Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் மாகாண சபைத் தேர்தலும் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள், இன்னாள் தலைவர்கள் சிலர் கையொப்பமிட்டு, பாரதப் பிரமருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தமை அனைவரும் அறிந்ததே! இந்த முயற்சி, 13ஆம் திருத்தத்தை தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடைந்துகொள்வதற்கான தீர்வாக உருவகப்படுத்தப்படுவதைக் கண்டித்து, தமது எதிர்ப்பை வலுவாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்வைத்து வருகிறது. அண்மையில், கூட்டமொன்றில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “தமிழர்களுடைய தீர்வு விடயத்தில், …

  2. தமிழ்த் தேசிய வாக்குகளைக் குறிவைக்கும் பேரினவாதக் கட்சிகள் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜூன் 17 'நித்திரையா தமிழா, நீ நிமிர்ந்து பாரடா, இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு, எழுந்து சேரடா...' என்று ஆரம்பிக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடலொன்றை, ஜனவரி 12, 2018இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டமொன்றில், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒலிபரப்பியது. அந்தப் பாடலின் இறுதி வரிகள், 'தலைவன் எங்கள் தலைவன் உண்டு நிமிர்ந்து பாரடா, தமிழ் ஈழம் எங்கள் கையில் என்று எழுந்து சேரடா...' என்றவாறாக அமைந்திருக்கும். இங்கு தலைவன் எனும் இடம், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் குறிக்கும். அப்போது, இலங்கையின் ஜனாதிபதியாகவும் சுதந்த…

  3. தமிழ்த் தேசிய விடுதலை அரசியலே தமிழ் மக்களுக்கு விடிவைத் தரும் . புதுக்காலனிய ஆதிக்கம் பொருளாதாரச் சுரண்டலையே இலக்காகக் கொண்டிருக்கிறது. அதன் விரிந்த செயல்பாடுகளை இந்த சிறிய தொகுப்புகளுக்குள் காண்பது இயலாது. சுரண்டலைப் பற்றிய அடிப்படைகளை கோடிட்டு மட்டுமே காட்ட இயலும். இன்று பொருளாதார அரங்கில் காணப்படும் இந்த கொடூரச் சுரண்டல் முறை சோசலிச முகாமின் வீழ்ச்சியால் மக்களுக்கு ஏற்பட்ட துயரம் என்று சொல்லலாம். இந்திய அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்காகவும், இந்திய முதலாளிகளின் தேவைக்காகவும் தமிழ் மக்களின் வாழ்வாதாரமான நிலங்களை 'வளர்ச்சி' என்ற பெயரில் பறித்து வருகின்றது. கெயில், எட்டுவழிச்சாலை, ஹைட்ரோ கார்பன், துறைமுகங்கள், விமான நிலையங்கள் விரிவாக்கம், மின்பாத…

  4. தமிழ்த் தேசிய வெளியின் புலமைத்துவ வீழ்ச்சி புருஜோத்தமன் தங்கமயில் தமிழ் அரசியல், சமூக மற்றும் புலமைத்துவப் பரப்பு கடந்த சில ஆண்டுகளாக எந்தவிதமான நம்பிக்கையான முயற்சிகளையோ மாற்றங்களையோ காட்டாமல் வெறுமையால் நிரம்பியிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் முடிவுகளில் இருந்து சற்று வேகமாகவே மீண்டெழுவது தொடர்பிலான ஆக்ரோசத்தை தமிழ்ச் சமூகம் வெளிக்காட்டினாலும், அதனை நெறிப்படுத்தி முன்னோக்கி நகர்த்த வேண்டிய அரசியல் தரப்புக்களும், புலமைத்துவ பீடங்களும் ஆக்கபூர்வமாக எதனையும் மேற்கொள்ளவில்லை. அதனால், தமிழ்ச் சமூகம் பிளவுண்டது மாத்திரமன்றி, தவறான பக்கங்களை நோக்கிய விரைவாக ஓடத் தொடங்கியிருக்கின்றது. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தரப்பாக தமிழ் மக்கள் …

