அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
25 JUN, 2025 | 09:14 AM இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் அண்மைய ஒரு தீர்ப்பில் சுயாதீனமான அரச நிறுவனங்கள் வகிக்க வேண்டிய பாத்திரத்தை எடுத்துக் கூறியிருக்கிறது. இஸ்ரேல், பாலஸ்தீனம் பற்றிய தனது கருத்துக்களை சுவரொட்டி மூலம் வெளிப்படுத்தியமைக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்ட முஹம்மட் லியாவுதீன் முஹம்மட் ருஸ்டியின் வழக்கில் கோட்பாட்டு அடிப்படையிலான தலையீட்டைச் செய்தமைக்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை தேசிய சமாதான பேரவை வெகுவாக மெச்சுகிறது. பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருப்பதனாலும் துஷ்பிரயோகம் செய்யப்படுவதனாலும் தோன்றுகின்ற ஆபத்துக்களை இந்த வழக்கு தெளிவாக வெளிக்காட்டுகிறது. ருஸ்டியின் கைது இன, மத அடிப்படையிலேயே இடம்பெற்றிருக்கிறத…
-
- 0 replies
- 130 views
- 1 follower
-
-
பிரெக்ஸிட்: பின்னணியும் தீர்வுகளும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது இரு தரப்புக்கும் தோல்விதான் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என்று - குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் - பிரிட்டன் மக்கள் எடுத்திருக்கும் இந்த முடிவால் உலகம் முடிவுக்கு வந்துவிடப்போவதில்லை. ஆனால், நாம் என்ன செய்ய வேண்டியிருக்கிறது என்பதை இது காட்டுகிறது. ஐரோப்பாவின் முக்கிய சக்தியாகவும், தாராளவாத ஜனநாயகம், பன்மைத்துவம், சுதந்திரச் சந்தை ஆகியவற்றின் நீண்டகால ஆதரவு சக்தியாகவும் இருக்கும் பிரிட்டன், குடியேற்றம் தொடர்பாக மக்களிடம் ஏற்பட்டிருக்கும் அச்சத்தைத் தங்கள் சுய முன்னேற்றத்துக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட இழிவான …
-
- 0 replies
- 433 views
-
-
கையாள்தல் அரசுறவியல் (Engagement Diplomacy) உலகில் நீண்ட காலமாக இருந்துள்ளது. அமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருந்தபோது அது பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டது. 2008-ம் ஆண்டு பிரித்தானிய வெளியுறவுத்துறை அதற்கு ஒரு கோட்பாட்டு வடிவம் கொடுத்தது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2009இல் அதை தனது வெளியுறவுக் கொள்கையின் முக்கிய பகுதியாக்கினார். முன்னாள் அமெரிக்க அதிபர்களான பில் கிளிண்டனும் பராக் ஒபாமாவும் அமெரிக்காவிற்கு எதிரான ஆட்சியாளர்களுடன் மோதலை தவிர்த்து அவர்களை கையாளுதல் என்பதை தமது வெளியுறவுக் கொள்கையில் பாவித்தனர். அமெரிக்காவிற்கு ஒவ்வாத சர்வாதிகார ஆட்சியாளர்களுடன் முரண்படாமல் “கையாள்தல்” செய்ய வேண்டும் என்பது அவர்களது நோக்கமாக இருந்தது. அமெரிக்காவிற்கு ஒவ்வாத அரசுகளை அயோக்கிய …
-
- 0 replies
- 493 views
-
-
