நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
கறுப்பு ஜூலையின் நினைவழியா நாட்கள்! இலங்கைத் தீவில் இரு வெவ்வேறு தனித்தேசியங்கள் உள்ளன என்பதைத் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் ஜனநாயக வாக்களிப்பு மூலம் வெளிப்படையாக அம்பலப் படுத்தும் முதல் நிகழ்வு 1977 ஜூலையில் நடந்த பொதுத் தேர்தலில்தான் இடம்பெற்றது. இறையாண்மையுடைய தனித் தமிழ் அரசாகத் திகழ்வதற்கான ஆணையைத் தமிழ்த் தேசத்திடமிருந்து ஒட்டு மொத்தமாகப் பெற்ற அமைப்பாகத் தமிழர் ஐக்கிய விடு தலை முன்னணி ஒருபுறத்திலும் ஈழத் தமிழர்களின் தனி இறையாண்மை மற்றும் சுய நிர்ணய உரிமை அபிலாஷைகளை அடியோடு நிராகரித்து, சுதந்திரமாக வாழவிரும்பும் தமிழினத்தை அடிமைப்படுத்தி, தமிழர் தேசம் மீது மேலாண்மை செலுத்துவதற்கான முற்று முழுதான அரச அதிகாரம் கொண்ட சிங்களக் கட்சி மறு புறத்திலுமாக பின…
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கைதீவின் இனப்பிரச்சினையில் தேர்வுகள் அற்றநிலையில் பன்னாட்டு சமூகம் -புரட்சி (தாயகம்)- சிங்கள அரசுகள் காலத்திற்கு காலம்;, தமது தேவைக்கேற்றபடி அமைதித் தீர்விலே மட்டுமே நம்பிக்கை கொண்டவர்களாகவும் கௌதம புத்தரின் அகிம்சை, சமாதானம், நல்லிணக்கம் போன்ற அன்புவழிக் கோட்பாடுகளை கடைப்பிடிப்பவர்களில் தாம் முதன்மையானவர்களாகவும் உலகத்திற்கு நாடகமாடி வருவது வழமையான ஒன்றாகும். அதாவது தமக்கெதிராக பன்னாட்டு சமூகமோ அல்லது பிராந்திய வல்லரசுகளோ இனப்பிரச்சினைக்கு ஒரு நீதியான நியாயமான தீர்வினை முன்வைக்குமாறு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளின் போதும், உள்நாட்டிலே அரசியல் சிக்கல்கள் கொந்தளிப்புக்கள் ஏற்படும்போதும் அல்லது பாரிய பின்னடைவுகளை படைத்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
Posted on : 2007-07-07 குறுகிய அரசியல் லாபங்களுக்காக படைநகர்வுச் செயற்பாடுகள் தன்னுடைய குறுகிய அரசியல் லாபங்களுக்காகப் படை யினரைப் பலிகொடுத்து இராணுவ நகர்வுகளை முன்னெ டுக்கின்றது மஹிந்தவின் அரசு என்பது இப்போது பரகசிய மாகி வருகின்றது. தென்னிலங்கை பௌத்த சிங்கள மேலாண்மை சக்திகளின் ஆதரவைத் தக்கவைப்பதன் மூலம் தனது ஆட்சி அதிகார செல்வாக்கை உறுதிப்படுத் திக் கொள்வதில் கண்ணாக இருக்கும் இந்த அரசுத் தலைமை, அந்தப் பேரினவாத சக்திகளை வளைத்துப் போட்டுத் தனது கைக்குள் வைத்திருப்பதற்காக சிறுபான்மைத் தமிழர் மீதான இராணுவத் தாக்குதல் கெடுபிடிகளை இறுக்குகின்றது. தமிழர்களின் போராட்ட சக்தியான விடுதலைப் புலிகளுக்கு எதிரான தன்னுடைய போர்முனைப்பைத் தீவிரப்படுத்து வதன் மூலம் தன்னை பௌத்த சிங…
-
- 0 replies
- 1k views
-
-
தேசிய அடையாளத்தைக் காப்பாற்ற 'சிவாஜி" திரைப்படம் பார்க்க...? -பரணி கிருஸ்ணரஜனி- கடந்த யூன் மாதம் முதலாம் நாள் மாலை, இனிமையான பழைய நினைவுகளை அசை போட்டபடி ஒருவித ஆத்மார்த்த நிலைக்குள் எனது ஆழ்மனம் அமிழ்ந்திருந்த தருணத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு. மறுமுனையில் அறிமுகமில்லாத ஒரு நபர், 'சிவாஜி" திரைப்படத்திற்கு ஒரு விமர்சனம் எழுதித்தரும்படியும், அதை ஒரு ஊடகத்தில் வெளியிட இருப்பதாகவும், தாங்கள்தான் அப்படத்தை சில ஐரோப்பிய நகரங்களில் திரையிட இருப்பதாகவும், முதல் காட்சிக்கு எனக்கு இலவச அனுமதி வழங்குவதாகவும், என்னைத் தொடர்ந்து பேசவிடாமல் ஏதேதோ உளறிக்கொண்டிருந்தார். யாரோ என்னை சினிமா விமர்சகர் என்று கிளப்பிவிட்ட வதந்தியின் அடிப்படை அவர் பேச்சில் அப்படியே எதிரொலித்தது.…
