Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விற்றுத் தீர்ந்த காதல் கதை (பாகம் -25)

Featured Replies

இதன் முன்னைய பகுதிகளை வாசிக்க:    விற்றுத் தீர்ந்த காதல் கதை (Part 01-02-03-04-05-06-07 )      விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 08-09-10-11-12 )      விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 13-14-15-16 )      விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 17-18-19-20 )        விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 21 )       விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part - 22 )      விற்றுத் தீர்ந்த காதல் கதை (பாகம்-23)       விற்றுத் தீர்ந்த காதல் கதை (பாகம்-24)

 

 

ஞ்சலி தன் சந்தோசம் என்றாலும் துக்கம் என்றாலும்.... முதலில் இவனோடுதான் பகிர்ந்துகொள்வாள்.

 

அன்றும் அப்படித்தான்.....

 

அவள் இந்தியாவிலிருந்து போன் பண்ணியிருந்தாள். வழமைக்கு மாறான அவளது கனமான குரல்...

அவள் நன்கு அழுதிருக்கிறாள் என்பதனை உணர்த்தியது.

"என்ன அஞ்சு... என்ன ஆச்சு? ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு?" என அவன் கனிவாக விசாரிக்க... 

மறுமுனையில், விம்மத் தொடங்கினாள் அஞ்சலி.

 

"என்ன நடந்தது அஞ்சு....? என்ன ஆச்செண்டு சொன்னாத்தானே தெரியும்.... " என மீண்டும் வினவ,

"நான் நாளைக்கே மலேசியா வாறன். எனக்கு இங்க இருக்க விருப்பமில்லை. நான் லண்டனுக்கு திருப்பிப் போகேலடா. உன்னோடயே வந்து இருக்கப்போறன்.... !" சொல்லிவிட்டு மீண்டும் விம்மியழத்தொடங்கினாள்.

L4n0O.pngmqdefault.jpg

 

"அஞ்சு.... என் செல்லமே... ! முதல்ல அழுகிறதை நிப்பாட்டிட்டு...! என்ன நடந்தது எண்டு விளக்கமாச் சொல்லுமா...!"  என அன்பாகக் கேட்டான். "இண்டைக்கு என்ர தம்பியோட  ஒரு சின்னச் சண்டை. அதுவும் விளையாட்டுக்கு. அதுக்கு அம்மா என்னைத் திட்டிறா. இவ்வளவு நாள் கழிச்சு வந்திருக்கிறன் எண்டுகூட யோசிக்காமல், பாசம் இல்லாமத் திட்டிறா. ஆசையா அம்மாவைப் பார்க்கவந்தால் இப்பிடித் திட்டுறா.... எவ்வளவு கஷ்டமா இருக்கு ......" சொல்லிமுடிக்குமுன்னே மீண்டும் விம்மல்.

 

அஞ்சலி மிகவும் மென்மையானவள். யாரும் லேசாகக் கோபித்தால்கூட தாங்கமாட்டாள். உடனே அழுதுவிடுவாள் என்று இவனுக்கு நன்கு தெரியும். இதுவும் அப்படித்தான் என்பதை விளங்கிக்கொண்டான்.

 

என்ன சொல்லி இவளைச் சமாதனப்படுத்துவது என சிந்தித்தவன்.....

 

"அஞ்சு... என்னம்மா? இந்தச் சின்ன விசயத்துக்குப்போய் அழுதுகொண்டு, முதல்ல கண்ணைத்துடை....!

அழுகிறத நிப்பாட்டு! அம்மாதானே திட்டினவ. அவ வேற ஏதாவது ரென்ஷனில இருந்திருப்பா.

அதுக்குப்போய்... இப்பிடிக் கோவிக்கிறதே...?" கொஞ்சம் கண்டிப்புடன் சொன்னவன்,

 

"நாளைக்கு நான் ஏதாவது சின்னதாத் திட்டினாலும் இப்பிடித்தான் கோவிப்பியா அஞ்சு?" என சிரித்துக்கொண்டே  கேட்டான்.

கொஞ்சம் சமாதானமான அஞ்சலியும்.... சின்னக் கோபத்துடன்,

"ஓமடா ஓம்... நீ என்னைத் திட்டினால் உடனேயே அம்மா வீட்டுக்கு கிளம்பிடுவன்... இப்பவே சொல்லிப்போட்டன்" என்றாள் செல்லமாக.

