Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் பற்றிய எனது கணிப்பீடு : பி.ஏ.காதர் பி.ஏ.காதர் - 1994 ஜனாதிபதி தேர்தலின் போது சந்திரிகா குமாரதுங்கவின் தேர்தல் அமைப்புக்குழுவில் முழு மலையகத்திற்குமான ஒரே ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டவர். இலங்கை அரசியல் யாப்பு பற்றியும் தேர்தல் சீர்திருத்தம் பற்றியும் தனது பல்வேறு ஆய்வுகட்டுரைகளை பல்வேறு கருத்தரங்குகளில் சமர்ப்பித்தவர். இத்துறையில் சிறப்பு தகைமை கொண்ட இலங்கையின் அனைத்து புத்திஜீவிகளோடும் தொடர்பு வைத்திருந்தவர். சந்திரிகாவினால் அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவு குழுவின் முன்னிலையில் மலையக மக்கள் முன்னணியின் சார்பில் பிரேரணைகளை முன்வைத்து வாதாடிய அனுபவமும் இவருக்குண்டு. ஒருதடவை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானால் ஹோட்டல் கலதாரியில் ஏற்பாட…

  2. ஜனநாயகமும் ஜனநாயக துஷ்பிரயோகமும் கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன் வன்னியில் போர் மிக உக்கிரமாக நடந்து கொண்டிருந்த நாட்கள் அவை. தினமும் சாவு. நூற்றுக்கணக்கானவர்கள் காயம். இரத்தம் பெருக்கெடுத்தோடிய நாட்கள். அவலம் பெரும் நாடகமாடியது. மனிதர்கள் செயற்றுப் போனார்கள். செயலற்றுப் போகும்போது எதுவும் வெறும் சடம் என்ற நிலை உருவாகிறது. அப்படித்தான் மனிதர்கள் அப்போது அங்கே இருந்தார்கள். காற்றில் எற்றுண்டு போகும் சருகுகளாக, ஆற்றில் அள்ளுண்டு போகும் துரும்பாக. அங்கே எவரிடமும் கனவுகளில்லை. எதிர்காலம் பற்றிய எந்த எண்ணங்களுமில்லை. நினைவுகள் மங்கிக் கொண்டிருந்தன. கண்ணீர் நிரம்பி, அந்தப் பாரம் தாங்க முடியாமல்; கால்கள் புதைய மணலில் தள்ளாடி நடக்கும் மனிதர்களே அந்தச் சிறிய, ஒடுங்கிய கடற்கரைய…

  3. அரசியல் என்பது கடவுள் வாதமல்ல யதீந்திரா அரசியல் என்பது அடிப்படையில் ஓர் அறிவியல் என்பதையே நம்மில் பலர் அடிக்கடி மறந்துவிடுவதுண்டு இத்தனைக்கும் அவர்கள் நமது சூழலின் முன்னேறிய பிரிவினரும் கூட. கருத்தியல் அர்த்தத்தில் அரசியல் ஒரு விஞ்ஞான வாதமாகும். அதனால்தான் அரசியல் விஞ்ஞானம் (Political Science) என்று அழைக்கிறோம். ஆனாலும் என்னதான் இதுபற்றி அறிவில் நாம் முதிர்ந்தவர்கள் என்று பேசிக் கொண்டாலும் உணர்வெழுச்சிக்கு ஆட்பட்டு, அவ்வப்போது அரசியலை ஒரு மதவாதப் பண்புடனேயே அணுக முற்படுகிறோம், அணுகியும் வருகிறோம். அரசியல் எப்போதெல்லாம் கடவுள்வாதப் பண்பைப் பெறுகிறது? அரசியலில் பல்வேறு புரிதல்களுக்கு இடமுண்டு என்பதை மறுக்கும்போது, ஒரு அரசியல் நிலைப்பாடு முற்றிலும் எதிர்பா ரா…