  5. பொறுப்பின்மையின் உச்சமான நிலை By Digital Desk 5 06 Nov, 2022 | 03:23 PM சி.அ.யோதிலிங்கம் அரசியல் யாப்பின் 22ஆவது திருத்தம் 21ஆவது திருத்தம் என்ற பெயரில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. எதிர்க்கட்சிகளும் , மொட்டுக் கட்சியின் பெரும்பான்மையும் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. தமிழ்த் தேசியக் கட்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பான்மை ஆதரவாக வாக்களித்துள்ளது. ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற நிலையைத் தான் பாராளுமன்றத்தில் எடுக்க முடியும் நடுநிலை என்றதொரு நிலைப்பாட்டை எடுக்க முடியாதென தமிழ் மக்களுக்கு வகுப்பெடுத்த சுமந்திரன் நடுநிலை என்ற தீர்மானத்தை எடுத்திருக்கின்றார்.…

  6. தமிழ்த் தேசியக் கட்சிகள் ‘மீண்டும்’ ஒன்றிணைய வேண்டும் என்.கே. அஷோக்பரன் / 2019 டிசெம்பர் 16 இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் உருவாக்கம், மிக முக்கியமானதொரு மைல்கல்லாகும். 1971-1972இல், தமிழ் மக்களின் எந்தவொரு கருத்துகளும் உள்ளடக்கப்படாமலும் தமிழ் மக்களின் பங்களிப்பு இல்லாமலும், அதைவிடவும் இந்திய வம்சாவளி மக்களின் பிரதிநிதிகள் இல்லாமலும், சிறிமாவோ மற்றும் அவரது தோழர்களின் அரசாங்கத்தில், நாடாளுமன்றத்துக்கு வௌியில் அரசமைப்புப் பேரவை கூட்டப்பட்டது. இதன்போது, இலங்கையின் முதலாவது குடியரசு அரசமைப்பு நிறைவேற்றப்பட்டு, 1972இல் நடைமுறைக்கு வந்தது. முற்றாகச் சிறுபான்மையினரை, குறிப்பாகத் தமிழ் மக்களைப் புறக்கணித்து, அவர்களது அ…

  7. தமிழ்தேசியகூட்டமைபிடம் சில கேள்விகள்!!!!!! JULY 25, 2015 4:42 PM தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சிலகேள்விகள்!!!Kailayapillai jeyakanthan 1.தமிழ்மக்களிற்கு எதிராக சிங்களவர்களால் கடந்த 60 ஆண்டுகாலத்திற்கு மேலாக நடத்தப்பட்டு வருவது இனச்சுத்திகரிப்பு என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?முன்பு ஒருபேட்டியில் அதை நிரூபிப்பது கடினம் என்று(சுமத்திரன்) கூறியிருந்தீர்கள்.இப்பொழுதும் அந்தநிலைப்பாட்டில்தான் இருக்கிறீர்களா?2.ஒற்றையாட்சியின் கீழ் முழுமையான சுயநிர்ணயஉரிமை சாத்தியமா? உதாரணம் தர முடியுமா?(கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுயநிர்ணயஉரிமை என்ற சொல் கட்டாயம் வாக்குகளுக்காகஉள்நுழைக்கப்படும்). 3.ஒன்று பட்ட ஐக்கிய இலங்கை என்பதற்கும்ஒற்றையாட்சி என்பதற்கும் இடையே உள்ள வித்தியாசம்என்…

  8. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்தபோது அது பற்றி நாமும் பேசலாமே பேசவேண்டியுள்ளதே என்று தோன்றியது. உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். நான் தான் ஆரம்பிக்கணும். ஆனால் கருத்து திசை மாறிவிடக்கூடாது என்பதால் பின்னர் பதிகின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார்?

  9. [size=5]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உட்சண்டை- கொள்கைக்காகவா? கதிரைக்காகவா?[/size] முத்துக்குமார் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உட்பிரச்சினை இன்று சந்திக்கு வந்துவிட்டது. கிழக்கு மாகாணசபை தேர்தலுக்கு பின்னர் இது சந்திக்கு வருமென்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். தமிழரசுக்கட்சி அல்லாத ஏனைய கட்சி உறுப்பினர்கள் பலர் அதனை ஏற்கனவே கூறியிருந்தனர். தங்களினால் தேர்தலுக்கு நெருக்கடி வரக்கூடாது என்பதற்காக அவர்கள் பொறுமை காத்தனர். தேர்தல் வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும்போது ஏனைய கட்சிகளின் சுயமரியாதையைக்கூட கவனத்தில் எடுக்காமல் தமிழரசுக்கட்சி உதாசீனம் செய்தமை, சகித்துக் கொள்ள முடியாததே! இதனால் இந்தப் பிரச்சினையை சந்திக்கு கொண்டு வருவதைத் தவிர வேறு தெரிவு ஏனைய கட்சிகளுக்கு இர…

