Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முயல்கின்றது என முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை மற்றும் கிரான் பிரதேச செயலக பிரிவிலுள்ள தமிழ் கிராமங்களை ஓட்டமாவடி மற்றும் கோரளைப்பற்று மத்தி செயலக பிரிவுகளுடன் இணைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் ஒன்றிணைந்து கடந்த திங்கட்கிழமை பத்திரிகையாளர் மாநாடொன்றை நடாத்தி முழுப் பூசனிக…

    • 0 replies
    • 1k views
  2. முஸ்­லிம்­க­ளுக்கு தலைமை தாங்க கட்சி வேண்டும் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு தேசிய ரீதியில் தலைமை தாங்கக் கூடிய அர­சியல் கட்சி ஒன்றின் அவ­சியம் உண­ரப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் காங்­கிரஸ் அத்­த­கை­ய­தொரு இடத்­தினைப் பெற்றிருந்­தது. ஆனால் முஸ்லிம் காங்­கிரஸ் தன் செல்­வாக்­கிலும், கொள்கைப் பின்­பற்­று­த­லிலும் தொடர்ச்­சி­யாக வீழ்ச்­சி­ய­டைந்து கொண்டு செல்­வ­தனால் தேசிய ரீதியில் அர­சியல் தலை­மைத்­துவம் கொடுக்கக் கூடிய தகு­தியை இழந்து கொண்­டி­ருப்­ப­தாக அர­சியல் ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர் . இதனால், அக்­கட்சி தமது நிலையை தக்க வைத்துக் கொள்ள வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. முஸ்­லிம்­க­ளி­டையே பல அர­சியல் கட்­சிகள் உள்­ளன. அவை முஸ்லிம் சமூ­கத்­திற்­கு­ரிய அர­சியல் நட­…

  3. முஸ்­லிம்­களும் அர­சியல் சூதாட்­டமும்! சஹாப்தீன் முஸ்லிம் கட்­சிகள் மற்­று­மொரு அர­சியல் சூதாட்­டத்­திற்கு தங்­களை தயார்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றன. அதா­வது, உள்­ளூ­ராட்சி சபை­களின் தேர்­த­லை­ய­டுத்து தற்­போது மாகாண சபைத் தேர்­த­லுக்­கு­ரிய முன்­னெ­டுப்­புக்­களை மேற்­கொண்­டுள்­ளன. முஸ்லிம் கட்­சிகள் காலத்­திற்கு காலம் வரும் தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்­கா­ன­தொரு கரு­வி­யாக மட்­டுமே செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. முஸ்லிம் சமூகம் எதிர்­கொண்­டி­ருக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களைப் பெற்றுக் கொடுப்­ப­தற்கு முஸ்லிம் தலை­வர்கள் நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தில்லை. தேர்தல் காலங்­களில் மக்­க­ளுக்கு வழங்­கப்­படும் வாக்­கு­று­திகள் தேர்தல்…

  4. முஸ்­லிம்­களை நெருங்கும் ராஜ­பக்‌­ஷாக்கள்! முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்‌ஷ, முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்‌ஷ உட்­பட ராஜ­பக்‌ஷ குடும்­பத்­தினர் அண்மைக் கால­மாக முஸ்லிம் சமூ­கத்­து­ட­னான தமது உறவை மீள்­பு­துப்­பிக்க ஆரம்­பித்­தி­ருப்­பதை பகி­ரங்­க­மா­கவே அவ­தா­னிக்க முடி­கி­றது. முஸ்லிம் அமைப்­பு­களைச் சந்­தித்தல், முஸ்­லிம்­களின் பொது நிகழ்­வு­களில் பங்­கேற்றல், இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்­வு­களை நடத்­துதல் என பல வகை­களில் இந்த உறவு புதுப்­பித்தல் நிகழ்­வுகள் நடந்­தேறி வரு­கின்­றன. கோத்­த­பாய ராஜ­பக்‌ஷ 'எளிய' அமைப்பை ஆரம்­பித்து 2020 ஆம் ஆண்டை நோக்­கிய தனது அர­சியல் வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்ற ந…

