நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
கடந்த உள்ளுராட்சி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் ஒன்றான செங்கலடி பிரதேச சபையை ( ஏறாவூர்பற்று ) பிள்ளையான் குழுவின் ஆதரவுடன் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா மாவட்ட அமைப்பாளராக இருக்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி கைப்பற்றிய போது தமது பிரதேசம் அபிவிருத்தி அடையும் என சிலர் நம்பினர். தமிழ் பிரதேசம் ஒன்று அமைச்சர் ஹிஸ்புல்லாவின் கைகளுக்கு செல்வது தமிழ் மக்களுக்கு எவ்வளவு ஆபத்து என்பதற்கு புல்லுமலையில் அமைக்கப்படும் மஹா மினரல் வோட்டர் தொழிற்சாலை ஒரு எடுத்துக்காட்டாகும். செங்கலடி பிரதேசசபை சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அதிகாரத்தில் இருப்பதை பயன்படுத்தி புல்லுமலை பிரதேசத்திற்கு மட்டுமல்ல அதனை அண்டிய பல கிராமங்களின் நீர்வளங்களை சுரண்டும் தண்ணீர் தொழி…
-
- 2 replies
- 816 views
-
-
தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் ஆதரவைக் குலைத்திடும் சதிப் பின்னணியில் நிற்கும் மர்ம மனிதர் எம்.கே.நாராயணன் - 2 -~விடுதலை| க.இராசேந்திரன்- தமிழ்நாட்டில் நடந்த தி.மு.க. ஆட்சியில் உள்ள சில முக்கிய தலைவர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டு பேசி வருவதே தேச விரோதமாக - நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக உளவுத்துறை மூலம் அறிக்கை தயாரித்தவர் எம்.கே. நாராயணன். உளவுத்தறையின் தலைவர் என்ற முறையில், அன்றைய பிரதமர் வி.பி. சிங் பார்வைக்கு இதைக் கொண்டு போயிருக்க வேண்டிய கடமை எம்.கே.நாராயணனுக்கு உண்டு. ஆனால், அதிகார மட்டத்தில் கமுக்கமாக வைக்கப்பட்டது அந்த அறிக்கை. மண்டல் குழு பரிந்துரை, ஈழத் தமிழர் பிரச்சினைகளில் - பார்ப்பன அதிகார வர்க்கத்தின் உணர்வுகளுக்கு எதிராக உறுத…
-
- 0 replies
- 1.2k views
-
-
வெளிநாட்டு சிற்றிசன் உடைய ஒருவர் இன்னொரு நாட்டில் அரசியலிலோ வேறு விடயங்களிலோ ஈடுபட சட்டம இடம்கொடுக்குமா ? உதாரணமா மகிந்தவின் சகோதரர் அமெரிக்கன் சிற்றிசன். அவர் இலங்கையில் கைக்கு கிடைச்ச அதிகாரம் எல்லாத்தையும் வைத்திருக்கின்றார். அதற்கு எவ்வாறு அமெரிக்க அரசு அங்கீகாரம் கொடுத்தது. ஏனோ தானோ என்று சின்ன விடயங்களிற்கு எல்லாம் நாம் கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்கின்றோம். இப்படியான விடயங்களை உலகநாடுகளின் முன் வெளிச்சம் போட்டு காண்பிக்கலாம் என்பது எனது தனிப்படட்ட கருத்து உங்கள் கருத்துக்களிற்காய்...........
