அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
இந்தியாவை எதிர்பார்த்துக் காத்திருப்போருக்கு.... -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்ற வினாவுக்கான உரிய பதிலை யாராலும் அளித்துவிட முடியாது. ஏனெனில், நிலையான நிலைப்பாடு என்று எதுவும் இருந்ததில்லை. இந்தியாவின் நலனும் மேலாதிக்கமும் விஸ்தரிப்புவாதமுமே இலங்கை தொடர்பான நிலைப்பாடுகளைத் தீர்மானித்து வந்துள்ளன. இந்தியா எப்போதும் தமிழ் மக்கள் பக்கம் நிற்கிறது என்கிற பிம்பம் உடைந்து, சுக்குநூறாகி ஆண்டுகள் பல ஆகிவிட்டன. இருந்தாலும், ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ தொடர்வது போல, இந்தியா மீதான நம்பிக்கைகள் இன்னமும் தொடர்கின்றன. இன்றுவரை, தமிழ் மக்களினதோ இலங்கையில் வாழும் தேசிய இனங்களினதோ சுயநிர்ணய உரிமையை இந்தி…
-
- 0 replies
- 516 views
-
-
’100 நாள்களில் திருப்தி இல்லை’ ஜனாதிபதியாகப் பதவியேற்று நூறு நாள்களைக் கடந்துள்ளபோதிலும், தன்னுடைய தகுதிக்கேற்ற விதத்தில் நாட்டு மக்களுக்கு நூறு சதவீதம் பணியாற்றியதாகத் தன்னால் திருப்திகொள்ள முடியவில்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். காணாமல் போனவர்கள், இராணுவ பிரசன்னம், ஜெனீவா தீர்மானம், அரசியல் கைதிகள், பட்டதாரிகள் விவகாரம், 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு, உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேற்றையதினம் பதிலளித்தார். ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பு, கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மதியம் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போதே மேற்கண்டவாறு ஜனாதிபதி தெரிவித்தார். மக்களின் ஆணையையேற்றுப் பதவியில் இருக்கின்றபோதில…
-
- 0 replies
- 516 views
-
-
எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 06:58 இவ்வருட உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, அதாவது கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி, முஸ்லிம்களின் பெயரில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, பௌத்த தீவிரவாதக் குழுக்கள், பயங்கரமான முஸ்லிம் விரோத பிரசாரமொன்றை ஆரம்பித்து, முன்னெடுத்துச் சென்றனர். சில பகுதிகளில் முஸ்லிம்களின் உடைமைகளின் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அக்குழுக்கள் பெரும்பாலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்களாக இருந்தமையால், அப்பிரசாரத்தில் ஓர் அரசியல் நோக்கமும் தென்பட்டது. எதிர்வரும் தேர்தல்களின் போது, முஸ்லிம்கள் தம்மை ஆதரிக்க மாட்டார்கள்…
-
- 0 replies
- 516 views
-
-
முள்ளிவாய்க்காளில் இருண்ட தமிழர் தேசம் இற்றைவரை முழுமையாய விடியவில்லை , யுத்தத்தின் போது அழ தொடங்கிய பலர் இக்கணம் வரை கண்ணீரோடுதான் காலத்தை கடந்து கொண்டிருக்கிறார்கள் . போரை தவிர்த்து நோக்கின் ஒப்பீட்டளவில் ஒட்டுமொத்த தமிழர் தேசம் எதிர்நோக்கிய பிரச்சனையின் தன்மை என்பது அதன் வேகத்தில் முள்ளிவாய்க்காலுக்கு பின் ஆர்முடுகளிலேயே இருந்து வருகிறது அதனை தடுப்பதற்கான வேகம் என்பது பூச்சியத்தில் இருந்து நகராமலேயே இருந்துகொண்டிருக்கிறது. தமிழர் மீதான அடக்குமுறையும் ஆக்கிரமிப்பும் அழிப்பு நடவடிக்கைகளும் ஸ்ரீலங்கா அரசாங்கங்களின் கொள்கை அல்ல அது ஸ்ரீலங்கா அரசின் கொள்கை. ஸ்ரீலங்கா அரசின் மாற்றப்படாத நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்பட்டுவிட்ட ஒன்று . எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும…
-
- 0 replies
- 516 views
-
-
