அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்கள் தொகைக் கட்டமைப்பும் பொருளாதாரமும் தொடர்பான ஆதிக்கம் புவிசார் அரசியல் எனப்படும். முதலாவது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்களின் அரசியல் ஆதிக்கம் புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வகிக்கின்றது. இரண்டாவது அக்குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள பொருளாதார வளங்கள் மீதான ஆதிக்கத்தை யார் செலுத்துவது என்பது புவிசார் அரசியலில் முக்கியத்துவம் பெறுகின்றது. மூன்றாவது ஒரு குறித்த நிலப்பரப்பில் உள்ள மக்கள், பொருளாதாரம், மற்றும் அரசு அல்லது அரசுகள் தொடர்பாக அந்த நிலப்பரப்புடன் தொடர்புடைய அரசுகளின் வெளிநாட்டுக் கொள்கை அந்த நிலப்பரப்பின் புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வகிக்கின்றது. இதையே சுருக்கமாகச் சொல்வதானால் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில…
-
- 0 replies
- 1k views
-
-
கொந்தளிக்கும் சமுத்திரம். ஒரு படகு. படகிலே ஒரு தாயும் மகனும் தனியே. நீண்டநாட்களாக தட்டித்தடுமாறி அந்தப்படகிலே பயணிக்கிறார்கள். இன்னமும் எவ்வளவுதூரம் ஓடவேண்டுமோ தெரியாது. தாயும் களைத்துவிட்டாள். மகனுக்கும் ஓடி ஓடிக் களைத்துப்போய்விட்டது. வந்த வழியும் தெரியவில்லை. இன்னமும் எவ்வளவுதூரம், எங்கே போகப்போகிறோம் என்கின்ற எந்த இழவும் அந்தச்சிறுவனுக்கு புரியவில்லை. நாட்கணக்குகளாகவிருந்த காத்திருப்பு, மாதங்களாகி வருடங்களாகிவிட்டன. பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருநாள் காலையில் படகிலே தூக்கம் கலைந்து எழுந்தபோது, தூரத்தே இரண்டு பெரும் மலைப்பாறைகளை சிறுவன் காண்கிறான். தாய் ஏற்கனவே அந்த இரண்டு பாறைகளையும் வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்கிறாள். “அப்பாடி .. ஒருமாதிரி தரையைக் கண்ட…
-
- 0 replies
- 977 views
-
-
முல்லைத்தீவில் நடந்த ஆர்ப்பாட்டமும் முந்தநாள் நடந்த பேரவைக் கூட்டமும்- நிலாந்தன்…. மாவலி அதிகாரசபைக்கெதிராக முல்லைத்தீவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தை எவ்வளவு தூரத்திற்கு அசைக்குமோ தெரியவில்லை. ஆனால் 2009 மேக்குப் பின்னரான புதிய தமிழ் எதிர்ப்பு வடிவம் குறித்துச் சிந்திக்கும் எல்லாத் தரப்புக்கும் அதில் கற்றுக்கொள்வதற்கு முக்கிய பாடங்கள் உண்டு. சனச்செறிவுள்ள யாழ்ப்பாணத்தில் அப்படியோர் ஆர்ப்பாட்டத்தைச் செய்வது வேறு. முல்லைத்தீவில் அதைச் செய்வது வேறு. மூவாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அதில் கலந்துகெண்டார்கள். இந்த வகை ஆர்ப்பாட்டங்களில் முதலாவதும் பெரியதுமான ஓர் ஆர்ப்பாட்டம் 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின் யாழ்ப்பாணத்தில்…
-
- 0 replies
- 377 views
-
-
