Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. மீண்டும் கிளம்பும் புகைச்சல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து மீண்டும் புகைச்சல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. வழக்கம்போலவே, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் சுரேஷ் பிரேமச்சந்திரன், கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக, அதாவது இரா.சம்பந்தனுக்கு எதிராகவும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு எதிராகவும், குரலை எழுப்பியிருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட மே தினப் பேரணி, இணுவிலில் ஆரம்பித்து, மருதனார்மடத்தில் முடிவடைந்ததையடுத்து, மே தினக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசுக் கட்சி மாத்திரமே பங்கேற்றிருந்தது. ஏனைய கட்சிகள் பங்கேற்கவில்லை. இந்தநிலையில் தான், இலங்கைத…

  2. வறுமையில் சிக்கித் தவிக்கும் வடக்கு, கிழக்கு இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ஐந்து மாவட்டங்களே, ஒக்டோபர் மாத இறுதியில் வெளியிடப்பட்டுள்ள விவரங்களின் பிரகாரம், நாட்டின் வறுமை நிலையில் “முன்னிலை” வகிக்கின்றன. இந்நிலை தொடர்பாக, வடக்கு, கிழக்குக்கு அண்டையில் விஜயம் செய்த, இலங்கை மத்திய வங்கியின் வறுமை ஒழிப்புப் பிரிவின் குழுத் தலைவர் ஆர். சிறிபத்மநாதன் கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டில் உள்ள 25 மாவட்டங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படும் ஐந்து மாவட்டங்கள் முன்னிலை பெற்று கொடிய வறுமை மாவட்டங்களாக இனங்காணப்பட்டிருக்கும் விடயம், அனைவரதும் கரிசனைக்கு உள்வாங்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். …

  3. 13 ஆவது திருத்தத்தில் இருந்து இரண்டாவது வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு? நிலாந்தன்! August 8, 2021 இரண்டாம் வட்டுக் கோட்டைத் தீர்மானம் என்ற தலைப்பில் ஒரு மெய்நிகர் மாநாடு கடந்த முதலாம் திகதி இடம்பெற்றது. இரண்டாம் வட்டுக்கோட்டை தீர்மானக் குழு என்ற அமைப்பைச் சேர்ந்த கவிஞர் காசிஆனந்தன் அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். “ஈழத்தமிழர் புவிசார் அரசியலில் இந்திய அரசின் உடனடித்தலையீடு காலத்தின் கட்டாயம்” என்பதே அம்மாநாட்டின் பேசுபொருளாகும். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஈழ ஆதரவு பிரமுகர்கள் இதில் பங்கேற்றுப் பேசியிருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சியும் கொங்கிரஸ் கட்சியும் இதில் பங்கேற்கவில்லை. தாயகத்திலுள்ள தமிழ் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட 3 கட்சிகளுக…

    • 1 reply
    • 494 views
  4. யுத்தமும் – நுண்கடனும் – கடன்காரியும் – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்… எங்களுக்கு அயல் கிராமத்தில் ஒரு அம்மா இருந்தார். அவருக்கு நான்கு பெண் பிள்ளைகள். கணவர் யுத்தத்தில் இறந்துபோய்விட்டார். அவர் ஒரு பெட்டிக் கடைதான் நடாத்திக் கொண்டிருந்தார். என் சிறு வயது முதலே அவர் ஒரு பெட்டிக்கடையை துணையாக்கிக் கொண்டதை பார்த்திருக்கிறேன். இடம்பெயர்ந்தால் அந்தப் பெட்டிக்கடையும் அவருடன் இடம்பெயறும். அவர் எங்கு போய் அடைக்கலம் புகுந்துகொள்ளுகிறாரோ அங்கே அந்தப் பெட்டிக்கடையும் குடியேறும். அப்படியே இடம்பெயர்ந்து 2009 யுத்தம் முடிந்த பின்னர் அவர்கள் தங்கள் பெட்டிக்கடையை திறந்து கொண்டார்கள். முள்வேலி முகாமிலேயே அப்படி ஒரு கடையை…

