Jump to content

ஈவேராவின் இதிகாசப் பொய்கள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இராமாயணமும், மகாபாரதமும் தமிழ்மக்களிடயே எங்கிருந்தோ 'ஆரியர் 'களால் கொண்டுவந்து புகுத்தப்பட்ட பொய்க்கதைகள் அல்ல. ராமகாதை மற்றும் மகாபாரதக் கிளைக்கதைகளும் கூட எப்படி மக்களின் அன்றாட வழக்கிலே புழங்கி வந்தன என்பதற்குச் சான்றுகள் சங்க நூல்களிலேயே நிறைய உள்ளன. அண்மையில் மரபுக்கவிஞர் திரு.ஹரிகிருஷ்ணன் அவர்களின் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில்கூட இதைக் குறிப்பிட்டுப் பேசியதைப் பார்த்தேன். கிழக்கு பதிப்பகத்தார் வெளியீடான அவருடைய 'அனுமன் ' புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் இதை விரிவாய் எழுதியுள்ளார்.

நம் திராவிடஸ்தான் புரட்சிவீரர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் இந்த இதிகாசங்களைக் குறித்துச் செய்த திரிபுப்பிரச்சாரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அதை அப்படியே நம்பிக் கொண்டிருக்கும் ஒரு முட்டாள்கூட்டத்தை, அதுவும் நன்றாகத் தமிழ் கற்றதுபோல் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு போலிப்பகுத்தறிவுக் கூட்டத்தை, இணையத்தில் தொடரும் அதன் விஷமப்பிரச்சாரத்தைக் காண நேர்ந்ததால் இதைப் பதிவு செய்கிறேன்.

இனி இராமாயணத்தைக் குறித்து ஈவேரா உதிர்த்த சில முத்துக்கள்:

"இராமாயணம் திராவிட மக்களை இழிவு செய்து ஆரியர்களைத் தெய்வமாக்க உருவானது." (விடுதலை - 26.1.1943)

அதே ஈவேரா சில வருடங்கள் சென்றபின் சொன்னது:

"இராமாயணம் - வால்மீகி என்கின்ற ஒருவரால் ஆரியர்களை (தேவர்களை) அயோக்கியர்கள், ஒழுக்கமற்றவர்கள், தீயகாரியங்களைச் செய்வதற்குப் பயப்படாத வஞ்சகர்கள் என்பதைக் காட்டவும், திராவிடர்களை (தென் இந்தியர்களை) மெத்த நாகரிகமுள்ள மேன்மக்கள், சூதுவாதறியாத பரிசுத்தமானவர்கள், வீரர்கள் என்பதைக் காட்டவும் சித்தரிக்கப்பட்ட ஒரு கதைத் தொகுப்பாகும்." (விடுதலை - 17.10.1954)

இந்த முரண்பாட்டைப் பாருங்கள்.

முதலில் இராமாயணம் திராவிட மக்களை இழிவு செய்து ஆரியர்களைத் தெய்வங்களாக்க உருவானது என்று கூறுகிறார். இரண்டாவது, திராவிடர்களை மெத்த நாகரிகமுள்ள மேன்மக்களாகக் காட்ட உருவானது என்று கூறுகிறார். என்ன பிதற்றல் இது!

மேலும் பார்ப்போம்.

"இராமாயணத்தில் தசரதன் தன் தங்கையையே கட்டிக்கொண்டு இருக்கிறான். வால்மீகி மாற்றிவிட்டான். ஆனால் புத்தராமாயணம், சமணராமாயணம் முதலியவைகளைப் பார்த்தால் தெரியும். தசரதனும் கோசலநாட்டு அரசன். கவுசலையும் கோசலநாட்டு அரசன் மகள். அதன் காரணமாகவே கவுசலை அல்லது கோசலை என்று அழைக்கப் பட்டாள். சுமார் 70 வருடம் முன்வரையில் சயாமில் இந்தமுறை அரசகுடும்பத்தில் இருந்து வந்திருக்கிறது." (விடுதலை - 25.5.1961)

ஈவேராவின் கருத்துப்படி பெளத்தரும், சமணரும் முதலில் சொன்ன இந்த ஆபாசக் கதையை வால்மீகி மாற்றி விட்டான் என்றாகிறது. ஆனால் உண்மை என்னவென்றால் முதலில் தோன்றியது வால்மீகி ராமாயணம்தான்.

ஈவேராவின் இந்த இதிகாசப்பொய்யை வெளிச்சம் போட்டுக்காட்ட ஆசிரியர் ம.வெ. பல இடங்களில் அலைந்து தேடி சமணராமாயணத்தைக் கண்டுபிடித்து எழுதுகிறார்:

எனக்கு புத்தராமாயணம் கிடைக்கவில்லை. ஆனால் சமணராமாயணம் கிடைத்திருக்கிறது. அதில் தசரதன் பெற்றோர் பற்றியும் கவுசலையின் பெற்றோர் பற்றியும் என்ன சொல்லப் பட்டிருக்கிறது தெரியுமா ?

தசரதன் தந்தை அரண்யன்.

கவுசலையின் தந்தை கெளசலன், தாய் அமிருதப்பிரபா.

இதில் எங்குமே ஈவேரா சொல்லும் ஆபாசப் பொய்த்தகவல் இல்லை.

(ஆதாரம்: நூல் - ஜைனராமாயணம், மூலம் ரவிசேனாச்சாரியார், தமிழில் தத்துவமேதை கஜபதி ஜைன், வெளியீடு - ஜைன இளைஞர் மன்றம்)

ஆகவே சமண ராமாயணத்தைப் பார்த்தால் தசரதன் தன் தங்கையையே கட்டிக் கொண்டு இருப்பது தெரியும் என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

மேலும் 'இராமாயணக்குறிப்புகள் ' என்ற நூலில் ஈவேரா அடுக்கியிருக்கும் பொய்கள் ஒன்றிரண்டல்ல.

"பார்ப்பனர்கள்தான் அக்காலத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என்கிற பெயர்களை வைத்திருந்தனர், நம் திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்திருந்தனர்." (இராமாயணக் குறிப்புகள் - பக்கம்-3)

அதே புத்தகத்தில் மேலும் சொல்வது.

"தேவர்கள், ராட்சதர்கள் என்ற பிரிவினைக்கு விளக்கம் இல்லை." (பக்கம்-5)

தேவர்கள் தன்மை என்ன ? ராட்சதர்கள் தன்மை என்ன ? மனிதர்கள் தன்மை என்ன ? மிருகங்கள், பட்சிகள் தன்மை என்ன ? இவையெல்லாம் இராமாயணத்தில் வரையறுக்கப் படவில்லை." (பக்கம்-5)

தேவர்கள், ராட்சதர்கள் என்ற பிரிவினைக்கு விளக்கமே இல்லை என்கையில், பொதுவில் திராவிட மக்களைத்தான் அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்தனர் என்று எப்படிச் சொல்ல முடியும் ? இது ஈவேராவின் கண்டுபிடிப்பே அல்லாமல் வேறில்லை.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 'இலக்கியம் மொழி கலை குறித்த பெரியாரின் சிந்தனைகள் - ஒரு மதிப்பீடு ' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேட்டில் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் இராமாயணம் பற்றிய ஆராய்ச்சி எவ்வளவு உண்மையில்லாதது என்று விளக்குகிறார்.

முனைவர் ப.கமலக்கண்ணன் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

ஃ பல்வேறு மொழிகளில் பல்வேறு புலவர்களால் எழுதப்பட்ட இந்த இராமாயணத்தைப் பற்றிப் பெரியார் அதிகமாகக் கருத்துகள் கூறியிருந்தாலும் மேலோட்டமான ஆய்வாகவே இருக்கிறது.

ஃ பெரியார் பேச்சுவழக்கில் சில கருத்துக்களை மக்களுக்கு எடுத்து வைத்தவைகளை, 'இராமாயணப் பாத்திரங்கள் ' என்ற தலைப்பில் (திக வெளியீடு) தொகுக்கப்பட்ட இந்த நூலில் இராமனைப் பற்றியும் ' இராவணைப் பற்றியும் கூறுகின்ற கருத்துக்கள் முன்னுக்குப்பின் முரணாகவே உள்ளன.

ஃ 'இராவணன் மகா கல்விமான், வேதசாஸ்திர விற்பன்னன், தைரியசாலி, மிகுந்த பக்திமான், அநேக வரங்களைப் பெற்றவன் ' என்று கூறும் பெரியார், இராவணனின் செயல்கள் தமது கொள்கைகளுக்கு முரணாக உள்ளதைக் கண்டு கொள்ளவில்லை. இராவணன் ஒரு திராவிடன் என்று கூறிவிட்டு இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், நிறைகளை மட்டும் உயர்த்திக் காட்டித் தமது ஒரு சார்பான நிலையைக் காட்டுகிறார்.

ஃ இராவணனை இடித்துரைக்கின்ற காரணத்தாலேயே அப்பாத்திரத்தைப் பற்றிப் பெரியார் கண்டு கொள்ளவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. பெரியார் அடிப்படையில் ஓர் ஆராய்ச்சியாளர் அல்லர்.

ஃ வசிட்டன் என்றால் இந்திரியங்களை வென்றவன் என்று பொருள். இவன் சூரியகுல அரசர்க்குக் குருவும் மந்திரியும் ஆகின்றவன் என்ற குறிப்பும் உள்ளது. ஆனால் வசிட்டரைப் பெரியார், புரோகிதன் என்ற முறையிலேயே காண்கிறார். இராமாயணத்திலே இவர் பிரமனை நிகர்த்தவர் என்று அறிமுகப்படுத்தப் படுகிறார். இருந்தாலும் இவர் வைத்த முகூர்த்த நேரம் சரியில்லாததால் இராமன் வனவாசம் போக நேர்ந்தது என்று பெரியார் கருதுகிறார். இந்தக் கருத்து பகுத்தறிவாளரான பெரியாரின் கொள்கைகளுக்கு முரண்பாடாக இருக்கிறது. சடங்கு, சோதிடம் முதலியவற்றில் நம்பிக்கை இல்லாத பெரியார், வசிட்டர் குறித்த நேரம் சரியில்லை என்று கூறுகிறார். வசிட்டர் ஆரியர் என்று பெரியார் கருதியதால் இந்தக் கருத்து நடுநிலை தவறி விட்டதாகவே எண்ணலாம்.