மீண்டும் எழுந்த முஸ்லிம் கலாசார உடைகள் தொடர்பான விவாதம் - வ.ஐ.ச.ஜெயபாலன் . இலங்கையில் குறிப்பாக கிழக்கு பாடசாலை அலுவகங்களில் முஸ்லிம் பெண்கள் அணியும் உடைகள் தொடர்பான விவாதம் மீண்டும் எழுந்துள்ளது. இதுபற்றி என்னிடம் கேட்க்கபட்டபோது என் கருத்தை உறுதியாக முன் வைத்தேன். . ஒரு பெண் நிர்பந்திக்கபடாமல் சொந்த விருபத்தின்பேரில் முக அடையாளத்தை மறைக்காமல் அணியும் ஆடையைச் சிலர் கேழ்விக்குரித்தாக்குவதை அனுமதிக்க முடியாது. அதேபோல மாற்று மதத்தவர்களின் உடைகளை காமத்தை தூண்டுவது என வக்கிரமாகச் சிலர் குறிப்பிடுவதையும் அனுமதிக்க முடியாது. . எங்கள் இளமையில் சேலை முக்காடு என முஸ்லிம்களின் கலாசார உடைகள் ஒருபோதும் கேழ்விக்குள்ளானதில்லை. 1980 பதுகளின் பின்னர் முஸ்லிம்கள் அரபிய வ…
-
- 8 replies
- 1.1k views
-
-
ஐ.நாவும் ஜெனீவாவும்: அமெரிக்கா எதிர் சீனா தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 பெப்ரவரி 21 வியாழக்கிழமை, பி.ப. 07:04Comments - 0 உலகப் பொதுமன்றம், என்றும் எல்லோருக்கும் பொதுவானதாக இருந்ததில்லை. இந்தக் குற்றச்சாட்டு ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது முதல் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. இருந்தபோதும், உலக அமைதியைக் காப்பதற்குள்ள ஒரேயொரு மன்றம் என்றவகையில், உலகநாடுகள், அம்மன்றில் அங்கத்துவம் வகித்து வந்துள்ளன. இதுவரை, மூன்றாம் உலகப்போர் ஏற்படவில்லை. ஆனால், அதையொத்த உயிரிழப்புக்களை மனிதகுலம், கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் கண்டுள்ளது. உலகம் பாதுகாப்பான இடமாக இல்லை என்பதை உலகெங்குமுள்ள சாதாரண மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். பட்டினியாலும் பசியாலும், நோ…
-
- 0 replies
- 800 views
-
-
2009 மே க்கு பிறகு நடந்த பல மாற்றங்கள் பல தமிழர்களின் எல்லைகளை மீறிய செயல்கள் என்பது இலங்கை பிரச்சனைகள் கவனிப்பவர்களுக்கு சொல்லாமே விளங்கும் விடையம் ஆகும். அதே போல நாங்களும் மாற்றங்களை எதிர் பார்த்து செய்த கருமங்கள் பல. ஆனால், மாற்றங்கள் என்னவோ சாண் ஏறி முழம் சறுக்கிய கதையாகவே உள்ளது. அத்தோடு கூட்டமைப்பு அரசாங்துடனான பேச்சு, மீள் குடியேற்றம், புலம் பெயர்ந்த உறவுகள் உறவு, சுண்ணாகம் குடி நீர் பிரச்சனைகள்,உட்கட்சி உரசல்கள்.. ....... இன்ன பல விடயங்களில் ஒரு தெளிவற்ற போக்கை கொண்டிருப்பதும் ஒன்றும் மறைவான விடயம் அல்ல. எனது நண்பர்கள் சிலர் - அதே போல் உங்களுக்கும் இருக்க கூடும்; மேற்குறிப்பிட்ட காரணங்களால் கூட்டமைப்பையும் ஒரு கட்டுப்பாட்டில் கொண்டு வாருவதற்காகவும், கயேந…
-
- 1 reply
- 666 views
-
-