-
- 3 replies
- 3.8k views
-
-
நெருப்பின் நியாயங்கள் அமைதியாக ஒருவன் வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவன் தற்கொலை செய்வதில்லை. அது மானுடத்தின் இயல்பும் இல்லை. சராசரி எதிர்பார்ப்புகளும் எதிர்நீச்சலும் என வாழ்க்கை நகரும். வாழ்க்கையின் நகர்வு ஸ்தம்பிதம் அடைந்து, எதிர்பார்க்கவும் எதிர்நீச்சல் போடவுமான மானுட இயல்பு மறுக்கப்படும் போது வெறுமை மிஞ்சுகிறது. அந்த வெறுமையெங்கும் பிணங்களும் சதைகளும் ஓலங்களும் நிறைந்து இறுதியில் வெறுமை நிரம்பி வெடித்து சிதறுகிறது. இவ்வாறு வெடித்து சிதறும் தன்மையை இக் கொடும் செயலின் காரணிகளை அழிக்கும் நோக்குடன் நிதானமாக கையாள்பவர்களே கரும்புலிகள். தேச மக்களின் உயிரைக்காக்கவும் உயிரின் பெறுமதியை ஆழமாக நேசிப்பதன் வெளிப்பாடாக அவரது வாழ்வு மறு வடிவமடைகிறது. தன்னை கொடுத்து பிற உய…
-
- 11 replies
- 3.4k views
-
-
Posted on : 2007-07-03 அமைதி முயற்சி என்ற ரதத்தை முன்நகர்த்தச் செய்ய வேண்டியவை ஈழத் தமிழரின் தேசிய இனப்பிரச்சினையை ஒட்டிய சகடச் சக்கரம் மீளவும் சுழல ஆரம்பித்து விட்டது. போர்வெறி முனைப்பில் நிற்கும் கொழும்பை அமைதி முயற்சிகள் பற்றி பெயருக்கேனும் வாயசைக்க வைத்தி ருக்கிறது சர்வதேச அழுத்தம். மாவிலாறு, மூதூர் என்று தொடங்கி தொப்பிகலை வரையான வெற்றிகளை அவை பொறிகள் என்பதைப் புரியாமல் ஒருபுறம் கொண்டாடி மகிழும் கொழும்பு, மறுபுறம் சர்வதேச சமூகத்தை மீண்டும் சமாளித்து ஏமாற்றுவதற்காக அமைதி முயற்சி என்ற தனது அபத்த நாடகத்தின் அடுத்த அத்தியாயத்தை அரங்கேற்றுவதற் காகத் திரையை விலத்தத் தொடங்கிவிட்டது. சகடச் சக்கரத்தில் கொழும்பு கொண்டாடும் வெற் றிப்பாதை இப்போது இனிமேல் இறங்கு முக…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழீழ மக்களின் ஏகபிரதிநிதிகளான விடுதலைப்புலிகளும், மேற்குலக நாடுகளும். இற்றை வரை 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப்புலிகள் ஆரம்பக் கட்டத்தில் கெரில்லாப் போர் மூலம் போராடி வந்து, தற்போது மரபு வழியில் முப்படைகளையும் அதாவது தரைப்படை, கடற்படை, வான்படை ஆகியவற்றை உள்அடக்கி பலம் வாய்ந்ததன் காரணமாக சிறிலங்கா அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் படைச் சமநிலை உருவாக்கியதன் விளைவு போர் நிர்ப்பந்த ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தம் 2002 ல் உருவாகி ஐந்து வருடங்கள் கடந்தும், ஆறாவது வருடத்தை நோக்கிக் கொண்டிருக்கும் போதும் இதுவரை காலமும் ஒருவித சமாதான உடன்படிக்கையும் , மேற்குலகம் சிறிலங்கா அரசாங்கத்தின் ஏதேச்சைத்தனமான சமாதான நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா…
-
- 17 replies
- 5.8k views
-
-
