Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

A9 வீதி திறப்பு நாடகம்?

Featured Replies

:unsure:

யாழ். குடாநாட்டு மக்களின் அடிமனதில் உறவாடும் பல ஆத்மார்த்தமான வினாக்களையும், ஐயங்களையும் துப்பாக்கி முனைகளும் குண்டுகளும், காக்கிச் சட்டைகளும் காற்றில் வராது தடுத்து வருவது பல ஆண்டுகாலமாக நிகழ்கின்ற ஒன்று.

இன்று யாழ்ப்பாண குடாநாட்டில் 1,85,619 குடும்பங்கள் உள்ளன. இவர்கள் 6,35,300 மக்கள் தொகையினராவர். இவர்கள் அனைவரையும் பிற சிறிலங்காப் பகுதிகளுடனும் குறிப்பாக ஏனைய தமிழ்ப் பகுதிகளுடனும் இணைக்கும் முக்கிய தரைவழி, ஏ-9 எனப் பிரபலம் பெற்ற யாழ். - கண்டி நெடுஞ்சாலையாகும்.

இது யாழ். டீயளவலையn சந்தியில் ஆரம்பித்து கண்டிவரை நீள்கின்றது. இதில் யாழ்ப்பாணம் தொடக்கம் முகமாலை முன்னரங்க இராணுவ மையம் வரையான பகுதிகள் இராணுவத்தினதும், அடுத்து முகமாலை சூனியப் பிரதேசம் தாண்டி ஒமந்தை வரையிலான பகுதிகள் விடுதலைப் புலிகளினதும், அதற்கு அப்பால் உள்ள பகுதிகள் சிறிலங்கா அரச படைகளினதும் கட்டுப்பாட்டில் உள்ளன.

இதில் மிருசுவிலில் இருந்து முகமாலை வரையான பகுதியை மாத்திரமே பொதுமக்கள் பாவனைக்கு இராணுவம் தடை செய்துள்ளது. ஏனைய அனைத்து பகுதிகளையும் மக்களும் இராணுவமும் பாவிக்கின்றனர்.

ஆனால் இராணுவமும், அரச அமைச்சர்களும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தெரிவிக்கின்றனர். இதனால் மக்களின் குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது.

அதாவது முகமாலை முன்னரங்கப் பகுதியில் தொடர்ந்தும் மோதல்கள் நடைபெறுவதால் மக்களின் பயன்பாட்டிற்கு அதைத் திறந்து விடுதல் நல்லதல்ல என்பது இராணுவத்தினரதும், அரச பாதுகாப்பு அதிகாரிகளினதும், அமைச்சர் கேகலிய ரம்புக்வெலவினதும் வாதமாகும்.

இதற்காக ஏ-9 பாதை ஏன் மூடப்பட்டது என்பது இன்னமும் மக்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது. அதாவது யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த 1996-க்கு முற்பட்ட காலத்தில் கிளாலிக்கடல் நீரேரியால் மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும்போது இதே சிறிலங்கா இராணுவத்தால் பல மக்கள் வகை தொகையின்றிக் கொல்லப்பட்டனர். இன்று திடீரென ஏன் சிறிலங்கா இராணுவம் நீலிக்கண்ணீர் வடிக்கின்றது.

சரி, சிறிலங்கா இராணுவத்திற்கு மக்கள் மீது அதீத அக்கறை இருக்கின்றது என வைத்துக் கொள்வோம். தற்போது யாழ். குடாநாட்டிற்கான ஒரே தொடர்பான திருகோணமலை - காங்கேசன்துறை கடல் மார்க்கத்தில் யுத்தமே நடக்கவில்லையா? ஆக முகமாலையில் மாத்திரம் யுத்தம் நடைபெறுகின்றதா என இராணுவப் பேச்சாளரே சொல்ல வேண்டும்.

தரையால் முகமாலையூடாக சென்றால் புலிகள் தாக்குவார்கள் என்றா நீங்கள் கூறுகின்றீர்கள். அவ்வாறெனின் ஏன் குருநகர் மீனவர்கள் மீது நீங்கள் தாக்கினீர்கள் என கூறுங்கள்.

யாழ்ப்பாணத்தில் இருந்து தூர தென்பகுதி (னுளைவயnஉந ளழரவா) தளமான காலித் துறைமுகத்தை தாக்கும் திறனுள்ள புலிகள் ஏன் வடக்குக் கடலில் தாக்கமாட்டார்கள். அதாவது புலிகள் மிகப் பகிரங்கமாகவே கடல்வழியாக இராணுவம் ஒழுங்கு செய்யும் போக்குவரத்தை தவிர்க்கும்படி தெரிவித்த பின்னரும் நீங்கள் மக்களை கடல்வழியால் ஏன் அழைத்துச் செல்கின்றீர்கள்?

உங்களது தென்பகுதித் தளத்தினுள் ஊடுருவி புலிகள் தாக்குவதை தடுக்க முடியாத நீங்கள் மக்களுடன் செல்லும் உங்கள் கப்பலை புலிகள் தாக்கினால் எவ்வாறு மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவீர்கள்?.

இவை எல்லாவற்றிற்றிற்கும் மேலாக நீங்கள் மனிதாபிமானம் மிக்க பணியை செய்வதால் அதாவது பயணம் தடைப்பட்டதனால் பல வேலை வாய்ப்புக்களை, வெளிநாட்டுப் பயணங்களை இழக்கும் தறுவாயில் உள்ள, வேறு பல முக்கிய விடயங்கள் தடைப்பட்டுள்ள பலரை தென்பகுதிக்கு அழைத்துச் செல்கின்றீர்கள் என வைத்துக் கொண்டால் ஏன் அவர்களுடன் ஒரே கப்பலில் மிக வெளிப்படையாக ஆயுதம் தாங்கிய உங்கள் இராணுவ வீரர்களை அழைத்துச் செல்கின்றீர்கள். இது உங்களுக்கு மிகச் சிறந்த இராஜதந்திரமாக இருக்கலாம். இதனால் வரும் ஆபத்து எவ்வளவு என்பது தமிழ் மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

முகமாலையில் விழும் நீங்கள் கூறும் ஒரு செல்லின் சேதமும் கடலில் உலாவும் கரும்புலிப் படகின் பாரதூர விழைவு உங்களுக்கும் நன்றாகவே தெரியும் ஏனெனில் நீங்கள் நேரடி மோதலில் ஈடுபட்டுள்ள ஒரு தரப்பு அதாவது சிறிலங்கா இராணுவத் தரப்பு.

