Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது படையினர் தாக்குதல்: பதற்றம் தொடர்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது படையினர் தாக்குதல்: பதற்றம் தொடர்கிறது

By Nirshan Ramanujam

2012-11-28 13:22:18

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் இராணுவத்தினர் உள்நுழைந்து மாணவர்களிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாகக் குற்றம் சுமத்தி பல்கலைக்கழக மாணவர்கள் இன்று புதன்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது இராணுவம் மற்றும் பொலிஸாரினால் மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் மாவீரர் தினமான நேற்று யாழ்.பல்கலைக்கழகத்துக்குள் சுடர் ஏற்றப்பட்டதாகக் குற்றம் சுமத்தி இராணுவத்தினர் பல்கலைக்கழகத்துக்குள் புகுந்து மாணவர்களைத் தாக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் பல்கலைக்கழகத்தில் நேற்று பதற்றம் நிலவியது.

இதனைக் கண்டித்து இராணுவத்தினருக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது. அதனையடுத்து பொலிஸார் மாணவர்கள் மீது தடியடி மேற்கொண்டுள்ளனர். அதன்பின்னர் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டதுடன் அவர்களும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தற்போது நிலைமை சீரடைந்துள்ள போதிலும் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் எண்ணிக்கையிலான படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக சம்பவ இடத்திலிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

பல்கலைக்கழக மண்டபத்துக்குள் மாணவர்கள் அனைவரும் இருப்பதாகவும் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் இராணுவத்தினருக்கும் இடையே பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

(பிந்திக் கிடைக்கும் செய்திகளை உடனுக்குடன் எதிர்பாருங்கள்)

http://www.virakesari.lk/article/local.php?vid=1855

  • Replies 110
  • Views 7.6k
  • Created
  • Last Reply

[size=4]யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றின் போது அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன் மாணவர்கள் மீது தடியடியும் நடத்தியுள்ளனர். யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றைய தினம் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததை கண்டித்து, இன்றைய தினம் மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். [/size]

[size=4]ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கறுப்புத்துணி அணிந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.[/size]

J11(1).jpg

J12(1).jpg

J10(3).jpg

J04(16).jpg

J02(59).jpg

J06(6).jpg

[size=5]யாழ். பல்கலையில் இராணுவம் அடாவடி: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி; [/size][size=5]ஐவர் கைதாகி விடுதலை[/size]

[size=2][size=4]நேற்று இராணுவத்தினர் யாழ். பல்லலைக்கழக பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து மாணவிகளை மிரட்டியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலை மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேளை மாணவர்கள் ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். [/size][/size]

[size=2][size=4]இதேவேளை மாணவர்களைப் பொலிஸாரும் இராணுவத்தினரும் தாக்கியும் உள்ளனர் [/size][/size][size=2][size=4]ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டதை அடுத்து மாணவர்களைக் கலைப்பதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் தடியடி நடத்தியுள்ளனர். இதனால் மாணவர்களில் பலர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.[/size][/size]

[size=2][size=4]சுமார் 200 பேர் அடங்கிய பொலிஸாரும் இராணுவத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கலைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட போதே இந்த கலவரம் இடம்பெற்றுள்ளது.[/size][/size]

[size=2][size=4]நேற்று மாவீரர் தினத்தை யாழ்.பல்கலைக்களக மாணவர்கள் இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியிலும் அனுஷ்டித்த நிலையில் அவர்களை பழிவாங்கும் நோக்குடன் இராணுவத்தினரும்,பொலிஸாரும் இன்று இவ்வாறு நடந்துகொண்டுள்ளனளர்.[/size][/size]

http://onlineuthayan...271654828274698

Edited by akootha

[size=5]அனுமதியின்றி பேரணி செல்ல முயன்றவர்களே கலைப்பு; எரிக் பெரேரா[/size]

[size=4]பொலிஸாரின் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், வீதியிலிறங்கி ஊர்வலம் செல்ல முற்பட்டதை அடுத்தே அவர்களை பொலிஸார் அங்கிருந்து கலைத்தனர் என்று யாழ். பிரதி பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா – தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

பேரணியில் ஈடுபட முயற்சித்தவர்களை பொலிஸார் கலைக்க முற்பட்ட போது அதற்கு செவிசாய்க்காத மாணவர்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்டனர். இதனால் அவர்களை பலவந்தமாக விரட்டியடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்று பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் கூறினார்.

இதேவேளை, மாணவர்களைக் கலைப்பதற்காககச் சென்ற பொலிஸாரின் ஒத்துழைப்புக்காகவே இராணுவமும் அப்பகுதிக்குச் சென்றது என்று யாழ். இராணுவ தலைமையகம் - தமிழ்மிரரிடம் கூறியது. [/size]

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/53668-2012-11-28-10-13-15.html

  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸாரின் தாக்குதலில் 7 மாணவர்கள் வைத்தியசாலையில்

face.jpg By Priyarasa

2012-11-28 14:43:12

DSCF6655.jpg

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 7 மாணவர்கள் கடும் காயங்களுக்குள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

DSCF6656.jpg

யாழ். பல்கலைக்கழகத்தினுள் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை தொடர்வதாகவும் அப்பகுதியினூடாக பொது மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்..

