Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. அமெரிக்கா காங்கிரஸ் பிரதிநிதியின் பிரேரணையும் தவறான பிரச்சாரங்களும் - யதீந்திரா கடந்த மே மேதம் 18ம் மிகதி அமெரிக்க காங்கிரஸில், இலங்கை தொடர்பில் ஒரு பிரேரணை முன்வைக்கப்பட்டது. அமெரிக்க சமஸ்டி அரசுகளில் ஒன்றான வடக்கு கரலைனாவை (U.S. Representative for North Carolina’s 2nd congressional district) பிரதிநிதித்துவம் செய்யும் காங்கிரஸ் பிரதிநிதி ஒருவரால் இந்த பிரேரணை அறிமுகம் செய்யப்பட்டது. இவரது பெயர் (Deborah K. Ross) டெவோறா ரோஸ். ஐக்கிய அமெரிக்கா, ஐம்பது சமஸ்டி அரசுகளை உள்ளடக்கிய ஒரு தேசம். அதில் ஒன்றுதான் வடக்கு கரலைனா குறித்த பிரேரணைக்கு, மேலும் நான்கு காங்கிரஸ் பிரதிநிதிகள் இணையனுசரனை வழங்கியிருக்கின்றனர். அமெரிக்க காங்கிரஸில்…

  2. யாழ்ப்பாண நூலக எரிப்பின் நாற்பதாண்டுகள்: கற்றுக் கொள்ளாத பாடங்கள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு, 40 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றும் அதன் அவலத்தை, நாங்கள் ஒப்பாரியாக ஆண்டுதோறும் நினைவுகூர்ந்தபடி கடத்துகிறோம். திரும்பிப் பார்க்கையில் இந்த நூலகமும் அதன் எரிப்பும் அதைத் தொடர்ந்த சிதைவும், வலி நிறைந்த கசப்பான உண்மை ஒன்றைச் சொல்கின்றன. ஒரு சமூகமாக நாம் வரலாற்றைப் பதிதலிலும் ஆவணப்படுத்தலிலும் முழுமையாகத் தோற்றிருக்கிறோம். நாம், சிலவற்றை வெளிப்படையாகவும் சுயவிமர்சன நோக்கிலும் பேசியாக வேண்டும். இப்போது, இதுபற்றிப் பேசுவதற்கான காலமா என்று கேட்காதீர்கள். இவ்வாறு கேட்டுக்கேட்டே, நான்கு தசாப்தங்களைக் கடந்துவிட்டோம். யாழ்ப்பா…

  3. அஸ்தமனமானது ‘முதலாவது’ சரணாகதி சின்னையா செல்வராஜ் இதுவும் நடந்துவிடவேண்டுமென நினைத்திருந்தவர்களுக்குக் கசப்பாகவும் நடந்துவிடவே கூடாதென எண்ணியிருந்தோருக்கு திகைப்பூட்டியும், ‘ஜனாதிபதி மாளிகை’யைக் களமாகக் கொண்டு, ‘ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு’த் தொடர்பாக, ஜூன் 15ஆம் திகதி வெளிவந்த செய்திகள் அமைந்திருந்தன. அதுதான் ‘முதல்’ முறை என்றாலும், ‘இறுதி’யாகி விடக்கூடாது என்பதே, பலரது கரிசனையுமாகும். ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு முன்னரான அறிவிப்புகள், ஜனாதிபதி செயலகத் தரப்பிலிருந்து விடுக்கப்படுவது அரிதாகும். இராஜதந்திர சந்திப்புகள் இடம்பெறுமாயின், அவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். ஆனால், கூட்டமைப்புடனான சந்திப்புத் தொடர்பிலும், …

