நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
இலங்கை தமிழர் பிரச்னை: இந்தியாவின் ஐ.நா. நிலைப்பாட்டில் திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,HINDUSTAN TIMES/ GETTY IMAGES இனப் பிரச்னைக்கு உரிய வகையில் அரசியல் தீர்வை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எட்டவில்லை என ஐநா சபையில் இந்தியா கவலை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 51வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வரும் நிலையிலேயே, இந்தியா இதனைக் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைம…
-
- 12 replies
- 867 views
- 1 follower
-
-
தமிழ் அரசியற் கைதிகள்: ஒரு தொடர் கதை September 11, 2022 — கருணாகரன் — “தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையைப் பற்றி கடந்த வாரம் ரெலோ, ஜனாதிபதி ரணிலுடன் பேசியிருந்தது. இது தொடர்பாக தாம் கவனமெடுப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ரணிலும் உருவாக்கியிருந்தார். ஆனால், இந்த வாரம் கைதிகள் தமது விடுதலையைக் குறித்த கவன ஈர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இது ஜனாதிபதியின் நடவடிக்கைகளின் மீது நம்பிக்கையீனத்தையே உருவாக்கியுள்ளது. ஆகவே மறுபடியும் பழைய கதைதான். அதாவது அரசியற் பம்மாத்துத் தொடரும் என்பதாக. இதற்கு மேலும் ஒரு உதாரணம், பழைய அரசாங்கத்தைப்போலவே புதிய அரசாங்கமும் என்பதற்குச் சான்றாக 37 ராஜாங்க அமைச்சர்களின் நியமனம். ஆகவே ரணில் –மைத்திரி – மகிந்த …
-
- 0 replies
- 312 views
-
-
கடன்வாங்கி கல்யாணம் செய்யும் காலமல்ல September 7, 2022 — கருணாகரன் — நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஐ.எம்.எவ்வின் நிதி உதவி உதவும். இதற்கு ஐ.எம்.எவ் உத்தியோகத்தர் மட்டத்தில் இணக்கம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆறு மாதத்தில் முதற்கட்டமாக கடனுதவி – நிதி கிடைத்து விடும். நான்கு ஆண்டுகளுக்கு இந்த நிதி உதவி தொடரும். ஆகவே இனிப் பிரச்சினை இல்லை என்ற எண்ணத்தோடுதான் பெரும்பாலானவர்கள் உள்ளனர். இதுவரையிலும் நாடுகளிடம் கடன் பட்டு வாழ்ந்து பழக்கப்பட்டவர்களுக்கு இன்னொரு கடனைப்படுவதில் எந்தப் பிரச்சினையுமில்லை. கடன் வாங்கிக் கலகலப்பாகக் கல்யாணம் செய்வதைப்போலவே நாம் வாழ்ந்து பழக்கப்பட்டு விட்டோம். இதனால் எந்தக் கடனும் நமக்குப் பிரச்சினையாகப்…
-
- 1 reply
- 263 views
-
-
சஜித் பயப்படுவதற்கான காரணம் எமக்கு தெரியும் - நேர்காணலில் அமைச்சர் மனுஷ தெரிவிப்பு 05 Sep, 2022 | 11:14 AM நேர்கண்டவர் – ரொபட் அன்டனி புலம்பெயர் தமிழ் மக்கள் இலங்கையில் முதலீடு செய்யவேண்டும் ரணில் ஜனாதிபதியானது நாட்டின் அதிஷ்டம் தமிழ் தெரியாததையிட்டு வெட்கமடைகிறேன் மாற்றந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கப்படும் தோட்டத் தொழிலாளர்கள் அடுத்த தேர்தலில் எந்தக் கட்சியில் போட்டியிடுவது என்று தெரியவில்லை டிசம்பர் மாதமாகும்போது நாட்டு நிலைமை சீரடைந்துவிடும் கோட்டா இலங்கை வரலாம் – ஆனால் நிர்வாகத்தில் தலையிட முடியாது …
