அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
குருவை மிஞ்சிய சீடனாக ரணில் விக்ரமசிங்க இலங்கை ராஜதந்திர வட்டாரத்தில் தனது ஆடுகளத்தை தற்போது ஆரம்பித்து விட்டார். கடந்த மாதம் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்து திரும்பியதும் 13ஆம் திருத்தச் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தப் போவதாகவும் அதற்கான ஏற்பாடுகளுக்கு ரணில் உத்தரவிட்டுவிட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. தீர்வு திட்டத்தை வழங்க ரணில் தயார் இல்லை இந்த நிலையில் சிங்கள தரப்பிலிருந்தும், தமிழ் தரப்பில் இருந்தும் பல்வேறு தரப்பட்ட வாதப் பிரதிவாதங்கள் ஒரு பெரும் பேசுபொருளாக மாறி இருக்கிறது. உண்மையில் ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வு திட்டத்தை வழங்குவதற்கு தயார் இல்லை. ஆனால் தமிழ் …
-
- 1 reply
- 530 views
- 1 follower
-
-
சில சிந்தனைகள்: ‘சுதந்திரம்’ கிடைத்து 75 ஆண்டுகள்! என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan இலங்கையானது பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து விடுதலையடைந்து, பிரித்தானிய முடியின் கீழ் டொமினியனாக ஆன, 1948 பெப்ரவரி நான்காம் திகதியை இலங்கை, சுதந்திர தினமாகக் கொண்டாடி வருகிறது. அந்தச் ‘சுதந்திரம்’ கிடைத்து, கடந்த சனிக்கிழமையோடு 75 ஆண்டுகளாகியது. 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதா, வேண்டாமா என்ற வாதப்பிரதிவாதங்கள் இந்தமுறை மிகப் பலமாக ஒலித்தன. சுதந்திர தினத்துக்கு முதல் நாளிரவு, கொழும்பின் மருதானையில் சத்தியாக்கிரக ஆர்ப்பாட்டம் இடதுசாரிகளால் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தை பொலிஸார் தண்ணீர் பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும் கலைத்த…
-
- 0 replies
- 919 views
-
-
இலங்கை மக்களின் இதயத்தைத் தொடாத சுதந்திர தினக் கொண்டாட்டம்! February 6, 2018 Photo, Ishara S. Kodikara/ AFP, THE EDITION இலங்கை காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்டு பெற்ற சுதந்திரத்தின் 75ஆவது வருட நிறைவை அரசாங்கம் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டாடியது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தக் கொண்டாட்ட நிகழ்வில் ஒரு உரையை நிகழ்த்தவில்லை. தயாரிக்கப்பட்ட உரை சிறப்பானதாக இருந்தது. ஆனால், அது பின்னரே விநியோகிக்கப்பட்டது. இராணுவ அணிவகுப்பு நடைபெற்ற கொழும்பு காலிமுகத்திடலில் பொது மக்களின் பங்கேற்பு தவிர்க்கப்பட்டமை சுதந்திர தின நிகழ்வில் அவதானிக்கக்கூடியதாக இருந்த இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். வழமையான சூழ்நிலைகளில், சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் போது …
-
- 0 replies
- 677 views
-
-
தென்னிலங்கையில் மீண்டும் பெரும்பான்மையினவாத அணிதிரட்டல் முயற்சிகள்! Veeragathy Thanabalasingham on February 8, 2023 Photo, Colombo Telegraph தேசிய இனப்பிரச்சினைக்கு துரிதமாக அரசியல் தீர்வொன்றைக் கண்டுவிடும் நோக்குடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட்டும் நாடாளுமன்ற கட்சிகளின் மகாநாடு இதுவரையில் இரு தடவைகள் கூட்டப்பட்டது. முதற்சுற்று கடந்த டிசம்பர் 13ஆம் திகதியும் இரண்டாவது சுற்று ஜனவரி 26ஆம் திகதியும் இடம்பெற்றன. இந்த மகாநாட்டில் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) கலந்துகொள்வதில்லை. அதன் தலைவர்கள் மகாநாட்டில் கலந்துகொள்ளாதமை பெரும்பாலும் காரணம் காட்ட இயலாததாகும். அவர்கள் கலந்தகொண்டிருக்கமுடியும்; கலந்துகொண்டிருக்கவு…