-
- 5 replies
- 2.1k views
-
-
இரணைமடுவின் வெள்ள அரசியல் – ந.கார்த்திகேசு January 21, 2019 வெள்ளமும் குளங்களும் வன்னியில் உள்ள மக்களுக்கோ அல்லது அவர்களுக்குச் சேவை வழங்கும் துறைகளுக்கோ புதியனவல்ல. மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இவ்வாறு ஏற்படும் வருணபகவானின் திருவிளையாடல்களும் அதனை எதிர்கொண்டு நிமிரும் சனங்களும் வன்னிக்கு வழக்கமான ஒன்று. காலம் காலமாக இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வரும் கிளிநொச்சி மண்ணில் இவ்வருடம் ஏற்பட்ட வெள்ளமும் அதனைத் தொடர்ந்து நடந்துவரும் சம்பவங்களும் வன்னியில் வசிக்கும் அல்லது வன்னியைத் தெரிந்த அனைவருக்கும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளன. மீள்குடியேற்றங்களின் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களால் எங்கும் எதிலும் கலந்த அரசியல் வன்னியின் வெள்ளத்தையும் …
-
- 0 replies
- 718 views
-
-
இந்தத் தலைப்பே கொஞ்சம் உணர்வுபூர்வமானது என்பதை மனதில் வைத்தே இதனை இட்டிருக்கிறேன். ஒரு மாதத்துக்கு முன்னதாக இப்படி ஒரு தலைப்பை நான் எனது கட்டுரை ஒன்றுக்கு வைத்திருப்பேனா என்று என்னால் கூறமுடியாது. ஆனால், இது பல விடயங்கள் பற்றி பேசவேண்டிய தருணம். காத்தான்குடி என்ற பெயரே கடந்த சில நாட்களாக இங்கு சர்ச்சைக்கு உரிய ஒரு சொல்லாக மாறியிருக்கிறது என்பது உண்மை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி ஒருவர் அங்கு பிறந்தார் என்பதும், தாக்குதலாளிகள் சிலராவது அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதும் இதற்குக் காரணம். மட்டக்களப்பு நகரில் இருந்து சில மைல்கள் தூரத்தில் கடற்கரை ஓரமாக அமைந்திருக்கின்ற இந்தச் “சிற்றூர்” நகரம் என்றோ கிராமம் என்றோ இலகுவில் பிரித்தறிய முடியாத ஒ…
-
- 6 replies
- 2.1k views
- 1 follower
-
-
இஸ்லாமிய சமூகத்தவர் பற்றிய பீதி இலங்கையில் வேரூன்ற ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது - முன்னாள் அமெரிக்கத் தூதுவர் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் ஏற்கனவே அதிகரித்து வருகின்ற இஸ்லாமியரைப் பற்றிய பீதி (இஸ்லாமிய அச்சக்கோளாறு) இலங்கையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு வேரூன்ற அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தியிருக்கும் இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவரும் ஒபாமா நிர்வாகத்தில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்க அமைச்சருமான ரொபேட் ஓ பிளேக், இலங்கை இன்று எதிர்நோக்குவதைப் போன்ற நெருக்கடிகளுக்கான எந்தவொரு நாட்டினதும் பிரதிபலிப்பு தனிப்பட்ட நலன்கள…
-
- 0 replies
- 454 views
-
-
இந்தியா வரும் முன்னே, அமெரிக்கா வரும் பின்னே Editorial / 2019 ஜூன் 13 வியாழக்கிழமை, மு.ப. 03:26 Comments - 0 அந்நியத் தலையீடு பற்றிய நம்பிக்கைகள், ஈழத்தமிழர் அரசியலில் தவிர்க்கவியலாத பங்கு எனுமளவுக்குச் செல்வாக்குச் செலுத்தி வருகிறது. எந்த அந்நிய நாடுகள் மீது நம்பிக்கை விதைக்கப்பட்டதோ, அவையே போருக்கான ஆயுதங்களையும் வழங்கின என்ற உண்மை மறைக்கப்படுகிறது; மறக்கப்படுகிறது. ஞாபகமறதி நிறைந்த சமூகம் தொடர்ந்தும் இன்னலுறுவதற்கு விதிக்கப்பட்டது. கடந்தவாரம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம், தமிழர்களின் வளமான எதிர்காலத்துக்கானது என, ஒருபுறம் மெச்சப்பட்டது. மறுபுறம், இலங்கையில் வலுப்பெற்றுள்ள இஸ்லாமியப் பயங்கரவாதம், இந்தியாவுக்கு அச்சு…
