Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. "இனப்படு கொலை" [இது எந்தவொரு அரசியலையோ அல்லது நிகழ்வையோ சார்ந்தவையல்ல. இது எனது பார்வையில் , எனக்கு தெரிந்த அளவில், ஒரு பொதுவான சுருக்கமான அலசல் மட்டுமே] இனப்படுகொலை பொதுவாக ஒரு போர் சூழலில் அல்லது இரண்டு இனங்கள் / குழுக்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட , முரண்பட்ட அரசியல், பண்பாட்டு சூழலில் அல்லது ஒரு இனம் அதிகாரம் , படை , ஆள் பலம் அதிகரித்த நிலையில் தன்னிச்சையாக மற்ற சிறுபான்மை இனத்தை நசுக்க, ஒடுக்க முயலும் சூழலில் அல்லது எதோ சில பல காரணங்களால் ஒரு இனம் மற்ற இனத்தை வெறுக்கும் சூழலில் அல்லது இவைகள் எல்லாம் கலந்த ஒரு சூழலில், பொதுவாக நடை பெறுகிறது. ஆகவே இனப்படு கொலையைப் பற்றி சிந்திக்கும் போது , அவைகளுடன் போர் குற்றங்கள் [War Crimes] …

  2. சம்பந்தருக்குப் பிறகு? - நிலாந்தன் சம்பந்தர் எதை விட்டுச் சென்றிருக்கிறாரோ அங்கிருந்துதான் அடுத்த கட்டம் தொடங்கும். சம்பந்தர் எதை விட்டுச் சென்றிருக்கிறார்? சம்பந்தர் சிதறிப்போன தன் பலத்தைத் தானே உணராத ஒரு தமிழ்ச் சமூகத்தை விட்டுச் சென்றிருக்கிறார். சம்பந்தரின் வழி தமிழ் மக்களுக்கு எதைப் பெற்றுத் தந்திருக்கிறது என்பதனை இரண்டு தளங்களில் ஆராயலாம். முதலில் அனைத்துலக அளவில். இரண்டாவதாக உள்நாட்டுக்குள். அனைத்துலக அளவில் சம்பந்தர் தமிழ்மக்களின் மெய்யான பலம் எது என்பதைக் கண்டுபிடித்திருக்கவில்லை. தமிழ் மக்களின் துயரங்களுக்கெல்லாம் எது காரணமோ அதுதான் தமிழ் மக்களின் மெய்யான பலமும். அதுதான் தமிழ் மக்களின் புவிசார் அமைவிடம். அந்த அமைவிடம் காரணமாகத்தான…

  3. ஒரு மருத்துவரும் தமிழ்ச் சமூகமும் – நிலாந்தன்! சமூக வலைத்தளங்களின் காலத்தில், யுடியுப்களின் காலத்தில் ஒருபுறம் செய்திக்கும் வதந்திக்கும் இடையிலான வித்தியாசம் சுருங்கிகொண்டே போகிறது. இன்னொருபுறம் ஒரு செய்தியின் உண்மைத் தன்மையை ருசுப்படுத்தத் தேவையான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன, மக்கள் மயப்பட்டுள்ளன.உண்மையை உறுதிப்படுத்தத் தேவையான வாய்ப்புகள் அதிகம் மக்கள் மயப்பட் டிருக்கும் ஒரு காலகட்டத்தில்,வதந்தியை விட உண்மை அதிகம் ஸ்தாபிக்கப்பட்ட வேண்டும். ஆனால் நிலைமை அவ்வாறு இல்லை. ஏன் ? ஏனென்றால், சமூக வலைத்தளங்களும் யு டியுப்களும் அதிகமதிகம் பொதுப் புத்திக்கு கிட்டே வருகின்றன.பொதுப் புத்தியானது எப்பொழுதும் விஞ்ஞான பூர்வமானதாக அறிவுபூர்வமானதாக இருக்க வேண்டும் என்று இல்லை. எ…

    • 1 reply
    • 610 views
  4. பாகம் - 01 சம்பந்தரின் சாவின் செய்திக் கனதியைக் கூட சர்வதேச மட்டத்தில் தவிடு பொடியாக்கி தலைப்புச் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் அர்ச்சுனா என்ற வைத்திய அத்தியட்சகரும் தொடர்பாக எழுந்த பிரச்சினைகள். கடந்த மாதம் மத்திய சுகாதார அமைச்சின் நியமனத்தில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகராக இராமநாதன் அர்ச்சுனா நியமிக்கப்படுகின்றார். அதுவரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடமையை கவனிப்பதற்காக பதில் வைத்திய அத்தியட்சகர் ஒருவர் மாகாண சபை நிர்வாகத்தினால் நியமிக்கப்பட்டிருந்தார். ஆதார வைத்தியசாலைக்குரிய பொறுப்பு அந்த வகையில் நாடு முழுவதும் காணப்பட்ட ஆதார வைத்தியசாலைக்குரிய பொறுப்பு வைத்திய அதிகார…

  5. இந்திய ஆதரவாளர்கள் சம்பந்தரை விமர்சிக்கலாமா? பிரித்தானிய பிரெஞ்சுத் தேர்தலும் வலதுசாரிகளும்....

