அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
ஈழத் தமிழர் ஆதரவைக் குலைத்திட உளவு நிறுவனங்களின் சதி பின்னணியில் நிற்கும் மர்ம மனிதர் எம்.கே. நாராயணன்! அவர்தான் தமிழ்நாட்டில் உளவுத் துறையை பின்னணியில் இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் மர்ம மனிதராக, அதிகார வட்டாரங்களில் பேசப்படுபவர். தமிழ் ஈழத்தில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து, மிகப் பெரும் யுத்தத்துக்கு, சிறீலங்கா அரசு தயாராகி வரும் நிலையில், இந்தியாவின் உளவு நிறுவனங்கள் தமிழ்நாட்டில், தங்களது திரைமறைவுப் பணிகளை வேகம் வேகமாக முடுக்கி விட்டு வருவது பளிச்சென்று தெரிகிறது. பல்லாயிரக்கணக்கான அகதிகள் சிங்கள ராணுவத்தின் கொடூரத் தாக்குதலிலிருந்து தப்பி, குடும்பம் குடும்பமாக தமிழகம் நோக்கி அகதிகளாக ஓடி வருகிறார்கள். இந்திய கடலோரக் காவல்படை - இந்திய கப்பல் …
-
- 1 reply
- 1.1k views
-
-
கூட்டு ரோந்து’ என்ற பெயரில் அரங்கேறும் கூட்டு சதி! தமிழ்நாட்டில் அலுமினியம் தொடர்பான உருளைகள், ‘பால்சு’கள், உற்பத்தி செய்வோர் எல்லோருமே இப்போது விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் தயாரிக்க உதவுவோராகக் கருதப்பட்டு, கைது செய்யப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் அலுமினிய உருளைகள் - உளவுத் துறையினரால் ‘அணுகுண்டுகளாக’ கருதப்படுகின்றன. அடுத்து, தமிழ்நாட்டில் பாலித்தின் துணி தயாரிப்பாளர்கள்கூட கைது செய்யப்படலாம். விடுதலைப்புலிகள் ஆயுதங்களைப் பொட்டலம்கட்ட பாலித்தின் துணி தயாரித்தவர்கள் என்று, உளவுத்துறை கூறினாலும் வியப்பதற்கு இல்லை. ஏதோ தமிழ்நாடே விடுதலைப்புலிகளின் தளமாக மாறிவிட்டதைப் போல் ஒரு பொய்யான தோற்றத்தை, உளவுத்துறை உருவாக்குகிறது. ‘தினத்தந்தி’, ‘தினகரன்’, ‘தினமலர்’,…
-
- 0 replies
- 772 views
-
-
உலகில் விமானப்படைக் கொண்ட ஒரே இயக்கம் களமிறங்கியது, ‘வான்புலி’ப் படை விடுதலைப்புலிகளின் விமானப்படை ஈழ விடுதலைப் போராட்டக் களத்தில் இறங்கி விட்டது. மார்ச் 26, 2007 - தமிழின வரலாற்றில், நீங்கா இடம்பெற்ற நாளாகும். உலகிலேயே எந்த ஆயுதம் தாங்கிப் போராடும் விடுதலை இயக்கமும் விமானப்படையைக் கொண்டிருக்கவில்லை. தமிழ்ஈழ விடுதலைப் புலிகள் மட்டுமே இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளனர். ஏற்கனவே தரைப்படையும், கடல்படையும் தம்மிடம் கொண்டுள்ள விடுதலைப்புலிகள் இப்போது ‘வான்புலி’களையும் களத்தில் இறங்கியிருப்பது சிங்களப் பேரினவாத ஆட்சியை நிலை குலையச் செய்து விட்டது. உலகமும், வியந்து பார்க்கிறது. வன்னியிலிருந்து புறப்பட்ட புலிகளின் இரண்டு போர் விமானங்கள், கொழும்பிலிருந்து 23 கிலோ மீட்…
-
- 0 replies
- 1.4k views
-
-
சீர் மங்கும் மேதினம் ` நாளை மே முதலாம் திகதி. மேதினி எங்கும் மேதினம் தொழிலாளர் திருநாள் அனுஷ்டிக்கப்படும் வேளை அது. எனினும் இம்முறை இலங்கையில் அது மே முதலாம் திகதிக்கு முதல் நாளான இன்று இடம்பெறுகின்றது. முன்னைய வருடங்களில் தசாப்தங்களில் கொண்டாடப்பட்டமைபோல எழுச்சியாக, மலர்ச்சியாக, உத்வேகத்தோடு இப்போதெல்லாம் மேதினம் அமைவதில்லை என்பது தெளிவு. உழைப்பாளர் வர்க்கத்தின் உழைப்பைப் போற்றி, அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் எழுச்சிக் கோஷத்தோடு