Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே.பி யை சிங்களத்திடம் காட்டிக் கொடுத்து சிக்க வைத்த கும்பலின் அடுத்த இலக்கு திரு உருத்திர குமாரன்.....?

Featured Replies

உண்மையின் நெருப்பில்:

கே.பி யை சிங்களத்திடம் காட்டிக் கொடுத்து சிக்க வைத்த கும்பலின் அடுத்த இலக்கு திரு உருத்திர குமாரன்.....?

இங்கே அழுத்தி பார்க்கவும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கே.பி யை சிங்களத்திடம் காட்டிக் கொடுத்து சிக்க வைத்த கும்பலின் அடுத்த இலக்கு திரு உருத்திர குமாரன்.....?

உண்மையின் நெருப்பில்:

கே.பி யை சிங்களத்திடம் காட்டிக் கொடுத்து சிக்க வைத்த கும்பலின் அடுத்த இலக்கு திரு உருத்திர குமாரன்.....?

[ வியாழக்கிழமை, 12 ஓகஸ்ட் 2010, 07:42.36 பி.ப | இன்போ தமிழ் ]

தனக்குள் மோதித் தன்னையே அழிக்கிறது தமிழினம்.

ஈழத்தில் சிங்கள அரசு தமிழின அழிப்பை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. தமிழரின் பூர்வீகத் தாயக மண் சிங்களப் படைகளாலும் அரசின் சிங்களக் குடியேற்றங்களாலும், அந்நிய நாட்டு முதலீடுகளாலும் பறிக்கப்பட்டு வளங்கள் சுரண்டப்படுகின்றன.

தமிழரின் வழிபாட்டிடங்கள் தோறும் புத்தமத வழிபாட்டுச் சின்னங்களும் தலங்களும் தளிர்விடுகின்றன. தமிழரின் கல்வி கலாச்சார கருத்து மற்றும் வேலை வாய்ப்பு உரிமைகள் உயர் பாதுகாப்பு வலையங்கள் என்ற காரணத்தால் முற்றாக மறுக்கப்படுகின்றன. போரினால் வெளியேற்றப்பட்ட மக்களை வடக்கு கிழக்கு அனைத்துப் பகுதிகளிலும் மீளக் குடியேறவிடாது இராணுவ மற்றும் அவசரகால விதிச்சட்டங்கள் தடுக்கின்றன.

இவை அனைத்தும் அப்பட்டமான இன அழிப்பு மற்றும் மனித உரிமை மீறல் என்பது உலகமே அறியும். ஆனால் எவரும் தவறு எனச்சுட்டிக் காட்டவோ? அல்லது தட்டிக் கேட்கவோ? முடியாத நிலை இருக்கிறது. தமிழர் தரப்பில் பேசும் தார்மீக கடமை கொண்டுள்ள தமிழர் தேசியக் கூட்டமைப்பு அரசின் சட்டப் பிடிக்குள் பாம்பின் வாய்த் தேரை போல் திக்குத் திணறித் தவிக்கிறது.

உலக நாடுகள் சீன இந்தியத் தலையீடுகள் காரணமாகவும் பூகோள இராணுவ கேந்திர நலங்கள் வணிக நலன்கள் சார்ந்தும் சிங்கள அரசின் சகல செயற் பாடுகளையும் பயங்கரவாதத்துக்கு எதிரான அரசின் நியாயமான (?) நடவடிக்கைகளே என பாராமுகமாக உள்ளன.

சில அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அயரா முயற்சியால் தமிழருக்கு எதிரான அராஜக அடக்கு முறை, இன அழிப்பு போர், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் என்பன சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதி வழங்க வேண்டும் என்பதில் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றன.