    • 0 replies
    • 280 views
  6. "சிந்துவெளி ஒரு திராவிட நாகரிகம், கட்டாயம் ஆரிய நாகரிகம் அல்ல" சிந்துவெளி நாகரிகம் தமிழ் கலாச்சாரத்தை சேர்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது ஆய்விற்குரிய கருத்தாக, உதாரணமாக சிந்துவெளி நாகரிகம் பற்றிய சர். ஜான் மார்ஷல் செய்த ஆராய்ச்சிக் கருத்துகள் இதற்கு உடந்தையாக இருக்கின்ற போதிலும் இன்னும் பலர் நான்கு [உண்மையில் மூன்று , நாலாவது அதிகமாக தனித்தே இருக்கிறது] வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்று தான் சிந்து வெளி நாகரிகம் என்றும் அது ஆரியர்களுடையது என்றும் கருதுகின்றனர். மேலும் வேதங்களுள் காலத்தால் முந்திய ரிக் வேதத்தில், வேதகாலத்தவர் வாழ்க்கையின் பிரதிபலிப்புகளை நாம் காணலாம். அதுமட்டும் அல்ல இந்த ஆரியர்கள் மேய்ச்சல் நி…

  7. சம்மந்தனின் மறைவும் தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலமும் July 9, 2024 – கருணாகரன் — “சம்மந்தனின் மறைவுக்குப் பிறகு, தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம் எப்படி இருக்கும்?” – இந்தக் கேள்வி, சம்மந்தனின் மறைவுக்கு முன்னரே எழுப்பப்பட்டிருந்த ஒன்றுதான். ஆனாலும் அவர் மறைந்திருக்கும் இந்தச் சூழலிலும் இதற்குத் தெளிவான பதில் இல்லை என்பதே தமிழ்த்தேசியவாத அரசியலின் பரிதாபகரமான நிலையாகும். என்பதால் சம்மந்தன் இருந்தபோது ஏற்பட்டிருந்த குழப்பங்கள், இழுபறிகளையும் விட இனி வரும் நாட்களில் தமிழ்த்தேசிய அரசியற் பரப்பில் மேலும் பல குழப்பங்களும் பலத்த இழுபறிகளும் நிகழவுள்ளன. பல்வேறு குறைபாடுகள், கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ்த்தேச…

  8. சம்பந்தரைத் தோற்கடித்தவர்கள் – நிலாந்தன். யாழ்ப்பாணம், தந்தை செல்வா கலையரங்கில், சம்பந்தரின் உடல் வைக்கப்பட்டிருந்த பொழுது நூற்றுக்கணக்கானவர்களே அங்கு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள். தமது கட்சியின் முதுபெரும் தலைவரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக் கணக்கானவர்களைத் திரட்ட வேண்டும் என்று ஏன் ஏற்பாட்டாளர்கள் சிந்திக்கவில்லை? உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாக இருந்த கட்சிக்காரர்களும் உட்பட ஒரு தொகுதி கட்சித் தொண்டர்களைத் திரட்டியிருந்தாலே அங்கே ஆயிரக்கணக்கானவர்களைக் கொண்டு வந்திருக்கலாம். அஞ்சலி நிகழ்வு நடைபெற்ற மண்டபத்துக்கு அருகே யாழ் மத்திய கல்லூரி வழமை போல இயங்கியது.மண்டபத்தில் ஒலித்த சோக கீதத்தைத் தாண்ட…

  9. உண்மையில் சம்பந்தன் இப்போது இறக்கவில்லை, இலங்கை தமிழரசு கட்சி நீதிமன்ற படி ஏறியபோதே இறந்துவிட்டார் என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது வாராந்த அரசியல் ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 15 வருடங்கள் தமிழரசியலுக்கு தலைமை தாங்கி வழி நடாத்திய சம்பந்தன் காலமாகிவிட்டார். சம்பந்தனைப் போல பலத்த விமர்சனங்களுக்கு உள்ளான தமிழ்த்தலைவர் வேறு எவரும் இல்லை என்று கூறலாம். மரபு வழி தமிழ் அரசியலை விடுத்து இன்னோர் அரசியலை நகர்த்த முனைந்தமையே இந்த விமர்சனங்களுக்கு காரணமாகும். அரசியல் போராட்டங்கள் தம…

