Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்ணுக்கு உதவச் சென்ற மருத்துவரை பயங்கரவாதியாக முத்திரைக் குத்தி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்!

Featured Replies

யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட, அநுராதபுர வைத்தியசாலையில் பணியாற்றிய உளநல மருத்துவர் மருத்துவர் ரத்னசிங்கம் சிவசங்கர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து 4 மாதங்களாக சிறைவைக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த டிசம்பர் 30ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.

இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரின் அழுத்தத்தினால் இராணுவத்தில் இணைந்துகொண்ட தமிழ் பெண்கள் 100 பேரில் ஒருவர் அதிலிருந்து விலகுவதற்காக 2012ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் திகதி கொக்காவில் இராணுவ முகாமிற்கு சென்ற காரணத்தினாலேயே இந்த மருத்துவர் கைதுசெய்யப்பட்டார்.

இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்களை அதிலிருந்து விலகுவதற்கு இராணுவத்தினர் இடமளிக்காத சந்தர்ப்பத்தில், இதில் தலையிட்டு பெண்களின் பெற்றோருடன் இராணுவ முகாமிற்குச் சென்ற மருத்துவர், தமது பணிகளுக்கு இடையூறு செய்ததாகக் கூறி இராணுவத்தினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

அதன்பின்னர், மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட இந்த மருத்துவர் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவினால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் உத்தரவிற்கமைய நான்கு மாதகாலம் தடுத்துவைக்கப்பட்டார்.

மருத்துவர் சிவசங்கர் தமிழர் என்பதால் இதற்கு முன்னர் அவரது மருத்துவப் பணிகளுக்கு பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் மருத்துவர் சிவசங்கர் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டிருந்தார்.

இறுதியாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மருத்துவர் கைதுசெய்யப்பட்டமை குறித்து வடக்கிலுள்ள மனித உரிமை செயல்பாட்டாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கும்போது,

''தமிழ் முஸ்லிம் தேசிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கைதுசெய்யப்பட்டதை நிச்சயமாக கண்டிக்கிறோம். அசாத் சாலியை விடுவிக்கக் கோரி சர்வதேச தரப்பிலிருந்து கோரிக்கைகளும், அழுத்தங்களம் எழுந்துள்ளன. இந்த நடைமுறை ஏன் நான்கு மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள மருத்துவர் சிவசங்கரின் விடுதலையில் சர்வதேசம் குரல் எழுப்பவில்லை எனக் கேள்வியெழுப்புகிறோம் எனக் கூறினார்.

அப்பாவித் தமிழ் பெண் ஒருவருக்கு உதவச் சென்றே இந்த மருத்துவர் கைதுசெய்யப்பட்டார். பயங்கரவாதத்திற்கு உதவியதாகவே இந்த மருத்துவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த மருத்துவர் ஒரு பயங்கரவாதியாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். தென்னிலங்கையிலுள்ள சில சிங்களப் பத்திரிகைகள் மருத்துவர் சிவசங்கரை பயங்கரவாதியென்றே முத்திரை குத்தியுள்ளன.

இந்த மருத்துவருக்கு மேலதிகமாக நூற்றுக் கணக்கான தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சட்டமா அதிபரின் ஆலோசனை வழங்கப்படவில்லை எனக் கூறி, வழக்குகள் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுகின்றன. கடந்த வருடம் வவுனியா சிறைச்சாலையில் தமிழ் சிறைக்கைதிகள் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். இதனால் தமிழர்களுக்கு இரண்டாம் தரப் பிரஜைகள் என்ற மனோ நிலை மீண்டும் மீண்டும் நினைவூட்டப்படுகிறது. இதனால் அவர்கள் 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்த மனோ நிலைக்கே இழுத்துச் செல்லப்படுகின்றனர்.

