அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
விக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் யதீந்திரா வடக்கு மாகாண சபை இன்னும் ஒரு மாதத்தில் கலையவுள்ளது. அதன் பின்னர் விக்கினேஸ்வரன் எத்தகைய முடிவை எடுப்பார் என்பது தொடர்பில் பல ஊகங்கள் உண்டு. அவற்றை ஊகங்களாகவே விட்டுவிடுவோம். ஆனால் 2013இல் அரசியலுக்குள் வரும்போது இருந்த விக்கினேஸ்வரன் வடக்கு மாகாண சபை கலைகின்ற போது இல்லை என்பது மட்டும் உண்மையிலும் உண்மை. இந்தக் காலம் விக்கினேஸ்வரனுக்கு பல பாடங்களை புகட்டியிருக்கிறது. உண்மையில் இந்தக் காலம் விக்கினேஸ்வரனை அரசியல் வாதியாக செதுக்குவதற்கே பயன்பட்டிருக்கிறது. விக்கினேஸ்வரன், அரசியலுக்குள் அழைத்துவரப்பட்ட போது அவர் வழங்கியிருந்த நேர்காணல் ஒன்றில், தான…
-
- 0 replies
- 491 views
-
-
யாருக்கு வெற்றி – யாருக்கு தோல்வி ? யதீந்திரா கடந்த மாதம் 29ம் திகதி, இந்தியாவின் கடற்படைக் கப்பல் ஜ.என்.எஸ் கஞ்சர் (Khanjar) திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, குக்குரி வகுப்பு (Khukri-class) ஏவுகணை பொருத்தப்பட்ட கப்பல். அன்று மாலை ஒரு வரவேற்பு விருந்துபசாரமும் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பங்குகொள்வதற்கான வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. யூலை – 29ம் திகதி, இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட திகதி. இவ்வாறானதொரு திகதியில், இந்திய கடற்படைக் கப்பலின் வருகை தற்செயலானதுதான் ஆனால் முக்கியத்துவம் மிக்கது. 1990ம் ஆண்டு…
-
- 2 replies
- 736 views
-
-
பாலைவனத்துக்கான பயணமா, பால்நிலவுக்கான பயணமா? காரை துர்க்கா / 2018 நவம்பர் 27 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:41 Comments - 0 நல்ல உறவு (நல்லுறவு) என்பது மற்றவர்களுடன் ஏற்படுத்திக் கொள்கின்ற கட்டாய ஒப்பந்தம் அல்ல. மாறாக, அது இயல்பாக விரும்பி, மனதில் தோன்ற வேண்டிய ‘புனித உறவு’ ஆகும். ஆனால், 2015ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி தொடக்கம், கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி வரை, ‘நல்லாட்சி’ என்ற ஒற்றை வார்த்தை, மலிந்து காணப்பட்ட சொல் ஆகும். அவர்கள், வலிந்து ஏற்படுத்திய உறவு என்பதால்தான், நல்லுறவும் நல்லாட்சியும் இன்று வலுவிழந்து விட்டது. இவ்வகையில், இலங்கை அரசியலில், கடந்த ஒரு மாத காலமாகப் பல ‘அசிங்கங்கள்’ அரங்கேறி வருகின்றன. பேரினவாதப் பெருந் தேசியக் கட்சிகள் இர…
-
- 0 replies
- 759 views
-
-
இரு தரப்புகளாலும் போர்க்குற்றங்களா? Gopikrishna Kanagalingam / 2019 பெப்ரவரி 21 வியாழக்கிழமை, பி.ப. 05:49 இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், வடக்கு மீது கடந்த சில மாதங்களாகக் காட்டும் அதிகபட்ச கரிசனை தொடர்கிறது. பிரதமர் விக்கிரமசிங்கவின் அண்மைய வடக்கு விஜயம், இந்த நிலைமை தொடர்வதையே காண்பித்திருக்கிறது. ஆனால், கடந்த சில விஜயங்களைப் போலல்லாது இவ்விஜயம், சில சலசலப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. இறுதிக்கட்டப் போரில், நாட்டின் இராணுவத்தினரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டனர் என, பிரதமர் விக்கிரமசிங்க மறைமுகமாக ஏற்றுக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் விடயம் தான், இச்சலசலப்புகளுக்குக் காரணம…