* சில சிங்கள மனித உரிமை ஆர்வலர்களே இம்முயற்சியில் ஈடுபடும் போது புலத்தில் உள்ள தமிழ் மக்களின் அமைப்புகள் முக்கியமாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பு தனக்குள் பெரும் உட்பூசலை வளர்த்து புலம் பெயர் மக்களை ஆக்க பூர்வமாக அரசியல் முன்னெடுப்புகளில் வழி நடக்தாது காலத்தை வீணடித்து வருகிறது

* முதலில் தேசியத் தலைவர் இருக்கிறார் இல்லை என்று மக்களைக் குழப்பிப் பட்டிமன்றம் நடத்தி கே.பி.யின் தலைமையை எதிர்த்தனர். தலைமைப் போட்டியின் விளைவாக கே.பீயைக் கொழும்பு அரசு கைது செய்து விடும் அளவுக்கு தமது செயற்பாடுகளை முன்னெடுத்தனர். அழுத்தவும்

* கே.பி.யின் தலைமையை ஏற்று நாடு கடந்த தமிழீழ அரசமைப்புப் பணிகளைச் செய்து வரும் உருத்திரகுமாரனுக்குப் பாரிய தடைகளை ஏற்படுத்தியபடியே வட்டுக்கோட்டைப் பிரகடனம் என்ற துருப்பிடித்த வாளைத் தூக்கிப் பிடித்து கூத்தாடினர். அழுத்தவும்

* மக்களின் ஆணையைப் பெற்றுக் கொண்ட வட்டுக்கோட்டைப் பிரகடனம் இப்போது எந்தக் கோட்டைக்குள் தூங்கிக் கிடக்கிறது?அழுத்தவும்

* அதன் அடுத்த நடவடிக்கை என்ன என்பதை எவரிடம் கேட்டு அறிவது?

* இலங்கை இந்திய அரசுகள் முக்கியமாகப் பயப்படுவது நாடு கடந்த தமிழீழ அரசுப் பிரகடனமும் அதன் வளர்ச்சியம் என்பது இவர்களுக்குத் தெரியாத ஒன்று எனக் கூறிவிட முடியாது. [அழுத்தவும்]

* இதற்கு எதிர்ப்பாகச் செயற்படுவோரின் பின்னணியில் நன்கு படித்த சிலரும் உள்ளனர். சிறந்த இணையத்தளமும் ஆங்கிலத்தில் புலமை கொண்ட ஆசிரியர் குழுவும் உள்ளது.

* தமிழர் நலனுக்காகப் பயன்படுத்தப் வேண்டிய இத்தகைய திறமை தமிழினத்தின் அழிவுக்கு உதவுவது மிகக் கேவலமான நிலையாகும்

இதனை உணர மறுத்து இந்த பகுதியினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் அபிமானிகள் என்ற நிலையில் நிலைமையைச் சீர்தூக்கிப் பாராது இருப்பது பெரும் விசனத்துக்கு உரியது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும் அவரது குடும்பமும் எண்ணற்ற மாவீரர்கள், பொது மக்கள் கொடுத்த விலையும் தியாகமும் தமிழ் மக்கள் பட்ட, படுகின்ற, துன்ப துயரங்களையும் இவர்கள் சிந்திக்கத் தவறுவது மன்னிக்க முடியாத குற்றம்.

* இன்று இவர்கள் கே.பியை ஒழித்து விட்டதுடன் நிற்கவிலை.

* இவர்களின் அடுத்த இலக்கு திரு உருத்திர குமாரன் என்பதை மிக எளிதாக உணர முடியும்.

ஆதன் முன் முயற்சியாகவே உருத்திர குமாரன் கே.பி யின் வழிகாட்டலில் சிங்கள அரசின் வேலைத் திட்டத்தில் இயங்குகிறார் என்ற கூச்சல் ஒரு பக்கம்.

இவர்கள் அத்துடன் நில்லாது நாடு கடந்த அரசை ஜீ.ரீ.வீ. ஆதரிப்பதால் அது ஒரு துரோகிகளின் ஊடகம் என்ற பொய் பிரசாரத்தின் மூலம் இதே குழவினர் சுவிஸில் தொடங்கும் புதிய தொரு தமிழ் தொலைக் காட்சிச் சேவைக்கு தமிழரை இழுக்கும் பணியில் இறங்கி உள்ளனர்.

இதற்காக இவர்கள் சிறையில் உள்ள கே.பீ.யை துரோகி எனவும் அவரோடு சேரந்த உருத்திர குமாரன் , நாடுகடந்த தமிழீழ அரசு, அதற்கு ஆதரவான தமிழ் மக்களின் துன்ப துயரங்களை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியும் உணர்வாலும் உறவாலும் புலம் பெயர் தமிழ் மக்களுடன் இரண்டறக் கலந்து விட்ட ஜீ.ரீ.வீ. தொலைக் காட்சியையும் ஒழித்துக் கட்டிவிடும் வகையில் செயற்படுவது அப்பட்டமாகத் தெரிகிறது.