  4. (வேறொரு தலைப்பிற்கு பதிலாக எழுதப்பட்ட கருத்தாயினும் தாயகத்தின் இன்றைய தேவை கருதி இங்கு தனித்தலைப்பில் இணைத்திருக்கிறோம். இது தொடர்பில் உங்கள் கருத்துக்கள் நிலைப்பாடுகள்.. இந்த முன்மொழிவுகளில் இருக்கக் கூடிய குறைகள் நிறைகள்.. அவற்றை எவ்வாறு சீர்செய்வது.. எப்படி அந்நிய ஆதிக்கத்தில் இருந்து எமது பொருண்மியத்தை மீட்டு எமதாக்குவது என்பவற்றை இட்டு உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்.) தமிழர் தாயகத்தில் சிங்கள ஆதிக்கமும் இந்திய வல்லாதிக்கமும் வலுப்படுவதை அனுமதிக்கக் கூடாது. புலம்பெயர்ந்த மக்கள் அங்கு முதலீடுகளைச் செய்வதோடு மேலதிக வருவாயை புலம்பெயர் நாடுகளுக்கு எடுத்து வர வேண்டும் அல்லது தாயகத்தில் கட்டுமானத்தில் முதலீடாக்க வேண்டும். சிறீலங்காவில் சேமிப்புக்களை வைப்பதை விட்டு ச…

    • 7 replies
    • 2.3k views
  5. செம்மணி. ஈழக்களத்தில் கடந்த 15 ஆண்டுகளில் இரண்டு கட்டங்கள் முக்கியமான கட்டங்கள். அவை இரண்டும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டவை. ஒன்று சந்திரிக்கா அம்மையார் ஆட்சிக்காலத்திலும் (95-2005) மற்றையது தற்போதைய மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்திலும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. சந்திரிக்காவின் வெளித்தோற்றம் சமாதான தேவதை. உள்நோக்கம் போர், தமிழ் இன அழிப்பு. மகிந்தவின் வெளித்தோற்றம் உள்நோக்கம் எல்லாமே போர் மற்றும் இன அழிப்பு. இவர்களின் நோக்கங்களை நிறைவு செய்ய எப்போதும் தயார் நின்றவர்களில் ஒருவர் தான் சரத் பொன்சேகா. சந்திரிக்கா அம்மையார் காலத்தில் தான் யாழ்ப்பாண இடம்பெயர்வு என்ற பெரிய இடம்பெயர்வை தமிழ் மக்கள் அனுபவித்தனர். அது சந்திரிக்கா ஏவிவி…

  6. சிறீலங்காவில் 1983 இல் நிகழ்ந்த இனக்கலவரத்தின் போது தென்னிலங்கை வாழ் சிங்கள விசுவாசத் தமிழர்கள் உட்பட பலரும் ஜே ஆர், காமினி, லலித் அத்துலத்முதலி உட்பட்ட சிங்களத் தலைமைகள் ஏவிவிட்ட காடையர்களின் பிடியில் சிக்கி சித்திரவதைப்பட்டு இறந்ததும்.. துன்பப்பட்டதும் கண்டு அண்டை நாடான இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கொஞ்சம் பதறித்தான் போனார். அவரின் பதட்டத்திற்கு காரணமாக இருந்தது தமிழர்கள் சிங்களவர்களால் துன்பப்படுத்தப்பட்டது என்பதிலும்.. அன்றைய ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனவின் அமெரிக்க - இஸ்ரேல் - பாகிஸ்தான் நெருக்கமே. அப்போது இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை என்பது பனிப்போர் காலத்திற்கான ஒன்றாக இருந்ததுடன் அமெரிக்க எதிரியான சோவியத் யூனியனை மையப்ப…