DSCF6654.jpg

படங்கள்: நன்றி: வீரகேசரி

மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=1857

[size=5]யாழ். பல்கலை மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு[/size]

[size=4]யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற கலவரத்தினை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது எனவும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்தது.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்தும் மாணவர்களின் பாதுகாப்பையும் கருதியுமே வகுப்பு பகிஷ;கரிப்பு தீர்மானிக்கப்பட்டுள்ளது என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டது.

இதனால் தொடர்நது இரண்டு நாட்களுக்கு வகுப்பு பகிஷ;கரிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.

இதேவேளை, யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அலுவலகம் நேற்று செவ்வாய்க்கிழமை உடைக்கப்பட்டுள்ளதாக மாணவர் ஒன்றியத்தினர் குறிப்பிட்டனர்.

இதன்போது, குறித்த அலுலவகத்தில் காணப்பட்ட பெறுமதியான பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.[/size]

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/53683-2012-11-28-13-07-46.html

Jaffna_Univ_021.jpg

[size=5]எந்த தமிழ்த்தாய் பெற்ற மகனோ,உன் உணர்விற்கு நான் தலை வணங்குகின்றேன்.உன்னைப்பார்த்து மாவிரர்கள்.புன்னகைப்பார்கள்,மகிழ்ச்சி அடைவார்கள்.உன்னைப்போல் எல்லாரும் நெஞ்சை உயர்த்தினால் மீண்டும் ஈழத்தமிழன் நொடியில் நிமிர்ந்துவிடுவான் மகனே!வாழ்க தமிழ் மகன்! வாழ்க தமிழ்! [/size]

Edited by BLUE BIRD

பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலைப்பாடலுக்கு நடனமாடினார்கள், மாவீரர்களுக்கு தீபமேற்றி வழிபட்டார்கள், இறுதியாக இராணுவத்திற்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். புலிகள் ஆயுத பலமற்ற இந்த காலத்திலும் இவர்கள் உணர்வு, துணிவு தற்பொழுது அதிகரித்து வருகின்றமை பாராட்டப்பட வேண்டிய விடயம். இன்னும் எம்மக்கள் நம்பிக்கையை இழக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. :rolleyes:

ஆனாலும் இவர்களுக்கு ஆபத்து வராமல் இருக்க வேண்டுமே.. :(

  • கருத்துக்கள உறவுகள்

துளசி.... அவர்களே சர்வதேசத்தின் கவனத்தை வேண்டித்தான்.. அவர்களின் பாதுகாப்பை வேண்டித்தான் இதனை செய்துள்ளார்கள்.

சர்வதேச கவனத்தை இப்படியான நிகழ்வுகளில் ஈட்டிக்கொடுத்து எம் மாணவச் சகோதர்களை சகோதரிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு சர்வதேச தமிழ் இளையோர் அமைப்புக்களையே சாரும். மாணவர்கள் என்ற ரீதியில் அவர்கள் தாமாக முன்வந்து இந்த மாணவர்களோடு இணைந்த ஒரு செயற்பாட்டை முன்னெடுக்க முன்வர வேண்டும்.

நாட்டுக்கு நாடு இளையோர் அமைப்புக்களை வைத்திருக்கின்றது மட்டும் போதாது. அந்த அமைப்புக்களை எல்லாம் ஒருங்கிணைத்து ஒரு கூட்டுத் தலைமை அமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் கீழ் தாயக இளையோரையும் உள்வாங்கிச் செயற்படும் ஒரு நிலைக்கு நாம் வந்தால்.. நிச்சயமாக எமது பலம்.. எமது குரல்கள் சர்வதேசத்தின் செவிகளைச் சென்றடைய உதவலாம்..!

நாம் இந்த தாயக இளையோரை நிர்கதியாக பாதுகாப்பற்ற சூழலுக்குள் தள்ளிவிடக் கூடாது.

அப்படி ஒரு அமைப்பு உருவானால்.. இப்படியான நிகழ்வுகள் குறித்து சர்வதேச ஊடகங்களுக்கு அறிக்கைகளை தரும் செயற்பாட்டிலும் அவர்கள் இருக்க வேண்டும். கிரமமான ஒரு ஊடகத்தொடர்பு எமக்கு இன்று சர்வதேச மட்டத்தில் இப்படியான சம்பவங்களை உடனடி ஆதாரங்களோடு வெளிக்கொணரச் செய்ய தேவைப்படுகிறது. அதுமட்டுமன்றி தூதரக உறவுகள் பேணப்பட்டு மாணவர்களின் கருத்துக்கள் அங்கு பதியப்படவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். எமது மாணவர்கள் பிரச்சனைக்கு துரித நடவடிக்கைகளும் சர்வதேசக் கவன ஈர்ப்புமே அவசியம். நாம் இதர சர்வதேச மாணவ சமூகங்களை நோக்கியும் இவற்றைக் கொண்டு செல்ல வேண்டும். எமக்குள் மட்டும் இவற்றை வைத்துக் கொண்டிருப்பதும் ஆபத்தானது. இதற்கு சமூக வலைகளையும் நேரடித் தொடர்புகளையும் பயன்படுத்த வேண்டும்.

