அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
கோட்டாவின் விடாப்பிடி கொடாப்பிடி என்.கே. அஷோக்பரன் இலங்கை, வரலாறு காணாத மக்கள் எழுச்சியை சந்தித்து நிற்கிறது. பணம், சாராயம், பிரியாணிப் பொட்டலம் கொடுத்து, பஸ்களில் ஆட்களை ஏற்றிவந்து, அரசியல் கட்சிகள் நடத்தும் ‘எழுச்சி’கள் போலல்லாமல், மக்களால், மக்களுக்காக, மக்கள் எழுந்துநிற்கும் மாபெரும் எழுச்சியை, கடந்த இரண்டு வாரங்களாக, இலங்கை கண்டுவருகிறது. இந்த மக்கள் எழுச்சியின் குரல் ஒன்றுதான்; “கோ ஹோம் கோட்டா” (கோட்டா வீட்டுக்குப் போ), “கோ ஹோம் ராஜபக்ஷஸ்” (ராஜபக்ஷர்கள் வீட்டுக்குப் போங்கள்). 2009 - 2015 காலப் பகுதிகளிலெல்லாம் ‘கோட்டா’ என்ற பெயர், அச்சத்தைத் தருவதாக இருந்தது. மஹிந்…
-
- 1 reply
- 491 views
-
-
பொறுப்பை உணர்வதும் முக்கியம் லக்ஸ்மன் மக்கள் கிளர்ச்சி அடிப்படைவாதத்தின் பாலான ஒன்றாக மாறிவிடும் ஆபத்து இலங்கைக்கு ஏற்பட்டிருக்கிறது. மக்களை அடிப்படைவாதம், அதன் கட்டுக்குள் வைத்திருக்கின்ற நிலையானது மிகவும் பாரதூரமான அழிவையே எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்று அனைவரும் அச்சப்பட வேண்டியதே இதற்குண்டான பிரதிபலனாக இருக்கப்போகிறது. கடந்த காலங்களின் பிழையான தீர்மானங்கள், விட்டுக் கொடுப்பின்மை, உரிமைகளை கௌரவிக்காமை, மதிப்பளிக்காமை காரணமாக, நாட்டில் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினையானது தீர்வுக்கு உட்படுத்தப்படாமலேயே காலங்கடத்துகின்ற ஒரு பாரதூரமான விடயமாக இருந்துவருகிறது. உரிமைகள் மீறப்படுவதானது, தாம் செய்த பிழைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழியா…
-
- 0 replies
- 524 views
-
-
இன்றைய நெருக்கடி: கல்லுளிமங்கன்களுடன் காலம் கழித்தல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கடந்த பல வாரங்களாக எழுதிவந்த ‘ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை’ தொடரைத் தற்காலிகமாக நிறுத்தி, சமகால நெருக்கடிகளின் பல்பரிமாணம் தொடர்பாக, இப்பந்தி அலசுகிறது. கடந்த ஒருவார காலத்துக்குள், இலங்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவை வரவேற்கப்பட வேண்டிய மாற்றங்கள். இலங்கையின் இன்றைய நெருக்கடியை, வெறுமனே ஒரு பொருளாதாரப் பிரச்சினையாகப் பார்ப்பது, முழுமையான ஒரு பார்வையாகாது. இது, நான்கு நெருக்கடிகளின் கூட்டு விளைவு. முதலாவது, அரசியல் நெருக்கடி; இரண்டாவது, ஆட்சியியல் - நிர்வாக நெருக்கடி; மூன்றாவது, பொருளாதார நெருக்கடி; நான்காவது, சமூக நெருக்கடி. ஓன்றோடொன்று பின்னிப்பிணைந்த இந்த நெருக்கடி…
-
- 0 replies
- 277 views
-
-
அரசாங்கமும் தோற்றுவிட்டது, எதிர்க்கட்சிகளும் தோற்றுவிட்டன, நாடே... தோற்றுவிட்டது? நிலாந்தன். தற்பொழுது தென்னிலங்கையில் நடந்துகொண்டிருக்கும் மக்கள் எழுச்சிகள் இலங்கைத்தீவின் நவீன அரசியல் வரலாற்றில் முன்னெப்பொழுதும் ஏற்படாதவை. இதற்கு முன்பு இலங்கைத்தீவு, நாடு தழுவிய வேலை நிறுத்தங்களை கண்டிருக்கிறது. தமிழ் மக்களின் சத்தியாகிரக போராட்டத்தை கண்டிருக்கிறது. தொழிற்சங்க போராட்டங்களை கண்டிருக்கிறது. ஜேவிபியின் இரண்டு ஆயுதப் போராட்டங்களை கண்டிருக்கிறது. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை கண்டிருக்கிறது. தவிர கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் மக்கள் ஆங்காங்கே தெட்டந் தெட்டமாக நடத்தும் கவனயீர்ப்பு போராட்டங்கள், ஒருநாள் எழுத தமிழ்கள், சில நாள் P2P போன்றவற்றை கண்டிருக்கிறது. ஆனால் தென்னிலங்க…