    • 10 replies
    • 1.6k views
  7. நான்கு நிகழ்வுகளும் அவை சொல்லும் செய்திகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நான்கு முக்கியமான நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளன. தமிழீழ தேசிய தலைவரின் தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் இறுதி நிகழ்வுகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தி. மகேஸ்வரன் நினைவான மணிமண்டபம் திறப்பு விழா, தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு, மகிந்தவின் யாழ்ப்பாண வருகை என்பனவே அந்த நிகழ்வுகள் ஆகும். அந்நிகழ்வுகள் சொல்லும் செய்திகள் முக்கியமானவை. இந்த நிகழ்வுகள் சொல்லும் செய்தி என்ன? தமிழர்களது போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கான நகர்வில் இவற்றின் பங்கு என்ன? என்பன தொடர்பில் ஆராய்கிறது இப்பத்தி. தமிழீழ தேசிய தலைவரின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை பாரிசவாத நோயினால் படுக்கையில…

    • 0 replies
    • 822 views
  8. காங்கிரஸைச் சந்தி சிரிக்கவைத்த எஸ்.வி.சேகர் வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். அப்படி நம்மைச் சிரிக்கவைப்பவர் எஸ்.வி.சேகர். 2 நாளுக்குமுன் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் அவருடனும் புலவர் புலமைப்பித்தனுடனும் கலந்துகொண்டேன். தமிழக முதல்வர் கருணாநிதி நடத்தப்போகும் செம்மொழி மாநாட்டைப் பற்றிய விவாதம் என்பதால், எடுத்த எடுப்பிலேயே விவாதத்தில் சூடு பறந்தது. ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதைத் தடுக்க அறிவித்ததைப் போலவே தி.மு,க.வினர் பதவி விலகியிருந்தாலும் காங்கிரஸ் விலகியிருக்காது என்று விவாதத்தின்போது சேகர் குறிப்பிட, காங்கிரசார் எந்த அளவுக்கு தமிழின விரோதிகள் என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்ததற்காக நான் பாராட்டினேன். அந்த அர்த்தத்தில் சொல்லவில்ல…

    • 0 replies
    • 811 views
  9. முள்ளிவாய்க்கால் சாட்சியமற்ற களமாக மாற்றப்பட்டது உலகிற்கு நன்கு தெரிந்தே நடந்தது. விடுதலைப்புலிகள் எதற்காக இராணுவ ரீதியல் பலவீனமான ஒரு கடற்கரைக்குள் மக்களையும் போராளிகளையும் கொண்டு சென்றார்கள் என்பது பற்றி.. யாருக்கும் எதுவும் தெரியாது..! முள்ளிவாய்க்கால்.. புதுக்குடியிருப்பை தக்க வைத்தபடி இருந்த புலிகளுக்கு காடு சார்ந்த பல பிரதேசங்களை தக்க வைத்துக் கொள்ள தெரியவில்லையா.. அல்லது அத்துணை முக்கியத்துவம் அறியாதவர்களாக புலிகள் இருந்தார்களா என்பதும் கேள்வி..! வெளி உலகத் தொடர்பிற்காக கடற்கரையை புலிகள் தெரிவு செய்தார்கள் என்பது அத்துணை ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம் அல்ல. ஒரு லட்சம் இந்தியப் படைகள் சூழ்ந்து நிற்க மணலாறை அதனை அண்டிய காடுகளை கடற்கரையை தேர்வு செய்த புலிகளுக்கு 50…

    • 10 replies
    • 5.5k views
  10. ஸ்ரெயிட் பார்வேர்டாக மேட்டருக்கு வந்துவிடுகிறேன்.. ஏன் தமிழ் ஈழத்தை இந்தியாவுடன் இணைத்துவிடக்கூடாது ? ஒரு இந்திய மாநிலமாக மாறிவிடுங்களேன் ? ஏற்கனவே இருக்கிற மொழிவாரி மாநிலத்தில் ஒன்றாக இணைந்துவிடுங்களேன் ? இந்தியாவின் அருமை பெருமைகளை பட்டியல் போட்டால் ஒருவேளை நீங்கள் இந்த திசையிலும் யோசிக்கலாம்... 1. அணுகுண்டு வெடித்திருக்கிறோம்..பிரமோஸ், அக்னி என்று பல அணு ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து கடன் வாங்கிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் தயாரித்திருக்கிறோம்.. 2. நிலாவுக்கு ராக்கெட் விட்டுள்ளோம்...மறுபடி ரஷ்யாவின் உதவியுடன் கிரயோஜெனிக் எஞ்சின் பொருத்தி நிலா நிலா ஓடிவா பாடலை நிஜமாக்கியுள்ளோம்... 3. விமானந்தாங்கி கப்பல் வைத்துள்ளோம்...ஐ.என்.எஸ் விக்ராந். சோமாலிய…

