Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஜெனீவாவும் நிலைமாறுகால நீதியும் தமிழர் அரசியலும் -என்.கே. அஷோக்பரன் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில், இலங்கை தொடர்பான தனது அறிக்கையை சமர்ப்பித்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிஷேல் பச்சலட், “உள்நாட்டு யுத்தம் முடிந்து, 12 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது உறுதிப்படுத்தப்படவில்லை. கடந்த காலங்களில் நிலவிய அதே அடக்குமுறை, துன்புறுத்தல் போன்றவை தொடர்கின்றன” என்று குறிப்பிட்டிருந்தமை முக்கியத்துவம் பெற்றிருந்தது. இதற்குப் பதிலளித்திருந்த இலங்கையின் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, “உயர்ஸ்தானிகரின் அறிக்கையை இலங்கை அரசு நிராகரிக்கிறது. உறுப்பு…

    • 0 replies
    • 404 views
  2. தேர்தலைக் குறித்துச் சிந்திப்பது எப்படி? - ராஜன் குறை March 28, 2021 தமிழகம் தேர்தல் பிரச்சார அனலில் மூழ்கியிருக்கும்போது, மார்ச் 2021 இறுதி வாரத்தில் இந்தக் கட்டுரையைத் தமிழினிக்காக எழுதுகிறேன். ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல். இதில் என்னுடைய அரசியல் சார்புகள் குறித்தும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும் எழுதப்போவதில்லை. அவற்றை மின்னம்பலம் வலைத்தளத்தில் வாராவாரம் திங்களன்று எழுதி வருகிறேன். அவற்றில் பல கட்டுரைகளை தி.மு.க நாளேடான முரசொலி மறுபிரசுரம் செய்து என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. அதனால் என் தேர்வினைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு கட்டுரைக்குள் சென்றுவிடுகிறேன். இந்தியத் தேசம் பார்ப்பனீய இந்து அடையாளத்தின் பேரில் கட்டமைக்கப்படுவதை நான் எதிர்க்க…

  3. முள்ளிவாய்க்காலும் காசாவும் கற்றுத்தரும் பாடங்கள் புருஜோத்தமன் தங்கமயில் இஸ்‌ரேலும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கமும், கடந்த சில நாள்களாக ஆயுத முனையில் மீண்டும் பொருதிக் கொண்டிருக்கின்றன. இஸ்‌ரேலை நோக்கி, ஹமாஸ் இயக்கம் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, பலஸ்தீனத்தின் காசாப் பகுதியை இடைவிடாது இஸ்‌ரேல் தாக்கி வருகின்றது. ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதல்களில் இதுவரை 10 இஸ்‌ரேலியர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இஸ்‌ரேலிய தாக்குதல்களில் காசாப் பகுதியில், 200க்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இஸ்‌ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்துக்குமான இந்த மோதல்களின் ஆரம்பம், மேற்குக் கரையின் ஜெருசலேமிலுள்ள பலஸ்தீனியர்களின் பிரதான பள்ளிவாசலில், ந…

  4. தமிழ் மொழிச் சமூகங்களைப் பலி எடுக்கும் பிரித்தாளும் தந்திரம் ‘பிரித்தாளும் தந்திரத்தில் பிரித்தானியர்களுக்கு நிகரில்லை’ என்று சொல்வார்கள். ஆனால், அவர்களையும் விடச் சிங்கள அரசியல் தலைமைகள் நிபுணத்துவம் மிக்கவை என்பது இலங்கையின் அண்மைய வரலாறு. இதற்கு மிக எளிய உதாரணம், 1970 கள் வரையில் இணக்கமாக, ஒருமுகப்பட்டிருந்த இலங்கையின் சிறுபான்மையினங்கள், இப்போது மிக ஆழமாகப் பிளவு படுத்தப்பட்டுள்ளன. அகரீதியாகவும் புறரீதியாகவும் இந்தப் பிளவு மிக ஆழமாகச் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிளவை, முரண்நிலையை, பகையை, மிக நுட்பமாக உருவாக்கி, அதை வலுவாக்கியிருக்கிறது சிங்களத்தரப்பு. இனி எப்போதுமே இணைந்து கொள்ள முடியாது என்ற அளவுக்கு இன்று த…