இலங்கையின் தலையெழுத்தை தீர்மானித்த இனக்கலவரம் 1983 இல் நடந்தது நமக்குத் தெரியும். இனத்துவ முரண்பாட்டை அடுத்த நிலைக்குத் தள்ளிய அந்த 83 இனப்படுகொலைச் சம்பவம் ஆயுதப் போராட்டத்தை கூர்மையடையச் செய்ததும் நாமறிவோம். ஆனால் அந்த வரலாற்றுத் திருப்புமுனை நிகழ்த்தப்பட்ட ஆண்டில் இருந்து சரியாக 100 வருடங்களுக்கு முன் அதாவது 1883இல் இலங்கையில் முதலாவது வகுப்புவாத கலவரம் நடந்தது. முதலாவது மதக் கலவரமாகவும் அதனைக் குறிப்பிடுவார்கள். இந்த மாதம் மார்ச் 25ஆம் திகதியோடு அந்த கலவரம் நிகழ்ந்து 132 வருடங்கள் நிறைவடைகின்றன. “கொட்டாஞ்சேனை கலவரம்” ஆங்கிலேய ஆட்சி கால அரச பதிவுகளில் “Kotahena Riots” என்றே அழைக்கப்படுகிறது. இந்த கலவரம் நிகழ்ந்து முடிந்த பின்னர் இதனை விசாரிப்பதற்காக ஆங்கிலேய …
-
- 1 reply
- 1.7k views
-
-
பொது எதிரியை மறந்துவிடும் அரசியல்வாதிகள் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 மே 08 புதன்கிழமை, பி.ப. 07:55 Comments - 0 தமிழீழ விடுதலைப் புலிகளை, இராணுவ ரீதியாகத் தோற்கடித்து, அவ்வமைப்பின் தலைவர்களை அழித்ததன் பின்னர், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரும்பியிருந்தால், உலகிலேயே நல்லிணக்கத்துக்குச் சிறந்த உதாரணமான, இந்த நாட்டை வளர்த்தெடுத்திருக்கலாம். உடனடியாகப் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடமைப்பு போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, அப்பகுதிகளில் தொழில்களை ஆரம்பிக்க, அவசரமாக நடவடிக்கை எடுப்பதோடு, முறையான அதிகாரப் பரவலாக்கல் முறையொன்றையும் அமுல் செய்திருந்தால், தமிழ் மக்கள் இதை விட அதிகளவு நம்பிக்கையுடனும் உத்வேகத்துடனும் தேசிய அரசியல் நீரோட்டத்தில்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிழக்கு ஆளுநர் மீதான கேள்விகள் Editorial / 2019 ஜூன் 20 வியாழக்கிழமை, மு.ப. 03:55 Comments - 0 -இலட்சுமணன் இலங்கை சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர், தமிழர்களின் அரசியல், எதிர்ப்பு அரசியலாகவே கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. சிங்களவர் பதவி ஒன்றுக்கு நியமிக்கப்பட்டால் எதிர்ப்பு; முஸ்லிம் ஒருவர் பதவிக்கு வந்தால் போராட்டம்; ஏன் தமிழர் ஒருவர் நியமனம் பெற்றுவிட்டாலும் அங்கேயும் மறைமுக நடவடிக்கைகளின் ஊடாக எதிர்ப்புணர்வு நகர்த்தப்படுகிறது. இவை, அன்றாடம் நாம் காணும் சாதாரண நிகழ்வுகள்தான். இலங்கையின் சுதந்திரத்துக்காகச் சிங்களத் தலைவர்களும் தமிழ்த் தலைவர்களும் முஸ்லிம் தலைவர்களும் உழைத்தார்கள். தமிழ்த் தலைவர்களுக்கு, தலைமை தாங்கும் அந்தஸ்து கூட வழங்கப்பட்டிருந்த…
-
- 0 replies
- 378 views
-
-
முற்றுகைக்குள் திருகோணமலை இலங்கையில் தமிழர் தாயகத்தை இலக்குவைத்த நிலஅபகரிப்புகள் ஓக்லாண்ட் நிறுவகம் - தமிழில் ரஜீபன் சிங்கள அரசாங்கம் வடக்குகிழக்கில் உள்ள சிறுபான்மை தமிழ் முஸ்லீம் மக்களின் தாயகத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை தொடர்ந்தும் விஸ்தரிக்கின்றது. 15 வருடங்களிற்கு முன்னர் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த போதிலும், இந்த பகுதிகள் பெருமளவிற்கு இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுகின்றன. இந்த நோக்கத்துடன் சிங்கள அரசாங்கம், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை மாவட்டத்தில் நில அபகரிப்பை தீவிரப்படுத்துகின்றது. அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்களவர்களை குட…