  5. முஸ்லிம் - தமிழ் உறவின் எதிர்காலம் நகமும் சதையும் போன்ற தொடர்பைக் கொண்டிருந்த முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான உறவு, இப்போது பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அபாயா விவகாரம் உள்ளடங்கலாக, இரண்டு இனங்களுடனும் தொடர்புபட்ட பல விடயங்களை, வெளிப்புறச் சக்திகள் தங்களுடைய நலனுக்காக அரசியலாக்கி, பூதாகரமாக்கி விடுகின்றமையாலும், தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளாலும் இந்த உறவில், கீறல் விழத் தொடங்கியுள்ளதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இன நல்லிணக்கம் பற்றிப் பேசிப்பேசியே உள்ளுக்குள் பகைமைத் தீயை வளர்த்துக் கொண்டிருக்கும் சமூகங்களாக, சிறுபான்மையினர் மாறி…

  6. முஸ்லிம் அரசியலும் பள்ளிவாசல்களும் முஸ்லிம்களின் வரலாற்றில் அரசியல், சமூகம், பொருளாதாரம் என்று எல்லா விடயங்களிலும் பள்ளிவாசல்களுக்கு முக்கிய இடமிருக்கின்றது. பள்ளிவாசல்கள் ஊடாக முஸ்லிம்கள் வழிப்படுத்தப்படுவதும் அதை மையமாகக் கொண்டு, ஒரு குடையின் கீழ் சமூகம் வருவதும் முன்னொருபோதும் நிகழ்ந்திராத ஒன்றல்ல. அரசியல்வாதிகளுக்கு பயந்து கொண்டும் பள்ளி நிர்வாகத்தின் வரையறுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்குள் நின்றுகொண்டும் பள்ளிவாசல்கள் செயற்படுவதால், அல்லது பள்ளியில் அரசியல் கதைப்பது வேண்டத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என்று நினைப்பதால், கடந்த பல வருடங்களாகப் பெரும்பாலும் பள்ளிவாசல்களில் வாராந்த குத்பா (நல்லுபதேச) பிரசங்கம் உள்ளடங்கலாக…

  7. முஸ்லிம் அரசியல்: கூர் மழுங்கிய கருவிகள் “ஒரு மரத்தை வெட்டுவதற்கு, எனக்கு ஆறு மணி நேரம் வழங்கப்பட்டால், அதில் நான்கு மணி நேரத்தைக் கோடாரியைத் தீட்டுவதற்கே பயன்படுத்திக் கொள்வேன்” என்று ஆபிரஹாம் லிங்கன் சொன்னார். எல்லாச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் கருவிகள் தேவையாக இருக்கின்றன. கருவிகள் என்பவை ‘ஆயுதங்களாக’ மட்டும் இருப்பதில்லை. ஒரு தேர்தலில் வெற்றி பெறுவதற்குப் ‘பிரசாரம்’ என்பது மிக முக்கியமான கருவியாகும். அரசியலில் வெற்றி பெறுவதற்கும், வெற்றிகரமாக அரசியலை மேற்கொள்வதற்கும் கருவிகள் அவசியமாகும். ஆனாலும் அரசியலரங்கில் கணிசமானோர, கூர் மழுங்கிய கருவிகளை வைத்துக் கொண்டுதான், கட்சிகளையும் அதனூடாக அரசிய…

  8. முஸ்லிம் அரசியல்: சண்டையில் கிழியாத சட்டை யாரும் தவறாக நினைத்து விடுவார்களோ என்பதற்காகத் தமது கருத்துகளை, ஒளித்து வைத்திருப்பது, புத்திசாதுரியமான செயற்பாடு அல்ல; அப்படிச் செய்வது சந்தர்ப்பவாதத்தின் உச்சமமாகும். ஒரே நேரத்தில் எல்லோரையும் திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சிகள், நம்மை நயவஞ்சகர்களாக மாற்றி விடக்கூடும். சொல்ல வேண்டிய விடயத்தைச் சொல்ல வேண்டிய தருணத்தில், சொல்லாமல் விடுவதென்பது, நமக்கு நஷ்டத்தையே கொண்டு வரும். புதிய அரசமைப்புக்கான செயற்பாடுகள் நடந்து வருகின்றன. தமிழ் அரசியல் தரப்புகள், தமது சமூகம் சார்பில், தமக்கான தேவைகளை உச்சபட்சம் முன்வைத்துள்ளன. இலங்கையானது, மாகாணங்களின் அல்லது மாநிலங்களின் ஒன்றியமாக இருத்தல…

