நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை… May 22, 2019 கடந்த ஈஸ்டர் ஞாயிறன்று இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள தேவாலயங்கள் மற்றும் உல்லாசவிடுதிகள் உட்பட ஒன்பது இடங்களில் இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதல்களால் 290இற்கு அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.இத் தாக்குதல்கள் நாட்டின் சகல மக்களையும் ஆழ்ந்த கவலைக்குள்ளாக்கியுள்ளதுடன் மக்கள் மத்தியில் அச்சத்தையும் நம்பிக்கையின்மையையும் உருவாக்கியுள்ளது. சமதைபெண்ணிலைவாத குழுவினரான நாம் உயிரிழந்த அனைவருக்குக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எமது ஆதரவையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து நாட்டில் நி…
-
- 0 replies
- 901 views
-
-
ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட தினம் இன்று. ராஜீவ் கொலை வழக்கு கடந்து வந்த பாதை தொடர்பாக பிபிசி தமிழில் முன்பே பகிரப்பட்ட கட்டுரையை மீண்டும் பகிர்கிறோம். 1991 மே 21: சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். 1991 ஜூன் 11: பேரறிவாளன் கைதுசெய்யப்பட்டார். 1991 ஜூன் 14: நளினி கைதுசெய்யப்பட்டார். ஸ்ரீகரன் என்ற முருகனும் கைதானார். 1991 ஜூலை 22: சுதேந்திரர…
-
- 0 replies
- 659 views
-
-
படத்தின் காப்புரிமை CARL COURT இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் (மே 21) ஒரு மாதம் நிறைவு பெறுகிறது. 2009ஆம் ஆண்டு நிறைவடைந்த உள்நாட்டு யுத்தத்தின் பின்னர், இலங்கையில் நடத்தப்பட்ட பாரிய தாக்குதல் இதுவாக அமைந்திருந்தது. மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், மூன்று நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சுமார் 257 பேர் உயிரிழந்ததுடன், 500க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர். ஏப்ரல் மாதம் 21ஆம் தேதியன்று காலை 8.45க்கு கொழும்பு கொச்சிகடை தேவாலயத்தை இலக்கு வைத்து முதலாவது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத…
-
- 0 replies
- 488 views
-
-
சிறிசேன சீனாவிற்கு ஏன் அவசர விஜயத்தை மேற்கொண்டார்..? சண்டே டைம்ஸ் "யானைகள் மோதலில் ஈடுபடும்போது அதன் அடியில் சிக்கி இறப்பது எறும்புகளே என்பது ஆபிரிக்க பழமொழி." பலம் வாய்ந்த நாடுகள் ஆதிக்கத்திற்காக மோதிக்கொள்ளும்போது சிறிய நாடுகள் எப்படி பலவீனமானதாக விளங்குகின்றன என்பதை இந்த பழமொழி தெரிவிக்கின்றது. இலங்கையின் இன்றைய நிலையும் இதுதான். பலம வாய்ந்த நாடுகளின் அதிகாரபோட்டியில் மற்றொரு அத்தியாயத்தை சேர்த்துவிட்டு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வியாழக்கிழமை நாடு திரும்பினார். அவரது ஊடக பிரிவு சீனாவுடன் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் மூன்று உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன என தெரிவித்தது. சிறிசேனவின் பயணத்திற்கான காரணங்களும் இடம்பெற்ற…
-
- 4 replies
- 859 views
- 1 follower
-
-