இவையெல்லாவற்றிற்கம் மேலாக சிறிலங்கா அரசாகிய நீங்கள் சொல்கிறீர்கள் 08.04.2002 இற்கு முன் அதாவது ஏ-9 நெடுஞ்சாலை திறக்க முன் யாழ். குடாநாட்டில் தற்போது உள்ள மாதிரியான நிலைமை நிலவியது என அதாவது தரைவழி துண்டிப்பு இருந்தது. அதனால் அன்று யாழ். குடாநாட்டை ஏனைய பகுதிகளுடன் தொடர்புபடுத்த பயன்படுத்திய கடல்வழியை இப்போதும் பயன்படுத்தலாம் என்பது அரசு மற்றும் அரச படைகளின் வாதமாகும்.

இதில் பல சிக்கல்கள் உள்ளது என்பதை கடல்வழிப் பாதையை முன்மொழிந்தவர்கள் ஏன் மறந்துள்ளார்கள் என்பது மக்களின் வாதமாகும்.

அதாவது ஏ-9 திறக்க முன்னர் ஆட்சியில் இருந்தது. தற்போது ஆட்சியில் உள்ள கட்சியாகும். அன்றைய தலைவர்கள் பலர் இன்றும் உள்ளார்கள். அவர்களது பதவி மட்டும் மாறியிருக்கலாம் ஆனால் அவர்களுக்கு அன்றைய யாழ். குடாநாட்டின் தேவைகள் என்ன? இன்றைய யாழ். குடாநாட்டின் தேவைகள் என்ன? இன்று யாழ். குடாநாட்டு மக்கள் தொகை என்ன? இன்று யாழ் மக்களின் தேவை ஏ-9 பாதை திறந்தபின் எவ்வளவு அதிகரிக்கச் செய்யப்பட்டது? இத்தேவைகளின் அதிகரிப்பை பூரணப்படுத்த கடல்வழி போதுமா என்பதும் அவர்களுக்கு தெரியும்.

உதாரணமாக ஏ-9 பாதை திறந்தபின் பல அரச நிறுவனங்களை கணணிமயப்படுத்துவதில் யாழ். குடாநாட்டு அதிகாரிகள் ஊக்கமளிக்கப்பட்டார்கள். இதன் பயன் பலது. ஆனால் இன்று அதாவது 11.08.2006 ஏ-9 மூடப்பட்ட பின் அந்நிறுவனங்களின் பெரும்பாலான பணிகள் சீர்குலைந்துள்ளது. காரணம் அந்நிறுவனங்களின் அதிகரித்த பல தேவைகள் பல இன்றுவரை பூர்த்தி செய்யப்படவில்லை. முக்கியமாக மின்சாரம், எரிபொருள், மற்றும் பல கணனி துணைப் பொருட்கள். இவ்வாறு யாழ். குடாநாட்டில் அதிகரித்த தேவைகளை பூர்த்தி செய்ய கடல்வழி போதுமானதன்று எனத் தெரிந்தும் அரச படைகளும் அரசும் தொடர்ந்தும் அதையே பயன்படுத்தப் போவதாகக் கூறுவது சிறிதும் மனிதாபிமானமற்றது என்பது மக்கள் கருத்து.

இவையனைத்துக்கும் மேலாக யாழ்ப்பாணத் தொடர்புகளுக்கு பயன்படுத்த போதுமான கப்பல்கள் அரசிடமும், படைகளிடம் இல்லை, என்பதை அரசும் படைகளும் வெளிப்படையாகவே கூறியுள்ளன. அத்துடன் கப்பல்களை வாடகைக்கு அமர்த்தும் முயற்சியும் தோல்வியுற்றுள்ளது. அதாவது கப்பல்களை பாதுகாப்பு காரணங்களினால் வழங்க நிறுவனங்கள் பின்னடிக்கின்றன. அத்துடன் மிக அதிக வாடகையையும் அறவிடுகின்றன.

இவ் அதிக வாடகையானது இராணுவ தரப்பால் கூறப்படும் மற்றைய காரணமான விடுதலைப் புலிகளின் வரிவசூலிப்பை பொய்யாக்கி விடுமளவிற்கு மக்களின் பணத்தைச் சுரண்டப்போகின்றது.

இராணுவப் பேச்சாளரே, அமைச்சர் கேகலிய ரம்புக்வெலவே விடுதலைப் புலிகளின் வருவாய்த்துறையில் தீர்வையால் தான் முகமாலையினூடாக ஏ-9 பாதையினை மூடியுள்ளதாகக் நீங்கள் கூறியுள்ளீர்கள். அப்படியானால் ஏ-9 பாதையென்பது எவ்வளவு நீளமுள்ளது? அதில் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் படி ஏதேனும் வரையறை உள்ளதா?

ஏனெனில் முன்னர் வரையறுக்கப்பட்டபடி, மக்கள் அறிந்தபடி ஏ-9 பாதை என்பது யாழ். முதல் - கண்டி வரை உள்ளது. இதில் முகமாலையிலும், ஓமந்தையிலும் புலிகள், மற்றும் சிறிலங்கா இராணுவத்தினதும் சோதனைச் சாவடிகள் உள்ளன. இதில் விடுதலைப்புலிகள் தீர்வைப்பகுதி மிக சிறப்பாக செயற்படுவது ஓமந்தையில் தான் முகமாலையில் அல்ல. எனவே ஏன் முகமாலையை மையப்படுத்தியே இராணுவம் பிரச்சாரப்படுத்துகின்றது?

அது மட்டுமல்ல முகமாலை, ஓமந்தை, உயிலங்குளம் போன்று கிழக்கு மாகாணத்திலும் பல தடைமுகாம்கள் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கும், விடுவிக்கப்படாத பகுதிகளுக்கும் இடையில் உள்ளது. இதில் அனைத்திலும் தொடர்ந்தும் நேரடிச் சண்டைகளும் ஷெல் பரிமாற்றம் நிகழ்கின்றது. அத்துடன் விடுதலைப் புலிகளின் ஆயப்பகுதி உள்ளது. அது அனைத்திலும் விடுதலைப் புலிகளின் வரையறுக்கப்பட்ட தீர்வைகள் அறவிடப்படுகின்றன. இப் பகுதிகளில் உள்ள மக்கள் தொகை யாழ்ப்பாண மக்கள் தொகையினை விட மிக அதிகமாகும்.

