அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9217 topics in this forum
-
வட கிழக்கில் இராணுவ மய நீக்கத்திற்கான அவசியம் - குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் 11 பெப்ரவரி 2015 இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுகிறது. புதிய அரசாங்கம்கூட இந்த நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து முடித்த பின்னரும் வட கிழக்கில் இராணுவத்தை நிலை நிறுத்த தீர்மானிப்பது ஏன்? புலிகளை அழிக்க வட கிழக்கில் இராணுவம் செறிவாக்கப்பட்டது எனில் தொடர்ந்தும் வடகிழக்கில் இராணுவ மயத்தை பேணுவதன் மூலம் தமிழ்மக்களை ஒடுக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறதா? தமிழ் மக்களின் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசியல் செயற்பாடுகளை ஒடுக்கும் நோக்கில் தொடர்ந்தும் இராணுவ மயத்தை …
-
- 0 replies
- 413 views
-
-
கடனே வாழ்க்கை | வடக்கின் ஆற்றாமை “Loan Is Life”: Tales Of Desperate Survival From The North Author: Roel Raymond Source: Roar.Media தமிழில்: சிவதாசன் இருள் கவியும் மாலை. தலைக்கு மேல் மேகங்கள் பயமுறுத்தும் வகையில் மூடம் கட்டின. இதையெல்லாம் பொருட்படுத்தாது தர்ஷன் சிரித்துக்கொண்டே எங்களைத் தன் தோட்டத்தினுள் வரவேற்றான். நாற்காலிகள் ஏதுமில்லை. ஒரு பாயைப் புற்தரையில் விரித்து எங்களை அமர்ந்துகொள்ளும்படி சைகை செய்தான். நிலை கொள்ளாத நாய்க்குட்டி ஒன்று எங்கள் கால் விரல்களை முகர்ந்துகொண்டு போனது. கோபத்தோடு நிலத்தை அறைந்தன மழைத்துளிகள். மேகத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு உள்ளே போகலா…
-
- 0 replies
- 752 views
-
-
இந்தியாவில் ஜனநாயகம் செயல்படுமா? - அம்பேத்கர் பதில்
-
- 0 replies
- 703 views
-
-
இலங்கையில் நடந்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலையடுத்து இந்தோ-பசுபிக் மூலோபாயம் தொடர்பாக அமெரிக்காவில் கலந்துரையாடல் அமெரிக்க இலங்கை உயர்மட்டக்குழுவினர் பங்கேற்பு - இந்தியாவுடனும் உரையாடல் இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக கொழும்புக்கு வருகை தந்த அமெரிக்க அவுஸ்திரேலிய மற்றும் சர்வதேச இராணுவப் புலனாய்வாளர்கள் தடையப் பொருட்கள் பலவற்றை ஆதாரமாகக் கொண்டு தொடர்ச்சியாக விசாரணை நடத்துகின்றனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமும் மற்றும் பலரிடமும் வாக்குமூலங்கள் பதியப்பட்டு தாக்குதலுக்கான அடிப்படைக் காரணங்கள், பின்னணிகள் குறித்தும் தீவிரமாக …
-
- 0 replies
- 393 views
-
-
-
பூதாகரமாக வெடிக்கும் முரண்பாடு நாட்டில் மீண்டுமொருமுறை அரசியல் நெருக்கடிகள் வலுவடைந்து செல்வதைக் காணமுடிகின்றது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நாட்டில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடிகளை அடுத்து பாரிய பின்னடைவு நிலைமை காணப்பட்டது. அதன் பின்னர் தற்போது மீண்டும் அதே போன்ற பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பித்திருப்பதைக் காணமுடிகின்றது. உண்மையைக் கூறப்போனால் ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்கள் இந்த நாட்டை அரசியல், சமூக, பொரு ளாதார மற்றும் பாரம்பரிய கலாசார ரீதியாக மறுபக்கம் திருப்பியிருக்கின்றன. மக்களின் கடந்தகால வழமையான போக்கு முற்றுமுழுதாக மாறியிருக்கிறது. சமூக விடயங்களை இந்த தாக்குதல்கள் உடைத்து நொறுக்கியிருக்கின்றன. அனைத்து விடயங்களும் தலைகீழாக மாறும் அளவுக்கு இந்…
