அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
நவீனகால உலகம் இதுவரை பார்க்காத போராட்டத்தை மீண்டுமொருமுறை ஹாங்காங் மக்கள் முன்னெடுத்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர்கள், தலைவர்கள் என சொல்லிக்கொள்ளும் படியாக யாருமே இல்லாததே இப்போராட்டத்தின் சிறப்பம். ஆனால், ஹாங்காங் முழுவதும் போராட்டங்களில் பங்கேற்றுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் குறைந்தது ஒரு டெலிகிராம் (குறுஞ்செய்தி செயலி) குழுவில் இருப்பதாகவும், அவற்றை நிர்வகிப்பதற்கு பலர் தன்னார்வலர்களாக செயல்படுவதாகவும் போராட்ட குழுவினர் தெரிவிக்கின்றனர். அதாவது, அரசு நிர்வாகத்தின் செயல்பாட்டை கண்டித்து நடைபெற்று வரும் இந்த மாபெரும் போராட்டத்தில் பங்கேற்கும் மக்களை, நூற்றுக்கணக்கான டெலிகிராம் குழுக்களை நடத்தும் சிலர் வழி நடத்துகின்றனர். ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்…
-
- 1 reply
- 1.2k views
-
-
02 SEP, 2024 | 01:38 PM டி.பி.எஸ். ஜெயராஜ் இம்மாதம் 21ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஒருவர் இறந்ததை அடுத்து இப்போது 38 பேர் களத்தில் நிற்கிறார்கள். அவர்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சி தலைவர் பிரேமதாசவுமே பிரதான வேட்பாளர்கள். ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, பிரபல ஊடக நிறுவனங்களின் உரிமையாளரான திலித் ஜயவீர, பிலாட் மார்ஷல் சரத் பொன்சேகா, முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங…
-
- 0 replies
- 528 views
- 1 follower
-
-
' நரகத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ' - வீ.தனபாலசிங்கம் ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று நேற்றைய தினத்துடன் சரியாக மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. அந்த கொடூரமான தாக்குதல்களுக்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் காரணமென்றால், அதற்கு பிறகு இலங்கை அரசியலில் காணக்கூடியதாக இருக்கின்ற வெறுப்பூட்டும் போக்குகளுக்கு சிங்கள - பௌத்த அடிப்படைவாதம் காரணமாக இருக்கிறது. கடந்த மூன்று மாதகாலத்தில் அரசியல் விவாதங்களின் திசைமார்க்கத்தை தீர்மானிக்கின்ற முக்கியமான காரணிகளில் சிங்கள - பௌத்த மேலாண்மைவாதம் முதல்நிலை வகித்துவருகிறது. அதன் முன்னரங்க சேனைகளாக பிக்குமார் விளங்குகிறார்கள். அரசியலில் பிக்குமாரின் ஆதிக்கம் என்பது இலங்கையைப் பொறுத்தவரை அண்மைக்காலத்தில் வளர்…
-
- 0 replies
- 731 views
-
-
இலங்கையில் சில மாதங்களில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், நாட்டில் அது குறித்த கருத்துகள் தினமும் பேசப்படுகின்றன. 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவதற்கு தமிழ் பேசும் சமூகத்தின் வாக்குகள் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தன. இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் வாக்குகள் எந்த அளவில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்கு பங்களிப்பு வழங்கும் என்பது தொடர்பிலும் அரசியல் கட்சிகள் தற்போது அதிக அளவில் கவனம் செலுத்தி வருகின்றன. எனினும், சிங்களத் தலைவர்கள், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வ…
-
- 0 replies
- 538 views
-
-
அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்? — வீரகத்தி தனபாலசிங்கம் — March 17, 2025 புலம்பெயர் இலங்கை தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் வாழும் மூத்த பத்திரிகையாளரும் சிறந்த அரசியல் ஆய்வாளர்களில் ஒருவருமான டி.பி.எஸ். ஜெயராஜ் அண்மைக் காலத்தில் எழுதிய கட்டுரைகள் சிலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு நூலாக வெளிவந்திருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க கடந்த வருடம் செப்டெம்பரில் இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவரது ஆரம்பகால வாழ்க்கை மற்றும் அரசியல் எழுச்சி குறித்து ஆறு கட்டுரைகளையும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி குறித்து மூன்று கட்டுரைகளையும் ஜெயராஜ் எழுதியிருந்தார். அவற…
-
- 1 reply
- 369 views
-
-
காலத்தின் கட்டாயம்… Published by Loga Dharshini on 2020-01-08 14:57:43 மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் அது பொலிஸ் பணிகளை அரசியல் மயமாக்குவதற்கு வழிவகுக்கும் என அவர் கருத்து வெளியிட்டுள்ளார். ஆனால் மொழிப்பிரச்சினை காரணமாக வடக்கு–கிழக்கு தமிழ்ப்பிரதேசங்களில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்படுகின்ற முரண்பாடுகளும் முறுகல் நிலைமைகளுமே பல்வேறு வன்முறைகளுக்கு கடந்த காலங்களில் வித்திட்டிருந்தன என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் கொள்கை விளக்க உரை தமிழ் அரசியலையும் தமிழ் மக்களையும் கையறு நிலை…
-
- 0 replies
- 925 views
-
-
நல்ல தொடக்கம்; தொடரட்டும் நல்லபடியாக... காரை துர்க்கா / 2020 பெப்ரவரி 18 வடக்கு, கிழக்கின் பொருளாதாரம், சமூக அபிவிருத்தி மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன், ‘மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டு மன்றம்’ என்ற அமைப்பு, புதிதாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. யாழ். ஆயர் அதிவணக்கத்துக்குரிய ஜஸ்டின் பேணார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகை, நல்லை ஆதீன குரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோரின் இணைத் தலைமையில், வடக்கு, கிழக்கைச் சேர்ந்த ஐம்பதுக்கும் அதிகமான துறைசார் நிபுணர்கள், பேராசிரியர்கள், புலமை சார்ந்தோர் இணைந்து, மேம்பாட்டு மன்றத்தில் செயற்பட முன்வந்துள்ளனர். இந்தப் பூமிப்பந்தில், பிரச்சினைகள் இல்லாத தனிநபர்கள் இல்லை.…
-
- 2 replies
- 947 views
-
-
[size=4]"கருணாநிதி, ஜெயலலிதா அல்ல... வைகோ தான் என் சாய்ஸ்!" - குல்தீப் நய்யார்[/size] [size=4]ஆக்கம்: இரா.வினோத்[/size] [size=4]மகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னா, மவுன்ட் பேட்டன், மன்மோகன் சிங்... பத்திரிகையாளர் குல்தீப் நய்யாரின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாத தலைவர்களே இல்லை. இந்தியாவின் மிக மூத்த பத்திரிகையாளர். நேருவின் காதல் கடிதங்கள், லால்பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம், இந்திரா காந்தியின் எமர்ஜென்சி ரகசியங்கள்... இந்தியாவைப் பரபரக்கவைத்த குல்தீப் நய்யாரின் சாம்பிள் 'ஸ்கூப்’கள் இவை. சமீபத்தில் பெங்களூரு வந்திருந்தவரிடம் பேட்டிக்கு நேரம் கேட்டபோது இரவு 9 மணிக்கு வரச் சொன்னார். ஓபராய் ஹோட்டலின் அறையில் 'பிரிட்டிஷ் இந்தியா’வில் துவங்கி 'ராகுல் இந்தியா’ வரை பேசி…
