அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9217 topics in this forum
-
பொது வேட்பாளருக்கான ஓட்டம் புருஜோத்தமன் தங்கமயில் அடுத்த ஜனாதிபதி தேர்தலை முன்னிறுத்தி, ராஜபக்ஷர்களுக்கு எதிரான பொது வேட்பாளரைத் தேடும் பயணத்தில் தென் இலங்கை, மிகத் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, முன்னாள் அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஆகியோரைப் பொது வேட்பாளராக முன்னிறுத்தும் செயற்றிட்டங்களை எதிரணிக்குள் இருக்கும் பல்வேறு தரப்புகளும் முன்னெடுத்து வருகின்றன. இவர்களுக்குப் போட்டியாக ராஜபக்ஷர்களை ஏற்கெனவே தோற்கடித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், தன்னை மீண்டும் பொது வேட்பாளராக முன்னிறுத்தும் வேல…
-
- 0 replies
- 402 views
-
-
பொது வேட்பாளருக்கான கோரிக்கை..! ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்களாகக் கருதப்படுகின்ற கோத்தபாய மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவருமே தமிழ்மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலான தமது நிலைப்பாடு குறித்து எழுத்தில் எந்த விதமான உத்தரவாதத்தையும் தர முடியாது என கூறியுள்ளனர். அவர்கள் சார்ந்த பிரதான அரசியல் கட்சிகளாகிய பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன கூட இந்த விடயத்தில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள தமிழ்மக்கள் தொடர்பில் உறுதியான ஓர் அரசியல் கொள்கையை அல்லது நிலைப்பாட்டை வேட்பாளர்களும் கொண்டிருக்கவில்லை. அவர்கள் சார்ந…
-
- 0 replies
- 591 views
-
-
பொது வேட்பாளர் இனவாதத்தைத் தூண்டுவாரா? நிலாந்தன்! ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தினால் அவர் இனவாதத்தைத் தூண்டிவிடுவார், அதன்மூலம் ராஜபக்சக்களையும் அவர்களின் பொது வேட்பாளராக வரக்கூடிய ரணில் விக்கிரமசிங்கவையும் வெல்ல வைப்பதற்காக அவர் மறைமுகமாக உதவுவார் என்ற ஒரு வாதம் சில அரசியல்வாதிகளினாலும்,யாழ்ப்பாணத்திலிருந்து வரும் சில ஊடகங்களிலும் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றது.ஊடகங்களின் ஆசிரியர் தலையங்கங்களிலேயே அது தொடர்பாக எழுதப்படுகின்றது.ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் இனவாதத்தை தூண்டுவாரா?அவர் யாரோ ஒரு சிங்கள வேட்பாளரை நோக்கிச் செல்லும் வாக்குகளை கவர்வதன்மூலம்,அவரைத் தோற்கடித்து, அவருக்கு எதிராக நிற்கக்கூடிய மற்றொரு பிரதான சிங்கள வேட்பாளரை வெல்லவைக்கும் …
-
- 2 replies
- 466 views
-
-
பொது வேட்பாளர் தமிழ்த் தேசியத் தீவிரவாதியா? நிலாந்தன். அனுர,ரணில், சஜித் ஆகியோரின் தேர்தல் அறிக்கைகள் வெளிவந்துவிட்டன. எதிர்பார்க்கப்பட்டது போல அவை அமைந்திருக்கின்றன. 13க்கு அப்பால் அவர்களிடம் தீர்வு கிடையாது. மேலும் இனப் பிரச்சனைக்கான தீர்வை நோக்கி உருவாக்கப்படும் புதிய யாப்பு அடுத்த நாடாளுமன்றத்தில் தான் தீர்மானிக்கப்படும். இப்பொழுது கேள்வி என்னவென்றால், பிரதான தென்னிலங்கை வேட்பாளர்கள் எதைத் தர கூடும் என்பது தெளிவாகக் கூறப்பட்டு விட்டது. தபால் மூல வாக்கெடுப்புக்கு சில நாட்களே உண்டு. தமிழரசுக் கட்சி அதன் உத்தியோகபூர்வ முடிவை இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரை அறிவிக்கவில்லை. ஆனால் அதன் திருகோண மலைக் கிளை பொது வேட்பாளருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அ…
-
- 0 replies
- 554 views
-
-
