அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
யாழில் வந்த கொடி பற்றிய கவிதையும் அதற்கு வந்த பின்னோடங்களுமே இதை என்னை எழுத தூண்டியது . பண்ணிதர் இருந்த காலத்திலேயே நல்லூரடியில் தமிழிழ மிருகசாலை என்று ஒரு முதலையை கட்டி வைத்திருக்கின்றார்கள் என்று சொல்லி யாரோ சொன்னார்கள் . பின் போராட்டம் வலுவடைத்து தமிழிழ பரப்பளவில் முக்கால்வாசியை புலிகள் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்த நேரம் வீதிகள் ,பூங்காக்கள் போன்றன மாவீரர்கள் பெயர்கள் சூட்டப்பட்டன . அத்துடன் தேசிய கொடி ,பூ ,விலங்கு,பறவை என்றெல்லாம் அறிமுகப்படுத்தப்பட்டு பின் வன்னி மட்டும் கட்டுப்பாட்டிற்குள் இருந்த காலத்தில் ஒரு நிழல் அரசே அங்கு இருந்ததும் உண்மை . ஆனால் இவையெல்லாம் பலராலும் ஒரு மொனோபொலி விளையாட்டில் கிடைக்கும் ஒரு விளையாட்டு பொருட்கள் போலவே பார்க்கப்பட்டது .தமி…
-
- 21 replies
- 2.7k views
-
-
‘ராஜபக்ஷக்களின் அலை’ அடிக்கத் தொடங்கும் அறிவிப்புக்கள் விடப்படுகின்றன ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி. (தேசிய மக்கள் சக்தி) ஆட்சியில் ஜே.வி.பி.யின் ‘மணி’ சத்தம் அதிகமாகி தேசிய மக்கள் சக்தியின் ‘திசைகாட்டி’ தவறாகத் திசை காட்டத் தொடங்கியுள்ளதால் ‘மாற்றம்’ என்ற கோஷம் மீது மக்கள் வைத்த எதிர்பார்ப்பு,நம்பிக்கை பொய்த்துப்போகத் தொடங்கியுள்ளது.இதனை ஓரளவுக்குத் தடுத்து நிறுத்தவே கடந்த வாரப் பாராளுமன்ற அமர்வில் ஜனாதிபதி ஒரு ஆக்ரோஷமான உரையை நிகழ்த்தி எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடியிருந்தார். ஜனாதிபதியின் இந்த ஆக்ரோஷமான உரைக்கு எதிர்க்கட்சிகள் தனது ஆட்சிக்குக் கொடுக்கும் குடைச்சல்கள் மட்டும் காரணமின்றி, ராஜபக்ஷக்களின் ‘மொட்டு’க்கு நாட்டில் மீண்டும் அதிகரித்துவ…
-
- 1 reply
- 208 views
-
-
தேர்தல் கால ஞானம்: ஹரீஸின் ‘மன்னிப்பு’ அரசியல் முகம்மது தம்பி மரைக்கார் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், கடந்த வியாழக்கிழமையன்று (05) முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோரி, உரையொன்றை ஆற்றியிருந்தார். தமது கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் கூறிய உபதேசம் ஒன்றை, தாம் மீறி விட்டதாகவும் அதற்காக முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோருவதாகவும் அந்த உரையில் ஹரீஸ் தெரிவித்திருந்தார். “ரணிலின் பஸ்ஸில் ஏறக் கூடாது என்று, மறைந்த தலைவர் அஷ்ரப் கூறிய உபதேசத்தை, நாங்கள் மீறி விட்டோம். அதற்காக, சமூகத்திடம் மன்னிப்புக் கோருகிற…
-
- 0 replies
- 387 views
-
-
நாட்டுக்குள் எவ்வாறு வைரஸ் புகுந்தது? எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 மார்ச் 25 இலங்கை ஒரு தீவு. இங்கிருந்து வெளியே செல்லவும் உள்ளே வரவும், ஒரே ஒரு பிரதான வழி தான் இருக்கிறது. அது தான் கட்டுநாயக்க விமான நிலையம். தவிர, மத்தல, யாழ்ப்பாணம் ஆகிய விமான நிலையங்கள், கப்பல்கள் வரும் சில துறைமுகங்கள் ஆகியன இருந்த போதிலும், இவற்றின் மூலம் மிகச் சிலர் மட்டுமே வருகின்றனர். இவற்றையும் கணக்கில் எடுத்தாலும், பொதுவாக நாட்டுக்குள் நுழைவதற்காக மிகச் சில வாயில்களே இருக்கின்றன. எனவே, வருபவர்களை மிக இலகுவாகக் கண்காணிக்கலாம். ஆனால், வேறு நாடுகளுடனான நில எல்லைகள் இருக்கும் நாடுகளில், அவ்வாறு நாட்டுக்குள் வருபவர்களைக் கண்காணிப்பது மிகவும் கடினமாகும். உதாரணமாக, நேபாளத்திலிருந்து வெளிய…