அதிகரித்துவரும் அமெரிக்க அழுத்தங்களும் அரசின் எதிர்தந்திரோபாயமும் அமெரிக்காவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான விசேட தூதுவர் ஸ்டீபன் ரப் கொழும்பு வந்திருப்பதானது, அரசின் மீதான அழுத்தங்களில் மேலும் சில தாக்கங்களை ஏற்படுத்தலாம். முன்னர் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சர்வதேசத்தின் கரிசனைகளை முற்றாக நிராகரித்த அரசு, அத்தகைய விசாரணைகளை அனுமதிக்க முடியாதென்றும் கூறிவந்திருக்கிறது. நமக்கு நினைவிருக்கலாம் - ஜ.நாவின் நிபுணர் குழுவின் அறிக்கையை முழுமையாக நிராகரித்த மகிந்த அரசு, நிபுணர் குழு இலங்கையில் மேலதிக விசாரணைகளை நடத்துவதற்கான அனுமதியை கோரியபோது அதனை திட்டவட்டமாக மறுத்திருந்தது. ஆனால் இன்று, அமெரிக்காவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் ஸ்டீபன் ரப்பின் விஜயத்தை…
-
- 0 replies
- 516 views
-
-
சிங்கள மக்களின் உதவியை நாடும் இலங்கைத் தமிழ் தாய்மார்கள்... எதாற்காக ? - சிவா பரமேஸ்வரன் (முன்னாள் மூத்த செய்தியாளர் பி.பி.சி. ) இலங்கையில் பதினோரு ஆண்டுகளுக்கு முன்னர் கொடூரமாக முடிவடைந்த யுத்தத்தின் கடைசி நாட்களில் காணாமல்போன மற்றும் கையளிக்கப்பட்ட உறவுகளைக் கண்டுபிடிக்க சிங்கள மக்களின் உதவியை இப்போது தமிழ்த் தாய்மார்கள் கோரியுள்ளனர். தமது உறவுகளை கண்டுபிடித்துக்கொடுக்குமாறு கோரி கடந்த 1200 நாட்களாக அவர்கள் சுழற்சி முறையின் உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடி வருகின்றனர். எண்ணற்றவர்களை உயிர்ப்பலி கொண்ட கொடூரமான அந்த யுத்தம் 18 மே 2009 அன்று முடிவடைந்துவிட்டதாக அரசு அறிவித்த நிலையில், ஏராளமானவர்கள் அதற்கு முன்னரும் பின்னரும் அரச படைகளிடம் `சரணடைந்தனர்…
-
- 0 replies
- 516 views
-
-
மாகாண சபையின் அதிகாரங்கள் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தை விக்கி நாடாதது ஏன்? திருமதி வாசுகி சிவகுமார் அவர்கள் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் திரு வரதராஜபெருமாள் அவர்களைப் பேட்டி கண்டபோது எழுப்பிய கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்கள்;. 23 ஜுலை 2017 தினகரன் வாரமஞ்சரியில் வெளியிடப்பட்டது. கேள்வி 1:- பல்வேறு அச்சுறுத்தல்கள், சவால்களுக்கு மத்தியில், குறுகிய காலம் மட்டுமே நீடித்திருந்த இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த நீங்கள் அந்த மாகாண சபைக்கும், தற்போதைய மாகாண சபைக்கும் இடையே அரசியல் மற்றும் நிர்வாகரீதியாக காணுகின்ற வேறுபாடுகள் எவை? பதில்:- உங்களுடைய கேள்வியிலேயே அந்த மாகாண சபை உட்பட்டிருந்த ந…
-
- 0 replies
- 516 views
-
-
"சமஸ்டி என்ற பெயரில்லாமல் அதன் உள்ளடக்கத்துடன் கூடிய தீர்வுதான் சிறந்த வழி" ஃபேரியல் அஸ்ரப் மெல்பனில் வழங்கிய சிறப்புச் செவ்வி தெய்வீகன் இலங்கை அரசியலில் தனித்துவம் மிக்க பெயர். இரண்டாவது சிறுபான்மையினமான முஸ்லிம் மக்களின் மிகப்பெரிய கட்சியான முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் துணைவி. அஸ்ரப் அவர்களின் அகால மரணத்தை தொடர்ந்து அந்தக் கட்சியை வழிநடத்துவதற்கு முயன்றபோது அந்த கட்சியினால் வெளியேற்றப்பட்டார். ஆனால், தனது அரசியல் ஓர்மத்தை “தேசிய ஒருமைப்பாட்டு முன்னணி” – “நுவா” – என்ற கட்சியின் ஊடாக வெளிப்படுத்தியவர். 2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற அஸ்ரப் மரணத்தின் பின்னர் ஃபேரியலை …
-
- 0 replies
- 515 views
-
-
அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தமது நிறுவனங்களை அனைத்துலக வர்த்தக அபிவிருத்தியில் முன்னேற்றுவதற்கும் தமக்கான மூலோபாயத் திட்டங்கள் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் ஆகியவற்றுக்கும் உந்துசக்தியாக விளங்கும் Armitage International என்கின்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் றிச்சார்ட் ஆர்மிரேஜ். வியட்னாமுக்கு எதிரான யுத்தத்தின் போது இளமைத் துடிப்புள்ள வீரம்மிக்க ஒரு அமெரிக்க கடற்படை அதிகாரியாக பங்குகொண்டிருந்தார். அன்றிலிருந்து அவர் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றார். இவரது வளர்ச்சியின் பெறுபேறாக, அமெரிக்க அதிபர் றொனால்ட் றீகனின் ஆட்சிக்காலத்தில் றிச்சார்ட் ஆர்மிரேஜ் அமெரிக்காவின் உதவிப் பாதுகாப்புச் செயலராகவும் பின்னர் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் ப…
-
- 0 replies
- 515 views
-
-
19 - மூன்று தலைவர்களின் வியாக்கியானங்கள் இலங்கையில் இன்று மூன்று அரசியல் அதிகார மையங்களாக விளங்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கடந்தவாரம் நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவி மற்றும் அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் குறித்து வெளிப்படுத்திய கருத்துகள், நாடு இன்னும் இரு மாதங்களில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முகங்கொடுக்கவிருக்கும் நிலையில் உன்னிப்பாக நோக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன. மூவரையும் பொறுத்தவரை ஜனாதிபதி ஆட்சிமுறை தொடர்பான விவகாரத்தில் வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டி…
-
- 0 replies
- 515 views
-
-
70 வருடங்களை கடந்துவிட்ட நேட்டோ ; அடுத்தது என்ன? பெய்ஜிங் ( சின்ஹுவா ) - வட அத்திலாந்திக் ஒப்பந்த நாடுகள் அமைப்பு (North Atlantic Treaty Organisation -- NATO ) கடந்த வியாழக்கிழமை 70 வருடங்களை நிறைவுசெய்திருக்கிறது. நவீன வரலாற்றில் மிகவும் நீண்டகாலமாக நிலைத்திருக்கும் ஒரு இராணுவ கூட்டணி என்ற வகையில் நேட்டோ சற்று நின்று நிதானமாக அதன் பாதை குறித்து சிந்திப்பதற்கான உகந்த நேரம் இதுவாகும்.1949 ஆம் ஆண்டில் நேட்டோ அமைக்கப்பட்டபோது அன்றைய சோவியத் யூனியனுக்கும் அதன் சார்பு நாடுகளுக்கும் எதிரான ஒரு கூட்டு பாதுகாப்பு அமைப்பாக செயற்பட்டது.பனிப்போரின் ( Cold War ) முடிவையடுத்து அது அத்திலாந்திக் சமுத்திரத்துக்கு இரு மருங்கிலும் உள்ள நாடுகளுக்கிடையிலான இடையிலான ( Transatla…
-
- 0 replies
- 515 views
-
-
திலீபனுக்காக இணைந்த தமிழ்க் கட்சிகள்- ஐக்கியம் தொடரும் வாய்ப்பு உள்ளதா? திலீபனின் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கம் விதித்த தடையை தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி இருக்கின்றது. அனைத்துக் கட்சிகளும் இணைந்து திலீபனின் நினைவேந்தலில் அதுவும் – அரசாங்கத்தின் தடைகளை தகர்த்துக் கொண்டு வந்து பங்கு கொண்டது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழ் அரசியல் பரப்பில் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட முக்கியமான ஒரு திருப்பமாக இதனை கருத முடியும். தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்கும் இந்த கட்சிகள் அனைத்தும் ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து செயற்பட்ட கட்சிகள் என்பதும் கவனிக்கத்தக்கது. பின்னர் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட மு…
-
- 0 replies
- 515 views
-
-
