அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
நாட்டில் பொது பல சேன என்கின்ற பௌத்த தீவிரவாத அமைப்பானது முஸ்லீம் சமூகத்தை தேசிய நீரோட்டத்திலிருந்து தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் வழங்கியமை மிகப் பெரிய தவறாகும். இவ்வாறு கொழும்பை தளமாகக் கொண்ட The Sunday Leader ஊடகத்தில் Dr Dayan Jayatilleka எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் இஸ்லாம் எழுச்சி பெற்றுவருவதாலா அல்லது சிறிலங்காவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு எதிரான அமைப்பினதும் அதன் நடவடிக்கைகளாலா சிறிலங்காவுக்கு உண்மையான ஆபத்து ஏற்பட்டுள்ளது? சிறிலங்காவின் வடக்கு கிழக்கைப் பிரிப்பதற்குத் தேவையான மிகப் பெரிய மூலோபாயத் தவறைத் தற்போது சிறிலங்கா மே…
-
- 0 replies
- 645 views
-
-
வடக்கை நோக்கி குவியும் கவனம் By DIGITAL DESK 5 09 OCT, 2022 | 01:56 PM கபில் விரும்பியோ விரும்பாமலோ, சர்வதேச சக்திகளின் பூகோள அரசியல் ஆட்டக்களமாக இலங்கை மாற்றப்பட்டு விட்டது. சர்வதேச சக்திகள் மோதுகின்ற களமாக இலங்கையைப் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்று கூறிவந்த எல்லா ஆட்சியாளர்களும், ஏதோ ஒரு வகையில், அவ்வாறான வாய்ப்புகளுக்கு இடமளித்தே வந்திருக்கிறார்கள். அபிவிருத்தியின் பெயராலோ, கொடைகளின் பெயராலோ, முதலீடுகள் என்ற பெயரிலோ திறக்கப்பட்ட இந்த ஆடுகளம், இப்போது புதிய புதிய பெயர்களில் புதிய புதிய களங்களை நோக்கி விரிவடையத் தொடங்கியிருக்கிறது. இப்போது, சர்வதேச சக்திகளின் ஆடுகளம் மெல்ல மெல்ல வடக்கு, கிழக்க…
-
- 1 reply
- 336 views
- 1 follower
-
-
வாக்குறுதிகளை மறக்கின்றனரா அரசியல் தலைவர்கள்? பிரதமரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ள சூழலிலும் தேசிய அரசியல் நெருக்கடிகள் தொடர்ந்து நீடித்துக்கொண்டுதான் இருக்கின்றன. நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது தேசிய நல்லாட்சி அரசாங்கத்தின் மிகப் பிரதான பங்காளிக்கட்சியான சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் 16 உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து வாக்களித்ததையடுத்து தேசிய அரசியலில் இந்த நெருக்கடி தொடர்ந்துகொண்டிருக்கின்றது. காரணம் இவ்வாறு பிரதமர் ர…
-
- 0 replies
- 556 views
-
-
யாழ் வன்முறைகளின் பின்னணியில் எழும் அரசியல் கேள்விகள் ? யதீந்திரா அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் வடக்கின் சட்டம் ஒழுங்கு தொடர்பில் பெரும் கேள்வியை எழுப்பியிருக்கிறது. இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறு வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஜனாதிபதிக்கு அவசர கடிதமொன்றையும் அனுப்பியிருந்தார். அதனைத் தொடர்ந்து வவுணியா, மன்னார் ஆகிய மாட்டங்களிலிருந்து மேலதிகமாக பொலிசார் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவது இதுதான் முதல் தடவையல்ல. அண்மைக்காலமாகவே யாழ்ப்பாணத்தில் அவ்வப்போது வாள் வெட்டு சம்பவங்களும் திருட்டுச் சம்பவங்களும் இடம்பெற்றவாறுதான் இருக்கின்றன.…
-
- 0 replies
- 457 views
-
-
சிறுகுழந்தைகள் நொடிகளைச் சொல்லி அதற்குவிடைகேட்பதுபோல் இருக்கின்றதா தலைப்பு. இது என்னகதை என்றும் கேட்கவும்வேண்டும் போல் இருக்கின்றதா? பெரிதாக மண்டையைப்போட்டு உடைத்துக் கொள்ளவேண்டாம். கதை இதுதான். இந்தநாட்டில் பெரும்பான்மையினர் சிங்களசமூகத்தினர். தமிழர்களும் முஸ்லிம்களும் இந்தநாட்டில் சிறுபான்மையினர். தமிழர்களில் இந்திய வம்சாவளி என்ற ஒரு பிரிவினர் இருப்பதும் அனைவருக்கும் தெரிந்த விவகாரம். இந்தநாட்டிலுள்ள பெரும்பான்மையினரின் தரப்பிலிருந்து இருபெரும் வேட்பாளர்கள் களத்தில். அனைவரும் அறிந்து வைத்திருக்கின்ற படி மகிந்த மைத்திரி அந்த இருவரும். எனவே, இருவரில் ஒருவர்தான் இதில் வெற்றி பெறுவார்கள் என்பது தெளிவான விடயம். ராஜபக்ஷவின் சிந்தனையைத் தொடர்வதா அல்லது சிரிசேனாவின் …