  10. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம்? வாழ்வா …. சாவா…. “அரசாங்கத்துக்கு பல பிரச்சினைகள் உண்டு. தனியே தமிழ் மக்களின் பிரச்சினையை மட்டும் அது பார்க்கவில்லை. நாடு முழுவதிலுள்ள பல பிரச்சினைகளுக்கு அது முகம் கொடுக்க வேண்டியுள்ளது. ஆகவே அதற்குக் கால அவகாசம் கொடுக்க வேணும். நாங்கள் அதை அவசரப்படுத்த முடியாது. அவர்கள் நிச்சயமாக இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கிருக்கிறது. உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களுக்குச் சாதகமாக அமையும் என நம்புகிறேன் “நாங்கள் அரசாங்கத்தை நம்புகிறோம்” என்றெல்லாம் அரசாங்கத்தின் மீதான தன்னுடைய அபரிதமான நம்பிக்கையைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்…

  11. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதைக்கூறி மக்களிடம் வாக்கு கேட்கப் போகிறது? தமி­ழர்­க­ளுக்­கான அர­சியல் தீர்­வையும் அதி­காரப் பகிர்­வையும் எட்­டாத தூரத்­துக்கு தூக்­கி­யெ­றிந்து விட்­டது போல் அண்­மைக்­கால அர­சியல் சம்­ப­வங்கள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. உயிர்த்த ஞாயி­று­தின பயங்­க­ர­வாத சம்­பவம், எதி­ர­ணியைச் சேர்ந்த ஒரு­வரை ஜனா­தி­பதி பிர­த­ம­ராக்­கிய ஜன­நா­யக சீர்­கேடு, இரு தேசியக் கட்­சிகள் ஒன்று இணைந்து உரு­வாக்­கிய தேசிய அர­சாங்கம் உருக்­கு­லைந்து போனமை, ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இடை­யி­லான தொடர்ச்­சி­யான முரண்­பா­டுகள், முஸ்லிம் அமைச்­சர்கள் ஒரு­சேர பதவி வில­கி­யமை போன்ற பல்­வேறு அசா­தா­ரண சம்­ப­வங்கள் குறித்த சில காலங்­க­ளுக்குள் நடந்து முடிந்­து…

  12. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்யப்போகிறது? http://epaper.virakesari.lk/

  13. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு உருவாக்கப்பட்டது? செய்தியாளனின் நேரடிச் சாட்சியம் அ.நிக்ஸன் சந்திரிகாவின் ஆட்சியில் 1999. 2000 ஆம் ஆண்டுகளில் நான் வீரகேசரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஈபிஆர்எல்எப் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன். ரெலோ இயக்க முதல்வர் சிறிகாந்தா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தாத்தன். ஈபிடிபி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் உப தலைவர் ஆனந்த சங்கரி ஆகியோரை நேர்காணல் செய்து தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் எழுதினேன். அதே காலப்பகுதியில் தினக்குரல் பத்திரிகையில் ரவிவர்மன் என்ற செய்தியாளர் இவர்களைத் தொடர்ச்சியாகப் பேட்டி கண்டு எழுதினார். விடுதலைப் புலிகளை விமர்சிப்பதைவிட சந்திரிகா ஆட்சியின் ஏமாற்றுக்களையே இவர்கள் தமது நேர…

  14. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடுமாறுவதும் தடம் புரள்வதும் தமிழினத்தை அழிவிக்கு அழைத்துச் செல்லும் திங்கட்கிழமை, 11 ஜூலை 2011 06:04 வெண்ணை திரண்டு வருகையில் தாலி உடைந்தால் ஆபத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடுமாறுவதும் தடம் புரள்வதும் தமிழினத்தை அழிவிக்கு அழைத்துச் செல்வதோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலத்தையும் ஏக்க நிலைக்கு தள்ளி விடும். ஈழத் தமிழினத்தால் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதை ஒட்டி மாறுபட்ட கருத்தில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழத் தமிழ் மக்கள் எதிர் நோக்குகின்ற பேரழிவைத் தடுக்க முடியுமா என்பது பெரும் கேள்வி எனினும் இன்றைய சூழ்நிலையில் எமக்கு வேறு மாற்று இயக்கமில்லை. விலை போவதற்கென்றே …

