அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
டில்லிக் கலவரம்: ஒரு ‘கறுப்பு அத்தியாயம்’ எம். காசிநாதன் / 2020 மார்ச் 02 வலிமைமிக்க இந்திய ஜனநாயகம், ‘டெல்லிக் கலவரம்’ போன்றவற்றைச் சமாளித்து, தன் பன்முகத்தன்மையைப் பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றல்மிக்கது. என்றாலும், அதே ஜனநாயக ரீதியிலான தேர்தலில் வெற்றி பெற்று வந்தவர்கள், ‘வெறுப்புப் பேச்சுகளை’ விதைத்து, இப்படியொரு சூழலை உருவாக்கியிருப்பது, அசாதாரணமான நிகழ்வாகவே தோற்றமளிக்கிறது. குறிப்பாக, காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்ட போதும், அயோத்தி வழக்குத் தீர்ப்பு வந்தபோதும் அமைதி காத்த மக்கள், இப்போது குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் களமிறங்கி, உலக அரங்கில் இந்தியாவின் மாண்புமிக்க ஜனநாயகத்தைக் களங்கப்படுத்த நினைப்பது …
-
- 0 replies
- 506 views
-
-
கடைசியாக நாங்கள் நினைத்தது எதுவோ அதுவே நடந்து விட்டது. 2015ம் ஆண்டு ஜெனிவாவில் இலங்கையின் அனுசரணையோடு நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானத்தில் இருந்து இலங்கை ஒரு தலைப்பட்சமாக வெளியேறி விட்டது. ஐந்தாண்டுகளிற்கு முன்னர் இலங்கை இணை அனுசரணை வழங்கும் போது உயர்ந்த எங்கள் நெற்றிப் புருவங்கள், இன்று அதே ஜெனிவா முன்றலில் வைத்து ஐநா தீர்மானத்தில் இருந்து விலகுவதாக சண்டித்தனமாக இலங்கை அரசாங்கம் அறிவித்ததோடு ஓய்வு நிலைக்கு வந்து விட்டன. தமிழர்களிற்கு தாங்கள் பெரிய கெட்டிக்காரன்கள் என்று இருக்கும் மிதப்பு கொஞ்ச நஞ்சமல்ல. தமிழர்களின் இந்த மிதப்பில் சிங்களவர்களை மடையனாக பார்த்த, பார்க்கும் மனநிலையும் கலந்தே இருக்கிறது. எங்கட கெட்ட காலம், இந்தக்…
-
- 4 replies
- 1.4k views
-
-
திருக்கேதீஸ்வரத்திலிருந்து எழுவைதீவு வரை: நிலாந்தன்… February 29, 2020 மதமுரண்பாடுகளைத் தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகுதல் அண்மையில் தமிழ் வாக்குகள் சாதி ரீதியாகவும் சமய ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் பிரிக்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்து வருவதை குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அக்கட்டுரை தொடர்பாக ஒரு சமூக செயற்பாட்டாளர் என்னோடு கதைத்தார். அவர் காரைநகரில் உள்ள சமூக மேம்பாட்டு அமைப்பைச் சேர்ந்தவர்.கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது இந்த அமைப்பு என்னோடு தொடர்பில் இருந்தது. அவர்களை ஆதரித்து கட்டுரைகளையும் எழுதி இருக்கிறேன். என்னோடு தொலைபேசியில் கதைத்த நண்பர் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினார். சாதிரீதியாக சமூகத்தை பிரிப்பத…
-
- 3 replies
- 708 views
-
-
ஐ.நா தீர்மானமும் ஆறிப்போன ரீயும் கடந்த பத்தாண்டுகளில் எத்தனையோ ஜெனீவாக்களை நாம் கண்டுள்ளோம். அந்த வரிசையில் இப்போது இன்னொரு ஜெனீவா, அவ்வளவேதான்! இதை நாம் புரிந்து கொள்ளாமல், நம்பிக்கை வளர்ப்பதில் அர்த்தம் ஏதும் இல்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட பிரேரணை, எதையும் சாதிக்காது என்பது கொஞ்சம் பகுத்தறிவுள்ள எந்தவொரு மனிதனுக்கும் விளங்கியிருக்கும். ஆனால், அதை வைத்து நடக்கும் அரசியல் ஆட்டம் இன்னமும் தொடர்கிறது. இலங்கை அரசாங்கம், தானே முன்வந்து ஒத்துழைத்த பிரேரணையில் இருந்து வெளியேறிவிட்டதாக அறிவித்துவிட்டது. இந்தப் பிரேரணைக்கு ஆதரவு கொடுத்த முன்னைய இலங்கை அரசாங்கமே, அந்தப் பிரேரணையில் உள்ளவற்றை இலங்கையில் ச…
