Jump to content

ஒடியல் கூழ்


Recommended Posts

பதியப்பட்டது

ஒடியல் கூழ்

தேவையான பொருட்கள்:

ஒடியல் மா - 1/2 கிலோ

மீன் - 1 கிலோ

நண்டு - 6 துண்டுகள்

இறால் - 1/4 கிலோ

பயிற்றங்காய் - 250 கிராம்

(1 அங்குல நீள துண்டுகள்)

பலாக்கொட்டைகள் - 25

(கோது நீக்கி பாதியாக வெட்டியது)

அரிசி - 50 கிராம்

செத்தல் மிளகாய் - 15 அரைத்தது

பழப்புளி - 100கிராம்

உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

முதலில் ஒடியல் மாவை ஓரளவு நீர் விட்டு ஊறவிடவும். நீரில் மிதக்கும் தும்புகளை அகற்றி மாவை நன்றாக

நீரில் கரைக்கவும். பெரிய பாத்திரத்தில் போதியளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும். அதனுள் கழுவிய அரிசி, பயற்றங்காய், பலாக்கொட்டைகள், மீன்துண்டுகள், மீன்தலைகள், நண்டு, இறால் ஆகியவற்றை போட்டு நன்றாக அவியவிடவும். நன்றாக அவிந்ததும் ஒடியல் மா, அரைத்து வைத்துள்ள மிளகாய், கரைத்தபுளி என்பவற்றைப் போட்டு கலந்து சுவைக்கேற்ப உப்புச் சேர்த்து குறைந்த நெருப்பில் வைத்து கூழ் தடிப்பானதும் சூடாக பரிமாறவும்.

:lol: :P :P :lol:

  • Replies 59
  • Created
  • Last Reply
Posted

உறைப்பு கூட போடாதிங்க ;)

Posted

ஒடியல் என்றால் என்ன?

Posted

உங்களுக்கு பனை மரம் தெரியுமா?

panai.jpg

Posted

உங்களுக்கு பனை மரம் தெரியுமா?

தூயா பனைமரம் எண்டா அந்த கறுப்பா உயர்ந்து வளந்திருக்குமே அதுவா :roll:

அதுவென்றால் எனக்குத் தெரியும் :wink:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒடியல் என்றால் என்ன?

அருமையான கேள்வி நண்பா!! அற்புதம்!

முதலில் பனை மரம் என்பதை தாங்கள் தெரிந்து கொண்டுள்ளீர்கள் தானே!! அது ஒரு வகை நார் உருவி வகையைச் சார்ந்தது. அதற்கு ஆணி வேர் கிடையாது. கறுப்பு நிறத்தில் கிளைகளற்று வளரும் மரம் தான் பனை மரம்!

Posted

அருவி பனமரம் கறுப்பு என்று கண்டுபிடித்ததற்கு பரிசு உண்டு...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பனை மரங்கள் யாழ்பாணம் போன்ற தமிழர் பிரதேசங்களிலும், தமிழ்நாட்டின் பிரதேசங்களிலும் அதிகமாக வளருமாம். நீங்கள் கண்டதில்லையா?

Posted

பனைமரம் தெரியும்.இன்று காலை கூட எழுந்த வுடன் 1 லிட்டர் பதநீர் குடித்தேன். ஒடியல் என்றால் பனங்கிழங்கா ?

Posted

தவறான பதில் செந்தில், 3 வாய்ப்புகளில் 1 போய்விட்டது.

Posted

அட பனைமரம் தெரிஞ்ச எனக்கு பதனீர் தெரியலையே அப்படி என்றால் என்னப்பா

Posted

பனைமரமும் தெரியும், "அழகான அந்த பனைமரமும் தெரியும்".......

Posted

ஆனால் "ஒடியல்"தெரியலையே, அருவி உங்களுக்கு தெரியுமா? ;)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பனைமரமும் தெரியும், "அழகான அந்த பனைமரமும் தெரியும்".......

ஆகா!! வந்து விட்டீர்கள்!! பனைமரம் வளர்;து சிறிய நிலையில் வடலி என்பார்கள், அது இல்லை. அதையும் தாண்டி..... புனிதமானது...சி உயரமாக வளர்ந்து காய்க்க தொடங்குமல்லவா!!

Posted

செந்தில் அது என்ன பதனீர் பனைமரம் மட்டும் காட்டினாங்க பதனீர காட்ட மறந்திட்டாங்க :D:(

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பனைமரம் தெரியும்.இன்று காலை கூட எழுந்த வுடன் 1 லிட்டர் பதநீர் குடித்தேன். ஒடியல் என்றால் பனங்கிழங்கா ?

ஒரு லீட்டரா? என்ன அளந்து வைச்சா குடிப்பீர்கள்?

Posted

ஆகா அருவி, என்ன நீங்கள் பனை மரம் பார்க்க சுற்றுலாவா போனீர்களா? காட்ட மறந்துவிட்டார்கள் என சொல்கிறீர்கள்??

ஒடியலுக்கு வாங்கப்பா

Posted

ஆனால் "ஒடியல்"தெரியலையே, அருவி உங்களுக்கு தெரியுமா? ;)

அது தானே தாரணி சொல்லி இருக்கிறா ஒடியல் கூழ் பற்றி. ஒடியல் இருந்தாத்தானே ஓடியல் கூழ் வரும். கூழ் குடிக்கலாம் ஒடியல் குடிக்கேலாது. என்ன தூயா நான் சொல்லுறது சரியா :wink:

Posted

ஆகா அருவி, என்ன நீங்கள் பனை மரம் பார்க்க சுற்றுலாவா போனீர்களா? காட்ட மறந்துவிட்டார்கள் என சொல்கிறீர்கள்??