  9. முஸ்லிம் அரசியல்: மூன்றாவது அணி? மொஹமட் பாதுஷா / 2018 டிசெம்பர் 28 வெள்ளிக்கிழமை, மு.ப. 08:21 மந்திரவாதிகள், பரிகாரிகள் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, ஏதாவதோர் அமானுஷ்ய சக்தியை, தம்மோடு வைத்திருப்பார்கள். இவற்றைத் தீயசக்திகள் என்றும் ஜின்கள் என்றும் அழைப்பதுண்டு. இதற்கொப்பாக, தமக்கு விரும்பியவற்றைச் செய்விப்பதற்காக, பெருந்தேசியமும் வெளிநாடுகளும் கட்டமைப்புகளையும் அணிகளையும் முகவர்களையும் கொண்டிருக்கின்றன. அவ்வாறே, உலகில் உள்ள பல வல்லரசு நாடுகள், தமது அரசியல், இராணுவ, பிராந்திய நலன்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, தாமாகவே அரசியல் கட்சிகளையும் ஆயுதக் குழுக்களையும் செல்வாக்குச் செலுத்தக் கூடிய அணிகளையும் உருவாக்கி, ஊட்டி வளர்ப்பது, இப்போத…

  10. முஸ்லிம் அரசியல்வாதிகள்: மக்களின் நிலைப்பாடு என்ன? மொஹமட் பாதுஷா / 2018 நவம்பர் 02 வெள்ளிக்கிழமை, மு.ப. 10:49 Comments - 0 உலக அரசியல் அரங்கில், நாமறிந்த காலத்தில் கேள்விப்பட்டிராத அரசியல் திருப்பமொன்று, இலங்கையில் ஏற்பட்டிருக்கின்றது. ஒரு திரைப்படத்தின் ‘கிளைமக்ஸ்’ காட்சி போல, அன்றேல் திருப்புமுனை போல, இந்த மாற்றம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால், இந்த நகர்வுகள் எங்கே சென்று முடியப் போகின்றன என்பதும் அவை, முஸ்லிம்கள் மீது, எவ்வாறான விளைவுகளைக் கொண்டு வரப்போகின்றன என்பதும்தான் தெரியவில்லை. நல்லாட்சி அரசாங்கம், சாத்தியமான எதிர்பார்ப்புகளுடன் உருவாக்கப்பட்டது என்பதையும் அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆணை, முன்னைய ஆட்சியாளர்களுக்கு எதிரான…

  11.  முஸ்லிம் ஆயுதக்குழு கதைகளின் வரலாறு சில மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாத்துக்கே அவப்பெயரை ஏற்படுத்திக் கொண்டு இயங்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் என்றழைக்கப்படும் கொடூர பயங்கரவாத அமைப்புடன் சேர்வதற்காக இலங்கையிலிருந்து 36 பேர் சிரியாவுக்குச் சென்றுள்ளதாகப் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டிஆரச்சி கடந்த ஜனவரி மாதம் ஊடகவியலாளர்களிடம் கூறினார். அவ்வியக்கத்தில் சேர்வதற்காக இலங்கையிலிருந்து நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் சிரியாவுக்குச் சென்றுள்ளதாகக் கடந்த வாரம் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது நாடாளுமன்றத்தில் கூறினார். முப்பத்து ஆறு ஒன்பது மாதங்களுக்குள…

  12. முஸ்லிம் எதிர்ப்பு அரசியலின் இழிநிலை -மொஹமட் பாதுஷா முஸ்லிம் சமூகம் ஒன்றிணைந்த செயற்பாட்டையும் காத்திரமான அரசியல் நகர்வுகளையும் வேண்டி நிற்கின்ற ஒரு கால கட்டத்தில், முஸ்லிம் கட்சிகளுக்கு இடையிலான எதிர்ப்பு அரசியல் மிகவும் சிறுபிள்ளைத்தனமான வழித்தடத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. பெரிய புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டு அறிவிலித்தனமான, பக்குவப்படாத வேலைகளை மேற்கொள்கின்ற அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள், தொண்டர்கள், கட்சி ஆதரவாளர்களின் செயற்பாடுகளால் முஸ்லிம் அரசியலானது ஓர் அடிகூட முன்நகராமல் இன்னும் ஆரம்பித்த இடத்திலேயே நிற்கின்றது. அத்துடன், முஸ்லிம் மக்களுக்கான அரசியலாக அது தம்மைப் புடம்போட்டுக் கொள்ளவும் இல்லை. முஸ்லிம்கள் இணக்க அரசியலுக்குப்…