பொது வேட்பாளர் பெற்ற வெற்றிகள் – நிலாந்தன். பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தியமை என்பதே முதலாவது வெற்றி. ஏனெனில் ஓர் அரசுடைய தரப்பு வைக்கும் தேர்தலை அரசற்ற தரப்பு எப்படி படைப்புத்திறனோடும் புதுமையாகவும் புத்திசாலித்தனமாகவும் எதிர்கொள்ள முடியும் என்பதற்கு பொது வேட்பாளர் ஒரு முன்னுதாரணம். அரசற்ற தரப்பு ஒன்று அரசாங்கம் நடத்தும் ஒரு தேர்தலை தன்னுடைய கூட்டு விருப்பை வெளிப்படுத்துவதற்கான ஒரு களமாக பயன்படுத்தியது ;அத்தேர்தல் களத்தைத் தேசத்தைத் திரட்டும் ஒரு பயில் களமாகாகக் கையாண்டமை என்பது முதலாவது வெற்றி. இரண்டாவது வெற்றி, பொது வேட்பாளர் தமிழ் மக்களை ஐக்கியப் படுத்துவதில் முதற்கட்டத் திரட்சியை ஏற்படுத்தியுள்ளார். அரியநேத்திரன் பெற்ற வாக்குகள் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரம்.…
-
-
- 10 replies
- 1k views
- 1 follower
-
-
பொது வேட்பாளர் வந்து விட்டார் - நிலாந்தன் தமிழ்ப்பொது வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு இப்பொழுது விடை கிடைத்து விட்டது. ஆனால் கடந்த சில வாரங்களாக அந்த கேள்வியை முன்வைத்து பல்வேறு விதமாக விமர்சிக்கப்பட்டது. தமிழ் மக்கள் பொதுச்சபையும் கட்சிகளும் சேர்ந்து உருவாக்கிய பொதுக் கட்டமைப்பினால் ஒரு பொது வேட்பாளரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது ஒரு மிகப்பெரிய பலவீனமாக உருப்பெருக்கிக் காட்டப்பட்டது. ஆனால் உண்மையில் நடந்தது என்ன ? தமிழ் மக்கள் பொதுச்சபை என்று அடக்கப்படும் அமைப்புக்கான முதலாவது கருநிலைச் சந்திப்பு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வவுனியாவில் இடம் பெற்றது. அதன் பின் தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஜூன் மாதம் 2…
-
- 0 replies
- 301 views
-
-
பொதுக் கட்டமைப்பும் மூன்று கட்சிகளும்! நிலாந்தன். தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகள் ஜனாதிபதியையும் எதிர்க்கட்சி தலைவரையும் சந்தித்திருக்கின்றன. ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்புச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அழைப்பு விடுத்தார்கள். கட்டமைப்பாக அழைக்கவில்லை. ஆனாலும் கட்டமைப்பில் உள்ள பெரும்பாலானவர்களை அழைத்தார்கள்.ஆனால் பொதுக் கட்டமைப்பாக அழைக்கிறோம் என்று அழைப்பில் குறிப்பிடப்படவில்லை. எதற்காக அழைக்கிறோம் என்றும் இரு தரப்புமே கூறவில்லை. இதில் மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் ஏழு பேர்களும் மேற்படி இரண்டு சந்திப்புகளுக்கும் செல்லவில்லை. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நா…
-
- 0 replies
- 444 views
-
-
பொதுஜன பெரமுன தோல்வியை நோக்கி…? February 11, 2022 — தொகுப்பு: வி.சிவலிங்கம்— கடந்த 09-2-2022ம் திகதி ஆளும் பொதுஜன பெரமுன கூட்டணியினர் அநுராதபுரத்தில் பெரும் கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். பெருஞ் செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட அக் கூட்டம் மக்களை நோக்கிய தமது புதிய பயணத்தின் ஆரம்பம் என பல பேச்சாளர்களும் தெரிவித்த போதிலும், விவசாயிகளை அதிகளவில் கொண்டிருக்கும் அப் பிராந்திய மக்கள் பிரதமர், ஜனாதிபதி போன்றோரின் பேச்சுகளுக்கு பெரும் கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. இவர்களின் உரைகளின்போது அவ்வப்போது மக்கள் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தத் தயங்கவில்லை. சிறீலங்கா சுதந்திரக் கட்சியினரை, விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில, வாசு, தினேஷ் குணவர்த்தன போன்ற பலரைக் …