பொருளாதாரத்தை அடியோடு இல்லாதொழிக்கவே தாக்குதல் ; அரச பயங்கரவாதம் தலைதூக்குமோ என அச்சம் - பாதிக்கப்பட்டவர்கள் அங்கலாய்ப்பு ( களத்திலிருந்து எம்.டி. லூசியஸ், வீ.பிரியதர்சன் ) இரத்தக்கறை படிந்த மரண வேதனைகள் நிறைந்த அந்த '21 ஆம் திகதி" இன்னும் நினைவில் இருந்து நீங்கவில்லை. பயங்கரவாதிகளின் மிலேச்சத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் புதையுண்ட இடங்களில் இன்னும் புற்கள் கூட முளைக்கவில்லை. அதற்குள் இனவாதம், மதவாதம், துவேஷம், வன்முறைகள் என நாடே அதாளபாதாளத்துக்குள் சென்றுக்கொண்டிருக்கின்றது. உயிர்த்த யேசுவின் பெருநாள் அன்று பல அப்பாவிகள் கொல்லப்பட்டாலும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் ஒவ்வொரு சொல்லுக்கும் கட்டுப்பட்டு கிறிஸ்த்தவர்கள் அமைதி காத்து வந்த…
-
- 0 replies
- 396 views
-
-
மதரீதியான அடிப்படைவாத குழுக்களின் உறுப்பினர்கள், உதவி ஒத்தாசை புரிபவர்களை பாரபட்சமின்றி கைதுசெய்ய வேண்டும் - முன்னாள் இராணுவத் தளபதி மதரீதியான அடிப்படைவாத குழுக்களின் உறுப்பினர்கள், உதவி ஒத்தாசை புரிபவர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாரபட்சமின்றி கைதுசெய்ய வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு: கேள்வி:- நாட்டின் தேசிய பாதுகாப்பில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் இடம்பெற்றன என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா? பதில்:- ஆம், பாதுகாப்பு சரியாக இருந்திருந்தால் இத்தகைய தாக்குதல்…
-
- 0 replies
- 191 views
-
-
ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களை பிரதமராக்கி நாம் தவறிழைத்துவிட்டோம் - அத்துரலியே ரத்ன தேரர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கத்தின் கவனயீனமே இவ்வாறு மிலேச்சத்தனமான சம்பவம் நடைபெறுவதற்கு இடமளித்துள்ளது. அதற்கான பொறுப்பினை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களை பிரதமராக்கி நாம் தவறிழைத்து விட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார். அத்துடன் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஆளநர்களான அசாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோர் அரச அதிகாரங்களிலிருந்து நீக்கப்படவேண்டும். அவர்களை பதவிகளில் வைத்துக்கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வினை தேட முடியாதெனவும் அத்துரலிய ரத்ன தேரர் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்விய…
-
- 0 replies
- 595 views
-
-
இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தற்கொலைத் தாக்குதலின் பின் காத்தான்குடி ! நேரடி ரிப்போர்ட் - லியோ நிரோஷ தர்சன் உள்நாட்டு போர் நிறைவுகண்டு ஒரு தசாப்தத்தை சந்தித்துள்ள இலங்கை மற்றுமொரு காரிருளுக்குள் தள்ளப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு உலகவாழ் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகின்ற முக்கிய பண்டிகையாகும். அன்றைய தினத்தில் சற்றும் எதிர்பார்த்திராத வகையில் முக்கிய மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை குறிவைத்து தற்கொலை தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த தாக்குதல்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது மாத்திரமல்ல நாட்டில் மீண்டும் அச்சசூழலை உருவாக்கியது. உலகப் பயங்கரவாத அமைப்பாக கருதப்ப…