-
- 0 replies
- 762 views
-
-
எனக்கு இப்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது - பாராளு மன்றத்தில் ஹக்கீம். - செய்தி . . 2000 வசந்த காலமென ஞாபகம். இரவிரவாக தோழர் தலைவர் அஸ்ரப்புடன் பேசிக்கொண்டிருந்தேன்.அதிகாலைதான் என்னை என் விடுதிக்கு அனுப்பி வைத்தார். மாலை நோர்வேக்கு செல்லும் அவசரத்தில் இருந்தேன். ஆனால் சற்று நேரத்தில் தோழர் அஸ்ரப் கார் அனுப்பி திரும்பவும் என்னை வீட்டுக்கு வரும்படி அழைத்தார். மாலை என்னை விமான நிலையம் அனுப்பிவைப்பதாக கூறி அதிகாலை தோழர் தலைவர் அஸ்ரப் அவர்கள் என்னை மாவனல்ல அழைத்துச் சென்று காலை விருந்தின்போது தனது வலது கையென தோழர ரவூப் ஹக்கீமை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதற்க்கு கொழும்பில் முதல்நாள் தனது வீட்டில் வைத்து தோழர் பசீர் சேகு தாவுதை எனது கை வாழ் என அறிமுகம் …
-
- 3 replies
- 1.4k views
-
-
தமிழ்நாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் - டி.அருள் எழிலன் [ வியாழக்கிழமை, 24 ஒக்ரோபர் 2013, 04:42 GMT ] இறுதியாக, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்ந்த புதுக்குடியிருப்பு பதுங்கு குழியையும் குண்டுவைத்துத் தகர்த்துவிட்டு, அந்த இடத்தில் புத்த விஹாரை அமைக்கத் திட்டமிடுகிறது இலங்கை அரசு. 30வருடங்கள் நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தின் அடையாளமாக ஈழ மண்ணில் இப்போது எதுவும் இல்லை. இந்த நிலையில், ஈழ மண்ணில் பெருகியோடிய குருதியாற்றின் சுவடை, தஞ்சையில் பதித்திருக்கிறது 'முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்!’ ஈழத் தமிழர்கள் அனுபவித்த போர்க் கொடுமைகள், நினைவு முற்றத்தின் சிற்பங்களாகப் பரந்து விரிந்திருக்கின்றன. அந்தத் தமிழர்களின் வலியை, வேதனையை, கதறலை, ஆக்ரோஷத்தை அச்சு அச…
-
- 0 replies
- 849 views
-
-
-
- 9 replies
- 693 views
-
-
ஒற்றையாட்சிக்கு சாமரம் வீசும் தேசிய ஒருமைப்பாட்டுத் தமிழர்கள் போரின் பேரழிவுகளாலும் தொடர்ந்து முகம் கொடுத்த அடக்குமுறைகளாலும் துவண்டு போய்க் கிடக்கின்றது தமிழினம். நொந்து, நொடித்துப் போய் சருகாகிக் கிடக்கும் தமிழி னத்தை நோண்டிப் பார்க்கும் சுரண்டிப் பார்க்கும் கைங்கரி யத்தில் தங்களைத் தமிழர்கள், தமிழ் ஆர்வலர்கள் என்று பெரு மிதத் தோடு கூறிக் கொள்பவர்களும் கூட ஈடுபடுகின்றமை மிகுந்த வேதனைக்குரியதாகும். இனி என்ன என்பது தெரியாமல் எதிர்காலம் பற்றிய அவ நம்பிக்கையில் தமிழினம் இன்று துவண்டு கிடக்கின்றது. தமது தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிட்டாதா? அதற் கான மார்க்கம் என்ன? என்பவை தெரியாமல் தமிழ்மக்கள் மட்டு மல்லாமல், அவர்களின் தலைமைகளே தடுமாறி நிற்கின்றன. …
-
- 4 replies
- 853 views
-
-
காலிமுகத்திடல் போராட்டம் (வெளிவராத பல முன்னெடுப்புக்கள்) காலிமுகத்திடல் போராட்டம் தொடர்பாக தமிழர் தரப்புக்கு பல அபிப்பிராயங்கள் இருக்கின்றன, அவைகளை ஒரு புறம் வைத்துக்கொண்டு இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். அங்கு இருக்கும் வெளியில் வராத பல முன்னெடுப்புகளை இன்று முழுமையாக சென்று ஒளிப்பதிவு செய்தோம். முழுமையான விளக்கங்களுடன் , எமக்கான நன்மை தீமையைத் தாண்டி இதனை முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.