-
- 0 replies
- 303 views
-
-
பெருவெள்ளத்தில் கரைந்துவிடுமா சிறு துளி? ஐஎம்எஃப் நிதி உதவி இலங்கையை காக்க முடியுமா ? கொழும்பு: இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் அந்நாடு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறது. இதன் மூலம் 48 மாத காலத்திற்கு சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ஏறத்தாழ ரூ.23 ஆயிரம் கோடி) நிதி இலங்கைக்கு கிடைக்கும். இந்த நிதி நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை குறைக்க உதவும் என சொல்லப்படுகிறது. ஆனால், இந்த நிதி இலங்கை அரசின் கைகளுக்கு கிடைப்பதற்கே சுமார் 6 மாத காலம் ஆகலாம் என்றும் சொல்லப்படுகிறது. உணவு பாதுகாப்பு ஏறத்தாழ இரண்டரை கோடி மக்கள் த…
-
- 2 replies
- 376 views
-
-
இறப்பதற்கு முன் தனது 5 உறவுகளையும் தன்னிடம் ஒப்படைக்குமாறு கண்ணீர் மல்க தாயார் மன்றாட்டம் ! By VISHNU 01 SEP, 2022 | 01:02 PM சண்முகம் தவசீலன் நாட்டில் இடம்பெற்ற கொடூர யுத்தமானது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பல்வேறு துன்பங்களை விட்டுச் சென்றிருக்கிறது அந்த வகையில் சில தரப்பினர் தங்களுடைய துன்பங்களை படிப்படியாக குறைத்துக் கொண்டு தங்களுடைய வாழ்க்கையை முன் கொண்டு செல்கின்ற அதே வேளையிலே இன்னொரு பகுதியினர் தங்களுடைய வாழ்வை நாளும் பொழுதும் தொலைத்தவர்களாக நடைபிணங்களாகி வருகின்ற சோக கதை தொடர்ந்தே வருகின்றது முல்லை தீவு மாவட்டம் பன்னெடுங்கால யுத்தத்தினால் பல்வேறு இன்னல்களை சந்தித்தது மாத்திரமன்றி ஆழி…
-
- 0 replies
- 540 views
-
-
சீனக்கப்பலின் வருகை ! சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் அயலுறவுக் கொள்கையில் மீளாய்வு தேவை !! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் By Rajeeban 30 Aug, 2022 | 10:07 AM சிறிலங்கா சென்று திரும்பியுள்ள சீனாவின் யுவான் வாங் - 5 கப்பல் விவகாரம், சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மீளாய்வு செய்ய வேண்டிய உடனடித் தேவையை காட்டுகிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளதோடு, உண்மையில் சிறிலங்கா யாருக்கு விசுவாசம் என்பதனையும் இவ்விடயம் வெளிக்காட்டியுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஓகஸ்ற் 22ம் நாள் இக்கப்பல் இலங்கைத் துறைமுகமான அம்பாந்தோட்டையிலிருந்து புறப்பட்டு விட்டாலும், இவ்விவகார…
-
- 0 replies
- 172 views
-
-
இலங்கை நாடாளுமன்றம் நேரலை | தமிழில் | 29-08-2022
-
- 0 replies
- 201 views
-
-
