அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9217 topics in this forum
-
சர்வ கட்சி மாநாடு ஒரு நாடகமா? நிலாந்தன். March 27, 2022 சர்வகட்சி மாநாடு எனப்படுவது வளர்ச்சியடைந்த ஜனநாயகங்களில் ஒரு உன்னதமான பயில்வு. முழு நாடும் கட்சி பேதங்களைக் கடந்து தேசியப் பிரக்ஞையோடு ஒன்றிணைந்து முடிவை எடுக்கும் நோக்கத்தோடு சர்வகட்சி மாநாடு கூட்டப்படுவதுண்டு. ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி சிறிய கட்சி ,பெரிய கட்சி என்ற பேதமின்றி நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து ஒரு பொது முடிவை எட்டுவதற்கான ஒரு மகத்தான ஜனநாயக நடைமுறைதான் சர்வகட்சி மாநாடு ஆகும். ஆனால் இலங்கைத் தீவில் சர்வகட்சி மாநாடு எனப்படுவது அவ்வாறான உன்னதமான ஒரு பயிலுகை அல்ல. இலங்கைத்தீவின் மோசமான அரசியல் கலாச்சாரத்தை பொறுத்தவரை, சர்வகட்சி மாநாடு எனப்படுவது ஒரு தப்பி…
-
- 0 replies
- 705 views
-
-
மகிந்தவை எதிர்த்த... அம்மாக்களும், அன்னை பூபதியும்! கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வந்த பிரதமர் மகிந்தவை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அன்னையர்கள் எதிர்த்திருக்கிறார்கள். அவர்களை போலீசார் முரட்டுத்தனமாகக் கையாண்டிருக்கிறார்கள். நவீன தமிழ் அரசியலில் அம்முதிய அம்மாக்களுக்கு முன்னோடியாகக் கருத்தத்தக்கவர் அன்னை பூபதியாகும். முப்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே காலப்பகுதியில் அதாவது மார்ச் மாதம் 19ஆம் திகதி 1988ஆம் ஆண்டு அன்னை பூபதி சாகும் வரையிலுமான உண்ணாவிரதத்தை தொடங்கினார். ஈழப்போர் வரலாற்றில் அவருக்கென்று தனித்துவமான ஓர் இடம் உண்டு. அவர் ஒரு ஆயுதப் போராளி இல்லை. எனினும் தன் உயிரைத் துறக்கத் தயாராகி சாகும் வரையிலும் உண்ணாவிரதம் இருந்த முதல் ஈழத்தமி…
-
- 0 replies
- 576 views
-
-
விடுதலைப்புலிகள் இருந்தவரை அமெரிக்க கப்பலோ சீன நீர்மூழ்கியோ இந்துமாக் கடலில் முகம் காட்டியதில்லை இந்திய ஒன்றியத்திற்கு புலிப்படை ஒரு பெரும் பாதுகாப்பாக இருந்தது. ? வ.கௌதமன் விடுதலைப்புலிகள் இருந்தவரை அமெரிக்க கப்பலோ சீன நீர்மூழ்கியோ இந்துமாக் கடலில் முகம் காட்டியதில்லை. அத்துமீறிய எந்த நாட்டு கப்பலாக இருந்தாலும் அவை அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. இந்திய ஒன்றியத்திற்கு புலிப்படை ஒரு பெரும் பாதுகாப்பாக இருந்தது என தமிழ்ப்பேரசு கட்சியின் வ.கௌதமன் வேண்டுகோள் தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது 1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் யுத்தம் நடந்தபோது அமெரிக்காவும் சீனாவும் பா…
-
- 0 replies
- 342 views
-
-
ஆட்டம் காணும் நேட்டோவும் பலம்பெறும் ரஷ்ய கூட்டணியும் |இந்திரன் ரவீந்திரன் ,திருமுருகன் காந்தி
-
- 1 reply
- 779 views
-
-
ராஜபக்ஷர்களின் ஆட்சியில் மீண்டும் செத்து விழும் மக்கள் புருஜோத்தமன் தங்கமயில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள், சமையல் எரிவாயு விற்பனை நிலையங்கள் ஆகியவற்றைப் பொதுமக்களிடம் இருந்து பாதுகாக்கும் பொறுப்பை, துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினரிடம் ராஜபக்ஷர்களின் அரசாங்கம் வழங்கி இருக்கின்றது. கடந்த சில வாரங்களாக, நாடு பூராவும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் சமையல் எரிவாயு விற்பனை நிலையங்களிலும், நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கிடக்கிறார்கள். இப்படி வரிசையில் காத்திருந்த மூன்று பேர் இதுவரையில் மரணித்திருக்கிறார்கள். ஆனாலும், எரிபொருள் விநியோகமோ, எரிவாயு விற்பனையோ சீராகவில்லை. இதனால், நாடு பூராகவும் மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கிவிட்டார்கள். “ஆட்சியைவிட்…
