நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4194 topics in this forum
-
கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தின் கதையும் நிலையும் May 11, 2025 — கருணாகரன் — கிளிநொச்சி நகரப் பேருந்து நிலையத்தின் அவலம் (சோதனைக் காலம்) இன்னும் முடியவில்லை. விக்கிரமாதித்தன் – வேதாளம் கதையைப்போல, தீர்வு காணவே முடியாத தொடர்கதையாக உள்ளது. காலத்துக்குக் காலம் அதிகாரத்தில் இருக்கும் தரப்பினர் அவரவர் நலனை முதன்மைப்படுத்தி, தம்பாட்டுக்கு எழுந்தமானமாக எடுத்த – எடுக்கின்ற – எடுத்து வருகின்ற தீர்மானங்களால்தான் இந்த அவலம் தொடருது. யாராவது ஒருவர் அல்லது ஒரு தரப்பினர் சரியான தீர்மானத்தை எடுத்திருந்தால் இந்த அவலமும் வீண் செலவீனமும் ஏற்பட்டிருக்காது. மக்களும் சிரமப்பட வேண்டிய நிலை வந்திருக்காது. பேருந்து நிலையமும் உருப்படியாக ஒரு இடத்தில் சரியாக அமைந்திருக்கும். கிளிநொச்சிப் பே…
-
- 1 reply
- 295 views
-
-
‘சாட்சிகளை அழிக்கும்’ படுகொலைகள் இடம்பெறுகின்றனவா? முருகானந்தம் தவம் இலங்கையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சிபீடம் ஏறியது முதல், நாட்டில் அதிகரித்துள்ள துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களையும் அதில் கொல்லப்பட்டவர்களையும் வெறுமனே பாதாள உலகக் குழுக்களுடனும் போதைவஸ்து வர்த்தகத்துடனும் மட்டும் தொடர்புபடுத்தி கடந்து போக அரசு முயற்சிப்பதாகவே தெரிகின்றது. ஆனால், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் படுகொலைகளும் இவற்றுக்கு அப்பால் அரசியல் மற்றும் சாட்சியங்கள் அழிப்புகளுடன் தொடர்புபட்டுள்ளமையாகவே கருதப்பட வேண்டியுள்ளது. 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இன்று வரையான நான்கு மாத காலப்பகுதியில் 40க்கு மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இலங்…
-
- 0 replies
- 159 views
-
-
பிள்ளையான் பிரதேசவாதத்திற்குள் மறைந்திருந்த மனித குல எதிரி புலிகளியக்கத்தில் சிறுவயதில் இணைந்ததாகவும், தனது தகப்பனார் ஆற்றங்கரையில் மட்டி சேகரித்தே தம்மை வளர்த்ததாகவும், இளமையில் வறுமையிலேயே வளர்ந்துவந்ததாகவும் தன்னை ஒரு சாதாரண எளிமையான மனிதராகக் காட்டிவந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் இயற்பெயர் கொண்ட, மனிதகுலத்திற்கெதிரான இந்த நச்சுப் பாம்பு சேகரித்து வைத்திருக்கும் சொத்துக்களின் பெறுமதி 588 கோடி ரூபாய்கள்! சமூகத்தில் ஓரளவிற்கு வசதிபடைத்தவர்கள் மீதும், வடபகுதியைச் சேர்ந்தவர்கள் மீதும் இவனுக்கிருந்த இயல்பான வெறுப்பும், பகையுணர்வும் கருணா எனும் இனத்துரோகியின் பின்னால் இவன் சிங்களப் பேரினவாதத்தின் முகாமினுள் அடைக்கலம் ஆகியபோது அடக்கமுடியாமல் பீறிட்ட…
-
-
- 29 replies
- 1.7k views
-
-
ஜேஆர், சந்திரிகா, மகிந்த, கோட்டா, ரணில் ஆகியோரில் இருந்து அநுர எந்த வகையில் வேறுபடுகிறார்? April 22, 2025 11:21 am அரசற்ற இனம் ஒன்று தமது ”அரசியல் விடுதலை” நோக்கிச் செல்வதை – பேசுவதை, இனவாதம் என்று ”அரசு” என்ற கட்டமைப்பு உள்ள இனம் ஒன்றின் தலைவர் கூற முடியாது. குறிப்பாக அந்த அரசின் ஜனாதிபதி, தேர்தல் மேடைகளில் அவ்வாறு கூற முடியாது. இனிமேல் இனவாத அரசியலுக்கு இடமில்லை என்கிறார் அநுர. ஆனால் ஒரு அரசுக்குரிய நிதி – நீதி- நிர்வாகம் மற்றும் முப்படைகள் அனைத்தையும் பயன்படுத்தி 2009 மே மாதத்திற்கு பின்னரான சூழலில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைகள் எத்தனை? 2015 இல் மைத்திரி – ரணில் நல்லாட்சி என்று வர்ணிக்கப்பட்ட அரசாங்கம், தமிழ் வரலாற்று பாட நூல்களில் …
