Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. -கே.சஞ்சயன் கொமன்வெல்த் தலைவர்களின் உச்சிமாநாடு அடுத்த ஆண்டு ஹம்பாந்தோட்டையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த மாநாடு எந்தளவுக்கு வெற்றிகரமானதாக அமையும் என்ற கேள்விக்கு இப்போதே விடை கூறமுடியாத நிலை ஒன்று உருவாகி வருகிறது. இதற்குக் காரணம், இலங்கையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்து பல்வேறு நாடுகளில் வலியுறுத்தப்பட்டு வருவதேயாகும். 2009ஆம் ஆண்டு இலங்கையில் போர் முடிவுக்கு வந்த சில மாதங்களின் பின்னர், ட்ரினிடாட் இன் டுபாகோ நாட்டின் தலைநகர் போட் ஒவ் ஸ்பெய்னில் நடந்த கொமன்வெல்த் உச்சி மாநாட்டில், 2013இல் ஹம்பாந்தோட்டையில் 23ஆவது உச்சி மாநாட்டை நடத்தும் முடிவு எடுக்கப்பட்டது. அப்போது அந்த முடிவுக்கு இலங்கை எதிர்ப்புகள…

  2. மீன்பிடிப் பிரச்சினையும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் அரசியலும் -என்.கே. அஷோக்பரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம், 27.01.2021 திகதியிட்டு, ‘தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே, தமிழக மீனவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர்’ என்ற தலைப்பிட்ட, நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையின் படகுடன் மோதுண்டு, மீன்பிடிப் படகு விபத்துக்கு உள்ளாகியதில், உயிரிழந்த இந்திய மீனவர்கள் நால்வருக்கு, அஞ்சலி செலுத்தும் அறிக்கையை வௌியிட்டிருந்தது. இந்திய மீனவர்களுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையிலான மோதல், மீகநீண்ட காலமாகத் தொடர்ந்துகொண்டிருக்கும், பல உயிர்களையும் பலிவாங்கிய துர்ப்பாக்கியம் என்பதில், யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால், எல…

  3. தள்ளிப்போகும் ஜனநாயகத் திருவிழா முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஏப்ரல் 23 செவ்வாய்க்கிழமை, மு.ப. 11:50Comments - 0 “தேர்தல் என்பது, ஜனநாயகத்தின் திருவிழாவாகும். ஜனநாயகத்தினுடைய பாதுகாப்பு அரணாகவும் தேர்தல்கள் உள்ளன” என்கிறார், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க. ஆனால், இந்தத் திருவிழாவுக்குச் செல்ல, அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகள் பலரும் அஞ்சுகின்றனர். திருவிழாவில், தாங்கள் ‘தொலைந்து’ போய் விடுவோமோ என்பதுதான், அந்தப் பயத்துக்கான காரணமாகும். இருந்த போதும், இந்த வருடத்தில் ஏதாவதொரு தேர்தல் நடப்பதற்கு, அதிகபட்ச சாத்தியமுள்ளதாகக் கூறப்படுகிறது. அது ஜனாதிபதித் தேர்தலா, மாகாண சபைத் தேர்தலா என்பதுதான், இ…

  4. தேர்தல் மணியோசை மீண்டும் ஒரு தேர்தலுக்கான மணியோசை கேட்கத் தொடங்கியுள்ளது. இந்த மணியோசையில், அரசியல் கட்சிகள் எல்லாம் துடித்துப் பதைத்து எழுந்திருக்கின்றன. எழுந்த கட்சிகள் சும்மா இருக்க முடியுமா? அதுவும் தேர்தல் என்ற பிறகு? ஆகவே, எல்லாம் பரபரப்பாக இயங்கத் தொடங்கியுள்ளன. இரவு பகலாக, ஓய்வு ஒழிச்சலின்றி, தேர்தலுக்கான ஆயத்த வேலைகளில் இறங்கியுள்ளன. கூட்டணி அமைப்பது, இட ஒதுக்கீடுகளைப் பற்றிப் பேசுவது, வேட்பாளர்களைத் தெரிவு செய்வது, தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் திரட்டுவது, அவர்களை உஷார்ப்படுத்துவது, தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பது, மக்களைக் கவரக்கூடிய (ஏமாற்றக்கூடிய) தந்திரங்களை எப்படிச் செய்வது என்று திட்டமிடுவது, அதற்கான வார்த்தைகளைத் …

