Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழரசுக் கட்சியின் தேர்தல்கால குத்து வெட்டுகள் புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், கடந்த இரு வாரங்களாக, தமிழரசுக் கட்சிக்குள் இடம்பெற்றுவரும் வேட்பாளர் நியமனத்துக்கான இழுபறியும் குத்து வெட்டுகளுமே முதன்மைக் கவனத்தைப் பெற்றிருக்கின்றன. தம்முடைய வெற்றிக்கு அச்சுறுத்தலானவர்கள் என்று கருதும் நபர்களை ஓரங்கட்டுவது முதல், ஆளுமையுள்ள புதியவர்களை வேட்பாளர் பட்டியலுக்குள் உள்வாங்குவதைத் தவிர்ப்பது வரை, மிகமிக கொச்சையான நடவடிக்கைகளில், தமிழரசுக் கட்சியின் தலைவரும், அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். யாழ்ப்பாணத்துக்குள், கூட்டமைப்புக…

    • 0 replies
    • 314 views
  2. இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள்; அரசாங்கம் என்பதையும் தாண்டி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது அதீத நம்பிக்கையும் விசுவாசமும் வைத்திருப்பதை வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு எடுத்துக் காட்டியது. வாக்களித்த மக்கள் தங்கள் பிரதிநிதிகளை கேள்வி கேட்கும்போது அதற்குப் பொறுப்பான முறையில் பதில் வழங்க வேண்டியது கடமை. ஆனால், வவுனியாவில் இடம்பெற்ற சந்திப்பில் கேள்விகளுக்கு வழங்கப்பட்ட பதில் நாங்கள் செய்வதை நீங்கள் பார்த்துக் கொண்டிருங்கள் என்ற தொனியில் அமைந்திருந்தது. ரணில் கிளித்தெறிந்த தீர்வு மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஒருவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சி…

  3. தமிழரசுக் கட்சியின் பரிசோதனைக் களத்தில் விக்னேஸ்வரன் யார்? முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை முன்னிறுத்தி, வடக்கில் கடந்த வாரம் எழுந்திருந்த ஆட்சியதிகார சர்ச்சைகள் அடங்கியிருக்கின்றன. எதிர்வரும் நாட்களில், புதிய அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் சில வார்த்தைப் பரிமாற்றங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கும் முதலமைச்சருக்கும் இடையில் நிகழலாம். ஆனாலும், அது பெரிய இழுபறியாகவோ பரபரப்பாகவோ நீள்வதற்கான வாய்ப்புகள் இல்லை. எனினும், வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியிலிருந்து விக்னேஸ்வரனை அகற்றுவது மட்டும்தானா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உண்மையான நோக்கம்? அதற்காகத்தான் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்ததா? என்கிற …

    • 1 reply
    • 505 views
  4. மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும். மீள்குடியேற்ற நடவபடிக்கைகள் பயனுள்ளதாக மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ் மக்களின் தாயகப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள இனவிகிதாசாரத்தை மாற்றியமைப்பதற்கான அடக்குமுறை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவேண்டும். இனப்பிரச்சினைக்கு சர்வதேச பிரசன்னத்துடன் கூடிய, ஆக்கபூர்வமான குறுகிய காலப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்பதை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாடு முக்கியமாக வலியுறுத்தியிருக்கின்றது. கட்சியின் 15 ஆவது தேசிய மாநாடு என்பதற்காகவோ என்னவோ தெரியவில்லை, முக்கியமான பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இந்தத் தீர்மானங்கள் முதலில் பேராளர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட…