ஃ இராமாயணக் கதையின் தோற்றமும் அதன் காரணங்களும் ஆபாசக் களஞ்சியமாக இருக்கிறது என்று அடிப்படை அற்ற ஒரு காரணத்தை எடுத்துரைக்கிறார்.

ஃ எண்ணற்ற பண்புகளைக் கொண்ட இலக்குவனிடம் குறைகளோடு நிறைகளும் உண்டு என்பதைப் பெரியார் ஒப்புக் கொள்வதாகத் தெரியவில்லை.

ஃ இவரது கருத்துக்களில் பெரும்பாலும் அடிப்படைச் சான்றுகளே இல்லாத ஒரு நிலையைக் காண முடிகிறது. ஆராய்ச்சிக்கு அடிப்படையான வரையறை இல்லாமல் மேலோட்டமாகவே அமைந்துள்ளது.

இதற்கு மேலும் 'தந்தை பெரியாரின் சில சொந்தக் குழந்தைகள் ' செய்துவரும் விஷமப்பிரச்சாரத்துக்கு பதில் சொல்ல ஏதுமில்லை.

குறிப்புகள் தந்துதவிய தலித் அறிஞர் ம.வெங்கடேசனுக்கு மீண்டும் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக

திண்ணையில் விஸ்வாமித்ரா

------------------------------------------

எனக்கு எல்லாக் கருத்திலும் உடன்பாடு உண்டு என்று நான் சொல்ல வரவில்லை. நான் சொல்ல வருவது எல்லாம் பெரியார் திராவிடத்துவம் வளர்க்கவில்லை. அவரது குறிக்கோள் வெறுமனே ஆரிய எதிர்ப்பு என்பது மட்டும் தான்.

இப்படியொன கட்டுரைகளை இணத்தால் உடனே ஆரிய வெறியன், பாப்பாணி, என்ற வார்த்தைகள் நிறையவே புழங்கும். அல்லது என் மீது குற்றம் சாட்டப்படும். ஆனால் உருப்படியான பதில் ஏதும் கிடைக்கப் போவதில்லை.

Posted

தந்தை பெரியார் குறித்து நீங்கள் நிறையப் படிக்க வேண்டும்.

அவருடைய போராட்டத்தின் ஒரு பகுதிதான் பார்ப்பனிய எதிர்ப்பு.

ஆனால் பார்ப்பனிய எதிர்ப்பு என்பதற்கு எத்தனை அடங்கி இருக்கிறது பாருங்கள்.

பார்ப்பனியம் ஜாதியை கட்டிக் காக்கிறது.

பார்ப்பனியம் மூட நம்பிக்கையை வளர்க்கிறது

பார்ப்பனியம் தமிழின அடையாளங்களை இல்லாது செய்கிறது

பார்ப்பனியம் பெண்ணடிமைத்தனத்தை கடைப்பிடிக்கிறது

பார்ப்பனியம் 97 விழுக்காடு மக்களில் உரிமையை மறுக்கிறது

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆகவே பார்ப்பனிய எதிர்ப்பு என்பது வெறும் பிராமணர்களை எதிர்ப்பது அல்ல.

மேலே சொல்லப்பட்டது போன்ற அனைத்து விடயங்களையும் "பார்ப்பனிய எதிர்ப்பு" என்று ஒரு சொல்லில் செய்யலாம்.

ஆகவே தந்தை பெரியார் குறித்து சரியான புரிதல் வேண்டும்.

கரிகிருஸ்ணன் தந்தை பெரியாரை "ராமாசாமி நாயுடு" என்று அழைக்கிறார்.

தன் வாழ்நாளை ஜாதிக்கு எதிரான போராட்டங்களுக்கு அர்ப்பணித்த ஒரு மனிதரை "நாயுடு" என்று ஜாதிப் பெயர் சொல்லி குறிப்பிடுகிறார் என்றால்,

கரிகிருஸ்ணன் எவ்வளவு வக்கிர புத்தி கொண்ட மனிதராக இருக்க வேண்டும்.

இதையெல்லாம் கொண்டு வந்த இங்கு இணைக்கிறீர்களே?

Posted

பார்ப்பனியம் பெண்ணடிமைத்தனத்தை கடைப்பிடிக்கிறது

:lol::lol::lol: இதை தானே இன்னாரும் கடைப்பிடித்து வருகின்றார் அண்மை காலங்களில்

பெண்ணடிமை தனத்தை எவ்வாறு சித்தரித்தார் என்பது பலருக்கு புரியும்..இவர் போய்..இதை எப்படி....???? :(

Posted

"பெண் எழுதக் கூடாது" என்பதற்கும், "பெண் சிறப்பாக எழுத வேண்டும்" என்பதற்கு நிறைய வித்தியாசம் உண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தூயவன் வணக்கம்!

பெரியார், அண்ணாவின் நூல்களை வாசித்தால், அவர்கள் கருத்துக்கள் அறுவடை செய்ய துடிக்கின்ற விடையங்கள், பௌகுத்தறிவு கழுவத்துடிக்கும் பிற்போக்கு சிந்தனைகள் என்பவற்றை காண, வாசகமனம் வாய்பிளக்கும்.

இலங்கையில் மனிதச்சுவடு பட்டது எப்போது,

அப்போது மனிதநாகரிகமே இறக்குமதி ஆகியிராத காலம்.

கூட்டம், கூட்டமாக வாழ்ந்திருக்கின்றார்கள், கிட்டத்தட்ட பாலியல்உறவு விதிகள் கூட விலங்கினத்தில் இருந்து பெரிதாக வேறுபட்டிருக்கவில்லை.

ஆனால் இவர்கள் மகாபாரத, இராமாயண காலம் அதற்க்கும் முன்னால் போய் சீவித்திருக்கின்றது. அதுவும் எப்படி தற்க்கால நாகரிக சினிமா வாயைப் பிளந்து பார்க்கக் கூடியதாக கதை அளக்கப் பட்டிருக்கின்றது.

பார்ப்பானியம் தன் இனத்தை, உக்காரவைத்து ஜென்மம், ஜென்மமாக சோறு போடுவதர்க்காக, கோடிக்கணக்கான பொய்களை கீழ்சாதியினரின் இரத்தத்தில் கரைத்திருக்கின்றது.

அகழ்வாராட்சிகள், எத்துணை தொன்மைப் பட்ட சம்பவங்களுக்கு ஆதாரம் தந்துருக்கின்றது.

ஏன் இந்த பேரரசுகளின் கோவணத்துண்டாவது அதன் கையுக்கு கிட்டவில்லை.

சிந்துவெளியில் வெளிக்கும் உண்மைகள், கதை சொல்லிக் கொண்டிருப்பது திராவிடர் புராதனத்தைத்தான்.

அது பொறுக்க முடியாது மோசடி செய்கின்ற ஆரியர் கூத்துக்களை அறியவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் நீங்கள் பெரியார் புராணம் படிக்க வெளிக்கிட்டகாலத்தில் இருந்து கேட்கின்றேன்.திராவிடக் கொள்கைகளைக் காட்டுங்களேன் என்று.அதை விட்டுப் போட்டு நான் பெரியார் புராணத்தைப் படிக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்லிக் கொண்டு நிற்கின்றீர்கள்.

உங்களை உப்படிச் சொல்லியே அந்த ஆள் மூளைச் சலவை செய்து போட்டுது. காலை மாலை என்று மறக்காமல் துதியுங்கள். பாப்பாணம் எப்படி இந்தியாவில் ஜாதி வளர்த்தது என்று சொல்கின்றீர்களோ, ஈழத்தில் வெள்ளாள சமுதாயம் ஜாதி வெறி கொண்டு ஒரு காலத்தில் இருந்தது. ஈழத்திலும் பாப்பாணர் என்று கதை விடாதையுங்கோ. நானும் இருந்தனான் மட்டுமல்ல, கோவில்களில் பூசாரி பூசை செய்வது மட்டும் தான். தர்மகத்தா சபை தான் கோவிலைக் கட்டுப்படுத்துறவர்.

சிரட்டையில் தண்ணி கொடுப்பது முதல் பல செய்கைக்கு வெள்ளாளர் ஜாதி வெறி பிடித்து அலைந்தனர்.அதற்கு ஏதிராக ஏன் பெரியார் வழிவந்தவர்கள் ஒன்றும் செய்யவில்லை. இது தான் ஆரிய எதிர்ப்பு மட்டுமே உங்களின் சரக்கு என்று சொல்வது.

பாப்பாணிய எதிர்ப்பு என்பது ஒரு சமுதாயத்தைக் குறி வைத்தது மட்டுமே, அத்தோடு நம்பிக்கையையும் குறிவைத்து. இதனால் தான் திமுகாவில் இருந்த சிவாஜி கோவிலுக்கு போனார் என்பதற்காக கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். மற்றவர்களின் நடவடிக்கையில் இது தலையிடுவது போல் அல்லவா!