-
- 0 replies
- 242 views
-
-
பொதுத் தேர்தலில் இலங்கை மக்கள் வழங்கிய ஆணையின் அர்த்தம் -பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட பொதுத் தேர்தலில் சகல எதிர்க்கட்சிகளையும் முக்கியத்துவமற்றவையாக்கி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுலபமாக சாதித்த ஏறத்தாழ 2/3 பாராளுமன்ற பெரும்பான்மை வெற்றி கடந்த காலத்தில் ஒரேயொரு சமாந்திரத்தை மாத்திரமே கொண்டிருந்தது. 1977 ஜூலை பொதுத் தேர்தலில் ஜே.ஆர்.ஜெயவர்தனா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற 6/5 பாராளுமன்ற பெரும்பான்மை வெற்றியே அதுவாகும். முக்கிய போக்குகள் 225 ஆசனங்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் பொதுஜன பெரமுன 145 ஆசனங்களை வென்றிக்கும் அதேவேளை, முன்னாள் ஆளுங்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் பரிதாபகரமான தோல்வியை சந்தித்திருக்கிறது. அந்தக் கட்சிக்கு ஒரேயொரு ஆசன…
-
- 0 replies
- 531 views
-
-
பொதுத் தேர்தலை நோக்கிய தமிழ்த் தேசியக் கட்சிகளின் நகர்வு புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜனவரி 22 பொதுத் தேர்தலுக்கான திகதி இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில், அந்தத் தேர்தலுக்கான அரங்கு, நாடு பூராகவும் களைகட்டத் தொடங்கிவிட்டது. கூட்டணிப் பேச்சுகள், வேட்பாளர் தெரிவு இழுபறிகள், சமூக ஊடகங்களில் சண்டை சச்சரவுகள் என்று, ஜனாதிபதித் தேர்தல் பரபரப்புகள் அடங்குவதற்குள், மீண்டுமொரு தேர்தல் பரபரப்புக் காட்சிகள். அதுவும், தென் இலங்கையைக் காட்டிலும், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், பொதுத் தேர்தலுக்கான பரபரப்பு என்பது, முன்கூட்டியே ஆரம்பித்துவிட்டது. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு என்பது, அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தேர்தல்களில் முதன்மையானது பொதுத் தேர்தலாகும். ஜனாதிபதித்…
-
- 0 replies
- 474 views
-
-
பொதுத் தேர்தல் எப்போது நடைபெறும்? முடிவெடுக்கப்போகும் இருவர்! நஜீப் பின் கபூர் வருகின்ற ஜூன் 20ல் தமக்கு பொதுத் தேர்தலை நடாத்துவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என தேர்தல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கின்றது. எனவே நாம் முன்கூட்டிச் சொல்லி இருந்தபடி இப்போது தேர்தல் அந்தத் தினத்தில் இல்லை என்பது உறுதி. அப்படியானால் எப்போது தேர்தல்? நாட்டில் சுமுகமான நிலை வந்த பின்னர்தான் தேர்தலா என்ற கேள்வி எழுகின்றது. அப்படியும் எதிர்பார்க்க முடியாது.! பொதுவாக நோக்குகின்ற போது நமது நாட்டில் கொரோனா இன்னும் தனது அட்டகாசத்தை பண்ணவில்லை. மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலைத்தான் அது இங்கு நடாத்தி வருகின்றது என்று சொல்ல வேண்டும். ஆனால் அது தனது நிலைப்பாட்டில் அப்…
-
- 0 replies
- 442 views
-
-