-
- 0 replies
- 431 views
-
-
எதிர்க்கட்சிகள் பதவிக்கு வந்தால் பிரச்சினைகள் தீருமா? எம்.எஸ்.எம். ஐயூப் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, புதன்கிழமை (16) நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது, “தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நாம் பொறுப்பல்ல” எனக் கூறினார். அதேவேளை, “இந்த நெருக்கடிகளைத் தோற்றுவித்த காரணிகளில் சில, எமது கட்டுப்பாடுக்கு அப்பாலானவை” என்றும் கூறினார். ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு, கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது வாக்களித்த மக்களின், அரசாங்கத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை சின்னாபின்னமாகி இருக்கும் நிலையில், அந்த நம்பிக்கையை மீண்டும் கட்டி எழுப்புவதே ஜனாதிபதியின் உரை…
-
- 0 replies
- 455 views
-
-
கோட்டாவின் சூழ்ச்சித் திட்டத்தை தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை! தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்கு அவசர அவசரமாக நாள் குறித்து நேரம் தீர்மானித்து கோட்டாபய ராஜபக்ச விரித்துள்ள சூழ்ச்சித் திட்டத்தை தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும் என்பதை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை உரிமையுடன் வலியுறுத்திக்கொள்கின்றோம். சிறிலங்காவின் சனாதிபதி அழைத்தவுடன் வரிந்து கட்டிக்கொண்டு செல்வதற்கு இந்த விடயமானது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகளின் குடும்ப விவகாரம் அல்ல. இலங்கையில் இருந்து வெள்ளையர்கள் வெளியேறிய காலத்தல் இருந்து திட்டமிட்ட ஒடுக்கு முறைகளைத் தொடர்ச…
-
- 3 replies
- 974 views
-
-
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு கோதபாய மட்டுமன்றி சம்பந்தனும் பொறுப்புக்கூறலுக்கு உட்பட்டவர்! Posted on March 20, 2022 by தென்னவள் 17 0 ‘முள்ளிவாய்க்காலில் அரச பயங்கரவாதத்தால் தமிழினம் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது இதனை இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளின் கவனத்துக்கு நான் எடுத்துச்சென்று தடுக்குமாறு கேட்டேன். போர் முடியும்வரை மௌனமாக இருங்கள். அதன்பின்னர் தமிழரின் அரசியல் தீர்வுக்கு வழி வகுப்போம் என்று இரு நாடுகளும் எனக்கு வாக்குறுதி அளித்தன. அதனை நம்பி பன்னிரண்டு வருடங்களாகக் காத்திருந்த என்னை இரு நாடுகளும் ஏமாற்றிவிட்டன” என்பது சம்பந்தனின் வாக்குமூலம். உலகின் முதலாவது பெண் பிரதமர் என்று பெயர் பெற்ற சிறிமாவோ பண்டாரநாயக்க…
-
- 3 replies
- 611 views
-
-
ஜே.வி.பி எனும் இனவாத சக்தி என்.கே. அஷோக்பரன் ராஜபக்ஷர்களுக்கு எதிரான மக்கள் அலை, தினம்தினம் வளர்ந்து கொண்டிருக்கிறது. ராஜபக்ஷர்களுக்கு எதிராக எழுந்திருக்கும் மக்கள் எதிர்ப்பையும் அதிருப்தியையும், தமக்குச் சாதகமாக்க சஜித் பிரேமதாஸவை முன்னிறுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியும், அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி என்ற மக்கள் விடுதலை முன்னணியும் களத்தில் இறங்கியுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி, திக்குத் தெரியாத நடுக்கடலில் சிக்கிய, பல கப்டன்களைக் கொண்ட கப்பலைப் போலத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. தான் ஒரு கட்சியா? அல்லது, கூட்டணியா என்ற குழப்பம், ஐக்கிய மக்கள் சக்திக்கு உள்ள ஆயிரம் பிரச்சினைகளில், ஒரு பிரச்சினையாகக் காணப்படுகின்றது. ஆகவே, பிரதான எதிர்க்கட்சி வலு…