  5. உலகின் மிகப் பெரிய மனிதநேயப் பணியகங்களில் ஒன்றான ‘செஞ்சோலை’யை தமிழீழத்தில் ஆரம்பித்தவர் தமிழீழத் தேசியத் தலைவர். மானுட தர்மம் என்னவென்பது அங்கு போதிக்கப்படவில்லை. செயலுருவம் பெற்றிருந்தது. உலகமே பார்த்து அதிசயித்த அரும்பெரும் தலைவரின் மடிமீது அமர்ந்து குலுங்கிச் சிரிக்கும்போது உலகமே தம்வசமிருப்பதாக செஞ்சோலை செல்வங்கள் நினைப்பதுண்டு. குழந்தைகளோடு குழந்தையாக சிரித்து மகிழும் ஒப்பற்ற தலைவரின் மனிதத்தைப் புரிந்து புல்லரித்துப் போனவர் ஏராளம். அது ஒரு வரலாற்றுப் பதிவு. காலச் சக்கரத்தின் கண்ணாடி. அதில் புலம்பெயர் தமிழர்களுக்கும் சிறியதொரு வகிபாகம் உண்டு. செஞ்சோலை வளர்ச்சிக்காக தலைவர் திட்டங்களை முன்வைத்தபோது அவற்றிற்கு உதவியவர்கள் அவர்கள். ஆனால், அந்தப் புனிதப் பயணத்…

  6. [size=5]‘வெகுஜன ஊடகங்களால் மக்களுக்குச் சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட செய்திகளைத் தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்’ என்று அறிவிக்கும் கலையரசன் ஓர் ஈழ அகதி. தற்போது நெதர்லாந்தில் வசித்து வருகிறார். சர்வதேச அரசியல், வரலாறு, சமூகவியல், ஈழம் என்று இணையத்தில் விரிவாக எழுதிவருகிறார். முகவிரி : http://kalaiy.blogspot.in/ [/size] [size=5]டெசோ குறித்தும் ஈழ அரசியல் குறித்தும் தன் கருத்துகளை மருதனுடன் இங்கே சுருக்கமாகப் பகிர்ந்துகொள்கிறார்.[/size] [size=5]---------------------------------------------------------------------------------------------[/size] [size=4]டெசோ மாநாட்டை…

    • 0 replies
    • 765 views
  7. விளாதிமிர் புதின்: அசைக்க முடியாத இந்த ரஷ்யத் தலைவரை இப்போது உலகம் கவனிப்பது ஏன்? Getty Images விளாதிமிர் புதின் ``புதின் இல்லாமல், ரஷ்யா கிடையாது.'' ரஷ்யா அதிபரின் கிரெம்ளின் மாளிகை அலுவலர்களின் துணைத் தலைவருடைய கருத்து இது. பல தசாப்த காலங்களாக பிரதமர் அல்லது அதிபர் பொறுப்பில் அதிகாரத்தைக் கையாளும் பொறுப்புக்கு விளாதிமிர் புதினை தேர்ந்தெடுத்து வரும் பல மில்லியன் ரஷ்யர்களின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கிறது. இந்த நம்பிக்கை ஜூலை 1 ஆம் தேதி மீண்டும் புதுப்பிக்கப்படலாம். ரஷ்யாவில் அதிபர் பதவியில் இருப்பவர், மேலும் இரண்டு முறை தலா ஆறாண்டு காலம் பதவி வகிக்கும் வகையிலான சட்ட திருத்தத்திற்கான நாடுதழுவிய கருத்தறியும் வாக்கெடுப்பில் அது வெளிப்படும் என்று தெரிகிறது. …