-
- 0 replies
- 584 views
-
-
2005, 2010, 2015, 2020 காரை துர்க்கா / 2019 ஓகஸ்ட் 20 செவ்வாய்க்கிழமை, மு.ப. 10:24 Comments - 0 நாட்டு மக்கள் அன்றாடம் எதிர்நோக்குகின்ற தீர்வுகள் காணப்படாத பல்வேறு பிரச்சினைகளையும் புறமொதுக்கி விட்டு, ஜனாதிபதித் தேர்தலே இன்று பேசு பொருளாகி விட்டது அல்லது, பேசு பொருளாக்கி விட்டார்கள். நம் நாட்டை ஜனாதிபதித் தேர்தல் காய்ச்சல் பீடித்து உள்ளது. ஆனாலும், எந்தத் தேர்தல்களும் கால ஒழுங்கில் நடத்த வேண்டியவைகளே. ஆகவே, அவை நடக்கட்டும். பெரும்பான்மை இன சிங்கள மக்கள், தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனூடாகத் தாங்கள் ஆதரிக்கும் கட்சி, ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுடன், தாங்களும் வளம் பெற வேண்டும் எனக் கருதுகின்றார்கள். அதில் தவ…
-
- 0 replies
- 728 views
-
-
திராவிடர் கழகம் தனது பவள விழாவை இன்று (ஆகஸ்ட் 27) கொண்டாடும் நிலையில், அந்த இயக்கத்தின் தற்போதைய தேவை, சாதனைகள், எதிர்கால லட்சியங்கள், அக்கட்சி மீதான விமர்சனங்கள் குறித்து விரிவாகப் பேசினார் அந்த அமைப்பின் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன். பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசியதிலிருந்து: கே. இந்த இயக்கம் துவங்கப்பட்டு 75 ஆண்டுகளாகின்றன. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடக் கட்சிகள் ஆட்சியில் இருக்கின்றன. திராவிடர் கழகம் என்ற இந்த அமைப்புக்கு இனிமேலும் தேவை இருப்பதாக நினைக்கிறீர்களா? ப. கண்டிப்பாக. திராவிடர் கழகத்தின் அடிப்படையான கொள…
-
- 0 replies
- 372 views
-
-
ஜனநாயகத்தை கருவறுக்க கோட்டபாயவுக்கு உதவுவதா? பட மூலம், Getty Images/ Tharaka Basnayaka via: theinterpreter கோட்டபாய ராஜபக்ச (பிபிசியின் கிறிஸ் மொரிஸுக்கு வழங்கிய பேட்டி) 2015ஆம் ஆண்டில் பெரும்பான்மையான இலங்கையர்கள் தங்களுக்கென ஒரு ஜனநாயக அரசாங்கத்தை உருவாக்க வாக்களித்தனர். திறந்த அந்த ஜனநாயக வெளியைத் தக்கவைத்திருக்க நாங்கள் வாக்களிக்கப் போகின்றோமா? அல்லது அதன் படுகொலையில், அறிந்தோ அறியாமலோ, பங்கெடுக்கப் போகின்றோமா? 2018ஆம் ஆண்டின் சிறிசேன – ராஜபக்ஷ ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சியின்போது, தமக்கு எதிராக வந்திருந்த நீதிமன்ற தீர்ப்புகளைப் புறக்கணித்து, சட்டவிரோத தேர்தலுக்கு செல்லுமாறு மஹிந்த ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவுறுத்தியதாக 2018 டி…
-
- 0 replies
- 461 views
-
-
