கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
"கணினியுலக கொள்ளைக்காரர்கள்" எதிராக நடவடிக்கை நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் நாற்பது லட்சத்துக்கும் மேற்பட்ட கணினிகளில் சட்டவிரோத மென்பொருட்களை பதியச் செய்தார்கள் என ஏழு பேர் மீது நியூயார்க் நகர சட்டநடவடிக்கை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அமெஸான் இணைய விற்பனை நிறுவனம், நாஸா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், அமெரிக்க அரசாங்கத்தின் வரித்துறை சேவைகள் அலுவலகமான ஐ.ஆர்.எஸ். போன்றவற்றின் இணையதளங்களையும் இலக்குவைத்து சட்டவிரோத மென்பொருட்களை இவர்கள் அனுப்பியிருந்தனர். எஸ்டோனியர்கள் ஆறு பேர், ரஷ்யர் ஒருவர் அடங்கிய இந்தக் கும்பலை "சைபர் பாண்டிட்ஸ்" அதாவது "கணினியுலக கொள்ளைக்காரர்கள்" என்று சட்டநடவடிக்கை அதிகாரிகள் வருணித்துள்ளனர். நூதன சைபர் தாக்கு…
-
- 0 replies
- 1.1k views
-
-
பார்க்கிங் பகுதியில் எந்த இடம் காலியாக இருக்கிறது என தெரிந்துகொண்டு, தானே ஓடிச் சென்று நின்றுகொள்ளும் காரை ஜப்பானின் நிசான் நிறுவனம் வடிவமைத்துள்ளது. கார் தயாரிப்பில் 75 ஆண்டு பாரம்பரியம் கொண்ட நிறுவனம் ஜப்பானை சேர்ந்த நிசான் மோட்டார் கம்பெனி. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வாகனங்கள் தயாரிப்பில் தற்போது அதிக அக்கறை செலுத்தி வருகிறது. சிறிதும் புகையை கக்காத மின்சார இன்ஜின்களை கார்களில் பயன்படுத்தி வருகிறது. இந்த வரிசையில் 8-வது எலக்ட்ரிக் இன்ஜின் காரை தயாரித்துள்ளது. ‘பிவோ-3’ என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த கார் 42-வது டோக்கியோ மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. உலகின் முன்னணி நகரங்களில் பல இடங்களில் தானியங்கி பார்க்கிங் வளாகங்கள் உள்ளன. இவை முழுக்க முழுக்க எல…
-
- 0 replies
- 1k views
-
-
இரை, தண்ணீர் இல்லாமல் பல ஆயிரம் கி.மீ. தூரம் பறக்கும் ஆஸ்திரேலிய பறவையை முன்உதாரணமாக கொண்டு சூப்பர் விமானத்தை உருவாக்கும் பணியில் அமெரிக்க நிறுவனம் ஈடுபட்டுள்ளது. போர் விமானம், ராக்கெட், செயற்கை கோள் பாகங்கள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் அவற்றின் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் அமெரிக்க நிறுவனம் ‘லாக்ஹீட் மார்ட்டின்’. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலம் பெதஸ்டா நகரை தலைமையிடமாக கொண்டது. அமெரிக்க அரசுக்கு தேவையான ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள், ராக்கெட் போன்றவற்றை அதிகளவில் சப்ளை செய்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது பல ஆயிரம் கி.மீ. தூரம் நான்-ஸ்டாப்பாக செல்லக்கூடிய விமானத்தை வடிவமைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ‘ஸ்டிரேட்டோலைனர்’ என்று விமானத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 835 views
-
-
போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறிவதற்கு.. உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு பல மின்னஞ்சல்கள் யார் அனுப்பினார்கள் என்றே தெரியாமல் வந்திருப்பதை அவதானித்திருப்பீர்கள். அப்படியான மின்னஞ்சல்கள் பற்றி பலர் கவலை கொள்வதே இல்லை. ஆனால் அப்படியான மின்னஞ்சல்கள் ஆபத்து நிறைந்தவை. அவற்றில் பல உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடும் நோக்கில் அனுப்பப்பட்டவையாக இருக்கும். இவற்றை அனுப்புவபர்கள் தமது பெயரை மறைத்தே அனுப்புவார்கள். இப்போது ஜிமெயில், யாகூ போன்ற பிரபல மின்னஞ்சல் வழங்குனர்கள் Spam Filters ஐ பயன்படுத்தி இவ்வாறான மின்னஞ்சல்களை இனங்கண்டாலும், அதையும் மீறி சில மின்னஞ்சல்கள் வரத்தான் செய்கின்றன. Phissing எனப்படும் முறையை பயன்படுத்தி அனுப்பப்படும் போலி மின்னஞ்சல்கள் Spam Filters இன் கண்க…
-
- 0 replies
- 957 views
-
-
இணையத்தில் எவ்வளவோ வீடியோ மாற்றம் செய்யும் மென்பொருள்கள் கிடைக்கின்றன. சிலவற்றை காசு கொடுத்து வாங்க வேண்டும். சில குறிப்பிட்ட நாட்களுக்கு இலவச சேவை அளிக்கும். ஆனால் இந்த மென்பொருளானது வீடியோக்களை மாற்றம் செய்யும் இலவச சேவையை முழுமையாக அளிப்பதுடன் அதிக வசதிகளை கொண்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து நிறுவியதும் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள Add Video பட்டனை கிளிக் செய்வதன் மூலம் நம்மிடம் உள்ள வீடியோ படங்களை தேர்வு செய்யலாம். இதன் கீழேயே எண்ணற்ற போர்மட்டுக்கள் உள்ளது. v எந்த தரத்தில் படம் வேண்டுமோ அதனையும் நாம் தேர்வு செய்து கொள்ளலாம். ஓடியோ கோப்புகளுக்கான ஸ்கிறீன்சேவரையும் நாம் எளிதில் தேர்வு செய்து கொள்ளலாம். இதிலிருந்து நாம் You tube தளத்திற்கு நேரடிய…
-
- 0 replies
- 1.1k views
-
-
பேஸ்புக் யுகத்தில் டிவிட்டர் காலத்தில் எல்லாவற்றையும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வழி இருக்கிறது. ஆனால் நண்பர்களே இல்லாத நிலையில் இருப்பவர்கள் என்ன செய்வது? அதாவது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத வலியும் வேதனையும் இருப்பவர்கள் நிலையை எண்ணி பாருங்கள். ஏதோ ஒரு பிரச்சனை வாட்டிக் கொண்டிருக்கும். பல காரணங்களினால் அவற்றை வெளியே யாரிடமும் சொல்ல முடியாமல் போகலாம் அல்லது தயக்கம் தடுக்கலாம் இல்லை மற்றவர்களிடம் சொன்னால் தவறாக எடுத்து கொள்வார்களோ என்று அஞ்சலாம். இத்தகைய நிலையில் இருப்பவர்களுக்காக என்றே ஒரு சமூக வலைப்பின்னல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. “விஸ்ஸ்டம்” என்னும் இந்த தளத்தின் மூலம் உள்ளத்தை வாட்டிக்கொண்டிருக்கும் சோக கதைகளை பகிர்ந்து கொண்டு ஆறுதல் அடையலாம். அடிப்பையில்…
-
- 1 reply
- 1.1k views
-
-