-
- 0 replies
- 304 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஆறு ஆண்டுகளும் நீதிக்கான முடிவுறா தேடலும்! உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் நடந்து இன்றுடன் (21) ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2019 ஏப்ரல் 21 அன்று, ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 8:45 மணியளவில் இலங்கையின் அமைந்துள்ள மூன்று பிரதான கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு ஹோட்டல்களை குறிவைத்து ஒரு இஸ்லாமிய பயங்கரவாதக் குழு தொடர் தற்கொலை குண்டுவெடிப்புகளை நடத்தியது. ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுவெடிப்புகளில் குறைந்தது 269 பேர் உயிழந்தனர், 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது நாட்டின் போருக்குப் பிந்தைய மிகவும் பயங்கர சம்பவமாக கருதப்பட்டதுடன், நாட்டின் தேசிய பாதுகாப்பு மீதான நீண்ட சந்தேகத்தை எழுப்பியது. ஆறு வருடங்களுக்குப் பின்னர், அந்த …
-
- 0 replies
- 156 views
-
-
அமெரிக்க வரியும் இந்திய – இலங்கை வர்த்தகமும் April 4, 2025 11:20 am இலங்கை உட்பட பல நாடுகள் மீது அமெரிக்கா விதித்திருக்கும் வரி உலக வர்த்தக போருக்கு காரண – காரியமாக அமையும் என்று பரவலாகக் கூறப்பட்டாலும், ஐரோப்பிய நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளின் வர்த்தகப் பலவீனங்களையே இந்த வரி எடுத்துக் காண்பிக்கிறது. ஜனபதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள் இந்த வரி தெற்காசியாவை மையப்படுத்திய பிறிக்ஸ் பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் என கூறப்பட்டாலும், இந்திய – சீன முரண்பாடுகள் அதற்குச் சாத்தியமானதாக அமையக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. இதனாலேயே பிறிக்ஸ் நாடுகளுக்கிடையிலான பொது நாணயத்தை உருவாக்குவது பற்றிய பேச்சுகள் வெற்றிபெறவில்லை. ஐரோப்பிய நாடுகள் வளர்ச்சியடைந்தவை. அத்துடன…
-
- 3 replies
- 351 views
-
-
கைபேசிச் சாட்சி – நிலாந்தன்! முல்லைத்தீவு, சின்னசாளம்பன் கிராமத்தில் ஓர் ஆண் ஒரு பெண்ணைக் கதறக் கதற அடிக்கிறார்.அதை ஒருவர் கைபேசியில் படம் பிடிக்கிறார்.அக்காட்சி சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது.விளைவாக போலீசார் அந்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.சமூகவலைத்தளங்கள் எந்தளவுக்கு இது போன்ற விடயங்களில் வினைத்திறனோடு செயல்பட முடியும் என்பதற்குத் தமிழ்ச் சமூகத்தில் இது ஆகப் பிந்திய எடுத்துக்காட்டு.இதுபோன்று சிறுவர்களைத் தாக்கும் காட்சிகள்,முதியவர்களைத் தாக்கும் காட்சிகள் இடைக்கிடை சமூகவலைத்தளங்களில் யாராலாவது பகிரப்படும். பெரும்பாலும் அவற்றுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது ஒரு நல்ல போக்கு.அதே சமயம் இந்த போக்குக்கு பின்னால் உள்ள உளவியலைய…
-
- 0 replies
- 182 views
-
-
திரு த. சபாரட்ணம் அவர்கள் 2003 மார்கழி 1 ஆம் திகதியிலிருந்து 2004 ஆம் ஆண்டு புரட்டாதி 8 வரையான காலப்பகுதியில் கொழும்பில் இடம்பெற்று வந்த அரசியல் நிகழ்வுகள், பேச்சுவார்த்தையின் போக்கு மற்றும் எதிர்க்கட்சிகளில் சதிகள் குறித்து வாராந்தம் எழுதிவந்த செய்திகளின் தொகுப்பு இத்தொடரில் இடம்பெறவிருக்கிறது. இத்தொடரின் ஆங்கில மூலத்தை வாசிக்க கீழுள்ள இணைப்பை அழுத்திக்கொள்ளலாம். https://sangam.org/topics/sabaratnam/page/9/