  5. தமிழரசுக் கட்சியின் முடிவா? எம்.ஏ.சுமந்திரனின் முடிவா? – அகிலன் September 9, 2024 ஜனாதிபதி தேர்தலில் ஜக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதற்கு தமிழரசுக் கட்சி எடுத்துள்ள முடிவு கட்சியின் முடிவா அல்லது சுமந்திரனின் தனிப்பட்ட முடிவா என்ற கேள்வி எழுப்பப் படுகின்றது. இந்த முடிவு அரசியலில் கடுமையான வாதப் பிரதி வாதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. வவுனியாவில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழுவின் விசேட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன் பின்னணியில் இருந்து செயற்பட்டவா் சுமந்திரன் என்பதில் சந்தேகம் இல்லை. என்ன அடிப்படையில், எதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு இன்று வரையில் தமிழரசு கட்சியின் சார்பில் யாருமே த…

  6. தமிழரசுக் கட்சியை அக்கட்சிக்காரர்களிடமிருந்தே காப்பாற்றுவது யார்? சில மாதங்களுக்கு முன்பு தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பசுபதிப்பிள்ளை நினைவு நாள் கிளிநொச்சியில் அனுஷ்டிக்கப்பட்டடது. அதில் நினைவுரை ஆற்றிய இக்கட்டுரையாசிரியர் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார். இரண்டு தேர்தல்கள் நடந்தால் அவை தமிழ் மக்களின் தோல்வியை வெளிக் கொண்டுவரும் என்று. ஒன்று, தமிழரசுக் கட்சிக்குள் நடக்கும் தேர்தல். இரண்டாவது,மாகாண சபைத் தேர்தல். அண்மையில், தமிழரசுக் கட்சிக்குள் நடந்த தேர்தல் தமிழ் அரசியலின் சீரழிவை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. அரசியல் விமர்சகர் ஜோதிலிங்கம் கூறுவதுபோல,தமிழ்மக்கள் மத்தியில் கட்சிகள் கிடையாது, தேர்தலில் வாக்குக் கேட்கும் குழுக்கள்தான் உண்டு என்பது சரிய…

  7. Courtesy: Nada. Jathu இரட்டை இலைச் சின்னப் பிரச்சினையில் எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் இழுபறிபட்டு நீதிமன்றத்தினை நாடி கட்சியின் செயல்வலுலை சீர்குலைத்த ஒரு நிலையையே இன்றைய தமிழரசுக்கட்சியும் அடைந்திருக்கின்றது. இருசம்பவங்களினதும் பின்னணிகள் மற்றும் அணுகுமுறைகள் வேறு வேறு விதமாக இருந்தாலும் இரு சம்பவங்களாலும் கட்சிக்கு விளையும் விடயம் ஒன்றாகத்தான் இருக்கும். சுமந்திரனது அரசியல் பிரவேசமானது தேர்தல் வியாபாரத்தில் ஈடுபடாத புத்திசாலிகளை உள்வாங்க என அரசியலமைப்பில் உருவாக்கப்பட்ட ஒரு கதவான தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்ற வாழ்க்கைக்குள் நுழைக்கப்படுகின்றார். தமிழ் தேசிய அரசியல் அவர் ஒரு புத்திசாலியாக நிபுணத்துவ மேற்சட்டையுடன் அடைய…

  8. சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு என்ற அறிவிப்பு- தமிழரசுக் கட்சியை பகிரங்கமாகக் கண்டிக்கத் தயங்கிய மாணவர்கள், சிவில் சமூக அமைப்புகள் பொது மக்கள் அபிப்பிராயத்தை உருவாக்காமல் கட்சிகளுடன் பேசியமை சரியான அணுகுமுறையா? 1 2 நிருபர் திருத்தியது ஆசிரியர் திருத்தியது உறுதிப்படுத்தப்படக்கூடியது ஆசிரியபீட அங்கீகாரம் மொழி திருத்திய பதிப்பு …

