அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
-
“இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இடமளிக்கப்படாமை மிகப்பாரதூரமான விடயமாகும்” முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டாயிற்று. இலங்கையை ஆட்சி செய்த காலணித்துவ ஆட்சியாளர்கள் காலம் முதல் தற்போது வரைக்கும் அந்த நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் முஸ்லிம் அரசியல், மதத் தலைவர்கள் மிகவும் புத்திசாதுரியமாகவும், அறிவுபூர்வமாகவும் கையாண்டு வெற்றி கொண்டு வந்துள்ளார்கள். பெரும்பாலும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அவர்களின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட பொறாமையினாலேயே ஏற்பட்டுள்ளன. அத்தோடு பள்ளிவாசல்…
-
- 1 reply
- 428 views
-
-
தமிழகத்தில் பலப்படுமா திராவிட இயக்கம்? தமிழகத்தில் இரு பெரும் முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அ.தி.மு.கவுக்கு புதிய பொதுச் செயலாளர் தெரிவு செய்யப்படுகிறார். தி.மு.கவுக்கு செயல்தலைவர் நியமனம் செய்யப்படுகிறார். இரு கட்சிகளுக்கும் புதிய தலைமை வழி நடத்திச் செல்லும் சூழல் மீண்டும் திராவிட இயக்கங்களுக்குள் நிகழ்ந்திருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம், தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து 1949 இல் பிரிந்தது. பேரறிஞர் அண்ணாவின் கீழ் திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது. அதேபோல் 1972 இல் தி.மு.கவிலிருந்து பிரிந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார் மறைந்த எம்.ஜி.ஆர். மறைந்த தலைவர் எம்.ஜி.ஆருக்கு…
-
- 0 replies
- 327 views
-
-
P2P போராட்டம் எதுவரைக் கொண்டு செல்லும்? -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ பொத்துவில் முதல் பொலிகண்டி வரை (P2P) போராட்டம், இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மறுக்கவியலாது. இந்தப் போராட்டத்தின் முடிவைத் தொடர்ந்து, அரசியல்வாதிகள் இடையேயான பரஸ்பரக் குற்றச்சாட்டுகள், கருத்து மோதல்கள் ஒருபுறமும், இதற்கு யார் உரிமை கொண்டாடுவது என்பது, இன்னொரு புறமுமாக ஈழத்தமிழர் அரசியல் நகர்கிறது. இந்தப் போராட்டத்தில் உணர்வெழுச்சியோடு பங்குபற்றிய எல்லோருடைய கேள்வியும், அடுத்து என்ன என்பதே? இக்கேள்வி மிகவும் முக்கியமானது. இக்கேள்விக்கான பதிலைத் தேடுவதற்கு, இந்தப் போராட்டத்தின் போதும் அதன் பின்னரும், நடைபெற்ற நிகழ்வுகளை ஆழமாக நோக்க வேண்டியுள்ளத…
-
- 0 replies
- 458 views
-
-
-
- 1 reply
- 615 views
-
-
-
- 0 replies
- 699 views
- 1 follower
-
-