-
- 0 replies
- 420 views
-
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது அணுகுமுறையை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan.com யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு, தையிட்டி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி, மே மாத ஆரம்பத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சிறிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர். போராட்டம் ஆரம்பமான காலப் பகுதியானது, வெசாக் நிகழ்வுகள் இடம்பெற்ற காலப்பகுதியாகும். எட்டரை ஏக்கர் காணியில் இராணுவத்தினரால் ‘திஸ்ஸ விகாரை’ என்ற இந்தப் புத்த விகாரை தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிக்கலசம் வைக்கும் நிகழ்வு, ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி நடைபெற்றதாக அறியக் கிடைக்கிறது. ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின…
-
- 0 replies
- 314 views
-
-
மேற்குலகுக்கு எச்சரிக்ைகயாக அமைந்த ரஷ்யாவின் இராணுவ ஒத்திகை கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம் யாழ்.பல்கலைக்கழகம் நடந்து முடிந்த வாரத்தில் உலக அரசியல் போக்கில் ரஷ்யா தலைமையிலான போர்ப் பயிற்சி முதன்மையான செய்தியாக உள்ளது. சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்னர் மிகப் பிரமாண்டமான போர் ஒத்திகை என்ற பிரகடனம் உச்சரிக்கப்படுகின்றது. அவ்வாறே அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளுக்கு இது ஒரு எச்சரிக்கை என்றும் குறிப்பிடப்படுகிறது. அவ்வகையில் இக்கட்டுரையானது ரஷ்யாவின் மிகப்பிரமாண்டமான போர் ஒத்திகை ஏற்படுத்தக்கூடிய …
-
- 1 reply
- 748 views
-
-
சார்லி ஹெப்டோ : கருத்துரிமையும் அடிப்படைவாதிகளும் யமுனா ராஜேந்திரன் சார்லி ஹெப்டோ படுகொலைப் பிரச்சினை தற்காலிகமாக முடிவுக்கு வந்திருப்பது போலத் தோன்றுவது வெறுமனே வெளித்தோற்றம் மட்டும்தான். மூன்று இஸ்லாமிய அடிப்படைவாத ஆயுததாரிகளால் மொத்தமாக 17 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். சார்லி ஹெப்டோவின் 4 கார்ட்டுனிஸ்ட்டுகளும் சார்ப்போ சேபர்னியர் எனும் அதனது ஆசிரியரும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுவன்றி இரு இஸ்லாமியர்களான ஒரு காவல்துறை அதிகாரியும், சார்லி ஹெப்டோ ஊழியர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். சார்லி ஹெப்டோ அலுவலகத் தளத்தில் மட்டும் மொத்தமாகப் 12 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இதனோடு ஒரு பெண் காவல்துறை அதிகாரியும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். யூத பல…
-
- 2 replies
- 1.6k views
-
-
தமிழரின் சின்னம் எது? ஜெரா படம் | WIKIPEDIA உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு மனித இனமும், தன்னை அடையாளப்படுத்துகின்ற சின்னங்களை, குறியீடுகளை வைத்திருக்கின்றது. அவ்வாறானதொரு சின்னம்/ குறியீடு தெரிவுசெய்யப்படும்போது அந்த இனத்தவரின் கூட்டு ஆன்மாவும், உளமும் அதில் தாக்கம் செலுத்தக்கூடியவகையில் பார்த்துக்கொள்ளப்படுகின்றது. அதற்குள் குறித்த இனத்தின் வரலாற்று, பண்பாட்டு, ஐதீக நடைமுறைகள் இரண்டறக் கலந்தனவாக இருக்கின்றன. இந்தியர்களுக்கு ஒரு அசோகச் சக்கரமும், அமெரிக்கர்களுக்கு ஒரு கழுகும், சீனர்களுக்கு அனல்கக்கும் பறவையும், சிங்களவர்களுக்கு சிங்கமும் இந்தப் பின்னணியிலேயே நிலைபெற்றுவிட்டன. இந்தச் சின்னங்களையும், அதனை அடையாளப்படுத்தும் அரசுகளையும், அந்தச் சின்னத்தை தாங்கிக்கொள்கின்…