ஹரிக் கிருஸ்ணன் நாயிடு என்று வார்த்தை பாவித்தது தவறு ஒன்றுமில்லை.பெரியார் என்று சொல்லிக் கொள்வது மூலம் அந்த வார்த்தையை அசிங்கப்படுத்தக் கூடாது என்று நினைத்திருக்கலாம்.அல்லது ஒரு தெலுங்கன் தமிழன் தலையில் சாணி அரைத்தது என்பதைக் காட்டுவதற்காகவும் இருக்கலாம். இதைப் பெரியார் விரும்பியிருக்கலாம்.அதனால் தான் அவரது வரலாற்று ஏடுகளில் ராமசாமி நாயிடு என்று ஜாதியோடு கூடிய வரலாறே இருக்கின்றது.

எது எப்படியோ பெரியார் புராணம் பாடுபவர்கள் "பெரியார் உயர்ந்த ஜாதியில் பிறந்தும் மக்களுக்காகப் போராட வந்தார் என்று வரிக்கு வரி எழுதிக் கொள்வதன் மூலம் தங்களின் ஜாதி வெறியை அடிக்கடி காட்டுவது வழக்கம்.

உங்களின் நம்பிக்கையில் தலையிடும் விருப்பம் எனக்கில்லை. ஆனால் இங்கேயும் பெரியாரின் ஒரு முகத்தை மட்டும் காட்டி தங்களைப் பகுத்தறிவாளராகப் பெரியார் புராணம் பாடுபவர்கள் இருப்பதால் அது உண்மையல்ல என்று காட்ட வேண்டியிருப்பதால் தான். உங்களின் வேலையை விட்டு, எங்களுக்குள் வந்து மாட்டை ஓட்டினால் நாங்களும் ஓட்டுவதில் தப்பில்லையே!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தூயவன் வணக்கம்!

பெரியார், அண்ணாவின் நூல்களை வாசித்தால், அவர்கள் கருத்துக்கள் அறுவடை செய்ய துடிக்கின்ற விடையங்கள், பௌகுத்தறிவு கழுவத்துடிக்கும் பிற்போக்கு சிந்தனைகள் என்பவற்றை காண, வாசகமனம் வாய்பிளக்கும்.

இலங்கையில் மனிதச்சுவடு பட்டது எப்போது,

அப்போது மனிதநாகரிகமே இறக்குமதி ஆகியிராத காலம்.

கூட்டம், கூட்டமாக வாழ்ந்திருக்கின்றார்கள், கிட்டத்தட்ட பாலியல்உறவு விதிகள் கூட விலங்கினத்தில் இருந்து பெரிதாக வேறுபட்டிருக்கவில்லை.

ஆனால் இவர்கள் மகாபாரத, இராமாயண காலம் அதற்க்கும் முன்னால் போய் சீவித்திருக்கின்றது. அதுவும் எப்படி தற்க்கால நாகரிக சினிமா வாயைப் பிளந்து பார்க்கக் கூடியதாக கதை அளக்கப் பட்டிருக்கின்றது.

பார்ப்பானியம் தன் இனத்தை, உக்காரவைத்து ஜென்மம், ஜென்மமாக சோறு போடுவதர்க்காக, கோடிக்கணக்கான பொய்களை கீழ்சாதியினரின் இரத்தத்தில் கரைத்திருக்கின்றது.

அகழ்வாராட்சிகள், எத்துணை தொன்மைப் பட்ட சம்பவங்களுக்கு ஆதாரம் தந்துருக்கின்றது.

ஏன் இந்த பேரரசுகளின் கோவணத்துண்டாவது அதன் கையுக்கு கிட்டவில்லை.

சிந்துவெளியில் வெளிக்கும் உண்மைகள், கதை சொல்லிக் கொண்டிருப்பது திராவிடர் புராதனத்தைத்தான்.

அது பொறுக்க முடியாது மோசடி செய்கின்ற ஆரியர் கூத்துக்களை அறியவில்லையா?

ஆமாம் நிச்சயமாக.அந்தக் காலத்தில் ஈபிஆர்எல்எவ் வெளியிடும் துண்டுப் பிரசுரம் எல்லாம் பக்கத்தில் நிற்குமா? இரத்தவெறி,பாசியம்,கொலைக் கூட்டம் என்று எல்லாம் போய்,இதில் ஆரியரை எப்படித் தாக்குவது என்றும், எதற்கெடுத்தாலும் கிண்டலும் நக்கல் தொனியோடு கதைப்பதும் தான் திராவிடத்துவமா? அப்படியான செய்கையால் தான் தமிழனின் அடையாளம் சிதைக்கப்படுகின்றது.

இன்றைக்கு, மற்றய சமுதாயங்கள் எல்லாம் வளர்ச்சி பெற்றுச் செல்லும்போது நாங்கள் மட்டும்,பாப்பாணி ஆரிய வெறி பற்றிக் கதைக்கின்றோம். எம் மக்களை ஒன்று திரட்ட அது தான் வழி என்று தப்பாக நடக்கின்றோம். சொல்லுங்கள் எவ்வளவு கீழ்த்தரமான செயல் அது.

ஒரு கோட்டை அழித்து எம் கோட்டை உயர்த்த வேண்டியதா எமக்குத் தேவை? இன்றைக்குச் சொல்லுங்கள். எமக்குரிய கட்டுமானங்கள் எவை? தமிழருடைய அடையாளங்கள் எவ்வளவு தூரம் பாதுகாக்கப்பட்டன? வெறுமனே மற்றவர்களைத் திட்டுவது தான் எமக்குரிய கலையா?

இஸ்ரேலைப் பாருங்கள். ஜேர்மனி தன் இனத்தை அழித்தது என்பதற்காக தொடர்ந்தும் அதையா பேசுகின்றார்கள். இல்லையே! அவர்கள் கட்டுமானங்கள் பற்றியே சிந்திக்கின்றார்கள். ஆனால் பெரியாரும்,அண்ணாவும் சொல்லிக் கொடுத்தது பார்ப்பாண வெறியாகத் தானே உங்களிடம் இருக்கின்றது. கடைசியில் ஆரை நம்பி அந்தத் தெலுங்கர் திராவிடத்துவம் என்று தொடங்கினாரோ,அவை தமிழ்நாட்டுக்கு எதிராகவும், திராவிடத்துவம் என்பதை மதிக்கவும் இல்லை. அவர்களுக்கு தெரிகின்றது போலும். மற்றய மதங்களை எதிர்ப்பது திராவிடம் இல்லை என்று.

ஆக தமிழன் மட்டும் தான் இப்போது தனித்துப் போனது மட்டுமல்ல, மற்றய சமுதாயங்களோடு தூர போகும் நிலையை உருவாக்கியது இந்தத் பெரியார் என்ற தெலுங்கன்.

அப்படித் தனித்துப் போய் வெல்லக் கூடிய தகுதியோடுதான் தனித்துப் போயிருக்க வேண்டும்.

இப்போது சொல்லுங்கள் தேவன்! தமிழனின் கட்டுமானங்கள் எவை என்று நீங்கள் எப்போது சிந்திக்கின்றீர்களோ,அது தான் என்னைப் பொறுத்தவரைக்கும் தமிழ் தேசியம். அது மற்றவர்களின் காலை வாருவதிலும், பாப்பாணி என்று சொல்லிக் கொண்டு கட்டுரை புனைவதிலும் அல்ல.

உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்லலாம். திராவிடம் கதைப்பவர்களின் செயற்பாடின்மையை. நீண்டகாலமாக ஊடகம் என்பது பாப்பாணிகளின் கையில் என்று சத்தமிடுபவர்கள். ஆனால் இன்று வரைக்கும் அதே சத்தத்தை மட்டும் தானே போடுகின்றார்கள்.சொல்லுங்கள் பொருளாதாரரீதியில் பாப்பாணியல்லாதவர்களால் ஊடகங்களை அமைக்கும்வசதியோ, வாய்ப்போ இல்லையா? ஏன் முடியவில்லை.

ஏன் என்றால் அது அவர்களால் முடியாது. திராவிடம் என்றால் எதிர்த்து கதைப்பது மட்டும் தான் என்று பழக்கப்பட்டுவிட்டார்கள்.

Posted

உங்களுக்கு இன்னும் பார்ப்பனிய எதிர்ப்பு என்பதன் அர்த்தம் புரியவில்லை.

யாழ்ப்பாணத்தில் உயர் குல வேளாளரின் ஆதிக்கத்தை எதிர்ப்பதும் பார்ப்பனிய எதிர்ப்புத்தான்.

இந்திய துணைக் கண்டத்தில் பார்ப்பனர்கள் செய்வதை யாழ்ப்பாணத்தில் வேளாளர் செய்கிறார்கள்.

ஆகவே நாம் பார்ப்பனியத்தை எதிர்க்கிறோம் என்று சொல்கிற பொழுது, பிராமணர்களை மட்டும் எதிர்க்கிறோம் என்று பொருள் கொள்ள வேண்டாம்.

நாம் தந்தை பெரியாரை முன்னிலைப்படுத்தி பேசுவதன் காரணம், அவர் மிகப் பெரிய பகுத்தறிவு எழுச்சியை ஏற்படுத்தியதால்தான்.

விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்கள் அனைவருமே விடுதலைப்புலிகள் செய்கின்ற அனைத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும்.

அதே போன்று பெரியார் குறித்தும் எனக்கும் சில மாற்றுக் கருத்துக்கள் உண்டு. அவருடைய திராவிட தேசியத்தில் எனக்கு உடன்பாடில்லை. நான் தமிழ் தேசியத்தை விரும்புபவன்.

அவர் தமிழ் மொழி குறித்து கொண்டிருந்த சில காட்டமான கருத்துக்களும் எனக்கு ஏற்புடையவை அல்ல.

ஆனால் தந்தை பெரியார் சொல்கிறாh:

"நான் சொல்கிறேன் என்பதற்காக நீ அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டாம். நீ சிந்தி, உன் பகுத்தறிவைக் கொண்டு சிந்தி. அதன் பிறகு உனக்கு சரி என்று பட்டால் அதை ஏற்றுக் கொள்."