நிச்சயம் புலம்பெயர் இளையோர் சமூகம் இதனைப் புரிந்து கொண்டு இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப ஒற்றுமையாக தேவையை முன்னிறுத்திச் செயற்படும் என்று நம்புவோமாக.

இந்த மாணவர்களைப் பறிகொடுத்துவிட்டு அழுவதிலும்.. முற்காப்பு நோக்கி நடவடிக்கைகளில் இறங்குவதே சிறப்பு. அவர்கள் போராடிக் கொண்டிருப்பது சாதாரண ஜனநாயகத்தை மதிக்கும் ஒரு அரசை அதன் படைகளை எதிர்த்தல்ல. மிகக் கொடிய மனித உரிமை மீறல்களை ஐநாவைக் கூட ஏமாற்றி உலக நாடுகளின் கண்களில் எல்லாம் மண்தூவிவிட்டு அல்லது அவர்களை எல்லாம் தனக்குச் சார்ப்பாக வளைத்துப் போட்டுவிட்டு செய்து கொண்டிருக்கும் ஒரு பயங்கரவாத அரசையும் அதன் இயங்கு சக்தியான கொலைகார இராணுவத்தையும் நோக்கி என்பதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவே கூடாது.

Edited by nedukkalapoovan

4TH LEAD (Adds video)

Peaceful student protest attacked by SL military in Jaffna

[TamilNet, Wednesday, 28 November 2012, 07:28 GMT]

Jaffna University students who boycotted classes on Wednesday and rallied in front of the university entrance Wednesday at 11:00 a.m. protesting against the SL military harassments inside the University premises on Tuesday on the occasion of Heroes Day, were brutally attacked by SL military commanders who had taken position on the road while the students were peacefully walking on a demonstration march.

28_11_2012_Jaffna_Univ_01_101141_445.jpg

28_11_2012_Jaffna_Univ_02_101145_445.jpg

28_11_2012_Jaffna_Univ_03_101149_445.jpg

The attacking SL military and police have taken four students into their custody. Following the violence leashed out by the Sri Lankan forces, the protesting students started to throw stones at the soldiers, demanding immediate release of the four students.

At least 10 students have sustained injuries.

The student leaders were urging international NGOs and foreign missions to witness how their peaceful protest was being brutally suppressed by the SL military.

The SL military had rounded up and attacked the student inmates inside the hostel Tuesday evening when the students lit the flame of sacrifice to remember the fallen Tamil heroes in the Tamil struggle.

28_11_2012_Jaffna_Univ_04_101153_445.jpg

28_11_2012_Jaffna_Univ_05_101157_445.jpg

28_11_2012_Jaffna_Univ_06_101161_445.jpg

28_11_2012_Jaffna_Univ_08_101165_445.jpg

28_11_2012_Jaffna_Univ_09_101169_445.jpg

28_11_2012_Jaffna_Univ_10_101173_445.jpg

28_11_2012_Jaffna_Univ_11_101177_445.jpg

28_11_2012_Jaffna_Univ_12_101181_445.jpg

28_11_2012_Jaffna_Univ_13_101185_445.jpg

Edited by பூச்சாண்டி

Jaffna_Univ_021.jpg

[size=5]எந்த தமிழ்த்தாய் பெற்ற மகனோ,உன் உணர்விற்கு நான் தலை வணங்குகின்றேன்.உன்னைப்பார்த்து மாவிரர்கள்.புன்னகைப்பார்கள்,மகிழ்ச்சி அடைவார்கள்.உன்னைப்போல் எல்லாரும் நெஞ்சை உயர்த்தினால் மீண்டும் ஈழத்தமிழன் நொடியில் நிமிர்ந்துவிடுவான் மகனே!வாழ்க தமிழ் மகன்! வாழ்க தமிழ்! [/size]

[size=4]நன்றிகள் நீலப்பறவை.[/size]

[size=1]

[size=4]ஆகக்குறைந்தது இதை நாம் எமது முகநூல், குறுஞ்ச்செய்தி, மின்னஞ்சல்களில் இணைத்து உலகத்திற்கு தெரியப்படுத்துவோம். [/size][/size]

[size=3]

குளோபல்தமிழ்ச்செய்தியாளர் - படங்களுடன் இணைப்பு [/size][size=3]

jaff%20uni%20attack_CI.jpg

யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று வெடித்த வன்முறையில் மாணவர்கள் பலர் காயமடைநதனர்.மேலும் சிலர் பொலிஸாரால் சிறைப்பிடிக்கப்பட்டனர். நேற்றைய தினம் மாணவர்கள் விடுதியினுள் உள்நுழைந்து படைத்தரப்பு நடத்திய தாக்குதல்களை கண்டித்தும் மாணவர்களது பாதுகாப்பை வலியுறுத்தியும் இக்கண்டன போராட்டம் மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பிரதான நுழை வாயிலை வழி மறித்து மாணவர்கள் மௌன போராட்டமொன்றை காலை 11 மணியளவில் ஆரம்பித்திருந்தனர்.தமக்கான பாதுகாப்பை பல்ககைகழக நிர்வாகம் வழங்குமென்ற நம்பிக்கையை இழந்திருப்பதாக கூறிய மாணவர்கள் பின்னர் பிரதான நுழை வாயிலினூடாக வெளியேறி விஞ்ஞான பீட நுழைவாயிலினுடாக உட்செல்ல முற்பட்டனர்.