-
- 0 replies
- 964 views
-
-
மக்களைப் பாதுகாப்பதில் தமிழ்த் தலைவர்களின் நிலைப்பாடு? மீண்டும் இராணுவ பிரசன்னம் Editorial / 2019 மே 08 புதன்கிழமை, பி.ப. 12:29 Comments - 0 -க. அகரன் தமிழ்ச் சமூகத்தின் தற்போதைய நிலைப்பாடு ‘சாண் ஏற முழம் சறுக்கும் நிலையாகி உள்ளது’ என்றால், மறுப்பதற்கில்லை. 30 வருடங்களாகச் சொல்லொணாத் துன்பங்களுக்கு முகம் கொடுத்து, இலங்கை தேசத்தில் நல்லிணக்கம், சகவாழ்வு என்ற பொறிமுறைக்குள், தங்களது வாழ்வியல் முறைமைகளை நகர்த்திச் செல்லும் பல்லின மக்களுக்கு, இன்று அவை அனைத்தையும் இழந்தாற் போன்றதான மனநிலையை உருவாக்கியுள்ளன அண்மைக் காலச்சூழல்கள். சோதனைக் கெடுபிடிகளும் இடப்பெயர்வுகளும் அகதிவாழ்வும் நலன்புரி நிலைய வாழ்வியலும் தமிழ்ச் சமூகத்துக்குப் புதிதானதல்ல.…
-
- 0 replies
- 626 views
-
-
கறுப்பு ஜூலைகளுக்கு முகம்கொடுத்தல் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜூலை 24 புதன்கிழமை, மு.ப. 06:49 Comments - 0 தென் இலங்கை திட்டமிட்டு அரங்கேற்றிய ‘கறுப்பு ஜூலை’ வெறியாட்டத்தை, தமிழ் மக்கள் எதிர்கொண்டு 36 ஆண்டுகளாகின்றன. அன்றைய ஜே.ஆர் அரசாங்கத்தின் குண்டர்கள், தமிழ் மக்களை வீடு வீடாகத் தேடி வேட்டையாடினார்கள்; அம்மணமாக்கித் தீயில் எறிந்தார்கள்; இறந்த உடல்களின் மீதேறி நின்று, வெற்றிக் கோஷமெழுப்பினார்கள்; அந்தக் கோர ஒலியின் அதிர்வு, இன்னமும் குறைந்துவிடவில்லை. இந்த நாட்டில், தமிழ் மக்கள் கொண்டிருக்கிற பாரம்பரிய உரிமையையும் அதுசார் இறைமையையும் சூழ்சிகளாலும் காடைத்தனத்தாலும் வெற்றிகொண்டுவிட முடியும் என்று, தென் இலங்கை தொடர்ச்சியாக முயற்சித்து வருகின்றது…
-
- 0 replies
- 1.1k views
-
-
எழுக தமிழ் ஏன் ? நிலாந்தன்…. September 7, 2019 தமிழ் மக்கள் மற்றொரு எழுக தமிழுக்கு தயாராகி வருகிறார்கள். தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியிலும் எழுச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அறியமுடிகிறது. தாயகத்தில் நடக்கும் எழுக தமிழுக்கு பலம் சேர்க்கும் விதத்தில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் இதில் இணையவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு நல்ல விடயம.; தமிழ் மக்கள் எந்த அளவுக்குப் பெருந்திரள் ஆகிறார்களோ அந்தளவுக்கு அழுத்தத்தை கொடுக்கலாம். தமிழ் மக்கள் தமது எதிர்ப்பைக் கூர்மையாகவும் கூட்டாகத் திரண்டும் காட்ட வேண்டிய ஒரு கால சந்தியில் தமிழ் அரசியல் வந்து நிற்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக யுத்தம் வேறு வழிகளில் முன்னெ…
-
- 0 replies
- 651 views
-
-
சிங்களப் பயங்கர வாதிகளால் எம் அறிவுச் சொத்து அழிக்கப்பட்டு 31 ஆண்டுகளுக்கு முன்பு, நாகரிக உலகமே வெட்கித் தலைகுனியும் படியான கோரச் செயல் ஒன்றை அன்றைய சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு செய்தது. 1981ம் ஆண்டு யூன் மாதம் முதலாம் திகதி இரவு ஒன்பது மணியளவில் தென்கிழக்காசியாவின் மிகச் சிறந்த நூல் நிலையங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட யாழ்ப்பாண நூல் நிலையம் தீக்கிரையாக்கப் பட்டது. எரியும் நினைவுகள் — யாழ் நூலகம் 97, 000 க்கும் மேற்பட்ட நூல்களும் கிடைத்தற்கரிய நூல்களும், சுவடிகளும் எரிந்து சாம்பலாயின. தமிழர்கள் தம்மில் ஒரு பகுதியை தாம் இழந்ததாக உணர்ந்து, உருகி, உறைந்து போயினர். யார் பயங்கரவாதிகள் உலகமே? தமிழீழ மக்களுக்கு மாறாத வலியையும், வடுவையும் தந்த இந்தக் கோரமான பேரழிவுக…