-
- 0 replies
- 343 views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவரின் பத்திரிகையாளர் மாநாடு-ஒரு பார்வை (2002-2015) 2002 ஏப்ரல் மாதத்தின் 10ம் நாள் சிங்கள தேசத்தின் ஊடகங்கள் அனைத்தும், இந்தியாவின் அச்சு, ஓலி,ஒளி, இலத்திரனியல் ஊடகங்கள் முழுதும், சர்வதேசத்தின் மிக முக்கியமான ஊடக நிறுவனங்கள் எல்லாம் கிளிநொச்சியில் குழுமி இருந்தனர். தமிழர்களின் வரலாற்றில் ஒரு தமிழனின் செய்திக்காக, அவர் சொல்லப்போகும் பதில்களுக்காக, ஒரே நேரத்தில் இவ்வளவு பத்திரிகையாளர்களும் ஊடகங்களும் குழுமியது வரலாற்றில் முதலானது. அதனைவிட சிங்களதேசத்தின் அதிபர்கள் நடாத்திய எந்தவொரு ஊடகவியலாளர் சந்திப்பிலும் அதுவரை இவ்வளவு பெருந்திரளாக வந்ததே இல்லையென்றே சிங்கள ஊடகங்கள் கூட வர்ணித்திருந்தன அந்த சந்திப்பை. இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு திகதி கு…
-
- 0 replies
- 680 views
-
-
ட்ரம்பின் சிரிய மீளப்பெறும் உத்தரவு வாஷிங்டனில் அரசியல் கொந்தளிப்பை தூண்டியுள்ளது By Bill Van Auken சிரியாவில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் அனைத்து 2,000 அமெரிக்கத் துருப்புக்களையும் அடுத்த 60 முதல் 100 நாட்களில் மீளப்பெறுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள ஒரு தெளிவான உத்தரவு, பென்டகனிலும், Capitol Hill இல் உள்ள உயர்மட்ட ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரிடமும், அத்துடன் வாஷிங்டனின் நேட்டோ நட்பு நாடுகளிலும் அதிர்ச்சியையும் கூர்மையான எதிர்ப்பையும் தூண்டியுள்ளது. நிர்வாக மற்றும் இராணுவ மூத்த அதிகாரிகள் மூலம் ஊடகங்களுக்கு கசிந்த இந்த மீளப்பெறும் உத்திரவு வெளிப்படையாக தெரிவிப்பதை புதனன்று ட்ரம்ப் அறிவித்த பின்வரும் ஒரு சுருக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ் மக்களின் கவனத்தை பெறாத தமிழரசுக்கட்சியின் தேர்தல் | அரசியல் களம் | ஆய்வாளர் அருஸ் | இலக்கு
-
-
- 7 replies
- 613 views
-
-
மகிந்தவுடனான சமரச முயற்சிகள் வெற்றியளிக்குமா? யதீந்திரா ஆட்சிமாற்றம் ஏற்பட்ட நாளிலிருந்து இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் வரையிலான காலப்பகுதியை உற்றுநோக்கினால் ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொடர்பான அச்சுறுத்தலிலிருந்து புதிய அரசாங்கத்தால் எந்த வகையிலும் விடுபட முடியவில்லை. இந்த நிலையில் அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்கொண்டு செல்ல முடியாதவொரு சூழல் தெற்கின் அரசியல் அரங்கில் வெளிப்படையாகவே தெரிகிறது. மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருக்கின்றபோதும் அவரது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கட்சி இல்லை. கட்சியின் ஒரு பகுதியினர் தொடர்ந்தும் மகிந்த ராஜபக்சவுடனேயே இருக்கின்றனர். இவ்வாறானதொரு பின்புலத்தி…
-
- 0 replies
- 546 views
-
-