  4. ‘அச்சுறுத்தல்களுக்குள்ளாகும் கிழக்கின் கரையோரப் பிரதேசங்கள்’ – மட்டு.நகரான் June 18, 2021 வடகிழக்கு தமிழர்களைப் பொறுத்த வரையில், இலங்கையில் தொடர்ச்சியான அழிவுகளையும், இன்னல்களையும் எதிர்கொண்ட சமூகமாகவே தொடர்ந்தும் இருந்து வருகின்றது. இழப்புகளையும், வேதனைகளையும், மீளமுடியாத துன்பங்களையும் தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்படுகின்றனர். தமிழ் மக்களின் வாழ்க்கையில் இயற்கையும், செயற்கையான செயற்பாடுகளும் மாறிமாறி ஏற்படுத்தும் துன்பங்களை பேரினவாத அரசுகள் தங்களுக்குச் சார்பாக மாற்றிக் கொள்ளும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிழக்கு மாகாணம் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்புப் பிரதேச…

  5. இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மற்றொரு சர்வதேச பிரேரணை எம்.எஸ்.எம். ஐயூப் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, இலங்கையின் அரச தலைவர்கள், படை அதிகாரிகளைக் குறி வைத்து, ஒரு பிரேரணையை நிறைவேற்றி, மூன்று மாதங்கள் முடிவடையும் முன்னர், ஐரோப்பிய நாடாளுமன்றமும் இலங்கை அரசாங்கத்தைக் கதி கலங்கச் செய்யும் வகையில், பிரேரணை ஒன்றைக் கடந்த 10 ஆம் திகதி நிறைவேற்றியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் மூலம், போர்க் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள், போர்க் குற்றங்களை விசாரிக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்தந்த நாடுகளிலேயே சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, பேரவையின் உறுப்பு நாடுகள் கேட்டுக் கொள்ளப்பட்டன. ஐரோப்பிய …

  6. "இனவாதம்" என்ற வைரசை வைத்துக் கொண்டு... கொவிட்-19 வைரசுடன் நடக்கும் போராட்டம்?? பெருங் கடனுக்கும் பெருந்தொற்று நோய்க்குமிடையே தடுமாறுகிறது இலங்கை தீவு. யுத்தம் காரணமாக கடனாளியாக மாறிய இலங்கை தீவு 2009இற்குப் பின்னரும் அதன் கடன் சுமையிலிருந்து மீள முடியவில்லை. அதனால்தான், அது கடனை அடைக்க கடன்வாங்கும் ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டது. அதன் விளைவாகவே அது சீனாவிடம் நெருங்கிச் சென்றது. இப்போது சீனாவின் முதலீடுகளாகக் காணப்படும் அம்பாந்தோட்டைத் துறைமுகம் போன்ற பல விடயங்களை இந்தியா உட்பட ஏனைய நாடுகளுக்குத் தருவதற்கு சிறீலங்கா தயாராகக் காணப்பட்டது. ஆனால், அந்த முதலீடுகளைச் செய்வதற்கு இந்தியா போன்ற நாடுகள் தயாராக இல்லாத ஒரு பின்னணியில்தான் சீனா அங்கே முதலீடு செய்தது. எனவே,…

  7. ஜீ -7 நாடுகளின் மாநாட்டைச் சுற்றி நடக்கும் நகர்வுகள் – வேல் தர்மா 37 Views 2021 ஜூன் மாதம் 11ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை இங்கிலாந்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கோண்வோல் நகரில் ஜீ-7 எனப்படும் அமெரிக்கா, இத்தாலி, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான், ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் உச்சிமாநாடு நடக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பிலும் ஒரு பிரதிநிதி பங்கு கொள்கின்றார். கோவிட்-19 பெருந் தொற்று, அதற்கான தடுப்பூசி, சூழல் பாதுகாப்பு, திறந்த பொருளாதாரம், தொழில்நுட்ப மாற்றம், விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் ஆகியவை உச்சி மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் முக்கிய இடம் வகிக்கின்றன. சென்ற ஆண்டு பெருந்தொற்று நோய் பரவலைத் தவிர்க்க மெய்நிகர் …

