நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
கொரோனா வைரஸ் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இவ்வுலகத்தை பேரழிவுக்கு உள்ளாக்கி இருக்கின்றது. சுமார் உலகின் 175 க்கு மேற்பட்ட நாடுகளில் இதன் தாக்கம் வேகமாக பரவியுள்ளது . இன்றைய திகதி வரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இதன் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதுடன் 13 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மரணித்தும் உள்ளனர். குறிப்பாக சீனா, இத்தாலி ,ஈரான், ஸ்பைன் போன்ற நாடுகளில் இதன் தாக்கம் மிகப்பெரும் வீரியம் கொண்டுள்ளது. தினந்தோறும் பிணக் காடாய் இந்நாடுகள் காட்சியளிக்கின்றன. நாளாந்தம் நூற்றுக்கணக்கான சடலங்களை புதைக்க முடியாமல் எரித்து வருகின்றனர். உறவினர்களிடம் கூட சடலங்கள் கையளிக்கப் படாமல் …
-
- 2 replies
- 448 views
-
-
ஆர்.பி கொரோனா வைரஸ் ஓர் உயிரியல் ஆயுதமா? அது சீனாவால் உருவாக்கப்பட்டதா? அல்லது சீனாவில் உருவானதா? இன்றேல் வுஹான் ஆய்வு கூடத்திலிருந்தும் தப்பிய வைரஸால் கொரோனா உருவானதா? என பல்வேறு கோணங்களில் கேள்விகளும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ள நிலையில், இதன் உண்மைத் தன்மை குறித்து சர்வதேச தொலைக்காட்சி சேவை ஒன்று ஆய்வொன்றை மேற்கொண்டது. அதில் கூறப்பட்ட கருத்துக்கள் வருமாறு: பிரித்தானிய பத்திரிகையான டெய்லி மெயில் பத்திரிகையே கொரேனா வைரஸ் ஆய்வு கூடமொன்றிலிருந்து வெளியானதாக தகவலொன்றை முதலில் வெளியிட்டது. அதில் சீனா வுஹானில் சார்ஸ் மற்றும் இபோலா மற்றும் கொடிய வைரஸூகள் தொடர்பில் ஆராய ஆய்வு கூடமொன்றை நிறுவியது. இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு அதிலிருந்தும் தப்பிய வைரஸ் இதற்கான முக்கிய …
-
- 0 replies
- 429 views
-
-
கொரோனா வைரஸ் கதையாடல்-1: இன்னொரு பெருந்தொற்றைத் தவிர்க்க இயலுமா? -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையிலான ஊசலாட்டத்தின் நடுவே, மனிதகுலம் முக்கியமான புள்ளியொன்றில் நிற்கின்றது. ஒருபுறம், கொவிட்-19 நோய்த் தொற்றுத் தொடங்கி, ஓராண்டாகி விட்டது. மறுபுறம், இந்தப் பெருந்தொற்றுக்கான தடுப்பு மருந்து, பரிசோதனைகளின் பின்னர், பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, இந்தப் பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பணியை, தடுப்பு மருந்தின் மீது போட்டுவிட்டு, உலகம் அப்பால் நகர்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. உலக நாடுகளின் தலைவர்கள், அமைப்புகள் அந்தத் தொனியிலேயே பேசிப் பரிகசித்துவிட்டு, அப்பால் நகர்வது நடக்க…
-
- 4 replies
- 670 views
-
-
இந்தியாவில் கொரோனா தொற்று குறித்து பல விழிப்புணர்வு செய்திகள் பிரசாரம் செய்யப்பட்டு வந்தாலும், ஒரு பக்கம் பல தவறான செய்திகளும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதில் சிலவற்றை பிபிசியின் உண்மை பரிசோதிக்கும் குழு சரி பார்த்தது. கோமியம் மற்றும் சாணம் இந்தியாவில் பலகாலமாக கோமியம் மற்றும் மாட்டுச்சாணம் பல்வேறு நோய்களுக்கு தீர்வாக பேசி வருகிறார்கள். ஆளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எம்.பியான சுமன் ஹரிபிரியா மாட்டுச் சாணத்தை கொரோனா வைரஸ் தொற்றுக்கான ம…