Uni%20protest%20attack%202.jpg

எனினும் அதற்கு மறுதலித்து வீதியை வழி மறித்த பொலிஸார் மாணவர்கள் மீது தாக்குதலை தொடங்கினர்.பொலிஸாருடன் இணைந்து படையினர் சிவிலுடையினிலிருந்த படை புலனாய்வாளர்கள் தாக்குதலை சகட்டு மேனிக்கு நடத்த முற்பட்டனர்.தப்பியோடிய மாணவர்கள் பதிலுக்கு பல்கலைக்கழக வளவினுள் இருந்து கல் வீசி தாக்குதலை நடத்தினர்.

Uni%20protest%20attack%201.jpg

அவ்வேளையில் மாணவர்கள் சிலர் தாக்கப்பட்டு சிறை பிடிக்கப்பட்டனர்.இவர்கள் மீது சகட்டு மேனிக்கு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.ரத்தம் வழிந்தோட வழிந்தோட மாணவர்கள் வீதி வழியே இழுத்து செல்லப்பட்டனர்.மாணவர்கள் பிடித்து வைக்கப்பட்ட தமது சகாக்களை விடுவிக்க கோரி போராட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர். [/size]

[size=4]நன்றிகள் நீலப்பறவை.[/size]

[size=1][size=4]ஆகக்குறைந்தது இதை நாம் எமது முகநூல், குறுஞ்ச்செய்தி, மின்னஞ்சல்களில் இணைத்து உலகத்திற்கு தெரியப்படுத்துவோம். [/size][/size]

[size=6]Peaceful student protest attacked by SL military in Jaffna[/size]

[size=5]Jaffna University students who boycotted classes on Wednesday and rallied in front of the university entrance Wednesday at 11:00 a.m. protesting against the SL military harassments inside the University premises on Tuesday on the occasion of Heroes Day, were brutally attacked by SL military commanders who had taken position on the road while the students were peacefully walking on a demonstration march.[/size]

[size=5]The attacking SL military and police have taken four students into their custody. Following the violence leashed out by the Sri Lankan forces, the protesting students started to throw stones at the soldiers, demanding immediate release of the four students.

At least 10 students have sustained injuries.

The student leaders were urging international NGOs and foreign missions to witness how their peaceful protest was being brutally suppressed by the SL military.

The SL military had rounded up and attacked the student inmates inside the hostel Tuesday evening when the students lit the flame of sacrifice to remember the fallen Tamil heroes in the Tamil struggle.[/size]

http://tamilnet.com/art.html?catid=13&artid=35798

[size=6]Sri Lanka clash over Tamil rebel remembrance[/size]

[size=5]Students in Sri Lanka’s former war zone clashed with troops and police on Wednesday over celebrations to commemorate defeated Tamil Tiger guerrillas, residents said.[/size]

[size=5]At least 20 undergraduates were injured when troops and police beat up stone-pelting students outside Jaffna university, a witness said.[/size]

[size=5]It was the first major clash since security forces crushed Tamil rebels in May 2009.[/size]

[size=5]Police and troops had stormed university dormitories on Tuesday searching for Tamil Tiger propaganda after students tried to mark “heroes’ week” – the last week of November when Tiger guerrillas used to commemorate fallen comrades.[/size]

[size=5]“The students gathered inside the university and came out to protest the military action (of Tuesday) when fighting erupted (on Wednesday),” a witness said, asking not to be identified.[/size]

[size=5]He said the vehicle of a local Tamil legislator was also damaged as he tried to stop the violence.[/size]

[size=5]There was no immediate comment from the military, but the AdaDerana news website published photos soon after Tuesday’s military raid of the campus along with one image of a student on the ground being beaten by three policemen.[/size]

[size=5]Tuesday’s incident degenerated into a bigger confrontation on Wednesday as students protested at the military intrusion into their hostels, leaving more than 20 students injured, witnesses said.[/size]

[size=5]Sri Lanka lifted a state of emergency in August last year after defeating Tamil Tigers in May 2009, but heavily armed troops and paramilitary police units are often deployed to support police.[/size]

[size=5]Jaffna, the cultural capital of the island’s ethnic Tamil minority, was once run as a de-facto separate state by the Tigers.[/size]

[size=5]The latest clashes between the troops and students came amid international calls to de-militarise Jaffna, 400 kilometres north of Colombo, and ease restrictions on the civilian population.[/size]

[size=5]Tiger rebels had led a 37-year-long guerrilla war for an independent Tamil homeland in a campaign that claimed more than 100,000 lives, according to UN estimates.[/size]

http://www.scmp.com/news/asia/article/1093269/sri-lanka-clash-over-tamil-rebel-remembrance

புலம்பெயர் பல்கலைக் கழக மாணவர்கள் இதை வெளி மாணவர்களுக்கு எடுத்து சொல்லி அடையாள மாணவர் போராட்டத்தைச் செய்யலாம்

மிருகங்கள். தமிழ் மாணவர்கள் என்றல் என்னவும் செய்யலாம் என்று நினைக்கிறார்கள்.