-
- 2 replies
- 987 views
-
-
தேர்தல் குறித்த ஆர்வம் வடக்கில் எப்படியுள்ளது? கலாநிதி ஜெகான் பெரேரா July 25, 2020 இடம்பெறவிருக்கும் பொதுத் தேர்தல்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கடந்த வாரம் வெளியிடப்பட்டதேர்தல் விஞ்ஞாபன அறிக்கையில், தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்க ளின் ஒன்றிணைந்த வடிவத்தில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கு தமிழ் மக்களிடமிருந்து புதிய ஆணை கோரப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஒரு பிரிக்கப்படாத நாட்டில் நீடித்த அமைதியை உறுதி செய்ய முடியும் என்று அதில் கூறப்பட்டுள்ளதுஇது சுதந்திரம் பெற்ற ஆரம்ப நாட்களிலிருந்தும் பின்னர் மூன்று தசாப்த கால யுத்தத்திலிருந்தும் தமிழ் அரசியலில் முதலிடம் வகித்த சமூக சமத்துவ பிரச்சினைகளுடன் இணைந்த தொன்றாக…
-
- 1 reply
- 588 views
-
-
தோல்வி ஹிட்லரை அசைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் இதை அவர் ஒரு தோல்வியாகக்கூட எடுத்துக்கொள்ளவில்லை. முந்தய உலகப்போரில் ஜேர்மனி அடைந்ததே அது தோல்வி. பிரிட்டன் அத்தியாயம் என்பது ஒரு சறுக்கல் மட்டும் தான். பெரும் சறுக்கல் கூட இல்லை. சிறு தடுமாற்றம். நடக்கும் போது கால் இடறினால் என்ன செய்வோம்? இடிந்து போயா உட்கார்ந்துவிடுவோம்? என்று பிரிட்டனுடனான போரின் தோல்வியை பெரிதாக எடுத்து கொள்ளாமல் தனது நோக்கங்களில் உறுதியாக இருந்தார் ஹிட்லர். ஏப்ரல் 1941 தொடக்கத்தில் ஜேர்மனி பார்டிக் நாடுகள் மீது தாக்குதல் தொடுத்தது. கிறீஸ், யூகோஸ்லாவியா இரண்டும் ஜேர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டன. மே மாத இறுதியில் கிரேக்க தீவான கிறெரே (Crete) ஜேர்மனி வசமானது. எஸ்டோனியா, லாட்வியா, லித்துவேனியா மூன்றைய…
-
- 0 replies
- 765 views
-
-
ஒற்றையாட்சிக்குள் ஒடுங்குவதற்கு தமிழர்கள் தயார்படுத்தப்படுகிறார்களா? தேர்தல்கள் ஆணைக்குழு, அடுத்த ஆண்டு முக்கியமான இரு தேர்தல்களை நடத்துவது தொடர்பில் முன்களப் பணிகளை ஆரம்பித்துள்ளது. முதல் காலாண்டுப் பகுதியில் புதிய அரசியலமைப்பினை அங்கீகரிப்பது தொடர்பிலான பொது வாக்கெடுப்பையும் இரண்டாம் காலாண்டில் உள்ளூராட்சி தேர்தலையும் நடத்துவது தொடர்பிலான முன்னெடுப்புக்கள் அவை. ஆக, 2017ஆம் ஆண்டின் ஆரம்பம், தமிழ் மக்கள் மத்தியில் முக்கியமான தீர்மானமொன்றை எடுக்குமாறு கோரவுள்ளது. இலங்கையின் கடந்த கால அரசியலமைப்புக்களின் வடிவமைப்பிலோ, நிறைவேற்றத்திலோ தமிழ் மக்கள் தங்களைப் பங்காளிகளாக வைத்துக் கொண்டதில்லை. அல்லது அதனை, பௌத்த - சிங்கள மைய சக்திகள் அனுமதித்ததில்லை. த…
-
- 0 replies
- 448 views
-
-