-
- 0 replies
- 398 views
-
-
ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரணில் விக்கிரமசிங்கே கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலை அடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு தற்போது இடம்பெற்று வருகின்றது. புதிய ஜனாதிபதி தேர்வுக்காக, இலங்கையின் தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், இலங்கையில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளில் இந்த…
-
- 1 reply
- 258 views
-
-
தமிழர், முஸ்லிம்கள்: சில குறிப்புகள் -சிறு எதிர்வினை- இளங்கோ-டிசே 1. இலங்கையில் முஸ்லிம்கள் மீது வன்முறைகள் நடைபெறுகின்ற இவ்வேளையில் தமிழ் X முஸ்லிம் விவாதங்கள் நடைபெறுவதையும் அதனால் மனம் நொந்து சில முஸ்லிம் நண்பர்கள் எழுதியிருக்கின்ற சில பதிவுகளை வாசிக்க நேர்ந்தது. இந்த விவாதம்(கள்) தொடங்கிய அடி நுனி எதுவும் தெரியாதபோதும் (அவற்றைத் தேடிப் போக விருப்பமுமில்லை) சிலவற்றை எழுதிவிட விரும்புகிறேன். நம் தமிழ்ச்சூழலில் கருத்துக்களை உதிர்ப்பதென்பது -அதுவும் முக்கியமாய் அரசியல் சார்ந்து- மிகவும் எளிதானது. அவ்வாறு அரைகுறையுமாய் எழுதுபவர்களே பின்னாட்களில் அரசியல் ஆய்வாளர்களாகவோ அல்லது ஊடகங்களில் எளிதில் நுழைந்துவிடக்கூடியவர்களாகவோ அல்லது ஊடகங்களால் தூக்கிப் பிடிக்கப்படுபவ…
-
- 2 replies
- 721 views
-
-
எல்.பி.ஏ.சுனித் நிஷாந்த… முல்லைத்தீவு மீனவர் சர்ச்சையின் பின்னாலுள்ள கோடீஸ்வர வர்த்தகர்! August 14, 2018 முல்லைத்தீவில் தமிழ் மீனவர்களின் வாடிகளை நேற்றிரவு சிங்களவர்கள் தீமூட்டி நாசகார செயல் புரிந்ததில், சுமார் 50 இலட்சத்திற்கும் அதிகமான சொத்தழிவை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. வாடிகளிற்கு தீமூட்டினார்கள் என இன்று மதியமளவில் மூன்று சிங்கள மீனவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் சிங்கள மீனவர்களை தடைசெய்ய வேண்டுமென தமிழ் மீனவர்கள் கோரிவருவதன் எதிரொலியாகவே இந்த சொத்தழிப்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. பலகாலமாகவே முல்லைத்தீவில் தமிழ் மீனவர்களிற்கு தலையிடியாக இருந்து வரும் சிங்கள கோடீஸ்வரர் ஒருவரே இந்த ந…
-
- 0 replies
- 425 views
-
-
யாருக்கு இலாபம் – இந்த வழக்கால்? மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிரதிவாதிகள் பெயர் கூப்பிடப்படும்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எழுந்து நிற்பது கட்டாயம் என்று அறிவுறுத்தி அவரை எழுந்து நிற்கச் செய்திருக்கிறார் நீதியரசர் ஜானக டி சில்வா. ஒரு மாகாண முதலமைச்சராக இருந்தாலும், முன்னாள் நீதியரசராக இருந்தாலும், வயதில் மூத்தவராக இருந்தாலும், நீதியின் முன் எவருக்கும் பாகுபாடு காட்டப்படமாட்டாது என்பதை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் நீதியரசர் அவ்வாறு அறிவுறுத்தினார் என்பது ஏற்கத்தக்கதே. ஆனால், எந்த நீதிமன்றத்தின் உயராசனத்தில் அ…
-
- 1 reply
- 745 views
-
-
“என் முப்பாட்டன் முருகன்... நான் முதலமைச்சர் வேட்பாளர்!” - அடடே சீமான் '''450 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் சூரியனில் ஏற்பட்ட பெருவெடிப்பின் குழந்தைகள்தான் பூமியும் அதைச் சுற்றும் கோள்களும்’னு அறிவியல் சொல்லுது. அதைத்தான் என் பாட்டன் 'அகர முதல எழுத்தெல்லாம்...’னு சொன்னான். ஹைட்ரஜன் இரண்டு சதவிகிதமும் ஆக்ஸிஜன் ஒரு சதவிகிதமும் இருந்தா H2O என்கிற நீர் உருவாகும். இதைத்தான் என் முப்பாட்டன் 'நீரின்றி அமையாது உலகு’னு சொன்னான். அந்தத் தண்ணியை, இயற்கையை வழிபட்ட அந்த மரபை இடையில் கைவிட்டதன் விளைவுதான், ஓசோன் மண்டலத்துல ஓட்டை. நம் மொழியை, பண்பாட்டை, இயற்கையை எல்லாத்தையும் மீட்கத்தான் களம் இறங்கியிருக்கோம். நான் போய் தண்ணீரை காசு கொடுத்து வாங்கிக் குடிச்சுக்குவேன். ஆனா, காட்டுல வ…