-
- 0 replies
- 355 views
-
-
கொந்தளிக்கும் சிங்கள மக்கள்: தமிழ்மக்களின் நிலைப்பாடு என்ன? நிலாந்தன். April 10, 2022 நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் எல்லா இனங்களையும் பாதிக்கின்றன. எனவே அரசுக்கு எதிரான போராட்டத்தில் சிங்களவர் தமிழர்,முஸ்லிம்கள் ஆகிய மூன்று இன மக்களும் ஒன்று சேரவேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எந்த அரசியல் இலக்கை முன்வைத்து அவ்வாறு ஒன்று சேர்ந்து போராடுவது என்பதில் தமிழ் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். சிங்கள மக்கள் போராடுவது ஒரு ஆட்சி மாற்றத்திற்காக. ஆட்சியை மாற்றினால் அவர்களுடைய பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் ஆட்சி மாற்றத்தால் தமிழ் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும்? 2015 இல் நடந்ததுதான் திரு…
-
- 0 replies
- 371 views
-
-
-
வட–கிழக்கில் தமிழர்களை ஒடுக்கும் வகையான இராணுவ கட்டமைப்புகள் கலைக்கப்பட வேண்டும் – கஜேந்திரகுமார் இன்றைய நெருக்கடியிலிருந்து மீள இராணுவச் செலவினங்கள் குறைக்கப்பட்டேயாக வேண்டும். இதனை ஓர் முன்நிபந்தனையாக வைக்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் நாம் வேண்டுகோள் விடுப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவா் கஜேந்திரகுமார் எம்.பி. தெரிவித்தார். வடக்கு – கிழக்கில் வாழும் தமிழர்களின் மீதான ஒடுக்குமுறையாளராகச் செயற்படும் இராணுவக் கட்டமைப்புகள் கலைக்கப்பட வேண்டும். தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் அச்சத்தை நீக்குவதற்கு ஆட்சியாளர்கள் முயல்வார்களேயானால் நிச்சயமாக பாதுகாப்புச் …
-
- 0 replies
- 260 views
-
-
-
- 3 replies
- 611 views
-
-
மாறாத ஆட்சியாளர்களும் சிந்திக்க வேண்டிய தமிழர்களும்
-
- 0 replies
- 818 views
-
-
ராஜபக்ஷர்களுக்கு எதிரான போர்க்கோலம் புருஜோத்தமன் தங்கமயில் ராஜபக்ஷர்களுக்கு எதிராக, முழு நாடும் போர்க்கோலம் பூண்டிருக்கின்றது. ராஜபக்ஷர்கள் ஆட்சி அதிகாரத்தை விட்டு, வீட்டுக்கு செல்லும் வரை இந்தப் போர்க்கோலம் இன்னும் இன்னும் தீவிரமடையும் நிலையே காணப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்துக்கு முன்பாக, கடந்த வாரம் மாபெரும் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அன்று ஆரம்பித்த ராஜபக்ஷர்களின் வீடுகள், வளவுகளை முற்றுகையிடும் போராட்டம், மஹிந்த ராஜபக்ஷவின் தங்காலை வளவு, அவர் தற்போது வதியும் கொழும்பு இல்லம், பசில் ராஜபக்ஷவின் பத்தரமுல்லவிலுள்ள வீடு என்று ஒவ்வொரு நாளும் போராட்டக்காரர்களால் சூழப்படுகின்றது. பொலிஸாருக்கும் இராணுவத்துக்கும…