  13. முஸ்லிம் கட்சிகளின் தேசியப் பட்டியல் கதை முஸ்லிம் சமூக அரசியலில், பதவிகள் என்பது மிகவும் செல்வாக்குச் செலுத்துகின்ற ஒரு விடயமாக மாறியிருக்கின்றது. பதவிகளும் அதனூடான அதிகாரமும் இருந்தால், மக்களுக்கு நிறையச் சேவை செய்வதற்கான பலம், தானாகவே வந்துவிடுவதாக ஒரு கருத்துநிலை தோன்றியிருக்கின்றது. இதில் உண்மையில்லாமலும் இல்லை. ஆனால், முஸ்லிம் அரசியலில் பதவிகளை வைத்துக் கொண்டிருப்பவர்கள் எத்தனைபேர், இந்தச் சமூகத்துக்காக, அந்தப் பலத்தை உச்சமாகப் பயன்படுத்தி இருக்கின்றனர்? பதவியிருந்தால் சாதித்துக் காட்டுவோம் என்று சொன்ன எத்தனைபேர், நிஜத்தில் அதைச் செய்து காட்டியிருக்கின்றார்கள் என்ற கேள்விக்கு, வெட்கப…

  14. முஸ்லிம் காங்கிரஸும் ஊன்றுகோலும் ‘திருவிழா என்று’ உவமிக்குமளவுக்கு தேர்தல் காலம் இன்னும் களைகட்டவில்லை. அதற்கு இன்னும் கொஞ்சம் நாளெடுக்கும். தேர்தல் தினம் அறிவிக்கப்பட்ட தினத்துக்கும், தேர்தல் நாளுக்குமிடையில் 50 நாட்கள் இடைவெளி இருந்தமைதான் இதற்குக் காரணமாகும். இன்னும் இரண்டு வாரங்கள் கழியும் போதுதான், தேர்தல் காலம் களைகட்டத் தொடங்கும். ஆனாலும், திருவிழா அளவுக்கு தேர்தல் காலம் களைகட்டும் என்பதற்கு, நடக்கும் நிகழ்வுகள் கட்டியம் கூறுகின்றன. வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து நடந்தவற்றை எல்லாம் வைத்தும் பார்க்கும்போது, தேர்தல் காலம் களைகட்டுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே தெரிக…

  15. முஸ்லிம் கூட்டமைப்பின் இலட்சணங்கள்? http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-07-16#page-9

  16. முஸ்லிம் கூட்டமைப்பு: அதிகரிக்கும் சாத்தியங்கள் ‘ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்’ என்று இஸ்லாம் மார்க்கம் சொல்கின்றது. ஆனால், குறிப்பாக இலங்கைச் சோனகர்களின் வாரிசுகள் எந்தளவுக்கு அதைப் பின்பற்றுகின்றார்கள் என்பது பெரிய கேள்வியாக இருக்கின்றது. தம்முடைய மார்க்கம் சொல்கின்றது என்பதற்காகவோ அல்லது சமூகவியல் நலன்களை அடிப்படையாகக் கொண்டோ, இலங்கை முஸ்லிம்களும் அவர்களது தலைவர்களும் ஒற்றுமைப்பட்டுச் செயற்படுவதைக் காண்பது மிக அரிதாகவே காணப்படுகின்றது. மாற்றுக்கருத்தியல் என்பது காத்திரமான வாதங்களுக்கும் ஆரோக்கியமான இறுதித் தீர்மானங்களுக்கும் வித்திடும் என்ற நிலை மாறி, அது கருத்து வ…

    • 1 reply
    • 709 views
  17. முஸ்லிம் கூட்டமைப்பு: புதுவழியில் பயணிக்கும் முஸ்லிம் அரசியல் தமிழர்களுக்கான அரசியலில், ஒன்றிணைந்து செயற்படுவதற்காக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்முரண்பாடுகளும் கீறல்களும் விழுந்துகொண்டிருக்கின்ற ஒரு காலசூழலில், முஸ்லிம்களுக்கான கூட்டமைப்பொன்று, ‘ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு’ என்ற பெயரில் உதயமாகி இருக்கின்றது. தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில், அஹிம்சை ரீதியாகப் போராடிய தமிழரசுக் கட்சியுடன், ஆயுதத் தொடர்புள்ள இயக்கங்களாக ஒரு காலத்தில் அறியப்பட்ட அரசியல் கட்சிகளும் இணைந்து உருவாக்கப்பட்ட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போல, முஸ்லிம் சமூகத்துக்கிடையே அரசியல் செய்து கொண்டிருக்கின்ற அகில இலங்கை மக்கள…