ரணிலின் வார்த்தைகளை மங்கள பேசினாரா? யாரின் தெரிவு சஜித்? புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜூலை 10 புதன்கிழமை, மு.ப. 03:42 Comments - 0 ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, சஜித் பிரேமதாஸ முன்னிறுத்தப்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டின் பக்கத்துக்கு, மங்கள சமரவீர வந்திருக்கிறார். கடந்த ஒரு வருட காலமாக, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான உரையாடல் ஊடக வெளியில் நடத்தப்பட்டு வருகின்றது. அந்தத் தருணங்களில் எல்லாம் அமைதி காத்த மங்கள, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கடந்த வாரமே வாய் திறந்திருக்கிறார். அதுவும், ‘சஜித் ஒரு வெற்றி வேட்பாளர்’ என்பதை, ஆணித்தரமாகவும் சொல்லியிருக்கிறார். இது, ஐ.தே.கவின் தொண்டர்களிடமும் சஜித் ஆதரவாளர்கள் மத்தியிலும் பெரும் ஆர…
-
- 0 replies
- 451 views
-
-
காய் நகர்த்தும் ரணில் - சஜித்: வேட்பாளராகப் போவது யார்..? ஜனாதிபதி தேர்தல் விவகாரம் சூடு பிடித்துக்கொண்டிருக்கின்ற நிலை யில் கட்சிகளின் வேட்பாளர்களும் ஒவ்வொருவராக வெளிவந்து கொண்டிருக்கின்றனர். மக்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்திய வண்ணம் வேட்பாளர்கள் உதயமாகிக் கொண்டிருக்கின்றனர். தற்போது அரசியல் களப்போக்கை பார்க்கும்போது இருமுனைப்போட்டி மும்முனைப்போட்டி அல்லது நான்கு முனைப்போட்டியாகக் கூட தேர்தல் வந்துவிடுமோ என்று தோன்றும் அளவிற்கு அரசியல் காய் நகர்த்தல்கள் மற்றும் களநிலைமைகள் முன்னேற்றமடைந்து வருகின்றன. தற்போதுவரை இரண்டு கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரம…
-
- 0 replies
- 831 views
-
-
தி.ராமகிருஷ்ணன் கொழும்பில் அண்மையில் திறந்துவைக்கப்பட்ட பிரமாண்டமான தோற்றக்கவர்ச்சியுடைய தாமரைக்கோபுரம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளின் புத்தம்புதிதான சின்னமாக கருதப்படுகிறது.பலநோக்கு செயற்பாடுகளுக்கான இந்த தொலைத்தொடர்புக் கோபுரத்தை நிர்மாணிப்பதற்கு உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையே 2012 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்டது. சீனாவுக்கு விரோதமான உணர்வு நிலவிய ஒரு நேரத்தில் பதவிக்கு வந்த ஒரு அரசாங்கத்தின் கீழ் இந்த கோபுரத்தின் பெருமளவு நிர்மாணப்பணிகள் இடம்பெற்றன என்பது விசித்திரமானதாக தோன்றக்கூடும். 2015 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரான நாட்களில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்த ரணில் விக்கிரமசிங்க சீனாவின் இன்னொரு பாரிய திட்டமான 140 கோடி அமெரிக்க டொலர்கள் …
-
- 0 replies
- 408 views
-
-
தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவ நெருக்கடிகள் January 1, 2025 — கலாநிதி சு.சிவரெத்தினம் — தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கின்ற தலைமைத்துவப் பிரச்சினை என்பது அதனது அரசியல் வங்குரோத்துத் தனத்தால் ஏற்பட்ட ஒரு பிரச்சினையாகவே பார்க்கப்பட வேண்டும். அது தோற்றம் பெற்ற காலந்தொடக்கம் தமிழரசுக் கட்சியானது ஒரு எதிர்ப்பரசியலை நடத்திவந்திருக்கிறதே தவிர புரட்சிகரமான எழுச்சி அரசியலை நடாத்தவில்லை. எதிர்ப்பரசியலுக்கும் புரட்சிகரமான எழுச்சி அரசியலுக்கும் என்ன வேறுபாடு என்பது முதலில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். எதிர்ப்பரசியல் என்பது ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளுக்கெதிராக எதிர்ப்பை மட்டுமே வெளிப்படுத்துகின்ற அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகும். உதாரணமாக அரச…
-
- 0 replies
- 268 views
-
-
80 ஆண்டு காலமாக சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் நடந்த ஒப்பந்தங்கள் பற்றி விலாவாரியாக பாராளுமன்றில் பேசிய சிறிதரன் அதற்கு தீர்வாக எந்தத் திட்டத்தையும் வைக்கவில்லையே என்று கஜேந்திரகுமார் ஆதங்கம்.