பொதுத் தேர்தல் களம் – 2024 November 8, 2024 — சின்னத்தம்பி குருபரன் — நிறுவனமயப்படுத்தப்பட்ட இலங்கைத் தமிழர் அரசியல் வரலாறு பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் 1878 இல் படித்த இலங்கையருக்கான பிரதிநிதித்துவம் சேர்.பொன்னம்பலம் இராமநாதனுக்கு வழங்கப்பட்டதில் இருந்து ஆரம்பமாகிறது. படித்த இலங்கையர் ஒருவரைத் தமிழர் சார்பாகத் தெரிவு செய்வதற்கான தெரிவுப் போட்டி 1878 இல் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சைவப் பிரகாச வித்தியாசாலை மண்டபத்தில் வை.விசுவநாதபிள்ளை தலைமையில் நடைபெற்றது. அதில் இராமநாதனும் பிரபல சட்டத்தரணி பிறிட்டோவும் போட்டியிட்டனர். தெரிவுக்கான விவாதம் நீடித்துக் கொண்டு போகவே ஆறுமுக நாவலர் தலையிட்டுச் சுமுகமாகத் தீர்த்து வைத்ததனால் பொன்னம்பலம் இராமநாதன் தெரி…
-
- 0 replies
- 356 views
-
-
பொதுத் தேர்தல் முடிவுகள் எமக்கு உரைக்கும் செய்திகள் பண்டிதத் தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் பாமரத் தமிழ் வாக்காளர்களும் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளைப் பற்றிப் பலரும் பல வியாக்கியானங்களைக் கொடுத்தாயிற்று. தேர்தல் காலத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தீவிர அர்ப்பணிப்புடன் ஆதரித்த ‘புத்திஜீவிகள்’ பலரும் இன்று தாம் சார்ந்த கட்சியின் படுதோல்விக்கு நகைக்கத்தகு அர்த்தங்களைக் கற்பித்துக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு வழங்கிய ஊடகவியலாளர்களில் நிலாந்தன் முதன்மையானவர். தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் இவர் எழுதிய “தமிழ் வாக்காளர்களை எப்படி விளங்கிக் கொள்வது?” என்ற கட்டுரையில் தமிழ்த் தேசிய…
-
- 0 replies
- 281 views
-
-
பொதுத்தேர்தலும் இனப்பிரச்சினையும் படம் | IBTIMES எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற தேர்தல் இலங்கையில் உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகு இடம்பெறுகின்ற இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தலாகும். சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கும் உருப்படியாக எந்தவொரு செயன்முறையையும் முன்னெடுக்காத தென்னிலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் இப்போது அந்தப் பிரச்சினைகள் குறித்துப் பேசத் தலைப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஜூலை 28ஆம் திகதி வெளியிட்ட அதன் விஞ்ஞாபனத்தில் அரசியலமைப்புக்க…
-
- 0 replies
- 193 views
-
-
பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாடு - 2013: சிறிலங்காவுக்கு நல்வாய்ப்பா, சவாலா? [ திங்கட்கிழமை, 28 ஒக்ரோபர் 2013, 08:58 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காவானது தனது நாட்டில் பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டை நடாத்துவதற்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வாய்ப்பின் மூலம், தன் மீது அனைத்துலக சமூகத்தால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிலிருந்து விலகிக் கொள்ள முடியும் எனக்கருதுகிறது. இவ்வாறு The Diplomat ஊடகத்தில் Salma Yusuf எழுதியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. நவம்பர் 2013ல் சிறிலங்காவில் முதன்முதலாக பொதுநலவாய அமைப்பின் அரசாங்கத் தலைவர்கள் ஒன்றுகூடும் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த உச்சி மாநாடானது பிறிதொர…
-
- 1 reply
- 789 views
-
-