-
- 1 reply
- 1.5k views
-
-
சிங்களத் தரப்புடனல்ல, வல்லரசுகளுடனேயே நாம் பேரம் பேச வேண்டியிருக்கிறது; கஜேந்திரகுமார் நேர்காணல் Bharati May 23, 2020 சிங்களத் தரப்புடனல்ல, வல்லரசுகளுடனேயே நாம் பேரம் பேச வேண்டியிருக்கிறது; கஜேந்திரகுமார் நேர்காணல்2020-05-23T05:13:47+00:00Breaking news, அரசியல் களம் என்.லெப்டின்ராஜ் “சிறிலங்கா அரசாங்கத்துடனோ, எதிர்க்கட்சியினரிடமோ, சிங்களத் தரப்புக்களுடனோ நாங்கள் பேரம் பேச வேண்டியதில்லை. வல்லரசுகளுடனேயே பேரம் பேச வேண்டியிருக்கிறது. ஆகவே, இதற்கான அறிவுள்ள, ஆளுமையுள்ளதொரு தலைமைத்துவத்தையே தமிழ்மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் ஊடாக நிச்சயம் நாங்கள் முன்னோக்கிச் செல்லலாம் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை” எனக் கூறியிருக்கின்றார் தமிழ்த்தேச…
-
- 0 replies
- 371 views
-
-
மாற்று தமிழ்த் தேசிய தரப்பினரது வெற்றியும் அதன் அரசியல் முக்கியத்துவமும்? - யதீந்திரா இம்முறை தேர்தலில் மாற்றம் ஏற்படலாம் என்பது பலருடைய எதிர்பார்ப்பு. இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஒரோயோரு தமிழ்த் தேசிய தலைமையாக இருந்தது. கூட்டமைப்பு ஒரணியாக நிற்க வேண்டும் – அதுதான் தமிழ் மக்களுக்கு நல்லதென்பது, பலரதும் கருத்தாக இருந்தது. அதே போன்று, தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் அணைத்தும் கூட்டமைப்பிற்குள் ஓரணியாக நிற்க வேண்டும் என்னும் அபிப்பிராயமும் பலரிடம் இருந்தது. ஆனால் நிலைமைகள் எதிர்பார்த்தது போன்று இருக்கவில்லை. அனைவரையும் அரவைணத்து, கூடுத் தலைமையொன்றை, வழங்கக் கூடிய ஆற்றல் கூட்டமைப்பிடம் இருந்திருக்கவில்லை. அனைவரும் ஓரணில் நிற்க வேண்டுமென்னும் எதிர…
-
- 0 replies
- 441 views
-
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் எனும் மாயை பட மூலம், PageTamil சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையைப் பாரதீனப்படுத்தி விசாரித்தால், அதன்பால் வரும் சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ள சிங்கள தேசம் தம்மோடு பேச்சுவார்த்தைக்கு வரும் என்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இந்தக் கட்டுக்கதை உச்சக்கட்ட ஏமாற்று வேலை. ஏன் என்பது வருமாறு: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பிரதான வழக்குத் தொடுனர் (chief prosecutor) என்றொருவர் இருக்கிறார். அவருக்கு சர்வதேச குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றங்களாகக் கொள்ளப்படக் கூடிய – இனப்படுகொலை (genocide), போர்க்குற்றங்கள் (war crimes), மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் (crimes against humanity) மற்றும் வலியத் தீங்கு செய்தல் (crime…
-
- 0 replies
- 433 views
-
-
ஜனநாயக பண்புகளுக்கு அமைய நாடு ஆளப்பட வேண்டும் 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பி.யுமான இரா. சம்பந்தன் ஆற்றிய உரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பிரதம மந்திரியும் கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க தலைமைதாங்கும் ஐக்கியதேசிய கட்சி ஆகிய இந்த நாட்டின் இரு பிரதான அரசியல் கட்சிகள் இணைந்து நடத்தும் தற்போதைய…