வழிய வழிய வாக்குறுதிகள் முகம்மது தம்பி மரைக்கார் ‘கீரைக் கடை’களுக்கு எதிர்க் ‘கடை’கள் உருவாகுவது, அரசியல் அரங்கில் மக்களுக்கும், ஜனநாயகத்துக்கும் நல்லது. எதிர்க்கடைகள் அதிகரிக்க அதிகரிக்க தனிக்காட்டு இராசாக்கள் மதிப்பிழந்து போவார்கள்; ஏகபோக வியாபாரம் அங்கு இல்லாமல் போய்விடும். நல்ல கடையில் வர்த்தகம் ஜோராக நடைபெறும். நல்ல கீரைகளை மக்கள் தேடித் தேடிப் பெற்றுக் கொள்ள முடியும். தரமற்ற கீரைகளை வைத்துக் கொண்டு, மக்களை ஏமாற்றி வியாபாரம் நடத்த முடியாது போய்விடும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்தில், கடந்த ஒரு வருட காலமாக, அரசியல் கட்சிகளின் ‘எதிர்க்கடை வியாபாரம்’ சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முன்னர் முஸ்லிம் காங்கிரஸும், …
-
- 0 replies
- 265 views
-
-
இலங்கை தமிழர் பிரச்சினை தமிழகத்தில் "உணர்ச்சி பிழம்பாக" மாறியிருக்கிறது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட காட்சிகள் வெளியாக, தமிழகத்தில் உள்ள கட்சிகள் எல்லாமே போராட்டக் களத்தில் வந்து நிற்கின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா, "இது மனிதாபிமானமற்ற செயல்" என்று பாதயாத்திரையில் வைகோவை சந்தித்த மறுநாளே பரபரப்பு பேட்டி கொடுத்தார். இந்த பேட்டி அ.தி.மு.க.வின் பக்கமாகபோக நினைக்கும் கட்சிகள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. "கருணாநிதி நாடகமாடுகிறார். இலங்கை தமிழர் பிரச்சினையில் முதல்வர் உண்மையாகவே போராடுகிறார்" என்று வைகோவே ஒரு வார இதழுக்கு பேட்டி கொடுத்தார். "காங்கிரஸ் எதிர்ப்பு" என்ற களத்தை உருவாக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஆளும் அ.தி.மு…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதியும் இந்தோ- பசுபிக் பிராந்திய நலனும் நாடாளுமன்றத்தில் அரை மணித்தியாலம் நடைபெறும் கேள்வி நேரத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றியும் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் இலங்கை இராணுவத்துக்கு வழங்கும் உதவிகள் பற்றியும் கேள்வி எழுப்ப முடியும். ஆனால் அப்படிக் கேட்கப்பட்டதாகத் தெரியவில்லை அ.நிக்ஸன் ஒதுக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் நடைபெறும் வரவுசெலவுத் திட்ட அறிக்கை தொடர்பான விவாதத்தில் குற்றம் சுமத்தி வருகின்றன. குறிப்பாக 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளில் பாதுகா…
-
- 0 replies
- 348 views
-
-
இலங்கை “கலாசார பாசிசத்திற்கான” பாதையை நோக்கி செல்கிறதா? அஹ்னாஃப் ஜசீமின் கைதும் கண்டனங்களும்! http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/Ahnaf.jpg தமிழில் நடராஜா குருபரன்… பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட மன்னார் கவிஞரின் கைதானது தவறானதென கல்வியாளார்கள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் குரலெழுப்பியுள்ளனர்… தமிழ்க் கவிதை நூலில் தீவிரவாத கருத்துக்கள் உட்பதிந்து இருப்பதாக, குற்றத்தடுப்பு பிரிவினரால்(CID) பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, அஹ்னாஃப் ஜசீம் (Ahnaf Jazeem) மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை, அந்த கவிதை நூலைப் படித்த, தமிழ் அறிஞர…