  10. "இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்" 2024 ஆம் ஆண்டு இங்கிலாந்து பொதுத் தேர்தல் ஜூலை 4 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பிரித்தானியாவின் பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களாக முன்பை விட அதிகமான பிரிட்டிஷ் தமிழர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். "British Tamils running to become UK Member of Parliament" With the 2024 UK General Election set to take place on July 4, more British Tamils than ever before have been named as candidates with a range of Britain’s political parties. உமா குமரன், தொழிற் கட்சி Uma Kumaran, Labour Party Candidate for Stratford…

  11. "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற வாழ்வை இன்னும் காணோம்!" [இரா. சம்பந்தனுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் இந்த நேரத்தில் ஆவது, ஒற்றுமையாக, ஒரே குரலில் தமிழுக்காக, தமிழ் பேசும் மக்களுக்காக ஒன்றாக இணைவோம் , உறுதியாக இருப்போம் என்று சபதம் எடுப்பார்களா ?? அப்படி எடுத்தால் அதுவே உண்மையான அஞ்சலி !!!] தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் மிக நீண்ட காலமாக செயற்பட்டு வந்த இரா சம்பந்தன், தந்தை செல்வா முதல் இன்றைய தலைமுறையினர் வரை அனைத்துக் காலங்களிலும் கை கோர்த்துப் பயணித்த ஒரு தலைவராக திகழ்ந்தவர், இன்று [30 ஜூன் 2024] ஞாயிறு இரவு 11 மணியளவில் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமாகியிருக்கின்றார். என்றாலும் அன்று தொடக்கம் இன்று வரை, தமிழர் பி…

  12. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்தார் ரா.சம்பந்தன் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் முப்பதைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கியப் பங்கு வகித்த இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், இலங்கை தமிழரசு கட்சியின் பெரும் தலைவருமான ரா.சம்பந்தன் காலமானார். இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ஒரு நியாயமான தீர்வைப் பெறுவதற்காக நீண்ட காலம் பணியாற்றியவர் அவர். அவருக்கு வயது 91. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். …

  13. Published By: VISHNU 26 JUN, 2024 | 04:35 AM நடாஷா குணரத்ன அபிவிருத்தி அடைந்துவரும் நாடொன்று, மிகவும் சிக்கலான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. வேலையின்மை நிலை அதிகரித்து வருகின்றது, ஆனால் பணவீக்கம் அதனைவிட மிகவும் வேகமாக அதிகரித்து வருகின்றது. தேசிய வங்கிகளில் வெளிநாட்டு நாணய இருப்பு வெறுமையாக உள்ளது. எரிபொருள் மற்றும் எரிவாயு இருப்புக்களும் அவ்வாறே உள்ளன. சர்வதேச நிதி நிறுவனங்கள் இதுபற்றி தட்டிக் கேட்டன. அ) நிதி உறுதியற்ற தன்மை அல்லது ஆ) பணம் செலுத்துவதில் உள்ள இயல்புநிலை இ) மேற்குறித்த இரண்டு விடயங்களாலும் ஏற்பட்ட அரசியல் அமைதியின்மை குறித்து அவர்கள் மகிழ்ச்சியடையவில்லை. தனிப்பட்ட கலந்துரையாடல்களில், அரசாங்கங்களின் அட…

  14. ஜனாதிபதி தேர்தலும் தமிழர் அரசியலும் June 24, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — ஏற்கெனவே குழம்பிப்போயிருந்த இலங்கை தமிழர் அரசியல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழர்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடு்க்கவேண்டும் என்பது தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் நிலவுகின்ற முரண்பாடுகள் காரணமாக மேலும் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. தமிழ் கட்சிகள் ஐக்கியப்பட்டு செயற்படுவதில் நாட்டம் காட்டும் என்றோ அல்லது போரின் முடிவுக்கு பின்னரான இன்றைய காலப்பகுதியில் தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் உட்பட தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு ஒன்றிணைந்த நிலைப்பாடுகளுக்கு வரும் என்றோ எதிர்பார்ப…