-
- 1 reply
- 501 views
-
-
The War May Be Over But The Idea Lives On போர் முடிந்திருக்கலாம், ஆனால் அந்தக்கருத்து வாழ்ந்துகொண்டிருக்கிறது. இந்தியாவின் "ரெகல்கா" வார இதழ் நிருபர் ஒரு சுற்றுலாப்பயணியாக வேடம்மாறிச் சென்று சேகரித்த தகவல்கள். Disguised as a tourist,Revati Laul travelled through the country’s most war-ravaged districts. She spotlights a story that is rarely told இலங்கையில் 'தனித்தமிழீழம்' என்ற கருத்து செத்துவிடவில்லை. அப்படி அந்தக்கருத்து சாகமறுப்பதற்கு அங்கு பல காரணங்கள் இருக்கின்றன. இந்தக் கட்டுரை இன்றுவரை அங்கு இடம்பெறும் 'அமைப்புரீதியான இன அழிப்பு' போர்பற்றியது. நடந்துமுடிந்த போருக்குக் காரணமான 'தமிழர் புறக்கணிப்பு' என்பது இப்போது முழுவீச்சுடன் மீண்டும் வந்த…
-
- 1 reply
- 875 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-12-31#page-3 திருப்திதராத நகர்வுகள் ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் தமக்கு இருக்கின்ற பொறுப்புக் குறித்து சிந்திக்க வேண்டும். அத்துடன் தமிழர் தரப்பும் இராஜதந்திரமாகவும் பொறுப்புத் தன்மையுடனும் அழுத்தம் கலந்த சமயோசிதத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி நாட்டின் ஏனைய அரசியல் கட்சிகளும் இந்த விடயத்தில் பொறுப்புடனும் வரலாற்றுக் கடமையை உணர்ந்தும் செயற்பட வேண்டியது அவசியமாகும். என்ன முன்னேற்றத்தைக் கண்டோம் இந்த 2016 ஆம் ஆண்டில்? ஒன்றுமே நடக்கவில்லையே? ஒருசில நம்பிக்கைக்…
-
- 0 replies
- 354 views
-
-
மரபுரிமை ஆக்கிரமிப்பும் தமிழ் அறிஞர்களின் பொறுப்பும் - நிலாந்தன் உருத்திரபுரம் சிவன் ஆலயத்துக்கும் ஆபத்தா? தொல்லியல் திணைக்களம் அவ்வாலயச் சூழலில் அகழ்வாராய்ச்சிகளைச் செய்ய முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன. கடந்த வாரத்துக்கு முதல் வாரம் தையிட்டியில் ஒரு பிரமாண்டமான விகாரைக்கு ராணுவத் தளபதி அடிக்கல் நாட்டியிருக்கிறார். எனது கடந்தவாரக் கட்டுரை ஒன்றில் எழுதியது போல கிழமைக்கு ஒரு பிரச்சினையைக் கிளப்பி தமிழ் அரசியல்வாதிகள்; செயற்பாட்டாளர்கள் மற்றும் குடிமக்கள் சமூகங்களின் கவனத்தை அரசாங்கம் திசைதிருப்பி வருகிறது.இக்கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கையில்கூட எங்காவது ஒரு மரபுரிமை சின்னம் அல்லது சைவ ஆலயம் தொல்லியல் திணைக்களத்தின் பார்வைக்குள…
-
- 0 replies
- 518 views
-
-
பரராசா முதல் ஹேமச்சந்திர வரை – அருணன்:- Demonstrative performance of professional shooters outside Kyiv. நல்லூரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நீதிபதியை இலக்குவைத்து நடத்தப்படவில்லை என யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்துள்ளார். ‘நிச்சயமாக இது சந்தர்ப்ப சூழ்நிலையில் நடந்த விடயமே. நீதிபதிக்கு எந்தவித மரண அச்சுறுத்தலும் இல்லை என்பதை விசாரணைகளின்போது அறிந்து கொண்டுள்ளேன்’ என்றும் அவர் கூறியிருந்தார். வடக்கு முதல்வர் விடயத்தில் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களுக்கு ஒன்றும் புரியாது என்று நினைத்துச் செயற்பட்ட மாதிரித்தான் இக்கூற்றும் உள்ளது. குறிப்பிட்ட இலக்கை அடைவதற்காகச் செய்யப்பட்ட தா…