இதை அவர் அடிக்கடி சொல்வார். சில வேளைகளில் திருக்குறளை உதாரணம் காட்டிப் பேசுவார். பேசி விட்டு சொல்வார் "இது திருக்குறள் என்பதற்காகவோ, இதை எழுதியது திருவள்ளுவர் என்பதற்காகவோ இதை சொல்லவில்லை. இந்தக் குறள் சொல்வது எனக்கு சரியென்று படுவதால் சொல்கிறேன்" என்று சொல்வார்.

இப்படி ஒரு மனிதன் சொந்தமாக சிந்திக்க வேண்டும் என்பதற்கு மிகவும் முன்னுரிமை கொடுத்தவர் பெரியார்.

நான் பெரியார் சொன்னபடி, நானா சிந்தித்து அவர் சொன்ன பெரும்பாலனவற்றை ஏற்றும், சிலவற்றை ஏற்காமலும் விட்டுள்ளேன். அந்த வகையில் நானும் ஒரு பெரியாரிஸ்ட். ஒரு பகுத்தறிவாளன்.

ஆனால் என்னுடைய பெற்றோர் ஒன்றை நம்பி விட்டனர். அதைத்தான் நானும் நம்ப வேண்டும் என்று சொல்வது எந்த வகையானது என்பதை நான் சொல்லத் தேவையில்லை.

மனித இனம் காலத்துக்கு காலம் தன்னுடைய கடவுளை மாற்றிக் கொண்டு வந்த பொழுது, அதையும் பெற்றோர்கள் பற்றிய நம்பிக்கைiயும் ஒப்பிடுபவர்களை என்ன சொல்ல?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் தூயவன்.

நானும் ஒரு பிராமணனாகவே இருந்தாலும் கூட,

பெரியாரின் சிந்தனைக்கு என்னுடைய அறிவு தலைவணங்கும் .

பொதுநலத்தில் அக்கறை உள்ள ஒவ்வொரு மனிதனையும் ஆட்கொள்ளும் கடவுளின்(பெரியாரின்) வேதம்

ஏன் எனில் அது ஒரு இன. தேச ,மத அடையாளங்களுக்கு அப்பால் உள்ள பௌகுத்தறிவின் விதை.

ஈழத்தின்; இளம் தலைமுறையின் பெரும் பான்மை சாதிய வேற்றுமையை பேச்சளவிலாவது வெறுக்கின்றார்கள்.

ஆனால் என்னோடு பழகிய இந்திய இளம்தலைமுறையின் பெரும்பான்மை

சாதிய வேற்றுமையை வரவேற்க்கின்றார்கள்.

இந்த அறிவியல் நூற்றாண்டின் புதியனவற்றால் ஊட்டம் பெற்ற சிந்தனைகளே!

அந்த வேற்றுமையைத் தொலைத்த புலத்து வாழ்வியலில் வாழ்ந்தும் கூட,

அந்தப் புத்தியிலே உள்ள அழுக்கை கழுவமுடியவில்லை.

இதற்கு ஆயிரம் பெரியாரின் சிந்தனை செய்ய முடியாததை.

ஒன்றுக்கும் உதவாத புத்தியொன்றின் மந்திரத்தில் இருக்கென்று நம்புகின்ற மடைமையை

என்ன சொல்வது.

ஒரு சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும், என்ற ஒரு நோக்கம் ஒன்றுக்கு,

அதன் முதல் பணியாக அமைய வேண்டியது.

சமூகங்களுக்குள்ளே இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து,

மனிதன் என்ற தகுதியை ஒவ்வொருத்தனும் சமமாக உணரச் செய்யபடவேண்டும்.

இல்லை என்றால் நாம் ஏன் சிங்களவனுக்கு சமமானவன் இல்லை என்று கேட்க்கும் கேள்விகளுக்கு அதேசமாமான வேலை இங்கேயும் எளும்.

எமது இனத்தை சாதியப் புதைகுழியில் இருந்து மீட்டுத் தந்த பெரியாரின் சிந்தனைக்கு, அவர் யாராய் இருந்தால் என்ன, அவர் போற்றுதற்கு குரியவரே!

இப்படி ஆயிரம் சமூகநோய்க்கு அவர் சிந்தனை மருந்தாகிறது.

ஒரு சில அவரின் நூல்களை வாசிபதாலாவது, அதன் நன்மையின் விலை தெரியும். தூயவன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்களுக்கு இன்னும் பார்ப்பனிய எதிர்ப்பு என்பதன் அர்த்தம் புரியவில்லை.

யாழ்ப்பாணத்தில் உயர் குல வேளாளரின் ஆதிக்கத்தை எதிர்ப்பதும் பார்ப்பனிய எதிர்ப்புத்தான்.

இந்திய துணைக் கண்டத்தில் பார்ப்பனர்கள் செய்வதை யாழ்ப்பாணத்தில் வேளாளர் செய்கிறார்கள்.

ஆகவே நாம் பார்ப்பனியத்தை எதிர்க்கிறோம் என்று சொல்கிற பொழுது, பிராமணர்களை மட்டும் எதிர்க்கிறோம் என்று பொருள் கொள்ள வேண்டாம்.

நாம் தந்தை பெரியாரை முன்னிலைப்படுத்தி பேசுவதன் காரணம், அவர் மிகப் பெரிய பகுத்தறிவு எழுச்சியை ஏற்படுத்தியதால்தான்.

இப்போது இவ்வாறு பாப்பாணி என்றால் அது ஆதிக்கம் செய்யும் இனத்தை எதிர்ப்பதாகச் சுட்டிக் காட்டும் சபேசன், முந்திய இணைப்பு ஒன்றில் சொன்ன கருத்து இதுவாகும்.

தமிழ்நாட்டைப் போன்று தமிழீழத்தில் பார்ப்பனியத்தின் ஆபத்து உணரப்படாததன் காரணம் அந்த இணைப்பில் உள்ளது போன்று, பார்ப்பனர்கள் ஈழத்தில் இரண்டாம் இடத்தில் இருந்ததே.

இப்படி அவர்கள் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டதற்கான காரணமும் அந்த இணைப்பில் மேலோட்டமாக கூறப்பட்டுள்ளது.

மக்கள் தொகையிலும், கல்வியிலும் முன்னேற்றம் காணுகின்ற ஒரு சமூகம் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

http://www.yarl.com/forum3/index.php?showt...5330&st=120

அவருக்கு வெளிப்படையாகத் தெரியும். பாப்பாணி என்பது பிராமணர்களை மட்டும் தான் குறிக்கின்றது என்று. ஆனால் பெரியார் என்ற மனிதர் ஒரு குறித்த சமுதாய வெறியர் என்ற உண்மையை மறைக்கும் வண்ணம், பார்ப்பாணம் என்றால் ஆதிக்க சக்திகள் என்ற ஒரு பொய்யைச் சொல்கின்றார்.

முன்பு அவர் சொன்ன கருத்தில் ஒரு சமுதாயம் ஆரிய எதிர்ப்பை விட்டு விட்டு, பூரண கல்வியறிவைப் பெற்றால் சாதி வெறியில் இருந்து வெளியேறலாம் என்ற உண்மையையும் அவர் அறிந்திருக்கின்றார் என்பதை இறுதி வசனத்தில் இருந்து கண்டு கொள்ளலாம்.

ஆக, வெறுமனே இங்கே விவாதம் என்ற பெயரில் ஒரு குறித்த மனிதனின் வெறிறை மூடி மறைக்க பொய்களும், பூச்சுக்களும் பூசப்படுகின்றன என்பது தெளிவானது.

அதற்கு புலிகளோடு ஒப்பிடுவது மூலம் சமாந்தரமக்கி புலிகளுக்கு ஒரு அசிங்கப் பெயரையும், இங்கே பெரியாரின் வெறியையும் மறைக்கும் செயலுமே மேற்கொள்ளப்படுகின்றன.

புலிகள் ஐாதியைத் தடுத்தபோது, எந்த ஒரு சமுதாயத்துக்கும், உயர்வு காட்டவில்லை. அல்லது தாழ்வும் காட்டவில்லை. அது தான் ஐாதியை இல்லாமல் செய்ய வழி!

ஆனால் பெரியார் ஒரு சமூகத்தைத் தாழ்த்தி, மற்ற சமுதாயத்தை உயர்த்துவதன் மூலம், எவ்வாறு பிராமணியம் நடந்து கொண்டதோ, அதே தப்பைத் தானும் செய்கின்றார். அப்படிப் பார்த்தால் முன்பு பிராமணர்கள் செய்தது சரியானது என்ற நிலைக்குப் போய் விடும் என்றல்லவா ஆகும். இது தான் தப்பு என்கின்றோம்.

அதே போன்று பெரியார் குறித்தும் எனக்கும் சில மாற்றுக் கருத்துக்கள் உண்டு. அவருடைய திராவிட தேசியத்தில் எனக்கு உடன்பாடில்லை. நான் தமிழ் தேசியத்தை விரும்புபவன்.

தமிழ் தேசியம் என்பதை தமிழன் தான் சொல்ல வேண்டுமே தவிர, ஒரு தெலுங்கனால் தலைமை வகிக்க முடியுமா? என் கருத்து என்னவென்றால் தமிழர் தான் ஆதிக்குடிகள் என்ற உண்மையைத் தெரிந்த பெரியார், தெலுங்கனையும் இணைக்க முயல்கின்றார்.

இல்லாவிட்டால் எல்லா மாநிலங்களிலும் உள்ள தாழ்த்தப்பட்டவர்களை இணைக்க ஏன் முயற்சிக்கவில்லை.