  15. 24 JUN, 2024 | 03:01 PM விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை விவகாரத்தில் பெரும்பான்மையினப் பௌத்தர்கள் நீதிமன்றக் கட்டளைகளையும் சட்டங்களையும் ஒரு பொருட்டாக மதித்ததில்லை. குருந்தூர் மலையில் எவ்வித மதம் சார்ந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படக்கூடாது என நீதிமன்றம் கட்டளைகளைப் பிறப்பித்தபோதும் அந்த நீதிமன்றக் கட்டளைகளை பல தடவைகள் மீறி, பெரும்பான்மையின பௌத்தர்களால் பாரிய அளவில் பௌத்த விகாரை குருந்தூர் மலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட அந்த விகாரை அகற்றப்பட வேண்டுமென முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டபோது, அந்த விகாரையை உடைத்தால் இனங்களுக்கிடையில் பிளவு…

  16. தொழில் முனைவோரைக் கட்டியெழுப்புவது: தேசத்தைக் கட்டியெழுப்புவது - நிலாந்தன் கடந்த 16ஆம் திகதி யாழ்ப்பாணத்தில், புங்கங்குளம் சந்தியில் அமைந்துள்ள ஒரு சுற்றுலா விடுதியில் ஒரு பரிசளிப்பு வைபவம் இடம்பெற்றது. தமிழ் நாட்டின் விருது நகர் ரோட்டறிக் கழகத்தின் இளையோருக்கான தலைமைத்துவ விருதுகளை வழங்கும் நிகழ்வு அது. (RYLA-Rotary Youth Leadership Awards) கனடாவை மையமாகக் கொண்டியங்கும்”ஈ-குருவி-புதிய வெளிச்சம்”அமைப்பு தமிழகத்தின் இதயம் நல்லெண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தின் அனுசரணையோடு இளம் தொழில் முனைவோருக்கான வதிவிடக் கருத்தரங்கு ஓன்றினை ஒழுங்குபடுத்தியிருந்தது. இளம் தொழில் முனைவோரின் நம்பிக்கைகளை, தொழில் திறன்களைக் கட்டியெழுப்புவது அக்கருத்தரங்கின் நோக்கமாகும். அதில் பங்குபற்றி…

  17. "The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/9564108346997717/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 02 https://www.facebook.com/groups/978753388866632/posts/9600878159987402/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 03 …

  18. நிறைவேற்று அதிகாரமுடைய இரும்பு மனிதர்களைத் தமிழ் மக்கள் தெரிவு செய்யப் போகிறார்களா? - நிலாந்தன். - நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலின் போதும் எதிர்க்கட்சிகளின் பிரதான கோரிக்கைகளில் ஒன்றாக இருப்பதுண்டு. நாட்டில் உள்ள லிபரல்கள், புத்திஜீவிகள், குடிமக்கள் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் போன்றோரின் கோரிக்கைகளும் அவ்வாறு இருப்பதுண்டு.தமிழ் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால், தமிழ் மக்கள் அதிகம் கொன்றொழிக்கப்பட்ட காலம், துன்பப்பட்ட காலம், இன அழிப்புக்கு உள்ளாகிய காலம், ஜனாதிபதி முறைமையின் கீழான காலம்தான் இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை எனப்படுவது இரும்பு மனிதர்களைத்தான…

  19. இரு வேறு பாதைகளில் தமிழ்த்தேசியம்! June 20, 2024 — கருணாகரன் — தமிழ்த்தேசிய அரசியல் இரண்டு முகாம்களாகப் பிரிந்துள்ளது. ஒன்று, தீவிரமான தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. அதாவது முற்றுமுழுதாகவே கற்பனையில் சமராடுவது. கடுமையான அரச எதிர்ப்பு, பிற இன, மத வெறுப்பைக் காட்டுவதெல்லாம் இந்தத் கற்பனைத் தீவிரத் தன்மையின் வெளிப்பாடுகளே. (குரைக்கிற நாய் கடிக்காது). மற்றது, மென்தேசியவாத நிலைப்பாடுடையது. யதார்த்தம், நடைமுறை போன்றவற்றின் அடிப்படையில் சிந்தித்துச் செயலாற்ற விளைவது. முடிந்தளவுக்கு மக்களின் நலன், மக்களுடைய தேவைகள், மக்களுடைய பிரச்சினைகளுக்காக அரசுடன் இணையக் கூடிய புள்ளிகளில் இணைந்தும் எதிர்க்க வேண்டியவற்றை எதிர்த்தும் செயற்படுவது. பிற இன, மதப் ப…