இலங்கை அரகலய போராட்டங்கள் தோல்வியில் முடிந்துவிட்டதா? August 27, 2022 — கருணாகரன் — Go Home Gota அல்லது அரகலயவின் இன்றைய நிலை என்ன? இதனுடைய நாளைய பயணம் எப்படியாக இருக்கப்போகிறது? ஏனிந்தக் கேள்வி எழுகிறது என்றால், இந்தப் போராட்டத்தை ஆரம்பித்ததற்கான நோக்கம் அல்லது இலக்கு இன்னும் எட்டப்படவில்லை. அதாவது இந்தப் போராட்டத்தை நடத்தியவர்கள் பகிரங்கமாக முன்வைத்த அடிப்படையான விடயங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அதேவேளை இந்தப் போராட்டமானது, தற்போதைய ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தினால் மட்டுறுத்தப்பட்டிருக்கிறது. போராட்டத்தின் இயங்குவிசைகளாக இருந்த முக்கியச் செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுகின்றனர். அனைத்துப் பல்கலைக்கழக ம…
-
- 0 replies
- 374 views
-
-
திட்டமிட்டு கோவில் சூழல் கடைகளால் ஆக்கிரமிப்பு அ. அச்சுதன் இலங்கையின் கிழக்கே கிழக்கு மாகாணத்தில் உலகப்பிரசித்தி பெற்ற இயற்கைத் துறைமுகமாகிய திருக்கோணமலைத் துறைமுகம் அமைவதற்குச் சாதகமாயுள்ள மலைகளொன்றின் உச்சியில் இருக்கின்றது திருக்கோணேஸ்வரம். மூன்று மலைகளைக் கொண்டு முக்கோண வடிவில் அமைந்திருப்பதால் திருக்கோணமலை என்று இந்த நகரம் பெயர்பெற்றது. இந்த நகரத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலம் கோணேஸ்வரம் ஆதலால் திருகோணமலை எனவும் இந்த நகரம் பெயர் பெறுகின்றது. இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்களின் திருத்தலமாகிய திருக்கோணேஸ்வரம் புனிதஷேத்திரமாக இருந்து வந்ததைப் புராண இதிகாச வரலாறுகள் கூறுகின்றன. எனவே இந்தத் தலத்தின் இயல்பான தெய்வீக விசேடத்தினாலே இந…
-
- 9 replies
- 643 views
-
-
முன்னாள் ஜனாதிபதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகும் இயல்பு மீறிய அரசியல் கலாசாரம் Veeragathy Thanabalasingham on August 23, 2022 Photo, SAUDI GAZETTE, AFP Photo கடந்த மாதம் மக்கள் கிளர்ச்சியை அடுத்து நாட்டை விட்டு தப்பியோடி மாலைதீவு, சிங்கப்பூர், தாய்லாந்து என்று நாடுவிட்டு நாடு மாறி ‘வசதியான அஞ்ஞாதவாசம்’ செய்யும் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இவ்வாரம் நாடு திரும்பவிருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தி நாட்டுக்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்துதருமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அதேவேளை, அவர் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவி…
-
- 1 reply
- 307 views
-
-
புலம்பெயர் தமிழர்களின் கவனத்திற்கு; வாசுதேவன் பேசுகின்றார்… Photo, DECCANHERALD புலம்பெயர் தமிழர்கள் மீதான தடை நீக்கம் குறித்த விடயம் பேசுபொருளாக உள்ளது. இந்தத் தடை நீக்கத்தின் மூலம் தடை நீக்கப்பட்ட புலம் பெயர் அமைப்புகள் சாதிக்க கூடியது என்ன? இதன் மூலம் தமிழ் மக்கள் அடைந்து கொள்ளக்கூடிய அனுகூலங்கள் என்ன? புலம்பெயர் தமிழர்கள் மீதான தடையை நீக்கியதன் மூலம் இலங்கை அரசாங்கம் குறிப்பாக ரணில் – ராஜபக்ஷர்கள் அரசாங்கம் சாதித்துக் கொள்ள முயல்வது என்ன? தமிழ் மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் ரணில் – ராஜபக்ஷர்கள் அரசாங்கம் கூற வருகின்ற செய்தி என்ன? இலங்கையில் மாறி மாறி ஆட்சிபீடம் ஏறுகின்ற அரசாங்கங்கள் காலத்துக்குக் காலம் தமிழர் விவகாரத்துடன் தொடர்புடைய வி…