-
- 0 replies
- 670 views
-
-
சுதந்திர இலங்கையில் சாத்தானிடம் வரம் கேட்கும் நிலை… February 6, 2023 —- கருணாகரன் —- இலங்கை பொருளாதார ரீதியாக மீண்டெழுவது எப்பொழுது என்ற கேள்விக்கு இன்னும் பதில் இல்லை. ஆனால், ஐந்து தொடக்கம் பத்து ஆண்டுகளுக்குள் நாட்டில் யாருக்கும் அடிபணியாத பொருளாதார வலுவை உருவாக்குவேன் என்றிருக்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. எதனை ஆதரமாகக் கொண்டு, எப்படி அந்தப் பொருளாதார வலுவை உருவாக்கப் போகிறேன் என்று அவர் சொல்லவில்லை. அவர் மட்டுமல்ல, வேறு எந்தப் பொருளாதார நிபுணர்களும் கூட இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான வழிகள் எப்படி அமைய வேண்டும்? எவ்வாறு அமையமுடியும் என்று சொல்லவில்லை. ஆக மொத்தத்தில் இலங்கையின் பொருளாதார மீட்சியைக் குறித்து எவருக்கும் எதுவுமே தெரியா…
-
- 0 replies
- 857 views
-
-
சுமந்திரனை வளர்க்கும் புதிய கூட்டணி புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் எம்.ஏ சுமந்திரன் நுழைந்தது முதல், கூட்டமைப்பை பிளவுபடுத்தும் சதித்திட்டங்களில் ‘ஆமை’ போன்று ஈடுபட்டதாக, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி (ஜ.த.தே.கூ - DTNA)) குற்றஞ்சாட்டுகின்றது. கடந்த பொதுத் தேர்தல் காலத்திலும், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் ‘சுமந்திரன்’ என்ற பெயர் பிரதான பேசு பொருளானது. “ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை” என்று சுமந்திரன், சிங்கள இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி, அவரை பலமாகப் பதம் பார்த்தது. அவரது கட்சியின் சக வேட்பாளர்களே, அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசினார்கள். இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் சுமந்திரனின் பெயர்தான் பிரதா…
-
- 0 replies
- 722 views
-
-
இரா.சம்பந்தன் : தோல்வியின் அடையாளம் - யதீந்திரா விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி இராஜவரோதயம் சம்பந்தனை தமிழ் மக்களின் தலைவராக்கியது. அவர் தமிழ் தேசிய அரசியலில் தவிர்க்க முடியாதவொரு நபரானார். ஈழப்போராட்ட காலத்திலும், அதற்கு முன்னரும், தமிழ் தேசிய அரசியலில் சம்பந்தனென்னும் பெயர் தீர்க்கமான பங்கு எதனையும் வகித்திருக்கவில்லை. திம்பு பேச்சுவார்த்தையில் பங்குகொண்டவர் என்பதை தவிர. இந்த பின்னணில் நோக்கினால், சம்பந்தன் ஒர் அரசியல் ஆளுமையாக செயலாற்றுவதற்கான காலமென்பது, 2009இற்கு பின்னர்தான் வாய்த்தது. இந்த அடிப்படையில், அவரது தலைமைத்துவத்திற்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் இருந்தது. அதாவது, தமிழ் தேசிய அரசியலானது, அதுவரையில் யாழ்ப்பாண தலைமைத்துவங்களினாலேயே ம…
-
- 3 replies
- 781 views
-
-
13 தமிழர்களின் சவக்குழி : மரணப் பொதியை நிராகரிப்போம் - செல்வராசா கஜேந்திரன்! By VISHNU 05 FEB, 2023 | 05:16 PM இந்தியா தனது நலனுக்காக இலங்கையுடன் சேர்ந்து தமிழ் மக்கள் மீது திணித்த கூட்டு சதியே 13 ஆவது திருத்தச்சட்டம் இது தமிழர்களுக்கு சவக்குழி மரண பொதி இதை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். தமிழ் தேசமும் இறைமையும் சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி தீர்வு எட்டப்படும் வரை தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த மக்களுடன் தொடந்து குரல் கொடுக்கும் தென்தமிழீழ மண்ணில் நின்று கொண்டு இந்த மக்கள் செய்யும் பிரகடனம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்லவராசா கஜேந்திரன் தெரிவித்தார். பெப்பிரவரி 4 கரிநாள் ஒற்றையாட்சியையும் 13 வது…