`ஜனாதிபதி ராஜபக்ஷ அரசின் செயற்பாடுகளினால் தமிழ் ஈழத்துக்கான போராட்டம் பல மடங்கு பலம் பெறுகிறது' [27 - June - 2007] *முழு நாடும் தமிழர்களின் தாயகமல்ல என்று அரசு கூறிவிட்ட பின்னர் அவர்களின் தாயகத்தை நாம் ஏற்றுத்தானாக வேண்டும். தமது தாயகத்தில் குடிகொண்டிருக்கும் எதிரிப்படையை விரட்டும் உரிமை அந்தத் தாயக மக்களுக்கு இல்லையென்று கூற ஒரு சிங்கள மகனுக்கும் முடியாது இம்மாதம் 7 ஆம் திகதி வியாழக்கிழமை சூரியன் உதிப்பதற்கு இரண்டரை மணி நேரம் தான் இருந்தது. அதிகாலை 3.30 மணியளவிலிருக்கும், பிசாசுகள் மரத்திலிருந்து இறங்கும் நேரம் என்று சொல்வார்களே அந்த வேளை, தலைநகரின் காலி வீதியில் இரு பக்கங்களிலும் வீடுகளில் சின்னஞ்சிறுசுகள், இளவயதினர், முதியோர், ஆண், பெண் அனைத்துத் தமிழ் …
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழரிடமிருந்து பறி போய்விட்ட திருமலையின் `தனித்தமிழ்ப் பிரதேசங்கள்' - (தேசியன்) [24 - June - 2007] எமது நிலம் எமக்கு வேண்டுமென தாயகத்திலும் புலத்திலும் உரிமைக்குரல் எழுப்பிவரும் தமிழ் மக்களுக்கு சவால்விடுக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் திருகோணமலைத் துறைமுகத்தையடுத்துள்ள தென்பகுதியை அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளது. `தேசிய பாதுகாப்பு' ,உயர் பாதுகாப்பு வலயம்' அதியுயர் பாதுகாப்பு வலயம்' ஆகிய இன்னோரன்ன பெயர்களின் கீழ் வளமிக்க தமிழர் தாயக பிரதேசங்கள் உருக்குலைக்கப்பட்டே வருகின்றன. அந்த வகையில் பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு பசிக்கு இறுதியாக இரையாகியுள்ள தமிழர் நிலங்களாக மூதூர் கிழக்கும் சம்பூரும் வந்துள்ளன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கைய…
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழ்த் தேசியத்தை பற்றுதல்: புலம்பெயர் தமிழர்களுடன் ஒரு முறைசாரா உரையாடல் -தாயகத்திலிருந்து ராஜன் காசி- 01 சிதைவின் விளிம்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சிறிலங்கா அரசை தூக்கி நிறுத்தும் முயற்சியில் தற்போது மகிந்தவும் அவரை வழிநடத்தும் சிங்கள ஆளும் வர்க்கமும் தீவிர முயற்சியில் இறங்கியிருக்கின்றனர். ஒரு ஜனாதிபதிக்காலத்தை தனக்குரியதாக்கிக் கொண்டிருக்கும் மகிந்த அடுத்த ஜனாதிபதிக் காலத்தை தனக்குரியதாக்கிக் கொள்ள வேண்டுமென்ற முனைப்பில் செயற்பட்டு வருகின்றார். அதற்கு மகிந்தவிற்கு இருக்கும் ஒரேவழி சிங்கள இனவாத அரசியலை 'அநகாரிக்க தர்மபால" மனோபாவத்திற்கு நகர்த்திச் செல்வதுதான். இதுதான் தற்போது சிங்களத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலாக இருக்கின்றது. சமீப க…
-
- 1 reply
- 1.5k views
-
-
இந்திய சினிமாவை பல்வேறு காரணங்களிற்காக ஆழமாக அறிவியல்ரீதியில் ஆய்வு செய்து புறக்கணிக்க வேண்டிய தேவை புலம்பெயர்ந்த தமிழர்களிற்கு இருக்கிறது. புறக்கணிப்பிற்கான தேவை இரு வழி நியாயப்பாடுகளைக் கொண்டது. அந்தந்த படங்களின் திரைக்கதையின் கருப்பொருள் அந்த படத்தின் காட்சி அமைவுகள் வசனநடைகள் மூலம் உருவாக்க நிலை நிறுத்த முயலும் கருத்தியல். தமிழ்த் தேசியத்திற்கோ தமிழீழ விடுதலைப் போராட்டத்தையோ எதிர்க்கும் தனிநபர்களின் பங்களிப்பில் அல்லது அவர்களை பின்னணியாக கொண்ட நிறுவனங்களின் மூலம் வருபவை. முதலாவது ஆனது எமது சமூதாயத்தின் ஒற்றுமை, மனித வளங்களின் திறமை, சிந்தனையாற்றல் அதன் மூலம் கிடைக்கும் பலத்தை மழுங்கடிக்காது பாதுகாக்க அத்தியாவசியமான ஒன்று. இரண்டாவதானது குறிப்பிட்ட தனிநபர்களின் எம்மை…