-
-
- 15 replies
- 533 views
- 1 follower
-
-
கிழக்கில் பிரதேசவாத அரசியல் இனியும் எடுபடாது-பா.அரியநேத்திரன் April 1, 2025 உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் வழமையான தேர்தல் கூட்டுக்கள் வடக்கு கிழக்கில் இடம்பெற்றுள்ளன. வடக்கில் தமிழ்தேசிய கட்சிகள் சில ஒன்றிணையும் கூட்டுக்கள் ஒருபுறமும், கிழக்கில் தமிழ்தேசியத்திற்கு எதிரான பிரதேச வாதத்தை முன்னிலைப்படுத்தும் கூட்டு மறுபுறமும் இப் போது பேசும் பொருளாக உள்ளது. ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் புதிய கூட்டமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினரும் ப…
-
- 0 replies
- 215 views
-
-
யூடியூப்பர்களும் தமிழ்ச் சமூகமும் – நிலாந்தன். கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த யூத எழுத்தாளர் ஆகிய ஆர்தர் கோஸ்லரிடம் எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்தைக் கூறுங்கள் என்று கேட்ட பொழுது, அவர் சொன்னார், மந்தர்களே-mediocres- எல்லா இடங்களிலும் முதன்மை வகிப்பார்கள் என்று. அவர் எதைக்கருதி அவ்வாறு சொன்னார் என்பது தெளிவில்லை. ஆனால் இப்போதுள்ள சமூக வலைத்தள ஊடகச் சூழலை வைத்துப் பார்க்கும் பொழுது அது ஒரு தீர்க்கதரிசனமோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது. சமூக வலைத்தளங்களின் பயன்பாடு என்பது இரண்டு புறமும் கூரான கத்தி போன்றது. ஒருபுறம் சமூக வலைத்தளங்கள் சாதாரண மக்களைப் பொறுத்தவரையில்அதிகம் ஜனநாயகமானவை. பாரம்பரிய ஊடகங்களுக்கு இருக்கக்கூடிய கட்டுப்பாடுகள் எவயுமின்றி யாரும் விரும்பியதைக் கூறலாம்…
-
- 0 replies
- 160 views
-
-
பாராளுமன்றில் கடற்றொழில் தொடர்பான விவாதங்கள் சூடாக நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு – கிழக்கு மீனவர்கள், குறிப்பாக வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கி வருகின்ற நெருக்கடிகள் தொடர்பான விடயங்களை தரவுகள், தகவல்களை ஆதாரமாகக் கொண்டு அரசினை மிக கடுமையாக சாடி திணறடித்துள்ளார். முக்கியமாக இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு மற்றும் கொக்கிளாய், நாயாற்றில் தென்பகுதி மீனவர்களின் ஆக்கிரமிப்பு தொடர்பாக கடுமையான சீற்றத்தை வெளிப்படுத்தியிருப்பதுடன், படை அதிகாரிகளின் துணையுடன் தமிழரின் பாரம்பரிய பகுதிகளான கொக்கிளாய், நாயாற்றுப்பகுதி முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு நிரந்தர சிங்கள மீன்பிடிக் குடியிருப்புகளாக ஆக்கப்படுவதை எதிர்த்தும் குரல் எழுப்பியிருக்கி…
-
- 0 replies
- 182 views
-
-
கூறியது ஏன்? பட மூலாதாரம்,DHILEEPAN RAMAKRISHNAN கட்டுரை தகவல் எழுதியவர்,நந்தினி வெள்ளைச்சாமி பதவி,பிபிசி தமிழ் 13 மார்ச் 2025 பெரியார் மீது அவருடைய எதிர்ப்பாளர்களால் தொடர்ந்து முன்வைக்கப்படும் ஒரு விமர்சனம், அவர் தமிழை 'காட்டுமிராண்டி மொழி' எனக் கூறினார் என்பதுதான். நாடாளுமன்ற மக்களவையில் மார்ச் 11ஆம் தேதியன்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரியாரின் பெயரைக் குறிப்பிடாமல், "தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் படத்தை ஒவ்வொரு அறையிலும் (திமுகவினர்) வைத்திருக்கின்றனர். அவருக்கு மாலை அணிவித்து வணங்குகின்றனர், திராவிட இயக்கத்தின் அடையாளம் என்கின்றனர். ஆனால், அவர் தமிழை 'காட்டுமிராண்டி மொழி' எனக் கூறியுள்ளார்" எனப் பேசினார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கி…