முன்னர் இவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசு சர்வதேச முதலாளித்துவ ஆதிக்கத்துக்கு தமிழினத்தை அடகுவைக்கும் முயற்சி எனப் பிரச்சாரப் படுத்தி அந்தப் பொய்ப் பிரச்சாரம் தமிழ் மக்களிடையே எடுபடாமல் போனதை தமிழ் மக்கள் மறந்துவிட மாட்டார்கள்.

தலைவர் இருக்கிறார் இல்லை என்ற இவர்களின் தலைமைப் பதவிப் போட்டியில் தமிழரின் வானொலியாக விளங்கிய அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ஐ.பீ.சீ) பல மாற்றங்களைக் கண்டு பிரபல ஒலி பரப்பாளர்கள் ஓரம் கட்டப்பட்டதும் வெளியேற்றப் பட்டதும் தமிழ் மக்கள் அறிந்ததே.

* புலத்தில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக எந்த வித அரசியல் செயற் பாட்டிலும் ஈடுபடுத்தாது மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியும் சிங்கள அரசின் அனைத்துக் கொடுமைகளையும் தமிழினம் மௌனமாக அங்கீகரிக்கிறது என்ற தோற்றப் பாட்டை வெளிப்படுத்தவும் இவர்களின் பதவிப் போட்டிதான் காரணம் என்பதில் சந்தேகமில்லை.

எத்தனையோ ஆண்டுகளாக உலக உளவுத் துறைகளின் கண்களில் மண்ணைத் தூவித் தமிழ் மக்களின் போருக்குத் தேவையான சகல ஆயதங்களையும் உலகின் மூலை முடுக்கெல்லாம் வாங்கிக் குவித்து பணி ஆற்றிய கே.பி யை யார் யாரோ எல்லாம் துரோகி என மிக எளிதாகக் குற்றம் சுமத்தித் தாமே தேசியவாதிகள் என மார்தட்டும் தார்மீகம் யாருக்கு வரும்?

நிச்சயமாகப் பதவி வெறி பிடித்த சந்தர்ப்ப வாதிகளால் மட்டுமே இத்தகைய மனநிலை ஏற்படும்.

மறுக்க முடியுமா?

அப்படியே அவரை விட்ட இவ்விடத்தில் இத்தகையோரின் நடவடிக்கையால் ஓரம் கட்டி வெளியேறி தாமாக வாழ்ந்து வந்த கே..பி யை தலைவரே [தலைவரின் கடிதம் இணைப்பில்] மீண்டும் அழைத்ததால் வந்தார் என்பதை இவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று சிறைவாசமும் துரோகி என்ற பட்டமும் கிடைக்குமா?

தேசியவாதிகளே உங்கள் பதில் என்ன?

இப்போது எமக்குத் தேவை யார் துரோகி என்ற ஆய்வு அல்ல மாறாக யார் என்ன செய்கிறோம் என்ன செய்யப் போகிறோம் எவர் என்ன பேசுகிறார் என்ற சுய விமர்சனம் மட்டுமே காலத்தின் கட்டாயமாக உள்ளது.

* நாடு கடந்த அரசு அமைப்பை தொடர்வதா இல்லையா?

* தாயக மக்களின் விடுதலை அவர்களுக்கான நீதி விசாரணை நிவாரணம் இவைக்கான நடவடிக்கை என்ன எடுத்தோம்?

* ஏன் இதுவரை எடுக்க வில்லை?

* சில தமிழர் பேரவைகள் முடக்கப்பட்டது ஏன்?

* ஐ.நா. மற்றும் மனித உரிமை அமைப்புகளுடன் சிறப்பாக தொடர்புகளை ஏற்படுத்தி தமிழர் பிரச்சனையை முன்னெடுத்த சுவிஸ் தமிழர் பேரவை முடக்கப்பட்டதால் ஈழத் தமிழர் பிரச்சனை வெளியே கேட்க முடியாதபடி செய்தவர்கள் எப்படி மற்றவரைத் துரோகிகள் எனலாம்?