-
- 21 replies
- 5.6k views
-
-
வெளிநாட்டு சிற்றிசன் உடைய ஒருவர் இன்னொரு நாட்டில் அரசியலிலோ வேறு விடயங்களிலோ ஈடுபட சட்டம இடம்கொடுக்குமா ? உதாரணமா மகிந்தவின் சகோதரர் அமெரிக்கன் சிற்றிசன். அவர் இலங்கையில் கைக்கு கிடைச்ச அதிகாரம் எல்லாத்தையும் வைத்திருக்கின்றார். அதற்கு எவ்வாறு அமெரிக்க அரசு அங்கீகாரம் கொடுத்தது. ஏனோ தானோ என்று சின்ன விடயங்களிற்கு எல்லாம் நாம் கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்கின்றோம். இப்படியான விடயங்களை உலகநாடுகளின் முன் வெளிச்சம் போட்டு காண்பிக்கலாம் என்பது எனது தனிப்படட்ட கருத்து உங்கள் கருத்துக்களிற்காய்...........
-
- 5 replies
- 2.1k views
-
-
RAW-விலிருந்து இன்னொரு 'தேசபக்தர்' மாயம்! புதுடில்லி : பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகத்தில், "ரா' உளவுப் பிரிவில் உயர் அதிகாரியாக பணியாற்றிய வங்கதேச உளவாளி, 'தலைமறைவானவர்' என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார
-
- 1 reply
- 1.4k views
-
-
http://www.iht.com/articles/2007/06/13/asi...nka.1-74514.php
-
- 0 replies
- 1.9k views
-
-
‘இலங்கையில் இன சுத்திகரிப்பு’? இலங்கைப் பேரினவாதத்தின் குரூரமுகம் மேலும் ஒருமுறை வெளிப்பட்டிருக்கிறது. தமிழர்களை வெட்டிக்கொன்று, ‘‘இங்கே தமிழன் கறி கிடைக்கும்’’ என்று எழுதி வைத்த ஜூலைப் படுகொலைகள் நடந்து இருபத்து நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டன. இருந்தாலும் அந்தப் பேரின வாதத் துக்கு இன்று வரையில் யாராலும் முடிவுரை எழுத முடியவில்லை. அந்த நெருப்பு தமிழர்களின் ரத்தத்தை பெட்ரோலாக்கி மேலும் மேலும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிக்கிறது என்பதுதான் நிஜம். அண்மையில் கொழும்பு நகருக்குள் தங்கியிருக்கும் ஏதுமறியா அப்பாவித் தமிழர்களை கைது செய்து பலவந்தமாக இலங்கைப் போலீஸார் வெளியேற்றி உள்ளனர். மருத்துவம் செய்து கொள்ளவந்த முதியோர்கள், வெளிநாடுகளிலிருந்து திரும்பி வருகி…
-
- 0 replies
- 1.6k views
-
-
கனடாவின் பிரதான நகர்களில் ஒன்றான ரொரன்ரோவிலும் இன்று "வெல்க தமிழ்" நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இந் நிகழ்வுகள் இன்று மாலை 5 மணிக்கு ஸ்காபுரோ ரவுன் சென்ரரினுள் உள்ள சிவிக் சென்ரரில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வுகள் பற்றிய முழுமையான விபரங்கள், மற்றும் வாகன ஒழுங்குகள் பற்றிய விபரங்களுக்கு கனேடிய தமிழ் வானொலியை கேட்க்கொள்ளுங்கள். (இணையம் அது தவிர நேரடியாக நிலக்கீழ் தொடர்ந்தினூடாக செல்ல முடியும். வெல்க தமிழ் பற்றிய சிறப்பு ஒலிபரப்பு இப்போழுது தொடக்கம் நாளை நன்பகல் 12 மணிவரை ஜெனிவாவிலிருந்தும், அதன் பின்னார் ஒட்டாவாhவிலிருந்தும், அதன் பின்னர் ரொரன்ரோவிலிருந்தும் நேரடி ஒலிபரப்பு நடைபெறவுள்ளன. ************************** ஜெனீவாவில் நடைபெறவுள்ள உலகத்தமிழினத்தில் உரத்…
-
- 0 replies