தமிழ்த் தேசிய அரசியலின் முறிவு? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, விளைவிக்கப்பட்ட குழப்பம் தொடர்பில் கடந்த இரண்டு வாரங்களாகப் பேசப்படுகின்றது. சம்பந்தன் ஏன் முள்ளிவாய்க்கால் வந்தார்?, மக்கள் ஏன் கொந்தளித்தார்கள்?, குழப்பத்துக்குப் பின் சம்பந்தன் அழைத்தும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஏன் ஊடக சந்திப்பைத் தவிர்த்தார்? என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு பதில்கள் எழுதப்படுகின்றன. ஆனால், எழுதப்படுகின்ற பதில்கள் எல்லாமே ஒரேயிடத்தில் வந்து முட்டி நிற்கின்றன. அவை, ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மக்கள் நம்பிக்கையிழந்து விட்டார்கள். மக்களின் விமர்சனங்களு…
-
- 0 replies
- 439 views
-
-
ஜெனிவாவுக்கான அறிக்கையிலும் முரண்படும் தமிழ்த் தலைமைகள் – அகிலன் September 7, 2021 ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகளிடையேயான பிளவு மீண்டும் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. ஒரே குரலில் ஜெனிவாவுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும் வகையிலான அறிக்கை ஒன்றை அனுப்பி வைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்திருக்கின்றன. முரண்படும் தமிழ்த் தலைமைகள்; இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் நான்காகப் பிளவுபட்டு தமது அறிக்கைகளைத் தனித்தனியாக ஜெனிவாவுக்கு அனுப்பிவைக்கின்றன. இதில் ஐந்தாவதாக அனந்தி சசிதரன் தலைமையிலான கட்சி இந்த அணிகள் எதற்குள்ளும் செல்லாமல் தனித்து நிற்கின்றது. …
-
- 0 replies
- 391 views
-
-
இராணுவத்தின் களமிறக்கம்; பொறுப்பற்ற தமிழ்த்தலைமை இரண்டு பொலிஸார் மீது, கொக்குவில் பகுதியில் வாள்வெட்டு நடத்தப்பட்டதையடுத்து, யாழ்ப்பாணம் வந்திருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, “நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, தேவைப்பட்டால் இராணுவத்தினர், கடற்படையினர், விமானப்படையினரின் உதவியையும் பெறுவேன்” என்று கூறியிருந்தார். யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுமார் ஆயிரம் பேரைக் கொண்ட விசேட அதிரடிப்படையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பொலிஸ்மா அதிபர், அவர்களின் மூலம், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் வாய்ப்புகள் இருந்தாலும், முப்படைகளையும் களமிறக்குவேன் என்று எச்சரித்தமை, சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடிய…
-
- 0 replies
- 359 views
-
-
ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை ஆணைக்குழுவும் திராவிட இயக்கங்களும் “ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை ஆணைக்குழு அமைக்கப்படும்” என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் கோரிக்கை மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கைதான் இது என்றாலும், எட்டு மாதங்களுக்குப் பிறகு, இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது. 2016, டிசெம்பர் ஐந்தாம் திகதி, ஜெயலலிதா மரணமடைந்தார் என்றாலும், அவர் ‘அப்பலோ’ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செப்டெம்பர் 22 ஆம் திகதியிலிருந்தே அனைத்தும் மர்மம் நிறைந்த பரபரப்பூட்டும் காட்சிகள் போல் இருந…
-