-
- 0 replies
- 581 views
- 1 follower
-
-
சுடலைக்கழிவு அரசியல்? - நிலாந்தன் 1970களில் தமிழ் இளைஞர் பேரவையில் உறுப்பினராக இருந்தவரும் தமிழரசு கட்சியோடு நெருங்கிச் செயற்பட்டவரும், பிந்நாளில் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவரும், இந்திய இலங்கை உடன்படிக்கையின் பின், இணைந்த வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்பில் இருந்தவருமாகிய, ஒரு மூத்த அரசியல் செயற்பாட்டாளரின் நேரடி அனுபவம் இது…….தமிழரசுக் கட்சியோடு நெருங்கிச் செயற்பட்ட காலப்பகுதியில் இளையவர்கள் அமிர்தலிங்கத்தின் வீட்டு முன் விறாந்தையில் தங்குவதுiண்டாம். ஒருநாள் இரவு அவர்கள் சுவரொட்டி ஒட்டுவதற்காக போகும்பொழுது அவர்களோடு சேர்ந்து அமிர்தலிங்கத்தின் மகன் ஒருவரும் சென்றிருக்கிறார். இரவு முழுதும் மகனைத் தேடிக் காணாத அமிர்தலிங்கம் அடுத்த நாள…
-
- 0 replies
- 840 views
-
-
சுதந்திரத்தின் பொருள் என்ன? நிலாந்தன். 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் திருப்பகரமான ஒரு முடிவு எட்டப்படும் என்று ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். தமிழ்க் கட்சிகளோடு பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிய பொழுது அவருடைய நிகழ்ச்சி நிரல் அவ்வாறுதான் காணப்பட்டது. ஆனால் அவர் எதிர்பார்த்தது போல பேச்சுவார்த்தைகள் முன்னேறவில்லை. அதைவிட முக்கியமாக சுதந்திர தினத்தை ஒரு கரி நாள் என்று பிரகடனப்படுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் வடக்கிலிருந்து கிழக்கை நோக்கி ஒரு ஆர்ப்பாட்டப் பேரணியை ஒழுங்குப்படுத்தியிருக்கிறார்கள். கடந்த 75 ஆண்டுகளாக சுதந்திர தினம் எனப்படுவது தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு கெட்ட நாளாகவே காணப்படுகிறது. தமிழ் மக்கள் தங்களுடை…
-
- 0 replies
- 670 views
-
-
இலங்கையில் 13வது திருத்தம் எப்படி உருவானது? - பின்னணி என்ன? கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,FACEBOOK 1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னரான காலத்தில் தமிழர்கள் எதிர்நோக்கிய பிரச்னைகள், நாளுக்கு நாள் வலுப் பெற்றதை அடுத்து, உள்நாட்டு போர் உருவானது. சுதந்திரத்திற்குப் பின்னர், மொழி, பல்கலைக்கழக அனுமதி, இனக்கலவரம், தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றம் உள்ளிட்ட பிரச்னைகள், பின்னரான காலத்தில் தமிழ், சிங்கள மக்கள் இடையே மோதல்களை உருவாக்கியது. 1956ம் ஆண்டு கால…
-
- 0 replies
- 358 views
- 1 follower
-
-
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தில் ரணிலினால் தமிழர் பிரச்னையை தீர்க்க முடியுமா? பட மூலாதாரம்,PMD SRILANKA 55 நிமிடங்களுக்கு முன்னர் சுதந்திர இலங்கையின் 75 வருட காலமாக தமிழர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்னைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலக்கேடு இன்றைய தினமாகும். நாட்டின் 75வது சுதந்திர தினத்திற்கு முன்பாக தமிழர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23ம் தேதி உறுதி வழங்கியிருந்தார். தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் அவர் இந்த உறுதிமொழியை அன்றைய தினம் வழங்கியிருந்தார். …
-
- 0 replies
- 544 views
- 1 follower
-
-