- 1.3k views
-
-
http://in.news.yahoo.com/070608/43/6gslh.html
-
- 1 reply
- 1.3k views
-
-
'யாழ்ப்பாண நூல் நிலையமும் சிங்கள (NAZI) நாசிக்களும்!" -சபேசன் (அவுஸ்திரேலியா)- இருபத்தியாறு ஆண்டுகளுக்கு முன்பு, நாகரிக உலகமே வெட்கித் தலைகுனியும்படியான கோரச்செயல் ஒன்றை, அன்றைய சிங்கள அரசு தமிழ் மக்களுக்குச் செய்தது. 1981 ஆம் ஆண்டு யூன் மாதம் முதலாம் திகதி இரவு ஒன்பது மணியளவில், தென்கிழக்காசியாவின் மிகச் சிறந்த நூல் நிலையங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட யாழ்ப்பாண நூல் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது. அன்று 97,000-க்கும் மேற்பட்ட நூல்களும், கிடைத்தற்கரிய நூல்களும், சுவடிகளும் எரிந்து சாம்பலாயின. தமிழர்கள் தம்மில் ஒரு பகுதியை தாம் இழந்ததாக உணர்ந்து, உருகி, உறைந்து போயினர். தமிழீழ மக்களுக்கு மாறாத வலியையும், வடுவையும் தந்த இந்தக் கோரமான பேரழிவுக்கு அடிப்படையாக அ…
-
- 0 replies
- 991 views
-
-
[03 - June - 2007] இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபயவின் அவசர டில்லி விஜயமும் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனின் திடீர் தமிழ் நாட்டுப் பயணமும் அரசியல் இராணுவ ரீதியில் இலங்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றன. ஆயுதங்கள் வாங்குவதற்காக பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளை இலங்கை நாடுவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பு ஆலோசகரும் முன்னாள் `றோ' வின் உயரதிகாரியுமான எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளதன் மூலம் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோதாபய ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு இந்தியா பச்சைக்கொடி காட்டியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அவசர பயணமொன்றை மேற்கொண்டு …
-
- 4 replies
- 1.6k views
-
-
-
இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது புலிக்காச்சல் புலிக்காச்சல் இதுவும் எலிக்காச்சல் பிளேக் கோழிகாச்சல் குனியா மாதிரி இதுவும் ஒரு காச்சல் தான் இதன் தோற்றம் இலங்கையில் புலிகள் ஆயுத போராட்டம் தொடங்கிய காலத்திலேயே இந்த காச்சலும் இலங்கையில் தேற்றம் பெற்று பின்னர் தமிழ்நாடு ஊடாக இந்தியா விரலும் பரவி இன்று அவுஸ்ரேலியா தொடக்கம் கனடாவரை பரவியிருக்கிறது.இது தானாகவும் தொற்றி கொள்ளும் மற்றது பரம்பரையாகவும் இது பரவும் ஆனால் மிக அபூர்வமாக இலட்சத்தில் ஒருவரே இந்த நோயால் பாதிக்கபடுகிறார்கள். சாதாரணமாக காச்சல் வருபவர்கள் எல்லோரும் வைத்தியரிடம்தான் போவார்கள் ஆனால் புலிகாச்சல் வந்தவர்கள் மட்டும் காவல்துறையினரிடம் போவார்கள். சரி இந்த காச்சலால் பாதிக்கபட்வர்கள் அல்லது…
-
- 2 replies
- 1.5k views
-
-