இதை கூட்டமைப்பு வெளிநாட்டு தூதரகங்களுடன் பேசி அவர்களுக்கு தங்கள் குறைபாடுகளை அமைதியான முறையில் எடுத்து சொல்ல வழி செய்து கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka's Jaffna sees clashes over Tamil rebel remembrance

_64447102_jaffna_univ_022.jpg

Witnesses says students were attacked by security forces.

Students and security forces have clashed in Jaffna in northern Sri Lanka in the worst political disturbances since civil war ended in 2009.

A Tamil politician accused the military of injuring a newspaper editor and several students.

The army said it had to restrain people who were throwing stones.

Security forces had entered Jaffna University, disrupting students who were marking Martyrs Day, which commemorates dead Tamil Tiger fighters.

The BBC's Charles Haviland in Colombo says these were the biggest overtly political disturbances in the north since the war ended more than three years ago.

'Hit twice'

A Tamil opposition parliamentarian and newspaper owner, E Saravanapavan, told the BBC the army had attacked Jaffna University students as they tried to emerge from their campus to demonstrate against the security forces, a day after the latter entered the university campus and surrounded hostels.

"Four boys were arrested and the army were hitting others. When professors came out, three were released; one was held till later and the army said he was not a student, but he was part of the university media."

One news website showed a picture of a student lying on the ground, apparently being set upon by the police.

Mr Saravanapavan said that on Tuesday night, the editor of his Jaffna paper was beaten by plain-clothes soldiers while trying to cover the unrest and had to be admitted to hospital.

"Army people in civilian dress were holding a guy by the neck of his shirt, then they punched him against the wall. I saw it was the editor of Uthayan, T Premananth. He was hit twice."

'Good job'

But the Jaffna army commander, Mahinda Hathurusinghe, said the MP had been "paid to spread rumours against the military" and that the security forces had acted to stop students throwing stones and bottles:

"The army is doing a good job. The people are peace-loving but there are some disgruntled elements. We don't have a problem with students, only with a section of the students, people with ulterior motives."

A university teacher said on Twitter that it was the other way round, with students "attacked the moment they stepped out".

The tensions arose as some students marked the death of Tamil Tiger guerrillas at small candle-lit memorials, while well-produced pro-Tiger posters appeared in various parts of the formerly Tiger-held territory.

Our correspondent says since the end of the war this had hardly happened within Sri Lanka, where the Tigers and their separatist ideology are strictly banned - although Tiger sympathisers in the diaspora call 27 November "Martyrs' Day" and mark it as such.

The clashes point to simmering tensions three-and-a-half years after the mainly Sinhalese security forces crushed the Tamil separatists, and as the army maintains tight control over the whole of the north where the war was fought most bitterly.

http://www.bbc.co.uk...d-asia-20531233

Edited by nedukkalapoovan

[size=2]

எம் உறவுகளுக்கு ஓர் அவசரமான வேண்டுகோள் இச் செய்தியை உங்கள் முக நூல் ஊடாக அனைவருக்கும் தெரியப்படுத்தவும் யாழ் பல்கலைக்கழகத்துக்குள் இலங்கை இராணுவமும் புலனாய்வுத் துறையும் ஒட்டுக்குழுவும் புகுந்து மாணவர்களை த

ாக்கிக் கொண்டு இருக்கிறார்கள் மாணவர் பலரை கைது செய்துகொண்டிருக்கிறார்கள் காயமடைந்த மாணவர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல இராணுவம் அனுமதிக்கவில்லை யாழ் பல்கலைக்கழகத்துக்குள் பெரும் பதட்டம் நேற்றைய தினம் மாவீரர்களுக்கு ஈகச் சுடர் ஏற்றப்பட்டதால் இன்று சிங்கள இராணுவத்தின் அட்டுழியம் செய்கிறது புலம் பெயர்ந்து வாழும் எம் மாணவர்களும் இளையோர்களும் அணி திரண்டு இவர்களுக்காக குரல் கொடுக்கவும் தாய் தமிழகமும் பொங்கி எழவேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம் அவசரமான வேண்டுகோள்

483566_441852502561302_102625195_n.jpg[/size]

Jaffna_Univ_021.jpg

[size=5]எந்த தமிழ்த்தாய் பெற்ற மகனோ,உன் உணர்விற்கு நான் தலை வணங்குகின்றேன்.உன்னைப்பார்த்து மாவிரர்கள்.புன்னகைப்பார்கள்,மகிழ்ச்சி அடைவார்கள்.உன்னைப்போல் எல்லாரும் நெஞ்சை உயர்த்தினால் மீண்டும் ஈழத்தமிழன் நொடியில் நிமிர்ந்துவிடுவான் மகனே!வாழ்க தமிழ் மகன்! வாழ்க தமிழ்! [/size]

[size=4]யாழ் களத்தில் கவிதை எழுதும் உறவுகள் இந்த படத்தையும் வைத்து ஒரு கவிதை எழுதலாம். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழக கண்மணிகளா!

முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து கொண்டு இருந்த போது விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்பினைச் சேர்ந்தவர்களும் அரசியல்துறையைச் சேர்ந்தவர்களும் 2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடத்திய பொங்கு தமிழ் நிகழ்வு போன்று பாரிய எழுச்சி நிகழ்வினை நடத்தி- வன்னியில் மக்கள் கொல்லப்படுவதனை நிறுத்த முயற்சி செய்யுங்கள் என்று கேட்டபோது எத்தனை பேர் அன்று பம்மிக் கொண்டு இருந்தீர்கள். எத்தனை பேர் அன்று உங்கள் செல்லிடப்பேசிகளை நிறுத்தி வைத்தீர்கள்.

இப்போது மட்டும் மாவீரர்களை நினைவு கூர விடவில்லை என்று போராட்டம் நடத்துகின்றீர்கள்.

என்ன உலகமடா சாமி.

அன்று யாழில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்பட்டவர்களை சிறிலங்கா புலனாய்வுத்துறை மிலேச்சத்தனமாக படுகொலை செய்த போதும் பம்மிக் கொண்டு இருந்தீர்கள்.

இன்று அத்தகைய படுகொலைச் நிகழ்வுகள் குறைந்து உள்ள நிலையில் வீரம் காட்டுகின்றீர்கள். மீண்டும் படுகொலைக் கலாச்சாரத்தினை நீங்களே உருவாக்குகின்றீர்கள். இதனை புலத்தில் இருந்து செயற்படும் தமிழ் அமைப்புக்களும் ஊடகங்களும் பெரிதாக்குகின்றன.

அங்கே உள்ள கஸ்டப்பட்ட மாணவர்களுக்கு உதவிகள் செய்வதாக பண உதவி செய்து அவர்களிடம் மேலதிக பணத்தினைக் கொடுத்து இம்முறை மாவீரர் நிகழ்வுகளை உவ்விடம் செய்துவிட்டு படங்களை எமக்கு அனுப்புங்கள் எமது சார்பு ஊடகங்களில் வெளியிடுகின்றோம் என்று உசுப்பேத்தி விட்டுள்ளனர் புலத்தில் உள்ள தமிழ் அமைப்புக்கள்.

இவ்வாறான நிகழ்வுகளை யாழ். பல்கலைக்கழக மட்டத்தில் மட்டுமல்ல கிழக்கிலும் வன்னியிலும் அரங்கேற்றி உள்ளனர். தயவுசெய்து அந்த மக்களை இனியாவது நிம்மதியாக வாழ விடுங்கள். உபத்திரங்களை பெற்றுக் கொடுத்து நீங்கள் புலத்தில் மகிழ்வாக இருந்து கொண்டு அவர்களை துன்பத்தில் ஆழ்த்தாதீர்கள்.

இதனை நான் கற்பனையில் எழுதுவதாக நீங்கள் கருதலாம். ஆனால், இதனை யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஒரு சாரார் அங்கே சென்ற ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தும் உள்ளனர். அங்கே உள்ள ஊடகங்கள் இவற்றை வெளியிடாது என்பது யாவரும் அறிந்த விடயம். மாணவர்கள் கொந்தளிப்பு அது இது என்று செய்திகளை வெளியிடுவார்கள். ஏனெனில் அவர்களுக்கும் ஊடகப் பசி இருக்கின்றது அல்லவா.

முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து கொண்டு இருந்த போது பல்கலைக்கழக மாணவர்களிடம் விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்த விடயத்தினை தப்பி வெளியேறி இருக்கக்கூடிய போராளிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

Edited by nirmalan

[size=1]

[size=4]நிர்மலன்,[/size][/size][size=1]

[size=4]கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் மாவீரர் தீபங்களை ஏற்றியுள்ளார்களே? [/size][/size][size=1]

[size=4]சாதாரண மக்கள் வவுனியா, கிளிநொச்ச்சி, முல்லைத்தீவு எல்லாம் [/size][size=4]ஏற்றியுள்ளார்களே? [/size][/size]

[size=1]

[size=4]நான் நினைக்கிறேன் கே.பி. அண்ணாவும் ஏற்றித்தான் இருப்பார் என்று, நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா, மாவீரர் நாள் நிகழ்வுகளைக் கொண்டாட வேண்டாம் என்று இங்கே நான் கூற வரவில்லை. அவரவர் விருப்பத்தின் படி அவர்கள் அஞ்சலி செலுத்த வேண்டிய விடயம் அது.

ஆனால், வழமைக்கு மாறாக இம்முறை புலத்தில் உள்ள அமைப்புக்கள் அங்கே உள்ளவர்களை தூண்டி விட்டுள்ளனர்.