இவ்வாறு வன்னிப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்படும் பொருட்களுக்கு விடுதலைப் புலிகளால் ஓமந்தையில் தீர்வை தொடர்ந்தும் அறவிடப்படுகின்றது. ஏனைய தடைமுகாம்களிலும், சோதனைச் சாவடிகளிலும் இது நடைபெறுகின்றது. இது வெளிப்படையாகத் தெரிந்தும் ஏன் இராணுவம் யாழ்ப்பாணத்திற்கு மாத்திரமான பாதையை மாத்திரம் மூடிவைத்துள்ளது.

இது யாழ். மக்களின் மீதுள்ள அதிக அக்கறையா? அல்லது ஒரு பெரும் இன அழிப்பின் ஆரம்பமா? அல்லது யாழ்ப்பாண மக்கள் மாத்திரம் தான் சிறிலங்காவின் பிரஜைகள் மற்றைய அனைவரும் தமிழர் தாயகத்தில் வசிக்கும் வேறு நாட்டவரா? இன்றைய யாழ். குடாநாட்டின் இப்பெரிய மனித அவலத்திற்கும், பெரும் பட்டினி உணவுத் தட்டுப்பாட்டிற்கும், ஒட்டுமொத்த யாழ். குடாநாட்டின் முடக்கம் என்பவற்றிற்கு, காரணம் என்ன என பல தடவை மக்கள் நேரடியாகவே கேள்வி எழுப்புகின்றனர்.

முகமாமையில் தடுக்கப்பட்ட ஏ-9 ஊடாக பயணமாகும் இம் மக்கள் ஒட்டுமொத்தமாக எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தீர்வைத்தான் பிரச்சினை எனச் சொல்லவில்லை என்பது பலருக்குத் தெரியும்.

விடுதலைப் புலிகள் யாழ். குடாநாட்டுக்குள் ஊடுருவார்கள் என்றே பாதையை மூடியுள்ளதாகக் கூறி கடல் வழிப்பிரயாணத்தையும், உணவு கொண்டு செல்லலையும் முன்மொழியும் இராணுவம் ஏ-9 திறக்க முன்னர் கடல்வழித் தொடர்புகள் இருக்கும் போது யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதலிற்கு இராணுவம் பலியாகவில்லையா? அல்லது இன்றுகூட விடுதலைப் புலிகளால் ஏவப்படும் ஷெல்கள் முகமாலை சோதனைச்சாவடி மூடப்பட்டதால் யாழ்ப்பாணம் வரமுடியாது திரும்பிச் செல்கின்றனவா?

சிறிலங்கா இராணுவமும், அரசும் சொல்லும் பொய்களை நம்பி இனியும் யாழ் மக்கள் ஏமாறத் தயாராயில்லை. ஏ-9 என்பது எவ்வாறு 2002 கைச்சாத்திட்ட உடன்படிக்கையில் முக்கியத்துவப்பட்டதோ அதைவிட தற்போது இன்னமும் முக்கியத்துவமாக உள்ளது.

தற்போது அதைக் குத்தகைக்கு எடுத்து இராணுவம் தனது இருப்புக்கு யாழ். குடாநாட்டை ஒரு பெரும் மனிதக்கேடயமாக்க முயல்வது மாத்திரமே உண்மை.

யாழ்ப்பாணத்திலுள்ள 40,000 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினரின் உயிரைக் காப்பாற்ற மக்களை மெல்ல மெல்லக் கொல்லத் தொடங்கி விட்டது. குண்டில், துப்பாக்கி வேட்டில், கத்தி முனையில், சித்திரவதை முறையில், வெள்ளை வானில் ஊசலாடிய சில யாழ். குடாநாட்டு மக்களின் உயிருடன் சேர்த்து இன்று ஒட்டுமொத்த யாழ். குடாநாட்டு மக்கள் அனைவரினதும் உயிரும் ஏ-9 எனப்படும் நீண்ட வீதியின் முகமாலை எனப்படும் குறுகிய பகுதியில் ஊசலாடுகின்றது.

இவை அனைத்தையும் பிற சிறிலங்கா வாழ் மக்கள், மனித நேய விரும்பிகள் சர்வதேசம் உணர வேண்டும். அத்துடன் உடனடியாக ஏ-9 இனை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையேல் கடந்த 11.11.2006 அன்று முடிவடைந்த மூன்று மாதத்துடன் யாழ். குடாநாட்டில் ஆரம்பிக்கப்போகும் மனித அவலததிற்கு பொறுப்பானவர்களாக வேடிக்கை பார்த்தவர்கள் பட்டியலில் நீங்கள் இணைந்து யாழ். குடாநாட்டு மக்களின் பட்டினிச் சாவை வெறும் செய்திகளாக கேட்கவேண்டி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசாங்கம் ஏ9 பாதையினை தற்காலிகமாகத் திறக்கவுள்ளதாக ஆங்கில ஊடகச்செய்தியில் வந்துள்ளது. ஆனால் திறக்கவுள்ள திகதியினை இன்னும் அறிவிக்கவில்லை என்றும் மேலும் அச்செய்தியில் சொல்லப்படுகிறது.

Sri Lanka Opens Key Highway For Food Supplies To The North

The Sri Lankan government is temporarily to reopen a key highway to the country's north to allow food and essential items to reach civilians seriously affected by shortages over the past three months, the president's office said Sunday.

The president's office said the road will be open to send one food convoy from the south in a bid to ease the food situation. A date for the convoy has not been announced.

The road known as the A9 runs through a rebel-controlled area to the northern Jaffna peninsula and has been closed since August after military officials said rebels fired mortars at the army manning part of the road. Since then the government has been forced to send food supplies by sea, but stocks have been insufficient.

The announcement of the temporary opening comes ahead of Monday's meeting in Washington of the donor country grouping comprising the US, Japan, Norway and the EU to discuss the current situation.

On October 28 and 29 the rebels and the Sri Lankan government met in Geneva for peace talks, but could not agree on a second round of talks due to rebel demands for the reopening of the A9.

The government closed the road also to prevent rebels from collecting "taxes" from traders and passengers passing through the rebel-controlled area.

Government sources said that though the road will be opened only for one food convoy initially, they would likely look into possibly opening the road more often.

http://www.playfuls.com/news_10_3567-Sri-L...-The-North.html

வெளி நாட்டுக்காகப் பொய் சொல்கிறதோ தெரியாது.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka on Sunday announced sending essential supplies for half a million civilians trapped in Jaffna as foreign pressure, including from India, mounted on the government to open a disputed highway.

President Mahinda Rajapakse's office said he instructed the authorities to open the A-9 highway to allow access to the Jaffna peninsula which is virtually under siege since August 11 when the Tigers mounted an offensive.

Since then, the government has refused to open the main entry and exit point to Jaffna at Muhamalai along the A-9 saying it would be a military advantage to the Tigers.