-
- 7 replies
- 5.8k views
-
-
While US's “War on Terror” after the events of 9/11 has been criticized by leading US foreign policy advocates as having a "pernicious impact on American democracy, on America’s psyche and on U.S. standing in the world," autocratic leaders of some faltering states of the third world, including Sri Lanka, have been making concerted efforts to capitalize on this Bush doctrine by defining legitimate local nationalist struggles as phenomena of terrorism. Critics have pointed out that the "War on Terror," doctrine advanced by the Straussian neoconservatives of Bush's inner circle of advisors, has aligned the United States with governments around the world engaged in supp…
-
- 0 replies
- 1.1k views
-
-
நீதிமன்ற தீர்ப்பையடுத்து தீவிரமடைந்துள்ள இலங்கையின் அரசியல் நெருக்கடி - வீ.பிரியதர்சன் இலங்கையில் இன்று எற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியையடுத்து நாட்டு மக்களினதும் குறிப்பாக சர்வதேச நாடுகள் மத்தியிலும் இலங்கையில் ஜனநாயக முறைமை பின்பற்றப்படுகின்றதா என்ற கேள்விகள் மறைமுகமாக எழும்பத்தான் செய்கின்றன. இலங்கையின் வரலாற்றில் சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெற்ற செயல்கள் குறிப்பாக வடகிழக்கில் இடம்பெற்ற யுத்தம், இன அழிப்பு மற்றும் அவர்களுக்கு எதிராக தொடர்ந்தும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைகள் அடக்குமுறைகள். அதைவிட இலங்கையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கடந்த ஆட்சிக் காலத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் எல்லாம் இலங்கையின் ஜனநாயகத்திற்கு ப…
-
- 0 replies
- 712 views
-
-
காகித்தில் பேணப்படும் மனித உரிமைப் பிரகடனம் – உலக மனித உரிமைகள் தினம் இன்று : December 10, 2018 ஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்ன? தான் பிறந்த மண்ணில் தனக்கான உரிமைகளுடன் வாழ்தலே. ஒரு மனிதன் வாழும் உரிமையைப் பெறுவதும் மற்றவரை வாழ விடும் வகையில் நடப்பதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரகடனத்தின் அடிப்படை அம்சம். அப்படி பார்க்கும்போது ஈழ மண்ணில் பிறந்த எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? நாங்கள் யாருடைய உரிமையையும் மறுப்பவர்களல்ல. ஆனால் எங்களுடைய உரிமைகள் இன்னொரு இனத்தால் மறுக்கப்படுகின்றன. இந்த இன உரிமை மறுப்பை இந்த நாளை பிரகடனப்படுத்திய ஐ.நா போன்ற அமைப்புக்களும் தடுத்து நிறுத்தாமல் மனித உரிமை மறுப்பை ஊக்குவித்து வருகின்றன. எல்லா மனிதர்களும் சுதந்திர…
-
- 0 replies
- 168 views
-
-
குடிப்பது கூழ், கொப்பளிப்பது பன்னீர் என்றொரு முதுமொழி தமிழில் வழக்கில் உள்ளது. எந்த விடயத்துக்கு இது பொருந்துகின்றதோ இல்லையோ, இலங்கையின் அண்மைக்கால அரசியலுக்கும் அதன் நகர்வுக்கும் இந்த முதுமொழி கச்சிதப் பொருத்தம். விடயம் என்னவென்றால், எதிர்வரும் மே மாதத்தில் இடம்பெறவுள்ள வெசாக் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையிடம் நிதியுதவியைக் கோரியிருக்கின்றது இலங்கை. ஒரு பண்டிகையை யாசகமெடுத்தேனும் கொண்டாடி விடுவது என்ற நிலைப்பாட்டில் இருப்பதற்காக அரசாங்கம் வெட்கப்பட வேண்டும். அதேநேரம், வரவிருக்கும் வெசாக் கொண்டாட்டங்களின் பின்னால் உள்ள ஆபத்தான செய்திகளையும் இலங்கையர்கள் ஆழ்ந்து உணர்ந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமுமாகும். இந்த வருடம் தேர்தல் காலமாகையால், அரசாங்கம் …