  11. ஈழத் தமிழ்ப் பேசும் மக்கள் தனித் தேசிய இனம்? சபா நாவலன் தேசம் தேசியம் அவற்றின் உட்கூறுகளெல்லாம் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சமூக விஞ்ஞான விவாதக் கருப்பொருளாக அமைந்திருந்தது. 50 ஆயிரம் தமிழ் பேசும் அப்பாவி மக்களை கொன்று குவித்த இலங்கை, இந்திய அரசுகள் இணைந்து நிகழ்த்திய இனப்படுகொலைக்குப் பின்னதாக, முகாம்களில் நடத்தப்படுகின்ற இனச்சுத்திகரிபிற்கு எதிராக குறைந்த பட்ச இணைவிற்குக்கூட வரமுடியாத தமிழ் பேசும் மக்கள் கூட்டத்தின் மத்தியிலிருந்து இப்பிரச்சனை குறித்த விவாதம் முன்னெடுக்கப்படுமா என்பது சந்தேகத்திற்குரியதாகினும் சமூக அக்கறை உள்ள சக்திகளின் மத்தியிலேனும் இது தொடர்பான கருத்துக்களை முன்வைக்க வேண்டிய தேவை உணரப்பட வேண்டும். தேசிய இனப்பிரச்சனை தொடர்பான கருத்தா…

  12. ஈழப்போரின் பின் அமேரிக்காவின் இலங்கை பற்றிய புதிய நிலை ? உங்கள் ஏல்லோரதும் கவணத்திற்கு ...! நேரடியாக ஊற்றிலிருந்து ...! நேரமிரந்தால் தயவுசெய்து தமிழிலே மொழி பெயர்ததுவிடுங்கோ, நன்றி. LETTER OF TRANSMITTAL UNITED STATES SENATE, COMMITTEE ON FOREIGN RELATIONS, Washington, DC, December 7, 2009. DEAR COLLEAGUES: The administration is currently evaluating U.S. policy toward Sri Lanka in the wake of the military defeat of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), one of the world’s deadliest terrorist groups. It…

  13. Started by உமை,

    தமிழர்கள் அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம்... - It is a powerful film மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் - ஒரு சுருக்கமான வரைவு (The Battle of Algiers - By Gillo Pontecorvo) உலக வரைப்படத்தில் ஆப்பிரிக்காவின் தலைப்பகுதியில் துனிஷியாவுக்கும் மொராக்கோவுக்கும் இடையில் ஸ்பெயினுக்கும் கீழே இருக்கும் நாடுதான் அல்ஜீரியா. கொடிய மிருகங்கள் நிறைந்த அந்த காட்டு நிலப்பகுதியை நெடுங்காலமாக ஆதி பழங்குடியினர் மட்டுமே தங்களுக்கான வாழ்விடமாக புழங்கி வந்தனர். காலமெனும் மேகங்கள் அந்த காட்டுப்பகுதியின் மேல் மெல்ல கடந்து போக மொராக்கோ துனிஷியா வழியாக வந்த ஆப்பிரிக்கர்களும் ரோமர்களும் காஸ்தானியர்களும் இதர ஐரோப்பியர்களும் இந்த இடத்தைப் பண்படுத்தி நி…