தமிழ்த் தேசிய தேர்தல் களத்தில் ’இரட்டைக் குழல் துப்பாக்கி’ Johnsan Bastiampillai / 2020 ஜூன் 20 இது தேர்தல்க் காலம். தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், எவ்வாறு வாக்குகளை வாரி அள்ளிக் கொள்ளலாம் என்பதிலேயே, கவனம் செலுத்துவார். தேர்தல் அரசியலில், அதுதான் முக்கியமானதும் கூட! கட்சியொன்றிலோ, சுயேட்சையாகவோ தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்யும் முகமாகப் புள்ளடி இடும், வாக்காளர் ஒருவர், அந்த வேட்பாளரைத் தெரிவு செய்வது, அறிந்தவர், தெரிந்தவர், ஊரவர் என்ற முட்டாள்தனமான காரணங்களைத் தவிர்த்து, 'எனதும் எனது சமூகத்தினதும் வாழ்க்கையைச் செழிக்கச் செய்வார்' என்ற எதிர்பார்ப்பாகும். ஒவ்வொரு வாக்காளனும் ஏதோவோர் எதிர்பார்ப்பின் நிமித்தம், தான் சிந்தி…
-
- 1 reply
- 566 views
-
-
தமிழ்த் தேசிய கட்சிகள் கேட்க வேண்டிய குரல்கள் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜூலை 16 அண்மையில், ‘ஈழத்தமிழ் அரசியல்- நேற்று இன்று நாளை’ எனும் தலைப்பில், இணையவழிக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த (கலாநிதி பட்டத்துக்கான ஆய்வு மாணவர்) சட்டத்தரணி சிவகுமார் நவரெத்தினம் முன்வைத்த கருத்துகள், கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாக இருந்தன. அதுவும், தேர்தல் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழர் அரசியல் பரப்பு பெரிதாக கவனத்தில் கொள்ளாத விடயங்கள் பற்றி, தன்னுடைய ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார். அதில் ஒரு பகுதி, பருமட்டாகக் கீழ்கண்டவாறு இருந்தது, “...அம்பாறை மாவட்டத்தில், தமிழ் மக்கள் வாழ்கிறார்கள் என்கிற எ…
-
- 0 replies
- 425 views
-
-
வரம் கொடுப்பாரா பூசாரி? Gavitha / 2020 ஓகஸ்ட் 04 , பி.ப. 01:14 தங்களை, தாங்களே ஆளத் தகுதி உள்ளவர்களின் கூட்டுணர்வையே, தேசியம் அல்லது ஜனநாயகம் என்று அழைக்கிறோம். தேசியம் என்பதற்குள், அனைத்து இன மக்களுக்குமான பொதுவான பிரதேசம், கலாசாரம், பொருளாதாரம், ஆகிய அனைத்தும் உள்ளடக்கப்படுகின்றன. இவை அனைத்தும் நாட்டிலுள்ள அனைத்து இனங்களின் அடையாளமாகும். இந்த இனம் என்று வரும்போது, பொதுவாக மலையகத்தை எடுத்துக்கொண்டால், பெரும்பாலான தமிழர்கள், பெருந்தோட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் ஆகவும் அவர்களைச் சார்ந்தவர்களுமாகவே இருக்கின…
-
- 0 replies
- 673 views
-
-
மெல்ல சாகிறதா பொறிமுறை ? ரொபட் அன்டனி தற்போதைய நிலையில் தென்னிலங்கையில் உருவெடுத்துள்ள அரசியல் அதிகாரப் போராட்டமானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பி நிற்கின்றது. நியாயமான கேள்வியாகவே இது அமைந்துள்ளது. தென்னிலங்கையில் அரசியல்வாதிகளும் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இந்த பொறுப்புக்கூறல் விவகாரத்தை ஒரு சுயலாப அரசியல் கருவியாக பயன்படுத்துவதை காண முடிகிறது. நாட்டில் இடம்பெறும் அரசியல் நகர்வுகள், அரசியல் காய்நகர்த்தல்களை பார்க்கும் போது எங்கே பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி வழங்கும் செயற…
-
- 0 replies
- 305 views
-
-