  8. திணறும் ஆளுங்கட்சி; திக்குத் தெரியாத எதிர்க்கட்சி என்.கே. அஷோக்பரன் எரிபொருள் விலை அதிகரிப்புத்தான் இந்த வாரத்தின் மிகப்பெரிய பரபரப்பு. இலங்கையின் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களின் விலை அதிகரிப்பு பற்றி அண்மையில் அறிவித்திருந்தார். விலை அதிகரப்பு எனும் போது, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் அதிகரிப்பு அல்ல. பெட்ரோல் விலை ஒரேயடியாக, 20 ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு, உதய கம்மன்பில தரப்பு சொல்லும் நியாயம் வினோதமானது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகளின் எரிபொருள் விலையைவிட, இலங்கையில் எரிபொருள் விலை குறைவு என்பதாகும். இந்த அபத்தமான வாதம் ஒருபுறமிருக்க, மறுபுறத்தில், இந்த விலையேற்றத்துக்கான உண்மை…

  9. ரணிலின் மீள்வருகை இலங்கை அரசியலை மாற்றப் போகின்றதா? – அகிலன் 12 Views வேகமாகப் பரவும் கொரோனாவின் பீதியில் இலங்கை மூழ்கிக் கிடக்க, உள்நாட்டு அரசியலிலும் அதிரடியான சில நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அதில் முக்கியமானது தான் ரணில் விக்கிரமசிங்கவின் மீள்வருகை. எதிர்வரும் 22 ஆம் திகதி அவர் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொள்வார் என்ற செய்தி, கொழும்பு அரசியலைப் பரபரப்பாக்கியிருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. ரணிலின் மீள் வருகையை தமக்குச் சாதகமாக்கிக் கொள்வதற்கான வாய்ப்புக்களை அரச தரப்பு பயன்படுத்த முற்பட்டுள்ளது. மறுபுறம் பிரதான எதிர்க் கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இதனால் பெரிதும் குழம்பிப் ப…

  10. கலியுகம் இப்பொழுதே வந்து விட்டதா? Maatram Translation on June 13, 2021 AP Photo/Eranga Jayawardena via Yahoo News “வார இறுதியின் போது பிணந்தின்னிக் கழுகுகள் ஜனாதிபதி மாளிகைக்குள் வந்து இறங்கியுள்ளன…” – கபிரியல் கார்சியா மார்கோஸ், ‘The Autumn of the Patriarch’ என்ற நூலில் அது ஒரு விஞ்ஞானப் புனைகதை திரைப்படத்தில் வரும் காட்சியைப் போல் தெரிகிறது; அல்லது உலக முடிவின் ஒரு கண நேர தோற்றப்பாடாக தென்படுகிறது. கழிவுகள் குவிந்து கிடக்கும் ஒரு கடற்கரை கால் தொடக்கம் தலை வரையில் பாதுகாப்பு ஆடைகளை அணிந்து கொண்டவர்கள் சிறு பிளாஸ்ரிக் துகள்களை கோணிப் பைகளில அள்ளிப் போடுகின்றார்கள். சிசிபஸ் மீண்டும் மீண்டும் மலையை மேலே தள்ளிச் சென…

  11. கொரோனாச் சந்தைகளும் தமிழ் அரசியல்வாதிகளும்! நிலாந்தன்! June 13, 2021 கிளிநொச்சியைச் சேர்ந்த ஓர் ஊடகவியலாளர் சொன்னார்.திரு நகரிலும் உதய நகரிலும் கொரோனாச் சந்தைகள் இயங்குவதாக.பிரதான சந்தைகள் மூடப்பட்ட காரணத்தால் தற்காலிக கள்ளச் சந்தைகளாக இவை இயங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.சிலசமயங்களில் உதயநகர் சந்தையில் படைத்தரப்பும் வாகனத்தை நிறுத்திவிட்டு பொருள் வாங்குவதை தான் கண்டதாகவும் சொன்னார். இதைப்போலவே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒர் ஊடகவியலாளர் சொன்னார் கொக்குவில் இந்து பள்ளிக்கூடத்தின் மைதான வீதியில் காலை வேளைகளில் ஒரு மீன் சந்தை இயங்குவதாகவும் அது மிகவும் நெரிசலான ஒரு சந்தை என்றும்.யாழ்ப்பாணம் பாசையூர் சந்தையும் இயங்குகிறது. இடையில் போலீசா…

  12. இலங்கையில் தனி ஈழம் அமைக்க அமெரிக்க முடிவு | இந்தியா அமெரிக்கா இலங்கை உள்ளே....