சம்பந்தனால் நிராகரிக்க முடியாத தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட யோசனை - யதீந்திரா சில நாட்களாக ஊடகங்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட நகல் தற்போது வெளியாகியிருக்கிறது. ஆனால் எதிர்பார்க்கப்பட்டது போன்று, அது வெளியிடப்பட்ட பின்னர் பெரியளவில் விவாதங்களோ அல்லது சர்ச்சைகளோ இடம்பெறவில்லை. ஏனெனில் பெரியளவில் சர்ச்சைக்குரிய விடயங்கள் எதுவும் அதில் இல்லை. ஒருவேளை குறித்த யோசனையில் விடுதலைப் புலிகளின் சாயல் தெரிந்திருந்தால், அது ஒருவேளை சர்ச்சைகளுக்கு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் குறித்த தீர்வு நகலை தயாரிக்கும் நிபுணர்குழுவில் இருந்தவர்கள், மிகுந்த அவதானத்துடன் விடயங்களைக் கையாண்டிருக்கின்றனர். கடந்த காலத்தில் கூட்டமைப…
-
- 0 replies
- 515 views
-
-
இந்தியாவை கையாளல் - யதீந்திரா முள்ளிவாய்க்காலின் 11வது ஆண்டை பல தரப்பினரும் நினைவு கூர்ந்திருக்கின்றனர். இம்முறை ஒரு விடயத்தை அவதானிக்க முடிந்தது. அதாவது, வழமைக்கு மாறாக அதிகமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இது கொரோனாவின் விளைவு. வீடுகளில் இருந்தவாறே பலரும் கலந்துரையாடல்களில் பங்குகொள்ளக் கூடியதாக இருந்ததால், அதிகமானவர்கள் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றனர். இவற்றில் ஒரு சில கலந்துரையாடல்களை செவிமடுக்க முடிந்தது. அதில் ஒன்று – தமிழர் உரிமைச் செயலரங்கம் என்னும் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையடல். இதில் இளம் தமிழகம் என்னும் அமைப்பைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், இந்தியாவும் ஈழத் தமிழரின் விடுதலையும் (கள நிலைமை கருதி தலைப்பில் ஒரு சிறிய மாற்றம் செ…
-
- 0 replies
- 515 views
-
-
தங்கப் பாத்திரத்தில் பிச்சையெடுத்தல் “தேச பக்தி என்பது, அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்” என்றார் சாமுவேல் ஜோன்ஸன். தேச பக்திக்கு சற்றும் குறைவில்லாத ஒன்றுதான் இனவாதம். இந்தத் தேர்தலில், சிறுபான்மை இன வேட்பாளர்களில் கணிசமானோரும், தமது வெற்றிக்காக இனவாதத்தைத் தூக்கிப் பிடிக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, தமிழர், முஸ்லிம் வேட்பாளர்களில் ஒரு தொகையினர், இனவாதச் சாக்கடைக்குள் முடியுமான அளவு உருண்டு, புரண்டு கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மான் என்கிற முரளிதரன், இம்முறை பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். அவர் தனது பிரசார மேடைகளிலெல்லாம், முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசி வருகின்றமையை அவதானிக்…
-
- 0 replies
- 515 views
-
-
அடுத்து நடக்கப்போவது என்ன? சில மாதங்களாக அரசியல் ரீதியாகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த உள்ளூராட்சித் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் பத்தி வெளிவரும் போது, பெரும்பாலும் யாருக்கு வெற்றி -யாருக்குத் தோல்வி என்பது தெரியவந்திருக்கும். பலமுனைப் போட்டி நிலவிய உள்ளூராட்சித் தேர்தலில், வடக்கிலும், கிழக்கிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதான போட்டியாளராக எல்லாக் கட்சிகளுக்கும் இருந்தது. ஏற்கனவே நடந்த பாராளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், உள்ளூராட்சித் தேர்தலிலும் பலமான தரப்பாகவும், பிரதான அரசியல் சக்திய…
-
- 1 reply
- 515 views
-
-
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் பின்னரான தமிழ் தேசிய பிரச்சனைக்கான தீர்வு விவகாரம் நடராஜ ஜனகன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் இந்திய விஜயம் வெற்றிகரமான முறையில் அமைந்திருக்கிறது. இந்தியா உடனான இருதரப்பு உறவுகள் மற்றும் வர்த்தக உடன்பாடுகள் பலமான நிலைக்குச் சென்றிருக்கிறது. இவை தொடர்பாக முன்னை நாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராட்டுமளவுக்கு விடயங்கள் மேல்நிலை பெற்று காணப்படுகிறது. மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டல் கீழ் சந்தை பொருளாதாரத்தை நோக்கிய நகர்வுகள் மூலதன வருகைக்காக மாற்றங்களுக்கு தயாராகும் நிலை என அனைத்து தளங்களிலும் நெகிழ்வுத் தன்மையுடன் பயணிக்க தேசிய மக்கள் சக்தி தயாராகி வருகின்றது. இன்றைய உலகமயமாக்கல் போக்கு பல்தேசிய நிறுவனங்களின் எதிர்…