கொண்டாடப்படும் மேதினத்தின் சிறப்பும், தொனியும் காலம் செல்லச் செல்ல இப்போது மங்கி வருவது கண்கூடு. இதற்குக் காரணம் என்ன? உலக ஒழுங்கு மாறி வருவதே இதற்கு அடிப்படை. அது எங்ஙனம் என்பதை இந்த உழைப்பாளர் தினத்தில் அசைபோடுவது பொர…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கை கொடி, கண்டியை ஆண்ட கடைசி தமிழ்மன்னன் விக்ரமராஜசிங்கனுடயது. பிரித்தானியானியர் இறுதியாக கைப்பறியபிரதேசம் கண்டி ராஜ்ஜியம், ஆதலால் இலங்கை சுதந்திரம் அடைந்தபோது சம்பிரயாத முறைப்படி கண்டி தமிழ் மன்னனின் கொடியாகிய சிங்க கொடியை ஏற்றி இலங்கைக்கு சுதந்திரத்தை கொடுத்தார்கள். How national is our National Flag? By: C. V. Vivekananthan Courtesy: Sunday Times - February 2, 2003 Article Tools E-mail this article Printer friendly version Comments [ - ] Text Size [ + ] The 'Lion Flag' of the last King of Kandy, was hauled down when the Kandyan Convention was signed on March 2, 1815. Though it was buried in the sand of…
-
- 0 replies
- 1.5k views
-
-
புலிகள் வலையில் படைகளா..?? படைகள் வலையில் புலிகளா...?? விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட கட்டு நாயக்கா விமான தள தாக்குதலின் பின் அமைதியாகவிருந்த இலங்கை இராணுவ களம் மீண்டும் களைகட்ட ஆரம்பித்துள்ளது. அண்மையில் நடந்த இராணுவ கட்டமைப்பில் ஏற்ப்படுத்தப் பட்ட மாற்றத்தின் பின் தற்போது இலங்கையில் மீண்டும் ஒரு போர் பீதி ஆரம்பித்துள்ளது. இலங்கை அரசுகளாலும் அந்த மக்களாலும் மிகவும் நேசிக்கப்படுபவரும் தமிழின அழிப்பின் கத நாயகனுமானவரும் மணலாற்றில் பல நூறு போராளிகளை காவு எடுத்தவருமான ஜெனகே பெராராவே இந்த மாற்றத்திற்காண அடிப்படை கரணமாக அமைகிறார். அண்மையில் பல படை தளங்களிற்கு சென்று அந்த கள நிலமைகளை அவதானித்து பல உத்தரவுகளையும் போரியல் தந்திரங்களையும் தெரிவித…
-
- 0 replies
- 982 views
-
-
Exclusive Post Only in Yarl Forum.. அரச சார்பற்ற அமைப்பான Centre for Policy Alternatives.. கொழும்பில் உள்ள Social Indicator என்ற புள்ளிவிபரம் சேகரிக்கும் அமைப்பின் உதவியோடு சிறீலங்காவில் நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பில் போர் மூலம் புலிகளைத் தோர்க்கடித்து அதன் பின் பேச்சுவார்தைகள் மூலம் தீர்வு எட்ட வேண்டும் என்ற எண்ணப்பாடு சிங்கள மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளமை வெளிப்பட்டுள்ளது..! பெரும்பாலான சிங்களவர்கள் மகிந்தவின் செயற்பாடுகளை ஆதரிப்பதோடு அவர் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணுவார் என்றும் நம்புகின்றனர்..! பெரும்பாலான சிங்கள மக்கள் புலிகள் போர் நிறுத்ததைக் சரி வர கடைப்பிடிக்கவில்லை என்று கருதுகின்றனர்..! பெரும்பாலான சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் அரசு மன…
-
- 2 replies
- 1.5k views
-
-