    • 1 reply
    • 765 views
  8. ரணில் எனும் ஏமாற்றுக்காரர் புருஜோத்தமன் தங்கமயில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது, ‘பாராளுமன்றமே அரசாங்கம்’ என்கிற புரிந்துணர்வின் அடிப்படையில் எட்டப்பட வேண்டும். அதைப் புரிந்து கொள்ளாது, தமிழ்க் கட்சிகள் நீண்ட தூரம் பயணிப்பதால் எந்தப் பயனும் இல்லை” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள காணொலி உரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு, பாராளுமன்றத்துக்குள் தீர்வு காணப்பட வேண்டும். அதனை விடுத்து, தீர்வை வெளியில் தேடிக் கொண்டிருக்க முடியாது. அப்படித் தேடுவதாலும் தீர்வு கிடைத்துவிடாது என்றுதான் ஜனாதிபதி கூற விளைகின்றார்.…

  9. புதிய ஜனாதிபதி முன்னுள்ள பிரதான சவால் புதிய ஜனா­தி­ப­தி­யாக வரப்­போ­கின்­ற­வ­ருக்கு பல சவால்கள் உள்­ளன. விசே­ட­மாக தமிழ் பேசும் மக்­களின் தேசிய இனப்­பி­ரச்­சி­னையை தீர்ப்­ப­திலும் யுத்­தத்­தினால் ஏற்­பட்ட பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­திலும் பல சவால்­களை ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­ப­டப்­போ­கின்­றவர் எதிர்­கொள்­ள­வேண்டும். அவை இல­கு­வாக தீர்க்­கக்­கூ­டிய பிரச்­சி­னைகள் அல்ல. பல வழி­க­ளிலும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி தென்­னி­லங்கை மக்­க­ளுக்கு சரி­யான தெளிவு­ப­டுத்­தல்­களை முன்­னெ­டுத்து சக­லரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­வா­றான தீர்­வு­களை எட்­டு­வது அவ­சி­ய­மாகும். அவை சவா­லான பணிகள் என்­பதில் மாற்று கருத்­துக்கு இட­மில்லை. ஜனா­தி­பதி…

  10. ஜெனீவா மைய அரசியல் அல்லது வெளியாருக்காக காத்திருத்தல்- நிலாந்தன் 46 ஆவது கூட்டத்தொடர் தொடங்கிவிட்டது. அதற்கு முன்னும் பின்னுமாக தாயகத்திலும் டயஸ்போராவிலும் போராட்டங்கள் தொடங்கிவிட்டன. ஜெனிவாவை மையமாகக் கொண்டு ஒரு போராட்டச் சூழல் தாயகத்திலும் டயஸ்போராவிலும் சிறிதளவுக்கு தமிழகத்திலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் அரசியல்வாதிகள் தங்களுக்கிடையே கூடிக் கதைத்து புதிய கூட்டணிகளை உருவாக்குவது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இது எல்லாவற்றையும் ஊடகங்கள் உருப்பெருக்கி சூடாக்கி விற்றுக் கொண்டிருக்கின்றன. மொத்தத்தில் ஜெனிவாவை நோக்கி ஒரு கொதிநிலை உருவாக்கப்படுகிறது. தமிழ்ச் சமூகத்தின் கூட்டு உளவியல் ஜெனிவாவை நோக்கி குவிமையப்படுத்தப்பட்டிருக்கிறது. …