  5. சீனா ஒரு பெரும் விளையாட்டுக்குரிய துருப்புச்சீட்டாக இலங்கையைப் பயன்படுத்தியுள்ளது - இந்திய அதிகாரி கடும் சாடல் By T YUWARAJ 30 AUG, 2022 | 06:20 AM (நா.தனுஜா) சீனா ஒரு பெரும் விளையாட்டுக்குரிய துருப்புச்சீட்டாக இலங்கையைப் பயன்படுத்தியிருக்கின்றது. கடந்த சில வருடங்களாக சீனாவினால் பின்பற்றப்பட்டுவந்த கொள்கையே இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது என்று இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்புப் பிரதி ஆலோசகர் பங்கச் ஷரன் கடுமையாக சாடியுள்ளார். அண்மைக்கால இராஜதந்திர விவகாரங்களை அடிப்படையாகக்கொண்டு கடந்த வார இறுதியில் மிகவும் காட்டமான கட்டுரையொன்றை வெளியிட்டிருந்த இலங்கை…

  6. ரஷ்ய இராஜதந்திரிகள் வெளியேற்றம்: மேற்குலகின் இயலாமை உலக அரசியல் நடப்புகள் பலவற்றுக்கு, தர்க்கரீதியான விளக்கங்கள் இல்லை. அதையும் மீறிச் சொல்லப்படும் விளக்கங்கள், தர்க்கரீதியானவை அல்ல. அத்தகைய விளக்கங்கள் சொல்லப்படுவதைவிட, சொல்லாமல் விடுவது அதிகம். தற்போதைய உலக அரசியலில், அரசியல் நடத்தை என்பது, வலிமையால் தன்னை நிலைநிறுத்த முனைவது. வலிமையால் நிறுவமுடியாத போது, அவதூறும் பொய்யும் புனைகதையும் உண்மைகள் போல் சொல்லப்படுகின்றன. இதனாலேயே ‘பொய்ச் செய்தி’களின் காலத்தில், நாம் வாழத் தலைப்பட்டிருக்கிறோம். ரஷ்ய இராஜதந்திரிகளை, பல்வேறு மேற்குலக நாடுகள் வெளியேற்றியுள்ள நிலையில்,…

  7. தொடர்ந்தும் மறுக்கப்படும் நீதி யுத்த மோதல்கள் இடம்­பெற்ற காலத்தில் மிக மோச­மான அடக்­கு­மு­றை­க­ளுக்கும் நெருக்­கு­தல்­க­ளுக்கும் ஆளா­கி­யி­ருந்த பத்­தி­ரிகை சுதந்­திரம் இப்­போது முன்­னேற்றம் அடைந்­தி­ருக்­கின்­றது. இதனை எவரும் மறுக்க முடி­யாது. அதே­வேளை யுத்­தத்தின் பின்னர் நிலை­மாறு கால நீதி பற்றிப் பேசப்­ப­டு­கின்ற சூழலில் இது போதியளவில் முன்­னேற்றம் அடை­ய­வில்லை என்­ப­தையும் மறுக்க முடி­யாது. இலங்­கையின் பத்­தி­ரிகை சுதந்­திரம் முன்­னைய ஆண்­டிலும் பார்க்க சிறிது முன்­னே­றி­யி­ருக்­கின்­றது என்­பதை ஆர்.எஸ்.எப். என்ற அமைப்பு அகில உல­க­ளா­விய தனது ஊடக சுதந்­திர நிலைமை குறித்த வரு­டாந்த மதிப்­பீட்டு அறிக்­கையில் குறிப்­பிட்­டி­ருக்­கின்­றது. ஊடக…