  5. இந்தி மொழி பற்றி அறியாத விடயங்கள்

  6. ஐ.நா நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத இஸ்ரேல் | அரசியல் களம் | அரசியல் ஆய்வாளர் அருஸ்

    • 0 replies
    • 493 views
  7. மஹிந்தரை தனிமைப்படுத்தும் திட்டமா? மஹிந்தர் என்னதான் தோற்றுவிட்டாலும் ஒரு மூலையில் ஒதுங்கிவிடும் நபரல்ல என்பதை நாடும் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். மஹிந்தர் மீண்டும் அரசியலுக்குள் நிறைவேற்று அதிகார பிரதமர் பதவியைப் பெற்று விடுவதற்காக திரைமறைவில் செயல்பட்டு வருகின்றார். மஹிந்தருக்கு ஆதரவான கூட்டங்கள் என்ற போர்வையில் நுகேகொடை, கண்டி. இரத்தினபுரி என்று மூன்று கூட்டங்கள் நடைபெற்று முடிந்து விட்டது. தற்போது கடந்த வியாழக்கிழமை இரத்தினபுரிக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டங்களை மஹிந்தவின் விசுவாசிகளான விமல் வீரவன்ச,வாசுதேவ நாணயக்கார, தினேஷ்குணவர்தன, உதய கம்மன்வில ஆகியோர்கள் ஏற்பாடு செய்து வருகின்றார்கள். ஆனால் இரத்தினபுரிக் கூட்டத்திற்கு எதிர்பார்த்த மக்கள் கூட…

  8. மக்களின் உயிர்களுடன் விளையாட்டு !!! 22 SEP, 2022 | 02:44 PM இலங்கையைப் பொறுத்தவரையில் நாளுக்கு நாள் ஏதாவது ஒரு புதிய பிரச்சினைகள் தலைதூக்குவது சர்வசாதாரணமாக காணப்படுகின்றது. அதுவும் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பிரச்சினைகள் எவ்வாறு எழுந்தன என்பதும் நாம் கடந்த காலங்களில் வெளியான செய்திகளில் இருந்து அறியமுடியும். அந்தவகையில் தற்போது புதியதொரு பிரச்சினையொன்றை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர். மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எப்லடொக்சின் எனும் அமிலம் கலந்த திரிபோஷா, சமபோஷ, யஹபோஷ, லக்போஷ உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. இலங்கையில் கடந்த …

  9. விஜயின் அரசியல் எதிர்காலத்தை கரூர் அனர்த்தம் தீர்மானிக்குமா? October 6, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இந்தியாவில் கோவில் திருவிழாக்கள், மத ஒன்றுகூடல்கள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ரயில் நிலையங்களில் சன நெரிசலும் உயிரிழப்புகளும் ஒன்றும் புதியவையல்ல. அவை பெரும்பாலும் அடிக்கடி நிகழ்கின்ற அனர்த்தங்கள் என்று கூறலாம். விளையாட்டுப்போட்டிகள், சில திரைப்பட வெளியீட்டு நிகழ்வுகளிலும் கூட நெரிசலில் மக்கள் மரணமடைந்திருக்கிறார்கள். ஆனால், அரசியல் பொதுக்கூட்டங்களில் மிகவும் அரிதாகவே நெரிசல் மரணங்கள் ஏற்பட்டதாகவும் தமிழ்நாட்டில் கரூரில் நடிகர் ஜோசப் விஜய் சந்திரசேகரின் தமிழக வெற்றிக்கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் செப்டெம்பர் 27 சனிக்கிழமை இரவு பெண்கள், குழந்தைகள், உட்பட 41 பேர்…