  18. http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-04-16#page-5 முஸ்லிம் கூட்டமைப்புக்கான சாத்தியத் தன்மை

  19. முஸ்லிம் சமூகத்தின் அடுத்த நகர்வு? மொஹமட் பாதுஷா / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 04:48 - 0 - 42 அதன்பின்னர், புதிய அரசாங்கம், மாகாண சபைத் தேர்தலுக்குச் செல்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் தென்படுகின்றன. கோட்டாபய ராஜபக்‌ஷ வெற்றிபெற்று, நாட்டின் ஜனாதிபதியாகியுள்ள நிலையில், உடனடியாக நாட்டின் எல்லா விதமான ஆளுகைக் கட்டமைப்பிலும் ‘மொட்டு’வின் ஆட்சியை உருவாக்குவதே, நீண்டகாலம் ஆட்சியில் கோலோச்சுவதற்கு வழிவகுக்கும். இதன் அடிப்படையில், முன்னைய அரசாங்கத்தைப் போலன்றி, துணிந்து தேர்தல்களை நடத்த, புதிய அரசாங்கம் முனைப்புக் காட்டுகின்றது. அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஏப்ர…

  20. இலங்­கையில் கால் நூற்­றாண்­டுக்கும் மேலாக நீடித்த உள்­நாட்டு யுத்தம், நாட்டின் அனைத்து சமூ­கங்­க­ளையும் பாதித்­தது. இந்த யுத்­தத்தில் இலங்கை முஸ்லிம் சமூகம் சந்­தித்த இழப்­புக்­களும், அவர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­களும் பெரும்­பாலும் போதி­ய­ளவு ஆவ­ணப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பது கவலை தரும் உண்­மை­யாகும். உயிர் மற்றும் உடைமை இழப்­புக்கள், பள்­ளி­வாசல் படு­கொ­லைகள், வடக்கு முஸ்­லிம்­களின் வெளி­யேற்றம், குருக்­கள்­மடம் படு­கொலை என பல சம்­ப­வங்கள் முஸ்­லிம்­களின் வர­லாற்றில் ஆழ­மான தழும்­பு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. யுத்தம் முடி­வ­டைந்து பல வரு­டங்கள் கடந்த பின்­னரும், இந்த இழப்­புக்கள் பற்­றிய முழு­மை­யான பதி­வுகள், ஆவ­ணங்கள் எல்­லோரும் அணுகக் கூடிய வகையில் இல்லை என…

    • 0 replies
    • 161 views
  21. முஸ்லிம் சமூகமும் உணர்ச்சி அரசியலும் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஜனவரி 15 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:17 அரசியல் என்பது விஞ்ஞானமாகும். அதனால், அது அறிவுபூர்மாக அணுக வேண்டிய விவகாரமாகவுள்ளது. மறுபுறம், அரசியலை கலை என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். சிலருக்கு அரசியல் வியாபாரமாகும். சிலருக்கு அதுவே முழுநேரத் தொழிலாகவும் இருக்கிறது. அரசியலை விஞ்ஞானபூர்வமானதொரு விடயமாக விளங்கிக் கொண்டவர்கள், அதை அறிவு ரீதியாக அணுகுவார்கள். அரசியலை உணர்வுபூர்வமான விடயமாக மட்டுமே புரிந்து வைத்திருப்பவர்களுக்கு, அவர்களின் விருப்பத்துக்குரிய கட்சி, “மதம்” போல் இருக்கும். அரசியலை முற்றுமுழுதாகவே, உணர்வுபூர்வமாக அணுகும் சமூகம், தனக்கான விடிவைப் பெற்றுக் கொள்வது சாத்தியமில்லை. …