-
- 0 replies
- 262 views
- 1 follower
-
-
நம்பிக்கை பிறந்தால் வழி பிறக்கும் காரை துர்க்கா / 2019 நவம்பர் 05 , மு.ப. 02:37 கடந்த வாரம், யாழ். நகரில் உள்ள தனியார் கல்வி நிலையத்துக்கு முன்பாக, நடுத்தர வயதுடைய ஒருவருடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தக் கல்வி நிலையத்துக்கு மகளைக் சைக்கிளில் கூட்டி வந்து, வகுப்பு முடியும் வரை கா(த்து)வல் இருந்து, மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் குறிப்பிட்டார். மகளின் கல்வி முக்கியம்; ஆனாலும், தனது நேரம் காத்திருத்தலில் வீணடிக்கப்படுவதாகச் சற்று நொந்து கொண்டார். “எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், யாருக்கு வாக்கு அளிப்பதாக உத்தேசம்” எனக் கேட்டேன். “நான் அதைப் பற்றி யோசிக்கவே இல்லை; வேலைக்குப் போறதோட ஐந்து நாள்களும் போய் விடுகின்றன. சனி, ஞாயிற்று…
-
- 0 replies
- 605 views
-
-
குர்தியர்களை இனப்படுகொலை செய்த ஈராக் அரசு [size=3][size=3][size=3]ப.நற்றமிழன் [/size][/size][/size] [size=4]குர்து மொழி பேசும் இசுலாமிய மக்கள் குர்தியர்களாவர். பெரும்பான்மை குர்தியர்கள் சன்னி முசுலிம் பிரிவைச் சேர்ந்தவர்கள். சிறுபான்மை சியா பிரிவு முசுலிம்களும், கிருத்துவர்களும், யூதர்களுமாவர். இவர்கள் வாழ்ந்த நிலப்பகுதியே குர்திசுதான் என்று அழைக்கப்பட்டது. தங்களுக்கென்று தனி மொழி, பண்பாடு, கலாச்சாரம் கொண்ட ஒரு தனி இனமாக இவர்கள் வாழ்ந்து வந்தார்கள். குர்து மொழி சுமேரிய கல்வெட்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து இவர்கள் ஒரு தொன்மையான பழங்குடி இனம் என்பது புலனாகின்றது.[/size] [size=4]முதல், இரண்டாம் உலகபோர்கள் இவர்கள் வாழ்ந்த குர…
-
- 2 replies
- 1.1k views
-
-
2020 இன் திசைவழி: சோசலிசத்தின் மீள்வருகை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஜனவரி 30 காலத்தின் திசைவழிகளைக் காலமே தீர்மானிக்கும் பொழுதுகளில், வரலாறு திருப்பித் தாக்கும். எதுவெல்லாம் முடிந்துவிட்டது என்று முடிவானதோ, அது மீண்டும் புத்தெழுச்சியோடு எழுந்து மீண்டும் வரும். அது முன்பிலும் வலுவாக, உறுதியாக மீளும். 2020ஆம் ஆண்டு, அவ்வகையான எதிர்பார்ப்போடு தொடங்கி இருக்கின்றது. பேச விரும்பாத பொருளைப் பற்றி, பேச விரும்பாதவர்கள் பேச வேண்டிய கட்டாயத்துக்குக் காலம் கொண்டு வந்து விட்டிருக்கின்றது. “அவர்கள் சோசலிசத்தின் தோல்வி பற்றிப் பேசுகிறார்கள். அப்படியென்றால், ஆசியா, ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்காவில் முதலாளித்துவத்தின் வெற்றி எங்கே?” இவ்வாறானதொரு கேள்வ…