  8. மாகாணசபைத் தேர்தல்: புதிய அரசியல் தடத்தைப் பதியுமா? -க. அகரன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தாக்கத்தில் இருந்து, மீள்வதற்குள்ளாகவே மாகாணசபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்குள் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கில், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாகத் தம்மைக் கருதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், பின்னடைவைச் சந்தித்தமையை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதற்கான காரணங்களைத் தேடிய அலைச்சலை, முடிவுக்குக் கொண்டு வந்ததாகத் தெரியவில்லை. கொழும்பில் நடைபெற்று முடிந்த, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் காரசாரமான வாதப்பி…

  9. 48 ஆண்டுகளின் பின்னரும் நீக்கப்படாத பயங்கரவாதத் தடைச்சட்டம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் இலங்கையில் இன்னமும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஈழத் தமிழர்கள் கீழ்த்தரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தமிழ் சிறுபான்மை மக்களையே பயங்கரவாதத் தடைச்சட்டம் பாதிப்பதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் ஆராய்ந்த ஐ.நாவின் விசேட நிபுணர் பென் எமர்சன் கூறியுள்ளார். இன்றுடன் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு 48 ஆண்டுகள் ஆகின…

  10. மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் கருத்தில் கொள்வதாக இல்லை. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி ஆட்சியை கைப்பற்றுவது பேன்ற விடயங்களில் மாத்திரமே கவனம் செலுத்துப்படுகின்றது. அபிவிருத்தி என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறுகின்றார். ஆனால், பெருந்தெருக்கள், அதிவேகச் சாலைகள், துறைமுக நகரம் என்ற பெரிய வேலைத் திட்டங்களை நோக்கியதாகவே அபிவிருத்தி காணப்படுகின்றது. சாதாரண மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. கட்சிகளின் சந்திப்புகள் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தினமும் சந்தித்து உரையாடுகின்றன. தங்கள் பலத்தை எப்படி …

  11. மஹிந்த தோற்றால், அடுத்து என்ன? சிறிசேனவின் Plan - B Editorial / 2018 நவம்பர் 06 செவ்வாய்க்கிழமை, மு.ப. 04:15 Comments - 0 - முகம்மது தம்பி மரைக்கார் பூனைகளை விடவும் சிங்கங்கள் பலம் மிக்கவை என்று சொன்னால், அதை எலிகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, ஒரு பழமொழி உள்ளது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பத்தை, ஒவ்வொருவரும் தத்தமது அறிவுக்கும் அனுபவத்துக்கும் ஏற்பவே விளங்கி வைத்துக் கொண்டு, வியாக்கியானம் செய்து வருகின்றனர். சிலவேளைகளில், உண்மை நிலைவரம் இவற்றுக்கு அப்பாலும் இருக்கக் கூடும். மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமித்தமை ஜனாநாயக மீறலாகும் என்று, சிலர் வாதிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், அரசமைப்புக்கு இணங்கவே அதைச் செய்தத…

  12. TO MY DEAREST J.V.P COMRADE - V.I.S.JAYAPALAN POET அன்புகுரிய ஜெ.வி.பி தோழர்களுக்கு. - - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன். . எனது ஜெ.வி.பி தோழர்களிடம் ஒரு தாழ்மையான விண்ணப்பம். ஜனநாயகத்தைக் காப்பாற்ற தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றுங்கள். அரசியல் கைதிகளின் விடுதலைக்கான எங்கள் இணைந்த போராட்டமின்றி ஜனநாயகத்துக்கு எந்த அர்த்தமுமில்லை. . நாங்கள் வெற்றியே பெறுவோம்.

