Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக காத்திருக்கிறோம் - இரா.சம்பந்தன்

Featured Replies

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக காத்திருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்திப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்ததன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியதாவது,

அரசியல் தீர்வு காண வேண்டிய விவகாரங்கள் குறித்து இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்ததோடு, இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நலத்திட்டப் பணிகள் என்ற பெயரில் அந்நிய சக்திகளின் ஊடுருவல் காரணமாக அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறியதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்திய அரசாங்கம் தொடர்ந்து இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் அனைத்து நலப்பணிகளையும் மேற்கொள்ளும் என்றும், தேவையான அனைத்து விவகாரங்களிலும் தவறாமல் அக்கறை காட்டும் என்றும் நரேந்திர மோடி உறுதியளித்ததாகவும் சம்பந்தன் கூறினார்.

மேலும் இலங்கைத் தமிழ் மக்களின் நலனுக்காக இந்தியப் பிரதமரை சந்திக்கும் நீங்கள், தமிழகத்தின் அரசியல் தலைவர்களின் தலையீட்டை வேண்டாம் என்று மறுப்பது ஏன் என்று சம்பந்தனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த சம்பந்தன், நாங்கள் யாரையும் வெறுக்கவில்லை, தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் மற்றும் மக்களின் பங்களிப்பை முழுமையாக வரவேற்போம் என்றார்.

ஆனால், இதற்குத் தேவையான செயற்பாடுகள் அனைத்தும் ஒற்றுமையாகவும் ஒருமனதோடும் நடைபெற வேண்டும் என்று விரும்புவதாக அவர் பதிலளித்தார்.

இந்திய மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற வெற்றிக்கு வாழ்த்துக் கூறி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதிய போதே, நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்ததாகவும், அதன் பின்னர் தற்போது வரை சந்திப்பு தொடர்பான பதிலுக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழக அரசுடன் தாங்கள் தொடர்பில் இல்லை என்று கூறுவது தவறு என்றும் அவர் அப்போது விளக்கம் அளித்தார்.

http://www.pathivu.com/news/33376/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

வாழத்துக்குக் கூறும்போது ஒப்புக்குச் சொல்வது போல சந்திக்க விருப்பம் என்றால்சரியா?உத்தியோக ரீதியாக கடிதம் எழுதப்பட்டதா?( இந்திய மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற வெற்றிக்கு வாழ்த்துக் கூறி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதிய போதே, நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்ததாகவும், அதன் பின்னர் தற்போது வரை சந்திப்பு தொடர்பான பதிலுக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.)

நீங்க வேற...

நாங்கள் இருக்கும் நிலையில்

ஜெயலலிதா எப்பவோ அழைத்துப்பேசி  எம்மிடம் ஆசி   பெற்றிருக்கணும்

எப்படியும் வருவா தானே  பார்த்துக்கொள்ளலாம்... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

வாழத்துக்குக் கூறும்போது ஒப்புக்குச் சொல்வது போல சந்திக்க விருப்பம் என்றால்சரியா?உத்தியோக ரீதியாக கடிதம் எழுதப்பட்டதா?( இந்திய மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற வெற்றிக்கு வாழ்த்துக் கூறி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதிய போதே, நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்ததாகவும், அதன் பின்னர் தற்போது வரை சந்திப்பு தொடர்பான பதிலுக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.)

வாழ்த்துக் கூறுவது, ஒரு சம்பிராயத்துக்கு....

இந்தியா புறப்படும் முன்..... ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்டாரா? இல்லையா.....?

சம்பந்தர்.... நொண்டிச்சாட்டு சொல்வது போல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மத்திய அரச என்ன மாதிரியான குரல் கொடுக்கிறது என்று தெரிந்தால்தானே சேர்ந்த குரல் கொடுக்க முடீயும்.நீங்க 13தானே சொல்லுறியள்.அங்க என்னடா எண்டால் சிறிலங்கா அரசையும் ததேகூட்டைமைப்பையும் சேர்ந்து தீர்வுக்கு வருமாறு மோடி சொல்கிறார்.இஞ்ச சம்பந்தர் தமிழக அரசையும் மத்திய அரசையும் சேர்ந்து முடிவெடுக்கட்டாம்(அதாவது இந்தப் போர்க்குற்ற விசாரணை,சர்சனவாக்கெடுப்பு இதெல்லாம் விட்டுப்போட்டு 13க்க ஆதரவு கொடுக்கட்டாம். (இலங்கைப் பிரச்சினை தொடர்பில் தமிழக அரசும் மக்களும் குரல்கொடுத்து வருவது நம்பிக்கையைத் தருகிறது. ஆனாலும் அனைவரும் இந்திய மத்திய அரசுடன் சேர்ந்து ஒருமித்து குரல் கொடுத்தால் அது தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.(சம்பந்தர்))

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.