காணி அதிகாரத்தை வழங்காத அரசு காணித் துண்டுகளை வழங்கப் போகிறதா? – நிலாந்தன் November 21, 2020 நிலாந்தன் சில ஆண்டுகளுக்கு முன் வலிகாமம் பகுதியில் பங்குத் தந்தையாக பணிபுரிந்த ஒரு மதகுரு சொன்னார்….. “யாழ்ப்பாணத்தில் அதிகம் தோட்டக் காணிகளைக் கொண்ட ஒரு பிரதேசம் அது. படைத் தரப்பின் ஆக்கிரமிப்புக்குள் அதிகம் தோட்டக் காணிகளை இழந்த ஒரு பிரதேசமும் அது. அப்பிரதேசத்தில் இப்பொழுது விவசாயம் செய்வது அதிகம் முதியவர்களும் நடுத்தர வயதினரும்தான்” என்று. இளவயதினருக்கு விவசாயத்தில் ஆர்வம் இல்லை. அவர்கள் பெருமளவுக்கு முதலில் படிக்கப் போகிறார்கள். ஆனால் படிப்பையும் முடிப்பதில்லை. இடையில் முறித்துக் கொண்டு லீசிங் கொம்பெனிகளில் வாகனங்களை வாங்கி ஓடுகிறார்கள். எல்லாரும் ஒரேயடியாக ஒ…
-
- 0 replies
- 617 views
-
-
காணி தொடர்பான பிணக்குகளை தீர்த்தாலே இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் -ஜானு முரளிதரன் 47 Views காணி தொடர்பான பிணக்குகளை இலகுவாக தீர்த்துவைப்பதன் ஊடாக இனங்களிடையே சமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் விரைவாக ஏற்படுத்தமுடியும் என சிறந்த எதிர்காலத்திற்கான உள்ளூர் முயற்சிகள் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜானு முரளிதரன் தெரிவித்தார். சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தினை உறுதிசெய்யும் காணி பிணக்குகளுக்கான விசேட மத்தியஸ்த முயற்சிகள் என்னும் தொனிப்பொருளிலான இரண்டுநாள் செயலமர்வு இன்று மட்டக்களப்பில் ஆரம்பமானது. உள்ளூர் முயற்சிகள் அமைப்பின் ஏற்பாட்டில் நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் நிதியுதவியுடன் …
-
- 0 replies
- 534 views
-
-
மீண்டும் கலர் கலராய் தோரணங்கள் வடக்கு வீதியில் சின்ன மேளம் கிழக்கே மேளச் சமா தெற்கே காவடி மேற்கே கச்சான் கடைகளென தேர்தல் திருவிழா அரிதாரம் பூசியவர்களின் அணிவகுப்பு வானத்தை வில்லாய் வளைப்பவர்களாகவும் விடுதலையை வென்று தருபவராகவும் சிலர் ஒருபடி மேலே போய் தாயகத்தை தோண்டி பெருவாழ்வு பெற்றுத் தருவதாகவும் ஆளுக்கொரு மூடையுடன் அவர்கள் மூடைகளின் அளவுகளில் வேறுபாடிருந்தாலும் எல்லாம் புளுகுமூடைகள்தான் தொடுத்த வில்லிற்கும் கொடுத்த விலைக்கும் ஈடுதான் என்ன மாகாண சபைதானா ஆளுனர் தலையசைத்தால்தான் மூத்திரமே பெய்யலாம் கோவணம் இறுக்குவதற்கும் கொழும்பில்தான் அனுமதியாம் போக்கறுந்த சபைக்கு பொலீஸ் அதிகாரமும் இல்லை கந்தறுந்த ஆட்சியால் காணியும் இல்லை நீதிமான் சொல்கிறார் மாகாண சபை மூன்ற…
-
- 2 replies
- 725 views
-
-
கெட்ட சகுனம் - மொஹமட் பாதுஷா கட்டமைக்கப்பட்டதும் உறுதியான பின்புலத்தைக் கொண்டவர்களுமான ஒரு கடும்போக்கு குழுவினரின் இனத்துவ அத்துமீறல்களைச் சொல்லப்போய், அது சகோதர வாஞ்சையுடன் இன்னுமிருக்கின்ற சிங்கள மக்களின் மனங்களின் வேண்டாத வலிகளை ஏற்படுத்தி விடுமோ என்ற நெருடல், இனவாதம் பற்றி ஒவ்வொரு முறை எழுதும் போதும் - வெளியே செல்லும் தந்தை முன்னே ஏக்கத்தோடு நிற்கும் ஒரு குழந்தைபோல - முன்னே வந்து நிற்கின்றது. ஆனாலும், சின்னச் சின்ன சம்பவங்கள்தான் வரலாறுகளாகின்றது. உலகப் போர்களின் வெற்றி என்பது ஆயுதங்களுக்குத்தான் வெற்றியே தவிர, அங்கு ‘மனிதம்’ சொற்ப அளவேனும் வெற்றி பெறவில்லை. இப்படி இன்னும் நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும். …