-
- 0 replies
- 397 views
-
-
ஈழத்தமிழர்களுக்கும் தமிழ் ஈழத்திற்க்கும் தொடர்ச்சியாகவும் முழுமையாகவும் ஆதரிக்கும் கட்சி சிவப்பு கட்சி. நோர்வேயில் எம் இனத்திற்கு பக்க பலமாகவும் குரல் கொடுக்கும் அரசியல் ஆதரவு சக்தியாகவும் சிவப்பு கட்சி இருந்து வருகிறது. 2009 ஆம் ஆண்டு தமிழீழ மண்ணில் நிகழ்த்தப்பட்ட சிங்களத்தின் ஆக்கிரப்பு போரில் நடந்த இனவழிப்பை விசாரிப்பதற்காக சர்வதேச விசாரணைக்குழு ஒன்று அவசியம் என்பதை சிவப்பு கட்சி வலியுறுத்துகிறது. அதோடு நோர்வேயில் தமிழ் ஈழத்தை ஆதரிக்கும் ஒரேயொரு கட்சி சிவப்புக்கட்சியே என்பதை நாம் அனைவரும் அறிவோம். நோர்வே அரசியலில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் அரசியலிலும் நேரடியாக ஈடுபட்டவர்கள் சிவப்பு கட்சியினர். உதாரணம் பியோனர் மோகனாஸ். நோர்வே ஈழத்தமிழர் அவையின் உறுப்பி…
-
- 0 replies
- 612 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-05-28#page-3
-
- 0 replies
- 392 views
-
-
-
- 0 replies
- 638 views
-
-
மனிதஉரிமை மீறலா? இன அழிப்பா? எமக்கு நடந்தது நடந்து கொண்டிருப்பது மனித உரிமை மீறலா அல்லது இனஅழிப்பா என்பது பற்றி பலர் தவறான கருத்துக்களை முன் நிறுத்துகின்றனர். உண்மையில் இறுதிப்போரில் இது இரண்டுமே நடைபெற்றது. பின்னர் எதற்கு இந்த கேள்வி என்று நீங்கள் கேட்கலாம். இங்கே நம்மில் பலர், முக்கியமாக புலம்பெயர்ந்த இளையோர்கள் மனித உரிமை மீறல் நடந்தது என்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்கிறார்கள். எமக்கு நடந்ததுஒரு திட்டமிட்ட இனஅழிப்பு என்பதை தெரிந்தோ தெரியாமலோ மறைத்து விடுகிறார்கள். இரண்டிற்கும் என்ன வித்தியாசம் உள்ளது? ஜரோப்பிய ஒன்றிய மனித உரிமை சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். அதாவது உள்நாட்டு சட்டங்களினால் முழுமையான நீதி கிடைக்காவிட்டால் மட்டுமே ஜரோப்பிய ஒன்றிய ம…
-
- 23 replies
- 2k views
-
-
தமிழ் ஈழம் ஏன் கிடைக்காமல் போனது? ஜெகத் கஸ்பர் அருமையான பேச்சு நன்றி - யூரூப்
-
- 4 replies
- 725 views
-
-
விக்னேஸ்வரன் வரமா, சாபமா? வடக்கு மாகாண அமைச்சரவைக் குழப்பங்களைத் தொடர்ந்து அமைச்சர் டெனீஸ்வரனைக் கட்சியிலிருந்து 6 மாதங்களுக்குத் தற்காலிகமாக நீக்கியிருக்கிறது ரெலொ அமைப்பு. அதன் மூலம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் ஊடாக கட்சிக்குள் உடைவு அல்லது குழப்பம் ஏற்பட்ட மூன்றாவது அமைப்பாகி இருக்கிறது ரெலோ. முதலமைச்சராகப் பதவியேற்றதில் இருந்தே சி.வி.விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் ஏதோவொரு விதத்தில் கட்சிகள் அனைத்தையும் பாதித்துள்ளன. கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கு இடையிலான உறவுகளை மட்டு…
-
- 2 replies
- 736 views
-
-