    • 0 replies
    • 516 views
  13. தமிழ்க் கட்சிகளுக்கு ஆதாயம்; தமிழ் மக்களுக்குச் சேதாரம் Editorial / 2019 மார்ச் 28 வியாழக்கிழமை, பி.ப. 06:03 Comments - 0 -இலட்சுமணன் போட்டிபோட்டுக் கொண்டு அலைபேசிக் கம்பனிகள் வெகுமதிகளை அறிவித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால், அநேக மக்கள் அது குறித்து ஆர்வம் இல்லாது இருக்கின்றார்கள். அதைப்போலத்தான் சேதாரங்களை நினைத்தே, அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கும் நிலைப்பாட்டில் தமிழ் மக்களின் இருக்கிறார்கள். பொதுவாகவே, அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்பதில் நாம் எல்லோரும் கெட்டிக்காரர்கள்தான். ஆனால், பதில்களைக் கண்டுபிடிப்பதில்தான் சிரமங்களை எதிர் கொள்கிறோம். தமிழ் மக்களின் அரசியலில், பொதுவானதும் முக்கியமானதுமான பிரச்சினைகளிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப…

  14. தள்ளிப்போகும் ஜனநாயகத் திருவிழா முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஏப்ரல் 23 செவ்வாய்க்கிழமை, மு.ப. 11:50Comments - 0 “தேர்தல் என்பது, ஜனநாயகத்தின் திருவிழாவாகும். ஜனநாயகத்தினுடைய பாதுகாப்பு அரணாகவும் தேர்தல்கள் உள்ளன” என்கிறார், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க. ஆனால், இந்தத் திருவிழாவுக்குச் செல்ல, அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகள் பலரும் அஞ்சுகின்றனர். திருவிழாவில், தாங்கள் ‘தொலைந்து’ போய் விடுவோமோ என்பதுதான், அந்தப் பயத்துக்கான காரணமாகும். இருந்த போதும், இந்த வருடத்தில் ஏதாவதொரு தேர்தல் நடப்பதற்கு, அதிகபட்ச சாத்தியமுள்ளதாகக் கூறப்படுகிறது. அது ஜனாதிபதித் தேர்தலா, மாகாண சபைத் தேர்தலா என்பதுதான், இ…

  15. ஈரான் மீதான தடையும் இலங்கையில் ஏற்படும் பாதிப்புகளும் ஈரானிற்கும் அமெரிக்காவிற்குமிடையே தீவிரமடையும் இராஜதந்திரப் போர், இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும்பாதிப்பினை ஏற்படுத்தப் போகிறது. சர்வதேச அளவில் இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணைக்கான அழுத்தங்கள் அதிகரிக்கும் அதேவேளை, மத்திய கிழக்கு நெருக்கடியும் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவும் இலங்கையின் திறைசேரியை ஆட்டம் காண வைக்கிறது. இந்த வாரம், அனைத்துலக குற்றவியல் நீதித்துறை மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி ஸ்டீபன் ராப் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அத்தோடு மத்திய மற்றும் தெற்காசிய பிராந்தியத்திற்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உதவிச் செயலாளர் றொபேர்ட…

  16. ஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரும் என்.கே. அஷோக்பரன் / 2019 ஓகஸ்ட் 19 திங்கட்கிழமை, பி.ப. 01:14 அடுத்த ஜனாதிபதித் தேர்தல் களம், சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. சில நாள்களுக்கு முன்பு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது பெரும் மாநாட்டில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில், ஜனாதிபதி வேட்பாளராகத் தன்னுடைய தம்பியும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்‌ஷ களம் காண்பார் என்று, மஹிந்த ராஜபக்‌ஷ அறிவித்திருந்தார். இது, பலரும் எதிர்பார்த்த அறிவிப்புத்தான். ராஜபக்‌ஷ குடும்பத்தைத் தாண்டி, வேறு நபரைத் தெரிவு செய்வதில், ராஜபக்‌ஷ குடும்பம் தயாராகவில்லை என்பதை, இது சுட்டி நிற்பதையும் நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. மறுபுறத்தில், ஐக…