-
- 5 replies
- 1.6k views
-
-
வடமேல் முஸ்லிம் கிராமங்கள் மினுவாங்கொடை வன்முறைகளின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? 'அன்று 13 ஆம் திகதி. நோன்பு துறக்க நாம் தயாராகிக்கொண்டிருந்த நேரம். முகத்தை முழுமையாக துணிகளால் கட்டிக்கொண்டு நாலா பகங்களில் இருந்தும் ஊருக்குள் வந்த அவர்கள், முதலில் பள்ளிவாசலையும் அதனைத் தொடர்ந்து எமது வர்த்தக நிலையங்களையும், வீடுகளையும் தாக்கத்தொடங்கினர். நாம் காடுகளுக்குள் ஓடி ஒளிந்தோம். மறு நாள் அதிகாலை வேளை வரை நாம் காடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டி ஏற்பட்டது. முஸ்லிம் கிராமங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளில் உயிரிழப்பு சம்பவம் பதிவானது, பல கோடி ரூபா சொத்துக்கள் சூரையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட சம்ப…
-
- 0 replies
- 469 views
-
-
வாள்கள், கத்திகள், இரும்புக் கம்பிகளுடன் வந்தவர்கள் துரத்தித் துரத்தித் தாக்கினார்கள் (ஹெட்டிபொலவிலிருந்து எம்.எப்.எம்.பஸீர்) வன்முறையாளர்கள் வாள்கள், கூரிய கத்திகள், இரும்புக்கம்பிகளுடன் எங்களை துரத்தி துரத்தி தாக்கினர். அந்த வன்முறைக் குழுவினரில் இளைஞர்களும் பெளத்த பிக்குகளும் கூட இருந்தனர். எம்மைக் காப்பாற்றுமாறு பொலிஸாருக்கு நாம் தொலைபேசி அழைப்பெடுத்தபோதும் பல சந்தர்ப்பங்களில் அவர்கள் அழைப்புக்கு பதிலளிக்கவே இல்லை. பொலிசார் வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்துவதை விடுத்து எம்மை வீடுகளுக்குள் முடக்கினர் என வடமேல் மாகாணத்தின் முஸ்லிம் கிராமங்களில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் கேசரிக்கு தெரிவித்…
-
- 0 replies
- 243 views
-
-
இனவாத தாக்குதல் அல்ல சந்தர்ப்பவாத தாக்குதல் உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடந்த நொடியிலிருந்து நாட்டில் எழுந்த பதற்றம் இன்னும் தீர்ந்தபாடில்லை... இதற்கு மேலாக ஆங்காங்கே ஆயுதங்கள் மீட்பதும் அதிரடி கைதுகளும் மக்களை அச்சத்திலேயே வைத்திருக்கின்றன... இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சமூக வலைத்தளத்தில் ஒருவர் இட்ட பதிவால் ஆத்திரமுற்ற ஒரு தரப்பு கைகலப்பில் ஈடுபட்டது. இதன் நீட்சியாக முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின.... அதில் ஒரு பிரதேசம்தான் மினுவாங்கொடை... சற்று அதிகமாக அடிவாங்கிய இடம் என்று கூட சொல்லலாம். மக்களுக்கு சேதமில்லை. ஆனால் அந்த மக்களின் வாழ்வியலுக்குத்தான் அதிக சேதம். ஆம்... வன்மு…
-
- 0 replies
- 449 views
-
-
ரஞ்ஜன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக, புத்தளத்திலிருந்து படத்தின் காப்புரிமை Allison Joyce Image caption இலங்கையில் ஈஸ்டர்…
-
- 0 replies
- 434 views
-
-
அன்பரசன் எத்திராஜன் பிபிசி நியூஸ், இலங்கை படத்தின் காப்புரிமை ANADOLU AGENCY/GETTY IMAGES இலங்கையில் கடந்த மாதம் 250க்கு மேலானோர் கொல்லப்பட காரணமான தற்கொலை குண்டு தாக்குதல்களுக்கு பின்னால் உள்ளூ…
-
- 1 reply
- 835 views
-
-