Sensitive issue

The issue is so sensitive that the peace talks in Geneva broke down last month over the government's refusal to agree to Tiger demands to open the Muhamalai check point and allow access to Jaffna through the A-9.

Following growing unease in Tamil Nadu, India last week announced it will send over 7,000 tonnes of essential supplies to be distributed among residents in embattled areas of Lanka.

Foreign Secretary Shiv Shankar Menon is due in Colombo next week to convey New Delhi's concerns over the situation in the island, diplomats said.

Sri Lanka's president's office said efforts to send supplies by sea to the Jaffna peninsula were hampered due to monsoon rains and rough seas.

"The president has directed government authorities to make arrangements for the transport of essential goods to Jaffna by road using the A-9 (highway) as a one time measure," the president's office said.

It did not say when the supplies convoy would be moved, but added that voluntary organisations and international charities will be asked to help assemble a large fleet of trucks to carry the supplies as a one time measure.

It said a large convoy of trucks would be assembled soon with the help of voluntary organisations as well as international humanitarian agencies to transport essentials to Jaffna.

Food prices in Jaffna had gone up sharply following severe shortages as a result of the closure of the road. The opening of the highway was a key element of the February 2002 truce brokered by Norway.

http://www.ndtv.com/template/template.asp?...59&callid=1

ஏ-9 பாதை இன்று திறப்பதற்கு சிறிலங்கா ஐனாதிபதி உத்தரவு

அமெரிக்கா வோஸிங்ரன் நகரில் இணைத்தலைமை நாடுகளுடனான மாநாட்டில் மகிந்த ராஐபக்ஸ அரசாங்கத்தின் மீது கொண்டுவரப்பட்ட சர்வதேச அழுத்தங்கள் காரணமாக ஞாயிறு இரவு சிறிலங்கா அரசாங்கத்தால் ஏ-9 பாதை திறப்பதற்கான உத்தரவு சிறிலங்கா ஐனாதிபதி செயலகத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக ஒருதொகுதி பாரவூர்திகள் ஏ-9 பாதையூடாக மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களுடன் செல்லவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை கடந்த மாதம் ஓகஸ்ட் 11 திகதி முதல் ஏ-9 பாதை மூடப்பட்டிருப்பது யாவரும் அறிந்ததே.

www.pathivu.com

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா வோஸிங்ரன் நகரில் இணைத்தலைமை நாடுகளுடனான மாநாட்டில் மகிந்த ராஐபக்ஸ அரசாங்கத்தின் மீது கொண்டுவரப்பட்ட சர்வதேச அழுத்தங்கள் காரணமாக ஞாயிறு இரவு சிறிலங்கா அரசாங்கத்தால் ஏ-9 பாதை திறப்பதற்கான உத்தரவு சிறிலங்கா ஐனாதிபதி செயலகத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது

ஜயோ ஜயோ என்னய்யா இன்னமும் வாசிங்டன் கூட்டம் நடைபெறவில்லை.அதற்கிடையில் இவர்களுக்கு யாரப்பா அறிக்கைவிட்டது.

அதுதானே. இன்று தானே வாசிங்டன் கூட்டம்

அது பழைய கூட்டம்.

Edited by suddi

ஏ-9 பாதை இன்று திறப்பதற்கு சிறிலங்கா ஐனாதிபதி உத்தரவு

அரோகரா.. எல்லாரும் மகிந்தவுக்கு காவடி எடுங்கோ... :angry:

பயந்திட்டான் பாவி இன்னும் 7 நாளில் அவருக்கு உறைக்க இருக்குது தலைவரின் உரை

இப்ப திறந்த பாதை மக்களின் பாவனைக்கல்லவோ தனிய விநயோகத்துக்கு மட்டுமா

விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள இருப்பதை அறிந்து அதன் போது உலக அபிப்பிராயத்தை தமக்கு சார்பாக திருப்ப மேற்கோள்ளப்பட்ட கணிக்கப்பட்ட நகர்வாக இருக்கக் கூடும்.

உண்மையில் மக்கள் மீதான கரிசனை, அல்லது சமாதான ஆர்வம் எனின் பின்வருவனவற்றை கட்டம் கட்டமாக அரசு செய்ய வேண்டும்,

கட்டம் 1 (நவ 27 இற்கு முன்னர் அரசினால் மேற்கொள்ளப்பட வேண்டும்)

1) வாகரை மக்கள் மீது நடைபெறவுள்ள தாக்குதல்களை நிறுத்த வேண்டும்.

2) அவர்களுக்கான வினியோகங்கள் மேற்கொள்ள அனுமதி.

3) இராணுவத்தினரால் செய்யப்படும் சட்டவிரோத கொலைகளை உடனடியாக நிறுத்துவது.

கட்டம் 2 (இருதரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நேரத்திட்டத்திற்கமைய படிப்படியாக மேற்கொள்ளப்பட வேண்டும்)

1) போர்நிறுத்த உடன்படிக்கையின் படி வரையறுக்கப்பட்ட பகுதிகளுக்கு ராணுவம் மீளத்திரும்ப வேண்டும்

2) தமது கட்டுப்பாட்டில் உள்ள துணைஇராணுவக்குழுக்களை முற்றாக கட்டுப்படுத்த வேண்டும்.

3) இவற்றை செய்த பின் விடுதலைப் புலிகளும் அவர்களது தாக்குதலை நிறுத்திவிட வேண்டும்.

இவ்வாறான ஒரு படிமுறையே மீண்டும் சமாதானத்திற்கு வழி வகுக்கும்.

Edited by saanakiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

In fact, as the sea supply route is under heavy attract and the Sinhala government can't continue the food supply for the Military and Para Military groups in North. It is the only option to open A9 route and make sure enough supply for the military (NOT FOR THE PUBLIC).

You wonder how?

As you know it's all stored in MPCSs and other stores, which is will known to public and military. How hard for them to take it to their storage during the curfew time or even in the day time?

What we need to do:

We need to close the A9 again NOT the Sinhala government. But of cause before hand we need to urge our people to move to Vanni. I know it is not easy at all, but believe rather than suffering a lot and get killed in Jaffna, it is better and more freedom in Vanni.

We all know what will happen next.....

Of course this terrible situation won't last for a long time in Tamil Eelam and we will find the answers for all our questions in 7 days.

Edited by Puthiyavan_au

அத்தியாவசியப் பொருட்களை யாழ். அனுப்ப ஏ9 பாதையை திறப்பதற்கு அரசு இணக்கம்.

ஒரே தடவையில் வாகன அணியை அனுமதிக்க ஜனாதிபதி உத்தரவு!