-
- 0 replies
- 450 views
-
-
-
முள்ளிவாய்க்கால் போர் முடிவதற்கு முன்னர் வகுக்கப்பட்ட சூழ்ச்சி! ஈழத் தமிழினம் சந்தித்து நிற்கும் பெரும் அழிவு தமிழ் தேசிய அரசியலில் பேரம் பேசும் சக்திகள் மெல்ல மெல்ல இல்லாமல் அல்லது சூழ்ச்சுமமான முறையில் அழிக்கப்படும் தந்திரத்தை அரச எந்திரம் மிக இலகுவாக செய்து கொண்டிருப்பதனை அண்மைய நாட்களில் நிகழும் அரசியல் காய் நகர்த்தல்கள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் இல்லாமல் செய்யப்பட்டதன் பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் ரீதியில் தமிழர்களின் குரலாக ஒலிக்கும் என்று தமிழ் மக்கள் நம்பினார்கள். போருக்குப் பின்னர், வந்த வடக்கு மாகாண சபை தேர்தலில் கூட தமிழர்களின் நம்பிக்கை கொஞ்சம் உயிர்ப்படையத் தொடங்கியது. மகிந்த ராஜபக்சவ…
-
- 1 reply
- 502 views
-
-
தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றை பின்நோக்கி பார்த்தால் ஒரு உண்மை வெள்ளிடைமலையாகும். அதாவது, இரண்டு வேறுபட்ட நபர்கள் அல்லது தரப்புக்களுக்கிடையிலான முரண்பாட்டின் வழியாகவே தமிழ்த் தேசிய அரசியல் உயிர்வாழ்ந்து வந்திருக்கிறது. முதலில் அது ஜி.ஜி.பொன்னம்பலத்திற்கும் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்திற்கும் இடையிலான முரண்பாட்டின் விழைவாக உருப்பெற்று, அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. அந்த முரண்பாட்டின் நீட்சியாகவே இலங்கை தமிழரசு கட்சி உருவாகியது. ஜி.ஜி.பொன்னம்பலம் ஜக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் இணங்கிச் செல்லுகின்றார் என்பதே மேற்படி முரண்பாட்டின் அடிப்படையாக இருந்தது. இதன் விழைவாகவே தமிழ்த் தேசிய இனத்திற்கென ஒரு தனிக்கட்சி தேவை என்னும் முடிவுக்கு செல்வநாயகம் வரநேர்ந்தது. இதே செல்வநாயகம் 1968…
-
- 0 replies
- 511 views
-
-
சீனா: பொருளாதார அரசியலும் மேலாதிக்க விஸ்தரிப்பும்! பகுதி 1 கொரோனா நெருக்கடி என்பது இந்த நூற்றாண்டின் முதலாவது உலகளாவிய பேரிடர். இதற்கு முந்தைய உலகளாவிய நெருக்கடிகள் என இரண்டு உலகப்போர்களும் கணிப்பிடப்படக்கூடியவை. இன்னொரு வகையில் சொல்வதானால் சற்றேறக்குறைய நூறு ஆண்டுகளுக்குள் மூன்று நெருக்கடிகள் உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. உயிரழிவுகள், பொருளாதார வீழ்ச்சி சார்ந்தவற்றைப் பொதுவான பாதிப்புகளாகச் சுட்டமுடியும். தவிர உலகமயமாக்கலின் தன்மைகள், உலக அமைதிக்குப் பங்கம், நாடுகளுக்கிடையிலான உறவுகளில் இந்நெருக்கடிகள் விளைவுகளை ஏற்படுத்தின. புதிய இயல்பு அல்லது புதிய வழமை கொரோனா நெருக்கடியின் விளைவுகள் உலகளாவிய மாற்றத்திற்குரிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன.…
-
- 0 replies
- 454 views
-
-