சதாம் உசேன்- அமெரிக்காவின் அவசரம் அமெரிக்க ஆங்கிலோ ஏகாதிபத்தியத்தின் கடுமையான நிர்பந்தத்திற்கு அடிபணிந்து, இராக் பொம்மை அரசாங்கம், சதாம் உசேனை அவசர அவசரமாக 30.12.2006 அன்று இந்திய நேரப்படி காலை 8.30 மணிக்குத் தூக்கிலிட்டுக் கொன்று விட்டது. 23ஆண்டுகாலம் இராக்கில் மிருகத்தனமான கொடுங்கோலாட்சி நடத்தியவர் சதாம் என பி.பி.சி., சி.என்.என்.,போன்ற ஏகாதிபத்திய ஊடகங்கள் மணிக்கணக்கில் செய்துவரும் வர்ணனைகள் இந்தக் கொடிய சர்வதேசக் குற்றத்தை நியாயப்படுத்த முனைகின்றன. ‘மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்’ இழைத்ததாக சதாம் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இவற்றிலொன்றுதான், 1982 இல் டுஜைய்ல் என்னும் இராக்கிய கிராமத்தில் 148 ஷியா முஸ்லிம்களைக் கொலை செய்ய அவரும் குற்றம் சாட்டப்பட்ட பி…
-
- 1 reply
- 1.1k views
-
-
உலகச் செல்வமும் ஏழ்மையும் உலகமயமாதல். திறந்துவிடப்பட்ட உலக சந்தை என்று வந்த பிறகு உலகப் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகின் செல்வ வளமும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உலகமயமாதல் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்று எங்கும் பேசப்படுகிறது. அதேநேரத்தில், உலகமயமாதலால் பெருஞ்செல்வந்தர்கள் உருவாகுகிறார்கள். ஏழ்மை குறையவில்லை என்றும் பல அறிஞர்களால் கவலையுடன் பேசப்படுகின்றது. "உலகமயமாதலால் ஏழை, பணக்காரர்கள் வித்தியாசம் அதிகரித்து வருகிறது. ஆகவே, உலகமயமாதலே முடிவுக்கு வரக்கூடும்" என்று சமீபத்தில் சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற உலகப் பொருளாதாரக் கூட்டத்தில் உலக வங்கித் தலைவர் கூறியது குறிப்பிடத்தக்கது. வருடாவருடம் உலகின் மி…
-
- 0 replies
- 1.2k views
-
-
விடுதலைப்புலிகளின் வான் தாக்குதல் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை இலங்கை அரசாங்கமும் சர்வதேசமும் எப்படி எண்ணுகிறது அல்லது இத் தாக்குதலின் மூலம் விடுதலைப் புலிகள் எதனை விளங்கப் படுத்துகிறார்கள் என்பதை இரண்டு பேருமே உணர்ந்தார்களா என்பதை நாம் பார்ப்போமாக இருந்தால். முதலில் விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலின் அடிப்படை நோக்கம் என்ன என்பதை யோசித்துப் பார்த்தால். ஓரளவாவது அதனை புரிந்து கொள்ள முடியும். ஒரு இராணுவ பலம் என்பதை எத்தின எதிரியை கொல்கிறான் என்பதை வைத்து கணக்கிடக்கூடாது மாறாக அந்த நாட்டின் இராணுவ கட்டமைப்பின் இராஐதந்திர நடவடிக்கைகளை வைத்தே இராணுவ பலத்தை கணக்கிட வேண்டும். அந்த வகையில் இந்த வான் தாக்குதலின் மூலம் விடுதலைப் புலிகள் தங்களின் க…
-
- 4 replies
- 1.7k views
-
-
அரசில கட்சிகளும் சூழல் மாசடைதளும் சுற்றுச் சூழலின் மாசடைதல் பற்றி அரசாங்கம் கவலைப்படுகிறது. எதிர்க்கட்சிகள் கவலைப்படுகின்றன. பத்திரிகை நிறுவனங்கள் கவலைப்படுகின்றன. நடுத்தெருவில் குப்பை கொட்டி விட்டுப் போகிறவர்களுங் கூடத் தான் கவலைப்படுகிறார்கள். ஆனாலும், என்ன நடந்திருக்கிறது? தோட்டத்துக் குப்பையிலிருந்து உரமும் வேண்டுமானால் எரிபொருளும் தயாரிக்கலாம் என்றும் பொலித்தீன் தாள்களை மீள் சுழற்சி செய்து பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யலாம் என்றும் வீசி எறிகிற ஒவ்வொன்றையும் என்னென்னவெல்லாம் செய்யலாம் என்றும் விஞ்ஞானிகள் என்று சொல்லப்படுகிறவர்கள் முதலாகப் பல்வேறு தகுதிகளையுடையவர்களும் எல்லாவற்றையும் விடப் பெரிய தகுதியான பாராளுமன்ற உறுப்பினர் என்ற தகுதி உள்ளவர்கள் வரை எல்லாரும…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 5 replies
- 1.7k views