  10. பெளத்தத்திற்கு முன்னுரிமை சாதகமா? பாதகமா? பௌத்த மதத்­துக்கு முன்­னு­ரிமை கொடுக்கும் விட­யத்தில் புதிய அர­சியல் சாசனம் ஏல­வே­யுள்ள அர­சியல் சாச­னத்­தி­லுள்­ள­வாறே பின்­பற்றும். அர­சியல் சாச­னத்தில் பெளத்த மதத்தை முதன்­மைப்­ப­டுத்தும் விட­யத்தில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட சகல கட்­சி­களும் இணக்கம் தெரி­வித்­துள்­ளன. ஏனைய மதத்­த­லை­வர்­களும் இவ்­வி­வ­காரம் தொடர்பில் தமது பூரண ஆத­ரவை நல்க காத்­தி­ருக்­கின்­றார்கள். மேற்­படி கருத்தை பகி­ரங்­க­மா­கவும் வெளிப்­ப­டை­யா­கவும் தெரி­வித்­துள்ளார். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. பிர­த­மரின் இக்­க­ருத்­தா­னது ஏனைய மதத்­த­லை­வர்­களால் தெரி­விக்­கப்­படும் முக்­கிய செய்­தி­யா­கவும் தமிழ் மக்­கள…

  11. பொசன் நாடகம்? நிலாந்தன்! June 27, 2021 கடந்த 12 ஆண்டுகாலத் தமிழ் அரசியலின் இயலாமையை வெளிக்காட்டும் குறிகாட்டிகளில் ஒன்று தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம். கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் மக்கள் வினைத்திறன் மிக்க விதத்தில் போராடவில்லை என்பதற்கு அது ஒரு குறிகாட்டி. கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக தமிழ் அரசியல் தலைமைகள் பொருத்தமான வெற்றிகள் எதனையும் பெறத் தவறி விட்டார்கள் என்பதற்கு அது ஒரு குறிகாட்டி. தமிழ்க் கட்சிகளில் துருத்திக்கொண்டு தெரியும் பலரும் சட்டத்துறை ஒழுக்கத்தை சேர்ந்தவர்கள். ஆனால் கடந்த 12 ஆண்டுகளில் அரசியல் கைதிகளுக்காக போராடுவதற்கென்று சட்ட உதவிக் கட்டமைப்பு எதையும் இன்று வரையிலும் எந்த ஒரு அரசியல் கட்சியும் உருவாக்கியிருக்கவில்லை. மனித உரி…

  12. கொல்லப்பட்ட மாணவர்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் அரசியல் பிழைப்பும் பேரினவாதிகளும் 10/24/2016 இனியொரு... யாழ்ப்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கற்கும் இரண்டு மாணவர்கள் இலங்கைப் பொலிசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பான அதிர்வலைகள் மக்கள் மத்தியிலும், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலும் அதன் எதிர்த் தரப்பிலும் பல்வேறு வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இலங்கைப் பொலிஸ் படை இரண்டு மாணவர்களை அதிகாலை வேளையில் கொன்று போட்டுவிட்டு அதற்கான தடயங்களை அழித்துவிட்ட சம்பவம் ஒரு வகையான அச்ச உணர்வைச் சமூக மட்டத்தில் தோற்றுவித்துள்ளது. இரண்டு கொலைகளின் பின்புலத்திலுள்ள அரசியல் காரணங்கள் எதுவாயினும், அவற்றை முன்வைத்து நடத்தப்படும் பிழைப்புவாத…

  13. ஹெரி - கூட்டமைப்பு சந்திப்பில் அமெரிக்கா இராஜதந்திர நடைமுறைகைளை உதாசீனம் செய்ததா? யதீந்திரா ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் செய்த முதல் முக்கிய நபர் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஆவார். அதனைத் தொடர்ந்து அண்மையில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் ஹெரி, இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அமெரிக்காவை பொறுத்தவரையில் அதன் மிக உயர் பொறுப்புக்களில் ஒன்றை பிரதிநிதித்துவம் செய்பவரின் இலங்கை விஜயமானது ஒரு குறியீட்டு அரசியல் பெறுமதியை கொண்டதாகும். தன்னுடைய தோல்விக்குப் பின்னால் இந்திய, அமெரிக்க உளவுத் துறைகளின் திரைமறைவு சதியிருப்பதாக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கூறிவரும் நிலையில்தான், ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இந்திய பிரதமரின் விஜயமும், தற்போது அமெர…