    • 0 replies
    • 793 views
  9. தமிழரசுக் கட்சியை... காப்பாற்ற முடியுமா ? நிலாந்தன். கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் நடந்த இரண்டு ஊடகச்சந்திப்புகள் நமக்கு எதை உணர்த்துகின்றனவென்றால் கூட்டமைப்புக்குள் மட்டுமில்ல தமிழரசுக் கட்சிக்குள்ளும் குழப்பம் என்பதைத்தான். இரண்டு கடிதங்களை அனுப்பப்போய் கூட்டமைப்பு குழம்பிப் போயிருக்கிறது என்பது சரியா? இல்லை.கூட்டமைப்பு ஏற்கனவே குழம்பித்தான் இருக்கிறது. ஆனால் இந்த கடிதங்களால் அந்தக் குழப்பம் வெளிப்பட்டிருக்கிறது என்பதே உண்மை.கூட்டமைப்பு ஏன் குழம்பி காணப்படுகிறது? ஏனென்றால் அது ஒரு வலிமையான கூட்டாக இல்லை. அது இதுவரையிலும் பதிவு செய்யப்படாத ஒரு கூட்டு.அதற்கென்று பலமான ஒரு யாப்பு இல்லை. அதற்கென்று ஒரு பொது வங்கிக் கணக்கு இல்லை .அதற்கு காரணம் …

  10. தமிழரசுக் கட்சியையும் விக்னேஸ்வரனையும் பிடித்திருக்கும் கோளாறு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண அமைச்சரவையில் அங்கம் வகிப்பதில்லை என்கிற முடிவுக்குத் தமிழரசுக் கட்சி வந்திருக்கின்றது. அதன் பிரகாரம், வடக்கு மாகாண சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த மருத்துவர் ப.சத்தியலிங்கம், தன்னுடைய பதவியிலிருந்து நேற்றுமுன்தினம், திங்கட்கிழமை விலகியிருக்கின்றார். தமிழரசுக் கட்சியின் ஒழுக்காற்று, நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள அனந்தி சசிதரன், தமிழரசுக் கட்சியின் அனுமதியில்லாமலேயே முதலமைச்சர் விக்னேஸ்வரனால் அண்மையில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அனந்தியைத் தமது கட்சி ச…

  11. தமிழரசுக்கட்சி – DTNA – வித்தியாசம் என்ன? April 30, 2024 — கருணாகரன் — இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்றே சுரேஸ் பிரேமச்சந்திரன் (ஈ.பி. ஆர்.எல்.எவ்) சித்தார்த்தன் (புளொட்) செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ) ஆகியோர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி, ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை (DTNA) உருவாக்கினார்கள். இவர்களோடு தமிழ்த்தேசியக் கட்சி (விக்னேஸ்வரன்), ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய தரப்பினரும் இணைந்து நின்றனர். கூட்டமைப்புக்குள் முடிவற்று நீண்டுகொண்டிருந்த இழுபறிகள், உள்முரண்பாடுகள், ஜனநாயக விரோதப் போக்கு போன்றவற்றுக்கு மாற்றாக, இதொரு நல்ல தீர்மானம் எனப் பலரும் கருதினர். கூட்டமைப்பின் மந்தமான, குழப்பகரமான …

  12. தமிழரசுக்கட்சி எதிர்நோக்கும் புறச்சவால்களும் அகச்சவால்களும் July 9, 2025 — டி.பி.எஸ். ஜெயராஜ் — ஒய்வுபெறும் உயர்நீதிமன்ற நீதியரசர் காமினி அமரசேகர அண்மையில் நீதிமன்றத்தில் உரையாற்றியபோது முக்கியமான பல கருத்துக்களை வெளியிட்டார். பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் பிரகாரம் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு வருகின்ற வெளி அச்சுறுத்தல்களை கூட்டாக எதிர்த்துநிற்க முடியும் என்கிற அதேவேளை, உள்ளிருந்து வருகின்ற சவால்கள் பெருமளவுக்கு நயவஞ்சகத்தனமான ஆபத்தை தோற்றுவிக்கின்றன. ” சரியான நம்பிக்கைகளைக் கொண்ட ஒரு நீதிபதியினால் வெளி நெருக்குதல்களை எதிர்த்துநிற்க முடியும். ஆனால், முறைமைக்குள் இருந்தே அச்சுறுத்தல்கள் வரும்போது அவற்றை எதிர்கொள்வது கடடினமானதாக இருக்கும்” என்று மாண்புமிக்க நீதி…