-
- 1 reply
- 300 views
-
-
புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தடைநீக்கமும் சிங்கள தேசியவாத சக்திகளும் 19 AUG, 2022 | 02:04 PM 2021 செப்டெம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் வருடாந்த கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்கு நியூயோர்க் சென்ற வேளை அன்றைய ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச ஐ.நா. செயலாளர் நாயகம் அன்ரோனியோ குற்றெரஸுடனான சந்திப்பின்போது புலம்பெயர்ந்த இலங்கை தமிழ்ச் சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அறிவித்தார்.அந்த நேரத்தில் அதை தென்னிலங்கையில் யாரும் எதிர்த்துப் பேசவில்லை. நல்லிணக்கத்தில் உண்மையான நாட்டம் ராஜபக்சவுக்கு இருந்தால் முதலில் புலம்பெயர்ந்த தமிழர்களுடன் அல்ல உள்நாட்டில் தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளுடனேயே பேச்சுவார்த்தைய…
-
- 0 replies
- 341 views
-
-
‘இலங்கை – திக்கற்ற பார்வதி’ August 18, 2022 — கருணாகரன் — “திக்கற்ற பார்வதி” என்றொரு திரைப்படம் 1970களின் முற்பகுதியில் வந்திருந்தது. இன்றைய இலங்கையின் நிலையும் ஏறக்குறைய அந்தத் திக்கற்ற பார்வதியின் நிலையைப் போன்றதுதான். அரசியல் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி என்று ஒரே குழப்பத்துக்குள்ளாகியுள்ளது நாடு. இதற்குள் வெளி அழுத்தங்கள் வேறு. சீனக் கப்பலை உள்ளே அனுமதிக்கக் கூடாது என்ற இந்திய அழுத்தம். இந்த விடயத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்கத் தரப்பு. கடன் மறுசீரமைப்புத் தொடக்கம் எதிர்கால பொருளாதார, அரசியல் உறவு வரை எப்படி அமையும் என்பதை இந்தக் கப்பலைக் கையாள்வதைப் பொறுத்தே தீர்மானிக்க முடியும் என்று சொல்லும் சீனா. ரணில் அரசு தற்போதை…
-
- 0 replies
- 189 views
-
-
காலம் கடந்து பிறந்திருக்கும் ஞானம்!… அவதானி. அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள உருவாகும் நிகழ்ச்சி நிரல் !…. அவதானி. தேசியப்பட்டியல் ஊடாக ஒரே ஒரு நியமன ஆசனத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு, மீண்டும் பாராளுமன்றத்திற்குள் முதலில் எம்.பி. ஆகவும் பின்னர் பிரதமராகவும் அதன்பிறகு ஜனாதிபதியாகவும் – சாதாரண ஆசனத்திலிருந்து சிம்மாசனம் வரையில் உயர்ந்திருக்கும் ரணில் விக்கிரமசிங்கா, அண்மையில் தனது அரசைக் காப்பாற்றிய முப்படைகளின் தளபதிகளுக்கும் நன்றி தெரிவித்தார். உண்மையிலேயே அவர் நன்றி தெரிவித்திருக்கவேண்டிய மேலும் சிலரது பெயர்களை வெளிப்படையாகச் சொல்ல முடியாதிருக்கலாம். ரணில், ஜனாதிபதி பதவியை ஏற்ற சில மணிநேரங்களில் ஒரு வெளிநாட்டு ஊடகர் அவரிடம் “ நீங்கள் ராஜபக்க்ஷக…
-
- 0 replies
- 630 views
-
-
நிக்சன் வழமை போன்று சகலரையும் சாடி நிற்கிறார். இலங்கை காலம் காலமாக இந்தியாவை ஏமாற்றுவது இந்தியா சிங்களவருடன் பேசும் போது தயவாகவும் தமிழருடன் பேசும் போது வெருட்டலுடனும் பேசுவதை போட்டுடைக்கிறார்.