பயணிகள் போக்குவரத்துக்குத் தொடாந்தும் தடை!!

ஏ9 பாரையைத் திறந்து, யாழ். குடாநாட்டுக்குத் தேவiயான அத்தியாவசியப் பொருள்களை முகமாலை ஊடாக, ஒரே தடவையில் கொண்டு செல்வதற்கான அனைத்த ஏற்பாடுகளையும் செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த அரச அதிகாரிகளுக்கு நேற்று உத்தரவிட்டிருக்கிறார். சமயத் தலைவர்களும், மக்கள் பிரதிநிதிகளும், மக்களும் விடுத்த வேண்டு கோள்களைக் கருத்திற் கொண்டும், எதிர்வரும வாரங்களில் சீரற்ற காலநிலை தொடரும் என்பதாலும் முகமாலை ஊடாகப் பொருட்களை ஒரே தடவையில் யாழ். குடாநாட்டிற்கு எடுத்துச் கெல்லுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார், என ஜனாதிபதி செயலகம் நேற்றிரவு விடுத்த அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும்;, ஏ9 பாதை ஊடாக பயணிகள் போக்குவரத்துக்கு அனுமதிப்பது தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தின் அந்த அறிக்கையில் எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை.

அறிக்கையில் :

• இந்த பணியைச் செய்வதற்கு ஏராளமான பல நூற்றுக்கணக்கான லொறிகள் தேவைப்படும் என்பதால் அவற்றைத் தந்துதவுமாறு அரசு கேட்டுள்ளது.

• ஓமந்தை மற்றும் முகமாலை சோதனைச் சாவடிகள் ஊடாக வாகன அணிகளைக் கொண்டு செல்வதற்கு சுயாதீன அமைப்புகளின் உதவியை அரசு நாடும்.

• யாழிக்கு பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சீல் செய்யபடும். வாகன அணி யாழ் சென்றடைந்ததும் சிவிலியன்கள், மதப் பிரமுகர்கள் மற்றும் அரச அதிகாரிகள் முன்னிலையில் ‘சீல்’ திறக்கப்படும்.

• மனிதாபிமான நோக்குடன் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் பாதுகாப்பான பயணத்தை நிச்சயப்டுத்திக் கொள்ளுமாறு சகல தரப்புகளிடமும் கேட்டுக் கொள்ளப்படும்.

• அவசர தேவைக்கு விநியோகிப்பதற்கென ஒதுக்கிச் சேமித்து வைக்கப்படும் பொருள்களும் ஏனையஅத்தியாவசியப் பொருள்களும் யாழில் அரசாங்க அதிபரின் மேற்பார்வையின் கீழ் வைக்கப்படும்.

• ஒரே தடவையில் பொருள்களை எடுத்துவரும் வாகன அணிக்கு லொறிகளக் கொடுத்து உதவ விரும்பும் லொறி உரிiயாளர்கள் அத்தியாவசிய சேவையளர்; நாயகத்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுமாறு பகிரங்க வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.

• யாழ் குடாநாட்டில் வாழும் மக்களுக்குத் தேவைப்படும் சகல பொருள்களையும் மனிதாபிமான ரீதியில் அனுப்பி தேவையான மேலதிக கையிருப்பை வைத்திருப்பதற்கு சர்வதேச மனிதாபிமான அமைப்புகளின் உதவியையும் அரசு கேட்டுக் கொள்கிறது.

• இந்த ஏற்பாடு மக்களின் தேவைகளை நிறைவு செய்வதோடு மக்கனிடையே நம்பிக்கையைக் கட்டி எழுப்பவும் பெரிதும் உதவும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : சுடர் ஒளி (20 நவம் 2006)

இந்த அரசுக்கு மனிதாபிமனத்தை காட்ட மூன்று மாதம் பிடித்துள்ளது. பட்டினிச்சாவும்,மந்தபோசாக்க

ஜனாதிபதி மஹிந்த உத்தரவு

முகமாலை ஊடாக ஒரே தடவையில்

குடாநாட்டுக்குத் தேவையான பொருள்கள்

ஏராளமான லொறிகள் தேவைப்படுவதால்

உரிமையாளர்களைத் தந்துதவக் கோரிக்கை

யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை முகமாலை ஊடாக ஏ9 பாதையில், ஒரே தடவையில் கொண்டு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யு மாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சமயத் தலைவர்களும், மக்கள் பிரதிநிதிகளும், மக்களும் விடுத்த வேண்டுகோள்களைக் கருத் திற்கொண்டும், எதிர்வரும் வாரங்களில் சீரற்ற காலநிலை தொடரும் என்பதாலும் ஜனாதிபதி, முக மாலை ஊடாகப் பொருள்களை ஒரே தடவையில் எடுத்துச்செல்லுமாறு பணித்துள்ளதாக ஜனாதி பதி அலுவலகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்தப் பணியைச் செய்வதற்கு ஏராள மான பல நூற்றுக்கணக்கான லொறிகள் தேவைப்படும் என்பதால் அவற்றைத் தந்துதவுமாறும் அரசாங்கம் கேட்டுள் ளது.

* ஓமந்தை மற்றும் முகமாலை சோதனைச் சாவடிகள் ஊடாக வாகன அணிகளைக் கொண்டுசெல்வதற்கு சுயேச்சையான அமைப்புகளின் உதவியை அரசாங்கம் நாடும்.

* யாழ்ப்பாணத்துக்கு பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் "சீல்' செய் யப்படும். வாகன அணி யாழ்ப்பாணத் தைச் சென்றடைந்ததும் சிவிலியன், மதப் பிரமுகர்கள் மற்றும் அரசாங்க அதிகாரி கள் முன்னிலையில் "சீல்' திறக்கப்படும்.

* மனிதாபிமான நோக்குடன் பொருள் களை ஏற்றிச்செல்லும் வாகனங்களின் பாதுகாப்பான பயணத்தை நிச்சயப்படுத் திக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட சகல தரப்புகளிடமும் கேட்டுக்கொள்ளப்படும்.

*குடாநாட்டுக்கு எடுத்துச்செல்லப் படும் அத்தியாவசிப் பொருள்கள் மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளின் கண் காணிப்புடனேயே விநியோகிக்கப்படும்.

* அவசர தேவைக்கு விநியோகிப்பதற் கென ஒதுக்கிச் சேமித்து வைக்கப்படும் மேலதிக பொருள்களும் ஏனைய அத்தியாவசியப் பொருள்களும் யாழ்ப்பாணத்தில் அரசாங்க அதிபரின் மேற்பார்வையின் கீழ் வைக்கப்படும்.