  13. தமிழரசுக்கட்சி கூட்டுக் கடிதத்தில் கையெழுத்திடாது? நிலாந்தன். செம்மணிப் புதைகுழிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை அடையாளம் காண்பதற்கு நீதிமன்றம் மக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.இம்மாதம் ஐந்தாம் திகதி குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மக்கள் பொருட்களை அடையாளம் காட்டலாம்.அது ஒரு நீதிமன்றத்தில் ஆளுகைக்கு உட்பட்ட நடவடிக்கை என்ற காரணத்தால் அதற்குரிய ஒழுங்குகளையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அரசாங்கம் இந்த விடயத்தில் சீரியஸாக இருக்கிறது, உண்மையாக இருக்கிறது என்று கூறுபவர்களுக்கு இது உற்சாகமூட்டக்கூடியது.குறிப்பாக அடுத்த ஜெனீவா கூட்டத்தொடரை நோக்கி அரசாங்கம் உழைத்து வருவதை இது காட்டுகிறது. ஊழல்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆர்…

  14. தமிழரசு கட்சி சிதைந்ததாலும்> அழிந்தாலும் பரவாயில்லை> கட்சி தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே சுமந்திரனின் நிலைப்பாடு என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும்> சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் தனது அலுவலகத்தில் 31ம் திகதி அன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது> வவுனியாவில் இடம்பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் சீ.வி.சிவஞானம் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி சுமந்திரன் தரப்போடு முரண்பட்ட பலரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதற்கான தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது முழுக்க மு…

    • 2 replies
    • 386 views
  15. தமிழரசுக்கட்சியை தொலைத்த வடக்கும், தேடியெடுத்த கிழக்கும்…! November 15, 2024 — அழகு குணசீலன் — தமிழ்த்தேசிய அரசியல் வடக்கில் மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ், வன்னி மாவட்டங்களில் தமிழரசு(2), காங்கிரஸ் (1), ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு(1), இணைந்து நான்கு ஆசனங்களை பெற்றுள்ளன. கிழக்கில். இதற்கு மாறாக மக்கள் பெரும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். தமிழரசு மட்டும் தனித்து ஐந்து ஆசனங்கள். இந்த முடிவு தமிழ்த்தேசிய அரசியலின் காப்பாளர்கள் யார்? என்ற கேள்வியை எழுப்புகிறது. வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், வன்னி தேர்தல் மாவட்ட முடிவுகளை பாருங்கள். யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் பழம்பெரும் தமிழரசுக்கட்சி வரலாற்றில் முதல் தடவையாக தென்னிலங்கை கட்சி ஒன்…

  16. தமிழரசுக்கட்சியை விமர்சிக்கலாமா? February 26, 2024 — கருணாகரன் — “தமிழரசுக் கட்சியைப் பற்றி தொடர்ந்து எதிர்மறையாகவே எழுதி வருகிறீர்கள். ஆனால் தமிழ் மக்களுடைய பேராதரவைப் பெற்றதாகவும் 75 ஆண்டுகாலப் பாரம்பரியத்தைக் கொண்டதாகவும் தமிழரசுக் கட்சிதானே உள்ளது! அதுமட்டுமல்ல, ஒப்பீட்டளவில் உட்கட்சி ஜனநாயகத்தைக் கொண்டிருக்கும் தமிழ்க்கட்சியும் அதுதான். அண்மையில் நடந்த தலைமைக்கான தேர்தலே இதற்கொரு உதாரணம். இப்படியெல்லாம் இருக்கும்போது எப்படி நீங்கள் அந்தக் கட்சியைக் குறைத்து மதிப்பிட முடியும்?” என்று கேட்கிறார் நண்பர் ஒருவர். கூடவே தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரான சிவஞானம் சிறிதரனையும் அவருடைய தலைமைத்துவத்தையும் நான் உட்படப் பலரும் அவசரப்பட்டு விமர்…