-
-
சிந்துவெளி நாகரிகம் சிந்துவெளி நாகரிகம் (Indus valley civilization) எகிப்து, மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தளைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடிப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது. இங்கு வாழ்ந்த மக்களினம் பற்றியோ, அவர்கள் பேசிய மொழிகள் பற்றியோ ஆய்வாளர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது. தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான முத…
-
- 3 replies
- 11.6k views
-
-
-
- 0 replies
- 953 views
-
-
எது பயங்கரவாதம்? பிரிட்டனிலிருந்து அமெரிக்கா செல்லும் பிரிட்டிஷ் விமானங்களைத் திரவ வெடிகுண்டுகளை வைத்து வெடிக்கச் செய்ய சதி நடந்தது என 24 பிரிட்டிஷ் முஸ்லிம்கள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் கைது செய்யப்பட்டனர். அப்படி ஒரு சதி பற்றிய தகவல்களை பிரிட்டிஷ் போலீசுக்குத் தெரிவித்தது பாகிஸ்தான் அரசு. இதைத் தொடர்ந்து அவர்களைக் கைது செய்தது மட்டுமல்ல, விசாரணைகளையும் நடத்தி வருகிறது பிரிட்டிஷ் அரசு. இதற்கிடையில் 12.8.2006 அன்று அமெரிக்க ரேடியோவில் பேசிய ஜார்ஜ் புஷ், விமானங்களைத் தகர்க்கச் சதி செய்தவர்கள் லெபனானைச் சேர்ந்த ஹ’ஸ்புல்லாக்கள் என்று அறிவித்திருக்கிறார். கூடுதலாக ஜார்ஜ் புஷ் ஹ’ஸ்புல்லாக்கள், ஆப்கானிய தலிபான்கள், ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடுபவர்கள் எல…
-
- 0 replies
- 932 views
-
-
ஏசு ஜென்ம பூமி எப்படியிருக்கு இன்று? ஐரோப்பா, அமெரிக்கா என்று பல பகுதிகளில் சிதறிக் கிடந்த யூதர்கள் தங்களுக்கென்று ஒரு தனி நாடு இல்லையே என்று ஏங்கினர். பைபிளின்படி பாலஸ்தீனம்தான் தங்களது தாயகம் என்று முடிவெடுத்து அவர்கள் பாலஸ்தீனத்தில் கொத்துக் கொத்தாக குடியேறத் தொடங்கினார்கள். இந்தியாவில் ராமஜென்ம பூமி பிரச்னை ஏற்கெனவே இரண்டு மத்திய அரசுகளை 'ஸ்வாகா' செய்தது போதாதென, இப்போது மூன்றாவது அரசின் ஸ்திரத்தன்மைக்கு வேட்டு வைத்துவிடுமோ என்ற சந்தேகத்தைக் கிளப்பி ஜவ்வல்லாடிக் கொண்டிருக்க ஏசு பிறந்த பூமி, அதுவும் அடுத்த மில்லெனியத்தின் முதல் ஆண்டில் எப்படியிருக்கிறது என ஒரு பார்வை. மாட்டுக் கொட்டகையில் மேரி மாதாவுக்குப் பிறந்தார் ஏசுபிரான் என்பது நமக்குத் தெரிந்தத…
-
- 0 replies
- 1.9k views
-
-
அண்டை நாடுமுதல், சர்வதேச சமூகம்வரை விடுதலைப்புலிகள் அமைப்பை தடைசெய்துவருவது அதிகரித்து வருகின்றது. அதற்காக இலங்கைஅரசு ஒரு சிறப்புக்குழுவை அமைத்து, தமிழ்மக்களை விட அதிகமாக உழைத்துவருவதையே இத்தடைகள் காட்டுகின்றது. இத்தடை, விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஒரு பெரும்பின்னடைவாக பெரும்பாலான "மாற்றுக்கருத்தை" கொண்டவர்கள் பிதற்றிவருகின்றனர். இதைப்பற்றி நாம் வேறுஒரு கட்டத்தில் பார்ப்போம். இப்படிப்பட்ட ஒரு சுழ்நிலையில், தனித்தமிழ்நாட்டுக்கோரிக்கை சாத்தியமா? சர்வதேச சட்டங்களின் படி இவ்வகை தனிநாட்டுக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதே. ஆனால் அதெற்கென ஒரு நடைமுறைகள் இருக்கின்றன. இங்கே இரண்டுவகையான சுதந்திரப்பிரகடனம் இருக்கின்றது. 1. இருபகுதியினர் சம்மதத்துடன் பிரிந்து தனிந…
-
- 11 replies
- 3.2k views
-
-