-
- 0 replies
- 335 views
-
-
யாழ்ப்பாணமே உனது பசி எது? தாகம் எது? அண்மையில் பலாலி வீதியில் பல்கலைக்கழகத்தில் இருந்து நடந்து போகக்கூடிய தூரத்தில் ஓர் உயர்தர உணவகம் திறக்கப்பட்டதுஅதன் பெயர் “டெலிஸ்” .அதற்குச் சில கிழமைகளுக்கு முன்பு அதே பலாலி வீதியில் மற்றொரு உயர்தர உணவகம்-காலித் பிரியாணி-திறக்கப்பட்டது.முன்சொன்ன உணவகத்தில் இருந்து நடந்து போகக்கூடிய தூரத்தில் இந்த உணவகம் உண்டு. இந்த இரண்டு உணவகங்களும் திறக்கப்படுவதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் யாழ்ப்பாணம் நகரத்தின் மையத்தில் முன்பு வெலிங்டன் தியேட்டர் அமைந்திருந்த வளவிற்குள் ‘கீல்ஸ்’ பேரங்காடி திறக்கப்பட்டது.திறக்கப்பட்ட நாளிலிருந்து இரவும்பகலும் நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு குவிகிறார்கள். ஏற்கனவே யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் இருந்து நடந்து போகக்கூடிய தூர…
-
-
- 3 replies
- 359 views
-
-
“சீமானின் மொழியாடல் சாமானியர்களின் ‘கவனம்’ ஈர்ப்பது ஏன்?” எனும் கேள்வி, தமிழக அரசியல் களத்தில் முன்னெப்போதையும் விடத் தற்போது அதிகமாகவே கேட்கப்படுகிறது. இதுவரை அரசியல் தலைவர்கள் யாரும் கையாளாத, சாமானியர்களுக்கு நெருக்கமான பேச்சு மொழியைச் சீமான் கைக்கொண்டதே காரணம் என்பதை, அவரது மேடைப் பேச்சுகளைத் தொடர்ந்து அவதானிக்கும் எவரும் உணரமுடியும். வெகுமக்களுக்கான நல அரசியலிலிருந்து புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலைச் சாமானியர்கள் அரசியல் பேசுவதையே தவிர்த்து, அது அறிஞர்களுக்கானது, பேரறிஞர்களுக்கானது என்று, கிட்டத்தட்ட வாக்கு செலுத்துவதைத் தவிர அரசியல் விருப்பற்று ஒதுக்கிய வாழப் பழகினர். தங்களையொத்த குரலற்றவர்கள், உரிமை மறுக்கப்பட்டவர்கள் துன்புறுவது க…
-
-
- 15 replies
- 901 views
- 1 follower
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிதெடுத்தல் நிகழ்வு! நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிதெடுத்தல் (அறுவடை) நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றதுள்ளது தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் ‘புதிர் தினம்’ எனும் இந்த பாரம்பரிய நிகழ்வில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்துக்கு சொந்தமான மறவன்புலவில் உள்ள வயலுக்குச் செல்வார்கள். அந்த வயலில் பூஜை வழிபாட்டுடன் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது தயாரித்து நல்லூர் கந்தசுவாமிக்கு படையல் வைத்து பூசைகள் செய்வது வழக்கம். அவ்வாறே இம்முறையும் இடம்பெற்ற படையல் பூஜைகளை தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்கப்பட்டது. இவ்வழிபாட்டு முறை நல்லூர் கந்தசுவாமி கோயிலின்…
-
-
- 2 replies
- 275 views
-
-
-
அண்மையில் தம்பி இராமையா ஒரு பேட்டியில் கூறி இருந்தார், 27/02/2010 அன்று நடந்த பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்ற கருணாநிதிக்கான பாராட்டு விழாவில், கருணாநிதியை ஆகோ, ஓகோ, வாழும் பெரியார் என புகழும் இந்த மேடை நாடகத்தை எழுதியவர் சீமான் என்று. முள்ளிவாய்க்கால் நடந்து கிட்டதட்ட ஓராண்டுக்கு பின் சீமான் கருணாநிதியை, அண்ணாவை, பெரியாரை எப்படி பாராட்டியுள்ளார் என பார்க்கவும். இதே சீமான் சொல்கிறார்ர் - 2008 முதல்தான் திராவிட எதிர்ப்பாம்.