-
- 1 reply
- 1.9k views
-
-
காற்றாலைகளை எதிர்க்கும் ஒரு தீவு - நிலாந்தன் Pix by Nimalsiri Edirisinghe மன்னாரில் குறிப்பாக மன்னார்த் தீவுப் பகுதியில் காற்றாலைகள் நிறுவப்படுவதற்கு எதிராக அங்குள்ள திருச்சபையினரும் பொதுமக்களும் கடுமையாக எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள். கடந்த திங்கட்கிழமை அங்கே கடை முடக்கமும் ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றன. சில வாரங்களுக்கு முன்பு கத்தோலிக்க திருச்சபையின் மறை மாவட்ட ஆயர் ஜனாதிபதியைச் சந்தித்திருந்தார். சந்திப்பின்போது அவர் மன்னாரில் நிகழும் கனிமவள அகழ்வு மற்றும் காற்றாலைத் திட்டங்கள் போன்றவற்றைக் குறித்துப் பேசியதாக அறிய முடிகிறது. அதன்பின் ஆயர் ஐரோப்பாவில் சுற்றிப் பயணத்தை மேற்கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில்,ஜனாதிபதி அனுரகுமாரவும் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டிருந்த அதே கால…
-
- 0 replies
- 197 views
-
-
ஈழச் சிக்கலும் நாமும் இராசேந்திர சோழன் ஈழச் சிக்கல் நாளுக்கு நாள் கடும் நெருக்கடிக்குள்ளாகி வருவதாகவே தோன்றுகிறது. என்னதான் சிங்கள இனவெறி அரசும், ராணுவமும் போராளிகளின் இறப்பு பற்றி பொய்ச் செய்திகள் பரப்புவதாகக் கொண்டாலும், ஒரு இனம் தன் விடுதலைப் போராட்டத்தில் தனக்கு ஆதரவாக எந்த பின்புலனும் இன்றி, சுற்றிலும் எதிர் நடவடிக்கைகள் சூழ எத்தனை காலம்தான் தாக்குப் பிடிக்க முடியும் என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்த நிலையில் ஈழ மக்களுக்கு ஆதரவாகவும் துணையாகவும் நிற்க வேண்டியது தமிழக மக்கள், தமிழக அரசியல் கட்சிகளின் தலையாய கடமையாகும். இந்தத் தருணத்தில் நமது சிந்தனைக்காகவும் பொது மக்களுக்குத் தெளிவூட்டும் முகமாகவும் சில கருத்துகள்: ஈழ மக்கள் கடந்த முப்பது …
-
- 1 reply
- 906 views
-
-
முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஸ மற்றும் கூட்டு எதிர்க்கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரை தற்போது இடம் பெற்று வருகின்றது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது கண்டியில் கடந்த 28 ஆம் திகதி ஆரம்பமாகியது. ஐந்து நாட்களாக திட்டமிடப்பட்டிருந்த இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் முதலாம் திகதியுடன் கொழும்பில் நிறைவடைய உள்ளது. சிங்களம் மற்றும் தமிழ் சமுதாயங்கள் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிய ஆர்ப்பாட்டம் என்றவுடன் ஒரு விடயம் நினைவுக்கு வருகின்றது. இதே போன்றதொரு பேரணி கடந்த 60 வருடங்களுக்கு முன் இடம் பெற்றது என்பது உங்களில் யாருக்காவது தெரியுமா? ஆம், இவ்வாறான எதிர்ப்பு…
-
- 0 replies
- 479 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய இந்தியப் பயணத்தை நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப் போகிறார். அவரது இந்தப் பயணத்தின் நோக்கம், புத்தகாயாவுக்கும், திருப்பதிக்கும் புனித யாத்திரை செல்வது தான் என்று கூறுகிறது அரசாங்க அறிக்கை. பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகாயாவில் 1500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பௌத்த விகாரை உள்ளது. இங்கு தான் புத்தருக்கு ஞானம் கிடைத்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள மகாபோதி விகாரையில் இருந்த வெள்ளரச மரக் கிளையில் ஒன்றைத் தான், அசோக மன்னனின் மகளான சங்கமித்தை, இலங்கைக்கு கொண்டு வந்து அநுராதபுரத்தில் நாட்டியதாகவும் வரலாறு கூறுகிறது. பௌத்தர்களின் புனிதத் தலங்களில் ஒன்றாக கருதப்படும், புத்தகயாவுக்கும் இலங்கைக்கும் நெருக்கமான உறவுகள் உள்ளன. இலங்கையில் இ…