ஆனால் தந்தை பெரியார் சொல்கிறாh:

"நான் சொல்கிறேன் என்பதற்காக நீ அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டாம். நீ சிந்தி, உன் பகுத்தறிவைக் கொண்டு சிந்தி. அதன் பிறகு உனக்கு சரி என்று பட்டால் அதை ஏற்றுக் கொள்."

இதை அவர் அடிக்கடி சொல்வார். சில வேளைகளில் திருக்குறளை உதாரணம் காட்டிப் பேசுவார். பேசி விட்டு சொல்வார் "இது திருக்குறள் என்பதற்காகவோ, இதை எழுதியது திருவள்ளுவர் என்பதற்காகவோ இதை சொல்லவில்லை. இந்தக் குறள் சொல்வது எனக்கு சரியென்று படுவதால் சொல்கிறேன்" என்று சொல்வார்.

அப்படியாக இருந்திருந்தால் அண்ணா திமுகவைத் தொடங்கும்போது ஏன் கோபித்தார். அண்ணாவிற்கு சரி என்று அது பட்டிருக்குமல்லவா! தத்துவம் கதைப்பது என்பது சுகமானது. ஆனால் நிகழ்காலத்தில் சாத்தியமா என்றால் அங்கே தான் உதைக்கும்.

அதனால் தான் திராவிடக் கொள்கை என்று தொடக்கத்தில் மார்தட்டினவர்ள் கடைசியில் மஞ்சள் துண்டுக்கும், கறுப்புத் துண்டுக்கும் மருத்துவக் காரணம் சொல்ல வேண்டி வந்தது. அல்லது திராவிடர் கழகக்காரர்கள் இறை பக்தியுள்ள ஜெயலலிதாவோடு ஒன்றாக இயங்கியது எல்லாம் நல்ல உதாரணம்.

இது அவருக்கே தெரிந்திரக்கும். தன் கொள்கை என்பது இந்தக் காலத்னோடு கரைந்து போகக் கூடும் என்று. சந்திரிக்கா பை சமாதான காலத்தில் தானே மெளசாக இருந்தது.

நான் பெரியார் சொன்னபடி, நானா சிந்தித்து அவர் சொன்ன பெரும்பாலனவற்றை ஏற்றும், சிலவற்றை ஏற்காமலும் விட்டுள்ளேன். அந்த வகையில் நானும் ஒரு பெரியாரிஸ்ட். ஒரு பகுத்தறிவாளன்.

பகுத்தறிவாளன், சிந்தனையாளன், உணர்வாளன், கொள்கையாளன் என்று உயர்தர வார்த்தைகளைப் போட்டு ஏமாற்றும் வேலை புதிததல்ல. இடதுசாரிகளும் அவ்வாறு தான் செய்தார்கள். மத நம்பியுள்ளவர்கள் வலதுசாரிகள் என்பதால், " அவன் ஒரு வலசு" என்றால் அது ஒரு இழிவான சொல் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி சுகம் கண்டனர். எமக்குள்ளும் இப்படி நிறைய வார்த்தைகள் புழக்கத்தில் உள்ளனர்.

ஆனால் என்னுடைய பெற்றோர் ஒன்றை நம்பி விட்டனர். அதைத்தான் நானும் நம்ப வேண்டும் என்று சொல்வது எந்த வகையானது என்பதை நான் சொல்லத் தேவையில்லை.

நீங்கள் நம்ப வேண்டும் என்று நாம் வற்புறுத்தவில்லையே. ஆனால் உங்களின் பெற்றோரின், அல்லது எமது நம்பிக்கையை ஏன் முடக்க நினைக்கின்றீர்கள். அந்த வேளையில் உங்களுக்கு உங்களை அறிவாளி என்ற தலைக்கனத்தோடு செயற்பட வேண்டும் என்ற சிந்தனை வருகின்றதா?

மனித இனம் காலத்துக்கு காலம் தன்னுடைய கடவுளை மாற்றிக் கொண்டு வந்த பொழுது, அதையும் பெற்றோர்கள் பற்றிய நம்பிக்கைiயும் ஒப்பிடுபவர்களை என்ன சொல்ல?

அடுத்த தலைமுறை வேணுமென்றால் சாய்பாவோ, அல்லது புதிய கடவுள் ஒன்றைத் ஸ்தாபித்து வணங்கட்டும். அது பற்றி எமக்குக் கவலையில்லை. இந்த நேரத்தில் உணர்வுக்கோ, என் சோகத்தைக் கரைக்கவோ, அல்லது துணிவுக்கோ எதற்காயினும் எனக்கு ஒன்று தேவைப்படும்போது நான் அதைத் தேடுகின்றேன். உங்களின் வழியில் நாம் எப்படிக் குறுக்கிடக் கூடாது என நீங்கள் நினைக்கின்றீர்களோ, எம் வழியில் நீங்கள் குறுக்கிட நினைப்பது எவ்வகை நியாயம்?

உங்களுக்கு அது பழகிப் போய் விட்டது என நினைக்கின்றேன். அடுதத்வரின் விருப்பத்தில் தலையிடுவது தான் வேலையாகப் போய் விட்டது. இல்லாவிட்டால் பெண்களின் கவிதை தொடர்பாக இவ்வாறு விமர்சனம் செய்திருக்க மாட்டீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் தூயவன்.

நானும் ஒரு பிராமணனாகவே இருந்தாலும் கூட,

தேவன்

பெரியார் வழி பின்பற்றுகின்ற உங்கக்குள்ளேயே, நான் ஒரு பிராமணன் என்ற ஜாதி வெறியிருக்கின்றது. இது தானா நீங்கள் பெற்ற பகுத்தறிவு?

பெரியாரின் சிந்தனைக்கு என்னுடைய அறிவு தலைவணங்கும் .

பொதுநலத்தில் அக்கறை உள்ள ஒவ்வொரு மனிதனையும் ஆட்கொள்ளும் கடவுளின்(பெரியாரின்) வேதம். ஏன் எனில் அது ஒரு இன. தேச ,மத அடையாளங்களுக்கு அப்பால் உள்ள பௌகுத்தறிவின் விதை.

வழமையான பெரியார் புகழ் புராணம். பாடுங்கோ!

ஈழத்தின்; இளம் தலைமுறையின் பெரும் பான்மை சாதிய வேற்றுமையை பேச்சளவிலாவது வெறுக்கின்றார்கள்.

ஆனால் என்னோடு பழகிய இந்திய இளம்தலைமுறையின் பெரும்பான்மை

சாதிய வேற்றுமையை வரவேற்க்கின்றார்கள்.

ஒவ்வொரு ஜாதிக்கும் ஒதுக்கீடு என்று சொல்லிக் கொண்டு அரசு கொடுக்கும் சலுகைகளோ, அல்லது ஜாதிக் கட்சிகளோடு நீக்கப்பட்டால் இந்த நிலை வராது.

வறியவர்களுக்கு சலுகைகள் என்ற சிந்தனையோடு அரசு செயற்பட்டால் அவ்வாறு நிலை வராது. ஆனால் அரசுக்கு வாக்குவங்கிகளுக்காக ஜாதிப் பிரிவுகள் தேவைப்படும்போது, இந்த நிலை மாறாது.

இந்த அறிவியல் நூற்றாண்டின் புதியனவற்றால் ஊட்டம் பெற்ற சிந்தனைகளே!

அந்த வேற்றுமையைத் தொலைத்த புலத்து வாழ்வியலில் வாழ்ந்தும் கூட,

அந்தப் புத்தியிலே உள்ள அழுக்கை கழுவமுடியவில்லை.

நிச்சயமாக ஜாதி கலைக்கப்பட வேண்டும். ஆனால் என் கருத்து என்னவென்றால் பெரியார் வழி என்பது ஜாதி கலைக்க உகந்தது அல்ல. அது கூட ஒரு வகை ஜாதி வெறி தான்.

இதற்கு ஆயிரம் பெரியாரின் சிந்தனை செய்ய முடியாததை.

ஒன்றுக்கும் உதவாத புத்தியொன்றின் மந்திரத்தில் இருக்கென்று நம்புகின்ற மடைமையை

என்ன சொல்வது.

ஒரு சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும், என்ற ஒரு நோக்கம் ஒன்றுக்கு,

அதன் முதல் பணியாக அமைய வேண்டியது.

சமூகங்களுக்குள்ளே இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து,

மனிதன் என்ற தகுதியை ஒவ்வொருத்தனும் சமமாக உணரச் செய்யபடவேண்டும்.

இல்லை என்றால் நாம் ஏன் சிங்களவனுக்கு சமமானவன் இல்லை என்று கேட்க்கும் கேள்விகளுக்கு அதேசமாமான வேலை இங்கேயும் எளும்.

எமது இனத்தை சாதியப் புதைகுழியில் இருந்து மீட்டுத் தந்த பெரியாரின் சிந்தனைக்கு, அவர் யாராய் இருந்தால் என்ன, அவர் போற்றுதற்கு குரியவரே!

உறுதியாகச் சொல்ல முடியும். இந்தத் தெலுங்கனின் வழி ஜாதி கலைப்பு அல்ல. அதுவும் ஒரு வகை ஜாதி வெறியே! அதைப் புரியாத அளவு நீங்கள் மடையரில்லை என நினைக்கின்றேன்.

இப்படி ஆயிரம் சமூகநோய்க்கு அவர் சிந்தனை மருந்தாகிறது.

ஒரு சில அவரின் நூல்களை வாசிபதாலாவது, அதன் நன்மையின் விலை தெரியும். தூயவன்.

அது தான் மேலே சொன்னேனே! தத்துவங்களும், கற்பனைகளும் கறிக்கு உதவாது. நடைமுறைக்கு அவை பொருந்தாது. படித்து இன்பம், கனவு கண்டு மகிழ மட்டும் தான் உதவும்.