  20. சிங்களதேச வேட்பாளருக்கு வாக்களிக்கப் போட்டி! தமிழ்ப் பொதுவேட்பாளரை தோற்கடிக்க சூளுரை! Posted on June 17, 2024 by தென்னவள் 13 0 பதின்மூன்றாம் திருத்தம் ஒப்பமிடப்பட்டபோது அதனை ஆதரித்த ரணில் இப்போது காவற்துறை அதிகாரம் கிடையாது என்கிறார். பதின்மூன்றாம் திருத்தத்தை முழுமையாக எதிர்த்த அன்றைய பிரதமர் பிரேமதாசவின் மகன் சஜித் முழு அதிகாரங்களையும் தருவேன் என்கிறார். ஒப்பந்தத்தை அன்று எதிர்த்து இனவெறியாட்டம் புரிந்த ஜே.வி.வி.யின் வேட்பாளர் அநுர புதிய அரசியல் அமைப்பே தீர்வு தரும் என்கிறார். யாரைத்தான் நம்புவது? இவ்வருடம் இடம்பெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் இதற்கு முன்னையவற்றைவிட வேறுபட்டதாகவும், ஒருவகையில் அரசியல் முக்கியத்துவம்…

      • Thanks
      • Like
      • Haha
    • 9 replies
    • 986 views
  21. நிகழ வேண்டிய வழி June 17, 2024 — கருணாகரன் — ‘இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிந்து 15 ஆண்டுகளாகி விட்டது. அங்கே இப்போது மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள் அல்லது அமைதியாக வாழக்கூடியதாக இருக்கும்’ என்ற எண்ணமே பொதுவாக உலகப் பரப்பில் உண்டு. யுத்தம் முடிந்தது உண்மைதான். ஆனால், யுத்தத்திற்குக் காரணமான இனமுரணும் இனப்பிரச்சினையும் முடிவுக்கு வரவில்லை. அது இன்னும் கொதிநிலையிலேயே உள்ளது. அதை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது அரசு. ஏனென்றால், இனவாதத்தில்தான் அரசுக் கட்டமைப்பே நிறுவப்பட்டுள்ளது. இரண்டு மொழிகளைப் பேசும் நான்கு இன மக்களைக் கொண்ட சின்னஞ்சிறிய நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு யுத்தம் நிகழ்ந்திருக்கிறது என்றால் இதை எப்படி விளங்கிக் கொள…

  22. காசா- முள்ளிவாய்க்கால் அல்ஜசீராவின் ஒப்பீடு | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்

    • 0 replies
    • 397 views
  23. வள்ளல்களும் தமிழரசியலும் - நிலாந்தன் இலவசமாகக் கிடைப்பதைப் பெரும்பாலானவர்கள் கைவிடமாட்டார்கள். இது பெரும்பாலான எல்லாச் சமூகங்களிலும் காணப்படும் ஒரியல்பு. அதிலும் குறிப்பாக ஆயுத மோதல்களுக்குப் பின்னரான ஒரு சமூகத்தில்,கூட்டுக் காயங்களிலும் கூட்டு மன வடுக்களிலும் அழுந்திக் கிடக்கும் ஒரு சமூகத்தில், உதவிக்காகக் காத்திருப்பவர்களின் தொகை ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும். கடந்த 15 ஆண்டு கால ஈழத்தமிழ் அரசியலானது அவ்வாறு உதவிக்காக காத்திருப்பவர்களுக்கு பொருத்தமான நிவாரணத் திட்டங்களையும் கட்டமைப்புக்களையும் உருவாக்கத் தவறிவிட்டது. 2009இல் காணாமல்போன தனது இளம் கணவனுக்காக போராடிய இளம் மனைவி இப்பொழுது முதுமையின் வாசலை அடைந்து விட்டாள். அவளுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. அப்…

  24. எது பேரழிவு? யாருக்குப் பேரழிவு? நிலாந்தன்! ரணில் தேர்தலை வைப்பாரோ இல்லையோ, அவர் என்ன தந்திரங்களைச் செய்வாரோ இல்லையோ,வடக்கில் தேர்தல்களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.குறிப்பாக,பொது வேட்பாளர் என்ற விடயத்தை மையப்படுத்தி தேர்தல் களம் சூடுபிடித்த தொடங்கிவிட்டது. இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால்,பொது வேட்பாளரை எதிர்க்கிறவர்கள் யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளருக்குத்தான் தமிழ் வாக்குகளைச் சாய்த்துக் கொடுக்கப் போகிறார்கள். எந்த ஒரு தென்னிலங்கை வேட்பாளர் தமிழ் தரப்பு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சமரசத்துக்கு தயாராக இருக்கிறாரோ அவருக்கு தமிழ் வாக்குகளை சாய்த்து கொடுப்பது என்று மேற்படி தமிழ் அரசியல்வாதிகள் வெளிப்படையாக கூறுகிறார்கள். எனவே அவர்கள் தமிழ் வாக்குகளை சாய்த்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.