-
- 1 reply
- 754 views
-
-
தமிழ் மக்கள் புதிய தலைமையொன்றை தேடுகின்றார்களா? - யதீந்திரா கடந்த 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 'எழுக தமிழ்' தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தக் கட்டுரை எழுதப்படும்வரையில் அவ் அதிர்வுகள் குறையவில்லை. எது ஆளும் கட்சி, எது எதிர்க்கட்சி, எது மகிந்த தரப்பு – என்று பிரித்தறிய முடியாதளவிற்கு 'எழுக தமிழை' எதிர்ப்பதில் அனைவருமே ஓரணியில் திரண்டிருக்கின்றனர். பொதுபல சேனாவின் தலைவர் ஞானராச தேரர் தொடங்கி தங்களை இடதுசாரியினராக காண்பித்துவரும் ஜனதா விமுக்தி பெரமுன வரையில் வடக்கில் மீண்டும் இனவாதம் தோன்றிவிட்டதாகவும், புலிகள் விட்டுச்சென்ற இடத்தை விக்கினேஸ்வரன் பிடிக்க முயற்சிக்கின்றார் என்றவாறும் ஆவேசமாக பேசி வருக…
-
- 0 replies
- 490 views
-
-
தமிழர் தாயகத்தின் கரையோரப் பகுதிகளை கைப்பற்றும் சிங்கள அரசின் திட்டம் ஈழத்தமிழினம் இன்று சிங்கள பௌத்த இனவாதத்தின் அடக்குமுறைக்குள் இலங்கைத் தீவிலும், புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். அன்று தமிழர் தாயகத்தின் எல்லைப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை ஆரம்பித்து, அதன் பின்னர் தமிழர் தாயகப் பகுதியினுள் தமிழர் தாயகத்தை துண்டாடும் நோக்கத்திலும், செயற்படுத்தப்பட்டன. அந்த வகையில் இன்று தமிழர் தாயகத்தின் கரையோரப் பகுதிகளையும் சிங்களமயப்படுத்தி தமிழர் தாயக எண்ணக்கருவை அழிக்கும் செயற்திட்டங்கள் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டும் வருகின்றன. இச் செயற்திட்டங்கள் நிறைவேறும் போது, தமிழர்களின் வாழ்வு நிலை, வாழ்வு இயக்கங்கள் யாவும் கட்டுப்படுத்தப…
-
- 0 replies
- 402 views
-
-
புத்தர் சிலைக்கு பின்னாலுள்ள அரசியல் ஊருக்குள் பெரிய ஆஜானபாகுவான ஆட்களாக தம்மைக் காட்டிக் கொள்ளும் ‘மைனர்கள்’, வெளியூருக்கு சென்று அவமானப்பட்டு வருவார்கள். ஊர் எல்லைக்குள் வந்ததும், மீண்டும் வீரமும் தற்பெருமையும் பேசத் தொடங்கி விடுவார்கள். தனது உடம்பில் இருப்பது அடிபட்ட காயமல்ல, மாறாக வெளியூர் சண்டியனுக்கு அடித்தபோது ஏற்பட்ட கீறல்கள் என்பது போலிருக்கும் அவர்களது பேச்சுக்கள்! அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசமான மாணிக்கமடுவில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விடயம் கடந்த இரு வாரங்களாக சர்ச்சைகளையும் வார்த்தை மோதல்களையும் எல்லா மட்டங்களிலும் ஏற்படுத்தி இருக்கின்றது. …
-
- 0 replies
- 804 views
-
-
-
- 0 replies
- 647 views
-
-