-
- 0 replies
- 301 views
-
-
செய்திக்குழு பிபிசி மானிட்டரிங் படத்தின் காப்புரிமை Getty Images கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். 4500 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனா தவிர வேறு எந்த நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவுகிறது என்பது குறித்தும், இந்த வைரஸ் பாதிப்பின் காரணம் வௌவால் இறைச்சி உள்ள சூப்தான் என்று கூறும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இவ்வாறான காணொளிகள் எங்கிருந்து பகிரப்பட்டது, ஏன் பரவுகிறது என்பது குறித்து பிபிசி மானிடரிங் குழு ஆராய்ந்தது. வௌவால் சூப் காணொளிகள் கொரோனா வைரஸ் உருவானதன் காரணம் குறித்து ஆரம்பத்தில்…
-
- 0 replies
- 863 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழக்கும் வாய்ப்பு 0.5% - 1% இருப்பதாக பிரிட்டன் அரசாங்கத்தின் அறிவியல் ஆலோசகர்கள் நம்புகின்றனர். கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டவர்களின் பொதுவான இறப்பு விகிதத்தை விட இது குறைவாக உள்ளது. உலகளவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களின் இறப்பு விகிதம் 4 சதவீதமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தரவுகள் கூறுகின்றன. பிரிட்டனில் மார்ச் 23ஆம் தேதிவரை இறப்பு விகிதம் 5 சதவீதமாக இருந்தது. ஏனெனில், அனைத்து தொற்றுகளும் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்படுவதில்லை. யார் யாருக்கெல்லாம் பரிசோதனை செய்யவேண்டும் என்ற முடிவை அந்தந்த நாடுகளே எடுக்கின்றன. அதனால், ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது அந்நா…
-
- 0 replies
- 256 views
-
-
கொரோனா வைரஸ்: இளம் வயதினருக்கு இருக்கும் ஆபத்துகள் என்ன? Getty Images நீங்கள் வயது முதிர்ந்தவராக இருந்தால், கொரோனா வைரஸால் உங்களுக்கு அதிக ஆபத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இளைஞர்களை கொரோனா வைரஸ் தாக்காது என்று சொல்ல முடியாது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. "கொரோனா வைரஸ் வயதானவர்கள் அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்களை மட்டும்தான் தாக்கும் என்றில்லை" என பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் எம்.பி-யும் மருத்துவருமான டாக்டர் ரோசேனா அல்லின்-கான் பிபிசியிடம் தெரிவித்தார். பிரிட்டனில் இந்த வைரஸ் தொற்றால் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 30 மற்…
-
- 0 replies
- 465 views
-
-