- 0 replies
- 370 views
-
-
நினைவு கூரல்களுக்கான தடை என்ற ஜனநாயக மீறல் லக்ஸ்மன் நினைவுகூரல்களுக்கும் நீதி கோரல்களுக்கும் விதிக்கப்பட்டு வருகின்ற தடையானது மிக மோசமானதொரு ஜனநாயக மீறல் என்பதை அறியாதவர்களாகவே இலங்கையின் அரசாங்கமும் அதன் படைகளும் பாதுகாப்புத் தரப்பினரும் இருந்து வருகின்றனர். அதற்குரிய மாற்று நடவடிக்கையினை யார் முன்னெடுப்பது என்பதே இப்போதைக்கு எல்லோரிடமும் உள்ள கேள்வி. ஆனால் ஏதோ நடப்பதெல்லாம் நடக்கட்டும் நமக்கென்ன என்றிருப்பவர்கள் அதிகமாகிக்கொண்டே வருகின்றனர் என்பதே கவலை. முக்கியமாக போராட்டம் நடைபெற்று அப்போராட்டம் மௌனிக்கப்பட்ட இலங்கையில், அதிகமாகவே படுகொலைகள், கொலைகளுக்கான நினைவு கூரல்களைக் கூட யாரும் செய்துவிடமுடியாதளவுக்கான அடக்குமுறைகள் நடைபெறுகின்றன. அதே நேரத்தில் நடை…
-
- 0 replies
- 500 views
-
-
கண்ணை மூடிக்கொண்டு கையை உயர்த்துதல் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-03#page-5
-
- 0 replies
- 468 views
-
-
யாழ். இளைஞர்கள் சோம்பேறிகள் என்ற புனைவு Ahilan Kadirgamar / சிறிது காலத்துக்கு முன்பு, போர் முடிவடைந்ததன் பின்பு, யாழ்ப்பாணச் சமூகம் பற்றித் திரும்பத் திரும்பக் கூறப்பட்ட ஒரு விடயமாக, அந்த மக்கள், எவ்வளவு கடின உழைப்பாளிகள் என்பதுவும் சிக்கனமாகச் செயற்படுவர்கள் என்பதுவும் மதிநுட்பம் கொண்டவர்கள் என்பதுவும் காணப்பட்டது. ஆனால் இன்று, யாழ்ப்பாணச் சமூகம், சோம்பேறித்தனமாக வந்துவிட்டது எனவும், ஊதாரித்தனமாகச் செலவுசெய்து, கடனில் மூழ்குகிறது எனவும் மக்கள் கதைப்பதைக் கேட்கக்கூடியதாக உள்ளது. யாழ்ப்பாணச் சமூகம், கடனில் சிக்கியுள்ளமை உண்மைதான், ஆனால், அவ்வாறான கடன் நிலைமை ஏற்படக் காரணங்கள் என்ன? கடந்த சில ஆண்டுகளுக்குள், ய…
-
- 0 replies
- 579 views
-
-
கோட்டா கோ கமவிலிருந்து... ஹொரு கோ கமவிற்கு – நிலாந்தன். ஐந்து வாரங்களுக்குள் இரண்டாவது தடவையாக அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுருக்கிறது. ஏப்ரல் தொடக்கத்தில் அவ்வாறு பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ஜனாதிபதி மீளப் பெற்றுக்கொண்டார். இப்பொழுது அவசரகாலச் சட்டத்தை பிறப்பிக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? பிரதானமாக மூன்று காரணங்களைக் கூறலாம். முதலாவது காரணம், ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் ஒரு நிலைமை வளர்ந்து வருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் முதலில் கோட்டா வீட்டுக்கு போ என்று கேட்டார்கள். அதன்பின் மகிந்த வீட்டுக்குப் போ என்று கேட்டார்கள். இப்பொழுது நாடாளுமன்றத்தில் உள்ள திருடர்களை வீட்டுக்குப் போங்கள் என்று கேட்கிறார்கள். கோட்டாவை வீட்டுக்கு போகுமாறு கேட்டவ…
-
- 1 reply
- 421 views
-
-