-
- 0 replies
- 646 views
-
-
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு மனப்போக்கு மாற்றம் Posted on July 12, 2021 by தென்னவள் 41 0 கடந்த வருடம் கொவிட் –19 பெருந்தொற்று நோய் பரவத்தொடங்கிய நேரத்தில் இருந்து இலங்கைக்கு முக்கியமானதும் காலப்பொருத்தமானதுமான உதவிகளையும் ஆதரவையும் வழங்குவதில் சீனா அதிமுன்னணியில் இருந்திருக்கிறது.கடனாகவும் நாணயபரிமாற்றமாகவும் சீனா இலங்கைக்கு 200 கோடிக்கும் அதிகமான டொலர்களை வழங்கியிருக்கிறது ;10 இலட்சத்துக்கும் அதிகமான சினோபார்ம் தடுப்பூசிகளை நன்கொடையாகவும் சுமார் 60 இலட்சம் தடுப்பூசிகளை வேறு வழிகளிலும் இதுவரை காடுத்திருக்கிறது.ஆனால், கடந்த கால மற்றும் தொற்றுநோய்க் கால உதவிகளுக்கு மத்தியிலும், முன்னொருபோதும் இல்லாதவகையில் சீனா இ…
-
- 0 replies
- 394 views
-
-
மோடியின் இலங்கை வருகை: பிராந்திய ஆதிக்க வெளிப்பாடு - கருணாகரன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு வந்து திரும்பி விட்டார். பதவியேற்ற இரண்டு ஆண்டுகளுக்குள், மோடியினுடைய இரண்டாவது இலங்கை விஜயம் இது. முதல் பயணம், 2015இல் நடந்தது. அப்போது அவர், வடக்கே - யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்தார். இப்பொழுது இரண்டாவது பயணத்தில், மத்திய பகுதியான மலையகத்துக்குச் சென்று திரும்பியிருக்கிறார். இரண்டு பயணங்களும், இந்திய நோக்கு நிலையிலும் வரலாற்றின் நிகழ்ச்சிப் போக்கிலும், முக்கியமானவை. மோடியின் முதலாவது இலங்கை விஜயத்தின்போது, தமிழ்நாட்டிலும் ஈழத்தமிழர் வட்டாரங்களிலும், மெல்லிய சலசலப்பு இருந்தது. குறிப்பாக ஈழ ஆதரவுத் தலைவர்களான தொல். …
-
- 0 replies
- 609 views
-
-
புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்காளால் வைக்கப்பட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகளில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணம் என்பது ஒன்று. தமிழ் மக்களுக்கு இவ்விணைப்பு அவசியம்தானா என ஆராய்வதே இப் பந்தியின் நோக்கமாகும். நான் அறிந்தவரையில் தூர நோக்குடன் சிந்தித்த தலைவர்களில் தந்தை செல்வா போல் ஒரு சிறந்த தலைவரை இதுவரையில் தமிழ் தலைவர்களில் நான் காணவில்லை. 1970ம் ஆண்டு தேர்தல் வெற்றியின் பின் கச்சேரியின் முன் பேசும்பொழுது கடவுள்தான் தமிழ் மக்களை காப்பேற்றவேண்டும் என்றார் இதில் எவளவு அர்த்தம் உண்டென்பதை கடந்த 47 வருடங்களாக கண்டுகொண்டிருக்கிறோம். அத்துடன் 1949ம் ஆண்டு இந்திய வம்சாவழியினரின் வாக்குகள் பறிக்கப்பட்டபொழுது இன்று அவர்களுக்கு நடந்தது நாளை நமக்கு என்று கூறியதுடன் தமிழ்மக்களை காப்பேற…
-
- 0 replies
- 420 views
-
-
பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் கலந்துகொண்ட தீர்வு.