உலகமெங்கும் கொரோனா நோய்த் தொற்று ஒரு காட்டாற்று வெள்ளமாக தன் பாதை எங்கும் பெரும் அழிவுகளை ஏற்படுத்திச் சென்று கொண்டிருக்கின்றது. உயிர் வாழும் உரிமை என்பது பணம் படைத்தவனுக்குத்தான் என்று விதி செய்து வைத்திருக்கும் முதலாளித்துவம், இன்று தன் ஆட்சியின் கீழ் வாழும் மக்களை நிர்க்கதியாய் அம்போவென விட்டிருக்கின்றது. தன்னை அழிவே இல்லாத கடவுள் என்று பிரகடனம் செய்த முதலாளித்துவம் தன் அரிதாரங்களை எல்லாம் களைந்து, அழுகி புழு பிடித்த அதன் உடலை துர்நாற்றத்தோடு உலகுக்கு காட்சிப்படுத்தி உள்ளது. இத்தனை நாளாக அதைக் கருவறையில் வைத்து பூசித்து வந்த அதன் துதிபாடிகள் கூட அதன் அருகில் செல்ல முடியாமல் அதை எப்படி கொன்று புதைப்பது என்று ஆலோசித்துக் கொண்டிருக்கின்றார்கள். முதலாளித்துவ சமூகத்தில…
-
- 1 reply
- 441 views
-
-
உலகமே கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலால் மிரண்டு போயிருக்கும் நிலையில், கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எந்த மதத்தவர் என்றாலும் அவர்களது உடல்களை தகனம்தான் செய்ய வேண்டுமென்றும், எவர் உடலையும் அடக்கம் செய்ய கூடாது என்றும், மும்பை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையொன்று சர்ச்சையை கிளப்பியது. பிறகு, மத ரீதியிலான பிரச்சனையாக இந்த விவகாரம் மாறியதால், அந்த அறிக்கை திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கை எப்படி நடத்த வேண்டும், அடக்கம் செய்யப்பட்ட நோயாளியின் உடலிலிருந்து வைரஸ் பரவுமா, அல்லது உடல் தகனம் செய்யப்படும்போது வைரஸ் முற்றிலும் அழிந்துவிடுமா, இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிற…
-
- 0 replies
- 242 views
-
-
கொரோனாவால் உலகம் அழியப் போவதில்லை ஆர். அபிலாஷ் டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலனின் யுடியூப் பேட்டி மற்றும் சன் டிவி சிறப்பு நேர்காணலைப்பார்த்தேன் - “நாளைக்கே உலகம் அழிஞ்சிருங்க” என கையை உதறும் டாக்டர்களைப் போலஅன்றி தெளிவாக நிதானமாகப் பேசுகிறார். பவித்ரா அமெரிக்காவில் பலவருடங்களாககொரோனா வைரஸ்கள் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்கியவர். அவரிடம்சமூகவலைதளங்கள் வழி மக்களிடம் பரவி வரும் பல குழப்பங்கள் குறித்து கேள்விகள் பலகேட்டார்கள். அவற்றில் ஒன்று கொரோனா எந்தளவுக்கு ஆபத்தானது என்பது. அதற்கு அவர்சொன்ன பதில் முக்கியமாகப் பட்டது: 1) கொரோனா என்பது ஒரு புதிய வைரஸ் அல்ல. Covid-19 எனும் இந்த வைரஸானது ஏற்கனவே(70 வருடங்கள…
-
- 1 reply
- 669 views
-
-
கொரோனாவால் கடனில் மூழ்கும் நமது சமூகம் நடராஜன் ஹரன் கொரோனா மரணங்கள் நம்மை அழைக்க மறுபுறம் தற்கொலை உயிர் இழப்புகளும், வட புலத்தில் வாள்வெட்டு உயிரிழப்புகளும், திடீர் விபத்து உயிரிழப்புகளும் சமுகத்தின் அக்கறையீனத்தால் ஒவ்வொருவரது சுய கட்டுப்பாடு இன்மையாலும் நிகழ்கின்றது. உலகில் இன்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் இரண்டு வருட காலமாக நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றது. இருப்பினும் இந்தக் காலகட்டத்தில் உலகெங்கிலும் பொருளாதாரங்கள் மிகப் பெரும் சரிவையும் சவாலையும் எதிர்நோக்கி வருகின்றன. இது இவ்வாறு இருக்க, நாட்டின் அனைத்து பகுதிகளும் தற்காலத்தில் தனிமைப்பட்டிருக்கின்றன. இந்த கொரோனாவின் தாக்கம் காரணமாக மூடப்பட்ட பகுதிகளில் வாழ…