முப்பது வருடங்களுக்கு மேல் தொடர்ந்த அத்தியாயம் ஒன்றினை அடுத்து இப்போது இரண்டாவது । । இது மேலும் தொடரும் என்பதில் ஐயமில்லை ........ அங்கின நெலம என்ன?" எல்லாம் முடிஞ்சி வா," ஆ? என்ன சொல்றிங்க" "எங்கட ஊடு, கடே, ஆட்டா எல்லாத்துக்கும் நெருப்பு வெச்சி வா, வைப் புள்ளங்க கூட ரோட்டுல நிக்கிறம் வா😭, " "யாரு வா செஞ்சாங்க, எங்க இருக்கிறிங்க இப்ப? கேபியூ போட்டுத்தானே ஈக்கி?" "எங்களுவளுக்குத்தான் கேபியூ போட்டிருக்காங்க வா, அவகளுக்கு இல்ல😭" "சரி அழாதீங்க வா, எங்க இருக்கிங்க இப்ப?" "எங்கட ஆட்டாக்கு நெருப்பு வெச்சி, ஊடு கட எல்லாம் எரிஞ்சிட்டுவா, ரெண்டு பள்ளியும் ஒடச்சி, குரான் எல்லாம் நாசம் பன்னிட்டாங்க வா, நடந்து புள்ளயல் வைப் எல்லாம் எங்கவா போவம்" …
-
- 1 reply
- 471 views
-
-
May 13, 2019 உயிர்த்த ஞாயிறான ஏப்ரல் 21ம் திகதி தாக்குதல் திட்டமானது 9 மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் தற்கொலை தாக்குதல்களை நடத்தி நாடு முழுவதும் இரத்த ஆறு ஓட வைப்பதுதான் சஹரானின் குறிக்கோளாக இருந்தது. ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் அது இயலாமல் போகிறது. சில கருத்து முரண்பாடுகளால் சஹரானின் குழு இரண்டாக உடைகிறது. அங்கிருந்தவர்களில் சிலர் சஹரானின் தலைமையை ஏற்காது இன்னொரு தலைவரை தேர்தெடுக்கிறார்கள். அடுத்த தலைவரை தேர்ந்தெடுந்தவரின் பின்னால் தற்கொலைதாரியாக இருந்த 6 -7 பேர் இருந்தார்கள். இதனால் நாடு முழுவதும் குண்டுகளை வெடிக்க வைக்க…
-
- 0 replies
- 372 views
-
-
நாட்டில் செயல்திறன் மிக்க அரசு இல்லை - விஜேதாஸ ராஜபக்ஷ நாட்டில் தற்போது செயல் திறன் மிக்க அரசாங்கம் இல்லாத நிலையில் எந்த விடயத்திலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி.விஜேதாஸ ராஜபக்ஷ வீரகேசரிக்கு வழங்கிய விசேடசெவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- தௌஹீத் ஜமாஅத் அமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 32 உறுப்பினர்கள் ஐ.எஸ் அமைப்பில் பயிற்சி பெற்று தாக்குதலுக்கு தயாராகி வருகின்றார்கள் என்ற தகவலை நீங்களே முதலில் வெளிப்படுத்தியிருந்தீர்கள் அந்த தகவல் உங்களுக்கு எவ்வாறு கிடைத்ததத…
-
- 0 replies
- 626 views
-
-
தமிழக தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் எவ்வாறான உறவுகளும் கிடையாது - சிலோன் தௌஹீத் ஜமாஅத்தின் பொதுச்செயலாளர் தமிழக தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் எத்தகைய உறவுகளும் கிடையாது. நாங்கள் ஸ்ரீலங்கா தௌஹீத் அமைப்பிலிருந்து வெளியேறுவதற்கு தமிழக தௌஹீத் ஜமாஅத் அமைப்பும் காரணமாகின்றதென சிலோன் தௌஹீத் ஜமாஅத்தின் பொதுச்செயலாளர் அப்துர் ராஸிக் தெரிவித்துள்ளார். கடந்தகால விவகாரங்களையடுத்து தமது நிலைப்பாடுகள் தொடர்பில் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியே செவ்வியிலேயே சிலோன் தௌஹீத் ஜமாஅத்தின் பொதுச்செயலாளர் அப்துர் ராஸிக் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் வழங்கிய செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- ஸ்ரீலாங்கா தௌஹீத் ஜமாஅத்திலிருந்து சிலோன் தௌஹீத் ஜமாஅத்தாக பிரிவதற்கான காரணம் என்ன? …
-
- 0 replies
- 435 views
-
-