-
- 4 replies
- 690 views
-
-
ஜே.வி.பி எனும் இனவாத சக்தி என்.கே. அஷோக்பரன் ராஜபக்ஷர்களுக்கு எதிரான மக்கள் அலை, தினம்தினம் வளர்ந்து கொண்டிருக்கிறது. ராஜபக்ஷர்களுக்கு எதிராக எழுந்திருக்கும் மக்கள் எதிர்ப்பையும் அதிருப்தியையும், தமக்குச் சாதகமாக்க சஜித் பிரேமதாஸவை முன்னிறுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியும், அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி என்ற மக்கள் விடுதலை முன்னணியும் களத்தில் இறங்கியுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி, திக்குத் தெரியாத நடுக்கடலில் சிக்கிய, பல கப்டன்களைக் கொண்ட கப்பலைப் போலத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. தான் ஒரு கட்சியா? அல்லது, கூட்டணியா என்ற குழப்பம், ஐக்கிய மக்கள் சக்திக்கு உள்ள ஆயிரம் பிரச்சினைகளில், ஒரு பிரச்சினையாகக் காணப்படுகின்றது. ஆகவே, பிரதான எதிர்க்கட்சி வலு…
-
- 2 replies
- 537 views
-
-
ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியலமைப்பு திருத்த வரைபு என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபு ஒன்றை, வியாழக்கிழமை (21) சபாநாயகரிடம் கையளித்துள்ளதுடன், அந்த வரைபையும் வௌியிட்டுள்ளது. அரசியலமைப்புக்கான 21ஆவது திருத்த சட்டமூல வரைபாக இது அமைந்துள்ளது. ‘கோ ஹோம் கோட்டா’, ‘கோ ஹோம் ராஜபக்ஷஸ்’ போராட்டங்கள் கடுமையாகியுள்ள நிலையில், இலங்கை அடுத்த கட்டம் நோக்கி நகர்வதற்கும், இலங்கை அரசியல் ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்வதற்குமான முதற்படியாக, அரசியலமைப்பு மாற்றம் அவசியம் என்ற அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தியால் இந்தத் திருத்த வரைபு முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த வரைபின…
-
- 6 replies
- 650 views
-
-
மஹிந்த போய்விட்டார்; இனி சஜித் பொறுப்பேற்க வேண்டும்! புருஜோத்தமன் தங்கமயில் ராஜபக்ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டம் பகுதியளவில் வெற்றிபெற்றுவிட்டது. பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ நீண்ட இழுபறிக்குப் பின்னர் கடந்த திங்கட்கிழமை (09) விலகினார். அவர் பதவி விலகியவுடன் அரசாங்கமும் பதவி இழந்துவிட்டது. ஆனாலும், ஜனாதிபதி பதவியில் இன்னமும் கோட்டாபய ராஜபக்ஷவே இருக்கிறார். ராஜபக்ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டத்தின் பிரதான கோஷமான ‘கோட்டாவை வீட்டுக்கு விரட்டுவோம்’ என்கிற விடயம் இன்னமும் முடிவின்றி தொடர்கின்றது. ராஜபக்ஷர்களை முற்றாக விரட்டும் வரையில், போராட்டங்களை முடித்துக் கொள்ளப் போவதில்லை என்பது தென் இலங்கை மக்கள் எழுச்சியின் செய்தி. ராஜபக்…
-