தேசிய இனங்களின் விடுதலைக்கு கற்றலோனியர்கள் முன்னுதாரமாணவர்களே! கற்றலோனியரின் தனிநாட்டுக் கோரிக்கை சர்வதேச மட்டத்தில் அதிக சர்ச்சைகளை தூண்டிவிட்டுள்ளது. சுயாட்சிக்குரித்துடைய அந்தஸ்த்தை அனுபவித்த கற்றலோனியர்கள் பிரிந்து சென்று தனிநாடு அமைக்க முயன்றனர். அதற்கான ஆதரவை தமது மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டாலும் உலக நாடுகளிடமிருந்து ஆதரவும் பெற வேண்டுமென்பதும் என்றுமே வலிமையான மூலக்கூறாக அமைந்துள்ளது. கற்றலோனியரின் தனிநாட்டுக்கான அணுகுமுறை எதிர்நோக்கியுள்ள பிரச்சனையை அலசுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும். முதலில் ஸ்பெயின் நாட்டின் அதிரடி முடிவுகளை அவதானிப்போம். கற்றலோனிய பிராந்திய நாடாளுமன்றத்தினை கலைப்பதாக ஸ்பெயின் பிரதமர் மரியானோ அறிவித்தார். ஸ்பெயினி…
-
- 0 replies
- 593 views
-
-
மறக்கப்படுகிறதா தமிழ்த் தேசியம்? என்.கே. அஷோக்பரன் Twitter @nkashokbharan ராஜபக்ஷ எனும் ‘கோலியாத்’தை, காலம், சாபம், அவர்கள் செய்த பாவம் என்று எல்லாம் சேர்ந்து வீழ்த்திக் கொண்டிருக்கின்றன என்று சொல்வது பொருத்தமற்றதல்ல! இலங்கை அரசியலில், அசைக்க முடியாத சக்திகள் தாம் என்பதை, ராஜபக்ஷர்கள் 2019-2020 தேர்தல்களில் நிரூபித்து, இரண்டு வருடங்களுக்கு உள்ளாகவே, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ராஜபக்ஷர்கள், தமது 2015ஆம் ஆண்டு தோல்விக்குப் பிறகு, திட்டமிட்டு, இனவாத உரத்தைக் கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியை உருவாக்கி, இன-மத தேசியவாதத்தை முன்னிறுத்திப் பெற்ற பெரும் தேர்தல் வெற்றி, இன்று தவிடுபொடியாகிய நிலையில் நிற்கிறது. 2020 பொதுத் தேர்தலில் ராஜபக்ஷர்கள…
-
- 0 replies
- 412 views
-
-
யூகோஸ்லாவியாவுக்கான குற்றவியல் தீர்ப்பாயம்: நீதியின் புதிய அத்தியாயம் நீதி எல்லோருக்குமானதல்ல; நீதி எல்லோருக்கும் பொதுவானது என்று சொல்லப்பட்டாலும் நடைமுறையில் அவ்வாறு நிகழ்வதில்லை. நீதியின் அளவுகோல்கள் வேறுபட்டன. யாருடைய நீதி, யாருக்கான நீதி, எதற்கான நீதி போன்ற கேள்விகள் நீதியின் தன்மையை விளங்கப் போதுமானவை. நீதி பற்றிய புதிய கேள்விகள், காலங்காலமாக எழுந்து அடங்கியுள்ளன. இருந்தபோதும், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியின் பெயரால், நீதியின் அரசியல் அரங்கேறியுள்ளது. இரண்டாம் உலகப் போரில் தோற்ற காரணத்தால் ஜேர்மனிய, இத்தாலிய, ஜப்பானிய இராணுவ அதிகாரிகள் தீர்ப்பாயத்தின் மூலம் தண்டிக்க…
-
- 0 replies
- 449 views
-
-
கூட்டு அரசைப்பலம் இழக்கச் செய்யும் மகிந்தவின் வியூகங்கள்!! கூட்டு அரசைப்பலம் இழக்கச் செய்யும் மகிந்தவின் வியூகங்கள்!! கூட்டு அரசு இந்த வருட ஆரம்பத்திலிருந்து பல விதமான அரசியல் நெருக்கடிகளுக்குள் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கின்றது. அரச தலைவரான மைத்திரிபால சிறி சேன, தலைமை அமைச்சரான ரணில் விக்கிரமசிங்க ஆகியோரது தலைமையிலான இரு பெரும் தேசியக் கட்சிகள் கூட்டுச் சேர்ந்து 40 மாதங்கள் காலமாக கூட்டு அரசை நா…
-
- 0 replies