“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன? அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்?” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர் கேட்டார். அரசியல் உரையாடலை நிகழ்த்த விரும்பி அந்த நண்பர் இது தொடர்பாக மேலும் சில கேள்விகளை எழுப்பினார். “தமிழ்த்தேசியம் தொடர்ச்சியாகப் பலவீனப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. அதனுடைய அடுத்த கட்டம் என்பது அதற்கிருக்குமா என்பதே கேள்விதான். ஏனென்றால், பலவீனங்களைத் திருத்திக் கொள்ளாமலிருக்கும் எதுவும் பலமாகவோ, உறுதியாகவோ, தொடர்ச்சியாகவே இருக்க முடியாது. பலவீனமாக இருக்கும் எதுவும் வெற்றியை நோக்கி நகரவும் இயலாது. ஆகவே, தமிழ்த்தேசியம் என்பதற்கு அடுத்த கட்டம் என்ற ஒன்றிருக்குமா? என்பதே கேள்விதான். தமிழ்த்தேசியத்தைப் பலப்படுத்துவது எதிர்த்தரப்பாகிய ச…
-
- 1 reply
- 499 views
-
-
இலங்கையின் வெளியுறவுத்துறையும் அது சார்ந்த அமைப்புகளும் அண்மை காலங்களில் மிக சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. வெளிநாட்டு இராஜதந்திரிகளையும் கொள்கை ஆய்வாளர்களையும் சந்திக்கும் வெளியுறவு அதிகாரிகள் இலங்கை ஒரு சிறிய நாடு என்பதை கூறுவதற்கு தவறுவதில்லை. குறிப்பாக அதிகார பரவலாக்கம் குறித்த கேள்விகளிற்கு பதிலளிக்கும் பொழுது இலங்கை ஒரு சிறிய தேசம் இந்தச் சிறியதேசத்தில் ஒன்பது அதிகார சபைகளை அமைப்பதுவும் ஒன்பது பொலிஸ் பிரிவுகளை உருவாக்குவதுவும் ஒன்பது காணி அதிகார சபைகளை உருவாக்குவதுவும் மிகவும் கடினம், செலவும் அதிகம் என்று குறிப்பிடுகின்றனர். இந்தக் கருத்துக்களின் பின்னணியில் தமிழ் மக்களிடம் அதிகாரத்தை கொடுக்க முடியாது என்ற விடயமே உள்ளடங்கி உள்ளது. அதேவேளை இந்திய தென்பி…
-
- 0 replies
- 452 views
-
-
போராட்டத்தின் தாற்பரியத்தை புரிந்துகொள்ளுங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு மக்கள் அபகரிக்கப்பட்ட தமது காணிகளை மீளப் பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி போராட்டங்களை நடத்திவருகின்ற போதிலும் அரசாங்கம் அது தொடர்பில் அக்கறை கொள்வதாக தெரியவில்லை. குறிப்பாக இந்த மக்கள் தமது நிலங்களை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்திவருகின்ற போதும் அது தொடர்பில் அரசாங்கம் பாரிய கவனத்தை செலுத்துவதைக் காணமுடியவில்லை. மக்கள் தொடர்ச்சியாக இரவு – பகல் பாராது வெயிலிலும் பனியிலும் தவித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளபோதிலும் பிரச்சினையைத் தீர்க்கவேண்டிய அரசாங்கம் அதனைக் கவன…
-
- 0 replies
- 564 views
-
-
அமெரிக்காவில் பசில்ராஜபக்ச... என்ன நடக்கிறது?
-
- 0 replies
- 565 views
-
-
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மாறிவரும் உலகமும், அதனை முறியடிக்கக் களமிறங்கும் சிறீலங்காவும் – சூ.யோ. பற்றிமாகரன் 48 Views புலம்பெயர் தமிழர், வடக்கு கிழக்கு மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கும் தடை மனிதாய உதவிகள் கூட மறுக்கப்பட்ட, நலிவுற்ற மக்களாக ஈழத்தமிழர்கள் இலங்கைத் தீவைத் தாயகமாக வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் இறைமையுடனும், ஆட்புல ஒருமைப்பாட்டுடனும் கொண்டு விளங்கும் ஈழத் தமிழர்களின் அரசியல் எதார்த்தத்துக்கு ஆதரவு அளிக்கும் செயற்பாடுகள் படிப்படியாக உலகெங்கும் அதிகரித்து வருகிறன. இதற்கு உதாரணமாக அமெரிக்க காங்கிரசில் ஈழத் தமிழர்களின் வாழ்விடமாக வடக்கு கிழக்கை உறுதிப்படுத்தும் தீர்மானம் முன்வைக்கப்பட்டமை வி…
-
- 1 reply
- 734 views
-
-