  15. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனை எதிர்ப்போரும் - செய்ய வேண்டியது என்ன? யதீந்திரா இதுவரை சம்பந்தன் தொடர்பில் பேசப்பட்டு வந்த விடயங்கள் அனைத்தும் இவ்வாண்டில் கூட்டமைப்பின் விடயங்களாக உருமாறவுள்ளன. தொடர்ந்தும் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் என்னும் பெயர்களை முன்னிறுத்தி விவாதங்கள் செய்துகொண்டிருக்க முடியாது. அது ஆரோக்கியமான ஒன்றுமல்ல. இதுவரை சம்பந்தன் மற்றும் சுமந்திரன் தொடர்பில் முன்வைக்கப்பட்டுவந்த குற்றச்சாட்டுக்கள், அவர்கள்தான் சகல விடயங்களையும் கையாளுகின்றனர்- எனவே அவர்கள்தான் அனைத்துக்கும் பதில் சொல்ல வேண்டும் என்பதாகவே இருந்தது. ஒரு வகையில் அது சரியாக இருப்பினும் கூட, அவர்களது அனைத்து முன்னெடுப்புக்களும் அதன் இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்ட நி…

  16. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் செல்வரட்னம் சிறிதரன் வடமாகாண சபைக்கான தேர்தலில் வாக்களித்துள்ள மக்கள் பல விடயங்களைச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். அதுகுறித்து அரசியல் விமர்சர்கள், அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அந்த மக்கள் வலியுறுத்தியுள்ள முக்கியமான ஒரு விடயம் உடனடியாகத் தீவிர கவனம் செலுத்த வேண்டிய தேவை இப்போது எழுந்துள்ளது. அரசாங்கம் கூறுகின்ற அல்லது வலியுறுத்துகின்ற அபிவிருத்தியை இலக்காக வைத்து அவர்கள் வாக்களிக்கவில்லை. வீதிகள் போடவேண்டும் என்றோ, பாலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றோ, மேலும் பல பகட்டான வசதிகள் வாய்ப்புக்களை வடபகுதிக்குக் கொண்டு வரவேண்டும் என்றோ அவர்கள் கோரவில்லை. அவர்கள் கேட்…

  17. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதைக்கும் தேவை இலங்கை ஆட்சியாளர்களுக்கு வரவர அதிகரித்துக் கொண்டேபோகிறது. [Tuesday 2014-10-07 21:00] இலங்கை அரசியலில் மஹிந்தராஜபக்ஷவுக்கு ஏனையோருக்கு இல்லாத சில தனித்திறமைகள் உண்டு. ஏனைய கட்சிகளைப் பதவிகளைக் காட்டி உடைத்து சின்னாபின்னப்படுத்துவதிலும் சிறுபான்மை இனங்களின் ஐக்கியத்தைச் சீரழித்து அவற்றைப் பலவீனப்படுத்துவதிலும் அவருக்கு நிகர் அவரே தான். அவ்வகையில் ஐ.தே.கட்சி, ஜே.வி.பி என்பவற்றை உடைத்து அவர்களின் அரசியல் பலத்தை நிர்மூலமாக்கினார். முஸ்லிம் கட்சிகளையும், மலையகத் தலைமைகளையும் ஐக்கியப்பட விடாது தங்களுக்குள்ளேயே மோதவைத்து அனைவரையுமே தனக்கு ஆதரவு தரும் நிலையை ஏற்படுத்தினார். ஆனால் அவரின் இந்தச் சதியை தமிழ் …