பொதுவாக கணனி பயன்படுத்தும் அனைவருக்கும் ஒவ்வொரு IP முகவரி காணப்படும். இந்த முகவரியை கொண்டு கணணி பற்றிய தகவல்களுடன் நாம் எந்த நாட்டில் எந்த பிரதேசத்தில் எந்த பகுதியில் வசிக்கின்றோம், நாம் பயன்படுத்தும் கணணியின் வகை என்ன?, எமது கணணி எந்த ஆரேட்டிங் System பயன்படுத்துகிறோம்., எமது கணணித்திரையின் அளவு என்ன என்ற பல தகவல்களை துல்லியமாக கண்டுபிடித்துக்கொள்ள முடிகிறது. ஆனால் இவ்வாறு எம்மை, எமது தகவல்களை மற்றவர்கள் கண்டுபிடிக்காதவாறு எமது கணணியில் IP முகவரியை நாம் விரும்பும் வேறு எந்த நாட்டு முகவரிக்கும் மாற்றி விட்டால் எமது உண்மையான முகவரி மற்றும் தகவல்களை யாரும் கண்டுபிடிக்க முடியாதல்லவா?. இதற்காக இருக்கிறது ஒரு அருமையான இலவச மென்பொருள். இதன் இலவச CRACK VERSION தரவிறக்கத்தின…
-
- 1 reply
- 1.4k views
-
-
இணையத்தில் இலட்சக்கணக்கான மென்பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. இந்த மென்பொருட்களை தரவிறக்கி நம் கணனியில் இன்ஸ்டோல் செய்து பின்னர் அந்த மென்பொருளை உபயோகப்படுத்துகிறோம் அல்லது போர்ட்டபிள் அதாவது காவிச் செல்லக்கூடிய மென்பொருட்களாக உபயோகப்படுத்துகிறோம் . போர்ட்டபிள் வகை மென்பொருட்களை நம் கணனியில் இன்ஸ்டோல் செய்ய வேண்டியதில்லை. நேரடியாக உபயோகிக்கலாம். மற்றும் நம்முடைய காவிச் செல்லும் பென்டிரைவ் மற்றும் சிடி, புளொப்பி போன்றவற்றில் வைத்துக் கொண்டு எந்த கணனியில் வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம். இவ்வகை மென்பொருட்களை தரவிறக்கம் செய்வதற்கான ஒரு பயனுள்ள தளம் உள்ளது. இந்தத் தளத்தில் பிரபலமான அனைத்து மென்பொருட்கள் மற்றும் போர்ட்டபிள் மென்பொருட்களும் உள்ளன. இந்தத் தளத்தில் கீழ…
-
- 1 reply
- 1.3k views
-
-
உங்கள் கணினி ஆண் கணினியா இல்லை பெண் கணினியா என்பதை கண்டறிய பின்வரும் வழிமுறையினை பின்பற்றவும்... படி-1: முதலில் நோட்பாடினை ஓப்பன் செய்யவும். படி-2: அதில் CreateObject("SAPI.SpVoice").Speak"Hello" என்று டைப் செய்யவும்.. படி-3: அதனை computer_gender.vbs என்ற பெயரில் சேமிக்கவும். படி-4: இப்பொழுது நோட்பேடினை க்ளோஸ் செய்துவிட்டு சேவ் செய்த பைலினை ஓப்பன் செய்யவும்.. அது ஹலோ என என்ன குரலில் சொல்கிறதோ அதுவே உங்கள் கணினியின் பாலினம்... :) படித்ததில் மனதில் பதிந்தது
-
- 12 replies
- 1.8k views
-
-
வணக்கம் கள உறவுகளே , எனது வலைப்பூவில் உள்ள பதிவுகளை மற்ரயவர்கள் பிரதி எடுக்காமல் தடுப்பதற்கு , ஏதாவது இலவச மென்பொருட்கள் உள்ளனவையா ?அல்லது , நான் ஏதாவது எனது வலைப்பூவில் மாற்ரங்கள் செய்யவேண்டுமா ? யாராவது தெரிந்தவர்கள் உதவி செய்வீர்களா ? நன்றி . அன்புடன் கோமகன்
-
- 7 replies
- 1.7k views
-
-
வீடியோ கஸட் ல் இருப்பவற்றை எப்படி டிவிடி க்கு மாற்றுவது?
-
- 4 replies
- 1.9k views
- 1 follower
-
-
உங்கள் கணணிக்குள் இதை நிறுத்த 1 gigahertz (GHz) or faster 32-bit (x86) or 64-bit (x64) processor 1 gigabyte (GB) RAM (32-bit) or 2 GB RAM (64-bit) 16 GB available hard disk space (32-bit) or 20 GB (64-bit) இவை இருந்தால் போதும் , 13 நொடியில் நீங்கள் இணையத்தளத்துக்கு போகலாம் அவ்வளவு விரைவாய் இயங்குகின்றது. இங்கே சென்று தரவிறக்கம் செய்யலாம் .