பொதுநலவாய அமைப்பின் மாநாடும் சர்வதேச பிராந்திய சக்திகளின் வியூகங்களும் முத்துக்குமார் பொதுநலவாய அமைப்பின் மாநாட்டுக்கான ஆரவாரங்கள் ஆரம்பித்துவிட்டன. சிறிலங்கா அரசு மாபெரும் விழாவாக இதனைக் கொண்டாடுவதற்கு முயற்சிகளை எடுத்து வருகின்றது. பொதுநலவாய அமைப்பின் சின்னம் இலங்கை முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றது. தென்னிலங்கை ஊடகங்கள் இம் மாநாட்டிற்கு பாரிய முக்கியத்துவத்தை கொடுத்து வருகின்றன. எவ்வாறாவது சர்வதேச ரீதியாக இலங்கை மீது படிந்துள்ள கறைகளை அகற்றவேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டுவது தெளிவாகவே தெரிகின்றது. மறுபக்கத்தில் இம் மாநாடு தொடர்பான அமர்க்களங்களை வரலாற்றில் ஒருபோதும் இவ் அமைப்பு சந்தித்ததில்லை. இலங்கை அரசின் ஆரவாரங்கள், தமிழ்நாட்டின் போராட்டங்கள், இந்திய அரசின…
-
- 3 replies
- 1.1k views
-
-
பொதுநலவாய (கொமன்வெல்த்) அமைப்பிலுள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு அடுத்த மாத நடுப்பகுதியில் சிறீலங்காவின் ஹம்பாத்தோட்ட நகரில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை நடத்தி தங்கள் மீதுள்ள இனப்படுகொலை, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக் கறைகளை அழித்துவிடலாம் என்றெண்ணிய சிங்களத்தின் சிந்தனையில், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடில்லாமல் தற்போது அச்சம் படரத்தொடங்கியுள்ளது. மாநாட்டை சிறீலங்காவில் நடத்தமுனைந்து, வேலியிலை போன ஓணானை மடியிலை பிடித்துக் கட்டியவன் நிலையில் மகிந்த சிக்கித்திணறத் தொடங்கியுள்ளார். கறைகளைக் கழுவிவிடலாம் என்று எதிர்பார்த்த மாநாடு, மேலும் பல கறைகளை தங்கள் மீது ஏற்படுத்திக் கொடுக்கும் மாநாடாக அமைந்துவிடுமோ என்ற அச்சமே இதற்குக் காரணம். ஏற்கனவே, மனித உரி…
-
- 1 reply
- 879 views
-
-
பொதுநலவாய மாநாடும் இந்தியாவும் - யதீந்திரா கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்குகொள்ளுமா, இல்லையா என்னும் வாதப் பிரதிவாதங்கள் தொடர்கின்றன. ஆனால் இந்தியாவின் பக்கத்திலிருந்து உறுதியான செய்திகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையில், 'டைம்ஸ் ஒப் இந்தியா' கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பதிலாக, இந்தியாவின் துணை குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரி பங்குபற்றக்கூடுமென்று செய்தியிட்டுள்ளது. இதேபோன்று, சமீப நாட்களாக கொழும்பில் இடம்பெறும் கொமன்வெல்த் மாநாட்டை கடுமையாக விமர்சித்துவரும் கனேடிய பிரதமருக்குப் பதிலாக, பிறிதொரு உயர்மட்டக் குழுவினர் அனுப்பிவைக்கப்படுவர் என்று செய்திகள் வெளியாகியிருந்தன. கடந்த ஆண்டு, 58 வது கொமன்வெல்த் பாராளுமன்ற அமர்வு (Commo…
-
- 0 replies
- 706 views
-
-
பொதுப்பட்டியல்’ யோசனை புருஜோத்தமன் தங்கமயில் அடுத்த மாகாண சபைத் தேர்தலில், தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து பொதுப் பட்டியலில் போட்டியிடுவது தொடர்பிலான உரையாடலொன்று ஆரம்பித்திருக்கின்றது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல், முதல் காலாண்டுக்குள் கட்டுப்பாட்டுக்குள் வருமாயின், வருடத்தின் நடுப்பகுதியில் மாகாண சபைகளுக்கான தேர்தலை அரசாங்கம் நடத்தும் வாய்ப்புள்ளது. புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதன் ஊடாக, 13ஆவது திருத்தத்தை மலினப்படுத்தி, மாகாண சபைகள் என்கிற அலகை இல்லாமல் செய்யும் திட்டத்தோடு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இருந்தார். ஆனால், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கரின் அண்மைய இலங்கை விஜயம், கோட்டாவின் திட்டத்தைத் தடுத்து நிறுத்தி இருக்கின்றது. …
-
- 0 replies
- 714 views
-
-