While US's “War on Terror” after the events of 9/11 has been criticized by leading US foreign policy advocates as having a "pernicious impact on American democracy, on America’s psyche and on U.S. standing in the world," autocratic leaders of some faltering states of the third world, including Sri Lanka, have been making concerted efforts to capitalize on this Bush doctrine by defining legitimate local nationalist struggles as phenomena of terrorism. Critics have pointed out that the "War on Terror," doctrine advanced by the Straussian neoconservatives of Bush's inner circle of advisors, has aligned the United States with governments around the world engaged in supp…
-
- 0 replies
- 1.1k views
-
-
கம்பன் விழா தேவையா? நாளை கொழும்புக் கம்பன் விழா ஆரம்பமாவதாக பத்திரிகைகளில் படித்திருந்தேன். 90களின் நடுப்பகுதியில் கொழும்பிலுள்ள வர்த்தகர்கள் சிலரின் ஆதரவில் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த கம்பன் குழுவினர் இன்று கொழும்பில் தமக்கு சொந்தமான கட்டிடத்துடன் ஆடம்பரமாக வாழ்கின்றனர். தமிழ் மொழிக்கு கம்பன் ஆற்றிய சேவையை யாரும் மறுக்கபோவதில்லை ஆணால் கம்பன் தமிழனான இராவணனை அரக்கனாகவும் ஆரியனான இராமனை கடவுள் அவதாரமாகவும் பாடிய ஒருவர். ஒரு திருவள்ளுவருக்கோ தொல்காப்பியருக்கோ விழா எடுத்தால் அது தமிழர் விழா. ஆரியனைப் பாடிய கம்பனுக்கு விழா தேவையா? முன்னைய வருடங்களில் கம்பன் விழா கவியரங்கத்தில் மட்டும் தமிழ்த் தேசியத்தைப் பற்றி இலைமறைகாயாக ஒரு சிலர் கவிதை பாடுவார்கள். மற்…
-
- 12 replies
- 3.8k views
-
-
'தமிழீழ மக்களின் அழிவுக்குச் சம்பந்தப்பட்ட மேற்குலகமே காரணம்!' -சபேசன் (அவுஸ்திரேலியா)- அண்மைக்காலமாகச் சில மேற்குலக நாடுகள், சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களுக்குக் கண்டனங்களைத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளதோடு, பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு உதவும் பொருட்டு, நிதி உதவிகளையும் வழங்க ஆரம்பித்துள்ளன. அவுஸ்திரேலிய அரசு, இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் சுயசேவைகள் மற்றும் அவசர மனிதாபிமான சேவைகள் போன்றவற்றிற்காக 5.25 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. இதேபோல் பிரித்தானிய அரசும், இடம் பெயர்ந்து வாழுகின்ற மக்களுக்கு உதவும் பொருட்டு, ஒரு மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்ஸை வழங்க உள்ளது. வழமைபோல், இந்த நாடுகள் இலங்கைத்தீவில் அதிகரித்து வருகின்ற வன்முறைகள், மனித உரிமை மீறல…
-
- 1 reply
- 1k views
-
-
மணியின் செல்போன் சிணுங்கியது, போன் வாங்கிய புதிதில் எடுத்த அண்ணாச்சியின் புகைப்படத்தோடு. "அண்ணாச்சி. சொல்லுங்க." மணி கேட்டான். "மணி எப்டி இருக்க. ஆளே காணலியே." "அப்டியெல்லாம் இல்லண்ணாச்சி. வீட்ல கொஞ்சம் வேல." "சரி அப்பம் வேலையப் பாரு." "இல்ல இப்ப சும்மாத்தான் இருக்கேன் சொல்லுங்க." "சும்மாத்தான் துக்கம் விசாரிக்கலாம்ணு.." "என்ன துக்கம் இப்ப?" "இல்ல.. படத்த ரிலீஸ் பண்ணமாட்டேங்குறாங்களே." "குசும்புதானே." மணி சிரித்தான். "ஜூன் 15 ஆவது வருமா?" "இப்ப அப்டிதான் செய்தி. இன்னும் இழுபறிதான். அதுக்குள்ளார தியேட்டர்காரங்ககூட ஒப்பந்தம் ஆச்சுண்ணா வந்துரும். மொத்தத்துல எரியிற வீட்ல புடுங்கறதுக்கு ஆளு நெறைய இருக்குது." "கோடிக்கண…
-
- 1 reply
- 1.2k views
-