* ஒரே தடவையில் பொருள்களை எடுத்து வரும் வாகன அணிக்கு லொறிகளைக் கொடுத்து உதவ விரும்பும் லொறி உரிமை யாளர்கள் அத்தியாவசிய சேவைகள் நாய கத்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுமாறு பகிரங்க வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.

சர்வதேச அமைப்புகளின் உதவியும் கோரப்படுகிறது

* யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாழும் மக்களுக்குத் தேவைப்படும் சகல பொருள் களையும் மனிதாபிமான ரீதியில் அனுப்பி தேவையான மேலதிக கையிருப்பை வைத்திருப்பதற்கு சர்வதேச மனி தாபிமான அமைப்புகளின் உதவியை யும் அரசு கேட்டுக்கொள்கிறது.

* இந்த ஏற்பாடு மக்களின் தேவைகளை நிறைவுசெய்வதோடு மக்களிடையே நம் பிக்கையைக் கட்டி எழுப்பவும் பெரிதும் உதவும்.

இன்றைய தினத்திற்கு முன்னர் வெளிப் படுத்த முடியாதவாறு ஜனாதி பதி செயலகத்தால் விடுக்கப்பட்ட அறிக்கை யில் இவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் பாதுகாப்பு நிலைமை காரணமாக ஏ9 பாதை ஊடாக குடாநாட் டுக்கான பொருள்களை எடுத்துச்செல்ல முடியாத சூழ்நிலையில்

அத்தியாவசிய உணவுப்பொருள்களும் எரிபொருள்களும் கடல் வழிப்போக்கு வரத்து மூலமே எடுத்துச்சென்று விநியோ கிக்கப்படுகின்றன

பாதகமான காலநிலை, வர்த்தக நிலை யங்களை மூடுமாறு வர்த்தகர்களுக்கு விடுக் கப்பட்ட அச்சுறுத்தல்கள், மனிதாபிமா னப் பொருள்களையும் மக்களையும் ஏற் றிச் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல் கள் என்பவற்றின் மத்தியிலும் அரசாங்கம் குடாநாட்டு மக்களுக்குத் தேவையான பொருள்களைத் தளர்வின்றி எடுத்துச் சென்றதாக ஜனாதிபதி செயலகத்தின் அறிக்கையில் மேலும் சுட்டிக் காட்டப் பட்டிருக்கிறது.

www.uthayan.com

உதயன் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தி

ஜனாதிபதி மஹிந்த உத்தரவு

முகமாலை ஊடாக ஒரே தடவையில்

குடாநாட்டுக்குத் தேவையான பொருள்கள்

ஏராளமான லொறிகள் தேவைப்படுவதால்

உரிமையாளர்களைத் தந்துதவக் கோரிக்கை

யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை முகமாலை ஊடாக ஏ9 பாதையில், ஒரே தடவையில் கொண்டு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யு மாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சமயத் தலைவர்களும், மக்கள் பிரதிநிதிகளும், மக்களும் விடுத்த வேண்டுகோள்களைக் கருத் திற்கொண்டும், எதிர்வரும் வாரங்களில் சீரற்ற காலநிலை தொடரும் என்பதாலும் ஜனாதிபதி, முக மாலை ஊடாகப் பொருள்களை ஒரே தடவையில் எடுத்துச்செல்லுமாறு பணித்துள்ளதாக ஜனாதி பதி அலுவலகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்தப் பணியைச் செய்வதற்கு ஏராள மான பல நூற்றுக்கணக்கான லொறிகள் தேவைப்படும் என்பதால் அவற்றைத் தந்துதவுமாறும் அரசாங்கம் கேட்டுள் ளது.

* ஓமந்தை மற்றும் முகமாலை சோதனைச் சாவடிகள் ஊடாக வாகன அணிகளைக் கொண்டுசெல்வதற்கு சுயேச்சையான அமைப்புகளின் உதவியை அரசாங்கம் நாடும்.

* யாழ்ப்பாணத்துக்கு பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் "சீல்' செய் யப்படும். வாகன அணி யாழ்ப்பாணத் தைச் சென்றடைந்ததும் சிவிலியன், மதப் பிரமுகர்கள் மற்றும் அரசாங்க அதிகாரி கள் முன்னிலையில் "சீல்' திறக்கப்படும்.

* மனிதாபிமான நோக்குடன் பொருள் களை ஏற்றிச்செல்லும் வாகனங்களின் பாதுகாப்பான பயணத்தை நிச்சயப்படுத் திக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட சகல தரப்புகளிடமும் கேட்டுக்கொள்ளப்படும்.

*குடாநாட்டுக்கு எடுத்துச்செல்லப் படும் அத்தியாவசிப் பொருள்கள் மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளின் கண் காணிப்புடனேயே விநியோகிக்கப்படும்.

* அவசர தேவைக்கு விநியோகிப்பதற் கென ஒதுக்கிச் சேமித்து வைக்கப்படும் மேலதிக பொருள்களும் ஏனைய அத்தியாவசியப் பொருள்களும் யாழ்ப்பாணத்தில் அரசாங்க அதிபரின் மேற்பார்வையின் கீழ் வைக்கப்படும்.

* ஒரே தடவையில் பொருள்களை எடுத்து வரும் வாகன அணிக்கு லொறிகளைக் கொடுத்து உதவ விரும்பும் லொறி உரிமை யாளர்கள் அத்தியாவசிய சேவைகள் நாய கத்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுமாறு பகிரங்க வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.

சர்வதேச அமைப்புகளின் உதவியும் கோரப்படுகிறது

* யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாழும் மக்களுக்குத் தேவைப்படும் சகல பொருள் களையும் மனிதாபிமான ரீதியில் அனுப்பி தேவையான மேலதிக கையிருப்பை வைத்திருப்பதற்கு சர்வதேச மனி தாபிமான அமைப்புகளின் உதவியை யும் அரசு கேட்டுக்கொள்கிறது.

* இந்த ஏற்பாடு மக்களின் தேவைகளை நிறைவுசெய்வதோடு மக்களிடையே நம் பிக்கையைக் கட்டி எழுப்பவும் பெரிதும் உதவும்.