  17. நடராஜா ஜனகன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகப்போகிறது. முன்னைய ஆட்சியாளர்கள் செய்த ஊழல் மோசடிகள், வீண் விரயம் போன்றவற்றை வெளிக்கொணர்வதில் புதிய அரசாங்கம் காட்டி வரும் வேகமான செயற்பாடுகள் நிச்சயம் பாராட்டப்படக்கூடிய நிலையிலேயே காணப்படுகின்றன . இந்நிலையில், தற்போது பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட இருக்கிறது. இதேபோன்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அவர்களின் அரசியல் உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் திருப்தி தரும் நிலையில் காணப்படவில்லை. தமிழ் பகுதிகளில் பொருளாதார நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பில் புதிய ஆட்சியாளர் காட்டி வரும் அக்கறை குறிப்பாக பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனத்தை மீள ஆரம்பிக்கும் முயற…

  18. -ஐ.வி.மகாசேனன்- “நாம் வரலாற்றை மாற்ற முடியும். ஆனால் புவியியலை மாற்ற முடியாது. நம் நண்பர்களை மாற்ற முடியும். ஆனால் நம் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது” -அடல் பிஹாரி வாஜ்பாய்- இலங்கை அரசியலிலும், ஈழத்தமிழரசியலிலும் இந்தியா தவிர்க்க முடியாததொரு காரணியாகும். தனிப்பட்ட விருப்பு – வெறுப்புக்கள் ஒவ்வொருவரிடமும் காணப்படினும், பிராந்திய அரசாக இந்தியாவின் தாக்கம் இலங்கை அரசியலிலும் ஈழத்தமிழர் உரிமைப் போராட்டத்திலும் ஆழமான கவனத்தை பெற்றுள்ளது. இந்தப் பின்னணியிலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இலங்கைக்கான விஜயம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. எனினும் இந்தியப் பிரதமரின் விஜயம் வரலாற்றை திசைதிருப்பியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. குறிப்பாக இலங்கை -இந்திய பண்பாட்டு உறவ…

  19. ‘விபசாரம்’ செய்ய ஒப்பானதான ‘தமிழரசுக் கட்சி’ முருகானந்தம் தவம் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலையடுத்து, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கத் தமிழ்த் தேசியக் கட்சிகளில் முதன்மையானதும் தாய் கட்சி என்றும் அழைக்கப்படும் இலங்கை தமிழரசுக் கட்சி முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் (ஈ.பி.டி.பி.) ஆதரவு கேட்டு அக்கட்சியின் அலுவலகப் படி ஏறியமை தமிழ்த் தேசிய அரசியலிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் கடும் விமர்சனங்களையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியை (ஈ.பி.டி.பி.) தமிழினத் துரோகிகள், ஓட்டுக்குழு, ஆயுதக்குழு, இராணுவ துணைக்குழு, தமிழ் இள…

    • 4 replies
    • 395 views
  20. யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் மாவை சேனாதிராசா சுமந்திரன் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற “ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும்” நிகழ்வில் கலாநிதி கணேசலிங்கம் முன்வைத்த ஆய்வுக்குரிய கருத்துக்களுக்கு நன்றி. “ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும்” என்பது வடகிழக்கு தலைமையை ஏற்றுக்கொண்டு பயணிப்பதே என்பதை கொழும்பு தலைவர்கள் உணரவேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்கள் விமர்சன நீதியாக வடகிழக்கு மக்கள் தெரிவுசெய்யும் தலைமையுடன் [ஏசி அனுசரணையாக செயல்படவேண்டும். . தமிழரசுக் கட்ச்சியும் கூட்டமைப்பும் தமிழரசுக் கட்ச்சி வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது கவலை தருகிறது. கடந்த காலத்தில் தமிழர் தலைமை யாழ்பாணம் வன்னி, மற்றும் திருமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலும் கொழும…