 

"ஓ... அம்மாவோட சண்டையெண்டால் என்னிட்ட வாறது. என்னோட கோபமெண்டால் அம்மாட்டப் போறதோ......? ம்ம்ம்ம்ம்.... நல்ல கதையாத்தான் இருக்குது..." என நக்கலாகச் சொல்லவும்,

 

மீண்டும் வழமையான மனநிலைக்கு வந்து கொஞ்சம் சிரிக்கத்தொடங்கினாள் அஞ்சலி.

 

521677_466996123350008_2091985706_n.jpg

 

அஞ்சலியின் இக்குழந்தைத்தனத்தையும் மென்மையான மனத்தினையும் ரொம்பவே இரசித்த அவனுக்கு, 

அதேவிடயங்கள்தான் பின்னொருநாளில் அவர்களின் நிரந்தரமான பிரிவுக்கே வழியமைக்கப்போகின்றது என்பது தெரிந்திருக்கவில்லை.

 

***********                   ***********                ***********                   *************                **************            

 

அவளுடைய விடுமுறை கழிந்து.... மீண்டும் லண்டனுக்கு வந்துவிட்டிருந்தாள் அஞ்சலி.

வழமையான வேலைகளில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், இருவரும் ஒருநாளைக்கு இரண்டு மூன்று முறையேனும் பேசிக்கொள்ளத் தவறுவதில்லை.

 

இப்படியே இவர்களின் காதல் இனிமையாக நகர்ந்துகொண்டிருந்த காலகட்டங்களில்,

லண்டனிலுள்ள அஞ்சலியின்  உறவினர்கள்....  அவளது தகப்பன் வழி மச்சாள் முறையிலான ஷோபாவும், அவளது தாய்வழி மாமா (ஜெய்) ஒருவரும் இவனுக்கு அறிமுகமாகின்றனர்.

 

அஞ்சலிக்கும் அவனுக்குமான  காதல் விடயத்துக்கு அவர்களின் ஆதரவு இருந்ததனால்...

அவர்களுடனான  உறவு சொந்தங்கள் என்ற அடிப்படையிலேயே தொடர்ந்தது.

 

ஆனாலும் அஞ்சலிக்கும் அவனுக்கும் பதிவுத்திருமணம் நடந்திருந்த விடயம் அஞ்சலியின் மச்சாள் ஷோபாவுக்கு மட்டுமே தெரிந்திருந்தது. அவள் தரப்பில் வேறு எவரும் அதுபற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை.

 

அதேபோல.... அவனது தரப்பில், லண்டனில் வசிக்கும் அவனது பெரியம்மா குடும்பத்தினரையும் அஞ்சலிக்கு அறிமுகப்படுத்தி வைத்திருந்தான். அவனின் மொத்தக் குடும்பத்தினைப் பொறுத்தவரையில், அஞ்சலிதான்  அவர்களது  மூத்த மருமகள். அவனின் ஒன்றுவிட்ட தங்கைகள் இருவருக்கும் அண்ணி என்றால் கொள்ளைப் பிரியம். சந்தர்ப்பம் கிடைக்கும் நேரங்களில் அஞ்சலி அவர்களின் வீட்டுக்கு சென்றுவருவாள்.

 

அதுமட்டுமில்லாமல் டென்மார்க்கில் உள்ள அவனது சித்திகுடும்பமும் அவனது இன்னுமிரு  தங்கைமாரும் 

அஞ்சலியுடன் அடிக்கடி தொலைபேசியில் பாசத்துடன்  கதைத்துக்கொள்வார்கள். 

'அண்ணி அண்ணி' என்று அஞ்சலியின்மேல் அளவுகடந்த அன்பு வைத்திருந்தார்கள்.அவனது சொந்தங்கள் அனைவரும் அஞ்சலியுடன் மிகவும் பாசமாக இருந்ததுடன்  தங்களின் குடும்பத்தில் ஒருவராக அவளை மனதார ஏற்றுக்கொண்டிருந்தனர் .

 

குறிப்பாக லண்டனிலிருக்கும் அவனது தங்கை  சிவானி அஞ்சலியின் மேல் மிகவும் பாசமாக இருப்பாள். தனது அண்ணியுடன் உரிமையுடன் அவள் பழகும் விதம் அவர்கள்  மிக  நெருக்கமான சிநேகிதிகள் என்றுதான் சொல்லத் தோன்றும்.