இலங்கையில் புாிய அரசியலமைப்பு உருவாக்கலின் விவாதப் பொருள்கள் கடந்த 7 வருடங்களுக்குள் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பேணி வளர்ப்பதை நோக்காகக் கொண்டு அரசியல் ஒழுங்கை அமைப்பியல் ரீதியாக மறுசீரமைப்புச் செய்வதற்கு இலங்கைக்கு இருவாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. 2009 மே மாதம் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபோது முதல் வாய்ப்பும். 2015 ஆம் ஆண்டில் புதிய கூட்டரசாங்கம் பதவிக்கு வந்தபோது இரண்டாவது வாய்பும் கிடைத்தன. போரின் முடிவு மிகவும் முக்கியமான ஒரு திருப்புமுனையாகும். ஏனென்றால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சியுடன் அதிகாரப் பரவலாக்கலுக்கும் இனங்களுக்குமிடையிலான நல்லிணக்கத்துக்கும் இருந்…
-
- 0 replies
- 538 views
-
-
வல்லாதிக்கச் சக்திகளும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் —ஆணையாளரின் பரிந்துரைகளை நிராகரித்துப் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவுக்கு மனித உரிமைச் சபையின் நிகழ்ச்சி நிரல் பத்தில் கூறப்பட்டுள்ள சர்வதேசத் தொழில் நுட்ப உதவிகளை மாத்திரம் இலங்கை கேட்கக்கூடும். அப்படிக் கோரினால் மனித உரிமைச் சபை அதற்கு இணக்கம் தெரிவிக்கக்கூடிய ஆபத்தும் உண்டு—- -அ.நிக்ஸன்- ஈழத்தமிழர்கள் இன அழிப்புக் கோரிக்கையில் பிடியாக நிற்காமல், இந்தியா, அமெரிக்கா போன்ற வல்லாதிக்கச் சக்திகளுக்கு ஏற்றவாறு செயற்படுகின்றமை இலங்கை ஒற்றையாட்சி அரசுக்கு வாய்ப்பாகவே அமையும். குறிப்பாகச் சிங்கள அரசிய…
-
- 0 replies
- 608 views
-
-
தமிழர் அரசியல் எதை நோக்கி? - யதீந்திரா திருவிழா முடிவுற்றதும் அடியார்கள் காலாற ஓய்வெடுப்பதற்கும், தமிழர் அரசியலுக்கும் ஏதாவது தொடர்பிருக்கின்றதா? நிச்சயம் இருக்கின்றது. ஜெனிவா திருவிழா முடிந்துவிட்டது. கடந்த சில மாதங்களாக தமிழர் அரசியலானது, களத்திலும் புலத்திலும் கடும் பரபரப்பாக இருந்தது. எந்தப் பக்கம் திரும்பினாலும் ஜெனிவா பற்றிய பேச்சுக்கள்தான். முதலில் பூச்சிய வரைபு சரியா – தவறா என்பதில் ஆரம்பித்த ஜெனிவா திருவிழா, இறுதியில் இந்தியா முதுகில் குத்திவிட்டது – தமிழர்கள் மீளவும் ஏமாற்றப்பட்டுவிட்டனர் – என்றவாறான விவாதங்களுடன் முற்றுப்பெற்றது. எப்போது மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதோ, அப்போதே தமிழ் …
-
- 0 replies
- 450 views
-
-
ஐ. நாவின் முகமும் தமிழ் மக்களின் மீட்சியும் - அருட்தந்தை மா. சத்திவேல் இலங்கை உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக 2015 ஆம் ஆண்டு ஐ. நா மனித உரிமைப் பேரவையில் 30/1 இல் ‘போரின் போது சர்வதேச மனித உரிமைச் சட்டமீறல்கள், துஸ்பிரயோகங்கள், போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி பாதிக்கப்பட்டோருக்கு நீதியை வழங்குவதற்கு இலங்கையுடன் இணைந்து சர்வதேச நீதிபதிகள், பிரதிவாத தரப்பு சட்டத்தரணிகள் விசாரணையாளர்களை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்குதல் வேண்டும்’ எனும் பிரேரணை இலங்கையின் அனுசரணையோடு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவ்வாண்டு, கடந…