இன்றைய தினத்திற்கு முன்னர் வெளிப் படுத்த முடியாதவாறு ஜனாதி பதி செயலகத்தால் விடுக்கப்பட்ட அறிக்கை யில் இவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் பாதுகாப்பு நிலைமை காரணமாக ஏ9 பாதை ஊடாக குடாநாட் டுக்கான பொருள்களை எடுத்துச்செல்ல முடியாத சூழ்நிலையில்

அத்தியாவசிய உணவுப்பொருள்களும் எரிபொருள்களும் கடல் வழிப்போக்கு வரத்து மூலமே எடுத்துச்சென்று விநியோ கிக்கப்படுகின்றன

பாதகமான காலநிலை, வர்த்தக நிலை யங்களை மூடுமாறு வர்த்தகர்களுக்கு விடுக் கப்பட்ட அச்சுறுத்தல்கள், மனிதாபிமா னப் பொருள்களையும் மக்களையும் ஏற் றிச் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல் கள் என்பவற்றின் மத்தியிலும் அரசாங்கம் குடாநாட்டு மக்களுக்குத் தேவையான பொருள்களைத் தளர்வின்றி எடுத்துச் சென்றதாக ஜனாதிபதி செயலகத்தின் அறிக்கையில் மேலும் சுட்டிக் காட்டப் பட்டிருக்கிறது.

www.uthayan.com

பிந்திய செய்தி:-

ஏ-9 பாதையைத் திறக்க ஜனாதிபதி உத்தரவாதம்.

யாழ்ப்பாணத்திற்கான அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்காக இன்று ஏ-9 பாதையை அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டும் திறக்க சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

வோசிங்டனில் இன்று கூடவுள்ள இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில் ஏ-9பாதையைத் திறக்குமாறு அரசாங்கம் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படலாம் என தென்பகுதி ஆய்வாளர்கள் ஆரூடம் கூறும் நிலையில் இவ் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

நன்றி:- சங்கதி

சாமான்கள் அனுப்ப மட்டும் தான் திறக்கினமோ? மக்கள் போக்குவரத்திற்க்கு இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

ஏ9 திறக்கப்படும் என்பதற்கான சாத்தியம் மிகக் குறைவாகவே உள்ளது எனலாம். இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தின் பின், ஜநாவில் இலங்கையரசுக்கு தடை வரலாம் என்று கருதப்படுவதால் நெருக்கடியைக் குறைக்கும் விதமாகவே மகிந்த இந்த அறிக்கையை விட்டிருக்கலாம்.

இரண்டாவது மாவீரர் தின உரையில் தேசியத் தலைவர், யாழ்பாணத்துக்கான மனிதாபிமான நடவடிக்கை சீர்குலைவு, மற்றும் வாகரையில் பொருளாதாரத் தடை குறித்தவற்றைச் சுட்டிக் காட்டி யுத்தநிறுத்ததில் இருந்து விலத்துவதாக முடிவெடுத்தால் சர்வதேச சமுதாயத்தால் ஒன்றுமே செய்ய முடியாது.

உண்மையில் உலகநாடுகள் அவ்வாறு செய்யும்போது பயங்கராவதம் என்றோ, அல்லது எந்தக் குற்றச்சாட்டையும் போட்டு இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்காது. எடுக்க முடியாது. வழமையாக சிங்கள தேசத்தின் செயற்பாட்டை ஆதரிக்கும் உலக நாடுகள் இப்போது கடுமையாக நடக்க முனைவது எல்லாம் நாடகம் தான்.

அதற்கு ஒரு மாவீரர் தினத்தில் அவ்வாறு தலைவர் நடந்துவிடக் கூடாது என்பதற்கஞ்சித் தான் மகிந்த ராஜபக்சா நடிக்க முயல்கின்றார். ஆனால் அதில் ஒரே தடவை என்பதும், சீல் பண்ணித் தான் கொண்டு போக வேண்டும் என்பதும், ஒரு வித சூழ்ச்சியே!

அதை விட, லொறிகள் தேவைப்படுகின்றன. தந்துதவு மாறு கேட்பது கூட, காலத்தைக் கடத்தும் வேலையாகும். கொண்டு செல்கின்ற வாகனங்கள், திரும்பி வருவதைப் பற்றி எவ்வித கருத்துக்களும் சொல்லப்படவில்லை. அப்படியிருக்க எத்தனை பேர் அதை நம்பி வாகனத்தை கொடுப்பார்கள்.

மாவீரர் தினம் கழியடடும் என்றும், உலக நாடுகளும் நாடகம் ஆடுகின்றன. இலங்கையரசும் நாடமாடுகின்றது. தமிழர் வழமை போல காதில் பூ வைக்கலாம் என நினைக்கின்றன. அது நடக்கும் வரை நம்பி ஏமாறிவிடாதீர்கள்.

உலகநாடுகளின் நடிப்புக்களைப் பற்றி புலிகள் தெளிவாகவே புரிந்து வைத்திருக்கின்றார்கள். அது பற்றி எழிலன் சொல்வதைக் கேளுங்கள்.

http://www.pathivu.com/files/nilavaram/nil121106.wmv

எது எப்படியோ, மற்றவர்களைப் பகைப்பதை விட, எம்வழிக்கு கொண்டுவருவதில் தான் எம் வெற்றி இருக்கின்றது. அதை விட வெற்றி அவர்களின்; சூழ்ச்சியைப் புரிந்து அதற்கேற்ற வகையிலும் நடப்பது தான்.

இந்து பத்திரிகை தான் "A9 being opened" A9 பாதை திறக்கப்படுகிறது என்று எழுதினா எங்கடை ஊடகங்கள் மகிந்த உத்தரவு என்று மகிந்தவிக்கு பிரச்சாரம் செய்யினம்.... :P

போர் நிறுத்த விதிப்படி நிபந்தனை அற்று திறந்திருக்க வேண்டியதை மூடி வைத்துவிட்டு 1 முறை திறப்பதாகவும் அத்தியாவசிய உணவுப்பொருட்களிற்கா திறப்பதாகவும் கூத்து காட்டிறாங்கள். இவை ஏதோ விடிவு வந்துவிட்டமாதிரி தலையங்கம் தீட்டீனம். பந்தி பந்தியா எழுதீனம்.

மாவிலாறு திறந்த பிறகாவது 1 சிங்கள ஊடகம் பிரபாகரன் அணையை துறக்க உத்தரவு என்று எழுதியிருக்குமா? :angry:

இதுகள் எப்ப திருந்தி எப்ப தமிழீழம் கிடைக்கப் போகுது? தேசியத்திற்கு ஆதரவான.... :rolleyes:

"பேசாலைக்கடலில் பாரி கடற்சமர்" "பேசாலைக்கடலில் பாரிய குண்டுச்சத்தங்கள்" என்று தலையங்கம் தீட்டிப்போட்டு உள்ளுக்கை IPC அய் அதி வேக தாக்குதல் படகுகள் என்று எழுதிற கற்பனை வளம் கொண்டவைக்கு இந்த விடையத்தை ஏன்...