-
- 3 replies
- 1.3k views
-
-
புர்கா விவகாரம்: அச்சுறுத்தலாக மாறுகின்றதா முஸ்லிம்களின் பாதுகாப்பு ஆடை? மொஹமட் பாதுஷா உலகை ஆட்கொண்டுள்ள ‘இஸ்லாமோபோபியா’வும் மாறுவேடம் பூண்டுள்ள இனவாத சக்திகளும் அதேபோன்று, முஸ்லிம் பெயர்தாங்கிய பயங்கரவாத அமைப்புகளின் செயற்பாடுகளும், உலகெங்கும் பரவலாக வாழ்கின்ற சாதாரண முஸ்லிம்களின் அடையாளங்களைப் பறிகொடுக்கும் நிலைக்கு இட்டுச் சென்றுகொண்டிருப்பதைக் அன்றாடம் காண்கின்றோம். இந்தியா, இலங்கை தொட்டு மேற்குலக நாடுகள் வரை, பல தேசங்களின் அரசியல், இனவாதத்தின் முக்கிய மூலதனமாக, முஸ்லிம்கள் ஆக்கப்பட்டு இருக்கின்றார்கள். இலங்கையில் இனவாத சம்பவங்கள் பல கட்டங்களாக இடம்பெற்றிருக்கின்றன. எந்த அரச…
-
- 4 replies
- 679 views
-
-
சாய்ந்தமருதும் பேரினவாதமும் எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 பெப்ரவரி 27 இம்மாதம் 14ஆம் திகதியன்று, சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியானதொரு நகர சபையை நிறுவுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்ட அரசாங்கம், ஆறு நாள்களுக்குப் பின்னர், அந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய முடிவு செய்தது. அதற்கு அரசாங்கம் தெரிவிக்கும் காரணம் விசித்திரமானது. இது போன்று புதிதாக உள்ளூராட்சி சபைகளை வழங்க வேண்டிய சகல இடங்களுக்கும், ஒரே நேரத்தில் அவற்றை வழங்குவதற்காகவே இந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டதாக, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளரும் உயர்க் கல்வி அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன கூறினார். சாய்ந்…
-
- 0 replies
- 600 views
-
-
புருஜோத்தமன் தங்கமயில் / 2020 பெப்ரவரி 27 , பி.ப. 07:11 - 0 - 1 ஜனாதிபதித் தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்ற ராஜபக்ஷர்கள், பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டுப் பெரும்பான்மையை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற இலக்கோடு இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதன்மூலம், 2015 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்து வெளியேறும் வரையில் தாம் வைத்துக் கொண்டிருந்த கேள்விகளுக்கு அப்பாலான நிறைவேற்று அதிகாரத்தின் முழுமையையும் மீண்டும் அடைந்துகொள்ளலாம் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு. ராஜபக்ஷர்களைத் தோற்கடித்து வெளியேற்றியதும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை நாடாளுமன்றத்தோடு பகிர்ந்துகொள்ளும் நோக்கில், ரணில் - மைத்…
-
- 1 reply
- 1k views
-
-
கே. சஞ்சயன் சாம்பியாவுக்கும் இலங்கைக்கும் இடையே, நெருக்கமான இராணுவ ரீதியான ஒத்துழைப்புகளோ தொடர்புகளோ கிடையாது. இலங்கை இராணுவம், ஆண்டு தோறும் நடத்துகின்ற, கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்குகளில், சாம்பியா இராணுவம் பற்கேற்பது வழக்கம். அதுதவிர, சாம்பியா இராணுவத்தின் பயிலுநர் அதிகாரிகள் ஆறு பேரும், மேஜர் நிலையிலுள்ள பெண் அதிகாரி ஒருவரும் தற்போது, இலங்கையில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட கற்கை நிறுவனங்களில், பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அப்பால், இரண்டு நாடுகளுக்கும் இடையில் பெரியளவிலான பாதுகாப்பு உறவுகள் இல்லாத போதும், ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள சாம்பியா, சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில் ஒ…