  22. முஸ்லிம் சமூகம் திருந்தாத வரை அரசியல்வாதிகளை திருத்த முடியாது மொஹமட் பாதுஷா ஒரு பிள்ளைக்கு, சிறு வயதிலிருந்தே பூனையைக் காட்டி, “இதுதான் யானை” என்று சொல்லிப் பழக்கி வந்தால், அந்தப் பிள்ளை பெரிய ஆளாக வளர்ந்தாலும், உண்மையான யானையை, யானை என்று ஏற்றுக் கொள்ளத் தயங்கும். பூனையே அதனது எண்ணங்களில், யானையாக இருக்கும். இது எல்லாவற்றுக்கும் பொருந்தும். குறிப்பாக, ஒரு சமூகம் எவ்விதமான அரசியல் கோட்பாடுகளால், கலாசாரத்தால் கட்டமைக்கப்படுகின்றதோ, எவ்விதம் அரசியல் மயப்படுத்தப்படுகின்றதோ, அதையே ‘சரியான அரசியல் வழிமுறை’ என்று நம்பிக் கொண்டிருக்கும். அவ்வாறு நம்பிக் கொண்டிருக்கும் காலம் வரைக்கும், சமூகம் தன்னை மாற்றிக் கொள்ளவும் மாட்டாது; அரசியல்வாதிகள் திரு…

    • 0 replies
    • 363 views
  23. முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம்: அவசியம்தான்; ஆனால்...! பைஸ் முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைக் கொண்­டு­வர அர­சாங்கம் தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாக செய்­திகள் வெளி­யா­னதைத் தொடர்ந்து அது தொடர்­பான வாதப் பிர­தி­வா­தங்­களும் சந்­தே­கங்­களும் சர்ச்­சை­களும் தோற்றம் பெற்­றி­ருக்­கின்­றன. இதுவே இன்று முஸ்­லிம்கள் மத்­தியில் பிர­தான பேசு­பொ­ரு­ளாக மாறி­யி­ருப்­ப­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது. இரு வாரங்­க­ளுக்கு முன்னர் நடை­பெற்ற அமைச்­ச­ரவைத் தீர்­மா­னங்­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்­டி­லேயே இச் சட்­டத்­தி­ருத்தம் தொடர்­பான தகவல் வெளி­யி­டப்­பட்­டது. ''முஸ்லிம் சட்­டத்தின் கீழ் திரு­மணம் முடிப்­ப­தற்­கான…

  24. முஸ்லிம் தனியார் சட்டம்: திருத்தமும் வருத்தமும் மொஹமட் பாதுஷா முஸ்லிம் தனியார் சட்டத்தைத் திருத்துவதற்கான முயற்சிகள் நாட்டில் சிறியதொரு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் சலுகைக்காக முஸ்லிம்களின் உரிமை மீது அரசாங்கம் கைவைக்கப் போகின்றதா என்ற முன்னெச்சரிக்கை உணர்வு, முஸ்லிம்களின் மத உணர்வை தூசுதட்டியிருக்கின்றது. ஓர் இனம் சார்பான சட்டத்தைத் திருத்துகின்ற செயன்முறை, இன்று இரண்டு இனங்களுக்கு இடையிலான முரணாக, அரசாங்கத்துக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான நம்பிக்கை இழத்தலின் ஆரம்பமாக அமையும் அளவுக்கு சிக்கலான ஒரு கட்டத்துக்கு வந்திருக்கின்றது. 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் தனியார் சட்டமே இலங்கையி…

  25. முஸ்லிம் தலைமைகளின் இரா­ஜி­னாமா நாடகம்: அர­சியல் இரா­ஜ­தந்­தி­ர­த்தின் உச்சம் முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அமீ­ரலி, அப்­துல்லாஹ் மஹ்றூப் ஆகியோர் ஜுலை 29ஆம் திகதி மீண்டும் அமைச்­சர்­க­ளாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லையில் பதவிப் பிர­மாணம் செய்து கொண்­டார்கள். ஆயினும், முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான முன்னாள் இரா­ஜாங்க அமைச்­சர்கள் பைசால் காசிம், ஹரிஸ், அலி­சாஹிர் மௌலானா ஆகியோர் அமைச்சர் பத­வி­களை ஏற்றுக்கொள்­ள­வில்லை. இவர் க­ளையும் அமைச்சர் பத­வி­களை ஏற்றுக் கொள்­ளு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கேட்டுக் கொண்­டமை குற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.