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்? - நிலாந்தன். adminFebruary 9, 2025 தையிட்டி விகாரை ஒரு தனியார் காணியில் கட்டப்படுறது என்பதனால் அது சட்டவிரோதமானது என்று கூறி அதனை ஒரு சட்ட விவகாரமாக மட்டும் குறுக்குவது தமிழ் மக்களுக்குப் பொருத்தமானது அல்ல. அது சட்டப் பிரச்சினை மட்டுமல்ல, அதைவிட ஆழமான பொருளில் அது ஓர் அரசியல் விவகாரம். இன ஒடுக்குமுறையின் ஆகப் பிந்திய வெளிப்பாடுகளில் ஒன்று. அது ஓர் ஆக்கிரமிப்பு. ஒரு மரபுரிமைப் போர். இலங்கைத் தீவின் சட்டங்கள் எவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிராக வளைக்கப்படும் என்பதற்கு அது ஒரு சான்று. 2009க்கு பின்னரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை என்பதற்கு அது ஒரு சான்று. சம்பந்தப்பட்ட சில தமிழர்களின் காணி உரிமை பற்றிய ஒரு …
-
- 1 reply
- 712 views
- 1 follower
-
-
காணொளிகளின் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவருக்கான நீதி – நிலாந்தன்! அணையா விளக்கு போராட்டத்தில் தன்னை நித்திரை கொள்ளவிடாமல் தடுத்த இரண்டு சம்பவங்களைப் பற்றி அதில் அதிகமாக ஈடுபட்ட ஒருவர் சொன்னார். முதலாவது சம்பவம், ஒரு முதியவர்-மிக முதியவர்- காணாமல் ஆக்கப்பட்ட ஒரு மகனின் தகப்பன். அவர் அங்கே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வந்து போனபின் அவர் அங்கிருந்தவர்களிடம் கேட்டாராம், “தம்பி இனி எங்களுக்குத் தீர்வு கிடைக்குமா? காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் திரும்பக் கிடைப்பார்களா?” என்று. அவர் நம்புகிறார், ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வந்ததால் ஏதோ தீர்வு கிடைக்கும் என்று. அந்த நம்பிக்கை, அதுவும் அந்த முதிய வயதில் அவருக்கு இருந்த நம்பிக்கை, தன்னைத் துன்புறுத்தியதா…
-
- 0 replies
- 140 views
-
-
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்கில் பாராளுமன்ற அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்டுள்ள நிலையில், அந்த அரசியலமைப்பு பேரவையின் முதலாவது கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் இது மிகவும் முக்கியத்துவமிக்கதாக அவதானிக்கப்படுகின்றது. அந்த வகையில் அரியலமைப்பு பேரவையின் முதலாவது கூட்டத்தின் போது உபதலைவர்கள் மற்றும் விசேட வழிநடத்தும் குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கான நியமனங்கள் இடம்பெற்றுள்ளன. பதவி வழிவந்தவர் என்ற வகையில் சபாநாயகர் கருஜெயசூரிய இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கியதுடன், எம்.பி.க்களான திலங்க சுமதிபால, செல்வம் அடைக்கலநாதன், கபீர் ஹாசீம், சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே, திலக் மாரப்பன, மகிந்த யாப்பா அபேவர்தன மற்றும் டாக்டர் நளிந்த ஜயதிலக்க…
-
- 0 replies
- 590 views
-
-
கொரோனா அல்லது சீன வைரஸ் உலக ஒழுங்கை மாற்றியமைக்குமா? - யதீந்திரா கொரோனா – இன்றைய சூழலில் பாரபட்சமில்லாமல் அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு பெயர். முதல் பார்வையில் இது ஒரு மனிதாபிமான பிரச்சினை. இதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதே அனைவருக்கும் முன்னாலுள்ள கேள்வி. இலங்கை அரசாங்கம் இதனை கட்டுப்படுத்துவதற்கு காத்திரமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருக்கின்றது. இதில் இராணுவம் பிரதான பங்கு வகித்துவருகின்றது. இந்த பின்புலத்தில் நோக்கினால் இலங்கை இராணுவம் மனிதநேயப் பணியில் தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்திருக்கின்றது. எந்த இராணுவத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதோ, அந்த இராணுவமே இன்று கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் முற்றிலுமாக தன்னை ஈடுபடுத்தியி…