  14. இது தெட்ட தெளிவான யுத்தம். போரின் இரு புறத்திலும் அவரவர் தமக்கே உரிய ஆயுதங்களை தேர்வு செய்து கொள்கின்றனர் ‐ அருந்ததி ராய் டெஹல்காவின் ஷோமா சௌத்ரிக்கு வழங்கிய நேர்காணல் 05 November 09 11:24 am (BST) ஷோமா: நாடு முழுவதும் வன்முறை வளர்ந்த வண்ணம் இருப்பதைக் காணும் இச்சூழலில், அந்த அடையாளங்களிலிருந்து நீங்கள் என்ன உணருகிறீர்கள்? இதன் பின்னணியை எவ்வாறு நாம் இனங்காண வேண்டும்? அருந்ததிராய் : இந்த அடையாளங்களை (வன்முறையின்) காண்பதற்கு நீங்கள் ஒன்றும் தலைசிறந்த அறிவாளியாக இருக்க தேவையில்லை. தீவிர நுகர்வு கலாசாரத்தினாலும், முன்முனைப்புள்ள பேராசை வெறி கொண்டும் ஊட்டி வளர்க்கப்பட்டுள்ள மத்திய தர வர்க்கம் நம்மிடையே உள்ளது. மூலாதாரங்களை சுரண்டுவதற்காக அடிமை உழை…

  15. ஈழத்தமிழர்களுக்காக சீமான் அவர்கள் வழங்கிய நேர்காணலை காண்பதற்கு http://www.2tamil.com/?pgid=srilankasn

  16. "என்னைப்பெத்த ராசாவே கொஞ்சம் சேதி கேளு ராசாவே! உண்ணாமல் இருப்பதாக சொன்னாக உருகிப் போனேன் உயிரோடு புதைஞ்ச சனம் யாரை நம்பிப் புதைஞ்சதையா உண்ணாமச் செத்த சனம் உலகநாட்டைப் பார்த்ததையா வெளிநாட்டுத்தமிழரால விடிவெள்ளி பூக்குமெண்டு வழிநெடுகப் பார்த்த சனம் இப்ப வவுனியாவில் கிடக்குதையா கனிமொழியும் வருவாளோ கனிபழமும் தருவாளோ முள்ளுக்கம்பி பின்னால முளிபிதுங்கி நிற்பவரே மகிந்த ராசபக்சா மகிமைதனைப் பாரீரே" http://unarvukall.blogspot.com/

  17. தலையங்கத்தை பார்த்து பதில் மயங்க வேண்டாம். இது நோர்வேயில் எனக்கு தனிப்பட்ட முறையில் நிகழ்ந்த வேதனைகள். முடிந்தால் இதனை அடிப்படையாக வைத்து எதாவது அலசுங்கள். 1.நோர்வேயின் புலிகளின் குரல் "தமிழ்முரசம்" எதற்காக சிவப்பு கட்சிக்கு வாக்கு போடுவதுதான் தமிழருக்கு நன்மை என்று பட்டும் படாமல் பிரசாரம் செய்ய முயன்றது??? தொழிற்கட்சியில் புலிகளின் இன்னொரு ஆதரவாளர் போட்டியிடும் போது? 2்். சாதி ரீதியில் இங்கு ஆதரவாளர் பிரிந்துள்ளதாக வந்த தகவல் உண்மையா? 3.கேபி நெடியவன் என நாங்கள் இரு குழுக்களாக இருக்கிறோமா? 4். இதில் எது ஒட்டுக்குகுழு? 5்்். நான் மாதாந்தம் அனுப்பும் பணம் எங்கே போகிறது??????? நேர்மை இல்லாமல் எதை செய்தாலும் அது தற்காலிகம்தான்.