-
- 0 replies
- 1.1k views
-
-
-இலட்சுமணன் உள்நாட்டு அரசியல் செயற்பாடுகளும் சர்வதேச அணுகுமுறைகளும், இலங்கை அரசியலுக்குத் தேவையான, தேர்தல் வியூகங்களை அமைத்துக் கொடுத்துள்ளன. என்றுமில்லாத அளவுக்குத் தமிழ் தரப்பினரின் பிரிவினைப் போக்கும் சிங்கள தேசியவாத கட்சிகளின் ஒன்றிணைதலும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிதைவும் முஸ்லிம் கட்சிகளின் அரசியல் கையறு நிலையும், இலங்கை அரசியலில் மீள முடியாத, தேசியவாத சிந்தனைகளின் வௌிப்பாடுகளாகவே கருதவேண்டியுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் வியூகத்தில், சிங்களத் தேசியவாத அரசை நிலைநிறுத்த, பொதுஜன பெரமுனவும் சுதந்திரக் கட்சியும் முறையாகத் திட்டம் வகுத்துச் செயற்பட ஆரம்பித்துள்ளன. அதன் விளைவாக, வடக்கு, கிழக்கு தவிர்ந்த பிரதேசங்களில், பொதுஜன பெரமுன, சுதந்திரக் கட்சி…
-
- 0 replies
- 950 views
-
-
அமெரிக்கா உருவாக்கும் இலங்கையின் அடுத்த ஹீரோ -விரான்ஸ்கி ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட நாளிலிருந்து, நாட்டில் அதிரடி அறிவிப்புகளை விடுத்துக்கொண்டிருந்த கோட்டாபய ராஜபக்ஷவின் நடவடிக்கைகளால், பலரும் அதிர்ச்சியடைந்து இருந்தார்கள். நாட்டின் நிர்வாகத்தைச் சீர்தூக்கி வைப்பதற்கும் களைகளைப் பிடுங்கி எறிவதற்கும், உரியவர் வந்துவிட்டார் என்று உச்சிமோந்து கொண்டார்கள். அறிவிப்புகளைத் தாண்டி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, களத்தில் அதிரடி விஜயங்களை மேற்கொண்டு, அரச நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு, அவர்களது பணிதொடர்ப…
-
- 0 replies
- 1k views
-
-
கூட்டமைப்பில் திருப்தியில்லை; கூட்டணியில் நம்பிக்கையில்லை காரை துர்க்கா இம்முறை சிவராத்திரி தினமன்று, திருக்கோணேஸ்வரத்துக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. வழிபாடுகளை முடித்துக் கொண்டு, கோவில் முன்றலில் இளைப்பாறும் வேளையில், திருகோணமலையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபருடன் உரையாடும் வாய்ப்பு கிட்டியது. “ஒரு காலத்தில், திருகோணமலையில் முதலிடத்தில் இருந்த தமிழினம், இன்று கடைநிலைக்குச் சென்று விட்டது” என்று, பெருமூச்சு விட்டுத் தனது கவலையைப் பகர்ந்துகொண்ட அவர், நிறைய விடயங்களை ஆதங்கத்துடன் அவிழ்த்துக் கொட்டினார். “சரி ஐயா, அடுத்து நாங்கள் தேர்தல் வி…
-
- 0 replies
- 528 views
-
-
மதவெறிக்கு எதிரான பிரதிக்கினை. - வ.ஐ.ச.ஜெயபாலன் தமிழரின் விடுதலைப்பாதையில் கண்ணி வெடிகளாக மத மோதல்கள் விதைக்கபடுகிறதா? வடமாகாணத்தில் இடம் பெறும் நிகழ்வுகள் சர்வதேச அரங்கில் தமிழரை வெட்க்கித் தலைகுனிய வைத்துள்ளது. இது அவசர சிகிச்சையை நாடி நிற்க்கும் ஆபத்தான அரசியல் புற்று நோயாகும். மத நல்லிணக்கம் தமிழரின் பல்லாயிரம் வருடத்து இயல்பு. சமயச் சார்பின்மை எங்கள் மகத்தான மரபாகும். மணிமேகலையில் சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை எல்லா சமய நிறுவனங்களும் ஒரே தெருவில் பக்கம் பக்கமாக நல்லிணக்கத்துடன் செயல்பட்டதை கூறுகிறது. போர்க்காலத்தில் மதபேதம் இல்லாமல் தமிழர் மத்தியில் மனித உரிமை முதல் புனர்வாழ்வு ஈறான பல பணிகளிலும் முன்னின்றவர்கள் கிறுஸ்துவ மத தலைவர்கள் என்பதை நா…
-
- 5 replies
- 724 views
-
-
அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி: தேர்தல் களத்துக்கான புதிய வழிகாட்டி எம். காசிநாதன் நாட்டின் தலைநகரான டெல்லி சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெற்றியின் மூலம், மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார். அரசியலில் காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய தேசியக் கட்சிகளுக்கு மாற்றாக, கெஜ்ரிவால் எடுத்த முயற்சிகளுக்கு, விவரமுள்ள வாக்காளர்கள் மத்தியில் கிடைத்துள்ள ஆதரவு, இந்தியாவில் மாற்று அரசியலைக் கொடுக்க முனைபவர்கள் மீதும், மக்கள் நம்பிக்கை வைக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்கியிருக்கிறது. கடந்த காலங்களில், ஒவ்வொரு மாநிலத்திலும், தேசிய…
-
- 0 replies
- 380 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலக்கு என்ன? அவர்களின் பயணம் எப்படிச் செல்லுகின்றது என்பது தொடர்பில் அந்தக் கட்சியில் இருக்கும் சிலரிடையே தெளிந்தவொரு நிலைப்பாடு இல்லாமல் இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு என்ன வாக்குறுதி அளித்தது? 2009இற்குப் பின்னரான கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதனைச் சாதித்தது? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பயணம் எந்தளவுக்கு சாத்தியமளித்தது? இவைகள் பற்றிய பொறுப்பின்றி தமது பதவி இருப்பு குறித்த பதற்றத்தில் உள்ளது கூட்டமைப்பு. அண்மையில் கிளிநொச்சி பளையில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், அண்மைக்காலத்தில் உருவாகி வரும் கூட்டணி என்பது இலங்கை அரசா…
-
- 0 replies
- 716 views
-
-
எது சரியான மாற்று அணி? ? நிலாந்தன்… February 23, 2020 விக்னேஸ்வரன் கட்சி தொடங்கிய போதே அவர் இரு முனை எதிர்ப்புக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரு முனை கூட்டமைப்பு. மறுமுனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி.அவர் அண்மையில் தனது தலைமையில் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கியதை தொடர்ந்து அந்த எதிர்ப்பு மேலும் தீவிரமாகியுள்ளது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பை விடவும் மக்கள் முன்னணியின் எதிர்ப்பே விக்னேஸ்வரனைக் கூடுதலாக நிதானமிழக்க செய்கிறதா என்று கேட்கத் தோன்றுகிறது. மக்கள் முன்னணி அவர் மீதான எதிர்ப்பை இரண்டு தளங்களில் நிகழ்த்துகிறது. ஒரு தளத்தில் அவர்கள் விக்னேஸ்வரனின் கோட்பாட்டுத் தெளிவைக் கேள்விக்குள்ளாக்குக்கிறார்கள். இன்னொரு…
-
- 2 replies
- 786 views
-
-
சாய்ந்தமருது நகர சபை: எதிர்பாராத எதிர்வினை மொஹமட் பாதுஷா ஜனநாயக ரீதியிலான பெரும் போராட்டங்கள், முயற்சிகளுக்குப் பிறகு, சாய்ந்தமருதுக்கான நகர சபைப் பிரகடனம் வெளியிடப்பட்டது. கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக, அப்பிரதேச மக்கள் கோரிவந்த தனியான உள்ளூராட்சி சபையைத் தருவதாக ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலாகப் பல ஆட்சியாளர்கள் கூறிவந்தாலும், ராஜபக்ஷ ஆட்சியிலேயே காலம் கனிந்திருக்கின்றது என்று, எண்ணிக் கொண்டிருந்த வேளையில், எதிர்பாராத எதிர்வினைகள் தோற்றம்பெற்று மேலெழுந்துள்ளன. கடந்த சில நாள்களாக, இது தொடர்பில் எதிர்பாராத விதமாக மேலெழுந்துள்ள விமர்சனங்கள், எதிர்வினைகள் நல்ல சகுணங்களாகத் தெரிந்திருக்கவில்லை. இவ்வாறிருக்கையில், சிங்கள வாக்குகளையும் இனவாதத்தை…
-
- 1 reply
- 684 views
-
-
இலங்கை இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மீது அமெரிக்காவின் பயணத் தடையும், ஐநா தீர்மானத்தில் இருந்து விலகும் இலங்கை அரசின் முடிவும்.