      • Thanks
      • Like
      • Haha
    • 12 replies
    • 1.3k views
  17. தமிழரசை அழிக்க வெளியிலிருந்து யாரும் வரத் தேவையில்லை ! January 3, 20218:25 am “உன்னாலே நான் கெட்டேன்; என்னாலே நீ கெட் டாய் ” என்று மாறி மாறிச் சொல்லித் தோப்புக்கரணம் போடுகின்றனர் சுமந்திரனும், மாவையும். இன்று தமிழர் அரசியலில் உள்ள சம்பந்தன் ஐயாவுக்கு அடுத்ததாக ஏதோவகையில் மக்கள் பிரதிநிதியாக விளங்கியவர் என்ற வரலாறு சொலமன் சூ சிறிலுக்கு உண்டு. இராசா.விஸ்வநாதன் யாழ். மாநகரசபை முதல்வராக இருந்த காலத்தில் சபை உறுப்பினராக விளங்கியவர் ( 1970 களில் ). 2004 தேர்தலில் நமது ஈழ நாடு நாளிதழ் கட்டம் கட்டப்பட்ட செய்தியாக “மாவையும் வெற்றி பெற்றார்” என்று எதனையோ சூசகமாகச் சுட்டிக்காட்டியது. இத்தேர்தலில் சிறிலும் போட்டியிட்டார். 2009 இன் பின்னர் கட்சித் தலைமை, பேச்சா…

  18. தமிழரசை சாகடிக்கும் தலைமைகள்…! January 28, 2024 — அழகு குணசீலன் — தமிழரசுக்கட்சியின் அன்றைய தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் எப்போது “தமிழ்மக்ளை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று சொன்னாரோ அன்றே இந்தக்கட்சி கலைக்கப்பட்டு இருக்கவேண்டும். தமிழ்மக்களுக்கு தலைமை தாங்கக்கூடிய தகைமையை அது இழந்து விட்டது. எஸ்.ஜே.வி.யின் இந்த வார்த்தைகள் கட்சியின்,தலைமைத்துவத்தின் இயலாமையின் வெளிப்பாடு. இந்த இயலாமையை மறைத்து வீரவசனங்களைப்பேசி உசுப்பேத்திய அமிர்தலிங்கம் முதல் மாவை, சம்பந்தர் முதலான கூட்டம் மக்கள் நலன் சார்ந்து அன்றி அரசியல் வியாபாரத்திற்காகவே -பதவிக்காக வண்டியை கொண்டு இழுத்தது. இந்த நிலையில் கடந்த அரை நூற்றாண்டு கால தலைமைத்துவ இயலாமை வட்டுக்கோட்டை …

  19. தமிழரின் அரசியலை வழிநடத்தும் நம்பிக்கைகள்? - யதீந்திரா அரசியலில் மிகவும் துல்லியமான கணிப்புக்களை எவராலும் வழங்க முடியாது. சில அனுமானங்களை செய்ய முடியும். உலகின் முன்னணி புத்திஜீவிகளில் ஒருவரான பேராசிரியர் நோம்ஷொம்ஸகி, கூறுவார், என்னால் நாளைய காலநிலையை எதிர்வுகூற முடியாது. அதாவது, அரசியலிலும், உலக விவகாரங்களிலும் ஒருவர் என்னதான் நிபுணத்துவம் வாய்ந்தவராக இருந்தாலும் கூட, எதிர்காலம் தொடர்பில் அப்பழுக்கற்ற பார்வையை எவராலும் முன்வைக்க முடியாது. பிஸ்மார்க், கூறியது போன்று, நான் என்னதான் ஆற்றல் வாய்ந்தவனாக இருந்தாலும் கூட, கடிகாரத்தின் முள்ளை மாற்றிவைப்பதால், காலத்தை நகர்த்திவிட முடியாது. எனவே மனிதனின் ஆளுமையென்பது எல்லையற்றதல்ல. அது எல்லைக்குட்பட்டத…