பொதுமக்களின் காணிகளை மீளவழங்க வேண்டியதன் அவசியம் வடக்கு, கிழக்கில் படையினரின் தேவைக்கென சுவீகரிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் முற்றுமுழுதாக விடுவிக்கப்படவேண்டுமென்று தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. யுத்தம் முடிவடைந்து 8 வருடங்கள் ஆகப்போகின்ற நிலையில் கூட இன்னமும் பொதுமக்களின் காணிகள் படையினரின் தேவைக்கென பயன்படுத்தப்பட்டு வருகின்றமை ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடு அல்ல. பொதுமக்களின் காணிகள் அதிபாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்தப்பகுதி மக்கள் தொடர்ந்தும் இடம்பெயர்ந்தவர்களாகவே தங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக…
-
- 0 replies
- 251 views
-
-
பொதுமக்களின் நேர்மையே கொரோனாவுக்கான மருந்து எம்.எஸ்.எம். ஐயூப் கொரோனா வைரஸ் என பொதுவாக அனைவராலும் அழைக்கப்படும் ‘கொவிட்-19’ என்ற புதிய நோய், இனம், மதம், சாதி, அரசியல் கட்சி வேறுபாடுகளைப் பாராமல், நாடுகளில் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், முழு உலகையும் பற்றிப் படர்ந்து, உலகையே உலுக்கிக் கொண்டுள்ளது. ஆனால், அதையும் தமது இனவாத நோக்கங்களை நிறைவு செய்து கொள்வதற்காகச் சில ஊடகங்கள் முயல்கின்றன. கடந்த 11 ஆம் திகதி,…
-
- 0 replies
- 456 views
-
-
பொதுமக்கள் மீது அதீத அக்கறை உள்ள தலைவரே பிரபாகரன் - விடுதலைப் போராட்டம் வீறு கொள்ளும் - பொட்டம்மான் இன் விசேட செவ்வி காலத்தின் தேவை கருதி பிரசுரமாகிறது. http://www.sooriyan.com/index.php?option=c...id=3535&Itemid=
-
- 0 replies
- 1.3k views
-
-
பொதுமன்னிப்பு..? | அரசியல் + விடுதலை
-
- 0 replies
- 455 views
-
-
பொதுவேட்பாளர் கண்டுபிடிப்பு: சிறுவர்களின் குரும்பட்டித்தேர்! August 15, 2024 — கருணாகரன் — தமிழ்ப்பொது வேட்பாளராக(?) ஒருவரை (பா.அரியநேத்திரனை) க் கண்டு பிடித்ததைப் பெருஞ்சாதனையாக தமிழ்ப்பொது வேட்பாளருக்கான(?) பொதுச்சபையினர் அறிவித்து, ஆரவாரப்படுகின்றனர். அரசியல் பெறுமானத்தில் இது நகைப்புக்குரியதாக (கோமாளிதனமாக) இருந்தாலும் அவர்களைப் பொறுத்தவரையில் இது பெரும் சாதனைதான். சிறுவர்கள், குரும்பட்டியில் தேர் செய்வதைப்போல (அது அந்தச் சிறுவர்களுக்கு படு சீரியஸான விடயமாகவே இருக்கும்) விளையாட்டாகத் தொடங்கப்பட்ட “பொதுவேட்பாளர்” விடயம், ஒரு மெய்யான தேராகுவதற்குப் பல சிக்கல்களைக் கொண்டதென்று அவர்கள் எண்ணியிருக்கவில்லை. போகப்போகத்தான் அதனுடைய சிக்கல்களும் சிரமங்கள…
-
- 0 replies
- 519 views
-
-
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் - நிலாந்தன் http://www.nillanthan.com/wp-content/uploads/2021/02/145377100_2924361514555281_3747239739275689807_n.jpg http://www.nillanthan.com/wp-content/uploads/2021/02/145755501_1772859666229754_422559254108004209_n.jpg 2009 மேக்குப்பின் ஒரு முன்னாள் ஜேவிபி முக்கியஸ்தர் என்னோடு கதைக்கும்போது சொன்னார்…தமிழ் மக்களின் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதோடு தென்னிலங்கையில் இருக்கக்கூடிய எதிர்ப்பு அரசியல் வெளியும் பெருமளவுக்கு தோற்கடிக்கப்பட்டு விட்டது என்று. ஏன் என்று கேட்டேன். அரசாங்கத்தை எதிர்க்கலாம் அரசுக்கு எதிராகப் போராடலாம் என்று துணிச்சலை தமிழ் மக்களின் போராட்டம் முழு இலங்கைக்கும் கொடுத்தது. அது தோற்கடிக்கப்பட்டதோடு இனி அர…
-
- 1 reply
- 504 views
-