1983ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு யூன் மாதம் 29ஆம் திகதி வரை தமிழ் அரசியல் கைதிகள் 98 பேர் சிறைச்சாலைகளுக்குள் கொல்லப்பட்டுள்ளனர். 174 பேர் தாக்கப்பட்டுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

http://tamilworldtoday.com/?p=9944

  • கருத்துக்கள உறவுகள்

1983ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு யூன் மாதம் 29ஆம் திகதி வரை தமிழ் அரசியல் கைதிகள் 98 பேர் சிறைச்சாலைகளுக்குள் கொல்லப்பட்டுள்ளனர். 174 பேர் தாக்கப்பட்டுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

 

 

தமிழினக் காவலர்கள் தன்மானம் மிக்கவர்கள்!. ஈனத்தனமான மானம் என்றாலும் அதற்கு விளக்கம் கூறுவதில் வல்லவர்கள்!. விதவை என்று ஒதுக்கப்பட்டாலும் நாங்கள் கைம்பெண் என்று இரண்டு திலகம் வைத்துள்ளோம் என்பதாக முழங்கி, இன்றும் கணவன் இறந்ததும் அவன் மனைவியை விதவையாக்கும் சடங்குகளை விமரிசையாக செய்து கொண்டாடுபவர்கள். தமிழினத் தலைவர்களோ தன்மானத்துடன் கொள்கையிலும் தீரர்கள்!. தமிழினத்தின் கழுத்தில் சுருக்குக்கயிறு இறுகும்போதும், அது கண், காது, மூக்கு, கை, காலை இறுக்கவில்லையே என்று விளக்கமளித்து தங்கள் கொள்கையே மானம் என வாழ்பவர்கள்!.

 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள ஐந்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் இடையே, மன்னார் ஆயர் தலைமையில் நடைபெற்ற முக்கிய கூட்டம் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்..சுமந்திரன் ஆகியோர் விளக்கமளித்தனர். இதேபோன்று, .பி.ஆர்.எல்.எவ், டெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தமது நிலைப்பாட்டை எடுத்துக் கூறினர். இருப்பினும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்வதில் எந்தவிதமான முடிவுகளும் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். என லங்காசிறீ இணை.த்தளம் செய்தி வழங்கியுள்ளது.

 

பசி வந்திடப் பத்தும் பறந்து போய்விடும். தமிழ் அரசியல் தலைவர்கள் தலையில் இடியே விழுந்தாலும் பதினொன்றையும் தேடுவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

பசி வந்திடப் பத்தும் பறந்து போய்விடும். தமிழ் அரசியல் தலைவர்கள் தலையில் இடியே விழுந்தாலும் பதினொன்றையும் தேடுவார்கள்.

 

இது எங்கள் இரத்தில் கலந்த பிரிக்க முடியாத பொருள்..ஏனெலில் எங்களை இணைந்தது வைத்திருபதர்ற்கு என்று ஒன்றுமில்லை.. போலியாக தமிழ், மட்டை ....என்று சொல்லுவோம் ஆனால் எங்களை ஏதும் இதுவரை இணைக்கவில்லை, இனியும் இல்லை... 

  • கருத்துக்கள உறவுகள்

######

மன்னிக்கவும், தவறுதலாகப் பதியப்பட்டதால்.... நீக்கப் பட்டுள்ளது.

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இது எங்கள் இரத்தில் கலந்த பிரிக்க முடியாத பொருள்..ஏனெலில் எங்களை இணைந்தது வைத்திருபதர்ற்கு என்று ஒன்றுமில்லை.. போலியாக தமிழ், மட்டை ....என்று சொல்லுவோம் ஆனால் எங்களை ஏதும் இதுவரை இணைக்கவில்லை, இனியும் இல்லை... 

 

எங்களை இணைத்து வைத்திருப்பதற்கு வழியுண்டு நண்பரே, அதுதான் தமிழ்ப் பிள்ளைகளுக்கான ஆரம்பக்கல்வி. தமிழனை அரக்கனாக்கி, அரக்கனான தமிழன் அழிவதை தமிழனைக்கொண்டே கொண்டாடச் செய்வது போன்று, தமிழனை இழிவுபடுத்தும் அனைத்து ஆரியப்பண்பாடுகளுமே பாலர் பாடமாக தமிழ்ப் பிள்ளைகளுக்கு ஊட்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும். தமிழனை உயர்வாக மதிக்கும்படியான புத்தகங்கள் அறிமுகப்படுத்தல் வேண்டும். பிள்ளைகள் பெரியவர்களாகும்போது ஒற்றுமையும், பரஸ்பர மதிப்பும் தானே வளரும்.