  18. ஏதோவொரு பிடிப்பில், நம்பிக்கையில், ஆதார அச்சில், எதிர்பார்ப்பில், காத்திருப்பில், ஒரு புள்ளியை நோக்கிய பயணமாக இருந்த வாழ்க்கை தேங்கிவிட்டது. இரவில் அடர்காட்டில் திசை தொலைத்த திகைப்பினை நினைவுறுத்துகின்றன இந்நாட்கள். முன்னைப்போல நண்பர்களின் முகங்களை எதிர்கொள்ள முடிவதில்லை. சந்திப்புகளைத் தவிர்த்துவிடுகிறோம். தொலைபேசி எண்களைக் கண்ணெடுக்காமலே நிராகரித்துவிடுகிறோம். எல்லாவற்றிலும் சலிப்பும் மந்தமும் படர்ந்துவிட்டிருக்கிறது. பிடிவாதமான சிறையிருப்புகளை மீறி யாரையாவது பார்த்துவிட நேரும்போது, ‘தயவுசெய்து அரசியல் பேசவேண்டாம்’என்று கேட்டுக்கொள்கிறோம். ஆனால், பேச்சு முட்டி மோதி அங்குதான் வந்து தரைதட்டுகிறது. பழகிய, புளித்த, சலித்த, விரும்பாத வார்த்தைகளை நாம் பேசவும் கேட்கவும் செய்…

  19. இன்ரபோலால் தேடப்பட்ட கேபி எந்த நாட்டில் கைது செய்யப்பட்டார்? எந்த நாட்டு நீதிமன்றத்தால் நாடு கடத்துப்பட்டார்? அல்லது சட்ட விரோதமாக இலங்கை அரசு அவரை கடத்தியதா? அல்லது அவரை காட்டிக் கொடுத்த நாடு தனது நீதிபதிகளை மதிக்க வில்லையா? அல்லது????? சரி எதுவாக இருந்தாலும் இன்ரபோலின் விசாரணை நடந்த பின்னர்தானே அவர் நாடு கடத்தப்பட்டிருக்க வேணும். உண்மையில் என்ன நடந்தது?

    • 5 replies
    • 1.2k views
  20. ஆப்கானிஸ்தான் ஒரு பார்வை ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 970 views
  21. //தமிழீழத் தேசியக் கொடி. (image:.eelamweb.com)// சிறீலங்கா என்ற நாமம் 1972ம் ஆண்டு வரை உலக வரைபடத்தில் இருக்கவில்லை. அதுவரை அது சிலோன் அல்லது இலங்கை என்றே இருந்தது. 1948 இல் சிலோன் பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற உழைத்தவர்களில் சேர் பொன் இராமநாதன்,பொன்னம்பலம், அருணாச்சலம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். சோல்பரி என்ற ஆங்கிலேயப் பிரபுவின் முன் சிலோனுக்கு சுதந்திரம் அளிக்க முதல் 50:50 என்ற அரசியலமைப்புத் திட்டம் முன் மொழியப்பட்டது. அதில் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தோர் 50% அரசாங்கத்தில் இடம்பெற வாய்ப்பளிப்பதாக இருந்தது. ஆனால் அப்போதைய சில தமிழர்கள் தலைமைகள் அதை ஏற்க மறுத்து சிங்களவர்களும் நாமும் சகோதரர்களாக வாழ்வோம் என்று சொல்லி ஆங்கிலேயர்கள் தர முன்வந்ததைய…

    • 4 replies
    • 1.3k views
  22. K.P. அண்ணனிற்கு ஒரு பகிரங்கக் கடிதம் எமக்கு ஏற்பட்டு பாரிய பின்னடைவைத் தொடர்ந்து எங்களை மீட்க நல்லதொரு மீட்பன் வரமாட்டாரோ என்ற ஏக்கத்தில் இருக்கும் பல இலட்சம் ஈழத் தமிழ் உறவுகளில் ஒருவனாய் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். சிங்கள அரசு இன அழிப்பை ஆணவத்துடன் செய்து முடித்தபின் சொல்லொணாத் துயரத்தில் இருந்த எமக்கு அந்த இறுதிநாட்களில் வன்னியில் நடந்தேறியவற்றை பக்குவமாகச் எடுத்துரைத்து உண்மைகளை உணர்ந்து ஏற்று அடுத்தது என்ன என்று சிந்திக்கவும் வைத்தீர்கள். தொடர்ந்து வந்த உங்கள் அறிக்கைகளில் உலகத்தமிழர் அனைவரிடமிருந்தும் துறைசார் அறிஞரிடமிருந்தும் ஆக்கபு}ர்வமான கருத்துக்களையும் செயல்திட்டங்களையும் எதிர்பார்ப்பதாகவும் கூறினீர்கள். பாரிய பின்னடைவுகள் தந்த பாடங…