'சிறிலங்காவின் சுதந்திர தினம், அதன் கொடி அதன் ஜனநாயகம், அதன் இறைமை! - சபேசன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதியானது (04.02.07) சிறிலங்காவின் 59 ஆவது சுதந்திர தினமாகும். மிகப்பெரிய நம்பிக்கைகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் 59 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதியன்று காலிமுகத்திடலில் டச்சுப்பீரங்கிகள் இருபத்தியொரு வெடி முழக்கங்களை தீர்த்துக்கொண்டிருக்கையில், கொழும்பு ரொரிங்டன் சதுக்கத்தில் பிரித்தானிய அரசர் ஆறாவது ஜோர்ஜ் அவர்களின் சொந்தச் சகோதரரானஇ டியூக் குளஸ்டர், இலங்கைத்தீவின் (அன்றைய சிலோன்) சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார். http://www.sooriyan.com/index.php?option=c...933&Itemid=
-
- 1 reply
- 1.2k views
-
-
போர் என்பது முரண்களுக்கான தீர்வின் இறுதிச் செயற்பாடு. மனித சரித்திரத்தில் தீர்க்க முடியாத முரண்கள் போரினாலயே தீர்க்கப்படுள்ளன, தீர்க்கப்பட்டு வருகின்றன. மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து வளங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான போட்டி ஈற்றில் போர்களினாலையே தீர்க்கப்பட்டு வந்துள்ளது. போரை அதன் அடிப்படை மூல காரணியான முரணில் இருந்து பிரித்து , போரினால் ஏற்படும் அழிவுகளை மட்டுமே பேசும் எவரும் , போரின் மனித அவலத்தை மையமாக வைத்து தமது சொந்த அரசியல் இலக்குகளையே நகர்த்துகின்றனர். உலகில் போரின்றி தீர்க்கப்பட்ட முரண்கள் அடிப்படையில் போர் மூளக் கூடும் என்கிற அச்சத்தினாலையே தீர்க்கப்படுள்ளன. இதுவே சமாதான வழிமுறை எனப்படுகிறது. பலஸ்தீனச் சமாதானப் பேச்சுவார்த்தைகள் 'இன்ரபாடா' அல்லது மக்கள் எழுச்ச…
-
- 0 replies
- 1k views
-
-
கிழக்கு நெருக்கடி: சில வெளிப்படை உண்மைகள், பாகம் - 01 'யாழ். குடா முற்றுகையும் ஊடகங்களின் அரசியலும்" என்ற தலைப்பில் அண்மையில் நான் எழுதியிருந்த ஆய்வு கட்டுரையில் மறைந்த மாமனிதர் சிவராம் தொடர்பாகவும் அவரது தேசிய சிந்தனைகள் தொடர்பாகவும் சில கருத்துக்களை பதிவு செய்திருந்தேன். அது பின்வருமாறு அமைந்திருந்தது: '........அழிவின் விளிம்பில் நிற்கும் தமிழினம், தமிழ் ஊடகங்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறது. தமிழ்த் தேசியப் பரப்புரை உலகம் அளவிடமுடியாத் தேவை நிரப்பீடு கொண்டது. அதை ஈடு செய்வதற்கு தேசியத்தின் மீதான பற்றுறுதியும் காதலும் மட்டும் போதுமானவையல்ல. தற்கொடையும் துணிச்சலும் துறைசார் புலமையும் ஆளுமையும் அவசியம். அத்தகையவர்களை இனங்கண்டு நாம் இணைத்துக் கொள்ளத் தவறும் …
-
- 8 replies
- 2k views
-
-
முதல் முறையாக தமிழர்கள் வெற்றி. WARD 7 Town Wide Summary Subdivision reporting: 110 of 110 PERCENT Councillor - Ward 7 Subdivision reporting 11 of 11 Benn-Ireland, Tessa 1569 17.04 Jeyaveeran, William 775 8.42 Kanapathi, Logan 3088 33.54 Minhas, Manpreet 343 3.73 Qureshi, Yahya 1224 13.30 Rahman, Mohammed 1272 13.82 Ruo, Jeffry 595 6.46 Zaidi, Syed (Sydney) 340 3.69 York Region District School Board - Ward 7 & 8 Subdivision reporting 22 of 22 Gotha, Susie 2442 31.61 Shan, Neethan 5283 68.39
-
- 5 replies
- 1.7k views
-
-