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
[size=5]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உட்சண்டை- கொள்கைக்காகவா? கதிரைக்காகவா?[/size] முத்துக்குமார் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உட்பிரச்சினை இன்று சந்திக்கு வந்துவிட்டது. கிழக்கு மாகாணசபை தேர்தலுக்கு பின்னர் இது சந்திக்கு வருமென்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். தமிழரசுக்கட்சி அல்லாத ஏனைய கட்சி உறுப்பினர்கள் பலர் அதனை ஏற்கனவே கூறியிருந்தனர். தங்களினால் தேர்தலுக்கு நெருக்கடி வரக்கூடாது என்பதற்காக அவர்கள் பொறுமை காத்தனர். தேர்தல் வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும்போது ஏனைய கட்சிகளின் சுயமரியாதையைக்கூட கவனத்தில் எடுக்காமல் தமிழரசுக்கட்சி உதாசீனம் செய்தமை, சகித்துக் கொள்ள முடியாததே! இதனால் இந்தப் பிரச்சினையை சந்திக்கு கொண்டு வருவதைத் தவிர வேறு தெரிவு ஏனைய கட்சிகளுக்கு இர…
-
- 0 replies
- 677 views
-
-
பழைய பூங்காவைப் பாதுகாப்பது - நிலாந்தன் “நான் எழுதிய கட்டுரையை நானே மீண்டும் மேற்கோள் காட்ட வேண்டியிருக்கிறது அல்லது நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது” என்று மு.திருநாவுக்கரசு அடிக்கடி கூறுவார். தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ள மிக மூத்த, தொடர்ச்சியாக எழுதும் ஒரே அரசறிவியலாளர் அவர்தான். அவர் மட்டுமல்ல அவரைப் போன்று முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் தமது சமூகத்திற்கான தமது பங்களிப்பை திரும்பத்திரும்ப தாங்களே நினைவூட்ட வேண்டியிருக்கிறது. அரசியல் கைதிகளுக்காக அரசியல் கைதிகள்தான் பெரும்பாலும் போராட வேண்டியிருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அவர்களுடைய உறவினர்கள்தான் பெரும்பாலும் போராட வேண்டியிருக்கிறது. மு.திருநாவுக்கரசு மட்டுமல்ல கடந்த பல தசாப்தங்களாக எழுதிவரும் பல…
-
- 0 replies
- 191 views
-
-
காமினி பாஸ் தவறு செய்துவிட்டார் ஷோபாசக்தி சரிநிகர் இதழில் என். சரவணன் எழுதிய பிரேமாவதி மன்னம்பேரி குறித்த கட்டுரையொன்றை பல வருடங்களுக்கு முன்பு நான் படித்திருக்கின்றேன். அந்தக் கட்டுரையின் விபரங்கள் இப்போது எனக்குத் தெளிவாக ஞாபகமில்லை என்றாலும் மன்னம்பேரி மரணிப்பதற்கு முன்பு சொன்ன அவருடைய இறுதிச் சொற்கள் மட்டும் என் நெஞ்சில் இப்போதும் அழியாமலுள்ளன. கதிர்காமத்தைச் சேர்ந்த 22 வயது இளம் பெண்ணான மன்னம்பேரி, ஜே.வி.பியினர் நடந்திய 1971 ஏப்ரல் கிளர்ச்சியில் பங்கெடுத்தவர். கிளர்ச்சி தோற்கடிக்கப்பட்டதன் பின்பாக அரசபடையினரால் கைது செய்யப்பட்டு, வதைக்கப்பட்டு, வல்லாங்கு செய்யப்பட்டு மன்னம்பேரி சுட்டுக் கொல்லப்பட்டபோது மரணத்தறுவாயில் அவர் சொன்ன சொற்கள்: “காமினி பாஸ் தவறு செய்த…
-
- 1 reply
- 989 views
-
-