முடிவாக,

இந்திய முன்னாள் இராணுவத் தளபதி ஹரிகரன் அண்மையில் தமது ஆய்வில் கூறிய சில வரிகளை கவனத்தில் எடுப்பது அவசியமாகிறது:

இத்தருணத்தில் காலியில் இடம் பெற்ற கடல் பாதுகாப்பு மாநாட்டில் பாதுகாப்புச் செயலர் கொட்டபாயா ராஜபக்ஷ தெரிவித்த கருத்து. நாம் தனித்தனியாக எவ்வளவு பலமுள்ளவராக இருப்பினும் பரவாயில்லை, நாம் தனியாக உள்ளவரைக்கும் கடல் கடந்த அரசு சாராச் செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகளால் ஏற்படும் ஆபத்துகளுக்கு நாம் வலு அற்றவர்களாகி விடுவோம்.

மீண்டும் ஹரிகரன் வரிகளில் சில.

* ஸ்ரீலங்காவினால் புலம் பெயர் தமிழரைத் தமிழீழ ஆதரவுக்கான காரணியில் இருந்தும் வன்முறைக்கு உயிர் கொடுக்காமல் செய்ய முடியுமா?

இதற்கான பதிலை இலகுவாகச் சொல்லிவிட முடியாது. புலத்துத் தமிழர் ஆயுதப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றினர் என்பதை உதாசீனப் படுத்த முடியாது. அவர்கள் அடிப்படையில் இரு தளத்தில் உள்ளனர். ஓன்று கடந்த கால கசப்பான அனுபவத்தால் ஏற்பட்ட உணர்வு நிலை. இவர்கள் தமது உறவுகளுக்கு நேர்ந்த கதியால் கலங்கிப் போயுள்ளனர். கே.பி. மூலம் சிறீ லங்கா அரசு எடுத்துவரும் அரசியல் முன்னெடுப்புகள் இவர்களிடம் பயன்படலாம். மற்றைய தளத்தினர் தமிழரின் அடையாளம் தமிழீழம் என்பவற்றைப் பேணுவதில் கொள்கையால் ஆழமாக பற்று உறுதி கொண்டவர்கள். இவர்களின் தொடக்கப் புள்ளி தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்துக்கும் முற்பட்டது.

வரலாற்றுக்கால அனுபவத்தால் இவர்கள் சிங்களவர்களின் அரசியல் உட்கிடக்கைகளில் ஆழமான சந்தேகம் கொண்டுள்ளவர்கள். கே.பி. போன்றவர்களால் வழங்கப்படும் நியாயங்களால் முழுவதுமாக எக்காலத்திலும் வெல்லப்பட முடியாதவர்கள். எப்படி இருப்பினும் அவர்களின் நம்பிக்கைகளில் கே.பி. ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.

இறுதியாக,

புலம் பெயர் தமிழினமே ஒன்றை மட்டும் நினைவு படுத்த வேண்டி உள்ளது.

* 1920ல் யாழ்பாணத் தமிழ் வாலிபர் சங்கம் எழுப்பிய தமிழரின் சுதந்திரக் குரலை கொழும்பில் ஒரு தொகுதியில் போட்டியின்றித் தெரிவாகும் ஆசையில் சேர் பொன்னம்பலம் அருணாசலம் சிங்களவருக்கு துணைபோய்க் கெடுத்தார். பின்னர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் சுந்தரலிங்கத்தைக் காட்டி தாமே முன்னெடுத்த தமிழர் போராட்டத்தைக் கை விட்டார். அவரிடமிருந்து பிரிந்து தந்தை செல்வர பல முறை ஏமாற்றப்பட்டு கைவிட்ட நிலையில் பிரபாகரன் தமிழர் போராட்டத்தை முன்னெடுத்து நந்திக் கடல்வரை எடுத்து வந்தார்.

* இன்று தலைமைப் போட்டியால் கூறுபட்டுப் போகும் நிலையை எப்படி சமாளிக்கப் போகிறோம்?

* ஓருவரை ஒருவர் துரோகி எனக் கூறுவதால் சுதந்திரம் பெற்றுவிட முடியுமா?

www.infotamil.ch

ஆய்வாளர் த.எதிர்மன்னசிங்கம் இன்போதமிழ் குழுமம்

கே.பி யை சிங்களத்திடம் காட்டிக் கொடுத்து சிக்க வைத்த கும்பலின் அடுத்த இலக்கு திரு உருத்திர குமாரன்.....?