எல்லாப் பிரதேசங்களில் உள்ளவர்களுக்கும் புலத்தில் இருந்து தமிழ் அமைப்புக்கள் பணத்தினை அனுப்பி உசுப்பேத்தி உள்ளனர். (இதனை யாராவது மறுக்கட்டும் பார்ப்போம்)

தமிழர் தாயகம் கொதி நிலையில் இருக்க வேண்டும் என்பதே புலத்தில் உள்ள அமைப்புக்களின் விருப்பம்.

என்னே விபரீத ஆசை. தாம் மட்டும் சொகுசாக வாழ்ந்து கொண் அந்த மக்களை முட்படுக்கையில் வாழ வழி வகுக்கும் வகையில் வன்முறைகளைத் தூண்டும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இனி கொஞ்ச நாளைக்கு புலத்து ஊடகங்களுக்கு நல்ல தீனி கிடைக்கும். தொடர்ச்சியாக அங்கே பதற்ற நிலை நீடித்த நிலை இருக்கும் என்றே செய்திகளை வெளியிட்டு 2013 ஆம் ஆண்டினை வரவேற்பார்கள்.

எந்த வானொலியினை திருப்பினாலும் 2009 மே நிகழ்வுகள் போன்று அல்லவா சித்திரிக்கின்றார்கள். இதனைத்தானே இங்கு இருந்து அனைவரும் எதிர்பார்த்தீர்கள் இல்லையா?

Edited by nirmalan

[size=4]

அகூதா, மாவீரர் நாள் நிகழ்வுகளைக் கொண்டாட வேண்டாம் என்று இங்கே நான் கூற வரவில்லை. அவரவர் விருப்பத்தின் படி அவர்கள் செலுத்த வேண்டிய விடயம். ஆனால், வழமைக்கு மாறாக இம்முறை புலத்தில் உள்ள அமைப்புக்கள் அங்கே உள்ளவர்களை தூண்டி விட்டுள்ளனர்.

எல்லாப் பிரதேசங்களில் உள்ளவர்களுக்கும் புலத்தில் இருந்து தமிழ் அமைப்புக்கள் பணத்தினை அனுப்பி உசுப்பேத்தி உள்ளனர். (இதனை யாராவது மறுக்கட்டும் பார்ப்போம்)

[/size]

[size=4]நீங்கள் என்ன ஆதாரம் வைத்துள்ளீர்கள் புலம்பெயர் மக்கள் தான் வீடுகள், சந்திகள், பல்கலைக்கழகங்களை உசுப்பேற்றினார்கள் என நிரூபிக்க? [/size]

எல்லாப் பிரதேசங்களில் உள்ளவர்களுக்கும் புலத்தில் இருந்து தமிழ் அமைப்புக்கள் பணத்தினை அனுப்பி உசுப்பேத்தி உள்ளனர். (இதனை யாராவது மறுக்கட்டும் பார்ப்போம்)

[size=4]விபரங்களை வெளியிட முடியுமா?[/size]

[size=4]நிர்மலன், [/size]

[size=4]சில நாட்களின் முன்னர் புலம்பெயர் மக்களை 'கணணி வீரர்கள்' என வர்ணித்தீர்களே? இப்பொழுது அவர்கள் தான் காரணம் என்கிறீர்களே? [/size]

Edited by akootha

பல்கலைக்கழக கண்மணிகளா!

முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து கொண்டு இருந்த போது விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்பினைச் சேர்ந்தவர்களும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறையைச் சேர்ந்தவர்களும் 2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடத்திய பொங்கு தமிழ் நிகழ்வு போன்று பாரிய எழுச்சி நிகழ்வினை நடத்தி- வன்னியில் மக்கள் கொல்லப்படுவதனை நிறுத்த முயற்சி செய்யுங்கள் என்று கேட்டபோது எத்தனை பேர் அன்று பம்மிக் கொண்டு இருந்தீர்கள். எத்தனை பேர் அன்று உங்கள் செல்லிடப்பேசிகளை நிறுத்தி வைத்தீர்கள்.

இப்போது மட்டும் மாவீரர்களை நினைவு கூர விடவில்லை என்று போராட்டம் நடத்துகின்றீர்கள்.

என்ன உலகமடா சாமி.

அன்று யாழில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்பட்டவர்களை சிறிலங்கா புலனாய்வுத்துறை மிலேச்சத்தனமாக படுகொலை செய்த போதும் பம்மிக் கொண்டு இருந்தீர்கள்.

இன்று அத்தகைய படுகொலைச் நிகழ்வுகள் குறைந்து உள்ள நிலையில் வீரம் காட்டுகின்றீர்கள். மீண்டும் படுகொலைக் கலாச்சாரத்தினை நீங்களே உருவாக்குகின்றீர்கள். இதனை புலத்தில் இருந்து செயற்படும் தமிழ் அமைப்புக்களும் ஊடகங்களும் பெரிதாக்குகின்றன.