    • 1 reply
    • 587 views
  21. [size=5]சொல்புத்திக்காரரா கூட்டமைப்பினர்? - மட்டு நேசன்[/size] 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' திரைப்படத்தில் அரசி மனோரமாவுக்கு 'இரட்டைக் குழந்தைகள் பிறக்கும்' எனவும் 'மூத்த பிள்ளை சொல்புத்தி - இரண்டாவது பிள்ளை சுயபுத்தி' என ஜாதகத்தைக் கணிக்கும் ஜோதிடர் குறிப்பிடுவார். இதனைக் கேட்கும் மனோரமாவின் சகோதரர் நாசர், சுயபுத்தி உள்ள பிள்ளை இருந்தால் தனது திட்டங்கள் நிறைவேறாது எனக் கருதி அதனைக் கொல்ல ஏற்பாடு செய்வார். சொல்புத்தி உள்ள பிள்ளையை தான் சொல்வதை எல்லாம் கேட்கும் 'மக்கு' இளவரசனாகவே வளர்ப்பார். *** சிங்கள மக்கள் குறிப்பாக பௌத்த சிங்களவர்கள் ரணிலை ஆற்றலுள்ள ஒரு தலைவராகக் கருதவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியினரோ அவரை வெற்றியைப் பெற்றுத் தரும் ஒரு வழிகாட்டியாக எண்ணவில…

  22. வடபகுதி மக்களில் மிகச்சிறிய எண்ணிக்கையிலானவர்களே தீவிரவாதிகள்- அமைச்சர் தினேஸ் குணவர்த்தன Rajeevan Arasaratnam May 24, 2020 வடபகுதி மக்களில் மிகச்சிறிய எண்ணிக்கையிலானவர்களே தீவிரவாதிகள்- அமைச்சர் தினேஸ் குணவர்த்தன2020-05-24T18:04:41+00:00அரசியல் களம் வடபகுதி மக்களை பொறுத்தவரையில் அவர்களில் தீவிரவாதிகள் இருக்கலாம் ஆனால் அவர்கள் சிறிய எண்ணிக்கையிலானவர்கள் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். சர்வதேச அமைப்புகளில் இருந்து வெளியேறுவது குறித்த தனது கருத்தின் மூலம் இலங்கை ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை தெளிவாக முன்வைத்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் சண்டே ஒப்சேவரிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித…

    • 1 reply
    • 746 views
  23. தமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்க கேள்விகள் ! – நிலாந்தன் June 28, 2020 நிலாந்தன் நீங்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஆனால் ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னரான கடந்த 11 ஆண்டுகால அரசியலை முன்வைத்து உங்களிடம் சில கேள்விகளை கேட்க வேண்டியிருக்கிறது. உங்களுடைய அரசியல் நிலைப்பாடுகள் வேறுபடலாம். ஆனால் உங்களுடைய வாக்காளர்கள் பெரும்பாலானவர்கள் தமிழ் மக்களே. எனவே தமிழ் மக்களின் நிரந்தர பிரச்சினைகள் தொடர்பாகவும் அன்றாட பிரச்சினைகள் தொடர்பாகவும் உங்களிடம் இருக்கக்கூடிய வழி வரைபடம் என்ன ?அதை அடைவதற்கான அரசியல் உபாயம் என்ன ?என்பதை நீங்கள் பகிரங்கப்படுத்த வேண்டும் அந்த அடிப்படையிலேயே இக் கேள்விகள்கேட்கப்படுகின்றன. கேள்வி 1 - மி…

  24. யாழ். கூச்சல் குழப்பங்களும் கொழும்பின் கொண்டாட்டமும் சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய ‘இலங்கை அரசியல் யாப்பு (டொனமூர் முதல் சிறிசேன வரை 1931 -2016)’ என்கிற ஆய்வு நூலின் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (ஒக்டோபர் 01, 2016) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ஒரு நூல் வெளியீட்டு விழா என்கிற அளவோடு மாத்திரம் நின்றுவிடாமல், ‘புவிசார் அரசியலில் கைதிகளாய் இருக்கின்ற ஈழத் தமிழர்கள்’ என்கிற விடயத்தினை முன்னிறுத்திய திறந்த கலந்துரையாடலாகவும் அந்நிகழ்வு வடிவமைக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், தொடர்ந்தும் இயங்கும் பல கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும், நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் அரசியல் ஆய்வாளர்களும் கல்விமா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.