  11. காணாத தேசத்திற்கு இல்லாத வழி : தங்கம் வன்னிப்பகுதியிலிருந்து 109 பெண்கள் இராணுவத்திற்கு சேர்த்துக் கொள்ளப்பட்டமை தொடர்பான செய்தி பற்றி சிதறுசமூகத்தில் பல விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இலங்கை ஊடகங்களில் இச்செய்தியை விமர்சிக்க முடியாத சூழலில் இது பற்றிய வாதப் பிரதிவாதங்கள் புலம்பெயர் ஊடகங்களில் நடைபெறுவது ஒருவகையில் ஆரோக்கியமானதே. தெற்காசிய நாடுகளையொத்த நிலையில் இலங்கையிலும் தந்தைவழிப் பாரம்பரியத்தைக் கொண்ட சமூக அமைப்பே காணப்படுவதாக நாம் இன்றும் கொள்ளவேண்டும். இச்சமூக அமைப்பில் பெண்கள் பத்னிகளாக, வீராங்கனைகளாக இன்னபிற புனைவுகளைக்குட்பட்டவர்களாகவோ அல்லது பரத்தையாகவோ, விபச்சாரிகள் போன்ற புனைவுகளுக்குட்பட்டவர்களாகவோ இருக்க …

  12. தோல்வி ஹிட்லரை அசைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் இதை அவர் ஒரு தோல்வியாகக்கூட எடுத்துக்கொள்ளவில்லை. முந்தய உலகப்போரில் ஜேர்மனி அடைந்ததே அது தோல்வி. பிரிட்டன் அத்தியாயம் என்பது ஒரு சறுக்கல் மட்டும் தான். பெரும் சறுக்கல் கூட இல்லை. சிறு தடுமாற்றம். நடக்கும் போது கால் இடறினால் என்ன செய்வோம்? இடிந்து போயா உட்கார்ந்துவிடுவோம்? என்று பிரிட்டனுடனான போரின் தோல்வியை பெரிதாக எடுத்து கொள்ளாமல் தனது நோக்கங்களில் உறுதியாக இருந்தார் ஹிட்லர். ஏப்ரல் 1941 தொடக்கத்தில் ஜேர்மனி பார்டிக் நாடுகள் மீது தாக்குதல் தொடுத்தது. கிறீஸ், யூகோஸ்லாவியா இரண்டும் ஜேர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டன. மே மாத இறுதியில் கிரேக்க தீவான கிறெரே (Crete) ஜேர்மனி வசமானது. எஸ்டோனியா, லாட்வியா, லித்துவேனியா மூன்றைய…

    • 0 replies
    • 764 views
  13. [size=4]கொழும்பு கடற்கரையோரங்களில் உள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான விடுதிகள் தொடக்கம், போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் பயன்படுத்தப்படும் புதிய உந்துருளிகள்[/size] [size=2] [size=4]மற்றும் செல்லிடத் தொலைபேசிகள் வரையான பல்வேறு புதிய உற்பத்திப் பொருள்களின் பயன்பாடு, இலங்கை அறிவித்தது போன்று ஆசியாவின் தற்போதைய முன்னணிச் சந்தையாக கொழும்பு மாறிவருவதைக் காண்பிக்கின்றது.[/size][/size] [size=2] [size=4]ஆனால் இலங்கையில் போர் முடிவடைந்த பின்னரும் கூட இங்கே தனியார் முதலீடுகள் போதியளவில் மேற்கொள்ளப்படவில்லை. பொருளாதாரத் துறையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் கைக்கொண்டு வரும் இறுக்கமான கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கையில் தனியார் ம…

  14. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அடுத்த வார இறுதியில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். எதிர்வரும் 25ம் திகதி தொடக்கம், 31ம் திகதி வரையில் ஒரு வாரகாலம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக ஐ,நா தகவல்கள் வெளிவந்தபோதும், தனது பயணத்தை அவர் முற்கூட்டியே மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் இவ்வார இறுதியில் அவர் இலங்கை வரவுள்ளதாகவும் கொழும்பில் இருந்து வெளியாகும் சிறீலங்கா அரச சார்பு ஆங்கில வார இதழான ‘சண்டே ஒப்சேவர்’ தெரிவித்திருக்கின்றது. எனினும், இந்த வார இறுதியில் அவர் இலங்கை செல்வது தொடர்பாக ஐ.நா தரப்பில் இருந்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இலங்கை செல்லும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை …

  15. சுன்னத் முதல் இறைச்சி வரை - ஐரோப்பிய இஸ்லாமியர்களும் யூதர்களும் இணையும் புள்ளி எது? ஐரோப்பாவின் இஸ்லாமியர்களும், யூதர்களும் இதற்கு முன் ஒன்று சேராமல் இருந்திருக்கலாம். ஆனால் சமீப காலமாக தங்களுடைய மத நம்பிக்கை சுதந்திரத்தைப் பாதிக்கும் சட்டங்களை எதிர்ப்பதற்கு அவர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். பெல்ஜியம் நாட்டில் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ள சட்டம் சமீபத்திய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விலங்குகளைக் கொல்வதைப் பாதிக்கும் வகையில் இது அமைந்துள்ளது. கோஷெர் மற்றும் ஹலால் மாமிசத்துக்கு உரிய நம்பிக்கைகள இது பாதிக்கிறது. விலங்குகள் உரிமை இயக்கத்தினர் நீண்டகாலமாகவே இந்தச் சட்டம் வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். ஆனால் சுதந்திரத்துக்கான செயல் …

  16. பிச்சையெடுக்கச் சுதந்திரம்? - நிலாந்தன் “நான் பேசப்போவது எமக்கு கிடைத்த சுதந்திரத்தைப் பற்றி அல்ல. இன்று நாம் இழந்திருக்கும் சுதந்திரத்தை மீளப்பெறுவது பற்றியே நான் பேசப்போகிறேன்” இப்படிப் பேசியிருப்பவர் நாட்டின் ஜனாதிபதி. நடந்து முடிந்த சுதந்திர தின விழாவில் அவர் ஆற்றிய உரை அது. நாங்கள் சுதந்திரத்தை இழந்து விட்டோம் என்று ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். இதை எப்பொழுது கூறுகிறார்? ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகளின் பின் கூறுகிறார். ஆயின்,2009 ஆம் ஆண்டு ராஜபக்ச சகோதரர்கள் வென்று கொடுத்த சுதந்திரம் எங்கே? அல்லது அது சுதந்திரமே இல்லையா? ராஜபக்சக்கள் யாருக்காக நாட்டை மீட்டுக் கொடுத்தார்களோ, அந்த மக்களே இப்பொழுது நாட்டை விட்டு வெளியேறிக் கொண்…

  17. ரணில் தண்டிக்கப்படலாம் - எம்.ஏ சுமந்திரன் | Sooriyan FM |

      • Haha
      • Like
    • 4 replies
    • 763 views
  18. முக்கியத் தருணத்தில் முரண்டு பிடிக்கின்றதா முன்னணி? காரை துர்க்கா / 2019 ஜூலை 16 செவ்வாய்க்கிழமை, பி.ப. 05:32 Comments - 0 வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் ஒன்றினைக்கும் முயற்சி கைநழுவிப் போயுள்ளது. புலிகளது காலப்பகுதியில், தமிழ் மக்களது உரிமை மீட்சிக்கும் பாதுகாப்பு உறுதிப்பாட்டுக்கும் அவர்களே முழுமையான பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருந்தார்கள். தமிழ் மக்களும் அவர்களையே நிறைவாக நம்பி இருந்தனர். ஆனால் புலிகளது மௌனத்துக்குப் (2009) பின்னர், கூட்டமைப்புக்கு அந்த வகிபாகம் வலியச் சென்றது. ஆனாலும், கூட்டமைப்பின…

  19. http://www.tamilmirror.lk/136091

  20. ‘அமெரிக்காவிடமிருந்து இலங்கை தப்ப முடியாது’ என சம்பந்தன் சொன்னது எதற்காக? அதன் அரசியல் விளைவுகள் எவ்வாறானதாக இருக்கும்? அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கைக்கான வருகையைத் தொடர்ந்து பிராந்தியத்தில் ஒரு பதட்டமான நிலைமை உருவாகி இருக்கின்றது. இதற்கு காரணம் இலங்கை தெளிவாக தன்னுடைய வெளியுறவுக் கொள்கையை மாற்றிக்கொள்வதான ஒரு சமிஞ்ஞையை வெளிப்படுதியிருப்பதுதான். இந்தப் பின்னணியில், “பொறுப்பு கூறும் விடயத்தில் இலங்கை அரசு அமெரிக்காவிடம் இருந்து தப்ப முடியாது ” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கின்றார். சம்பந்தன் எதற்காக அவ்வாறு சொன்னார்? அவரது நோக்கம் என்ன? இதனால் உருவாகப்போகும் அரசியல் விளைவு என்ன? தமிழ் தலை…