  13. சிங்கள இனவாதிகளின் நண்பன் - அவுஸ்த்திரேலியா சில தினங்களுக்கு முன்னர் வாட்ஸ் அப் ஊடாக எனக்குத் தெரிந்த தமிழ் ஆர்வலர் ஒருவரிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்திருந்தது. "இதனைப் பகிரவேண்டாம்" என்ற வேண்டுகோளுடன் அவர் ஒரு கடிதத்தினை சேர்த்து அனுப்பியிருந்தார். அதனால், எனது நண்பர் பற்றிய விபரங்களையும், அக்கடிதத்தினை இங்கே இணைப்பதனையும் தவிர்த்துவிட்டு, விபரங்களை மட்டும் விபரிக்கிறேன். இலங்கையில் இன்றைய இனவாத ஆட்சியில் தமிழர் பட்டுவரும் இன்னல்கள் குறித்தும், அண்மையில் நடந்துமுடிந்த மனிதவுரிமைகள் சபையின் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்தும் அவுஸ்த்திரேலிய அரசாங்கம் இலங்கைக்குச் சார்பாக அல்லது நடுநிலை என்கிற பெயரில் எதுவுமே செய்யாது தவிர்த்துவருவது தொடர்பான தனது அதி…

  14. பயனற்றுப் போகும் அதிகார முயற்சிகள் இல. அதிரன் கொரோனா கோலோச்சும் இன்றைய கால கட்டம், வாழ்வா சாவா என்றுதான் இருந்து கொண்டிருக்கிறது. அரசாங்கம் பல முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டிருந்தாலும் கொரோனாவின் ஆதிக்கம் வலுத்தே வருகிறது. கொரோனாவை அரசாங்கம், அரசியலுக்காகவும் அதிகாரத்துக்காகவும் பயன்படுத்துகின்றது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்தவண்ணம் காணப்படுகிறது. அதற்கு மாவட்டம், மாகாணம், தேசியம் போன்ற மட்ட வேறுபாடுகளும் இல்லை. இருந்தாலும், அதற்குள்ளும் அரசியல் செய்யத்தான் வேண்டும் என்ற நிலையில், பொருளாதார அரசியல், சமூக அரசியல், இன அரசியல் சார்ந்து நாடு நகர்கிறது. மட்டக்களப்பு மாவட்டமானது, கிழக்கின் முக்கிய அரசியல் அதிகாரங்கள், பலம்மிக்கதாக நகர்கின்…

  15. ராஜபக்‌ஷர்கள் மீதான அதிருப்தியும் எதிர்க்கட்சிகளும் புருஜோத்தமன் தங்கமயில் ராஜபக்‌ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து, 18 மாதங்களுக்குள்ளேயே தென் இலங்கை மக்களிடம் பெரும் அதிருப்திகளைச் சந்தித்து நிற்கின்றார்கள். ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சம் வாக்குகளையும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அண்மித்த வெற்றியையும் ராஜபக்‌ஷர்கள் பெற்றிருந்தார்கள். அடுத்த பத்து ஆண்டுகளில், அசைத்துப் பார்க்க முடியாத ஆட்சிக் கட்டமைப்பொன்றை, ராஜபக்‌ஷர்கள் நிலைப்படுத்துவார்கள் என்று நம்பப்பட்டது. ஆனால், சில மாதங்களுக்குள்ளேயே ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான மனநிலை தென் இலங்கையில் எழுந்திருக்கின்றது. கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்து நெருக்கடிகள், மக்களைப் பாடாய்படுத்த…