-
- 2 replies
- 292 views
-
-
தோற்றவர்களின் ஜெய பேரிகை! சுமந்திரன் - சத்தியலிங்கம் Vhg ஜனவரி 27, 2025 -மட்டுநேசன் ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சிக்குள் நடக்கும் விடயங்கள் தலையைச் சுற்றும் விதமாக உள்ளன. தற்போதைய பதில் தலைவர் அல்லது எஞ்சிய காலத்துக்கான தலைவராகப் பொறுப்பேற்றுள்ள திரு. சீ. வீ. கே. சிவஞானம் அவர்கள் கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுமந்திரனே என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சுமந்திரனின் கூற்றுக்களை ஜனாதிபதித் தேர்தலின் பின் ஒவ்வொன்றாக ஆராய்வோம். முதலாவது அரியநேத்திரன் தொடர்பானது. இவர் யாழ். - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் 116,688 வாக்குகளைப் பெற்றார். இவரை மக்கள் நிராகரித்து விட்டனர் என்று எள்ளிநகையாடினார் சுமந்திரன். தொடர்ந்து நடைப…
-
- 0 replies
- 392 views
-
-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினையை பேச தயங்கியதாக யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் உப தலைவர் ரட்ணகுமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள சம்மேளனத்தின் அலுவலகத்தில் இன்றையதினம்(13.01.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்களது மக்களின் வளங்களை அழித்தவர்கள்தான் முதலமைச்சர் ஸ்டாலினின் மக்கள். அவருடன் புகைப்படம் எடுக்க துணிந்த நீங்கள், அவரது காதிலாவது ஒரு தடவை இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை சொல்லியிருக்கலாமே. சிலவேளை இது குறித்து ஸ்…
-
-
- 47 replies
- 2.5k views
-
-
ஈழத் தமிழர் விடயத்தில் தலையிட வேண்டிய கட்டாயம் தற்போது இந்தியாவுக்கு இல்லை ந.லெப்ரின்ராஜ் ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா தலையிட வேண்டிய கட்டாயம் தற்போது இந்தியாவுக்கு இல்லை என்பதைப் புரிந்து கொள்வது அவசியமாகும். இந்தியா இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் காட்டும் அக்கறை படிப்படியாக குறைவடைவதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. தமிழ் நாட்டில் கூட ஈழத் தமிழர்கள் தொடர்பான அக்கறை பூச்சியத்தை அண்மித்ததாகவே உள்ளது என தெரிவித்த இணைந்த வடக்கு – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள், இலங்கையின் அரச முடிவுகளிலும் நடைமுறைகளிலும் சிங்கள- பௌத்த பேரினவாத சக்திகளின் ஆதிக்கம் இன்னமும் குறைவடையாத நிலையில், அவற்றை மீறி மக்கள் விடுதலை முன்னணியினர் சிங்கள – பௌத்த பேர…
-
- 1 reply
- 259 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்) நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இஸ்ரேல் இனத்தவர்களின் மதஸ்தலங்கள் அல்லது அவர்களின் கலாசார நிலையங்களுக்கு பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வாங்கி அவை நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை 24 மணி நேரம் பாதுகாப்பு வழங்கி அமைக்கப்படும் இந்த கட்டிடங்கள் என்ன? என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்வி நேரத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், எமது நாட்டில் தெரிவுசெய்யப்பட்ட சி…
-
- 4 replies
- 236 views
-
-