Posted

தேவன்

பெரியார் வழி பின்பற்றுகின்ற உங்கக்குள்ளேயே, நான் ஒரு பிராமணன் என்ற ஜாதி வெறியிருக்கின்றது. இது தானா நீங்கள் பெற்ற பகுத்தறிவு?

தூயவன் அவர் அவ்வாறு சொல்ல வந்த காரணம் பெரியார் பிராமணர்களுக்கு எதிராக இல்லை பார்ப்பனீயம் அல்லது பிராமணியம் என்னும் சாதியக் கொள்கைக்கு எதிரானவர் என்பதை நிலை நிறுத்தவே.இதனை நன்றாகத் தெரித்தும், அவரை சங்கடத்தில் ஆள்த்த இது அவரின் ஜாதி வெறி என்கிறீர்கள்.இங்கே சமய வெறி உண்மையில் யாருக்கு என்பது எலோருக்குமே நன்றாகத் தெரிகிறது.சாதிய வேற்றுமைகள் ஒழிய வேண்டுமானல் அவை எல்லாத் தளத்திலும் ஒழிய வேண்டும்.பொருளாதார ரீதியாக் கல்வி, வேலை வாய்ப்புகள் ரீதியாக அதுவரை பாதிக்கப்படவர்கள் தங்க்களின் சாதியைச் சொல்லித் தான் அதற்கான பரிகாரத்தைக் காண முடியும்.ஒருவர் நான் சிங்களவன் ஆனால் தமிழருக்குப் பிரச்சினைகள் இருக்கு என்று கூறுவது இன வெறி இல்லை.இன வெறிக்கு எதிரான அவனது மானிட வேட்கை அதனையே நீங்கள் தேவனின் ஜாதிய வெறியாக் காட்டி அவரை மவுனிக்கப் பண்ணி, உங்கள் மத வெறியை வெளிக் கொணருகிரீர்கள்.இதில் இருந்து பெரியார் பார்ப்பன வெறியரா இல்லை தேவன் பார்ப்பன வெறியரா இல்லை நீங்கள் மத வெறியரா என்பதை வாசிப்பவர்கள் கண்டு கொள்ளட்டும்.

Posted

இங்கே பார்ப்பனியம் என்றால் என்ன யார் பார்ப்பனர் என்று மிகத் தெளிவாகச் சொல்லப் பட்டுள்ளது.

..AK : அது என்ன பார்ப்பனீயம்?

RV : Simple... காந்தி முன்வைத்த சித்தாந்தம், கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றைத் தொகுத்து காந்தீயம் என்று சொல்கிறோம். இதை நடைமுறை படுத்துவோரை காந்தியவாதி என்கிறோம். அவர்கள் எந்த சாதி, இனம், மொழி, நாடு அல்லது வேறு வேறு மதங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை காந்தியவாதிகள் என்கிறோம். இன்றைக்கு ‘இந்து’ என்று வெளிநாட்டுக்காரனால் நாமகரணம் சூட்டப் பட்டுள்ள இந்த மதம், முன்னர் வேத மதம், வைதீக மதம் என்று அழைக்கப்பட்டது. இதன் சித்தாந்த தலைவர்களாக விதிமுறைகளை வரையறுப்போராக இருந்தவர்கள் பார்ப்பனர்கள். மேலும் அவ்வாறான உரிமை இறைவனால் தங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லிக் கொண்டார்கள். அதை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக பல்வேறு நூல்களை வேறு எவரும் படிக்க வாய்ப்பளிக்கப் படாத மொழியில் எழுதி வைத்துக் கொண்டனர். மீறி சூத்திர சாதிக்காரன் (அதாவது உழைக்கும் மக்கள்) கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்றும் படித்தால் நாக்கை அறுக்க வேண்டும் என்றும் திமிருடன் நடந்து கொண்டவர்கள் பார்பனர்கள்.

இந்த வேதங்கள், மனுதர்மம், நாரத சம்ஹிதை போன்ற குப்பைகளின் அடிப்படையில் நிலவுகின்ற இறை சித்தாந்தம், பண்பாடு, வாழ்க்கை முறைகள், ஆகிய அனைத்தையும் சேர்த்து பார்ப்பனீயம் என்று வரையறுக்கிறோம். ஏனென்றால், இதன் சித்தாந்த படைப்பாளியாக ஏகபோக உரிமை கொண்டிருந்தவர்கள், பார்ப்பனர்களே. எனவே இதை பார்ப்பனீயம் என்பதே சரியான பதம். இந்த கொள்கையை ஏற்றுக் கொண்டு நடைமுறையில் கடைபிடிப்பவர்கள் எவரையும் - அவர்கள் சூத்திர/ தலித் சாதியினராக இருந்தாலும் சரி - அவர்களையும் பார்ப்பனீயவாதிகள் என்று அழைக்கிறோம்.

சரி பிறப்பால் பார்ப்பனராய் இருந்து மேற் சொன்ன கொள்கைகளை தூக்கியெரிந்து விட்டு வாழ்கின்றவர்களை பற்றி எமது கருத்தென்ன? அவர்களை நாங்கள் பார்ப்பனராய் பார்ப்பதில்லை!

AV : நீங்கள் சொல்வது போல் இப்போதும் பார்ப்பனர்கள் செல்வாக்குடன் தான் இருக்கிறார்களா? இல்லையே.. நீங்கள் மக்களை ஏமாற்றத் தானே ‘பார்ப்பன பூச்சாண்டி’ காட்டுகிறீர்கள்...

RV : இல்லை!! பெரியாரும் அம்பேத்கரும் அதிகாரத்துடன் பார்ப்பனர்களுக்கும் இந்த சித்தாந்தத்தை தலையில் சுமந்தவர்களுக்கும் இருந்து வந்த செல்வாக்கை கட்டுடைத்த பின்னர் இப்போது முன் போல் நேரடியாக வெளிப்படையாக உங்களால் ஏமாற்ற முடிவதில்லை என்பது உண்மையே. ஆனால் subtleஆக இன்னும் நுண்ணியமான தளங்களில் உங்கள் பண்பாட்டு, சித்தாந்த சொருகல் நீடிக்கிறது. எப்படி?? பார்ப்போம்,

A.V : பார்ப்பனீயத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நீங்கள் செய்வது இனவாதம் பரப்புவது தானே? பார்ப்பனீயத்தை எதிர்க்க வேண்டுமானால் அதை வேறு பெயரில் சொல்லி எதிர்க்கலாமே? ஏன் பார்ப்பனர் பெயரையும் சேர்த்துச் சொல்கிறீர்கள்? இது எங்களை புன்படுத்துகிறதே?

RV : இல்லை ஏற்கனவே சொன்னது போல பார்ப்பனீய எதிர்ப்பு என்பது ஒரு குறிப்பிட்ட இன/சாதி எதிர்ப்பு அல்ல. உழைக்கும் மக்களுக்கு இந்த சித்தாந்தத்தின் மேல் உள்ள மயக்கத்தை கலைக்க வேண்டியுள்ளது. பார்ப்பனீயம் ஏற்படுத்திய கொழுப்பில் ஒடுக்குமுறையில் ஈடுபடுவது ஒரு சில உயர் சாதியினரே அவர்களை எதிர்த்துப் போராடும் அதேவேளையில் இந்த சித்தாந்தத்தை இருபத்தோராம் நூற்றாண்டிலும் வேதபாடசாலைகள் வைத்து போற்றி பாதுகாக்கும் சாதியையும் எதிர்க்க வேண்டியுள்ளது. தயவு செய்து வேறு பாட்டை புரிந்து கொள்ளுங்கள் - "நீங்கள் ஒரு பஞ்சமனை ஒடுக்குவது அவன் அந்த சாதியில் பிறந்தான் என்ற ஒரே காரணத்திற்காக. நாங்கள் உங்களை எதிர்ப்பது நீங்கள் பார்பனராய் பிறந்த காரணத்திற்காக அல்ல!! பார்ப்பனீயத்தை முன்னெடுத்து செல்வதற்காக. இது உங்களை புன்படுத்துகிறதென்றால்; எங்களுக்கு வேறு வழியில்லை அப்படித்தான் புன்படுத்துவோம்!!

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry238970

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தூயவன் அவர் அவ்வாறு சொல்ல வந்த காரணம் பெரியார் பிராமணர்களுக்கு எதிராக இல்லை பார்ப்பனீயம் அல்லது பிராமணியம் என்னும் சாதியக் கொள்கைக்கு எதிரானவர் என்பதை நிலை நிறுத்தவே.இதனை நன்றாகத் தெரித்தும், அவரை சங்கடத்தில் ஆள்த்த இது அவரின் ஜாதி வெறி என்கிறீர்கள்.

ஜாதி என்பதை ஒழிக்கப் போகின்றோம் என்றால் ஜாதி நான் ஜாதி என்ற எண்ணமே, மனதில் இருக்க கூடாது. தேவன் நான் பிராமணன் என்று சொல்கின்றாரோ, அதே செயலைத் தான் ஈவேராவும் செய்தார். தான் ஒரு நாயிடு, என்றும் உயர்ஜாதி, தாழ்த்தப்பட்டவர்களுக்காக கஸ்டப்படுவதாகவும் தற்பெருமை கொண்டிருந்தார். இவ்வாறன நிலையில் ஜாதி என்பதை எவ்வாறு அழிக்க முடியும் என நீங்கள் உணருகின்றீர்கள்??

தேவன் பிராமணனா இல்லையா, என்றுயாருக்குத் தெரியும். இந்த வாதத்தை நியாயப்படுத்துவதற்காக பொய் சொல்ல முடியாதா என்ன? அது எல்லாம் எனக்குத் தேவையில்லை. நான் சொல்ல விரும்புவது எல்லாம் சாதி வெறியை ஒழிக்க வேண்டுமானால் அது மனதில் இருந்தே வரவேண்டும்

சமீபத்தில் கருணாநிதி தன் உறவினர் ஒருவர் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்ததாகச் சொன்னது கூட, தனக்குள் இன்னும் அந்த ஜாதிச் சிந்தனையை வெளியேற்றவில்லை என்பதற்கு உதாரணம்.