தவிர்க்க முடியாத சூழ்நிலையில், அவநம்பிக்கையுடனும், அச்சத்துடனும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் அணுகப்பட்ட வடக்கு மாகாணசபை தேர்தலில், அவர்களே எதிர்பார்க்காத அறுதிப்பெரும்பான்மை வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார்கள் வடக்கு வாழ் தமிழ்பேசும் மக்கள். தேர்தலுக்கு முன்னான சில நாட்களிலும், தேர்தல் தினத்தன்றிலும் கூட தமது வெற்றி குறித்த அச்ச உணர்வுடனேயே வேட்பாளர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்திருந்தனர். அவ்வாறானதொரு புறநிலை ஆளும் தரப்பால் மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டு இருந்தது. மட்டுமில்லாமல், தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் நிகழ்ந்த உள்வீட்டு பிரச்சனைகளும் இச் அச்சத்திற்கு ஒரு காரணியாக இருந்தது. இவற்றை எல்லாம் …
-
- 6 replies
- 814 views
-
-
வன்னியில் தமிழீழத் தேசியத் தலைவர் வசித்ததாக கருதப்படுகின்ற நிலக்கீழ் மாளிகை வீடு ஒன்று சிறீலங்காப் படையினரால் அழிக்கப்பட்டிருக்கின்றது. புதுக்குடியிருப்பு - ஒட்டுசுட்டான் வீதியில் உள்ள காட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இந்த வீடு மிகவும் ஆச்சரியம் மிக்க கட்டுமானமாக அமைந்திருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தளபதிகளைத் தவிர இளநிலைத் தளபதிகளால் கூட கால்பதிக்க முடியாத இடமாக இருந்த இந்த வீடு, இன்று இடித்தழிக்கப்பட்டிருக்கின்றமையானது தமிழ் மக்களிடையே பெரும் கவலைகளைத் தோற்றுவித்துள்ளது. போரியல் ரீதியில் மட்டுமல்ல, தொழில்நுட்ப ரீதியிலும் தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழீழத் தேசியத் தலைவரும் கைதேர்ந்தவர்களாக இருந்தனர் என்பதற்கு இந்த நிலக்கீழ் மாளிகை வீடு எடுத்துக்காட…
-
- 1 reply
- 1.6k views
-
-
கடற்கரை மாசும் எமது மௌனமும் உலகில், மனித குலத்துக்கு மட்டுமன்றி அனைத்து ஜீவராசிகளுக்கும், சமுத்திரங்களின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. அந்த வகையில் நாம், கடற்கரையையும் கடல்சார் வளங்களையும் பராமரிப்பதும் பாதுகாப்பதும், மிக முக்கியமானது. நாற்புறமும் கடலால் சூழப்பட்ட இலங்கை, அழகிய கடற்கரைப் பிரதேசங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள போதிலும், அதிகரித்துச் செல்லும் கடற்கரைச் சூழல் மாசடைதல் காரணமாக, அதன் எழில் படிப்படியாக மறைந்து செல்கிறது. உலகளாவிய ரீதியில், ஒவ்வொரு வருடமும், கடலில் மாத்திரம் 60 சதவீதமான பிளாஸ்டிக் பொருட்களுடன் கூடிய 1,000 தொன்னுக்கும் அதிகமான குப்பைகள் அகற்றப்படுகின்றன. புள்ளிவிவரத்தின்பட…
-
- 0 replies
- 645 views
-
-
காதில் ஏறுமா ? ஐ. நா நிபுணரின் புத்திமதி உண்மை, நீதி, இழப்பீடு, மீளநிகழாமையை உத்தரவாதப்படுத்தும் ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப், இலங்கையில் இரண்டு வாரகால உண்மை கண்டறியும் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியிருக்கிறார். அவர் கொழும்பில் இருந்து புறப்படுவதற்கு சில மணிநேரம் முன்னதாக,- கடந்த 23ஆம் திகதி- ஐ.நாவின் இலங்கைக்கான பணியகத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருந்தார். அந்தச் சந்திப்பில் அவர் வெளியிட்ட கருத்துக்கள், நிச்சயமாக அரசாங்கத்துக்கு உவப்பான ஒன்றாக இருக்காது. ஆனாலும் ஐ.நா. நிபுணரின் கருத்து வெளியாகி பல நாட்களாகி விட்ட பின்னரும், அரசாங்கத…
-
- 0 replies
- 423 views
-