-
- 4 replies
- 1.4k views
- 1 follower
-
-
சொனி அறிமுகப்படுத்தியுள்ள புதுவித டெப்லட் வீரகேசரி இணையம் 9/1/2011 1:44:54 PM சந்தையில் டெப்லட் கணனிகளுக்கான கேள்வியை தொழிநுட்ப நிறுவனங்கள் நன்கு அறிந்துவைத்துள்ளன. இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் நிறுவனங்கள் பல்வேறு வசதிகளுடன் கூடிய டெப்லட் கணனிகளை நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தி வருகின்றன. அப்பிள், செம்சுங், எச்.பி, பிளக்பெரி என பல்வேறு நிறுவனங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். தற்போது அவ்வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது 'சொனி'. சொனி நேற்று இரண்டு டெப்லட் கணனிகளை அறிமுகப்படுத்தியது. டெப்லட் பி மற்றும் டெப்லட் எஸ் என அவை பெயரிடப்பட்டுள்ளன. இவை இரண்டும் கூகுளின் அண்ட்ரோய்டின் புதிய வேர்ஷனான 'ஹனிகோம்' ஐ அடிப்படையாகக் கொண்டு இயங்கு…
-
- 1 reply
- 1.2k views
-
-
உலகின் முதலாவது 17 அங்குல எல்.ஈ.டி எச்.டி இரட்டைத் திரைகளுடன் கூடிய மடிக்கணனியை அலஸ்காவைச் சேர்ந்த ஜி ஸ்கிரீன் நிறுவனம் உருவாக்கியுள்ளது. 'ஸ்பேஸ்புக்' என இம்மடிக்கணனி பெயரிடப்பட்டுள்ளது. இக் கணனியானது விண்டோஸ் 7 இயங்குதளத்தின் மூலம் இயங்கவுள்ளது. http://www.youtube.com/watch?v=0EIVwoYh2dI&feature=player_embedded வருட இறுதியில் இது சந்தைக்கு வரவுள்ளது. இதை உருவாகியவர் ஜி ஸ்கிரீன் நிறுவனத்தின் பிரதான் நிறைவேற்று இயக்குனரும் வடிவமைப்பாளருமான அலன் ஸ்டுவெர்ட் ஆவார். மற்றைய மடி கணனிகளை விட, இதில் 50 % மேலதிக பணிகளை ஆற்ற முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் ஆரம்ப விலை 1899 அமெரிக்க டொலர்கள் என அறிவிக்கப்படுகிறது. ஏசர் நிறுவனமும் இரட்டைத் தி…
-
- 0 replies
- 876 views
-
-
Hi Guys, I got some .mkv files(downloaded ferom internet) I got a bluray burner installed in my PC. I am having problems in burning these files to a bluray disc. Does anyone know how to do this? What sort of soft ware you need? I have tried Nero 10 multimedia suit and Power DVD version 10. Both has the capability to burn Blurays, but did not work for me. I downloaded both from Inet. Probably need an upgrade. Any ideas??. Thanks
-
- 2 replies
- 1.1k views
-
-
Cashback பணமீள்ஈடு இணைய அங்காடியில் பொருட்கள் வாங்கும் போது எவ்வாறு பணம்சேமிக்கலாம்? என்பதை பற்றி பார்ப்போம். Cashback பணமீள்ஈடு அமைப்பானது (system) நாங்கள் பொருள் வாங்கும்போது, செலுத்திய பணத்தின் ஒருபகுதியை மீளப்பெறுவதாகும். எவ்வாறு? முதலீல் நாங்கள் கீழ் கண்ட இணைப்பை சுட்டி அல்லது முழுவதுமாகக ஒரு எழுத்து விடாமைல் நகல் எடுத்து அதை உலாவியல் ஒட்டவும். 1. YINGIZ shopping community - Geld zurück statt Bonus-Punkte oder Meilen! Adresse: https://www.yingiz.com/?ref=36520#.TlkfkRcdlpE.email 2. http://www.tamola.de/empfehlung/NjM0OQ,,/ இந்த இரண்டிலும் உங்களை இணைத்துக்கொள்ளவும். இது வெகு இலகு * ஊங்கள் மின்-அஞ்சல…