-
- 1 reply
- 423 views
-
-
அமெரிக்கத் தடையும் போலியான தேசப்பற்றும் கே. சஞ்சயன் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, அவரது நெருங்கிய குடும்பத்தினர் அமெரிக்காவுக்குள் நுழையத் தடைவிதிக்கப்பட்டுள்ள விவகாரம், இலங்கை அரசியற் பரப்பில், கடுமையான வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிப்புக் குறித்து, இரண்டு விதமான நோக்கு நிலைகள் அரசியல் பரப்பில் காணப்படுகின்றன. தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவருமே, அமெரிக்காவின் இந்த அறிவிப்பை வரவேற்றிருக்கிறார்கள். அதேவேளை, மற்றொரு புறத்தில், சிங்கள அரசியல் தலைவர்கள் மாத்திரமன்றி, மனோ கணேசன், திகாம்பரம் போன்ற தென்னிலங்கையைத் தளமாகக் கொண்ட அரசியல் தலைவர்கள், இந்த முடிவை எதிர்த்திருக்கிறார்கள் அல்லது, கேள்விக்குட்படு…
-
- 0 replies
- 557 views
-
-
‘ஆடு’ நனைகிறதென்று ‘அமெரிக்கா’ அழுததாம்... ‘கேட்கிறவன் கேனயனாய் இருந்தால்....’ என்று தொடங்குகிற பழமொழி ஒன்றுண்டு. சில நாள்களாகவே அது, என் மனதில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. இலங்கை இராணுவத் தளபதிக்கு, அமெரிக்கா பயணத் தடை விதித்திருக்கிறது. இது, இரண்டு வகையான எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது. ஒருபுறம், உள்நாட்டில் அமெரிக்காவுக்கு எதிரான மனோநிலை தீவிரமடைந்துள்ளது. இது, எதிர்வரும் பொதுத்தேர்தலில், ஆளும் கூட்டணி எதிர்பார்த்திருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நோக்கி, அவர்களை நகர்த்தும். மறுபுறம், தமிழ்த் தரப்புகள் அமெரிக்கா, இன்னமும் தமிழர்கள் பக்கம் நிற்கிறது என்ற ‘புருடா’வை, இன்னொரு முறை எந்தவொரு வெட்கமும் இல்லாமல் சொல்வதற்கும் வழ…
-
- 2 replies
- 1.2k views
-
-
கொரோனா வைரஸ்: உயிரியல் யுத்தமா? ஒரு நோய்த்தொற்று, உலகையே திகிலிலும் திக்குமுக்காட்டத்திலும் விட்டிருக்கிறது. அதன் பெயரைக் கேட்டாலே, எல்லோரும் பதறுகிறார்கள். சீனர்களைக் கண்டால், தலைதெறிக்க ஓடுகிறார்கள். பரவுமா, பரவாதா என்ற வினாவுக்கு, பதிலளிக்க இயலாமல், அரசாங்கங்கள் திணறுகின்றன. உலகத்தின் பொருளாதாரமே ஸ்தம்பித்து நிற்கிறது. கொரோனா வைரஸ் (உலக சுகாதார நிறுவனம் சூட்டிய பொதுப்பெயர் Covid-19 ஆகும்) குறித்து, வெளிவரும் செய்திகளில் உண்மை பாதியாகவும் பொய் மீதியாகவும் இருக்கின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சீனா மீதான குரோதம், புதிய வழிகளில் வெளிப்படுகிறது. அறிவியல் ரீதியாக, தன்னை உயர்ந்த இடத்தில் வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் மனிதகுலம், விக்கித்து நிற…
-
- 1 reply
- 549 views
-
-
இது மோசமான காலம் -இலட்சுமணன் தமிழ் தேசிய இனத்துக்கு மிக மிக மோசமானதொரு காலச் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு, வடக்கிலும் கிழக்கிலும் புதிய புதிய அரசியல் கட்சிகள், உதயமாகிக் கொண்டிருக்கின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இருந்த சூழ்நிலையை விட, இன்றைய சூழலில், வடக்கு வாதம், கிழக்கு வாதம், சாதி வாதம், மதவாதம், பிரதேசவாதம் போன்ற பூதங்கள் கிளம்பியுள்ளன. இம்முறை, கிழக்கில் தேர்தல் வியூகம், தமிழ்ப் பிரதேசங்களில் சூடுபிடித்துள்ளன. தமிழர் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றப் போவதாக, ஏட்டிக்கு போட்டியாகப் பீற்றப்படுகின்றது. ஐக்கியம், ஒற்றுமை பற்றி பேசினாலும், அதற்கான சூழல் இதுவரை கனியவில்லை. கண்ணியமும் செயற்றிறனும் உள்ளவர்களைப் புறந்தள்ள…