தனது முயற்சிகளுக்கு முன்னால் உள்ள சவால்களை எதிர்கொள்ளத் தயாராகும் ஜனாதிபதி February 2, 2023 —- கலாநிதி ஜெகான் பெரேரா —- பாராளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைத்திருப்பதன் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவியின் அதிகாரத்தை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொதுவில் நாட்டுக்கும் நினைவுபடுத்தியிருக்கிறார். பாராளுமன்ற கூட்டத்தொடரை திடீரென்று ஒத்திவைப்பதற்கு ஜனாதிபதிக்கு வெளிப்படையான காரணம் எதுவுமில்லை. பொது நிதி, அரசாங்க நிறுவனங்கள் தொடர்பான முக்கியமான குழுக்கள் உட்பட 40 க்கும் அதிகமான பாராளுமன்ற குழுக்கள் செயலிழந்துவிட்டன. பெப்ரவரி 4 இலங்கையின் 75 வது சுதந்திரதினக் கொண்டாட்டங்களுக்கு பிறகு பெப்ரவரி 8 பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது 204…
-
- 0 replies
- 794 views
-
-
இலங்கை கடன் மறுசீரமைப்பு: இந்தியா ஆர்வம் காட்டும்போது சீனா பின்தங்க காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 2 பிப்ரவரி 2023, 11:22 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் அமெரிக்க டாலரை வழங்க தயாராகவுள்ள பின்னணியில், அதற்கு ஆதரவு வழங்க சீனா முன்வந்துள்ள போதிலும், சீனாவின் ஆதரவு போதுமானதாக இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் இதனைக் குறிப்பிட்டுள்ள…
-
- 2 replies
- 753 views
- 1 follower
-
-
கடன் பொறியிலிருந்து விடுபடுவதற்காக உலகின் பொருளாதார சக்திகளிடம் சரணடைய முடியாது - ஜனாதிபதி By VISHNU 02 FEB, 2023 | 01:03 PM (எம்.மனோசித்ரா) பொருளாதார யுத்தத்தை எதிர்கொண்டுள்ள நாம் கடன் பொறியிலிருந்து விடுபட வேண்டும். அதற்காக உலகின் பொருளாதார சக்திகளிடம் சரணடைய முடியாது. நாட்டின் பொருளாதார சுதந்திரம் இல்லாமல் போனால் அரசியல் சுதந்திரத்தால் எந்தப் பயனும் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்குள் நிறைவு செய்ய முடியும் என்று நம்புகின்றேன். இந்தியா மற்றும் சீனாவுடனான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் ஜனாதிபதி ரணில…
-
- 1 reply
- 432 views
- 1 follower
-
-
பொருளாதார நெருக்கடியை இனப்பிரச்சினையால் மூடிமறைத்தல் எம்.எஸ்.எம் ஐயூப் இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விதித்த காலக்கெடு இன்னும் மூன்று நாள்களில் முடிந்து விடும். அதற்கு, தமிழ்க் கட்சிகள் விதித்த காலக்கெடு நேற்றுடன் (31) முடிவடைந்தது. ஆனால், இனப்பிரச்சினை தீரவில்லை. மாறாக, அரசியல்வாதிகள் இனப்பிரச்சினையை தமது அரசியலுக்காக பாவிக்கிறார்கள் என்பது இந்தக் காலக்கெடுக்களால் மீண்டும் நிரூபிக்கப்பட்டது. எதிர்வரும் நான்காம் திகதி நடைபெறவிருக்கும் 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப்பிரச்சினையை தீர்ப்பதாக, ஜனாதிபதி கடந்த நவம்பர் மாதம் வரவு செலவு திட்ட விவாதத்தின் போது கூறினார். அவ்விவாதம் முடிவடைந்ததன் பின்னர், இப்பிரச்சின…
-
- 0 replies
- 554 views
-
-
ரணிலும், 13ஆம் திருத்தமும், இனப்பிரச்சினைக்கான தீர்வும் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலான சர்வகட்சி மாநாட்டின் அடுத்தபடியாக, கடந்த வாரம், ஜனவரி 26ஆம் திகதி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சர்வகட்சி மாநாடு கூடியது. இதில் பலவிடயங்களை தனது பேச்சிலும் பதிலளிப்புகளிலும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அவற்றிலிருந்து ஜனாதிபதி ரணிலின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான எண்ணம் பற்றிய மேலதிக தௌிவு புலப்படுகிறது. குறித்த சர்வகட்சி மாநாட்டில், ஜனாதிபதி ரணில், பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டிருந்தமை, இங்கு கவனிக்கத்தக்கது: “அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்படவேண்டும் அல்லது பாராளுமன்றம் 13ஆம் திர…