ஜனாதிபதியின் வடக்கு விஜயமும் நீதி கோரிய கறுப்புக்கொடி போராட்டமும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அரசியல் கைதிகள் பல தடவைகள் போராட்டங்களை முன்னெடுத்து இருந்தனர். அவர்களுக்கு ஆதரவாக சிறைச்சாலைகளுக்கு வெளியிலும் தமிழ் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இருப்பினும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், அரசியல் கைதிகள் விவகாரம் கடந்த சில வாரங்களாக மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் மூவர் தமது வழக்கு விசாரணைகளை வவுனியா மேல் நீதிமன்றில் இருந்து அனுராதபுரத்திற்கு மாற்றுவதற்கு எத…
-
- 0 replies
- 490 views
-
-
தோல்வியில் முடிந்த ஒப்பரேசன்- 2 பெப்ரவரி 10ஆம் திகதி நடந்த உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர், கொழும்பு அரசியல் இரண்டாவது அரசியல் குழப்பத்தை தாண்டியிருக்கிறது. இந்த இரண்டு குழப்பங்களுமே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அதிகாரத்தில் இருந்து அகற்றும் நோக்கம் கொண்டவை. இந்த இரண்டு குழப்பங்களினதும் மூலம், ஒரே இடத்தில் இருந்து தான் ஆரம்பிக்கப்பட்டது. ஒரே இடத்தில் இருந்து தான் இது இயக்கப்பட்டது. ஆனால், இந்த இரண்டு ஒப்பரேசன்களுமே தோல்வியில் முடிந்திருக்கின்றன. உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, ஆட்சியைக் கைப்பற்றும் தீவிர முனைப…
-
- 0 replies
- 486 views
-
-
மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்கள் அவசியம் - பேராசிரியர் சூரியநாராயன் விசேட செவ்வி (பகுதி - I ) சென்னைப் பல்கலைக்கழகத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய கற்கைகள் மையத்தின் நிறுவுனரும் முன்னநாள் இயக்குநரும் இந்திய பாதுகாப்பு சபையின் முன்னாள் உறுப்பினரும் இலங்கை விவகாரங்கள் தொடர்பாக நீண்ட அனுபவம் கொண்டவருமான ஓய்வுபெற்ற சிரேஷ்ட பேராசிரியர் சூரியநாராயன் இலங்கைத் தேசிய இனப்பிரச்சினை, அதுகுறித்த இந்தியாவின் கரிசனை, பூகோளச் சூழல் நிலைகள், தெற்காசிய பிராந்தியத்தில் சமகால நிகழ்வுகள், சிறுபான்மை பிரதிநிதிகள் மற்றும் தேசின இனங்கள் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான விடங்கள் குறித்து விசேட செவ்வியொன்றை வழங்கினார். அச்செவ்வியின்…
-
- 1 reply
- 899 views
-
-
உலகமா யுத்தம்-2 இல் ரஸ்யாவின் லெனின்கிறாட் Leningrad (இன்று சென்ர் பீற்றேஸ்பேர்க் St-Petersburg) மீது நடந்த முற்றுகைச் சமர் பற்றி தமிழில் ஆக்கங்கள் வந்திருக்கா? இன்றய, எதிர்கால தாயக சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இந்த முற்றுகைச் சமர்பற்றி நாம் தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். அந்த வரலாற்றில் இருந்து நாம் எல்லோரும் படித்துக் கொள்ள பல விடையங்கள் உண்டு. அதன் மூலம் நமது இழப்புகளை குறைக்கலாம். http://en.wikipedia.org/wiki/Siege_of_Leningrad http://www.wellcome.ac.uk/doc_WTX024059.html
-
- 6 replies
- 1.7k views
-
-