-
- 2 replies
- 538 views
-
-
ஜனாதிபதி பதவி விலகலுக்கு சாத்தியமுண்டா? லக்ஸ்மன் ஜனாதிபதி உரையாற்றுகிறார் என்றவுடனேயே எல்லோரும் பதவிவிலகும் அறிவித்தலைத்தான் சொல்லுவார் என்று எண்ணுமளவுக்குத்தான் நிலைமை இருந்தது. வாழ்க்கைச் சுமை அதிகரித்துவிட்டது. யார் எதனைச் செய்யமுடியும் என்றே இருக்கிறது. ஒரு சமூகமோ நாடோ, வெறுமனே வசதி படைத்தவர்களை மாத்திரமோ, சாதாரண மக்களை மாத்திரமோ கொண்டதல்ல. அதில் நடுத்தர மக்களும்தான் உள்ளடங்குகிறார்கள். இதில் யாருக்குத் திண்டாட்டம், யாருக்கெல்லாம் பெரும் திண்டாட்டம் என்று யாரும் கணக்குக் போட முனைவதில்லை. நாட்டுக்குள் கேள்விக்குட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இன உரிமை, மனித உரிமை மீறல் விடயங்கள், சர்வதேசத்திலிருந்து வரும் மனித உரிமைப் பிரச்சினைகள் ஒருபுறம், அழுத்தங…
-
- 0 replies
- 1.1k views
-
-
நான்கு சகோதாரர்கள் எப்படி ஒரு தீவை பலவீனப்படுத்தினார்கள் bloomberg தமிழில்- தினக்குரல் கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையின் முதல்குடும்பம் தானே உருவாக்கிய பல நெருக்கடிகளிற்கு தலைமைதாங்குகின்றது 22 மில்லியன் மக்களை கொண்ட இலங்கைத் தீவு அதன் வரலாற்றில் மிகமோசமான பொருளாதார குழப்பநிலையை எதிர்கொள்கின்றது. மோசமான அறுவடைக்கு வழிவகுத்துள்ள உரத் தடைகள் முதல் இலங்கையின் முதல் குடும்பம் அந்நியசெலாவணி நெருக்கடியை கையாள்வதில் தோல்வியை சந்தித்துள்ளதால் நாடு பாரிய மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தீர்வுகள் எதுவுமில்லாத நிலையில் காணப்படு…
-
- 0 replies
- 433 views
-
-
அரசியலில்... கர்ம வினைப் பயனெல்லாம் கிடையாது? நிலாந்தன். “நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட காணி சென்னைக்கு அருகே விற்பனைக்கு உண்டு” இது ஒரு விளம்பரம் அல்ல. அண்மை நாட்களில் சமூக வலைத்தளங்களில் ஒரு ஒளிப்படத்துடன் சேர்ந்து பகிரப்படும் ஒரு குறிப்பு இது. அந்த ஒளிப்படத்தில் என்ன இருக்கிறது என்றால், இந்தியப் பிரதமர் மோடிக்கு முன் பசில் ராஜபக்ச பவ்வியமாக அமைந்திருக்கும் காட்சியாகும். வழமைபோல இந்தியா இம்முறையும் நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு உதவியிருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்தியா இலங்கைக்கு வழங்கிவரும் கடன்கள் இலங்கை அரசாங்கத்துக்கு மூச்சுவிடும் அவகாசத்தை வழங்கியிருக்கின்றன. அதற்கு பிரதியுபகாரமாக அரசாங்கம் சம்பூரில் மீளப்புதுப்பிக்கும…
-
- 0 replies
- 348 views
-
-
கோட்டாபய கூட்டமைப்பைப் பேச அழைக்கிறார்? நிலாந்தன். March 20, 2022 கடந்த புதன்கிழமை கோட்டாபய கூட்டமைப்பைச் சந்திக்க நேரம் ஒதுங்கியிருந்தார். எனினும் அன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது. அது 25ஆம் இடம்பெறலாம் என்று தெரிகிறது. இச்சந்திப்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான டெலோ கலந்து கொள்ளப்போவதிவில்லை என்று அறிவித்திருந்தது. அதற்கு டெலோ ஒரு விளக்கக் கடிதத்தை ஏற்கனவே அனுப்பியிருந்தது. பதவியேற்றதிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக கோத்தாபய கூட்டமைப்போடு பேசப்போவதாக இடைக்கிடை கூறி வருகிறார். ஆனால் இன்றுவரையிலும் பேச்சுவார்த்தைகள் நடக்கவில்லை. இம்முறை பேச்சுவார்…
-
- 0 replies
- 300 views
-
-