-
- 0 replies
- 337 views
-
-
இறங்கி வந்த ரவி இராஜினாமா உணர்த்துவது என்ன? ரொபட் அன்டனி பல்வேறு அரசியல் சலசலப்புகளுக்கு மத்தியில் ரவி கருணாநாயக்க தனது வெளிவிவகார அமைச்சர் பதவியை இராஜினாமா செய்திருக்கிறார். அழுத்தங்கள், எதிர்ப்புகள், விமர்சனங்களுக்கு மத்தியிலும் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பிலும் ரவி கருணாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்திருக்கிறார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதில் முக்கிய பங்களித்தவர் என்ற வகையிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளராக…
-
- 0 replies
- 553 views
-
-
இந்திய வெளிவிவகாரக் கொள்கையை விளங்கிக் கொள்ளல் - யதீந்திரா கடந்த பத்தியில், இந்தியாவில் ஏற்படப் போகும் ஆட்சி மாற்றம், இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் ஆச்சரியப்படத்தக்க மாற்றங்கள் எதனையும் ஏற்படுத்தாது என்பதை விளக்கியிருந்தேன். அதனை மேலும் விளங்கிக் கொள்ளும் வகையில் இப்பத்தியில், இந்திய வெளிவிவகாரக் கொள்கை குறித்து பார்ப்போம். 'தமிழ் தேசியம்' என்னும் சுலோகத்தின் கீழ் இயங்கிவரும் அரசியல் தரப்பினருக்கு முன்னால் அறுபது வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவங்கள் இருந்தபோதிலும் கூட, இந்திய வெளிவிவகாரக் கொள்கையை விளங்கிக்கொள்வதில் அவர்கள் தொடர்ந்தும் வறியவர்களாகவே இருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர், இந்தியா எடுத்திருந்த ஒரு வெளிவிவகார நிலைப்பாடு தொடர்பில் கூட்டமைப்பினை பிரதிந…
-
- 0 replies
- 629 views
-
-
ஈழம் பெற்றுத் தருவதாக வலம்வரப் போகின்றார்கள் நாட்டின் சகல உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல், எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே நாடு, இன்னொரு தேர்தல் திருவிழாவைக் கொண்டாத் தயாராகிறது. இந்நாட்களில் இருந்து பெப்ரவரி மாதத் தேர்தல் திகதி வரையிலான இரண்டு மாதங்கள், அரசியல்வாதிகள் மக்களை நோக்கிப் படை எடுக்க, அணி திரளப் போகின்றார்கள். மக்களை “நேசிக்க”த் தொடங்கப் போகின்றனர். தெற்கில், மைத்திரி எதிர் பலப்பரீட்சை களமாக உள்ளூராட்சித் தேர்தல் அமையப் போகின்றது. அதற்கிடையில் ஐக்கிய தேசியக் கட்சியும் தனித்துப் போட்டியிட்டு, தன் பலத்தை நிரூபிக்க வேண்டிய தேவைப்பாட்டில் உள்ளது…
-
- 0 replies
- 308 views
-
-
இலங்கையின் நெருக்கடி மற்றும் சிறிய அரசுகளின் சங்கடங்கள் By T. SARANYA 16 SEP, 2022 | 03:30 PM இலங்கையின் பொருளாதார நெருக்கடிகள் அதன் சிக்கலான வெளிநாட்டு உறவுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆகஸ்ட் 16 அன்று, அம்பாந்தோட்டையின் தெற்கு துறைமுகம் யுவான் வாங் 5 என்ற ஆய்வு கப்பலை வரவேற்றது. பயணத்தை ஒத்திவைக்குமாறு கொழும்பு கேட்டிருந்த போதிலும், பின்னர் இணங்கி, ஆகஸ்ட் 22ம் திகதி வரை கப்பலை துறைமுகத்தில் நிறுத்திவைக்க அனுமதித்தது. இந்த விடயத்தில் இலங்கை மீது அழுத்தம் கொடுக்கவில்லை என்று இந்தியா மறுத்தது, எனினும் விஜயம் குறித்து தனது கவலையை பதிவு செய்தது. பெய்ஜிங் கப்பல் ஆய்வு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டது என்று வாதிடுகி…
-
- 2 replies
- 538 views
- 1 follower
-
-