இங்கே சமய வெறி உண்மையில் யாருக்கு என்பது எலோருக்குமே நன்றாகத் தெரிகிறது.சாதிய வேற்றுமைகள் ஒழிய வேண்டுமானல் அவை எல்லாத் தளத்திலும் ஒழிய வேண்டும்.

இதைத் தானே நானும் சொல்கின்றேன். ஆனால் முன்பு பிராமணர்கள் என்ன தவறைச் செய்தார்களோ, அதே தவறைப் பெரியாரும் செய்யும்போது எவ்வாறு அவரை நியாயப்படுத்த உங்களால் முடிகின்றது? பிராமணத்துவத்தை பிரித்தாளுவதன் மூலமும், தலித், தாழ்த்தப்பட்டவர்கள் என்ற சொல்லைத் தொடர்ந்து உபயோகிப்பதன் மூலம் ஜாதி உணர்வைச் சாகாமல் வைப்பது தான் தவறு என்கின்றேன். பெரியார் எல்லோரும் சமம் என்று சிந்தனையவருடையாக இருந்திருந்தால் அந்தக் கருத்துக்கு நான் உண்மையில் பணிவேன். ஆனால் அவ்வாறு தான் நடக்கவில்லையே!

பொருளாதார ரீதியாக் கல்வி, வேலை வாய்ப்புகள் ரீதியாக அதுவரை பாதிக்கப்படவர்கள் தங்க்களின் சாதியைச் சொல்லித் தான் அதற்கான பரிகாரத்தைக் காண முடியும்.ஒருவர் நான் சிங்களவன் ஆனால் தமிழருக்குப் பிரச்சினைகள் இருக்கு என்று கூறுவது இன வெறி இல்லை.இன வெறிக்கு எதிரான அவனது மானிட வேட்கை அதனையே நீங்கள் தேவனின் ஜாதிய வெறியாக் காட்டி அவரை மவுனிக்கப் பண்ணி, உங்கள் மத வெறியை வெளிக் கொணருகிரீர்கள்.இதில் இருந்து பெரியார் பார்ப்பன வெறியரா இல்லை தேவன் பார்ப்பன வெறியரா இல்லை நீங்கள் மத வெறியரா என்பதை வாசிப்பவர்கள் கண்டு கொள்ளட்டும்.

ஜாதியை அடிப்படையாக வைத்து உயர்வதை விட தகமை அடிப்படையில் உயர வேண்டும் என்பதே நான் வலியுறுத்துகின்றேன். உதாரணத்துக்கு வறுமைப்பட்டவர்களுக்கு உதவி என்ற நிர்வாகம் தான் அனைவரையும் சமமாக்குமே தவிர, "இந்த ஜாதிக்கு இவ்வளவு என்று ஒதுக்கினால் நிச்சயமாக ஜாதியை ஒழிக்கவே முடியாது". இப்படி ஜாதிப் பிரிவுகளை விட மனமில்லாமல் திராவிடக் கட்சிகள் வைத்துக் கொண்டிருப்பதற்கு "நான் ஜாதியை எதிர்ப்பவன்" என்று தொடர்நது மார்தட்ட உதவும் என்பதல் தான்.

ஒரு சிங்களவன், நான் சிங்களவனாக இருந்தும், தமிழ்மக்களுக்கு உதவுகின்றேன் என்று சொன்னால் அது இனவெறி. தான் அப்படியிருந்துமே உதவுகின்றேன் பாருங்கள் என்றால் அது ஒரு வகை இனக் கர்வம் தானே! தான் சிங்களத் தலைவி. தமிழருக்கு பிரச்சனை இருப்பதை முதலில் உணர்ந்து கொண்டவள் என்று சந்திரிக்கா அடிக்கடி மார்தட்டியதை அவரது அரசியல் குறிப்புக்கள் கிடைத்தால் பாருங்கள். டக்ளஸ் தேவானந்தாவும் பிந்துனுவா கொலைக்கு சிறிது காலத்துக்கு முன்பு இதே வசனத்தை மேற்கோள் காட்டிப் பேசிய அறிக்கையை அப்போது படித்திருக்கின்றேன்.

என் மதத்தை, நம்பிக்கையை, உங்களுடைய வாய்க்கு வந்தபடி பேசுவீர்கள், பாசியம், பன்னடை என்று திட்டுவீர்கள். பதிலுக்கு நான் கதைத்தால் அதன் பெயர் மதவெறி! ஏனென்றால் உங்களின் வக்கிர எண்ணங்களைத் தொடர்ந்து பதிக்க இது தடையல்லவா!

" நான் இந்த ஜாதி" என்று உங்களுக்கே எண்ணம் வைத்திருக்கும் உங்களால் ஊரில் எவ்வாறு ஜாதி ஒழிக்க முடியும்.

Posted

பெரியார் பற்றி நிங்கள் சொல்லும் கருத்துகளுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. அதேநேரத்தில் அவர், நான் சொன்ன கருத்தாக இருந்தாலும் நீ பகுத்தறிந்து சரிதானா என பார் , நான் சொல்லிவிட்டேன் என்பதற்கா அப்படியே ஏற்கவேண்டும் என்று யாரையும் கட்டாய படுத்தவில்லை. என கூறியுள்ளார். எந்த அரசியல்வாதி அல்லது சமூகவாதி இப்படி தைரியாமாக சொல்லவியலும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

... ஈழத்தில் வெள்ளாள சமுதாயம் ஜாதி வெறி கொண்டு ஒரு காலத்தில் இருந்தது. ஈழத்திலும் பாப்பாணர் என்று கதை விடாதையுங்கோ. நானும் இருந்தனான் மட்டுமல்ல, கோவில்களில் பூசாரி பூசை செய்வது மட்டும் தான். தர்மகத்தா சபை தான் கோவிலைக் கட்டுப்படுத்துறவர்.

சிரட்டையில் தண்ணி கொடுப்பது முதல் பல செய்கைக்கு வெள்ளாளர் ஜாதி வெறி பிடித்து அலைந்தனர்.அதற்கு ஏதிராக ஏன் பெரியார் வழிவந்தவர்கள் ஒன்றும் செய்யவில்லை. இது தான் ஆரிய எதிர்ப்பு மட்டுமே உங்களின் சரக்கு என்று சொல்வது.

தூயவன் சில திருத்தங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.

நீங்கள் குறிப்பிடுவது போல் வேளாளர் சாதியடக்குமுறையிலீடுபட்டது உண்மையே, ஆனால் அதற்காக தமிழீழத்தில் பார்ப்பனர் சாதிய உயர்வு தாழ்வு கைக்கொள்ளவில்லையென்பது உண்மையில்லை. எனக்குத் தெரிந்து தமிழீழப் பார்பனர் சூத்திரர் (வேளாளர் உட்பட) பார்த்த உணவைக் கூட உண்ணமாட்டர்.

ஹரிக் கிருஸ்ணன் நாயிடு என்று வார்த்தை பாவித்தது தவறு ஒன்றுமில்லை.பெரியார் என்று சொல்லிக் கொள்வது மூலம் அந்த வார்த்தையை அசிங்கப்படுத்தக் கூடாது என்று நினைத்திருக்கலாம்.அல்லது ஒரு தெலுங்கன் தமிழன் தலையில் சாணி அரைத்தது என்பதைக் காட்டுவதற்காகவும் இருக்கலாம். இதைப் பெரியார் விரும்பியிருக்கலாம்.அதனால் தான் அவரது வரலாற்று ஏடுகளில் ராமசாமி நாயிடு என்று ஜாதியோடு கூடிய வரலாறே இருக்கின்றது.

எது எப்படியோ பெரியார் புராணம் பாடுபவர்கள் "பெரியார் உயர்ந்த ஜாதியில் பிறந்தும் மக்களுக்காகப் போராட வந்தார் என்று வரிக்கு வரி எழுதிக் கொள்வதன் மூலம் தங்களின் ஜாதி வெறியை அடிக்கடி காட்டுவது வழக்கம்.

E.V. இராமசாமி நாயக்கர் ஒரு கன்னடர், தெலுங்கர் அல்லர் மேல் விபரங்களுக்கு இச்சுட்டியை அழுத்தவும்.

Posted

ஜாதி என்பதை ஒழிக்கப் போகின்றோம் என்றால் ஜாதி நான் ஜாதி என்ற எண்ணமே, மனதில் இருக்க கூடாது. தேவன் நான் பிராமணன் என்று சொல்கின்றாரோ, அதே செயலைத் தான் ஈவேராவும் செய்தார். தான் ஒரு நாயிடு, என்றும் உயர்ஜாதி, தாழ்த்தப்பட்டவர்களுக்காக கஸ்டப்படுவதாகவும் தற்பெருமை கொண்டிருந்தார். இவ்வாறன நிலையில் ஜாதி என்பதை எவ்வாறு அழிக்க முடியும் என நீங்கள் உணருகின்றீர்கள்??

தேவன் பிராமணனா இல்லையா, என்றுயாருக்குத் தெரியும். இந்த வாதத்தை நியாயப்படுத்துவதற்காக பொய் சொல்ல முடியாதா என்ன? அது எல்லாம் எனக்குத் தேவையில்லை. நான் சொல்ல விரும்புவது எல்லாம் சாதி வெறியை ஒழிக்க வேண்டுமானால் அது மனதில் இருந்தே வரவேண்டும்

சமீபத்தில் கருணாநிதி தன் உறவினர் ஒருவர் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்ததாகச் சொன்னது கூட, தனக்குள் இன்னும் அந்த ஜாதிச் சிந்தனையை வெளியேற்றவில்லை என்பதற்கு உதாரணம்.