    • 7 replies
    • 1.1k views
  23. சே குவாரா பொலிவியாவில்தான் இருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்த் சி.ஜ.ஏ.,அதிர்ந்து போனது.பலவிதமாக யோசிக்கத் தொடங்கினார்கள்.பொலிவியா எழைமை வேரூன்றியுள்ள ஒரு நாடு. லேசாக உரசினாலும் புரட்சித் தீ பேயாகப் பற்றிக் கொள்ளும்.சே முரட்டுதனமானவர்.அவர் போகிற வேகத்தை வைத்துப் பார்த்தால் ,ஒட்டுமொத்த லத்தீன் அமேரிக்காவயும் முழுவதுமாக விடுவித்துவிட்டுத்தான் ஒய்வார் போல் இருக்கிறது. விடக்கூடாது.சேவைத் தேடும் பணி முழுமூச்சுடன் முடுக்கிவிடப்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் பொலிவியாவைச் சேவிடமிருந்து பாதுகாப்பதில் பொலிவிய அரசாங்கத்தைவிட,அமேரிக்காவுக

    • 5 replies
    • 1.7k views
  24. சேகுவேரா வரலாற்றின் நாயகன்-1 17 ஆண்டுகளுக்கு முன்னர் சேகுவேரா பற்றி முதலில் படிக்கத் தொடங்கியது முதல் என்னை விடாமால் துரத்திய இந்த வரலாற்று நாயகனை, வாழ்வை, அவரது போராட்ட வரலாற்றை, அவரது தாக்கத்தை தேட ஆரம்பித்தேன். அவரைப் பற்றிய புத்தகங்கள், ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் என தொடர்ந்த தேடலின் விளைவு இந்த தொடர். கடந்த வருடம் பனித்துளி என்ற வலைப்பதிவில் சேகுவேரா பற்றி எழுத துவங்கினேன். வேறு பதிவுகளில் கவனம் செலுத்தியதால் வரலாற்றின் நாயகனை பற்றி எழுதுவதில் தடங்கல் ஏற்பட்டது. தொடர்ந்து சே வரலாறை ஆலமரத்தில் எழுதுவேன். இந்த தொடர் முழுவதும் சே அவர்களை பற்றியதாக இருந்தாலும் சேகுவேராவின் கொள்கையை ஆதரிக்கிற பல சாதாரண மனிதர்களை உலகின் சில பகுதிகளிலிருந்து அவ்வப்…

  25. சுயத்தைத் தொலைத்தவர்கள் ஒட்டகம் புகுந்த வீடு, ஒட்டகத்தாரின் தொ(ல்)லைபேசி இலக்கம் இப்படியான பொழுதுபோக்கான வியங்களை எழுதும்போது அதிகமான களத்துறவுகள் ஓடிவந்து படித்தீர்கள். நாணல் ஆள் புதிதாக இருந்தாலும் கைலாக்குக் கொடுத்து ஊக்குவிக்கும்விதத்தில் பதில் கருத்துக்களும் மெல்ல எழுதத் தொடங்கினீர்கள். ஆனால் மத்தியஸ்தம். செய்தது, செய்துகொண்டிருப்பது, செய்யவேண்டியது என யதார்த்தமாக சிந்திக்க வேண்டிய அழுத்தமான கருத்துக்களை மீள் ஆய்வு செய்ய வேண்டிய விடயங்களை மெல்ல உங்கள் முன் வைக்கத் தொடங்கியதும். ஒரு சின்ன இடைவெளி. பதில் கருத்தை முன்வைக்கத் தயக்கம். யாரிந்த நாணல்? நல்லவனோ? இல்லைக் கெட்டவனோ? பசுத்தோல் போர்த்திய புலியோ? புலித்தோல் போர்த்திய குள…

    • 4 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.