-
- 0 replies
- 403 views
-
-
காத்திருக்கும் பாரியதோர் அரசியல், பொருளாதார நெருக்கடி எம்.எஸ்.எம். ஐயூப் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மூலம் அல்லது ஆயுதப் போராட்டங்கள் மூலம் ஆட்சியாளர்களை விரட்டியடித்த நாடுகள் இருக்கின்றன. பிலிப்பைன்ஸ், டியூனீசியா, எகிப்து, ஈரான், உக்ரைன் போன்ற பல நாடுகளில், மக்கள் ஆயுதம் ஏந்தாமலேயே ஆர்ப்பாட்டங்கள் மூலமாக, ஆட்சியாளர்களைப் பதவியிலிருந்து விலக்கி, நாட்டை விட்டும் ஓடச் செய்தனர். அவ்வாறானதொரு நிலைமை, இலங்கையிலும் உருவாகி வருகிறது போல் தெரிகிறது. இலங்கையிலும் 1953ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், ஒரு கொத்து அரிசியின் விலை 25 சதத்திலிருந்து 70 சதமாக திடீரென உயர்த்தப்பட்ட போது, நாட்டு மக்கள் கிளர்ந்தெழுந்தனர். நாட்டில் பல பகுதிகளில், மக்கள் ஆரப்பாட்டங்களை நடத்தினர். அம்…
-
- 0 replies
- 398 views
-
-
-
- 0 replies
- 618 views
-
-
மீண்டும் சந்திரிகா அல்லது மைத்திரி தலைவராகலாம் என்கிறார்களே?
-
- 4 replies
- 807 views
- 1 follower
-
-
-
- 9 replies
- 775 views
-
-
-
- 8 replies
- 1.3k views
-
-
ஜே.வி.பி எனும் இனவாத சக்தி என்.கே. அஷோக்பரன் ராஜபக்ஷர்களுக்கு எதிரான மக்கள் அலை, தினம்தினம் வளர்ந்து கொண்டிருக்கிறது. ராஜபக்ஷர்களுக்கு எதிராக எழுந்திருக்கும் மக்கள் எதிர்ப்பையும் அதிருப்தியையும், தமக்குச் சாதகமாக்க சஜித் பிரேமதாஸவை முன்னிறுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியும், அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி என்ற மக்கள் விடுதலை முன்னணியும் களத்தில் இறங்கியுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி, திக்குத் தெரியாத நடுக்கடலில் சிக்கிய, பல கப்டன்களைக் கொண்ட கப்பலைப் போலத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. தான் ஒரு கட்சியா? அல்லது, கூட்டணியா என்ற குழப்பம், ஐக்கிய மக்கள் சக்திக்கு உள்ள ஆயிரம் பிரச்சினைகளில், ஒரு பிரச்சினையாகக் காணப்படுகின்றது. ஆகவே, பிரதான எதிர்க்கட்சி வலு…
-
- 2 replies
- 541 views
-
-
அடுத்த ஜனாதிபதி யார்? கனவு காணும் அடுத்த ஜனாதிபதிகள் என்.கே. அஷோக்பரன் மின்சாரம் இல்லை; எரிவாயு இல்லை; எரிபொருள் இல்லை; அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், தட்டுப்பாடு; பொது மக்களின் அன்றாட வாழ்வு அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. கோட்டாவுக்கு வாக்களித்தோர் பலவிதம். அப்பட்டமான இனத்துவேசத்தின் காரணமாக வாக்களித்தோர் ஒரு வகையென்றால், கோட்டா, பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது, கொழும்பை சுத்தம் செய்து அழகுபடுத்தியதைப் போல, நாட்டையும் ஆட்சியையும் சுத்தம் செய்து அழகுபடுத்திவிடுவார் என்று நம்பி வாக்களித்தோர் இன்னொரு வகை. இன்று, இந்த எல்லா வகையினரும் மின்சாரமின்றித் தத்தளிக்கிறார்கள். எரிவாயு, எரிபொருளுக்காக வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள். ஏறியிருக்கு…