- 487 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சம்பந்தன் பறிகொடுப்பாரா? எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடமிருந்து பறிப்பதற்காக, மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினர் மீண்டும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்காகச் சம்பந்தனுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை சமர்ப்பிப்பது தொடர்பாக, அவர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதற்கு முன்னரும் அவர்கள் அடிக்கடி இந்தக் கோரிக்கையை முன்வைத்து கோஷம் எழுப்பியிருக்கிறார்கள். ஆனால் இம்முறை, அவர்களின் கோரிக்கை அழுத்தமாக முன்வைக்கப்படுவதாகத் தெரிகிறது. பிரதமர் ரணில…
-
- 1 reply
- 550 views
-
-
அடக்கு முறையும் சுதந்திரமும் உழுத்துப் போன மன்னராட்சியின் கீழும் வெவ்வேறு பெயர்களில் அடக்குமுறை இராணுவ ஆட்சியின் கீழும் சமய சட்டங்கள் என்ற வேரில் இன்னொருவகை ஆதிக்கத்தின் கீழும் சுதந்திரத்தைப்பறிகொடுத்து நிற்கும் மக்கள் கூட்டத்தினரின் போராட்ட அலைதான் பெரும் சுவாலையாக அரபு நாடுகளை இன்று சூழ்ந்துள்ளது. மேற்கத்தைய வல்லரசுச் சக்திகளுக்குச் சமமாக நிற்க வேண்டிய சாம்ராஜ்யங்களின் பரிதாபமான கதை இது. "மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான்' என்ற ரூஸோவின் வார்த்தைகளுக்கு உலகம் இன்றும் தீர்வுகளைத் தேடிவருகிறது. ஏனெனில் இந்த வாசகம் இன்னொரு பகுதியையும் உள்ளடக்கி உள்ளது. அவன் எல்லா இடங்களிலும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ளான். மனித சுதந்திரத்தைக் புனிதப்படுத்திய ரூஸோவின் மகாவாக்கியம் இது…
-
- 0 replies
- 1.3k views
-
-
சோவியத் ஒன்றியத்திலிருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட யூதர்கள், இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்ததன் 25-வது ஆண்டு இது. இஸ்ரேலிய சமூகத்தில் இது குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். சோவியத் ஒன்றியத்தின் இரும்புத் திரை விலகிய பின்னர், இஸ்ரேலை நோக்கி யூதர்கள் திரண்டு வரத் தொடங்கினர். இஸ்ரேலில் இன்று இருக்கும் யூதர்களில் 5-ல் ஒருவர், சோவியத் ஒன்றியத்திலிருந்து வந்தவர்தான். ரஷ்யாவிலிருந்து குடிபுகுந்த அலியாக்களின் (வெவ்வேறு நாடுகளிலிருந்து இஸ்ரேலுக்குள் குடிபுகுந்த யூதர்களைக் குறிக்கும் சொல்) வாழ்க்கைச் சரித்திரம், வெற்றிக் கதைகளுக்கு உதாரணம். “ஒருசில ஆண்டுகளிலேயே இஸ்ரேலின் மக்கள்தொகையில் 20% அதிகரித்துவிட்டது” என்று நினைவுகூர்கிறார் சோவியத் ஒன்றியத்தை எதிர்த்த…
-
- 0 replies
- 572 views
-
-
முத்த வெளியில் திரண்ட சனங்கள் - நிலாந்தன் இந்திய அமைதிகாக்கும் படையினரால் யாழ்.பொது வைத்தியசாலையில் தமிழ்மக்கள் கொல்லப்பட்ட நாள் அது என்பதனால்,சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சியை வேறொரு நாளில் வைக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கேட்டிருந்தது. அக்கோரிக்கையை சந்தோஷ் நாராயணன் ஏற்கவில்லை. ஆனால் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் போரில் உயிர்நீத்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் ஈழப்போரைப் பிரதிபலிக்கும் பாடல்கள் பாடப்பட்டன. அப்பொழுது அங்கு கூடியிருந்த மக்கள் ஆர்ப்பரித்து அதைக் கொண்டாடினார்கள். அது ஒரு மழை நாள். அன்று பின்னேரம் மழை விட்டுத் தந்தது. முத்த வெளியில் கடந்த 15 ஆண்டுகளில் இதுவரை காணாத சன வெள்ளம். அந்த இடத்தில் இதற்கு முன் வர்த்தகக…