-
- 0 replies
- 514 views
-
-
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போட்ட குண்டு தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ மூன்றாம் உலகப் போருக்கான சாத்தியங்கள் பற்றி அடிக்கடி பேசுகிறோம். மூன்றாம் உலகப் போருக்கான அறைகூவலாக, பல நிகழ்ச்சிகள் கடந்த அரைநூற்றாண்டு காலத்தில் வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இன்றுவரை மூன்றாம் உலகப் போர் என்றவொன்று நிகழவில்லை என ஆறுதலடைகிறோம். “மூன்றாம் உலகப் போரில் என்ன நிகழுமென்று எனக்குத் தெரியாது. ஆனால், மூன்றாம் உலகப் போரொன்று நடந்தால் அதில் என்ன நிகழுமென்று சொல்லவியலாது. ஆனால், அவ்வாறு நிகழுமிடத்து, நான்காம் உலகப் போரென்பது தடிகளாலும் பொல்லுகளாலுமே நடக்கும் என உறுதிபடச் சொல்லவியலும்” என்ற, அல்பேட் ஐன்ஸ்டீனின் புகழ்பெற்ற கூற்று மீண்டும் மீண்டும் நினைவூட்டப்படுகிறது. இவ்வா…
-
- 0 replies
- 514 views
-
-
நல்லாட்சியும் பிரதான அபிவிருத்தித் திட்டங்களாக மாறும் சிங்களக் குடியேற்றங்களும் பௌத்த மதபரம்பலும் நுஜிதன் இராசேந்திரம்- இலங்கையில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் இன்னமும் இலங்கை இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தால் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளமையால் பல ஆண்டுகளாக அந்த காணிகளை நம்பி தமது வாழ்வாதரத்தை மேற்கொண்டு வந்த விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைத்து அவர்கள் நிர்கதிக்குள்ளாகியுள்ளனர். இத்தகைய செயற்பாடு நல்லிணக்க முயற்சிகளை வெகுவாகப் பாதித்துள்…
-
- 0 replies
- 514 views
-
-
இந்தியா - இலங்கை இடையே புதியதோர் ஒப்பந்தமா? லோகன் பரமசாமி தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி உள்ள இலங்கை அரசு பொருளாதார வலிமையை முற்றாக இழக்கும் நிலையை அடைந்துள்ளது. இந்தநிலையானது, இலங்கை, இந்திய இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியலில் தாக்கத்தை விளைவிககுமா? இருநாடுகளுக்குமிடையிலான உறவுகளில் புதியதொரு மாற்றத்தை உருவாகுமா? என்ற ஆழமான கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. தெற்காசியப் பிராந்தியத்தில் இந்திய, இலங்கை ஒப்பந்தமானது இலங்கைத் தீவில் அமெரிக்காவின் தலையீட்டைத் தவிர்ப்பதில் முக்கிய பங்காற்றியது. அத்துடன், இந்தியாவின் தெற்காசிய பிராந்தியப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதாகவும் இருந்தது. அத்தோடு, தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் முதன்…
-
- 6 replies
- 514 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரெடாசியன் பதவி, பிபிசி உலக செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தங்கள் நாடுகளை நிறுவியதற்காக நினைவில் கொள்ளப்படும் உலகத் தலைவர்கள் பட்டியலில் டேவிட் பென்-குரியனும் ஒருவர். மே 14, 1948 அன்று, அல்லது யூத நாள்காட்டியின் படி 5708 ஆம் ஆண்டின் இயார் மாதத்தின் 5 ஆம் தேதியில், டெல் அவிவ் அருங்காட்சியகத்தில் இஸ்ரேலின் சுதந்திரப் பிரகடனத்தை வாசித்தவர் அவர்தான். அன்று பாலத்தீனத்தின் பிரிட்டிஷ் ஆட்சி சட்டப்பூர்வமாக காலாவதியானது; பிரிட்டிஷ் படைகள் இன்னும் வெளியேறவில்லை. பிரகடனத்தை தாமதப்படுத்துமாறு அமெரிக்கா அவருக்கு அழுத்தம் கொடுத்தது. ஆனால் பென்-…