-
- 0 replies
- 548 views
-
-
13 பற்றிய யதார்த்தம் February 1, 2023 — கருணாகரன் — முப்பத்தி ஆறு வருடங்களுக்குப் பிறகு 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்குத் தயார் என்று இலங்கை ஜனாதிபதி ஒருவர் (ரணில் விக்கிரமசிங்க) பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார். இதைக் குறித்த உரையாடல்கள் தீவிரமடைந்துள்ளன. “மாகாணசபைகளுக்கான அதிகாரத்தை வழங்கக் கூடாது. அப்படி வழங்கினால் அதைக் கடுமையாக எதிர்ப்போம்” என்று கூறுகிறது பிக்குகள் முன்னணி. இதே எதிர்ப்பை வெளியிட்டுள்ளன விமல் வீரவன்ச போன்றோரின் சிறிய சில இனவாதக் கட்சிகள். இதற்கு நிகராக மறுமுனையில் “மாகாணசபைகளுக்காகவா எங்களுடைய போராட்டமெல்லாம்?” என்று கேட்கின்றன அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உள்ளிட்ட சில தமிழ் அரசியற் தரப்புகள…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையும் 2,500 ஆண்டுகளைக் கடந்த இந்திய உறவும் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளும் 1800களில் பிரித்தானியரின் காலனித்துவ ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டு, முறையே 1947 மற்றும் 1948 ஆண்டுகளில் சுதந்திரம் பெற்றன. இந்தியா இலங்கையின் நெருங்கிய அண்டை நாடு. இரண்டு நாடுகளும் இரு தரப்பு அறிவுசார், கலாச்சார, மத மற்றும் மொழியியல் ரீதியலான தொடர்புகளை கொண்டிருக்கின்றன. வரலாற்று ரீதியாக, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் 2,500 வருட காலமாக பகிரப்பட்ட சமய மற்றும் கலாச்சார அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. இலங்கை தனது கடல் எல்லையைப் இந்தியாவுடன் பகிர்ந்துகொள்வதால், முக்கியமான பொருளாதார, இராஜதந்திர மற்றும் கடல்சாா் பாதுகாப்பு உறவுகள் மிகவும் நெருக்கம…
-
- 0 replies
- 766 views
-
-
நாடுகடந்த அரசாங்கம் மறுசீரமைக்கப்பட வேண்டும்? - யதீந்திரா 2009இல், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிவுற்றதை தொடர்ந்து, புலம்பெயர் சமூகம் தமிழ் தேசிய அரசியலில் பிரதான இடத்தை பெற்றது. இந்த பின்புலத்தில்தான் 2010இல் நாடுகடந்த அரசாங்கம் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழ் புலம்பெயர் சமூகமென்று அழைக்கப்படும் மரபிற்கு மாறாக நாடுகடந்த தமிழ் சமூகமென்னும் அடையாளம் முன்னிலைப்படுத்தப்பட்டது. இந்த அடிப்படையிலேயே நாடுகடந்த அரசாங்கமென்னும் எண்ணக்கரு தோற்றம்பெற்றது. தமிழ் புலம்பெயர் சமூகமென்று அடையாளப்படுத்தும் போது அது – மேற்குலக நாடுகளில் சிதறிவாழும் ஈழத் தமிழ் மக்களை மட்டுமே குறிக்கும் ஆனால், நாடுகடந்த தமிழ் சமூகமென்று…
-
- 1 reply
- 924 views
-
-
கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தரின் தோல்வி ? – நிலாந்தன். கூட்டமைப்பின் முன்னாள் பங்காளிக் கட்சிகளை சாணக்கியன் ஒட்டுக் குழுக்கள் என்று அழைத்திருக்கிறார்.ஏற்கனவே தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வாறு அழைக்கத் தொடங்கி விட்டார்கள். ஏறக்குறைய இரண்டு தசாப்தங்கள் ஒன்றாக இருந்துவிட்டு இப்பொழுது அவர்களை ஒட்டுக் குழுக்கள் என்று அழைக்கிறார்கள். இது இரண்டு தசாப்தங்களுக்கு மேல் ஒன்றாக குடும்பம் நடத்திய பின் கணவன் மனைவியின் நடத்தையையும்,மனைவி கணவனின் நடத்தையையும் விமர்சிப்பதற்கு ஒப்பானது.தமிழரசியல் எவ்வளவு கேவலமாக போய்விட்டது? ஒட்டுக்குழு என்ற வார்த்தை தியாகி எதிர் துரோகி என்ற அரசியல் வாய்ப்பாட்டிற்குள் காணப்படும் ஒரு வார்த்தைதான். போர்க்காலங்களில் அரசாங்கத்…