ரணில் இந்தியாவை நெருங்கிச் சொல்கிறாரா? நிலாந்தன். ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வருவதை இந்தியா விரும்பவில்லை என்று கருதப்பட்டது. ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பின் பொழுது இந்தியா டளஸ் அழகப்பெரும ஆதரிக்குமாறு கூட்டமைப்பிடம் கேட்டதாக தகவல்கள் வெளிவந்தன.இலங்கைத் தீவு இப்பொழுது முப்பெரும் பேரரசுகளின் இழு விசைகளுக்குள் சிக்கியிருக்கிறது. இன்னிலையில் ஒரு பேரரசை நோக்கி அதிகம் சாயும் ஒரு தலைவர் ஒப்பீட்டளவில் பேரவலம் குறைந்த பலவீனமான ஒரு தலைவராகவே இருப்பார்.அதனால்தான் சீனாவை நோக்கி சாய்ந்த மஹிந்த உள்நாட்டில் ஜனவசியம் மிக்க ஒரு தலைவராக இருந்தார். ஆனால் நாட்டுக்கு வெளியே அவருக்கு அந்த அளவுக்கு அங்கீகாரம் இருக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டுக்குள் அங்கீகாரம் இப்பொழுதும் இல்லை…
-
- 0 replies
- 593 views
-
-
அமெரிக்க ரஷ்யத் தலைவர்களின் உச்சிமாநாடு சதீஷ் கிருஷ்ணபிள்ளை எதிர்பார்க்கப்பட்ட சாதனைகளும், வெளித்தெரிந்த பாசாங்குகளும் இரு நாடுகளின் தலைவர்கள் சந்திக்கிறார்கள் என்றால், அந்த சந்திப்பு பல வழிகளில் முக்கியத்துவம் பெறும். அதுவும் அமெரிக்க ஜனாதி பதியும், ரஷ்ய ஜனாதிபதியும் சந்திக்கிறார்கள் என்றால், அதற்குள்ள முக்கியத்துவத்தைக் கேட்கவே வேண்டாம். இந்த சந்திப்பு அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் மாத்திரமன்றி, முழு உலகிற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இவ்விரு நாடுகளும் உலக வல்லரசுகளாக இருப்பதற்கு அப்பால், இரு முகாம்களைப் பிரதிநிதித்துப்படுத்துவதும், உ…
-
- 0 replies
- 425 views
-
-
சிலைகள் சிலைகள் – “எங்களுடைய எதிரி எங்களுடைய ஆசிரியர் அல்ல” நிலாந்தன்.! 1980களில் முதலாம் கட்ட ஈழப்போரின்போது இயக்கங்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிகம் பார்க்கப்பட்ட ஒரு படம் உமர் முக்தாரின் போராட்ட வாழ்க்கை பற்றிய ஒரு திரைப்படமாகும். இப்படத்தில் ஓரிடத்தில் உமர் முக்தாரிடம் அவருடைய போராளிகள் வந்து கேட்பார்கள்…கைது செய்யப்பட்ட எதிரிப் படைகளை நாங்கள் சித்திரவதை செய்து கொல்வோமா? என்று. உமர் முக்தார் ஏன் அப்படிச் செய்ய வேண்டும் என்று கேட்பார். அவர்கள் எங்களுடைய போராளிகளை கைது செய்யும் பொழுதும் அப்படித்தான் கொன்றார்கள்.எனவே நாங்களும் அவர்களுக்கு அவர்களுடைய பாணியிலேயே பதில் கொடுக்க வேண்டும் என்று போராளிகள் கூறுவார்கள். அப்பொழுது உமர் முக்தார் மிக நிதானமாக ஒர…
-
- 2 replies
- 878 views
-
-
1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் திகதி. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த தினம். ஒரு மோசமான வரலாற்றை இரத்தத்தால் எழுதுவதற்கு பாரத தேசம் தேர்ந்தெடுத்த தினம் அது. இந்தியா தனது வரலாற்றில் எடுத்த மிகவும் மோசமான ஒரு முடிவு என்று பின்நாட்களில் அரசியல் ஆய்வாளர்களினாலும், போரியல் வல்லுனர்களினாலும் குறிப்பிடப்பட்ட அந்த இராணுவ நடவடிக்கையை இந்தியா ஆரம்பித்த தினம். அன்று ஆரம்பிக்கப்பட்ட அந்த இராணுவ நடவடிக்கை சுமார் 22 வருடங்களையும் கடந்து முள்ளிவாய்கால் வரை தொடரப் போகின்றது என்று இந்தியாவின் தலைவர்களோ அல்லது விடுதலைப் புலிகளின் தலைவர்களோ கனவு கூடக் கண்டிருக்கமாட்டார்கள். அன்று காலை யாழ்பாணத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்தி…
-
- 60 replies
- 16.5k views
-