-
- 1 reply
- 283 views
- 1 follower
-
-
இனக்கொலையாளிகள் ராஜபக்ஷேக்களுடன் சேர்ந்து சொந்த இனத்திற்கெதிராக துரோகம் புரிந்த தமிழர்கள் அண்மையில் இலங்கை தமிழ்ச் சங்கம் எனும் இணையத்தில் சச்சி சிறிகாந்தா அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த தொகுப்பினைப் படிக்க முடிந்தது. என்னைப்போலவே இதுதொடர்பான ஆர்வமுள்ளவர்கள் இதனைப் படித்துப் பார்க்கலாம் என்பதற்காக இத்தொகுப்பினை தமிழில் மொழிபெயர்த்து எழுதுகிறேன். இது என்னுடைய சொந்த ஆக்கம் இல்லை. ஆகவே படித்துவிட்டு என்னுடன் சினங்கொள்ள வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக்கொள்கிறேன். தற்போது இனக்கொலையாளிகள் ராஜபக்ஷேக்களின் நட்சத்திரங்கள் பிரகாசமிழந்து எரிந்து கீழே வீழ்ந்துகொண்டிருக்கும் தறுவாயில் இவர்களிடமிருந்து தமக்கான ஆதாயங்களை ஆசையுடன் எதிர்பார்த்து, புலிகளையும், தமிழ் …
-
- 33 replies
- 1.4k views
-
-
பலாலி விமான நிலையம் தொடர்ந்தும் இயங்குமா....? By T. Saranya 17 Aug, 2022 ம.ரூபன். பலாலி - சென்னை விமான சேவைகள் ஜூலை மீண்டும் ஆரம்பமாகும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஜூன் 18 இல் பலாலியில் உறுதியளித்திருந்தார். சட்டச்சிக்கல், எரிபொருள் பிரச்சினை விமான நிறுவனத்தின் எதிர்பார்ப்பு காரணமாக நடைபெறாது என அவருடன் பலாலிக்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பின்னர் கூறியிருந்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமரானதும் இதற்கு உத்தரவிட்டிருந்தார். ஏனைய நாடுகளுக்கும் இங்கிருந்து சேவைகளை ஆரம்பிக்க விமான நிறுவனங்களுடன் பேச்சு நடாத்துமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் சிறிப…
-
- 0 replies
- 470 views
-
-
சல்மான் ருஷ்டி – சர்ச்சைகளின் சிருஷ்டி..! Posted on August 14, 2022 by தென்னவள் 13 0 நியூயோர்க்கில் இடம்பெற்ற சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலானது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான வன்முறை என மேற்குலக நாடுகள் கூறி வருகின்றன. ஆனால் இறைதூதரை அவமதிக்கும் விதத்தில் அவர் எழுதிய சாத்தானின் வசனங்கள் என்ற படைப்புக்காக அவருக்குக் கிடைத்த தண்டனை இது என இஸ்லாம் மார்க்க விசுவாசிகள் கூறி வருகின்றனர். இஸ்லாமியர்களின் கோபத்தை குறை கூற முடியாது. சல்மான் இஸ்லாமியர்களின் நம்பிக்கையை விமர்சித்த ஒரு படைப்பாளியாக இனங்காணப்படுவதற்கு முன்பாக அவர் பிறப்பால் இஸ்லாமியராக இருந்தேதே இந்த சீற்றங்களுக்கு மூல காரணம். 1981 இல் அவர் எழுதிய Mid Night Children எ…
-
- 0 replies
- 211 views
-
-
இலங்கையும் வல்லரசுகளும் By DIGITAL DESK 5 13 AUG, 2022 | 12:13 PM லோகன் பரமசாமி தமிழ்தேச மக்கள் மத்தியில் இலங்கையில் ஏற்பட்டு வருகின்ற அரசியல் பொருளாதார நெருக்கடி மாற்றங்களை சிங்கள தேசத்தோடு இணைந்து கூட்டாக ஒரு குடையின் கீழ் அணிவகுத்து நின்று பார்ப்பது பொருத்தமற்றது என்ற நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழ் மக்கள் தம்மை இறைமையுள்ள ஒருதேச மக்களாக நிலைநிறுத்தி வைத்துக்கொள்ளவே அதிகளவில் பிரயத்தனம் செய்கின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் பூதாகாரமாக பரிணமித்துள்ளது. ஆட்சித்தலைவர்களை மக்கள் நாட்டை விட்டு தப்பியோடும் அளவிற்கு வேட்கை கொண்டதாக உள்ளது. புதிதாக பதவியேற்றுள்ள ஆட்…