ஈழத்தமிழரை வதைக்கும் கொடிய அரசின் உச்சக் கட்ட வதை இப்பொழுது நடக்கிறது. சர்வதேச சமூகமோ மெதுவான குரலில் வருந்துகிறோம் என்கிறது. கீழே செய்தியைப் படியுங்கள். THE PEOPLE OF JAFFNA PENINSULA IN THE OPEN PRISON AND THE EFFECT OF ITS HUMAN MISERY Situation report in Jaffna The military machinery and the Sinhalese collectivism of the Buddhist State has abridged the dignity of the people of Jaffna to the subhuman condition. Imposing economic embargo and closing the A9 highway it has blocked the supply of food, medicine, fuel and other essential commodities for the normal life of the people. Even the pregnant mothers, newborn babies, bedridden sick are being depriv…
-
- 0 replies
- 1k views
-
-
திராவிட அரசியல் ஏன் தோற்றம் பெற்றது - ஓர் வரலாற்றுப் பார்வை. காங்கிரஸ் மாநாடுகளில் பெரியார் கொண்டுவந்த ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ என்று அழைக்கப்பட்ட இட ஒதுக்கீடு தீர்மானம் மட்டும், காங்கிரஸில் பெருவாரியாக இருந்த பிராமணர்களால் தோற்கடிக்கப்படாமல் நிறைவேறியிருந்தால், பெரியார் 1925இல் காங்கிரசுக் கட்சியை விட்டு வெளியே வந்திருக்க மாட்டார்; சுயமரியாதை இயக்கம் தோன்றியிருக்காது; தி.க.(1944) உருவாகியிருக்காது; தி.மு.க. (1949) பிறந்திருக்காது; அ.தி.மு.க. (1972) அரும்பியிருக்காது; ம.தி.மு.க. (1993) மலர்ந்திருக்காது. 20_ஆம் நூற்றாண்டுத் தமிழகத்தின் வரலாற்றுப்போக்கே காங்கிரஸ் மற்றும் பொதுவுடைமை இயக்கங்களின் வரலாறாகப் போயிருக்கும். அந்த அளவிற்குப் பெரியாரின் ‘வகுப்புவாரி பிரதி…
-
- 0 replies
- 1.9k views
-
-
உலகமா யுத்தம்-2 இல் ரஸ்யாவின் லெனின்கிறாட் Leningrad (இன்று சென்ர் பீற்றேஸ்பேர்க் St-Petersburg) மீது நடந்த முற்றுகைச் சமர் பற்றி தமிழில் ஆக்கங்கள் வந்திருக்கா? இன்றய, எதிர்கால தாயக சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இந்த முற்றுகைச் சமர்பற்றி நாம் தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். அந்த வரலாற்றில் இருந்து நாம் எல்லோரும் படித்துக் கொள்ள பல விடையங்கள் உண்டு. அதன் மூலம் நமது இழப்புகளை குறைக்கலாம். http://en.wikipedia.org/wiki/Siege_of_Leningrad http://www.wellcome.ac.uk/doc_WTX024059.html
-
- 6 replies
- 1.7k views
-
-
இந்திய தேர்தல் ஆணையம் புதிதாக ஆரம்பிக்க பட்ட கட்சியினை மாநில கட்சியாக அங்கிகாரம் செய்ய சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி குறிபிட்ட விழுக்காடு ஒட்டுகளும். சட்டமன்றத்தில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ள ஒரு புதிய கட்சியினை தேர்தல்ஆணையம் அங்கிகாரம் அளித்து ஒரு சின்னத்தை அந்த கட்சிக்கு அளிக்கிறது. இவ் நிபந்தனையினை நிறைவேற்ற பாமக , மாதிமுக போன்ற கட்சிகள் பல தேர்தல்களில் முயன்று, மேற்படி நிபந்தனை நிறைவு செய்ய இயலாமல்,கடைசியில் திமுக அல்லது அதிமுக போன்ற பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மேற்படி நிபந்தனையினை நிறைவு செய்து அங்கிகாரம் பெற்றன. தற்போது, நடிகர் விஜயகாந்த் கட்சி அதிக விழுக்காடு ஓட்டு பெற்றும் , சட்டமன்றத்தில் இரண்டு உறுப்பினர் இல…
-
- 0 replies
- 1.5k views
-