இது எங்கள் இரத்தில் கலந்த பிரிக்க முடியாத பொருள்..ஏனெலில் எங்களை இணைந்தது வைத்திருபதர்ற்கு என்று ஒன்றுமில்லை.. போலியாக தமிழ், மட்டை ....என்று சொல்லுவோம் ஆனால் எங்களை ஏதும் இதுவரை இணைக்கவில்லை, இனியும் இல்லை... 

 

நீங்கள் எழுதுவதில் உங்களின் வலி வெளிப்படையாகத்தெரிகிறது.

 

தமிழர்களிடம் தேவையான இணைவும் தேவையான பிரிவும் இருக்கிறது. இவை மனித நியமத்திற்கமைவானவை.  இதில்  மற்றய தமிழ் மக்களுடன் உங்களுக்கு இணைய முடியாவிட்டால் அது உங்கள் விருப்பமாக இருக்கையில் நீங்கள் அதில் சுகம் காண்பதற்கு பதிலாக ஏன் யாழில் வந்து எழுதும் போது வலிப்பை காட்டுக்கிறீர்கள் என்பது விளங்கிக்கொள்ள முடியாததாக இருக்கிறது.

 

ஆனாலும் உங்களுக்கு ஜனநாயக விளக்கம் இருக்கும் என்று நம்புகிறேன்.

 

எனவே "எங்களை" என்ற சொல்லை நீங்கள் பயன்படுத்தும் போது உங்களை, விருப்பத்துக்கு மாறாக இணைப்பது சட்டத்துக்கு எதிரான செயல். நீங்கள் இணைய மறுத்தால் அதை தமிழர் வலிந்து செய்ய முடியாது.

 

ஒரு வேளை தவறுதலாக இரண்டு மனிதர்கள் இணைவது என்பதை இருவரையும்  ஒக்சி- அசற்றலீன் காசினால் உருக்கி ஒட்டுவது போல ஒரு பிரமையில் தடுமாறுகிறீர்களா அல்லது நீங்கள் இணைப்பு என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து உங்களை  நீங்கள் தமிழ் மக்களிடம் இருந்து பிரித்துவிட்டதாக வெற்றிப் பெருமிதம் கொள்கிறீர்களா?

 

உங்களை தமிழ் மக்களுடன் இனியும் இணைக்க முடியாது என்றீர்களாயின் ஆழ்ந்த அநுதாபங்கள்.

 

இருந்தாலும் உங்களை தமிழ் மக்கள் ஏன்தான் தங்களுடன் இணைக்க வேண்டும் என்பதை தெரிய வராத வரைக்கும் அவர்கள் உங்களை தங்களுடன் இணைக்கும் சந்தர்ப்பம் இல்லை என்பதை நீங்கள் உணரக் கஸ்டப்படுகிறீர்களா? அப்படியாயின் நீங்கள் என்ன தமிழ் மக்களுக்குச் செய்ய முடியும் என்று தொடர்ந்து யாழில் எழுதி வந்தீர்களாயின் யாரவது உங்களை தங்களுடன் இணைக்கவா என்பதை பற்றி ஆலோசிப்பார்களாகும்.

 

தற்சமையம் நீங்கள் தமிழ் மக்களிடம் இருந்து உங்களை உங்கள் சுயநலத்துக்காக நீங்கள் பிரித்து வைத்திருப்பதுதான் வலிப்பதால் அப்படி எழுத்துகிறீர்களாயின் மனதை மாற்றி தமிழ் மக்களுடன் இணந்து விடுங்கள். சுகமாகப்படும்

 

( எதோ தங்களின் பொன்னை எழுத்துக்களை படித்தவுடன் தமிழ் இனம் துண்டு துண்டாக வெடிச்சுப்பறக்கபோகுது என்று நினைத்து கேணைகள் எழுதி மகிழ்கிறார்கள். குறந்தது 10,000 ஆண்டுகளாக பூமியின் மேல் ஓட்டில் பல சவால்களை சந்தித்து மிக பழமையா நாகரிகம் படைத்த இனத்துக்கு தங்களை தாங்கள் இதிலிருந்தும் காப்பாற்றிக் கொள்ள வகை தெரியும். தங்களின் பிரிவை எண்ணிக்கலங்குபவர்கள் ஒருதடவை தங்கள் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு நன்றாக தூங்கி எழுந்தார்களாயின் நல்ல உதவியாக இருக்கும். The Tamils civilization is the oldest and only classical civilization still alive on the earth: PBS )

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.