அமெரிக்க புலனாய்வு அறிக்கையும், இலங்கை விவகாரமும் – உண்மையும் கற்பனையும் - யதீந்திரா உலகளாவிய புவிசார் அரசியல் போட்டியில் இலங்கை ஒரு முக்கிய விடயமாக நோக்கப்படுவதான, ஒரு கதை நம்மவர்கள் மத்தியிலுண்டு. ஒரு குறிப்பிட்ட தரப்பினர் இப்படியான பார்வைகளை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக சீனாவின் பிரசன்னம் இலங்கைத் தீவில் அதிகரித்து வருவதாகவும் – இதனால் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு நெருக்கடியிருப்பதாகவும் இவர்கள் கூறுவதுண்டு. இன்னொரு தரப்பினரோ – சற்று ஒரு படிமேல் சென்று, இந்தச் சூழலை கையாளுவதற்கு வேறு வழியின்றி, இந்தியா ஈழத் தமிழர்களை நோக்கி வரவேண்டிவரும் என்றவாறு, கற்பனை செய்வதுமுண்டு. உண்மையில், இவ்வாறான பார்வைகளுக்கு அமைவாகத்தான் விடயங்கள் இடம்பெ…
-
- 0 replies
- 445 views
-
-
-
ராஜபக்ஷர்களை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம் உணர்த்தும் செய்தி புருஜோத்தமன் தங்கமயில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் அவரது சகோதரர்களையும் ஆட்சியை விட்டுவிட்டு, வீட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்தி, ஐக்கிய மக்கள் சக்தி செவ்வாய்க்கிழமை (15) நடத்திய போராட்டத்தால் கொழும்பு அதிர்ந்தது. ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், ஜனாதிபதி செயலக வளாகத்துக்குள் நுழைந்து, ராஜபக்ஷர்களின் உருவப் பொம்மைகளை எரித்தார்கள். வழக்கமாக கட்சிகள், அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் இருந்து, இந்தப் போராட்டம் பெருமளவு மாறுபட்டிருந்தது. இந்தப் போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஒழுங்கு செய்திருந்தாலும், பங்குபற்றியவர்களில் கணிசமானவர்கள் கடந்த காலத்தில் ராஜபக்ஷர்களுக்க…
-
- 2 replies
- 414 views
-
-
ஒருங்கிணையும் எதிர்கட்சிகளும், சிந்திக்காத தமிழர் தலைமைகளும் | திரு.யதீந்திரா | நிலாந்தன் மகாதேவா
-
- 0 replies
- 316 views
-
-
வயிறு எரிந்து கொண்டிருக்கிறது வாழ்வு தொலைந்து கொண்டிருக்கிறது மிஞ்சி இருப்பதற்கு இனி என்ன இருக்கிறது. அப்போது தமிழ்க் குழந்தை பாடினான் இப்போது சிங்களக் குழந்தை பாடுகிறான். இதை என்னவென்பது கர்மம் என்பதா இல்லை காலம் என்பதா. இன்று அரசு மேல் ஆத்திரமாக இருக்கிறீர்கள் ஆளுக்கு ஆள் திட்டியும் தீர்க்கிறீர்கள். அடுத்த நாள் சோத்துக்கே என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறீர்கள். யுத்தம் இல்லாத போதும் இன்று நித்தம் சோதனை. ஏன் இந்த நிலைமை என்று உங்களை நீங்களே கேளுங்கள் எம் சிங்கள இன சகோதரரே. ஒருவரை ஒருவர் வெறுத்தீர்கள் உங்களை போல் இன்னும் ஒரு இனம் வாழ விடாமல் தடுத்தீர்கள். இனவாதம் என்ற பெயரில் எல்லா பொய்களையும் சொல்லி இனத்தை எல்லாம் பிரித்தீர்கள். பௌத்த நாடு என்ற பெயரில…
-
- 6 replies
- 584 views
-
-
காங்கிரஸுக்கு நேரு குடும்பம் விடை கொடுக்க வேண்டிய தருணம் இது ராமச்சந்திர குஹா தமிழில்:வ.ரங்காசாரி ஒவ்வொரு தேர்தலுமே வென்றவர்கள், தோற்றவர்களைப் பற்றிய கதைகள்தான். சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநிலச் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் முடிவுகளைப் பற்றிய விமர்சனங்கள் பெரும்பாலும் பெரும் வெற்றிபெற்ற கட்சிகளையும் தலைவர்களையும் விதந்தோதுவதாகத்தான் இருக்கும், இந்தக் கட்டுரை தோற்றவர்களில் முக்கியமானவர்களைப் பற்றியே எழுதப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் ஆதித்யநாத் மீண்டும் மிக வசதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார், பாஜகவும் அறுதிப் பெரும்பான்மை வலு பெற்றுவிட்டது; பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி (ஆஆக) அபாரமான வெற்றி பெற்றிருக்கிறது. மதச்சார்பற்ற காங்கிரஸ் க…
