21. இந்தியாவிடமிருந்து விலகிச் செல்கிறதா நேபாளம்? சுஹாஸினி ஹைதர் நேபாளத்தின் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம்செய்யும் முடிவில் இருக்கிறார் அந்நாட்டின் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலீ; இந்தத் திருத்தத்தின்படி, எல்லைத் தாவாவில் இருக்கும் இந்தியப் பகுதிகளையும் உள்ளடக்கும்படி நேபாளத்தின் அதிகாரபூர்வ வரைபடத்தில் மாற்றம் செய்யப்படவிருக்கிறது. இதனால், நேபாளத்தின் தெற்குப் பகுதியில் உள்ளவர்கள் பயந்தது மாதிரியே நடந்துவிடும்போல் இருக்கிறது. சில ஆண்டுகளாகவே ஒலீயின் தேசிய அரசியல் நேபாளத்தை இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டுக்குத் தள்ளிவிடும் என்று அவர்கள் அச்சப்பட்டார்கள். லிம்பியதுரா, லிபுலேக், காலாபாணி ஆகிய பகுதிகளை மீட்பதற்கான அறைகூவலாகட்டும், சீனாவிலிருந்து வந்த வ…

  22. தமிழ்த் தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜூன் 03 பதினோர் ஆண்டுகளுக்கு முன், அதாவது, இறுதிப் போர் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்திருந்த நேரம்… விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் ஆயுதப் போராட்டம் தொடர்பாகவும், தமிழ் மக்களின் எண்ணவோட்டம், எப்படி இருக்கின்றது என்பதை அறிந்து கொள்வதற்குப் பல தரப்புகளும் ஆர்வம் கொண்டிருந்தன. அரச படைகளும் அதன் புலனாய்வுத் துறையும், தமிழ் மக்களை, ஒவ்வொருவராக அலசி ஆராயும் முனைப்பில் ஈடுபட்டிருந்தன. அந்தத் தருணத்தில்தான், என்றைக்கும் இல்லாதளவுக்கு, புலிகளுக்கும் ஆயுதப் போராட்டத்துக்கும் தமிழ்த் தேசிய நிலைப்பாடுகளுக்கும், எதிரான கட்டுரைகளும் பத்திகளும் தமிழ்ப் பரப்பில் வெளிவர ஆரம்பித்திருந்தன. …

  23. சாதாரண கட்சி அரசியலில் ஈடுபட்டால், தேசம் என்பதைக் கட்டியெழுப்ப முடியுமா? இலங்கையின் சாதாரண கட்சி அரசியல் செயற்பாடுகளுக்குள் நின்று கொண்டு மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. அது ஒவ்வொரு கட்சிகளுக்குமான வெவ்வேறு தளங்களிளான ஆதரவாகவே மாறும். இந்த ஆதரவுத் தளங்கள், சிங்கள ஆட்சியாளர்களின் பிரித்தாளும் தந்திரங்களுக்குச் சாதகமாக அமையும்- -அ.நிக்ஸன்- இலங்கை ஒற்றையாட்சி அரசின் அரசியலமைப்புக்குள் நின்று கொண்டு அதுவும் சாதாரண கட்சி அரசியல் செயற்பாடுகளின் ஊடான தேர்தல் அரசியலில் மாத்திரம் தமிழ்க் கட்சிகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறானதொரு நிலையில் தமிழ்த்தேசியப் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வைக் காண முடியும் என்ற கேள்விகள் எழுவது இயல்பானது. எழுபது ஆண்டுகளுக்கும் மேலான ஈழத்த…

  24. இலங்கையால் ஜக்கிய நாடுகள் சபையிலிருந்து வெளியேற முடியுமா? - யதீந்திரா அண்மையில் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவித்திருந்த கருத்துக்கள் சர்வதேச ஊடகங்களில் அதிக கவனத்தை பெற்றிருந்தது. யுத்த வெற்றி நாயகர்களான இராணுவத்தினர் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதை தனது அரசு ஒரு போதும் அனுமதிக்காது. பலம்பொருந்திய நாடுகள் தங்களின் யுத்த வெற்றி வீரர்கள் மீது எவரும் அழுத்தங்களை பிரயோகிக்க அனுமதிக்க முடியாது என்று கூறகின்றன. எங்களைப் போன்ற சிறிய நாடுகளின் இராணுவத்தினர் அழுத்தங்களுக்கு ஆளாகின்றனர். அதனை எங்களால் அனுமதிக்க முடியாது. அவ்வாறு அழுத்தங்களை பிரயோகிக்கும் உலக அமைப்புக்களிலிருந்து விலகுவதற்கும் தான் தயங்கப் போவதில்லை என்று கோட்டபாய தனது உரையில் தெரிவித்திருந்தார். விடுதலைப…

  25. சிங்கங்களை இழக்கும் காடுகள் முகம்மது தம்பி மரைக்கார் / 2020 ஜூன் 02 அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மரணம், பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அனைத்து விதமான விமர்சனங்களுக்கும் அப்பால், மலையகத் தமிழ் மக்களின் 'தலைவனாக' அவர் இருந்தார் என்பதை, மறுத்து விட முடியாது. தனது தாத்தாவின் வழியில், அரசியலுக்கு வந்த ஆறுமுகன், மரணத்தில் முந்திக் கொண்டார். அதுவும், நாடாளுமன்றத் தேர்தலொன்றில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், அவர் இறந்து போனமை, இரட்டிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆறுமுகனின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்டபோது, முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் மரணம் நினைவுக்கு வந்தது. 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.