-
- 0 replies
- 220 views
-
-
சீன மூலோபாயத்தின் இரகசிய நகர்வா யுவான் வோங் - 5 By VISHNU 10 AUG, 2022 | 09:12 PM (லியோ நிரோஷ தர்ஷன்) இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்த சீனாவின் யுவான் வோங் - 5 கண்காணிப்பு கப்பலின் ஹம்பாந்தோட்டை விஜயம் குறித்து குவாட் அமைப்பு நாடுகளும் பாதுகாப்பு சார் எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. இந்தோ - பசிபிக் பகுதியில் சீனாவின் முதலாவது வெளிக்கள இராணுவ தலத்திற்கான இலக்கை மையப்படுத்தியதாகவா யுவான் வோங் - 5 கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி சீனா நகர்த்துகின்றது என்ற சந்தேகத்தை குவாட் அமைப்பு மாத்திரம் அல்ல பல மேற்குலக நாடுகளுக்கும் வெளிப்படுத்தியுள்ளன. கிழக்கு ஆபிரிக்க நாடான டிஜிபூட்ட…
-
- 0 replies
- 256 views
-
-
ஆட்ட நாயகன் –ரணிலின் காய்கள் – ரணிலின் வழி, ஜே. ஆரின் வழி August 11, 2022 — கருணாகரன் — இலங்கை அரசியல் களம் கொந்தளித்துக் கொண்டேயிருக்கிறது. எதிர்பாராத திருப்பங்கள், அதிரடிகள், மாற்றங்கள், சறுக்கல்கள், எழுச்சிகள் என ஒரே அமர்க்களக் காட்சிகள். அடுத்து என்ன நடக்கும் என்ற பதிலற்ற கேள்விகள் எல்லாப் பக்கத்திலுமிருந்தும் எழுந்து கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் அரசியல் போட்டிகள், மாற்றங்கள், திருப்பங்கள் நடந்தாலும் அதற்கு அப்பால் வெகு தொலைவில் சனங்களின் வாழ்க்கை அதிக சேதாரமில்லாமல் இயல்பு நிலையில் இருக்கும். இப்பொழுது சனங்களின் வாழ்க்கைதான் அதிகமாகக் கொதித்துக் கொண்டும் கொந்தளித்துக் கொண்டுமிருக்கிறது. அதன் மீதுதானே பொருளாதாரக் குண்டு விழுந்து வெடித்து…
-
- 0 replies
- 223 views
-
-
சாணக்கியன் போன்றவர்களுக்கு... கட்சிக்குள், முன்னுரிமை வழங்க வேண்டும் – பொது ஊழியர் சங்கம் வேண்டுகோள். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் சாணக்கியன் போன்ற இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசாங்க பொது ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் கல்முனை தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பு மேற்கொண்டு அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , தமிழ் மக்கள் கூட தமிழ் தலைமைகளை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.காரணம் அநேகமாக மக்கள் பிரச்சினை தீர்க்கப்படாமை ஆகும். எதிர்கட்சி தலைவராக கடந…
-
- 0 replies
- 265 views
-
-
-
- 3 replies
- 412 views
- 1 follower
-
-
நாட்டை மீளக்கட்டியெழுப்ப முக்கியமான பொருளாதார மறுசீரமைப்புகள் தேவை பொருளாதார நிபுணர் ரெஹானா தௌபீக் *தொலைநோக்க ற்ற தீர்மானங்கள் , கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகள் இலங்கையை கடுமையான நெருக்கடிக்குள் தள்ளின *அதிகாரிகள் இறுதிக் கட்டத்தை கடந்திருந்தும் கூட சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதில் அதிகாரிகள் தாமதம் செய்தனர் *இலங்கைப் பிரஜைகள் மத்தியில் உணவுப் பாதுகாப்பில் விரைவான வீழ்ச்சி *41% குடும்பங்கள் 75% க்கும் அதிகமான பணத்தை உணவுக்காக செலவிடுகின்றன *மக்கள் உணவுக்காக மருத்துவம் மற்றும் கல்விக்கான செலவை குறைக்கின்றனர் *பொருளாதார நெருக்கடிகளின் போது மனித மூலதனம்…
-
- 0 replies
- 206 views
-