மர்மங்கள் சூழ்ந்த மட்டக்கிளப்பு ஷரியா கேம்பஸ் பொலன்னறுவைக்கும், மட்டக்கிளப்புக்கும் இடையேயான எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது புனாணை கிராமம். ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்த பகுதியில் இரண்டு தளங்களுடன் அமைந்து வருகிறது ஷரியா பல்கலைக்கழகம். இது கிழக்கு, சர்சைக்குரிய அரசியல்வாதி ஹிஸ்புல்லாவின் கனவு முயற்சி. உயர்கல்வி அமைச்சு அனுமதி இன்றி நாம் எவ்வாறு ஷரியா சட்டம் கற்க்கை நெறிகளை பாடத்திட்டத்தில் சேர்க்கமுடியும் என்கிறார் ஹிஸ்புல்லா. ஆனாலும், அவ்வாறான அனுமதி கொடுக்கப்படவில்லை என்று சொல்கிறது உயர்கல்வி அமைச்சு. ஆயினும் அந்த அமைச்சுக்கு அனுப்பப் பட்ட விண்ணப்ப படிவத்தில் ஷரியா மற்றும் இஸ்லாமிய சட்டம் உள்ளடக்கிய 5 வகை கற்க்கை நெறிகளை கொண்டுள்ளதாக தெரிகிறது…
-
- 19 replies
- 2k views
-
-
ஐ.எஸ்.அமைப்பை இலங்கையில் தடை செய்வதில் உள்ள சவால்கள் ! ஈஸ்டர் தின தாக்குதல்களுக்குப்பிறகு ஐ.எஸ்.தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய உள்ளூர் அமைப்புகள் இரண்டை அரசாங்கம் தடை செய்திருந்தது. ஏன் ஐ.எஸ்.அமைப்பை இலங்கையில் தடை செய்ய முடியாது என்ற கேள்விக்கு எவரும் பதில் கூற வில்லை. மாறாக அது ஒரு சர்வதேச தீவிரவாத அமைப்பு என்பதால் அதை இலங்கையில் ஏன் தடை செய்ய வேண்டும் என்ற கேள்வியும் எழுந்தது. குறித்த அமைப்பில் பயிற்சி பெற்றவர்களை கைது செய்வதற்குக் கூட சட்ட ஏற்பாடுகள் இலங்கையில் இல்லை என பிரதமர் ரணில் பிரித்தானியாவின் ஸ்கை நியூஸ் தொலைகாட்சி அலைவரிசைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தமையை நாம் அறிவோம். ஏனெனில் தீவுக்கு வெளியே உள்ள ஒரு அமைப்பின் கீழ் பயிற்சி பெற்று நாட…
-
- 0 replies
- 299 views
-
-
புறக்கணிக்க வேண்டாம் ஒரு சமூகத்தை அநீதிக்குட்படுத்தும் வகையில் செயற்பட்டதன் காரணமாக கடந்த முப்பது வருடகாலமாக எமது நாடு மிகப்பெரிய யுத்தத்தை எதிர்கொண்டதுடன் அதன் முடிவில் பாரிய விலையை செலுத்தியது. முப்பது வருடகால யுத்தம் காரணமாக நாம் எதிர்கொண்ட பின்னடைவு எத்தகையது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை, துயரம் மற்றும் வடுக்களை சுமந்து வந்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் வடுக்களுடன் வாழ்கின்றார்கள். இவ்வாறான சூழலில் மீண்டும் ஒரு யுத்தத்தையோ அல்லது அதுபோன்றதொரு நிலைமையையோ எதிர்கொள்ளவேண்டிய நிலையில் இந்த நாடு இல்லை என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர்…
-
- 0 replies
- 278 views
-
-
தற்கொலை குண்டுதாரிகளாகும் தாய்மார்கள் ! இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சோதனை நடவடிக்கைகளுக்காகப் பாதுகாப்பு படையினர் கொழும்பில் உள்ள வீடொன்றுக்கு சென்றிருந்தவேளை அந்தச் சம்பவம் இடம்பெற்றது. அவ்வேளை கதவை திறந்தவர் பாத்திமா இப்ராஹிம். தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரான இலாம் இப்ராஹிமின் மனைவி- கர்ப்பிணி. பொலிஸாரைப் பார்த்ததும் அவர் வீட்டிற்குள் ஓடிவெடிகுண்டை வெடிக்க செய்தார்.அவருடன் சேர்ந்த அவரது மூன்று மகன்களும் கொல்லப்பட்டனர். இதேபோன்றதொரு சம்பவம் மார்ச் மாதம் இந்தோனேசியாவில் இடம்பெற்றது- பயங்கரவாத தடுப்பு பிரிவினர், ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளரான அபு ஹம்சாவை கைதுசெய்திரு…