-
- 0 replies
- 366 views
-
-
தமிழர் பிரச்சினை; கைவிடுகிறதா இந்தியா? கே. சஞ்சயன் / 2020 பெப்ரவரி 14 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறுகிய கால இடைவெளிக்குள், இரண்டாவது தடவையாக தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் கௌரவமான, நீதியான, சமத்துவமான தீர்வு ஒன்றை வழங்க வேண்டும் என்பதை இலங்கைத் தலைவர்களிடம் வலியுறுத்தியிருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, முதல் முறையாக இந்தக் கருத்தை வலியுறுத்தியிருந்த நரேந்திர மோடி, கடந்த வாரம் இந்தியாவுக்குச் சென்றிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமும் அதனையே கூறியிருக்கிறார். இரண்டு நாடுகளினதும் பிரதமர்கள் சந்தித்துப் பேசிய பின்னர், கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தபோதே, தமிழ் …
-
- 2 replies
- 868 views
-
-
யாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருங்கிவிட்ட மாற்றுத் தலைமை(கள்) புருஜோத்தமன் தங்கமயில் / 2020 பெப்ரவரி 19 தமிழ்த் தேசிய அரசியலில், மாற்றுத் தலைமை(களு)க்கான வெளி, யாழ். தேர்தல் மாவட்டத்திலுள்ள ஏழு நாடாளுமன்ற ஆசனங்களுக்குள் மெல்ல மெல்லச் சுருக்கப்பட்டுவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக, மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்கள் முன்னெடுத்துவரும் அரசியல், இதைத்தான் உணர்த்துகிறது. அவ்வாறான கட்டத்தில் இருந்துதான், மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்களும் அதன் ஆதரவுத் தரப்பினரும், எதிர்வரும் பொதுத் தேர்தலைச் சந்திக்கப் போகிறார்கள். அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடத்துணியும் சமூகங்களிடம், விடுதலைக்கான சித்தாந்தமும் அதை அடிப்படையாகக் கொண்ட அரசியலும் அவசியமாகும். விட…
-
- 0 replies
- 904 views
-
-
ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையிலான சாணக்கிய போட்டி ம்.எஸ்.எம். ஐயூப் / 2020 பெப்ரவரி 19 ஐக்கிய தேசியக் கட்சி, இரண்டாக பிளவு பட்டுள்ளமையே தற்போதைய யதார்த்தம். பிளவுபட்ட இரு குழுக்களும் இப்போதும் ஒன்றாய்க் கூடி, ஐக்கிய தேசியக் கட்சியாகச் சில முடிவுகள் எடுத்த போதிலும், அக் கட்சிக்குள், தேர்தல் ஆணையகத்தால் அங்கிகரிக்கப்பட்ட இரண்டு கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியானது, பழைமையான கட்சி ஆகும். இலங்கையில் தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்யப்பட்டு, அவ்வாணையகத்தால் அங்கிகரிக்கப்பட்ட 70 கட்சிகளில், ஐ.தே.கவை விடப் பழைய கட்சிகள் இரண்டு தான் இருக்கின்றன. இதன் தலைவராகத் தற்போது ரணில் விக்கிரமசிங்…
-
- 0 replies
- 465 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர், அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம். இறுதிக்கட்டப் போரின் போது லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையிலான 58 ஆவது டிவிசன் படையினர், நீதிக்குப் புறம்பான படுகொலைகள், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கிடைத்த நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்திருப்பதாக அமெரிக்கா கூறியிருக்கிறது. வெளிநாடுகளில் உள்ள அதிகாரிகள் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்களில் ஈடுபட்டதற்கான நம்பகமான ஆதாரங்களை அமெரிக்க இராஜாங்க செயலர் கொண்டி…
-
- 6 replies
- 1.5k views
-