அங்N உள்ள கஸ்டப்பட்ட மாணவர்களுக்கு உதவிகள் செய்வதாக பண உதவி செய்து அவர்களிடம் மேலதிக பணத்தினைக் கொடுத்து இம்முறை மாவீரர் நிகழ்வுகளை உவ்விடம் செய்துவிட்டு படங்களை எமக்கு அனுப்புங்கள் எமது சார்பு இணையத்தளங்களிலேயே வெளியிடுகின்றோம் என்று உசுப்பேத்தி விட்டுள்ளனர் புலத்தில் உள்ள தமிழ் அமைப்புக்கள்.

இவ்வாறான நிகழ்வுகள் யாழ். பல்கலைக்கழக மட்டத்தில் மட்டுமல்ல கிழக்கிலும் வன்னியிலும் அரங்கேற்றி உள்ளனர். தயவுசெய்து அந்த மக்களை இனியாவது நிம்மதியாக வாழவிடுங்கள். உபத்திரங்களை பெற்றுக் கொடுத்து நீங்கள் புலத்தில் மகிழ்வாக இருந்து கொண்டு அவர்களை துன்பத்தில் ஆழ்த்தாதீர்கள்.

இதனை நான் கற்பனையில் எழுதுவதாக நீங்கள் கருதலாம். ஆனால், இதனை யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஒரு சாரார் அங்கே சென்ற ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தும் உள்ளனர். அங்கே உள்ள ஊடகங்கள் இவற்றை வெளியிடாது மாணவர்கள் கொந்தளிப்பு அது இது என்று செய்திகளை வெளியிடுவார்கள். ஏனெனில் அவர்களுக்கும் ஊடகப் பசி இருக்கின்றது அல்லவா.

முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து கொண்டு இருந்த போது விடுதலைப் புலிகள் பல்கலைக்கழக மாணவர்களிடம் வேண்டுகோள் விடுத்த விடயத்தினை தப்பி வெளியேறி இருக்கக்கூடிய போராளிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

நிர்மலன் அண்ணா, அன்று முள்ளிவாய்க்கால் நேரம் மக்கள் போராட்டம் நடத்த ஆரம்பித்திருந்தால் அவர்களையும் புலிகள் என்று சித்தரித்து ஆதாரமற்று சுட்டுக்கொலை செய்திருப்பார்கள். ஆனால் இன்று சர்வதேசத்தின் முன் குற்றவாளியாக நிற்கும் போது அதே செயலை அரசாங்கம் செய்தால் அவர்களுக்கு அது மேலும் பிரச்சினையை உருவாக்கும். இன்று சர்வதேசத்தின் பார்வை எம்மீதும் உள்ளது. அதனால் அந்த மாணவர்களுக்கு மீண்டும் துணிவு பிறந்தும் இருக்கலாம். அல்லது முள்ளிவாய்க்கால் படுகொலை வரை பாராமுகமாக இருந்தவர்கள் channel 4 காணொளியை பார்த்த பின் மக்களின் அவலங்களை உணர்ந்து கவலைப்பட்டு தற்பொழுது மாறியும் இருக்கலாம்.

மாவீரர் தினத்துக்கு தீபம் ஏற்றுதல், ஆர்ப்பாட்டம் செய்தல் போன்றவற்றால் அவர்களுக்கு பாதிப்பு உண்டாகும் தான். இல்லை என்று கூறவில்லை.

புலத்தில் உள்ள தமிழ் அமைப்புகள் பற்றி ஆதாரமற்று குற்றம் சாட்டுகிறீர்கள். அதுவும் யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள கஷ்டப்பட்ட மாணவர்களுக்கு பணம் கொடுத்தார்களா? (அங்குள்ள் எத்தனை பேருக்கு அவ்வளவு கஷ்டம்?) அதுவும் சாதாரண மாணவர்கள் பணத்திற்காக உயிரை பொருட்படுத்தாது நடக்குமளவுக்கு? இல்லவே இல்லை. அவர்களுக்கு பணம் முக்கியமில்லை.

பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு சாரார் ஊடகவியலாளரிடம் குற்றச்சாட்டை தெரிவித்ததாக கூறியுள்ளீர்கள். அதில் எவ்வளவு உண்மை தன்மை உள்ளதோ தெரியாது. பத்திரிக்கை பிஸ்னஸ் தான் அந்த ஊடகவியலாளர்களுக்கு முக்கியமாக இருந்திருந்தால் உங்களிடமும் அந்த உண்மையை கூறியிருக்க மாட்டார்கள். ஒருவேளை உண்மையாகவே அவ்வாறு ஒரு சாரார் குற்றம்சாட்டியிருந்தாலும் அவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு எதிரான மனப்பான்மை உள்ளவர்களாக இருந்து பொய் சொல்லியிருக்கவும் சந்தர்ப்பம் உள்ளது தானே. மறுசாரார் சிலவேளை உண்மையாகவே ஆர்ப்பாட்டத்தை உணர்வுடன் நடத்தியிருப்பார்கள்.

அதே போல் புலம்பெயர் தேசத்திலிருக்கும் நீங்களும் தாயகத்தில் உள்ள உணர்வாளர்களை இவ்வாறான பயப்படுத்தும் உங்கள் கருத்துகளால் கட்டுப்படுத்த முயல கூடாது. அது பலனளிக்கவும் மாட்டுது.

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.