    • 1 reply
    • 493 views
  14. தமிழ்த் தேசிய அரசியலின் சாபக்கேடு கே. சஞ்சயன் நாய்க்கு எங்கே அடி விழுந்தாலும், காலை நொண்டிக் கொண்டு ஓடும். அதுபோலத் தான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தான் சறுக்குகின்ற இடங்களில் எல்லாம், இந்தியா மீது பழிபோடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறது. 2018 உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கும் இடையில் கூட்டணி அமையவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் தட்டிப் போனது. ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ஈ.பி.ஆர்.எல்.எவ் இணைந்து போட்டியிட்டது. அப்போது, இந்தியாவின் சொற்படியே சுரேஸ் பிரேமசந்திரன் அந்த முடிவை எடுத்தார் என்று குற்றம்சாட்டினார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இர…

  15. உளம் சார்ந்த பிரச்சினைகளால் வளம் குன்றும் மக்கள் ஆரோக்கியம் என்றால் என்ன? “நான் ஆரோக்கியமாக இருக்கின்றேன்” என ஒருவர் கூறினால், அது வெறுமனே உடல் சார்ந்த ஆரோக்கியமா? அதன் உள்ளார்ந்த பொருள் என்ன? ஆகவே, இது தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் பின்வருமாறு விளக்கம் தருகின்றது. ஆரோக்கியம் என்பது, நோயினால் பீடிக்கப்படாததும் இயலாமையில் இருந்து விடுபட்டதுமான நிலை மாத்திரமல்ல; ஒருவர் தம் உடல், உளம், சமூகம் மற்றும் ஆன்மீகத் தளங்களில், அடையக்கூடிய அதி உயர்ந்த நிலையே ‘ஆரோக்கியம்’ எனலாம். ஆரோக்கியம், மனிதனின் அடிப்படைப் பிறப்புரிமைகளில் ஒன்று ஆகும். இந்த வியாக்கியானத்தின் அடிப்படையில் தற்போது ஈழத் தமிழ் மக்கள் ஆரோக்கியமான …

  16. நெருக்கடியான காலத்தில் கல்வி தொடர்பாகச் சிந்தித்தல் Bharati May 2, 2020 நெருக்கடியான காலத்தில் கல்வி தொடர்பாகச் சிந்தித்தல்2020-05-02T13:32:08+00:00Breaking news, அரசியல் களம் சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியத்தினரின் இணைய வழியிலான இரண்டு சந்திப்புக்களிலே பகிரப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அந்த ஒன்றியத்தின் சில உறுப்பினர்களால் இந்தப் பதிவு எழுதப்பட்டது. இந்தப் பத்தி ஒன்றியத்தின் எல்லா உறுப்பினர்களின் கருத்துக்களையும் பிரதிபலிப்பதாக அமையாது. கொரொணாத் தொற்றினை அடுத்து நாட்டின் கல்வி மற்றும் உயர்கல்விக் கட்டமைப்புக்கள் முன்னெப்போதும் இல்லாத பல சவால்களினை முகம்கொள்கின்றன‌. பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும், ஏனைய உயர் கல்வி நிறுவனங்களும…