-
- 1 reply
- 436 views
-
-
வீழ்ச்சியின் விளிம்பில் ராஜபக்ஷர்கள் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, கோட்டா ஆதரவாளர்களிடமிருந்து, “இந்நாட்டுக்கு ஹிட்லரைப் போன்ற ஒரு தலைவர் வேண்டும்; அது, கோட்டா தான்” என்ற தொனியிலான முழக்கங்களை இந்நாடு கேட்டது. ‘எதற்கும் துணிந்தவன்; எல்லாம் வல்லவன்’ என்ற பிம்பம் கோட்டாவைப் பற்றி பெருப்பித்துக் கட்டப்பட்டது. இதன் பின்னணியில், இலங்கையில் சர்ச்சையான முறையில் பணம் சம்பாதித்திருந்த வணிகர்கள் பலரும், தம்மை நாட்டை நேசிக்கும் தொழில் நிபுணர்களாகக் காட்டிக்கொண்ட ஒரு கூட்டமும் பௌத்த மதத் தலைவர்களைக் கொண்ட ஒரு குழாமும் இருந்தது. ‘சிங்கள - பௌத்தம்’ என்ற பேரினவாத நிகழ்ச்சி நிரல் முன்னிறுத்தப்பட்டது. ‘சிங்கள - …
-
- 0 replies
- 584 views
-
-
நிதானம் இழக்கும் அரசியல் லக்ஸ்மன் மக்கள் கிளர்ச்சி ஒன்றே தீர்வுக்கான வழி என்ற நிலை தோன்றியிருப்பதாகவே உணரமுடிகிறது. ஆனால் ஆட்சி மாற்றம் நிச்சயமான தீர்வலல்ல என்பது மாத்திரம் உண்மை. இதனை மக்கள் உணரத் தலைப்படவேண்டும். இப்போது நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையானது, நிதானமும் அதனுடன் இணைந்த தீர்மானமுமேயாகும். போராட்டங்கள் வெடிக்கின்றன. அவற்றினை அடக்குவதற்கான வழிகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்த வழிமுறைகள் புதியவையல்ல. தமிழர்களின் உணர்வுகளையும் போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் அடக்குவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட முறைகளே அவை. அவை இப்போது சிங்கள முஸ்லிம் மக்களையும் அடையாளப்படுத்துகின்றன. அதனால்தான், மக்கள் கிளர்ச்சியை அடிப்படைவாதத்தின் பெயரை கொண்டு அடக்க அரசா…
-
- 0 replies
- 351 views
-
-
கோத்தா பதவியில் இருக்கும் வரை, மேலை நாடுகள் உதவி கிடைக்கப்போவதில்லை. ராஜபக்சேக்கள் சீனாவின் சார்பு நிலை கொண்டுள்ளதால், இந்தியாவும் அதனையே விரும்புகிறது. இந்தியா உறுதி அளித்த $1பில்லியன் கடன் கூட, எதிர்பார்த்த விரைவில் வரவில்லை. அதாவது, ராஜபக்சேக்கள் அரசியல் ரீதியாக மிகவும் பலவீனம் ஆக வேண்டும் என்று தாமதம் செய்கிறார்கள் போல தோன்றுகிறது. ஆகவே அவர்கள் விலக வேண்டிய நிலை வரும். 2009ல் சர்வதேசத்தின் பார்வையில், புலிகள் ஒரு சுமையாக தமிழர்களுக்கு இருந்தது போலவே, இன்று ராஜபக்சேக்கள் சிங்களவர்களுக்கு சுமையாக மாறி விட்டார்கள். இலங்கை வந்த, இந்திய ராணுவத்தினை, மோதி திருப்பி அனுப்ப பிரபாகரன் சிங்களத்துக்கு தேவைப்பட்டது. சுதந்திரத்தையும், இறைமையும் காத்து தந்த, தைரியம் …
-
- 10 replies
- 798 views
-
-
-
- 23 replies
- 1.6k views
-
-