- 0 replies
- 386 views
-
-
பல்லின தேசியம் இல்லாமையே தீர்வுக்குத்தடை எந்த காரியத்தைச் செய்வதாயினும் எப்படிச் செய்வது? அதற்கு அவசியமானவை என்னென்ன? இடையில் குழம்பினால் எப்படி சரி செய்வது? முழுமையாக நிறைவேற்ற என்ன உபாயங்களைக் கையாள்வது? என்பன பற்றியெல்லாம் முடிவு செய்தே காரியமாற்ற வேண்டும். இதைத்தான் ‘எண்ணித்துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவதென்பது இழுக்கு’ என வள்ளுவர் குறிப்பிடுகிறார். 1949 ஆம் ஆண்டு டி.எஸ்.சேனாநாயக்க கிழக்கில் கல்லோயாத் திட்டத்தை ஆரம்பித்து சிங்கள மக்களைக் குடியேற்றியபோது பின் விளைவைச்சிந்திக்கவில்லை. 1956 ஆம் ஆண்டு எஸ்.டப்ளியு ஆர்.டி. பண்டாரநாயக்க ‘சிங்களம் மட்டும்’ எனும் மொழிச்சட்டத்தைக…
-
- 0 replies
- 334 views
-
-
இந்திய சுதந்திர தினம்: பணக்காரர்கள் பெருகும் நாட்டில், ஏழைகள் துயரப்படுவதன் 'ரகசியம்' என்ன? ஜி எஸ் ராம்மோகன் ஆசிரியர், பிபிசி தெலுங்கு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டுகால பயணத்தைப் பற்றிய பெரும்பாலான பகுப்பாய்வுகள், கடந்த 30 ஆண்டுகளைச் சுற்றியே உள்ளன. இந்தக் காலக்கட்டத்தில் இந்தியா எப்படி அடையாளம் காண முடியாத அளவுக்கு மாற்றமடைந்துள்ளது என்பதை அவை வலியுறுத்துகின்றன. லேண்ட்லைன் இணைப்புக்காக ஒருவர் தனது தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரிடம் எப்படி நடையாக நடக்கவேண்டும், எரிவாயு இணைப்பைப் பெற ஒருவர் எப்படி பல மாதங்கள் காத்…
-
- 0 replies
- 401 views
- 1 follower
-
-
தமிழரசுக் கட்சியின் எதிர்காலம்? October 21, 2022 — கருணாகரன் — “தமிழரசுக் கட்சியின் எதிர்காலம் எப்படியிருக்கும்?” -இந்தக் கேள்வி இப்பொழுது பலமாக எழுந்துள்ளது. இதற்குச் சில காரணங்களுண்டு. அதனால் தமிழ் மக்களுக்கான நிகழ்கால– எதிர்கால அரசியலை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லக் கூடிய கொள்கையும் திறனும் அர்ப்பணிப்பும் உண்டா? என்ற சந்தேகம் எழுந்துள்ளமையாகும். முன்பும் சரி, இப்பொழுதும் சரி தமிழரசுக் கட்சியினால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் எதற்கும் தீர்வைக் காண முடிந்ததில்லை. (அப்படி ஏதாவது ஒரு விடயத்தில் அது தீர்வைக் கண்டிருந்தால் அதை யாரும் குறிப்பிடலாம்). ஒரு நீண்டகால அரசியற் கட்சி என்ற வகையிலும் அதிகமான காலம் தமிழ் மக்களுடைய ஆதரவைப…
-
- 0 replies
- 370 views
-
-