ஜனாதிபதி அநுரவின் சீன விஜயம் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது? January 5, 2025 2:54 pm எதிர்வரும் 12ஆம் திகதி சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயம் இராஜதந்திர நடவடிக்கைக்கு அப்பாற்பட்டது என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தியாவை விஞ்சும் முயற்சியாக சீனா இலங்கைக்கு மேலும் கடன் நிவாரணம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை வழங்கக்கூடும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் ஊகிக்கின்றன. பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் சீனா பல ஆண்டுகளாக இலங்கையின் மிகப்பெரிய முதலீட்டாளராக இருந்து வருகிறது, ஹம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக…
-
-
- 4 replies
- 272 views
-
-
எமது மண் நாளை ஒரு சுதந்திர பூமியாக மாறும் - தேசியத் தலைவர் 28.12.1995 அன்று வெளியிட்ட அறிக்கை. பதிவேற்றுனர்: திரு வேந்தனார் திகதி: 28 Dec, 2024 தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் 28.12.1995 அன்று வெளியிட்ட அறிக்கையை காலத்தின் தேவை கருதி இன்று மீள் வெளியீடு செய்கின்றோம் .! இன்று இரத்தம் வழிந்தோடும் எமது மண் நாளை ஒரு சுதந்திர பூமியாக மாறும்.! வரலாற்று ரீதியாக ஈழத்தமிழினம் ஒரு அப்பட்டமானஇன அழிப்பை எதிர்நோக்கி நிற்கின்றது. தமிழரின் தேசிய அடையாளத்தைச் சிதைத்துவிடும் நோக்கில் மிகவும் நுட்பமாகத் திட்டமிடப்பட்டு இந்த இன அ…
-
-
- 2 replies
- 278 views
-
-
யாழ்ப்பாணத்தை உலுக்கும் எலிக் காய்ச்சல் – மயூரப்பிரியன் : adminDecember 22, 2024 யாழ்ப்பாணத்தில் கடந்த இரு வார கால பகுதியாக எலிக் காய்ச்சலால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருவதால் , மக்கள் மத்தியில் ஒரு வித பய உணர்வு ஏற்பட்டுள்ளதுடன், சுகாதார பிரிவினர்கள் அவற்றினை தடுப்பதிலும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். அண்மைய சில நாட்களில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவர்களில் இது வரையிலான தரவுகளின் அடிப்படையில் 08 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 121 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் உயிரிழந்தவர்களில் ஒருவர் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர். ஏனைய ஏழு பேரும் யாழ்ப்பாணத்த…
-
- 0 replies
- 222 views
-
-
பவளவிழா காணும் தமிழரசுக்கட்சியும்! பரிதாபமான தமிழ்த்தேசிய அரசியலும்! – பா.அரியநேத்திரன் December 17, 2024 இந்தவாரம் எதிர்வரும் 2024, டிசம்பர்,18,ல் தந்தை செல்வா உருவாக்கிய இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி பவள விழா காண்கிறது. 1944, ஆகஷ்ட் 29ல் ஜீ ஜீ பொன்னம்பலத்தால் ஆரம்பிக்கப்பட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியில் கருத்து வேறுபாடு காரணமாக விலகிய முக்கிய தலைவர்களான தந்தை செல்வா, வன்னிய சிங்கம், நாகநாதன் ஆகியோர் 1949 டிசம்பர் 18 ம் திகதி கொழும்பு மருதாணையில் கூடி பேசி “இலங்கத்தமிழ் அரசுக் கட்சியை” ஆரம்பித்தனர் அதன் ஸ்தாபக தலைவராக தந்தை செல்வா நியமிக் கப்பட்டார். அன்று உருவாக்கிய இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் 75வது பவளவிழாவில் கால் பதிக்கிறது. அகில இலங்கை தமி…
-
- 0 replies
- 124 views
-