-
- 0 replies
- 502 views
-
-
இன்றைய ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிந்துள்ள முகமூடியின் பின்னணி என்ன? "V for Vendetta" இந்த புகைப்படம் சமீக காலமாக மேற்கத்தேய நாடுகளில் அராஜகத்தை எதிர்த்தும், நீதிக்காக வீதிக்கிறங்கி போராடும் போராட்டக்காரர்கள் அணிந்திருப்பதை அவதானித்திருக்கிறேன். இந்த முகமூடி எதனை குறிக்கிறது என்று ஆராய்ந்த போது அந்த முகமூடி பயன்படுத்தப்பட்ட திரைப்படம் குறித்த தகவல்கள் கிடைத்தன. "V for Vendetta" இரவே அதனை தரவிறக்கி பார்த்துவிட்டேன். 132 நிமிடங்களை கொண்டது இந்த திரைப்படம். கதைக்களம் இங்கிலாந்து பாராளுமன்றம். கட்டுக்கடங்கா அதிகாரங்களைக்கொண்ட ஒரு சர்வாதிகார அரசு. வெளிநாட்டவர், ஓரினச்சேர்கையாளர்கள், முஸ்லிம்கள், சிறுபான்பாமையினர் நலிந்தவர்கள் ஆகியோருக்கு எதிரான அரசு…
-
- 0 replies
- 1.5k views
-
-
லியோ நிரோஷ தர்ஷன்) "மனித உரிமைகளுக்கான மதிப்பு, ஜனநாயக ஆட்சிமுறை மற்றும் சட்டத்தின் ஆட்சியை ஊக்குவிப்பதை இலக்காக் கொண்ட முயற்சிகளுக்கு ஒத்தழைத்தல் என்பதன் பின்னணியிலேயே இலங்கையுடனான எமது பாதுகாப்பு உறவை முகாமைத்துவம் செய்கிறோம். " இந்தோ-பசுபிக் பிராந்திய உறவில் இலங்கையின் இருப்பிடத்தை பிரதிபலிக்கும் மற்றும் இந்த தனித்துவமான நிலை வழங்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் இலங்கையின் பிராந்திய தொடர்புக்கான தமது நோக்கத்தை இலங்கை தலைவர்கள் கோடிட்டுக் காட்டியுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மத்திய மற்றும் தெற்காசிய பொது இராஜதந்திர விவகாரங்களுக்கான பிரதி செயலர் ஹெனிக் ஜொனதன் தெரிவித்தார். பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்புக்கு பங்களிப்புச் செய்வதற்…
-
- 0 replies
- 360 views
-
-
தமிழ் - முஸ்லிம் உறவும் வடக்கு, கிழக்கு இணைப்பும் ஒரு பிள்ளை அழத் தொடங்கிய பிறகுதான், அந்தப் பிள்ளையின் தாய்க்கு அக்குழந்தை ஏதோ ஒரு தேவையுடன் இருக்கின்றது என்பது புரிகின்றது. பிள்ளைக்கு இப்போதைக்கு எதுவும் கொடுக்கத் தேவையில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த தாய், புதிதாக தேவையொன்று உருவாகி இருப்பதை உணர்வாள். “உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்பார். சில பிள்ளைகள் சொல்லும் அல்லது அதற்கான சைகையை காட்டும். வேறு சில பிள்ளைகள் கடைசிமட்டும் என்னவென்று சொல்லாமல் அழுதுகொண்டே இருக்கும். மூத்த பிள்ளையை கண்ணுற்ற, இளைய பிள்ளையும் தனது பசியை வெளிப்படுத்த வேண்டுமென்று நினைப்பான். ஆனால், தாய்க்கு புரியும்படியான கோரிக்…
-
- 0 replies
- 487 views
-
-