* ஓருவரை ஒருவர் துரோகி எனக் கூறுவதால் சுதந்திரம் பெற்றுவிட முடியுமா?

www.infotamil.ch

ஆய்வாளர் த.எதிர்மன்னசிங்கம் இன்போதமிழ் குழுமம்

இது நல்ல கேள்வி!

ஆனால் இங்கை பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்ததுபோல் அல்லோ செயல்படுகின்றார்கள்.!

கி.பி.முன் கி.பி.பின்என்பதுபோல்.

மே19க்கு முன்.மே19க்குபின் என்பதாய் தங்கள் சுயரூபங்களை காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்,

இந்த லட்சனத்தில் “சுதந்திரம்” கிடைச்சமாதிரித்தான்.

come on நெல்ஸ் and co. :o

கே.பி மறைந்து இருந்து, இருந்தால், காட்டிக்கொடுக்கப்பட்டார் என்று சந்தேகப்படலாம், குற்றம் சாட்டலாம்.

ஊடகங்களில் மணித்தியாலக்கணக்கில் இசையும் கதையும் நிகழ்சி நடத்தியவரை.

காட்டிக்கொடுத்துவிடார்கள் என்று ஒப்புக்கு, ஒப்பாரிவைப்பதை நிறுத்திவிட்டு ஆகவேண்டியதைப்பாருங்கள்.

* கே.பி.யின் தலைமையை ஏற்று நாடு கடந்த தமிழீழ அரசமைப்புப் பணிகளைச் செய்து வரும் உருத்திரகுமாரனுக்குப் பாரிய தடைகளை ஏற்படுத்தியபடியே வட்டுக்கோட்டைப் பிரகடனம் என்ற துருப்பிடித்த வாளைத் தூக்கிப் பிடித்து கூத்தாடினர். அழுத்தவும்

www.infotamil.ch

ஆய்வாளர் த.எதிர்மன்னசிங்கம் இன்போதமிழ் குழுமம்

உருத்திரகுமார் அண்ணை KP யின் தலைமையை ஏற்றார் எண்டதே மிகப்பெரிய பொய்... இதுக்கும் மேலை இந்தக்கட்டுரையை படிப்பது நேர விரையம்....

  • கருத்துக்கள உறவுகள்

கேபி காட்டிக்குடுக்கப் பட்டார் எண்டால் எதுக்கு கோத்தாவை இருக்கி அணைச்சு உம்மா குடுத்தவர்? :o சரணடைஞ்ச யோகி அண்ணன், பாலகுமாரன் அண்ணன் ஒருத்தரும் இப்பிடி பல்டி அடிக்க இல்லையே..! :lol::lol:

உருத்திரகுமார் அண்ணை KP யின் தலைமையை ஏற்றார் எண்டதே மிகப்பெரிய பொய்... இதுக்கும் மேலை இந்தக்கட்டுரையை படிப்பது நேர விரையம்...

உருத்திரகுமார் வராலாற்றிட்கு குறுக்க படுத்துக்கிடக்கின்றார்,

வாராலாறு அவரையும் கடந்து செல்லும்.

Edited by aathirai

கேபி காட்டிக்குடுக்கப் பட்டார் எண்டால் எதுக்கு கோத்தாவை இருக்கி அணைச்சு உம்மா குடுத்தவர்?

2002 ம் ஆண்டிலை இருந்து புலிகளின் மாத கொடுப்பனவை நம்பி வாழ்ந்து வந்தது சலிப்படைந்து இருந்து இருக்கும்...

புலிகளின் முதலீடுகளை கண்டு பிடிச்சு மிரட்டி பெற்று சிங்கள அரசாங்கத்திடம் குடுத்தால் KP யின் மனைவி பெயரில் தாய்லாந்தில் புலிகள் இயக்கிய இண்டைக்கு KP குடும்பம் இயங்கி வரும் நிறுவனத்தை வெளிப்படையாக எடுத்து நடத்த முடியும் தானே....??? அதோடை சர்வதேசத்தாலை தேடப்படும் குற்றவாளியாக ஒளிந்து வாழ வேண்டிய தேவை இல்லை...! வெளிப்படையாக கருணா போல நடமாடலாம்...

இலங்கை அரசு கைது செய்து அண்ணையின் அகிம்சை வளியை பாராட்டி வெளியாலை விட்டால் அடுத்த நெல்சன் மண்டேலா அண்ணை தானே...