  18. தமிழ்த் தேசியத்தின் திரிசங்கு நிலை -ஆர்.ராம்- 2020பொதுத்தேர்தலின் பின்னரான சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டிருந்த சேனாதிராஜா சுமந்திரன் ‘அணி’ முரண்பாடுகளும், அதனால் அக்கட்சியின் தலைவராக இருக்கும் மாவை.சோ.சேனாதிராஜாவுக்கும், சுமந்திரன், சிறிதரன் போன்றவர்களுக்கும் இருந்த ‘அரசியல் உறவில்’ ஏற்பட்ட ‘வெடிப்புக்களும்’ பகிரங்கமானவை. சேனாதிராஜா தேர்தலில் பின்னடைவுகளைச் சந்தித்திருந்த சொற்பகாலத்திலேயே தமிழரசுக்கட்சியின் தலைவர் பாத்திரத்திலிருந்தும் அதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய அரசியலில் இருந்தும் அகற்றப்படவுள்ளரா? என்ற சூழல் ஏற்பட்டிருந்தது. இத்தருணத்தில் ‘வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்று பதிலுரைத்து அவர…

  19. தமிழ்த் தேசியத்தின் புத்துயிர்ப்பும் தமிழ் – முஸ்லிம் உறவும் – பிஸ்மி 2009 மே முள்ளிவாய்க்காலுடன் தனது இறுதி மூச்சினை விட்டு விட்டதாகக் கருதப்பட்ட தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் உறங்கு நிலைக்குச் செல்லுமா அல்லது தன்னை மீள்பரிசீலனைக்கு உள்ளாக்கிக் கொண்டு, புதிய திசையில் அது முன்னோக்கி வீறு நடை போடுமா என்பது இலங்கைச் சமூகங்களின் ஒட்டுமொத்த அரசியல், சமூக விடுதலையை நேசிக்கும் சக்திகளின் எதிர்பார்ப்பாகும். தமிழ்த் தேசியமானது அரசியல், சமூக, பொருளாதார ஒடுக்குமுறையின் எதிர்வினையாற்றல் என்ற வகையில் அது முற்போக்கானது. அது தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைக்கான கூறுகளை மாத்திரமல்ல முழு இலங்கையின் விடுதலைக்குமாறு உட்கூறுகளையும் கொண்டிருந்ததாக மூன்று …

  20. தமிழ்த் தேசியத்துக்கான ஒற்றுமை லக்ஸ்மன் தமிழ்த் தேசியம் பலப்படுதலொன்றே காலத்தின் தேவை என்பதனை உணர்ந்துகொள்ள தலைப்படுதலை முக்கியப்படுத்தல் நடைபெறுவதாகயில்லை. தனிப்பட்ட கோப தாபங்களையும், வெப்புசாரங்களையும் காண்பிப்பதற்கான தருணம் இதுவல்லவென்பதை யாரும் உணரவுமில்லை. தமிழர்களின் தேசியம் என்பது உணர்வு ரீதியானதே! இந்த உணர்வினை சரியாகக் கைக்கொள்ளவும் கையாளவும் தெரியாதவர்களாகவும், அதனைப்பற்றி புரிந்து கொள்ள முயலாதவர்களாகவும் தமிழர்கள் இருக்கிறார்களா என்ற கேள்வியை இந்த இடத்தில் கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த ஜதார்த்தத்தினை உணராது நடந்து கொள்வதுதான் தற்போது தமிழ்த் தேசியம் பற்றிப் பேச முனைபவர்களின் நிலை. தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவு…

  21. தமிழ்த் தேசியத்தை சிதைப்பதற்கான தந்திரோபாயங்கள் என்.கே அஷோக்பரன் தேசம், மற்றும் தேசியம் என்றால் என்ன என்பது மிகப்பெரியதொரு ஆய்வுப்பரப்பு. இவற்றை வரவிலக்கணப்படுத்துவது கூட சுலபமான காரியங்கள் அல்ல. புலமைத்தளத்தில் அகநிலை வரவிலக்கணங்கள், புறநிலை வரவிலக்கணங்கள் என்று பல வரவிலக்கணங்களைப் பலரும் வழங்கியிருக்கிறார்கள். என்னுடைய முன்னைய பல பத்திகளில் இவை பற்றி விரிவாகப் பேசியிருக்கிறேன். அது என்ன புறநிலையில் அணுகும் வரைவிலக்கணம்? தேசம் என்ற சொல்லை வரைவிலக்கணம் செய்த சோவியத் யூனியனின் கொம்யூனிஸ சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலின், “வரலாற்று ரீதியாகக் கட்டமைந்த, பொதுவான மொழி, பொதுவான பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்க்கை, பொதுக் கலாசாரத்தினூடாக வௌிப்படும் பொதுவான உளவியலமைப்பு …