பாரிய அழுத்தங்கள் மத்தியில ஏ9 தற்காலிகமாக திறக்கப்படலாம்?

அழுத்தங்கள் மத்தியில தற்காலிகமாக ஏ9 திறக்கப்படலாம்?

அழுத்தங்களால் 1 முறை ஏ9 திறக்கப்படலாம்?

எ9 1 முறை திறப்பது பற்றி ஆலோசனை

எ9 விவகாரத்தில் அழுத்தங்களை எதிர்கொள்ளும் மகிந்த

போன்ற தலையங்கத்தில் எழுத முடியாது போனது?

சிங்களவன் மாவிலாறு திறந்தா பிறகும் எழுதுறான் திறந்ததை திருப்பி ப+ட்டமாட்டாங்கள் என்று என்ன நிச்சயம் ஆனபடியா நாங்கள் அடிச்சு பிடிக்க வேணும் எண்டு.

மகிந்தவிற்கு குண்டி கழுவிற தலையங்கம் எழுதுறவை தான் அதற்கு முதல் தலையங்கமாக மகிந்தவின் 1 வருட ஆட்சியில் 1154 பேர் கொலை என்று ஒப்பாரி வைக்கினம். தினம் ஒரு தேசிய தலைவர் படம் போடீனம்.

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கில ஊடகங்களில் ஏ9 பாதை தற்காலிகமாகத் திறக்கப்படவுள்ளதாகவும் ஆனால் எப்பொழுது என்றும் சொல்லவில்லை. பொதுவாக இந்தியா ஆங்கில ஊடகங்களிலேயே இந்தச் செய்தி வந்தது.

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry239404

ஒருதடவை திறந்து அத்தியவசிய பொருட்களை கொண்டு செல்லுவது எம்மக்கு சாதகமானது என நினைகிறேன் ஏனேனின் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் சனத்துக்கு உதவியாய் இருக்கும் மற்றது உந்த துறப்பு நாடகமெல்லாம் தலைவரின் உரைக்கு பயந்துதான் வேறொன்றும் இல்லை.உவை தலைவரின் உரையில் செல்வாகு செலுத்த கஸ்டப்படீனம்.

எல்லாரும் தேசிய தலைவர் உரை தேசிய தலைவர் உரை என்று பப்பா மரத்தில ஏறுறியள் போட்டி போட்டுக் கொண்டு நல்ல விசையம் தொடருங்கோ. பிறகு கருணாநிதியையும் சம்பந்தனையும் திட்டினமாதிரி திட்டாமல் இருந்தா சரி. :D

உங்களை சொல்லிக் குற்றம் இல்லை ஊடகங்களும் அப்படியான ஒரு எதிர்பார்ப்பைத்தான ஊதிக் கொண்டிருக்கினம் போட்டி போட்டுக் கொண்டு. அவை ஊடகத் தொழிலைவிட்டுட்டு மிச்சம் எல்லாம் செய்யிறதிலான் கவனமாக இருக்கினம். :rolleyes:

இன்று இருக்கிற அவல நிலைக்கு தேசிய தலைவரின் பேச்சு எந்த உடனடித் தீர்வையும் தராது. அவலங்கள் தொடரும் அதிகரிக்கும். விடிவி அந்தளவு அருகில் இல்லை. பயணிக்க நெடுதூரம் இருக்கு. எதிர் கொள்ள இன்னும் பல சவால்கள் இருக்கு. தேவை அற்ற யதார்த்தத்திற்கு புறம்பான எதிர்பார்ப்பை அண்ணையின் பேச்சு பற்றி ஏத்திவிட்டுட்டு எட்டப்பர் கூட்டம் 28 திகதியில இருந்து பிரச்சாரரீதியில பதம் பார்க்கும் பொழுது அம்மணமாக நில்லுங்கோ. :P

எதிர்பார்ப்புகளை நிர்வகிப்பது (managing the expectations) என்று ஒன்று இருக்கு. இது பங்கு சந்தையில் (public listed tradable companies) பட்டியல் இடப்பட்ட நிறுவனங்கள் தமது வருடாந்த மற்றும் வருடத்திற்கு 4 முறை வெளியிடும் இலாப நட்ட விபரங்கள், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கண்காணிப்பவரும் தீர்மானிப்பவருமாக கருதப்படும் அதன் மத்திய வங்கி தலைவரும் (Fed chief) அங்கு வட்டி வீதத்தை தீரமானிப்பவரும் தமது அறிக்கைகள் வெளிவரும் போது எதிர்பார்ப்புகளை சரியாக நிர்வகிக்கிறார்கள். இவர்களால் பரந்து பட்ட எதிர்பார்ப்பு என்ன என்று ஊகித்து அதற்கு பொருத்தமான அறிக்கையை வெளியிட முடியாது போய் பாரிய பொருளாதார இழப்புகளை சந்தித்த வரலாறுகளும் உண்டு. அதாவது அந்த இழப்புகள் எந்த உருப்படியான அடிப்படை விடையங்களிலும் அன்றி வெறும் எதிர்பார்ப்பிற்கு எதிராக அறிவித்தல் (speculated expections didn't match the announcements) செய்ததால் வந்த வினை.

அதைப்போலவே இந்த முறை (சிறு அளவில் கடந்த முறையும்) மாவீரர் தின உரை பற்றி ஒரு பரந்த எதிர்பார்ப்பு இருக்கிறது முக்கியமாக சர்வதேச மட்டத்தில் ஊடகங்கள் அவதானிகள் இராஜதந்திரிகள் என்று பலர் ஆராவாரப்படத் தொடங்கிவிட்டார்கள் பல வாரங்களிற்கு முன்னரே. இது எல்லோருக்கும் ஒரு புது அனுபவம். சரியாக கைய்யாளப்படாவிட்டார் மோசமாக backfire பண்ணலாம்.

Edited by kurukaalapoovan

என்ன குறுகஸ்இ

இப்படிக் கவுத்திட்டீங்க..... ஷ்.........இப்பவே கண்ணக்கட்டுதே.......!!!

நம்பிக்கை தானே வாழ்க்கை, தொடங்கும் போதே இப்படி நீளும் என்றா நினைச்சம்? இன்டைக்கு நாளைக்கு நாளையின்டைக்கு என்று 23 வருசம் ஓடிட்டு. இனியும் எத்தினை வருசமோ?

ம்...ம்... :-(

Edited by saanakiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.