ஒடியலுக்கு வாங்கப்பா

சுற்றுலா போய் கள்ளு எல்லாம் பாத்திருக்கம், பாத்தது மட்டுமா குடிச்சும் பாத்தம் :oops: . ஆனா அந்தப் பதனீர் மட்டும் காட்டல :evil:

Posted

ஓமோம் மாட்டை கொண்டு போய் பனைல கட்டினம் என்றால் பிரச்சனை முடிந்திடும்

Posted

தடை செய்யப்பட்ட பொருட்களை பற்றி கதைப்பது நல்லதன்று. சி*5 பொறாமை கொள்ள போறார்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முந்தி யாழ்பாணத்தில் எமது ஊரின் வயற்பக்கத்திற்கு பின் பக்கம் எல்லாம் ஒரே பனைமரமாகத் தான் இருக்கும். பார்க்க ரெம்ப அழகாக இருக்கும்.

கடந்த முறை சென்றபோதும் அதைப் பார்த்து வேதனைப்பட்டேன். இராணுவம் அப்பகுதிகளுக்கு போக தடை போட்டிருந்ததால் தூரத்தில் நின்றே பார்த்து விட்டு வந்தேன்

Posted

நீங்கள் வல்லிபுர கோவிலுக்கு போகும் வழியில் உள்ள பனைகளை பார்க்க வேண்டுமே, தலைகள் இல்லாமல்..கோரம்..

Posted

:shock: :shock: :shock:

சின்னப்பு என்ன கனடாவில தடை போல யாழ் களத்தில ஒரு பனை பற்றிக் கதைக்கக் கூடாதா.

:shock: :roll: :roll:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சரியாகச் சொன்னீர்கள் தேர்தல் வெற்றிக்காக மற்றய கட்சிகளும் செய்த ஏமாற்று வேலையை தான் இவர்களும் செய்கின்றனர் ஆனால்  இந்த ஏமாற்று வேலையால் சிங்கள மக்கள் அதிருப்தி அடைகின்றார்கள் ஆனால் முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறியோர் சங்கம்  பொறுமை பொறுமை காக்க வேண்டும் உடனே எல்லாம் செய்ய முடியாது அரசிடம் இப்படி செய்வதற்கு பணம் இல்லை முன்னைய ஆட்சிகளில் அதிக மின்கட்டணம் மக்கள் செலுத்தியவர்கள் தானே என்று பிரசாரம் செய்கின்றனர் இலங்கையில் இப்போது வந்த தேங்காய் தட்டுபாட்டுக்கு நாங்கள் வெளிநாட்டில் தேங்காய் இல்லாமல் சமைக்கின்றோம் இலங்கை மக்களும் தேங்காய் இல்லாமல் சமைக்க பழகட்டும் என்றார்களாம்
    • இந்தியாவில் உள்ள பலர் இலங்கைக்கு போக விரும்புவதில்லை, மாறாக இந்திய குடியுரிமை பெற விரும்புகிறார்கள், இந்திய குடியுரிமை இல்லாமல் அகதிகளாக இருப்பது சிரமம், அதனால் இந்தியாவில் அகதிகளாக இருப்பதனை விட இலங்கைக்கு போகலாம் என நினைக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு இந்திய குடியுரிமையுடன் இந்தியாவில் தங்கி இருப்பதுதான் முதலாவது தெரிவாக உள்ளது.   மிக நியாயமான  கருத்து.
    • நீங்கள்  இன்றைய கூடத்தில் நடந்த விடயங்களை வடிவா,.....நன்றாக அறிய முயலுங்கள்.  🙏 அனைத்து திணைக்களங்களின் வரவுசெலவுகளை  அர்சசுனா  பட்டியல் இடடுள்ளார்.  அந்தந்த துறையில் உள்ளவர்களால்  சொல்ல முடியவில்லை  அதுமட்டுமல்ல   பாராளுமன்றத்தில் பேசி பிரயோஜனம் இல்லை எனவும்  இங்கே ஒவ்வொரு துறையிலும்  எப்படி செலவு செய்கிறீர்கள்??  என்பதை  கேட்க மக்கள்  பிரதிநிதிகளுக்கு  உரிமை உண்டு  என்று அர்ச்சுனா கூறியுள்ளார்  இதை  அமைச்சர் சந்திரசேகரன்  எற்றுக்கொண்டு  இப்படி ஒருவர் இங்கே தேவை என்று சொல்லி உள்ளார்   இதன் மூலம்  அர்ச்சுனா  வைத்தியசாலையில் உள்ளிட்டது  தவறு இல்லை என்று உறுதியானது  இந்த முறை தான்  மாவட்ட ஒருக்கிணைப்பு குழு கூட்டம்  ஒழுங்காக முறைப்படி நடத்துள்ளது  என்று பலரும் கூறுகிறார்கள்  குறிப்பு,...அர்ச்சுனா  தனியாக சுயேட்சையாக. கேட்டு வெற்றி பெற்றது  ஊழல்வாதிகளுக்கு  துளியும். பிடிக்கவில்லை ஆனால் அடுத்த முறை  அர்ச்சுனாவுடன் இன்னும் பலர் வெற்றி பெறுவார்கள்   நீங்கள் இருந்து பாருங்கள்  அர்ச்சுனா பலரின் ஊழல்களை  தக்க சான்றுகளுடன் கணடுபிடிப்பார் அவர்கள் எல்லோரும் பதவிகளை இழப்பார்கள்  இன்று பலருக்கு வேர்த்து உள்ளது    🤣
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.