-
- 2 replies
- 904 views
-
-
தமிழ்ப் பகுதிகளை விட்டு படையினரை வெளியேற்றம் செய்யக் கூடிய சக்தி தமிழ்க் கட்சிகள் மத்தியில் உண்டா?- நிலாந்தன் (கட்டுரை) புங்குடுதீவுச் சம்பவம் தொடர்பில்…. “வட மாகாணசபையின் முதலமைச்சர் இத்தகைய பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம், படைமயப்பட்ட ஒரு சமூகச் சூழலே என்று கூறுகிறார். போதையூட்டும் பொருட்கள் இளைய தலைமுறையினர் மத்தியில் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகவும், இது குற்றச் செயல்களை ஊக்குவிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். அவர் கூறுவதன் அடிப்படையில் யோசித்தால் தமிழ் பகுதிகளில் படைமய நீக்கம் செய்வதே இப்பிரச்சினைகளுக்கெல்லாம் இறுதித்தீர்வாக அமைய முடியும் என்று தெரிகின்றது. வட மாகாண முதலமைச்சர் கூறி வருவது போல பிரச்சினைகள் எல்லாவற்றுக்குமான மூலகாரணம் படைமயப்பட்ட ஒரு சூழல்த…
-
- 0 replies
- 454 views
-
-
மேற்குலகின் இலங்கை மீதான ஈடுபாடு. சீனாவின் மடியில் இருந்து இலங்கை மீட்கப் பட்டு உள்ளது. அண்மைய தேர்தலில் ராஜபக்சே, ஜனநாயக ரீதியில் மண் கவ்வ வைக்க, பின்புலத்தில் மேற்கின் கடும் உழைப்பு இருந்தது அவதானிக்கப் பட்டு உள்ளது. ராஜபக்சேவின் வெற்றியானது, நாட்டினை மீண்டும் சீனாவின் கைக்கு கொண்டு செல்லும் நிலைமை கொண்டதாக இருந்தாலும், மைத்திரி எனும், அதிகார மையத்தினை சரியாக கையாண்டு அவரது தோல்வி உறுதிப் படுத்தப் பட்டு உள்ளது. அடுத்து என்ன? இந்திய நிலைப்பாடு இந்தியாவிலும் பார்க்க வேகமாக அமரிக்கா செயல்படுவது தெளிவாக தெரிகின்றது. சிலர் அமெரிக்க ஈடுபாடு, இந்தியாவிற்கு பிடிக்காவிடினும், சீனாவிலும் பார்க்க, அமெரிக்கா, பரவாயில்லை என்று கருத்து தெரிவிக்கின்றனர். தமிழ் நாட்டில், அமெரிக்…
-
- 0 replies
- 283 views
-
-
தொடரும் தவறுகள்..! தமிழ் அரசியல் ஓர் இக்கட்டான நிலைமைக்குள் பிரவேசித்திருக்கின்றது. இந்த நிலைமையில் இருந்து அது எவ்வாறு வெளிவரப் போகின்றது என்பதும், பல்வேறு நெருக்கடிகளுக்கும், அரசியல் ரீதியான அச்சுறுத்தல்களுக்கும் ஆளாகியுள்ள தமிழ் மக்களை எவ்வாறு அது வழிநடத்தப் போகின்றது என்பதும் சிந்தனைக்குரியது. நல்லாட்சி அரசாங்கம் வாய்ப்பேச்சில் தனது வீரத்தைக் காட்டியதேயொழிய, காரியத்தில் எதனையும் சாதிக்கவில்லை. எதேச்சதிகாரத்தை ஒழித்துக்கட்டி, ஜனநாயகத்துக்குப் புத்துயிரளித்து, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்போவதாக நல்லாட்சி அரச தலைவர்கள் உறுதியளித்திருந்தனர். ஆனால், காலப் போக்கில் அந்த உறுதிமொழி…
-
- 0 replies
- 563 views
-