புதிய சட்டங்கள் தேவையானவை தானா? கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான நேரடியான கவனம் குறைவடையத் தொடங்கியிருக்கிறது. வெவ்வேறு பிரச்சினைகள் பற்றி, இப்போது கவனம் எழத் தொடங்கியிருக்கிறது. இன்னும் சில வாரங்களில், இப்பிரச்சினை முழுமையாக மறக்க, மறைக்கப்படலாம். இது, கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு மாத்திரம் தனியான ஒன்று கிடையாது. கடந்தாண்டில், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மீதும் பள்ளிவாசல்கள் மீதும், தாக்குதல்கள் பல மேற்கொள்ளப்பட்டன. கண்டியைப் போல, குறிப்பிட்ட ஒரு சில நாட்களுக்குள் நடத்தப்படாமல், தொடர்ச்சியாகச் சில வாரங்களுக்கு, ஆங்காங்கே நடத்தப்பட்டன. உடனடியான கோபம் காணப்பட்டது. ஆனால், பின்னர் அவை மறக்கப்பட்டன. …
-
- 0 replies
- 325 views
-
-
அன்றைய ஜே.ஆர்.- ராஜிவ் ஒப்பந்தமும் இன்றைய ரணில்- சம்பந்தன் ஒப்பந்தமும்!! கரலியத்தை கிராமத்தைச் சேர்ந்த சாலிஸ் முதலாளி அந்தக் கிராமத்துக்கே தலைவர் போன்றவர். பாதிக் கிராமத்துக் குச் சொந்தக்காரர். இறப்பர், தேயிலை, தேக்கு, தென்னந்தோட்டங்களுக்கும், பல ஏக்கர் வயல்நிலத்துக்கும் சொந்தக்காரர். இவைகள் அனைத்தையும் தனித்து பாதுகாப்பது சிரமமென உணர்ந்த சாலிஸ் முதலாளி, அண்டைக் கிராமங்கள் சிலவற்றிலிருந்து தொழிலாளர்களைக் குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கமர்த்தி தமது தோட்டங்களைப் பராமரிப்பித்து வந்தார். தமது தோட்டங்களிலேய…
-
- 0 replies
- 390 views
-
-
விக்னேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார்? சி.அ.யோதிலிங்கம் மாகாணசபைத் தேர்தல்களை அரசாங்கம் இந்த வருடம் நடாத்துமோ என்னவோ தமிழ் அரசியலில் அதற்கான பரபரப்பு ஆரம்பித்துவிட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தீர்மானம் எடுக்கும் சக்திகளாக உள்ள சம்பந்தனோ, சுமந்திரனோ புலிகளை ஏற்றவர்கள் அல்லர். புலிகள் அழிக்கப்பட்ட போது சுமந்திரன் அதனை இயற்கை நீதி என்றார். இன்று தேர்தல் பயத்தில் தமிழரசுக்கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் புலிகளைத் தலையில் தூக்கத் தொடங்கியுள்ளனர். வடமராட்சியில் இடம்பெற்ற மே தினத்தில் புலிகளின் எழுச்சிப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. முக்கியஸ்தர்கள் பலர் புலிகளின் சிவப்பு, மஞ்சள் சால்வையை அணிந்திருந்தனர். எல்லாவற்றிற்கும் விக்னேஸ்வரன் கொடுத்த அதிர்ச்சி வ…
-
- 0 replies
- 535 views
-
-
இலங்கை கடன் மறுசீரமைப்பு: இந்தியா ஆர்வம் காட்டும்போது சீனா பின்தங்க காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 2 பிப்ரவரி 2023, 11:22 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் அமெரிக்க டாலரை வழங்க தயாராகவுள்ள பின்னணியில், அதற்கு ஆதரவு வழங்க சீனா முன்வந்துள்ள போதிலும், சீனாவின் ஆதரவு போதுமானதாக இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் இதனைக் குறிப்பிட்டுள்ள…
-
- 2 replies
- 751 views
- 1 follower
-