-
- 2 replies
- 625 views
-
-
மீண்டும் பதின்மூன்றா? - நிலாந்தன் “இதனால் நாடு பிளவுபடாது. விசேடமாக 13ஆவது திருத்தம் தொடர்பில் ஐந்துநீதிபதிகள் அடங்கிய குழுவின் தீர்மானத்தின்படி பார்த்தால் நாம்ஒற்றையாட்சிக்குள் இருக்கிறோம். அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு நான்உடன்படுகின்றேன். நாம் தற்போது உருவாக்கிக் கொண்டுள்ள மாகாணசபைகளுக்கு லண்டன் நகரசபைக்குள்ள அதிகாரங்கள் கூடகிடையாது. லண்டன் நகரசபைக்கு இதனைவிடவும் அதிகாரங்கள் உள்ளன. எனவே இதனை பெடரல் இராச்சியம் எனக் கூறமுடியுமென நான் நினைக்கவில்லை” –ஜனாதிபதி ரணில் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்த் தரப்பிடமிருந்துதான் முதலில் வெளிப்பட்டது. ஆறு கட்சிகள் இணைந்து இந்தியாவை நோக்கிக் கூட்டுக் கோரிக்கையை வைத்…
-
- 0 replies
- 560 views
-
-
வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 12: ஆசியாவில் அதிவலதின் எழுச்சி தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அதிவலதுசாரி தீவிரவாதம் என்பது, பொதுப்புத்தி மனநிலையில் மேற்கத்தைய உதாரணங்களுடனேயே நோக்கப்படுவதுண்டு. குறிப்பாக, முஸ்லிம்களுக்கும் குடியேற்றவாசிகளுக்கும் கறுப்பினத்தவர்களுக்கும் எதிரான அதிவலதுசாரி செயற்பாடுகள், அதிக ஊடகக் கவனத்தைப் பெறுகின்றன. ஆனால், அதிவலதுசாரி தீவிரவாதத்துக்கு ஆசியாவும் விலக்கல்ல; ஆனால், அவை கவனம் பெறுவது குறைவு. இந்தியாவில் மோடியின் இந்து தேசியவாதம், பிலிப்பைன்ஸில் டுடெர்ட்டின் போதைப்பொருள் போரும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளும், தாய்லாந்து அரசியலில…
-
- 8 replies
- 776 views
-
-
‘யார் கூட்டமைப்பு?’ எனும் சர்ச்சையை புறங்கையால் தள்ளிய தமிழரசு கட்சி புருஜோத்தமன் தங்கமயில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்ததன் மூலம், இரா. சம்பந்தன் இதுவரை காலமும் வகித்து வந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பதவி வறிதாகிவிட்டதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ) அறிவித்திருக்கின்றது. புதிதாக கூட்டணி அமைத்துள்ள டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஜனநாயப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசிய கட்சி ஆகியன தங்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக முன்னிறுத்தத் தொடங்கி இருக்கின்றன. புதிய கூட்டணிக்கு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி (D.T.N.A) என்கிற பெயரும், ‘குத்துவிளக்கு’ சின்னமும் இருக்கின்ற போதிலும், கூட்டமைப்பு (T.N.A) என்கிற அ…
-
- 0 replies
- 776 views
-
-
இனப்பிளவை இல்லாமல் செய்ய ஜனாதிபதிக்கு இருக்கும் காலஎல்லை இதுவே January 26, 2023 — கலாநிதி ஜெகான் பெரேரா — பெருமளவு தாமதத்துக்கு பிறகு இறுதியில் தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி தேர்தல்கள் மார்ச் 9 நடத்தப்படும் என்று தீர்மானித்திருக்கிறது. இந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் சட்டத்தினால் அனுமதிக்கப்பட்டதன் பிரகாரம் ஏற்கெனவே ஒரு வருடத்தினால் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. ஒரு வருடத்துக்கும் அப்பால் தேர்தல்களை ஒத்திவைத்தால் அது சட்டவிரோதமான ஆட்சிமுறைச் சிக்கலுக்குள் நாட்டைத் தள்ளிவிடும் என்பதுடன் அதன் விளைவாக சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலை தோற்றுவிக்கும். நாடு இப்போது தேர்தல் திசை நோக்கி நகர்த்தப்படுகிறது. இது ஒன்றும் …
-
- 0 replies
- 815 views
-