இவ்வளவுக்கும் திரைக்கதை வசனம் எழுதி குடுத்து வசதி செய்த கோத்தாவை கண்ட உடனை கட்டிப்பிடிச்சு உம்மா குடுக்காமல் என்ன செய்யுறது...?? :o

Edited by தயா

  • தொடங்கியவர்

கே பி இன்று செய்துகொண்டிருப்பது எங்களுக்காக போராடிய கடைசிவரை தலைவனோடு நின்று போராடிய

அந்த பிள்ளைகளுக்காக உதவிசெய்வதை நான் வரவேற்கிற அதேநேரத்தில் அவர் தற்போது அரசாங்கத்தின் பிடியிளுள்ளார்

அவரை புலம் பெயர்ந்த சமூகம் பின்தொடர்ந்து செல்வது முட்டாள்தனம் . ஆனால் உருத்திர குமாரை நாடுகடந்த அரசை

இயங்கவிடாது முட்டுக்கட்டையாக ஏன் இவர்கள் செயற்படுகிறார்கள் என்பதுதான் எனது கேள்வி ??,

இலங்கை அரசும் இந்தியாவும் பயப்படுகிற நாடுகடந்த அரசை ஏன் கே பி வழிநடத்துகிறார் என குறை கூற வேண்டும் .

ஆரம்பத்தில் கே பி கைது செய்யமுன் அவர் வழிநத்தியிருக்கலாம் ஆனால் தற்போது அந்தநிலையில் நாடுகடந்த அரசு இல்லை .

என்பதே எனது கருத்து . அத்துடன் கே பி யை தொடர்ந்து புலம் பெயர்ந்த சமூகம் பின்தொடர்ந்து செல்லவும் வேண்டாம்.

அவர் இனிமேல் தமிழீழ விடுதலைக்கு உதவவும் முடியாது.அவர் இனிமேல் நம் எதிரியே

  • கருத்துக்கள உறவுகள்
:lol: கே.பீ யை நல்லவர் என்று காட்ட இன்போத்தமிழ் குழுமம் படாத பாடுதான் படூது போங்கோ.
  • தொடங்கியவர்

:lol: கே.பீ யை நல்லவர் என்று காட்ட இன்போத்தமிழ் குழுமம் படாத பாடுதான் படூது போங்கோ.

:lol: :lol: உங்கள் எல்லோரையும் இறைவன் வந்தும் காப்பாற்ற முடியாது :lol:

Edited by suryaa

  • கருத்துக்கள உறவுகள்

:lol: யோவ் சூர்யா,

என்னைக் காப்பத்திறதைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். அது என்ர பிரச்சனை. நீர் உம்மைப்பற்றி மட்டும் கவலைப்படும், காப்பாற்ற ஆரும் வருவினமோ எண்டு பாரும். வந்திட்டினம் தூக்கிக்கொண்டு...!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரணடைஞ்ச யோகி அண்ணன், பாலகுமாரன் அண்ணன் ஒருத்தரும் இப்பிடி பல்டி அடிக்க இல்லையே..! :lol::lol:

அவையள் எல்லாம் பிழைக்கத் தெரியாதவை கண்டியளோ

  • தொடங்கியவர்

:lol: யோவ் சூர்யா,

என்னைக் காப்பத்திறதைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். அது என்ர பிரச்சனை. நீர் உம்மைப்பற்றி மட்டும் கவலைப்படும், காப்பாற்ற ஆரும் வருவினமோ எண்டு பாரும். வந்திட்டினம் தூக்கிக்கொண்டு...!!!!!!!!

இந்த விசயதிலாவது சூடு சுரணை இருக்கே உன்ரபிரச்சினை என்ற பிரச்சினை என்ற சுயநலத்தை விட்டு

நாடு பெருசென்று வாழப் பழகுங்கோ நான் சொன்னது உம்மை மட்டுமில்ல என்னையும் சேர்த்துதான்

இந்த விசயதிலாவது சூடு சுரணை இருக்கே உன்ரபிரச்சினை என்ற பிரச்சினை என்ற சுயநலத்தை விட்டு

நாடு பெருசென்று வாழப் பழகுங்கோ நான் சொன்னது உம்மை மட்டுமில்ல என்னையும் சேர்த்துதான்

:lol::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.