ஜெனிவா களம்: தமிழ்த் தரப்பு வரலாற்றைக் கோட்டைவிட்டுள்ளதா? முத்துக்குமார் ஜெனிவாவில் நடைபெற இருக்கும் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான விசாரணையை அமெரிக்கா கொண்டு வருவது நிச்சயமாகிவிட்டது. இலங்கைக்கு வந்த அமெரிக்க இராஜதந்திரக்குழு இலங்கையில் வைத்தே அதனைக் கூறிவிட்டது. பொறுப்புக்கூறல் பற்றியே பிரேரணையில் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது, அப் பிரேரணை மூலம் மேலும் ஒரு வருடம் காலஅவகாசம் கொடுக்கத் தீர்மானித்திருப்பதாகவே செய்திகள் வருகின்றன. இலங்கை, சீனா பக்கம் சரிந்துவிடும் என்ற அச்சம் தான் இந்த மென்மையான அணுகுமுறைக்குக் காரணம். அமெரிக்க இராஜதந்திரக் குழுவினர் தமக்கு நெருக்கமானவர்களிடம் இத் தகவலை நேரடியாகவே கூறியிருக்கின்றனர். போர்க்க…
-
- 3 replies
- 733 views
-
-
அஜித் டோவாலின் கொழும்பு விஜயத்தின் பிரதான நோக்கம் என்ன? பொம்பியோவைத் தொடர்ந்து காய் நகர்த்தும் ‘டில்லி’ இலங்கையில் இந்தோ — பசுபிக் மூலோபாயத்தை மேம்படுத்துவதற்கு இந்தியா கடுமையாக முயற்சிக்கிறது. முத்தரப்பு கடல்சார் ஒத்துழைப்பு மகாநாட்டுக்காக கடந்த வெள்ளிக்கிழமை இந்தி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் கொழும்புக்கு மேற்கொண்ட விஜயம் இந்தோ — பசுபிக் ஒத்துழைப்புக்கு இலங்கையை நெருக்கமாக கொண்டுவருவதற்கான நோக்கத்தைக் கொண்டதாகும் என்று இந்தியாவின் பிரபலமான இணையத்தள செய்திச் சேவைகளில் ஒன்றான ‘த பிறின்ற் ‘ கூறியிருக்கிறது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ இலங்கைக்கு வருகைதந்த ஒரு மாத காலத்திற்குள் அஜித் டோவாலின் விஜயம் இடம்பெற்றிருப்பதால்…
-
- 1 reply
- 768 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-12-31#page-1 எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் 2016 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருந்தார்கள். ஆனால் அந்தப் போராட்டங்களுக்கு வெற்றியளிக்கத்தக்க வகையில் காரியங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவில்லை. புதிய அரசாங்கத்தில் தங்களுக்கு நன்மைகள் ஏற்படும். பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற அவர்களுடைய எதிர்பார்ப்பு பெருமளவில் ஏமாற்றத்திலேயே முடிவடைந்திருக்கின்றது. அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதன் மூலம் பல காரியங்களை வெற்றிகரமாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பும் கானல் நீராகியிருக்கின்றது என்றே கூற வேண…
-
- 0 replies
- 494 views
-
-
இந்திய - சீன எல்லைப் பிரச்சினை - தீராத தலைவலி சந்திர. பிரவீண்குமார் ஒரு படத்தில் வழக்கம்போல அடிவாங்கிக்கொண்டு வரும் வடிவேலு புலம்பிக்கொண்டிருப்பார். 'அடிக்க அடிக்க ஏன் பொறுத்துக்கிட்டிந்தே?' என்று ஒருவர் கேட்பார். 'எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான், இவ ரொம்ம்ம்ம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க' என்று சொல்லிவிட்டு குமுறிக் குமுறி அழுவார். இந்திய நாட்டை ஆளும் காங்கிரஸ் அரசின் நிலை வடிவேலுவின் குமுறலை நினைவுபடுத்துகிறது. உள்ளூர் அரசியல் முதல் பாகிஸ்தான், இத்தாலி, சீனாவுடனான பிரச்சினைகள்வரை எல்லா மட்டங்களிலும் செமத்தியாக அடி வாங்கியும் அது பொறுத்துக்கொண்டு குமுறுகிறது. பெயரை எல்லாம் இழந்த பின்னும் 'நல்லவன்னு சொல்லிட்டாங்க' என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வதைக் கேட்டு சிரிப்பதா அழுவதா…
-
- 3 replies
- 1.7k views
-