  17. 1960-1964ஆம் ஆண்டு டிசெம்பர் வரையான ஸ்ரீமாவின் அரசாங்கத்தில் வீறுகொண்டு அமுல்ப்படுத்தப்பட்ட ‘தனிச் சிங்களச்’ சட்டத்தின் விளைவாக, தமிழர் அரசியல் பரப்பிலும் தமிழ் மக்களிடையேயும் ‘பிரிந்து’ செல்வதற்கான எண்ணம் முளைவிடத் தொடங்கியது. 1961 சத்தியாக்கிரக மற்றும் குடியியல் மறுப்புப் போராட்டத்துக்குப் பின்னர், இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் எந்தவொரு பாரிய எதிர்ப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. இதன் விளைவாக, ஆங்காங்கே சிறிய அரசியல் குழுக்களும் அமைப்புக்களும் தோன்றின. இவை பிரிவினை, தனிநாடு என்ற கொள்கைப்பிரசாரத்தை முன்னெடுப்பவையாக அமைந்தன. பிரதான தமிழ் அரசியல் கட்சிகள், இலங்கை அரசாங்கத்தோடு இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கு எடுத்த முயற்சிகள் தொடர்ந்து தோல்வி …

  18. கொரோனா வைரஸ்: பெருந்தொற்றும் உலகப் பதற்றமும் என்.கே. அஷோக்பரன் / 2020 மார்ச் 31 உலகமே வீட்டுக்குள் முடங்கிப்போய், பதறிக்கொண்டிருக்கிறது. இராஜ பரம்பரை முதல், வீடற்று இருப்பவர்கள் வரை, பாரபட்சமில்லாது மனிதர்களைத் தீண்டி, பற்றிப் பரவிக்கொண்டிருக்கிறது ‘கொவிட்-19’ எனும் கொள்ளை நோய். ‘இன்றுளார் நாளையில்லை’ எனும் நிலையாமையை, முழு உலகமுமே கண்முன்னே கண்டுகொண்டிருக்கும் இந்த நிலையின் காரணகர்த்தா, கொரோனா எனும் வைரஸ் ஆகும். சுவாச நோயைத் தரும் கொரோனா வைரஸ், உலகைப் பதறவைப்பது, இது முதன்முறையல்ல. 2003இல் ஒரு வகையான கொரோனா வைரஸ் பரவி, ‘சார்ஸ்’ நோயை ஏற்படுத்தி, ஆசியாவையும் உலகத்தையும் பதறவைத்தது. 2012இல் ஒரு வகையான கொரோனா வைரஸ் பரவி, ‘மேர்ஸ்’ நோயை ஏற்பட…

  19. ஒரே நாடு ஒரே சட்டம்-one country one law-பா.உதயன் One language, two nations; Two languages, one Nation -Dr. Colvin R. De Silva என் வீட்டுக் காணியிலே இராணுவ முகாம் கட்டியிருக்கு எம் நினைவை கட்டித்தொழ எமக்கு இங்கு சட்டம் இல்லை எந்த ஒரு இனமாகிலும் தம் உறவுகளின் பிரிவுகள் சார்ந்து நினைவு கொள்ளும் உரிமையை யாரும் தடுக்க முடியாது. இது ஓர் அடிப்படை மனித உரிமை சார்ந்ததாகும். ஒரு மனிதன் இறப்பில் இருந்து பிறப்பு வரை சம உரிமையுடனே பிறக்கிறான் என ஆங்கில அரசியல் தத்துவஞானி ஜான் லோக் (John Locke) கூறினார்.சாதி சமயம் கடந்த பாகு பாடு இல்லாத சமத்துவ நீதி கொண்ட மனித நேயங்களோடு கூடிய மானிடத்தின் எதிர்பார்ப்பு இவைகள் தான். ஒரு அரசின் அடிப்படை சட்டங்களில் தன் மக்க…