-
- 0 replies
- 357 views
-
-
சுரஞ்சனா திவாரி பிபிசி செய்தியாளர் கிட்டத்தட்ட 200 கோடி மக்கள்தொகை கொண்ட தெற்காசியா, தற்சமயம் மிகவும் கடுமையான சுகாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. கொரோனா தொற்றுப் பரவல் இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் வேகமாக அதிகரித்து வருகிறது. சிறிய நாடுகளில், குறிப்பாக இலங்கையில் இது தீவிரமாகக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஆனால், இந்த நாடுகளில் சீனா செய்துள்ள நிவாரணப் பணிகளின் வேகம், இந்த நாடுகளில் சீனாவின் செல்வாக்கை அதிகரிக்கக்கூடும் என்று வல்லுநர்கள் நம்புகின்றனர். தொற்றுநோயைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாகக் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இலங்கையின் நகரங்களில் உள்ள சாலைகள் வெறிச்சோடியுள்ளன. மே 25 வரை, மக்கள் அத்தியாவசி…
-
- 0 replies
- 497 views
-
-
உன்னை பார். உங்களைச் சுற்றிப் பார். உலகைப் பார். எல்லா சேவைகளுமே பெரும்பாலும் நின்றுவிட்டன. அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்படுகின்றன. நாங்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இவை எல்லாவற்றிற்கும் காரணம் கொரோனா வைரஸ். நடந்தது என்ன? நூறு நாட்களுக்கு முன்பு, ஒரு நுண்ணுயிர் நம் உலகிற்கு வந்தது. அது நம்மில் சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இது மிக வேகமாக பரவியது, சீனாவின் வூஹானில் இருந்து சில வாரங்களில் நம் வாழ்வில் ஓடியது.நேரமும் தூரமும் இனி தேவையில்லை. எங்கள் வாழ்க்கை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது.மார்ஷல் மெக்லூஹான் சொன்னது சரிதான். கனடா தகவல் தொடர்பு கோட்பாட்டாளர் உலகமயமாக்கப்பட்ட சமூகத்தைப் பற்றி சரியாக கூறி இருந்தார். அறிவியலும் த…
-
- 2 replies
- 469 views
-
-
கொரோனாவுக்கு பிறகான உலகில் அகதிகளின், தஞ்சம் தேடுபவர்களின் நிலை என்னவாக இருக்கும்? கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள உலக நாடுகள் திணறிவரும் சூழ்நிலையில் அகதிகள், தஞ்சம் தேடி வருபவர்களின் நிலை கேள்விக்குள்ளாகியுள்ளது. கொரோனா நெருக்கடி உலகையே புரட்டிப் போட்டிருக்கிறது. தேசத்தின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. தொழில்கள் முடங்கியுள்ளன. உலகப் பொருளாதாரம் மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொள்ள இருக்கிறது. கற்பனையிலும்கூட சாத்தியமானது எனக் கருதப்பட்ட வாழ்க்கை முறை இன்று அசாத்தியமானதாகி இருக்கிறது. கொரோனா நெருக்கடியைப் பயன்படுத்தி அரசுகள் மக்களின் மீது கண்கானிப்புகளை அதிகப்படுத்துவதும், அதி…
-
- 0 replies
- 338 views
-
-