-
- 0 replies
- 514 views
- 1 follower
-
-
குரங்கு பிடிக்க முயன்ற ரெலோ; திட்டத்தை மாற்றிய தமிழரசுக் கட்சி! தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஆரம்பித்த தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து இந்தியப் பிரதமருக்கு கோரிக்கைக் கடிதம் எழுதும் முயற்சி தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கின்றது. கடந்த வருடத்தின் இறுதி மாதங்களில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த இந்தப் பயணம், அடுத்த வாரமளவில் கோரிக்கைக் கடிதத்தை இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் இந்தியத் தூதுவரிடம் கையளிப்பதோடு முடிவுக்கு வரும். அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தினை இலங்கைக்கு இந்தியா வழங்கக் கோரும் கடிதத்தைத் தயாரிக்கும் முயற்சியையே தமிழ் பேசும் கட்சிகளை இணைத்துக் கொண்டு ரெலோ முன…
-
- 1 reply
- 514 views
-
-
குர்திஸ்தான் போன்று இலங்கையில் வாக்கெடுப்பு சாத்தியமா? -அ.நிக்ஸன் மேற்குலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி குர்திஸ்தான் மக்கள் தங்கள் தேசியத்தையும் தனிநாட்டுக் கோரிக்கையையும் சாத்தியப்படுத்தியுள்ளனர். ஈராக் அரசுக்கு பாடம் புகட்டியுள்ளனர். அ.நிக்ஸன் குர்திஸ்தான் போன்று வாக்கெடுப்பு நடத்தி தமிழ் ஈழத்தையும் தனி நாடாக்க வேண்டும் என்றால் குர்திஸ்தான் அரசியல் தலைவர்கள் போன்று தமிழ்த் தலைவர்களும் தமிழ்த்தேசியம் என்ற கோட்பாட்டிலும் சுயாநிர்ணய உரிமை என்ற கருத்துடனும் நிலையாக கால் ஊன்ற வேண்டும். ஆனால் அதற்கான சாத்தியங்கள் வடக்கு கிழக்கில் இருக்கின்றதா என்பது கேள்வி. தமிழரசுக் கட்சி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போன்று குறிப்ப…
-
- 3 replies
- 514 views
-
-
இலங்கை முஸ்லிம்களை தீவிரவாதத்தோடு முடிச்சுப்போடல் - மொஹமட் பாதுஷா கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதக் குழுக்கள் இரண்டுக்கு இடையில் இடம்பெற்ற பரஸ்பர மோதல்கள், தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. இந்தச்சம்பவத்தை முஸ்லிம் தீவிரவாதமாகக் காட்டுவதற்கான முயற்சிகளும் சர்வதேச பயங்கரவாதிகளுடன் தொடர்புபடுத்துவதற்கான கைங்கரியங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது. இன்னும் சொல்லப் போனால், எப்போது இப்படியான ஒரு பிரசாரத்தை முன்னெடுக்க வாய்ப்புக் கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருந்த நாசகார சக்திகளுக்கு, முஸ்லிம்களே அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடு…
-
- 0 replies
- 514 views
-
-
மதகுருமாரின் அரசியல் பிரவேசமும் ஆதிக்கமும் மொஹமட் பாதுஷா / 2020 ஜனவரி 03 , மத போதகர்களின் வாழ்க்கை என்பது, அர்ப்பணிப்புகள் நிறைந்தது. அதுவும், இல்லறமும் இன்னபிற இன்பங்களும் அற்ற துறவுநிலை, மிகவும் உன்னதமாகவே கருதப்படுகின்றது. அந்தவகையில், எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், மத போதகர்கள், துறவிகள் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள். இந்த மதிப்பு, எதுவரைக்கும் என்றால், அவர்கள் தமது மதக் கடமைகளையும் போதனைகளையும் முன்மாதிரியாகவும் கண்ணியமாகவும் முறையாகவும் செய்வது வரைக்குமானதாக இருக்கும். ஆனால், இலங்கையில் மத போதகர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்வோரில் சிலர், செய்கின்ற அபத்தமான காரியங்களின் காரணமாக, அவ்வாறனவர்கள் மீதான விமர்சனப் பார்வையொன்று, எழ…
-
- 0 replies
- 514 views
-