  20. ட்றம்பரின் ஊழித்தாண்டவம் சிவதாசன்அது இயக்கங்கள் வானம் தொட்ட காலம். கிராமங்களின் ‘டவுண்ரவுண்கள்’ எனப்படும் கடைச் சந்திகளில் இயக்கக்காரர் ஆள்பிடிகளில் ஈடுபட்டிருந்த அக்காலத்தின் ஒருநாளில் இச்சம்பவம் நடந்தது. அவ்வூரிலுள்ள நோஞ்சான் ஒருவனுக்கு இயக்கத்தில் சேர ஆசை. ஒரு முக்கிய இயக்கத்தின் நாயகர் ஒருவரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார். நோஞ்சானின் புஜபல பராக்கிரமத்தை நன்றாக அறிந்த அந்த நாயகர் இதர தோழர்களிடம் இதைக்கூறி அந்நோஞ்சானை விடுப்புப் பார்வையாளர் முன்னால் எள்ளி நகையாடிவிட்டார். மனமுடைந்துபோன நோஞ்சான் “இப்ப உங்களுக்குக் காட்டிறன் நான் ஆரெண்டு” என்றபடி அவ்விடத்திலிருந்து நகர்ந்தார். அதற்கும் அந்த நாயகர் கூட்டம் அவரை எள்ளிநகையாடி உரத்துச் சிரித்து வழியனுப்பி வைத்தது…

      • Haha
    • 3 replies
    • 492 views
  21. ‘அதையும் தாண்டிப் புனிதமானது’ கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தெளிவூட்டும் செயலமர்வு, யாழ். நகரில் உள்ள இலங்கைவேந்தன் கல்லூரியில் நடைபெற்றது. “புதிய அரசமைப்பில், சமஷ்டிக்கும் மேலான சமஷ்டித் தன்மைகள் இருக்கின்றன. அதைப் புரிந்து கொள்ளாதவர்களே, அதற்கு மாறாகக் கருத்து வெளியிடுகின்றனர்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் தெரிவித்திருந்தார். ஆறு மாதங்களின் பின்னர், கடந்த மே மாத இறுதியில், கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் சட…

  22. எல்லாரும் ஏறிச்சறுக்கிய குதிரையில் சக்கடத்தார்? - நிலாந்தன் இராமநாதன் சகோதரர்களில் இருந்து தொடங்கி சம்பந்தர்கள் வரையிலும் சிங்களத் தலைவர்களிடம் ஏமாந்திருக்கிறார்கள்.கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கால அரசியல் அனுபவம் அது. கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இலங்கைத் தீவு சுதந்திரம் அடைய முன்னும் பின்னும் தமிழ்த் தலைவர்கள் சிங்களத் தலைவர்களோடு நடத்திய பேச்சுவார்த்தைகள்,சந்திப்புகள்,எழுதிய உடன்படிக்கைகள் எதுவுமே வெற்றி பெறவில்லை. ஆயுதப் போராட்டம் கொழும்பின் மீது நிர்ணயகரமான அழுத்தத்தை பிரயோகித்தது. அதனால் ஒப்பீட்டளவில் நீண்ட காலம் நிலைத்திருந்த இரண்டு உடன்படிக்கைகள் எழுதப்பட்டன.மூன்றாவது தரப்பொன்று தலையிட வேண்டிய தேவையும் ஏற்பட்டது.இவ்வாறு ஆயுதப் போராட்டத்…

  23. சிறைக்கம்பிகளின் பின்னால் துருப்பிடிக்கும் நல்லாட்சி ப.தெய்வீகன் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இன்னொரு தடவை ஆரம்பிக்கப்பட்டு, 'சம்பிரதாயபூர்வ உறுதிமொழிகளுடன்'முடித்துவைக்கப்பட்டிருக்கிறது. கைதிகளை வழக்கமாக சென்று உருக்கமாக பார்க்கும் அரசியல்வாதிகளும் இம்முறை அதிகம் அக்கறைப்படவில்லை. சிறைச்சாலை ஆணையாளர்தான், சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து உத்தரவாதத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறார். அவரது உறுதிமொழியை அடுத்து நீதிமன்றம் கொண்டுசெல்லப்பட்ட உண்ணாவிரதிகள் இடைக்கால திருப்தியுடன் மீண்டும் தடுப்புக்காவலுக்கு திரும்பியுள்ளனர். கடந்த தடவை கைதிகளின் உண்ணாவிரதம் தொடர்பாக திமிறிய பல ஊடகங்களும்கூட இம்முறை இடம்பெற்ற கைதிக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.