-
- 1 reply
- 498 views
-
-
சிசிர பின்னவல (DAILY NEWS) இந்து சமுத்திர பிராந்தியத்தில் அச்சுறுத்தல்கள் முறியடிக்கப்பட வேண்டும். நாட்டில் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்கும் சாத்தியம் இல்லை. எனினும் எந்தவிதமான அச்சுறுத்தலையும் முறியடிக்க அரசு தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியம். பிரிட்டிஷ் காலனித்துவத்தில் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் சுமார் பத்தாண்டு காலத்துக்கு தேசிய பாதுகாப்புக்கு இலங்கையில் முன்னுரிமை தரப்படவில்லை. நாட்டின் பாதுகாப்புக்கு முதலில் அச்சுறுத்தல் ஏற்பட்டது 1962 இல் ஆகும். அப்போதைய அரசாங்கத்தைக் கவிழ்க்க பாதுகாப்புப் படையினரைக் கொண்ட ஒரு குழு முயற்சி செய்த போதே முதலாவது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டது. ஆனால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. அதன் பின்னர் இரண்…
-
- 0 replies
- 251 views
-
-
ஐ.நா சபையின் தீர்மானத்தை ஏற்க முடியாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளிப்படையாக அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நாட்டுக்கு ஆபத்தாக அமையும் என்பதால், தமது அரசாங்கம் அதனை ஏற் காது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார். இங்கு தமது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளார். அவ்வாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை - நிபந்தனையை ஏற்க முடியாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்ததன் மூலம், ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாதென்ற செய்தி மிகத் தெளிவாக ஐ.நாவுக்குக் கூறப்பட்டுள்ளது. இதுகாறும் நிபந்தனைகளை நிறைவேற்றக் கால அவகாசம் கோரியிருந…
-
- 5 replies
- 1k views
-
-
யாழ் பல்கலைகழக பகிடி வதை விசாரணை அறிக்கை தொடர்பாக - வ.ஐ.ச.ஜெயபாலன் ’ யாழ் பல்கலைக் கழக கிழிநொச்சி வளாகத்தில் 2020ம் ஆண்டு புதிய மாணவர்களுக்கான வரவேற்பும் பகிடி வதையும் குற்றச் செயல்மட்டத்துக்கு சீர்குலைத அதிற்ச்சிதரும் செய்திகள் 06.02.2020 அன்று வெளியாகி நமக்கெல்லாம் பேரதிற்சியை ஏற்படுத்தியது. மேற்படி சம்பவங்கள் தொடர்பான விசாரணை ஆரம்ப அறிக்கை யாழ் பல்கலைக் கழப் பதிவாளரால் 24.02.2020 வெளியிடபட்டுள்ளது. விசாரணைகள் யாழ் பல்கலைக்ழக மாண்புக்கேற்ப பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நீதிக்கும் அதேசமயம் சம்பந்தபட்ட மாணவர்களின் திருந்திய எதிர்காலத்தையும் உறுதிப்படுத்தும் வகையிலும் இடம்பெறுவது மகிழ்ச்சி தருகிறது. இதற்க்காக பழைய மணவன், முன்னைநாள் மாணவர் தலைவன் என்கிற வகை…
-
- 0 replies
- 557 views
-
-
1 . முத்தமிழ் அறிஞர் என ஒருவரை சிலர் கூறுகின்றனர் . எதை வைத்து ? 2 . தமிழரின் உணர்வுகளையும் போராட்டத்தையும் தமிழிலே தொண்டை கிழிய தமிழரிடம் கத்தி வரும் பலன் அதிகமா அல்லது பிற மொழியில் தெளிவாக பிறரிடம் எடுத்து சொல்வதின் பலன் அதிகமா ? மிக முக்கியமாக இந்திய மக்கள் . 3 . ஈழ பிரச்னை என வரும்போது தெளிவாக புலிகள் போராடுவது மக்களுக்கே என கூறுகிறார் வைகோ . ஏறத்தாழ எண்பது விழுக்காடு மக்களின் கருத்தும் அதே . இருந்தும் தேர்தல் என வரும் போது அவருக்கு சொல்லிகொள்ளும்படி வெற்றி கிடைப்பதில்லையே . ஏன்? 4 . போர் நிறுத்தம் என்ற பேரில் புலிகளின் போர் உத்தி மற்றும் பூகோள ரீதியான திட்டங்களை அறிந்து (இப்போது நடைபெறும்) போருக்கு ராணுவம் திட்டமிட்டுகொண்டிருந்ததா அல்லது நடுநிலைமை என்…
-
- 0 replies
- 2.4k views
-