  20. தமிழரின் அரசியல் உரிமைக்கான அபிலாசையின் குறியீடே முள்ளிவாய்க்கால் – அஸ்கிளோப்பியன் 24 Views இறைமையும் இயற்கை நீதியும் பின்னிப் பிணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான அபிலாஷையின் குறியீடே முள்ளிவாய்க்கால். அது வெறுமனே பௌதிக ரீதியானதோர் அம்சமல்ல. அவ்வாறு அதனை சாதாரணமாகக் கருதிவிட முடியாது. ஏனெனில்; நிணமும் சதைகளும் சங்கமித்த ஒரு குருதிப் பேராற்றில் இழையோடுகின்ற அபிலாஷைகளின், அழிக்க முடியாததோர் ஆன்ம சக்தியாக, அது திகழ்கின்றது. தமிழ் மக்களின் மனங்களில் ஆழமாக வியாபித்துள்ள அந்த சக்தியின் வடிவ வெளிப்பாடே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி. அது புனிதமானது. அந்தரங்கம் மிகுந்தது. அதனால் அது மிகமிகப் ப…

  21. தமிழரின் இருப்பு பற்றிய புரிதல்கள் Editorial / 2019 செப்டெம்பர் 17 செவ்வாய்க்கிழமை, பி.ப. 07:01 க. அகரன் விடுதலைக்கான வேள்வியோடு இருக்கும் ஓர் இனம், எப்போதும் ஓயாது, தனது இலக்கு நோக்கிய பயணத்தை, முன்னகர்த்திக்கொண்டே இருத்தல் வேண்டும் என்பது புரட்சியாளர்களது கருத்தாக உள்ளது. அந்தவகையில், உலக வரலாற்றுப் பக்கங்களில், பாதிக்கப்பட்ட இனங்களுக்கான விடுதலைப் பயணங்களை எடுத்துக்கொண்டால், பலநாடுகளில் விடுதலையை முன்னெடுத்த அத்தனை இனக்குழுமங்களும், தமக்கான விடுதலை நோக்கிய பயணத்தை, முடிந்த வரையில் இலக்கு நோக்கி நகர்த்தியிருந்தன. அதன் வெளிப்பாடாக, சமாதான ஒப்பந்தங்களும் தனிநாட்டுப் பிரகடனங்களும் அந்தந்த இனக்குழுமங்களுக்குக் கிடைத்திருக்கின்றன. அவ்வாறானந…

  22. மாமனிதர் குமார் பொன்னம்பலத்தைப் பற்றி பல நினைவுரைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இனமதபேதமற்ற முறையில் ஆங்கிலத்திலும் தமிழிலும் பல வெளிவந்துள்ளன. வெளிவராத சிலவற்றை அவரின் இன்றைய 73 ஆவது பிறந்த தினத்தில் வெளிப்படுத்துவது எமது நன்றிக்கடனாகும். தலைநகரில் அடக்கப்பட்ட ஒரு தமிழ்க்குரல் (ஜனவரி 14 2000) தலைநகரில் தமிழர்களுக்காக குரல் எழுப்பிக் கொண்டிருந்த ஒரு தன்மானத் தமிழனின் உயிர் சதிசெய்து பறிக்கப்பட்டது. சர்வதேசம் எங்கும் அடிக்கடி பறந்து சிங்கள அரசின் தமிழர் படுகொலைகளையும் இனப்படுகொலைகளையும் ஆக்கிரமிப்புகளையும் அம்பலப்படுத்தி வந்த ஒரு தேசப் பற்றாளன் சதிகாரர்களால் அழிக்கப்பட்டுவிட்டான். இந்தப் படுகொலையானது கொழும்புத் தலைநகரில் தமிழருக்காக ஆதரவுக்குரல் எழுப்பக் கூடாது …