-
- 0 replies
- 711 views
-
-
ஸ்டீவ் ஜொப்ஸ் (ஆப்பிள்) பதவியை துறந்தார் உலகின் முதலாவது இடத்தில் உள்ள நிறுவனமான ஆப்பிளின் (Apple) பிரதம நிர்வாக இயக்குனர் (CEO) இன்று தனது பதவியை இராஜினாமா செய்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இவர் பல தடவை தான் நேரம் வரும்பொழுது இந்த பதவியை துறப்பேன் என கூறிவந்துள்ளார். நாளுக்கு நாள் நிர்வாகம் செய்துவந்த ரிம் குக் ஆப்பிளின் பிரதம பதவியை ஏற்றுள்ளார். Apple CEO Steve Jobs has resigned and will be replaced by former Chief Operating Officer Tim Cook, the company said late Wednesday. Jobs will stay on as Apple's chairman. Apple made no mention of Jobs' health in its statement about the change, but Jobs alluded to it in the …
-
- 5 replies
- 1.2k views
-
-
எச். பி. இன் வெப் ஓஎஸ் இன் வெளியேற்றம் கணணி உலகில் ஒரு பெரிய நிறுவனமான ஹ்லேட் பக்கெட் (Hewllet Packard) நிறுவனம், தனது 'வெப் ஓ எஸ்' (web OS) இனை கரு மென்பொருள் இயக்கியாக (operatin system) கொண்ட உபகரணங்களை செய்யப்போவதில்லை என வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இதனால் இதன் பலகை கணணிகள் விலைகள் பெரியளவில் சரிந்தன. 16GB பலகை கணணிகள் 99USD க்கும், 32GB பலகை கணணிகள் 149USD க்கும் விற்பனையாகின. கிட்டத்தட்ட 300USD குறைத்து இவை விற்கப்பட்டன. இதனால் பல இடங்களில் சில மணித்தியாலங்களிலேயே இவை முடிந்துவிட்டன. பலகை கணணிகள் விடயத்தில் ஆப்பிள் நிறுவனமே முன்னணியில் உள்ளது. எச். பி. இன் கைத்தொலைபேசிகளும் இதனால் பாதிக்கப்படும். அதேவேளை ஒட்டு மொத்த தனது கணனி வியாபா…
-
- 3 replies
- 1.4k views
-
-
-
உலகத்தை உலுக்கும் 'சைபர்' தாக்குதல்கள் அமெரிக்க கணனிகளை பாதுகாக்கும் நிறுவனமான McAfee, ஐ.நா. நிறுவனங்கள், அரசுகள் உட்பட்ட 72 அமைப்புக்கள் கடும் 'சைபர்' தாக்குதல்களுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளது. யார் இந்த தாக்குதல்களுக்கு பின்னால் உள்ளனர் என்பதை சொல்ல அந்த நிறுவனம் மறுத்துவிட்டது. இருந்தாலும் பலரும் சீன அரசையே சந்தேகிக்கின்றனர். கனேடிய அரசு இதில் இரண்டாவது இடத்தில் கூடிய தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்த தாக்குதல்கள் மூலம் பல வேறு இரகசியங்கள் திருடப்படுவதாக கூறப்படுகின்றது. Massive cyber attack hit Canadian government, companies http://www.montrealgazette.com/news/Massive+cyber+attack+Canadian+government/5198160/story.html Secur…
-
- 2 replies
- 1.4k views
-
-
http://youtu.be/ZboxMsSz5Aw முப்பரிமாண அச்சுப்பொறி-3D Printer மேற்காணும் ஒளிப்படத்தில் வரும் முப்பரிமாண அச்சுப்பொறியை பாருங்கள்.. இயந்திர உதிரிப்பாகங்களை வடிவமைத்த பின் அதன் உண்மை நகலை பகுப்பாய இவ்வச்சுப் பொறி மிகுந்த உபயோகப்படக்கூடியது... கூடியவிரைவில் மனிதனின் அசல் வடிவத்தை முப்பரிமாணத்தில் ஸ்கேன் செய்து இன்னொரு நகலையும் உருவாக்கலாம். .