கொரோனாவும் அன்றாடங்காய்ச்சிகளின் நிலையும் இந்திய அரசு அமைப்புசாராத் தொழில்கள் என்று 60 வகையான தொழில்களை வரையறை செய்துள்ளது. அமைப்புசாராத் தொழிலாளர்கள் நல வாரியத்தையும் அமைத்துள்ளது. ஆனால் அந்த அமைப்புசாராத் தொழிலாளர்கள் நல வாரியம் என்பது முழுக்க முழுக்க மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. தற்போது தொழில்துறை அமைச்சராக இருப்பவர் நிலோபர் கபில், இவரின் அமைச்சகத்தின் கீழ்தான் இந்த அமைப்புசாராத் தொழிலாளர் நலத்துறை வருகிறது. இதில் என்னென்ன துறைகள் வரும் என்று பார்க்கலாம். 1. விவசாயத் தொழிலாளர் நல வாரியம் 2. மீனவர் நல வாரியம் 3. கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் 4. சீர்மரபினர் நல வாரியம் 5. பழங்குடியினர் நல வாரியம் 6. ஆட்…
-
- 0 replies
- 489 views
-
-
கொரோனாவும் கோயில் திருவிழாக்களும் உலகில் மல்யுத்தப் போட்டி, குத்துச் சண்டைப் போட்டி என்று பல போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்தந்தப் போட்டிகளில் பங்குபற்றவிருக்கின்ற போட்டியாளர்கள், வீரர்கள் பல நாட்களுக்கு முன்பே தம்மை அதற்குத் தயார்படுத்துவது போல எமது இந்துப் பெருமக்களும் தம்மையும் அது போன்ற நிகழ்வுகளுக்குத் தயார்படுத்துவது வழக்கம் . ஆண்டுதோறும் கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களை வைத்தே இந்தக் கருத்தை முன்வைக்கிறேன். கோயில்களில் நடைபெறும் திருவிழாக்கள் எப்போது போட்டிக்குரிய களங்களாகவும், தளங்களாகவும் மாறியதோ அன்றே அவைகள் தமது புனிதத்தை இழந்துவிட்டன என்று கருதலாம். வருடாவருடம் தை மாத்தில் தொடங்கும் கோயில் திருவிழாக்கள் அந்த வருடம் ஆவணி வரை நீடிக்கும். சில கோயில்…
-
- 0 replies
- 472 views
-
-
#இதுவெறுமனேஒருசிறுகதைஅல்ல. #இன்றையநிலைமையைஆதாரமாகக்கொண்டுஎழுதப்பட்டஒருசிறுகதை. #இந்தக்கதையைவாசித்துக்கொண்டுபோகும்பொழுதுஉங்களுக்குசிரிப்புவரலாம். #நன்றாக_சிரியுங்கள். #கொரோனாவும்_மாரிமுத்துவும்* நான் கோரோனா கிருமி பேசுகிறேன். இப்பொழுது மாரிமுத்துவின் தொண்டைக்குள் இருக்கிறேன். நான் இங்கு வந்து இரண்டு மணித்தியாலங்கள் ஆகிவிட்டன. மாரிமுத்துவின் உடலில் வெற்றிக்கரமாக நுழைந்த கடைசி கிருமி நான். நான் உள்ளுக்குள் வந்த கதையைச் சொல்லிவிட நினைக்கிறேன். இன்று சரியாக மதியம் 12.35க்கு ஓர் உணவகத்தில் மாரிமுத்து "பரோட்டா" சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இன்று இரவு ஊரடங்கு சட்டம் பிரப்பிக்கப்படலாம் என்று அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டதும் சற்ற…
-
- 0 replies
- 451 views
-
-
கொரோனாவை விஞ்சிய ரிஷாட் – இலங்கையின் பேசுபொருளானார்… October 17, 2020 ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படுவதாக குற்றச்சாட்டு… அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்ய உத்தரவிடப்பட்ட ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படுகின்றார் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரும் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படுகின்றார்கள் என்ற கருத்தை தனி்பட்டவகையில் தானும் ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார் 2019 ஜனாதிபதித் தேர்தலின்போது இ.போ.ச. பேருந்துகளில், புத்…
-