  22. தமிழ்த் தேசியத்தை... நீர்த்துப் போகச் செய்ய, நீலன் திருச்செல்வம் வகுத்த வழியில்... சுமந்திரன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் அணி என வர்ணிக்கப்படும் அணியின் பிதாமகர் காலஞ்சென்ற ஜனாதிபதி சட்டத்தரணி நீலன் திருச்செல்வம் தமிழ்த் தேசிய அடிப்படைகளைப் புறந்தள்ளிவிட்டு, ஒற்றையாட்சிக்குள் 'அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு' என்ற பாதையூடாகத் தமிழ்த் தேசிய அபிலாசைகளைப் பூர்த்திசெய்துவிடலாம் என்ற ஏமாற்று வித்தையாக அவர் உருவாக்கிய ஆபத்தான இணக்க அரசியலின் பிடிக்குள்ளேயே சுமந்திரன் அணி இன்று ஆழமாகச் சிக்கிக்கொண்டுள்ளது. 1985 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியாக இருந்த தமிழரசுக்கட்சியினர் திம்புக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டவர்கள். ஆனால், அவர்களை விடவும் மீளமுடியாத தாழ்ந்த நிலைக்கு…

  23. தமிழ்த் தேசியப் பேரவை ? நிலாந்தன்… November 22, 2020 கடந்த வாரம் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் இருந்து வரும் தமிழ் பத்திரிகைகளில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. கூட்டமைப்பு பல்வேறு விடயங்கள் தொடர்பில் துறைசார் நிபுணர்கள் அடங்கிய குழுக்களை உருவாக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொண்டதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.இவ்வாறு உருவாக்கப்பட்ட நிபுணர் குழுக்களோடு பேசுவதற்கு இந்தியா விருப்பம் கொண்டுள்ளது என்பதே அந்த செய்தியின் சாராம்சம் ஆகும். இச்செய்தியின் உண்மைத் தன்மையை ஆராயும் பொருட்டு சில பத்திரிகை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு கேட்டேன். ஒருவராலும் செய்தியின் மூலத்தை குறிப்பிட முடியவில்லை. இணையத்தில் கண்டெடுத்தது என்று கூறினார்கள்.அதாவ…

  24. தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது? - நிலாந்தன் புதிய உள்ளூராட்சி சபைகளை உருவாக்கும் விடயத்தில் தமிழ்க் கட்சிகளுக்கு இடையே நிகழும் போட்டா போட்டிகளும் உள்ளூராட்சி சபைகளை ஒரு கட்சி கைப்பற்றிய பின் கட்சிகளின் விசுவாசிகள் சமூக வலைத்தளங்களில் மோதிக் கொள்ளும் காட்சிகளும் ஒரு விடயத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன. நடப்பது கட்சிகளுக்கு இடையிலான போட்டிதான். அதாவது தேர்தல்மைய அரசியல் தான். இதில் தேசத்தைத் திரட்டும் அரசியல் அல்லது தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசியல் எங்கே இருக்கிறது? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை ஒப்பீட்டளவில் அதைச் செய்யலாம். அதற்கு மூன்று காரணங்களைக் கூறலாம். முதலாவது காரணம், அது ஒப்பீட்டளவ…

  25. தமிழ்த் தேசியப் பேரியக்கம் – மு.திருநாவுக்கரசு “கட்சி அரசியலை விட்டு எமது தமிழ் மக்கள் பேரவையை ஒரு உண்மையான மக்கள் பேரியக்கமாக மாற்ற உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் மக்களை ஒன்றிணைத்து அரசாங்கத்துடன் எமக்கேற்ற தீர்வு ஒன்றினை முன்வைத்துப் பெற முயற்சிப்பது” என்று தனக்கு இருக்கக்கூடிய நான்கு தெரிவுகளில் நான்காவதாக இத்தெரிவை திரு.விக்னேஸ்வரன் முன்வைத்தார். இதுவே தனது அரசியல் பயணத்திற்கான தெரிவென்றும் பிரகடனப்படுத்தினார். மேற்படி தனது நிலைப்பாட்டை கடந்த வாரம் தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் அதன் இணைத் தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் திரு.விக்னேஸ்வரன் அறிக்கை வாயிலாக தெரிவித்தார். தளபதிகளும், பிரதானிகளும் குதிரை ஏற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.