-
- 5 replies
- 1.6k views
-
-
முகநூலில் பாடல்(MP3) இணைப்பது பற்றி அறிந்திராதவர்க்கு மட்டும்.
-
- 0 replies
- 1k views
-
-
கணணியை முழுவதுமாக தமிழில் மாற்றுவதற்கு . உங்கள் கணணியை முற்று முழுதாகவே தமிழில் மாற்ற நம்மில் பலருக்கு ஆசை இருக்கலாம். ஆனால் எவ்வாறு மாற்றுவது? அதற்கு எவ்வாறான மென்பொருட்கள் தேவை? இது இலவசமாக கிடைக்குமா? என்பது பலரின் எதிர்பார்ப்பு. உங்களிடம் BitLocker குறியாக்கம் செயல்படுத்தப்பட்டிருந்தால் LIP ஐ நிறுவுவதற்கு முன் அதை இடைநிறுத்தி வைக்கவும். Control Panelஐ திறந்து System and Security என்பதைத் தேர்ந்தெடுத்த பின், BitLocker Drive Encryption என்பதைத் தேர்ந்தெடுக்கவும். Suspend Protection என்பதைக் கிளிக் செய்யவும். Windows 7 LIPஇன் 32 பிட் மற்றும் 64 பிட் பதிப்புகளின் பதிவிறக்கங்கள் தனித்தனியே கிடைப்பதால் பதிவிறக்கத்தைத் தொடங்குவதற்கு முன் Windows 7இன் எந்த பதிப்பை ந…
-
- 1 reply
- 988 views
-
-
Posted by: on Jun 22, 2011 உலகின் அதி வேக சுப்பர் கணனியை (Super Computer) கொண்ட நாடாக சீனாவே இருந்து வந்தது. சீனாவின் டியானி (Tianhe) - 1 A என அழைக்கப்படுவதே உலகின் அதிவேக சுப்பர் கணனி. இந்நிலையில் சீனாவின் சாதனையை ஜப்பான் முறியடித்துள்ளது. அக்கணினிக்கு சுப்பர் கணனி கே ('K') எனவும் பெயரிட்டுள்ளனர். இதனை ஜப்பானின் கணனி தயாரிப்பு நிறுவனமான 'புஜிஸ்டு' ஆகும். இக்கணனியானது தற்போது ரயிகன் எட்வான்ஸ் இன்ஸ்டிடியுட் போர் கொம்பியூடேஷனல் சயன்ஸ் (RIKEN Advanced Institute for Computational Science) இலேயே அமைக்கப்பட்டுள்ளது. இதன் வேகம் 8.162 பீடாபுலொப்ஸ் (Petaflops). அதாவது ஒரு செக்கனில் 8.162 குவாட்ரில்லியன் (quadrillion) கணிப்புக்களை மேற்கொள்ளக…
-
- 3 replies
- 1k views
-
-
நாடகம் ஒன்றின் உரையாடல்களை எப்படி கணணி மூலம் இறுவட்டில்(cd) (audio dupping)பதிவு செய்யலாம். முதலில் பதிவு செய்து விட்டு பின்பு மேடையில் ஒலி வட்டையும் போட்டு பிள்ளைகள் பேசி நடிக்கும் பொழுது ஒலியமைப்பு தெளிவாகவும் சபை யோருக்கு கேட்கக் சுடியதாகவும் இருக்க வேண்டும்.ஒலி வாங்கியைப் பாவித்து நாடகம் போடும் பொழுது ஒலி வாங்கி அடிக்கடி சொதப்பி விடுவதால் இப்படிச் செய்யலாம் என்று நினைக்கிறேன். தயவு செய்து யாராவது உதவுவீர்களா?
-
- 2 replies
- 1.5k views
-