இனப்படுகொலை இடம்பெற்றதை அங்கீகரிக்கவேண்டும் - பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சருக்கு பிரிட்டிஸ் எம்பிக்கள் கடிதம் By RAJEEBAN 23 SEP, 2022 | 01:08 PM இலங்கை ஜனாதிபதியின் தலைமைத்துவம் குறித்து நாங்கள் ஆழ்ந்த ஏமாற்றமடைந்துள்ளோம்,அவரது அரசாங்கத்தின் கீழ் இடம்பெறும் ஒடுக்குமுறை குறித்த எங்கள் கரிசனையை எழுப்புகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துள்ளன என்பது தெளிவாகியுள்ள விடயம் என குறிப்பிட்டுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரிட்டன் தமிழர்களின் இனப்படுகொலையை அங்கீகரிக்கவேண்டும் யுத்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட இலங்கையின் சிரேஸ் அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் என வேண்ட…
-
- 2 replies
- 372 views
- 1 follower
-
-
ஐ.நா தீர்மானத்துக்கு பின்னரான தமிழர்களின் செயற்திட்டம் எவ்வாறு அமைய வேண்டும்? வி. உருத்திரகுமாரன்
-
- 0 replies
- 270 views
-
-
வடக்கின் அபிவிருத்திக்கு வட பகுதி மக்களே தடையென்பதை ஏற்க முடியாது வடக்கின் அபிவிருத்திக்கு வடக்கு மக்களே தடையாக இருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளமை சரியானதுதானா என்பது கண்டறியப்பட வேண்டும். வடக்குடன் தொடர்பில்லாத மலையகத்தைச் சேர்ந்த அரசியல்வாதியொருவர், வடக்குத் தொடர்பாகத் தெரிவித்த கருத்துக்கள் புறமொதுக்கக் கூடியவையல்ல. அது மட்டுமல்லாது கல்வி இராஜாங்க அமைச்சர், வடபகுதி மக்கள் மீது கரிசனை கொண்டவர் என்பதை மறுத்துரைக்க முடியாது. மலையக மக…
-
- 0 replies
- 449 views
-
-
கிழக்கு நெருக்கடி: சில வெளிப்படை உண்மைகள், பாகம் - 01 'யாழ். குடா முற்றுகையும் ஊடகங்களின் அரசியலும்" என்ற தலைப்பில் அண்மையில் நான் எழுதியிருந்த ஆய்வு கட்டுரையில் மறைந்த மாமனிதர் சிவராம் தொடர்பாகவும் அவரது தேசிய சிந்தனைகள் தொடர்பாகவும் சில கருத்துக்களை பதிவு செய்திருந்தேன். அது பின்வருமாறு அமைந்திருந்தது: '........அழிவின் விளிம்பில் நிற்கும் தமிழினம், தமிழ் ஊடகங்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறது. தமிழ்த் தேசியப் பரப்புரை உலகம் அளவிடமுடியாத் தேவை நிரப்பீடு கொண்டது. அதை ஈடு செய்வதற்கு தேசியத்தின் மீதான பற்றுறுதியும் காதலும் மட்டும் போதுமானவையல்ல. தற்கொடையும் துணிச்சலும் துறைசார் புலமையும் ஆளுமையும் அவசியம். அத்தகையவர்களை இனங்கண்டு நாம் இணைத்துக் கொள்ளத் தவறும் …
-
- 8 replies
- 2k views
-
-
Courtesy: ஜெரா தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் தவிர்த்து இலங்கை - இந்திய அரசியல் ஒரு சாண்கூட நகராது என்பதற்கு அண்மைய பரபரப்புக்கள் உதாரணமாகும். நேற்றைய தினம் தமிழக அரசியல் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட குழுவினர் திடீரென ஏற்பாடு செய்த ஊடகச் சந்திப்பில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் நலமாக இருக்கிறார் எனச் சொன்ன கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. புலிகள், பிரபாகரன் யார்? தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் தலைவர் பிரபாகரன் அவர்களும் தம் போராட்ட வாழ்க்கையின் ஊடாக விட்டுச் சென்ற செய்தி கனதியானது. அவர்கள் செய்த தியாகங்கள் அளப்பரியது. கொள்கை முப்பத…
-
- 0 replies
- 916 views
-