திறந்து மூடப்பட்ட யாழ்.கலாச்சார மையம் ? நிலாந்தன் கடந்த திங்கட்கிழமை யாழ். கலாச்சார மையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.ஆனால் பொருத்தமான வார்த்தைகளில் சொன்னால் அது வைபவ ரீதியாக திறக்கப்பட்ட பின் மூடப்பட்டுள்ளது என்பதே சரி. இந்தியாவின் நிதி உதவியோடு கட்டப்பட்ட அக்கட்டடம் 11 மாடிகளைக் கொண்டது. யாழ்ப்பாணத்தின் நில அமைப்பைப் பொருத்தவரை ஆறு மாடிகளுக்கு மேல் கட்டிடங்களைக் கட்டுவதற்கு கட்டடநிர்மாணத் துறையினர் அனுமதிப்பதில்லை.எனினும் விசேஷ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய எல்லா கட்டடங்களை விடவும் உயரமான ஒரு கட்டடமாக கலாச்சார மையம் கட்டியெழுப்பப்பட்டது.யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல தமிழர்களின் தாயகத்தில் உள்ள மிக உயரமான கட்டடம் அது. அதன்…
-
- 1 reply
- 716 views
-
-
இருளுக்குள் மூழ்கிய தேசம்-பா.உதயன் இலங்கையின் தலைவர்கள் உண்மையான புத்தமத தலைவர்களாக இருந்திருந்தால் நாம் ஆயுதம் ஏந்தி போராடி இருக்க மாட்டோம் என்று தமிழர் விடிவுக்காய் போராடிய விடுதலைப் புலிகளின் தலைவர் கூறி இருந்தார். One time the LTTE leader said to the media if the leader of the country is a real buddist he would not take arm struggle against government. அதேபோல் இந்த நாட்டின் பௌத்த பிக்குகளும் தலைவர்களும் உண்மையும் நீதியும் நேர்மையும் கொண்டவர்களாக இருந்து அனைத்து இன மக்களும் பெரும் பான்மை சிங்கள மக்கள் போலவே சமத்துவத்துடனும் சம உரிமையுடனும் வாழ வழி சமைத்திருந்தால் இன்று இந்த நாடு இவ்வளவு பெரிய பாரிய பிரச்சினையை எதிர் நோக்கி இருக்காது. சோசலிசம் கொம்யூனிசம் என்ற…
-
- 0 replies
- 596 views
-
-
சிங்கள மக்களின் கோபம்... அரசாங்கத்தை அசைக்குமா? நிலாந்தன். அரசியலில், அரசியல் பொருளாதாரம்தான் உண்டு.இலங்கைத்தீவின் பொருளாதார நெருக்கடிக்கு பிரதானமான காரணம் அரசியல்தான். பொருளாதாரத்தை சரியாக முகாமை செய்யத் தவறியமை மட்டும் காரணமல்ல. அது ஒரு உப காரணம்தான். இப்போதிருக்கும் பொருளாதார நெருக்கடியை அரசியல் நீக்கம் செய்து ஒரு பகுதி பொருளாதாரவிமர்சகர்கள் எழுதியும் பேசியும் வருகிறார்கள்.அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு இப்போதுள்ள பொருளாதார நெருக்கடியை அதன் அரசியலில் இருந்து பிரித்துப் பேசி வருகிறார்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.இலங்கைத்தீவு இப்பொழுது எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தனிய பொருளாதாரக் காரணங்களால் மட்டும் ஏற்பட்டவை அல்ல.இப்பொருளாதார நெருக்கடியை அதன் அரசியலை நீக்கிப் பே…
-
- 0 replies
- 598 views
-
-
ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? February 28, 2022 — வி. சிவலிங்கம் — ஐரோப்பாவில் மூன்றாம் உலகப் போருக்கான ஆரம்ப அறிகுறிகள் காணப்படுகின்றன. ரஷ்யாவின் கொல்லைப்புறத்தை நோக்கி நேட்டோ படைகள் நகர்வதாக ரஷ்யாவும், ஐரோப்பாவின் கொல்லைப்புறத்தை நோக்கி ரஷ்யா நகர்வதாகவும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் ஆரம்பமாகியுள்ளன. போர் ஆரம்பித்துள்ள இவ் வேளையில் நாம் சில கேள்விகளோடு இக் கட்டுரையை ஆரம்பிக்கலாம். – இப் போரின் தாற்பரியங்கள் என்ன? – நேட்டோ நாடுகளின் சதி வலைக்குள் உக்ரெய்ன் வீழ்ந்துள்ளதா? – உக்ரெயின் வலதுசாரி தேசியவாதிகளினதும், நாக்ஸிஸ தரப்பினரதும் இலக்கு என்ன? – இப்…
-
- 18 replies
- 1.3k views
-