 

அதோடு... சிவானிக்கு ஒரு தங்கை மட்டும்தான். கூடப்பிறந்த ஆண் சகோதரங்கள் இல்லாததினால் ஒன்றுவிட்ட அண்ணனான அவனின் மேல் அளவுகடந்த பாசம் வைத்திருந்தாள் சிவானி. எல்லாவற்றையும் பட்டென்று வெளிப்படையாகப் பேசும் சுபாவம் உள்ளவள். கொஞ்சம் குறும்புக்காரியும் கூட.  அஞ்சலியும் சிவானியும் ஒன்றுசேர்ந்தால் இவன் பாவம். இருவரும் சேர்ந்து இவனைக் கலாய்ப்பார்கள். ஆனாலும் மூன்று பேரும் போனில் அடிக்கும் அரட்டை ரொம்பவும் கலகலப்பாகத்தான் இருக்கும்.

 

2009 ஆரம்பம்....

 

இப்படிக் கலகலப்பாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில்தான்....

 

அஞ்சலி லண்டனிலிருந்து மன்செஸ்ரர் பகுதிக்கு மாறிச்செல்லவேண்டிய தேவை வந்தது. அவள் தனது கல்வியைத் தொடரவேண்டிய   University of Bolton அங்குதான் இருந்தது. இன்னும் மூன்றாண்டுகள் அவள் அங்குதான் கற்கவேண்டும். அஞ்சலியின் பழைய சிநேகிதி  'தனா' வும் அதே பல்கலைக்கழகத்திலேயே படித்துக்கொண்டிருந்தது.... அவளுக்கு மிகவும் உதவியாக இருந்தது. அஞ்சலிக்கான சகல ஏற்பாடுகளையும் தனா முன்கூட்டியே செய்து வைத்திருந்தாள்.

 

Uni_Bolton_RAK.jpg

 

அழகான  அமைதியான மன்செஸ்ரர்  மாநிலத்தின்  Bolton நகரம் அழகான தேவதை அஞ்சலியையும் தன்னிடத்தில் வரவேற்றுக் கொண்டது.

 

ஐக்கிய இராச்சியத்தின் மன்செஸ்ரர் மாநிலத்தில் அஞ்சலியும் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் நகரில் இவனும் என இவர்களுக்கிடையிலிருந்த  பல்லாயிரக் கணக்கான மைல்களால், இவர்கள் இருவரை மட்டுமே பிரித்து வைக்க முடிந்ததே ஒழிய... இவர்களிருவரின் மனங்களும் மிக நெருக்கமாக காதலெனும் மெல்லுணர்வால் பிணைந்துபோயிருந்தன.

 

உண்மையான காதலர்களை....  பிரித்துவைக்கும் தூரங்களால் பிரித்துவிட இயலுவதில்லை என்பதனை அஞ்சலிக்கும் அவனுக்குமிடையிலான காதல் நிரூபித்துக்கொண்டிருந்தது.

 

ஆனால்  அது எவ்வளவு காலத்திற்கு....? என்ற எல்லையை தீர்மானிப்பது,  கடவுளா? அல்லது தலைவிதியா?? இல்லை.... சூழ்நிலையா??? என்ற கேள்வியை மூன்று வருடங்களின் பின் அவன் முன்னால் வைத்தது வாழ்க்கையின் யதார்த்தம்.   

 

தொடரும்...

 

இக்கதையின் தொடர்ச்சிக்கு....

விற்றுத்தீர்ந்த காதல் கதை (பாகம் -26)

 

 

 

Edited by கவிதை

ம்ம்........ தொடருங்கள் கவிதை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கள் என்றும் சொல்ல முடியவில்லை, விருப்பு வாக்கும் போட முடியவில்லை உங்களை அறிந்தவன் என்ற வகையில்.. :(

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை மீண்டும் கதையை தொடருங்கள். வாழ்வில் தொடர்ந்து முன்னேறுங்கள். தோல்விகளே வெற்றியின் படிகள்நினைவில் கொள்ளுங்கள்.

Edited by shanthy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதையை மட்டும் எழுதி முடியுங்கோ தம்பி .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.