-
- 1 reply
- 588 views
-
-
தற்கொலை குண்டுதாரிகளின் குடும்பத்தவர்களின் நிலை என்ன? இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற சில நாட்களிற்கு பின்னர் தற்கொலைகுண்டுதாக்குதலில் ஈடுபட்ட ஒருவரின் வீட்டிற்கு வெளியே கூடிய சிலர் தங்கள் பகுதியை கண்காணிப்பதற்கான விழிப்புக்குழுவொன்றை ஏற்படுத்தினார்கள். தற்கொலை குண்டுதாரியின் குடும்பத்தவர்கள் மேலும் தாக்குதல்களை மேற்கொள்வதை தடுப்பதே அவர்களின் நோக்கம் அந்த வீட்டிற்குள்ளிருந்தவர்கள் அச்சத்தின் பிடியில் சிக்குண்டிருந்தனர். தங்கள் குடும்பத்தவர் ஒருவர் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டதால் அவர்கள் தங்களிற்கு என்ன நடக்குமோ என்ற கவலையிலும் அச்சத்திலும் சிக்குண்டிருந்தனர். எனது சகோதரர் தற்கொலைகுண்டுதாக்குதலில் ஈடுபட்டதால் மக்களின் முகத்தை…
-
- 1 reply
- 518 views
-
-
தொடரும் அரசியல் போட்டி ; பேராபத்தை தடுத்த பேராயர் - எம்.டி.லூசியஸ் உலக கிறிஸ்த்தவர்களுக்கு உயிர்த்த ஞாயிறு என்பது சந்தோசம் நிறைந்த ஒரு பெருவிழா ஆகும். ஆனால் அன்று ஆலயங்களுக்குள் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களால் கிறிஸ்த்தவர்களே கண்ணீரில் கரைந்து போனார்கள். மனித குலம் செய்த பாவங்களுக்காக தன்னை பலியாக்கி சாவையே வெற்றி கொண்ட இறைமகன் யேசுவின் உயிர்த ஞாயிறான கடந்த 21 ஆம் திகதி, இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 250 ற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். 450 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றார்கள். சுமார் 50 தொடக்கம் 60 வரையிலான உடல்கள் அடையாளம் காணமுடியாத அவலம். இந்த தாக்குதல்க…
-
- 0 replies
- 762 views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images இலங்கையில் உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பங்கேற்றவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வட - கிழக்கில் உள்ள இஸ்லாமியர்களிடம் இம்மாதிரியான செயல்கள் எவ்விதமான எதிர்வினையை ஏற்படுத்தியிருக்கின்றன, கடும்போக்குவாத எழுச்சியை முன்கூட்டியே கண்டிக்கத் தவறிவிட்டதா இந்தச் சமூகம் என்பது குறித்து விவரிக்கும் கட்டுரைத் தொடரின் இரண்டாவது பகுதி இது. இல…
-
- 2 replies
- 1.4k views
-
-
அவலங்களைக் காட்சிப்படுத்தல்: சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்வது பற்றி... Editorial / 2019 மே 09 வியாழக்கிழமை, பி.ப. 12:22 Comments - 0 அண்மைய குண்டுவெடிப்புகளும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் இலங்கையர் ஒவ்வொருவரது மனத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நிகழ்வுகள் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீண்டுவர காலமெடுக்கும். அந்த அவலங்கள் தொடர்ந்தும் காட்சிப்படுத்தப்படுகின்றன. அவை ஒருபுறம் பிரசாரக் கருவிகளாகின்றன. இன்னொருபுறம், உணர்ச்சிகளைக் கிளறுவதற்கான வாய்ப்பாகின்றன. இலங்கை அரசியலின் கேடுகெட்ட பக்கங்கள், இப்போது இந்த அவலங்களை அறிக்கைப்படுத்துவதன் ஊடாகத் தொடர்கின்றன. கடந்த மூன்று வாரங்களில் அறிக்கையிடப்பட்ட படங்கள், காணொளிகள் பற்றி ஒருக…
-
- 0 replies
- 323 views
-