-
- 0 replies
- 398 views
-
-
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் தெட்டத் தெளிவாக விளங்கிக்கொள்ளபட்டிருக்கின்ற நிலையிலும் இன்றுவரை தமிழ் மக்களின் விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் உலக நாடுகள் உதவ முன்வராதது ஏன் என்பதை ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள் புரிந்துகொள்ளவேண்டிய காலம் ஏற்பட்டிருக்கிறது. உலகெங்கும் விடுதலைக்காக ஏங்குகின்ற மக்கள் முன்னெடுக்கின்ற போராட்டங்களுக்கு பலம் பொருந்திய வல்லரசு நாடுகள் துணை நின்றன. நிற்கின்றன. ஆனால் தமிழ் மக்களின் தேசிய சுதந்திர விடுதலைப் போராட்டத்திற்கு இன்று வரை எந்தவொரு நாடும் ஆதரவு தரவில்லை. இதனால் சிறீலங்கா அரசாங்கமும் அதன் படைகளும் துணிந்து நின்று இலட்சக்கணக்கான தமிழ் மக்களைத் துடிக்கத் துடிக்கக் கொன்றுவிட்டு போராட்டத்தை அழித்திருக்கின்றன. இனியும் …
-
- 0 replies
- 972 views
-
-
பூகோள அரசியல்- புலிகளுக்கு வேறு வியாக்கியாணம் தலிபான்களுக்குச் சர்வதேச நீதி —ரஷியாவோடு இராணுவ ஒத்துழைப்புக்கான கலந்துரையாடலை இலங்கை மொஸ்கோவில் நடத்தியிருந்தது. இந்த உரையாடல் சீனாவுக்கான ஒத்துழைப்பாக இருக்கலாம் என்பதைவிட, அமெரிக்காவை மேலும் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கான கொழும்பின் உத்திகளில் ஒன்றாகவே கருதலாம்— -அ.நிக்ஸன்- ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சராக பதவியேற்கலாம் என்று கருதப்படும் இந்திய இராணுவ அகாடமியின் முன்னாள் மாணவர் சேஷர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் (Sher Mohammad Abbas Stanikzai…
-
- 0 replies
- 449 views
-
-
சாத்தியமாகுமா? திரு.ரவூப் ஹக்கீம்(முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்)
-
- 0 replies
- 335 views
-
-
சாதனையும் வேதனையும் நல்லாட்சி அரசாங்கம் தனது பெயருக்கு ஏற்ற வகையில் நல்லாட்சியைப் புரிகின்றதா இல்லையா என்பது ஒரு புறமிருக்க, அமைச்சர்கள் இராஜினாமா செய்வதிலும், நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதிலும், அது சாதனைகள் புரிந்திருப்பதாகவே கருதப்படுகின்றது. ஆனால் இந்த சாதனைகள் மக்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும், அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் வழிவகுப்பதாகத் தெரியவில்லை. மத்திய வங்கி விவகாரத்தில் இடம்பெற்ற ஊழல்களில் சம்பந்தப்பட்டார் என அரசாங்கத் தரப்பினராலேயே முன்வைக்கப்பட்ட அழுத்தம் காரணமாக வெளிவிவகார அமைச்சசர் ரவி கருணாநாயக்க தனது …
-
- 0 replies
- 386 views
-