  16. பழ.நெடுமாறன் ''பல்வேறு மாநிலக் கட்சிகள் சந்தர்ப்பவாத நோக்கத்துடன் இந்து தேசியத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளன. இது நமது தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதாகும். இந்தநிலையில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்!'' என்கிறார் பழ.நெடுமாறன். மொழி உணர்ச்சி உச்சம் தொட்டுவரும் இந்த வேளையில், ''தமிழ் மொழி பேசுகிற மக்கள் வசிக்கிற நிலப்பகுதியைத்தான் 'தமிழகம்' என்கிறோம். ஆக, தமிழ் மக்கள் வசிக்கிற நிலப்பகுதியை ‘தமிழ்நாடு’ என்று சொல்வதில் தவறு என்ன? அடுத்து, இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளிலேயே ‘இந்தியா எனும் பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்’ என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. எனவே, ‘இந்திய ஒன்றியம்’ அல்லது ‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதுதான் அரசிய…

  17. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மாறிவரும் உலகமும், அதனை முறியடிக்கக் களமிறங்கும் சிறீலங்காவும் – சூ.யோ. பற்றிமாகரன் 48 Views புலம்பெயர் தமிழர், வடக்கு கிழக்கு மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கும் தடை மனிதாய உதவிகள் கூட மறுக்கப்பட்ட, நலிவுற்ற மக்களாக ஈழத்தமிழர்கள் இலங்கைத் தீவைத் தாயகமாக வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் இறைமையுடனும், ஆட்புல ஒருமைப்பாட்டுடனும் கொண்டு விளங்கும் ஈழத் தமிழர்களின் அரசியல் எதார்த்தத்துக்கு ஆதரவு அளிக்கும் செயற்பாடுகள் படிப்படியாக உலகெங்கும் அதிகரித்து வருகிறன. இதற்கு உதாரணமாக அமெரிக்க காங்கிரசில் ஈழத் தமிழர்களின் வாழ்விடமாக வடக்கு கிழக்கை உறுதிப்படுத்தும் தீர்மானம் முன்வைக்கப்பட்டமை வி…

    • 1 reply
    • 732 views
  18. p2p போராட்டம் சர்வதேசத்தின் கதவுகளைப் பலமாகத் தட்டியுள்ளது – மட்டு.நகரான் 54 Views வடகிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் மற்றும் தமிழ் மக்களின் மனங்களில் உள்ள வடுக்களின் வலிகளை வெளிக்காட்டுவதை தடுத்தல் என பல்வேறு வகையான மனித உரிமை நிலைக்கு எதிரான, ஜனநாயக வரம்புகள் மீறப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்கள் தங்களது உரிமைக்கான போராட்டத்தினை இராஜதந்திரப் போராட்டமாக மாற்றியமைத்ததனர். இதனையடுத்து வடகிழக்கில் செயற்பட்ட பலர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். பலர் படுகொலை செய்யப்பட்டனர். பலர் நாட்டைவிட்டு துரத்தியடிக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போதைய காலத்தில…

  19. இலங்கையோடு ஜேர்மனி பேரம் பேசியதா? ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் சூழ்ச்சியா? —-பிரித்தானியா வெளியேறியதால் இலங்கை விவகாரத்தை ஐரோப்பிய ஒன்றியத்தில் கையாள ஆரம்பித்துள்ள ஜேர்மன் அரசு, தனியே இலங்கை அரசைப் பாதுகாப்பதற்கான அல்லது நியாயப்படுத்துவதற்கான தளபதியாக மாத்திரம் இயங்க முடியாது– -அ.நிக்ஸன்- இலங்கை தொடர்பான விவகாரத்தைக் கையாள்வதற்கான ஜெனீவா மனித உரிமைச் சபையின் கருக்குழு நாடுகள் பட்டியலில் (Core Group on Sri Lanka) பிரதான அங்கம் வகிக்கும் ஜேர்மன் அரசு இலங்கைக்குச் சாதகமானதொரு போக்கையே பின்பற்றி வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்திலும் ஜேர்மனி அங்கம் வகிக்கின்றது. 2009 ஆம் ஆண்டுக்கு முன்ன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.