  23. [size=4]ஈழத்தில் நடந்த இனப்படுகொலையின்போது முள்ளிவாய்க்காலில் வைத்து தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்த அன்று, 2009 மே 17-ம் நாள், நாங்கள் மறைந்துவிட்ட ஆருயிர் நண்பர் அசுரனுக்கு நாகர்கோவில் நகரிலே அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தோம். அந்த ஒருநாள் நிகழ்வின் அங்கமாக “தமிழரின் எதிர்காலம்” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடத்தினோம். நிகழ்காலம் இருண்டு கிடந்ததால், எதிர்காலம் பற்றி ஏக்கத்தோடு விவாதித்துக் கொண்டிருந்தோம். அதேபோல 2012-ம் ஆண்டு மே 17 அன்றும் இடிந்தகரையில் “தமிழரின் எதிர்காலம்” என்ற தலைப்பில் ஒருநாள் மாநாடு நடத்தினோம். இந்தத் தலைப்பின் அவசியம், அவசரம் பற்றி நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை.[/size] [size=4]இன்றைய உலகில் மக்கள…

    • 2 replies
    • 1.2k views
  24. தமிழரின் ஏகபிரதிநிதித்துவமும் அதன் முன் எழும் சவால்களும் -கோ. ஹேமப்பிரகாஷ் LL.B. கொவிட்- 19க்குப் பின்னரான காலப்பகுதியில், உலகளாவிய அரசியல், பொருளாதரம் சார் வெளிகள், பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்துப் பயணிப்பதை அவதானிக்கலாம். இருப்பினும், இலங்கையின் சமகாலப்போக்கு, கொவிட்-19க்கு மத்தியிலும் சூடுபிடித்தே காணப்படுகின்றது. இதற்கு வித்திடும் காரணிகளாக, நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலையும் அதை ஒட்டிய நிகழ்வுகளையும் குறிப்பிடலாம். இம்முறை நடக்க இருக்கின்ற தேர்தலானது, முன்னர் ஒருபோதும் இல்லாத புதிய கொள்கைகள், எண்ணக்கரு சார் எடுத்தியம்பல்களுடனும் நகர்வதை அவதானிக்கலாம். அந்தவகையில், வாக்கு வங்கியின் ஏறுமுகத்தினை உறுதிப்படுத்துவதற்காகவும் இடம்சார் அதாவது, புவியிய…

  25. தமிழரின் ஐக்கியக் கனவு? November 20, 2023 — கருணாகரன் — ‘தமிழ் மக்களுடைய விடுதலைக்கு ஐக்கியம் வேண்டும்’ என்ற குரல் – வலியுறுத்தல் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. கடந்த வாரம் கூட யாழ்ப்பாணத்தில் வடக்குக் கிழக்கு சிவில் சமூகம் என்ற தரப்பினர் முன்னெடுத்த கருத்தரங்கிலும் ஐக்கியத்தின் அவசியத்தைப் பற்றிப் பேசப்பட்டது. இந்த ஐக்கியக் குரலுக்கு ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலிருக்கும். ஆனால், அது உருவாகாத, உருப்படாத சவலையாகவே உள்ளது. மட்டுமல்ல, ஐக்கியத்திற்கு எதிர்நிலையிற்தான் நடைமுறைகள் உள்ளன. அதாவது ஐக்கியத்தை வலியுறுத்துவோரும் சரி, ஐக்கியத்தை உருவாக்க வேண்டிய சக்திகளும் சரி, ஐக்கியப்பட வேண்டிய தரப்பினரும் சரி, ஐக்கியத்துக்கு எதிரானதாகவே செயற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.