-
- 0 replies
- 398 views
-
-
தமிழ்- முஸ்லிம் விரிசலுக்கு அரைவேக்காடு அரசியல்வாதிகளே காரணம் ஏ.எச்.ஏ. ஹுஸைன் husseinmedia000@gmail.com “நிச்சயமாக ஒரு தமிழ்ப் பெண்தான் எனது பாட்டியாக இருந்திருப்பார். என்னுடைய தாய், தந்தையின் நாலாவது அல்லது ஐந்தாவது தலைமுறை, தமிழ்க் குலத்துப் பெண்கள்தான்; இதுதான் யதார்த்தம். இதை ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்வதுதான். மறுப்பவர்கள் விட்டுவிட வேண்டியதுதான்” என்று சமகாலப் போக்குகளையிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் மூதறிஞரும் நாடறிந்த எழுத்தாளரும் சமாதான ஆர்வலருமான ஓட்டமாவடி எஸ்.எல்.எம். ஹனீபா. …
-
- 1 reply
- 355 views
-
-
ஒரே நாளில் சரிந்த ரூபாவின் பெறுமதி: இலங்கையில் என்ன நடக்கிறது? என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan ஐக்கிய அமெரிக்க டொலர் ஒன்று ($1) 1997ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில், 60 ரூபாய்; 2022 மார்ச் 11இல் மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ விற்பனைவிலை 260 ரூபாய். 25 வருடங்களில், இலங்கை ரூபாய் கண்டுள்ள பெருவீழ்ச்சி இது. இந்த 260 ரூபாய் என்பது, மத்திய வங்கியின் விலைதான். ஆனால், இந்த விலைக்குக் கூட டொலரை வாங்க முடியாத நிலைதான் சந்தையில் காணப்படுகிறது. இந்தப் பெருவீழ்ச்சியின் பெருமளவு, கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்டிருக…
-
- 1 reply
- 452 views
-
-
-
- 0 replies
- 618 views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனான ஜனாதிபதியின் சந்திப்புக்குக் காரணம் லக்ஸ்மன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஜனாதிபதி சந்திப்பதானது, ஒருபடி கீழிறங்கலாகவே பார்க்கப்படவேண்டும். இதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சந்திக்கிறார் ஜனாதிபதி என்றும் ஜனாதிபதியைச் சந்திக்கிறது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்றும் இன்னும் பலவாறும் பொருள் கொள்ளலாம். எவ்வாறு பார்த்தாலும், நடைபெறவுள்ளது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புதான். சந்திப்புக்கே இரண்டுக்கு மேற்பட்ட வகைகளில் விளக்கம் கொடுக்கமுடியுமென்றால், சந்திப்பு எவ்வாறான விடயங்களை உள்ளடக்கியிருக்கும் என்பதற்கும் பல வியாக்கியானங்களைக் கொடுக்க முடியும். அரசாங்கத்துடன் நட்பைப் பாராட்ட முனைந்தாலே தவறாகப் பார்க்கப்படுகின்ற மனோநிலை, தமி…
-
- 2 replies
- 456 views
-
-
ஜெனீவா 2022 – நிலாந்தன். March 13, 202 கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட ஜெனிவாத் தீர்மானத்தில் ஒரு விடயம் உண்டு. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சான்றுகளைத் திரட்டும் ஒரு பொறிமுறை உருவாக்கப்படும் என்பதே அது. அவ்வாறு ஜெனிவா தீர்மானத்தில் அப்பொறிமுறையை இணைப்பதற்காக தொடக்கத்திலிருந்தே உழைத்தது பி.ரி.எஃப் எனப்படும் பிரித்தானியாவை மையமாகக் கொண்டியங்கும் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்பு ஆகும். மியான்மர் மற்றும் சிரியாவில் உருவாக்கப்பட்ட பொறிமுறைகள மனதில் வைத்து பிரிஎப் உழைத்திருந்தாலும் தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டது அப்படிப்பட்ட ஒரு பொறிமுறை அல்ல என்ற ஒரு விமர்சனம் உண்டு. மேலும் அது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி …
-
- 0 replies
- 495 views
-
-
-
- 0 replies
- 899 views
-