- 0 replies
- 491 views
-
-
கொரோனா கொடுத்திருக்கும் சரிவுகள் பாதிப்புகள் அலறல்கள் கதறல்கள் எச்சரிக்கைகள் என ஒரு பக்கம் இருந்தாலும், *இன்னொரு பக்கம் ஆச்சரியமானது. ஆம் பெரும் எச்சரிக்கையினை உலகுக்கு சொல்கின்றது*1950க்கு பின் வேகமாக மாறிய உலகிது. அதுவும் 1990க்கு பின் பணமே பிரதானம் என்றாயிற்று, எப்படியும் சம்பாதி, சம்பாதித்து கொண்டாடு என்ற அளவுக்கு நிலைமை மாறியது.குறிப்பாக இத்தலைமுறைக்கு பந்தபாசம், பக்தி , ஞானசிந்தனை என எதுவுமில்லை. அவர்களின் சிந்தனையும் மனமும் குணமும் பார்வையும் தேடலும் பணம், பணம், கொண்டாட்டம் என்ற நோக்கிலே இருந்ததுஉலகின் உணவு முதல் எல்லா இன்பங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற வெறியோடு இயங்கியது உலகம், அது பாசத்தை மறந்தது, கடமையினை மறந்தது, கடவுளை மறந்தது, பணம் எல்லாவற்றையும் காக்கும் …
-
- 0 replies
- 386 views
-
-
ஒற்றைக் கட்சி மார்க்சிய லெனினிய சோசியலிச குடியரசான சீனாவின் பிடியிலிருந்து விலகி, தனி அடையாளத்தை நிலைநிறுத்தப் போராடிக் கொண்டிருக்கும் ஜனநாயக நாடு தைவான். கிழக்கு ஆசியாவில், சீனாவிலிருந்து சுமார் 80 மைல் தொலைவில், 35 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கும் தீவு நாடு. ஆனால், அந்த நாட்டுக்கான அங்கீகாரத்தை வழங்கவோ, அந்நாட்டின் முயற்சிகளில், வெற்றிகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவோ, அந்நாட்டுக்கு உதவவோ, அதன் எச்சரிக்கைகளைக் கேட்டுக்கொள்ளவோ உலகம் தயாராக இல்லை. ஒரே காரணம் சீனா. சீனா - தைவான் இடையேயான பிரச்னை, அந்த இருநாடுகளைத் தாண்டி, தற்போது கொரோனா எனும் கொடிய நோயின் பிடியில் சிக்கியிருக்கும் உலக நாடுகள் எல்லாவற்றையும் பாதித்திருக்கிறது. காரணம் உலக சுகாதார நிறுவனம் (W…
-
- 4 replies
- 826 views
-
-
கொரோனோ: நீதியின் எல்லைக்கோடுகள் பட மூலம், @PARLNetworkSL மனிதர்களின் இருத்தலின் நிலையாமையை அறிவித்த பல சிந்தனைப் பள்ளிகளும், தத்துவ மரபுகளும் பசியை `பிணி` என்று விழித்தன. அவை சார்ந்து எழுந்த இலக்கியங்கள் பசிப்பிணியைத் தீர்ப்பது மேலான அறவாழ்வாக தம் அன்றாடத்துடன் இணைத்துக்கொண்டன. உலகம் முழுவதும் எழுந்த மகத்தான இலக்கியங்கள் பசியை நெருப்புடன் ஒப்பிட்டன. அடிவயிற்றிலும் நெஞ்சிலும் எரியும் நெருப்பாகப் பசி உருவகிக்கப்படுகின்றது. தமிழில் எழுந்த பேரிலக்கியமான மணிமேகலை “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்கிறது. மணிமேகலையின் கதைப்புனைவில் மண்மேகலை என்னும் பெளத்த துறவி தேவகணங்களான தீவதிலகை, மணிமேகலா போன்றவற்றிடம் இருந்து ‘அட்சய பாத்திரம்’ என்பதைப் பெற்று பசித்திருப்…
-
- 1 reply
- 725 views
-
-