இனப்படுகொலை செய்த இலங்கை அரசை காப்பாற்ற முனையும் அமெரிக்கா? பொன்.சந்திரன், , கோவை. ஞாயிறு, 03 மார்ச் 2013 22:17 ஜெனிவாவில் நடந்து கொண்டிருக்கின்ற (பிப்ரவரி - மார்ச் 2013) ஐ.நா அவையின் மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கையில் நடைப்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் பற்றிய விவாதம் ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனின் சானல் 4 தொலைக் காட்சியின் மனித உரிமை பத்திரிகையாளரும் ஆவணப்பட இயக்குனருமான கெல்லன் மெக்ரி அவர்களின் ஆவணப்படம் ("NO FIRE ZONE - THE KILLING FIELDS OF SRILANKA") பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதற்கு முன் KILLING FIELDS என்ற பெயரில் வெளி வந்த ஆவணப்படம் இன அழிப்புப் போரின் சில காட்சிகளை ப…
-
- 1 reply
- 586 views
-
-
ஒரு புதிய யாப்புக்கான வாய்ப்புக்கள்? – நிலாந்தன் BharatiDecember 20, 2020 நிலாந்தன் ஒரு புதிய யாப்பை உருவாக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு 20 ஆவது திருத்தத்தை கொண்டு வர முற்பட்ட வேளை அதற்கு சிறிய பௌத்த மகா சங்கங்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இரண்டு பலவீனமான சிறிய பௌத்த மகா சங்கங்களின் நாயக்கர்கள் யாப்பு திருத்தத்திற்கு பதிலாக ஒரு புதிய யாப்பை கொண்டு வரலாம் என்று கேட்டிருந்தார்கள். இதே கருத்தையே கத்தோலிக்க ஆயர்களின் சம்மேளனமும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இவ்வாறான ஒரு பின்னணியில் ராஜபக்சக்கள் தாங்கள் ஒரு புதிய யாப்பு கொண்டு வருவோம் என்று திட்டவட்டமாகவும் தெளிவாகவும் நாட்டுக்கு கூறத் தொடங்கினார்கள். அதன…
-
- 0 replies
- 395 views
-
-
சாரதாம்பாளுக்கு மாத்திரமல்ல, எல்லோருக்கும் மறுக்கப்பட்ட நீதி! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் ஒரு இனத்தின், ஒரு சமூகத்தின் உயிர்ப்புக்கு பெண் அவசியமானவள். தமிழ் சமூகத்தில் பெண்ணை தெய்வாக போற்றுகிற, சினம் கொண்டவளாக பார்க்கிற, நீதி வேண்டுபவளாக பார்க்கிற நம்பிக்கைகளும் தொன்மங்களும் உண்டு. ஈழமெங்கும் கண்ணகி என்றும் அம்மன் என்றும் பெண் வழிபாடுகள் பக்தியோடும் வீரத்தோடும் நீதியோடும் வணக்கப் பண்பாடுகள் இடம்பெறுகின்றன. இலங்கை அரசு இன ஒடுக்கல் மேலாதிக்கச் சிந்தனையுடன் தமிழ் சமூகத்தை ஒடுக்கத் தொடங்கியபோது தமிழ் பெண் சமூகத்தை திட்டமிட்டு அழித்தது. வடக்கு கிழக்கில் சிங்களப் படைகள் நிலை கொள்ளத்…
-
- 0 replies
- 372 views
-
-
வங்காளதேசத்தின் கடன் | சீனாவின் இயக்கத்தில் அரங்கேறும் இலங்கையின் நாடகம் ஒரு அலசல் – மாயமான் கடனில் மூழ்கி அமிழ்ந்துகொண்டிருக்கும் இலங்கையைக் காப்பாற்ற ஓடி வருகிறது வங்காள தேசம். அதிசயமே தான் ஆனால் செய்தி பொய்யல்ல. பாவம் இலங்கை மக்கள். கடனில் மேல் கடனாகச் சீனாவைச் சுமக்கிறார்கள். இந்த வருட வெளிநாட்டு வட்டிக் கொடுப்பனவு சுமார் $4.05 மில்லியன். இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து, முதன் முதலாக அதன் பொருளாதாரம் சுருங்கியிருக்கிறது(-3.6%). சீனாவிடமிருந்து $1.5 பில்லியன் (currency swap), தென் கொரியாவிடமிருந்து $500 மில்லியன் கடன் என்று வாங்கிக் குவித்து வைத்திருக்கிறது. இதையெல்லாம் துறைமுக நகரம் திருப்பி அடைத்துவிடும் என்று சீனா உறுதி செய்திருக்கலாம். …
-
- 17 replies
- 1.7k views
-
-
இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி: ஒரு துல்லியமான வாசிப்புக்கான சில குறிப்புக்கள்! August 2, 2021 — எம்.எல்.எம். மன்சூர் — ஒரு நெருக்கடிக்கு வழிகோலிய மூல காரணங்களை அந்நெருக்கடியை சந்தித்திருப்பவர்கள் பிழையாக விளங்கிக் கொண்டால், அதற்குண்டான தீர்வையும் (இயல்பாகவே) அவர்கள் பிழையாக விளங்கிக் கொள்வார்கள். இலங்கை முஸ்லிம்களின் விஷயத்தில் இப்பொழுது இது தான் நடந்திருக்கின்றது. ‘இன்று தாம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிக்கான ஒரேயொரு தீர்வு ‘ராஜபக்ச அரசாங்கத்தை தொலைத்துக் கட்டுவதுதான்’ எனப் பெரும்பாலான முஸ்லிம்கள் நினைக்கிறார்கள். மேலோட்டமாக பார்க்கும் பொழுது ‘அது சரி’ என்றே தோன்றுகின்றது. ஜனாஸா எரிப்பு விவகாரத்தின் பின்னர் ராஜபக்சகள் மீத…
-
- 0 replies
- 416 views
-
-
ராஜபக்ஷர்கள் முன்னுள்ள வாய்ப்பு என்.கே. அஷோக்பரன் twitter: @nkashokbharan சுதந்திரகாலம் முதல் இனமுறுகல், இனவாதம், இனத்தேசியம் ஆகியவற்றால் விளைந்த இனத்துவேசம், இனப்பிரச்சினை ஆகியவற்றுக்குள் சிக்குண்டு, இலங்கை தீவின் அரசியல் சின்னாபின்னமாகி நிற்கிறது. சுதந்திரகாலம் மற்றும் அதற்கு முற்பட்ட தலைவர்கள் கனவு கண்டது போல, இனத்தேசியவாதம், இனவாதம், இனப்பிரிவினை ஆகியவையற்ற சிவில் தேசமாக, இலங்கை ஒருவேளை கட்டியெழுப்பப்பட்டு இருந்தால், இலங்கையின் நிலை இன்று வேறாக இருந்திருக்கலாம். ஏனெனில், சுதந்திர காலத்திலேயே பொருளாதார ரீதியில் பலமான நாடாகவும் வளமான எதிர்காலத்தை நோக்கிய நாடாகவும் இலங்கை இருந்தது. ஆனால், இனவாத அரசியல் இலங்கையின் தலையெழுத்தை மாற்றிப் போட்டது. இன…
-
- 0 replies
- 509 views
-
-
சிறிலங்கா: அரசின் அபிவிருத்தியானது தமிழர்களின் தன்னாட்சி அவாவை சிறிதளவேனும் குறைக்கவில்லை [ திங்கட்கிழமை, 14 ஒக்ரோபர் 2013, 08:24 GMT ] [ நித்தியபாரதி ] அபிவிருத்தி என்கின்ற போர்வையில் வடக்கில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் நிலவும் பிரிவினைவாத எண்ணத்தை நீக்குவதற்காக சிறிலங்கா அரசாங்கமானது தனது காலத்தை இழுத்தடிப்பதற்கான உத்தியைப் பயன்படுத்தி வருகிறது. இவ்வாறு Mail & Guardian ஊடகத்தில் JASON BURKE எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. ஒரு பத்தாண்டு காலத்திற்குள் இரு சகோதரர்கள் தமது மூன்றாவது வீட்டை மிகவும் அழுக்கான வீதியிலிருந்து சில மீற்றர் தூரத்தில் கட்டுகின்றனர். இது தமக்கு நிலையான வீடாக இருக்கும் …
-
- 0 replies
- 582 views
-
-
வேலையில்லா பட்டதாரி வேலையின்மை என்பது தொழில் இன்மை என்பது மட்டும் அல்ல... மன விருப்பம் இன்றி பிடிக்காத தொழிலை சிலுவை போல சுமப்பதும் மனதளவில் வேலையின்மை போன்றதே.. இத்தனை வருடங்கள் லயத்து பிரச்சினை பற்றி பேசியது போதும் இனி சமூக மாற்றத்தை உருவாக்க சிறந்த தொழில் வாய்ப்பை பெற உதவுங்கள் மலையகத்தில் மாற்றம் தானாகவே உருவாகும்.... வேலையில்லா பட்டதாரி இது தனுஷோட படம் கிடையாது. எங்களோட வாழ்க்கை. தேயிலைக்கு இரத்தத்தை பாய்ச்சி தேநீருக்கு நிறத்தை கொடுத்த ஒரு சமூகத்தின் இன்றைய படித்த தலைமுறையின் ஒரு குரல் என் பேனாவின் வழியாக இங்கு ஒலிக்கிறது.. இயற்கையோட இயைந்த வாழ்வு சங்க காலம் என்பார்கள். உண்மையில் மலையக…
-
- 0 replies
- 906 views
-
-
எஞ்சி உள்ள ஒரு வருடத்தை அமைதியாக கொண்டு செல்ல என்ன வழி? http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-08-27#page-10
-
- 0 replies
- 341 views
-