  21. புதிய அரசுத் தலைவர் ஐநாவுக்குப் பொறுப்பு கூறுவாரா? – நிலாந்தன் December 15, 2019 கோட்டாபய ராஜபக்ச அரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட முன்னரே தெளிவாக சொல்லிவிட்டார் தான் தேசத்துக்குதான் பொறுப்பு கூறுவேன் என்று. மிக அழகாக வடிவமைக்கப்பட்ட ஒரு இலத்திரனியல் தேர்தல் விளம்பரத்தில் அது வருகிறது. தேசத்துக்கு பொறுப்புப் கூறும் தலைவர் என்று. அப்படி என்றால் என்ன? அவர் தமிழ் மக்களுக்கு பொறுப்புக் கூறமாட்டார். முஸ்லிம்களுக்கு பொறுப்புக்கூற மாட்டார். அனைத்துலக சமூகத்துக்கு பொறுப்புக்கூற மாட்டார். ஐநாவுக்கு பொறுப்புக்கூற மாட்டார். பொறுப்புக் கூறுவது என்றால் அது முதலில் இறந்த காலத்துக்குப் பொறுப்பு கூறுவதுதான். இறந்த காலத்துக்கு பொறுப்புக்கூறத் தயா…

  22. தமிழ் அரசியலில் ஒரு முக்கிய ஆண்டாக 2013 இருக்கும் - அ.சுமந்திரன் சந்திப்பு: ரூபன் சிவராஜா நோர்வே கற்கை மையத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட 'தமிழர் தேசியப் பிரச்சினையைக் கையாளல்' தொடர்பான கருத்தரங்கொன்றில் கலந்துகொள்வதற்காக ஒஸ்லோ வந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அ.சுமந்திரன் அவர்களை பொங்குதமிழுக்காக சந்தித்து உரையாடினோம். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் சிறிலங்கா நாடாளுமன்றத்திலே நிகழ்த்திய சர்ச்சைக்குரிய உரையின் தாக்கம் அடங்குதவற்கு முன்னர் இடம்பெற்ற இச்சந்திப்பில் சம்பந்தன் அவர்களின் உரைகுறித்தும் தற்போதைய அரசியல் நிலைகுறித்தும் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்தும் சுமந்திரன் அவர்களுடன் விரிவாகப் பேசியதிலிருந்து... …

  23. தமிழ் மக்கள் 30 வருட காலம் அதாவது தோற்றுப்போன திம்புப் பேச்சுவார்த்தைக் காலத்திற்குப் பின்தள்ளப்பட்டுள்ளனர். அவர்களது உரிமை பற்றிக் கதைப்பதற்கு தற்போது எந்தவொரு தமிழ் அரசியல் தலைவர்களும் இல்லையென அரசியல் ஆய்வாளர் குசல் பெரேராதனது கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது, நான் அண்மையில் நன்றாகச் சிங்களம் பேசக்கூடிய முதியவர் ஒருவரைச் சந்தித்திருந்தேன். இதன்போது, அவர் நன்றாகச் சிங்களம் கதைப்பதன் பின்னணி குறித்து விசாரித்தேன். அதற்கு அவர் தான் ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பதவி வகித்ததாகவும், தான் குருநாகல், கழுத்துறை தெற்கு, காலி மற்றும் கொழும்பு பிரதேசங்களில் வேலைசெய்ததாகவும், அதனால் 40 வருட அனுபவம் உள்ளதாகவும் தெரிவித்தார். அத்…

    • 0 replies
    • 763 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.