கொலிவூட் படப்பிடிப்பு தளத்தில் நடந்தது விபத்தா, கொலையா? படப்பிடிப்பு தளத்தில், நடிகர் அலெக்ஸ் பால்ட்விண்ட் இடம் ரிவால்வர் கையளிக்கப்படுகிறது. பாதுகாப்பானது என்று சொல்லப்பட, அவரும் அதனை தனது உடலில் சொருகி வைக்கிறார். படப்பிடிப்பு நடக்க முன்னர் அங்கே சிறுவர்கள் இல்லை என்பதை உறுதி செய்கிறார். கமராவை இயக்க முன்னர், ரிகேர்சல் பார்க்க, ரிவோல்வரை உருவி இரு தடவை சுடுகிறார். படப்பிடிப்பு உதவியாளரான பெண் சாய்கிறார். சாய்வதை உணர முன்னர் அடுத்த தோட்டா, இன்னும் ஒருவர் தோற்பட்டையை தாக்குகிறது. பெண் உயிரிழக்கிறார். இரண்டாமவர் வைத்தியசாலையில். பெரும் அதிர்ச்சியில் நடிகர் உறைந்து போகிறார். கைதாகவில்லை. நீதிமன்றில் விசாரணை நடக்கிறது. விபத்து என்…
-
- 1 reply
- 373 views
-
-
[size=3][size=4]நான் பணிபுரியும் வின்சர் பல்கலைக் கழகத்தின் சமூகவியல் மானுடவியல் துறைகளின் ஆசிரியர்களுக்கிடையே சில மாதங்களுக்கு முன்பாகப் பலத்த வாக்குவாதங்கள் ஏற்பட்டன. சமூகவியல், மானுடவியல்துறை என்று வழங்கப்பட்டு வந்த எங்கள் துறையின் பெயரோடு குற்றவியல் (Criminology) என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானத்தைச் சில பேராசிரியர்கள் முன்வைத்திருந்தார்கள். குற்றவியலின் சட்ட, நீதி, நியாயப் பரிமாணங்களைதக் கற்பிக்கச் சட்ட பீடம், சட்டமும் சமூகமும் போன்ற துறைகள் இருந்தாலும் குற்றவியலின் சமூகவியல் பரிமாணங்களை ஆய்வு செய்வதும் கற்பிப்பதும்தான் குற்றவியல் துறையின் மையமாக இருந்தது. எமது துறைகளிலும் பல பேராசிரியர்கள் குற்றவியலைத்தான் தமது விருப்புக்குரிய சிறப்புத்துறையாகப்…
-
- 0 replies
- 458 views
-
-
1984-இல் நடந்த சீக்கியப் படுகொலை தொடர்பான வழக்கொன்றில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டிருந்த காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யான சஜ்ஜன் குமார், அவ்வழக்கு தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் – கொலைக்குற்றம் மற்றும் கலவரம் – விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 29 ஆண்டுகளாக நீதிக்காகப் போராடி வரும், நீதிக்காகக் காத்திருக்கும் சீக்கியர்களிடம் இந்த அநீதியான தீர்ப்பு எத்தகைய மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கும் என்பதை எந்தவொரு வார்த்தையாலும் விவரித்துவிட முடியாது. 1984-ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று காலையில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, சீக்கிய மதத்தைச் சேர்ந்த இரண்டு மெய்க்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்துத் தொடங்கிய சீக்கியப் படுகொலை நவம்பர் 3-ஆம் தேதி வரை …
-
- 0 replies
- 420 views
-
-
இராஜிவ் கொலையல்ல! மரணதண்டனை!!! எரியும் ஈழத்திற்காக தன்னை எரித்த முத்துகுமாருக்கு நடத்தப்பட்ட வீரவணக்க கூட்டத்தில் கொளத்தூர் மணி பேச்சின் காணொளி இங்கே. http://www.vakthaa.tv/v/3221/kolathur-mani...ai-meeting.html http://www.vakthaa.tv/v/3222/kolathur-mani...ai-meeting.html http://www.vakthaa.tv/v/3223/kolathur-mani...ai-meeting.html http://www.vakthaa.tv/v/3226/kolathur-mani...ai-meeting.html http://www.vakthaa.tv/v/3228/kolathur-mani...ai-meeting.html http://www.vakthaa.tv/v/3231/kolathur-mani...ai-meeting.html
-
- 0 replies
- 904 views
-