இதைத் தானே நானும் சொல்கின்றேன். ஆனால் முன்பு பிராமணர்கள் என்ன தவறைச் செய்தார்களோ, அதே தவறைப் பெரியாரும் செய்யும்போது எவ்வாறு அவரை நியாயப்படுத்த உங்களால் முடிகின்றது? பிராமணத்துவத்தை பிரித்தாளுவதன் மூலமும், தலித், தாழ்த்தப்பட்டவர்கள் என்ற சொல்லைத் தொடர்ந்து உபயோகிப்பதன் மூலம் ஜாதி உணர்வைச் சாகாமல் வைப்பது தான் தவறு என்கின்றேன். பெரியார் எல்லோரும் சமம் என்று சிந்தனையவருடையாக இருந்திருந்தால் அந்தக் கருத்துக்கு நான் உண்மையில் பணிவேன். ஆனால் அவ்வாறு தான் நடக்கவில்லையே!

ஜாதியை அடிப்படையாக வைத்து உயர்வதை விட தகமை அடிப்படையில் உயர வேண்டும் என்பதே நான் வலியுறுத்துகின்றேன். உதாரணத்துக்கு வறுமைப்பட்டவர்களுக்கு உதவி என்ற நிர்வாகம் தான் அனைவரையும் சமமாக்குமே தவிர, "இந்த ஜாதிக்கு இவ்வளவு என்று ஒதுக்கினால் நிச்சயமாக ஜாதியை ஒழிக்கவே முடியாது". இப்படி ஜாதிப் பிரிவுகளை விட மனமில்லாமல் திராவிடக் கட்சிகள் வைத்துக் கொண்டிருப்பதற்கு "நான் ஜாதியை எதிர்ப்பவன்" என்று தொடர்நது மார்தட்ட உதவும் என்பதல் தான்.

ஒரு சிங்களவன், நான் சிங்களவனாக இருந்தும், தமிழ்மக்களுக்கு உதவுகின்றேன் என்று சொன்னால் அது இனவெறி. தான் அப்படியிருந்துமே உதவுகின்றேன் பாருங்கள் என்றால் அது ஒரு வகை இனக் கர்வம் தானே! தான் சிங்களத் தலைவி. தமிழருக்கு பிரச்சனை இருப்பதை முதலில் உணர்ந்து கொண்டவள் என்று சந்திரிக்கா அடிக்கடி மார்தட்டியதை அவரது அரசியல் குறிப்புக்கள் கிடைத்தால் பாருங்கள். டக்ளஸ் தேவானந்தாவும் பிந்துனுவா கொலைக்கு சிறிது காலத்துக்கு முன்பு இதே வசனத்தை மேற்கோள் காட்டிப் பேசிய அறிக்கையை அப்போது படித்திருக்கின்றேன்.

என் மதத்தை, நம்பிக்கையை, உங்களுடைய வாய்க்கு வந்தபடி பேசுவீர்கள், பாசியம், பன்னடை என்று திட்டுவீர்கள். பதிலுக்கு நான் கதைத்தால் அதன் பெயர் மதவெறி! ஏனென்றால் உங்களின் வக்கிர எண்ணங்களைத் தொடர்ந்து பதிக்க இது தடையல்லவா!

" நான் இந்த ஜாதி" என்று உங்களுக்கே எண்ணம் வைத்திருக்கும் உங்களால் ஊரில் எவ்வாறு ஜாதி ஒழிக்க முடியும்.

நீங்கள் பல விடயங்களை இன்னும் சரியாக புரிந்து கொல்ளவில்லை.

ஒரு சிங்களவன் தமிழனுக்கு அநீதி இழைக்கப் படுகிறது, இழைக்கப்பட்டது என்று சொல்வது இன வெறி என்கிறீர்களா? நான் சொல்வது ஒரு சிங்களவனே தமிழருக்கு அநீதி இழைக்கப்படுவது என்று கூறுவது , அநீதி இழைக்கப்படுவதற்கான பக்கச்சார்பற்ற ஒரு ஆதாரம் என்று .அவர் அப்படி நான் ஒரு சிங்களவன் என்று கூறுவது தனது கூற்றிற்கு எந்த பக்கச்சார்பான அரசியல் நோக்கமும் கிடையாது என்று கூறுவதற்காகவே ஒரு தமிழனாக இருந்து கொண்டு தமிழருக்கு அநீதி நடந்திருகிறது என்று கூறுவதும் ஒருவர் சிங்களவராக இருந்து கொண்டு புலிகள் பயங்கரவாதிகள் அல்ல விடுதலை வீரர்கள் என்று கூறுவதும் வித்தியாசமானது.அதனையே தேவன் கூறி உள்ளார். நீயாயமாகச் சிந்திக்கும் எவரும் பெரியார் பிராமணர்கள் அன்ற மனிதர்களைச் சாடவில்லை பார்ப்பனீயம் என்னும் சாதிய வெறியையே சாடினார் என்பதை ஏற்றுக் கொள்வார்கள்.இன்று பெரியார் மேல் அவதூறு பொழியும் நீங்கள் விடயங்களை அறியாமல் பெரியார் மேல் எங்கெல்லாம் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்து அவதூறுகளை பொறுக்க முடியுமோ அங்கெல்லாம் இருந்து பொறுக்கி எடுத்துப் போடுகிறீர்கள்.இதற்கு அடிப்படைக் காரணம் அவர் இந்து மதத்தை விமர்சித்தது ஒன்றே .ஏனெனில் இந்து மதம் விமர்சனத்திற்கு அப்பற்பட்டது என்பதுவே உங்கள் நிலைப்பாடு.இப்படியான ஒரு நிலைப்பாட்டில் இருந்து எவருமே எந்தவித அறிவு பூர்வமான கருத்தாடலை நிகழ்த்தி விட முடியாது.

அடுத்தது பார்ப்பனீயத்தால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் திறமை அடிப்படையில் பன் நெடுங்காலமாக பொருளாதார ரீதியாக முன்நேறியவர்களோடு போட்டி போட முடியாது.உதாரணத்திற்கு இந்திய தொழில் நுட்பக் கழகம் என்னும் இந்தியாவில் தலை சிறந்த பல்க்லைக் கழக்த்திற்கான் நிழைவு பரீட்ச்சைக்கு தம்மை தயார் செய்ய பல் ஆயிரம் ரூபாய்கள் செலவு செய்ய வேணும்.ஒரு கிராமத்தில் இருக்கும் சலவைத் தொழில் செய்யும் குப்பனினதும் சுப்பனினதும் பிள்ளைகளால் இவ்வாறான பரீட்ச்சையில் தோற்றி பல்கலைக் கழகத்தில் உள் நுழைந்து விட முடியாது.ஆகவே பார்ப்பனீயத்தால் பன் நெடுங்கலாகமாக ஏற்படுத்தப்பட சமூக ஏற்றத் தாழ்வுகளை நீக்க பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்களை அவ்வாறானவர்களாக அடையாளம் காண்பதுவும் அதன் மூலம் ஏற்படுத்தப்பட சமூக அடக்குமுறைக்குப் பரிகாரம் தேடுவதும் இன்றி அமையாதது ஆகிவிடுகிறது.மேலும் இவை பற்றிய தீர்வுகள் அந்த மக்களாலையே ஏற்படுத்தப்பட வேண்டும்.எவ்வாறு சர்வதேசத்தாலோ அன்றி சிங்கள தேசத்தாலோ தமிழர்களின் தீர்வு எது என்று சொல்ல முடியாதோ அதே போல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கானா தீர்வுகளை ஒடுகியவர்கள் சொல்ல முடியாது.

நீ ஒரு தமிழன் அதனால் உன்னை அடக்குவேன் என்று கூறுவதற்கும். நான் ஒரு தமிழன் அதனால் அடக்கப்படுகிறேன் என்று சொல்லும் போது நீ தமிழ் இனவறி பேசுகிறாய் என்று சொல்வது போல் இருக்கிறது உங்களின் வாதாம்.சாதியின் பேரால் அடக்குவதும் அடக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் நான் இந்த சாதி என்பதற்காக அடக்கப்பட்டிருக்கிறேன் அதனால் எனக்கு ஒரு தீர்வு வேண்டும் என்று சொல்வதும் ஒன்றே என்று கூறுவது வேடிக்கையானா வாதம்.இவற்றை முன் மொழிபவர்கள் சாதியத்தை மறைக்க முயலுகிறார்காள், அடக்கும் போது அவர்களுக்கு சாதியம் வேண்டும் ஆனால் அடக்கப்பட்ட மக்கள் தீர்வைக் கோரும் போது சாதியா அது எங்கே இருக்கிறது என்று கேட்பார்கள்.சிங்களத் தீவிர இனவெறியர்களும் அவ்வாறே, தமிழர்களுக்கு இங்கு எங்கே பிரச்சினை இருக்கிறது எல்லோருமே சிறிலங்கன் தானே என்பார்கள்.தமிழர்களது உரிமைக்காக போராடுபவர்களை தமிழ் இனவாதிகள் என்பார்கள்.அதே போல் தான் பெரியாரையும் சாதியத்திற்கு எதிராகப் போரடுபவர்களையும் இங்கே நீங்கள் சாதி வெறியர்கள் என்கிறீர்கள்.

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மன்னிக்கவேண்டும் காலதாமதத்துக்கு

பிரதானபக்கத்தில் இருந்து தலைப்புக்கள் மறைந்த பிறகு அவற்றைத் தேடிப்பிடித்தல் பெரும்பாடாய்ப் போய் விட்டது. அதுவே தாமதத்துக்கு காரணம்.

நான் பிராமணன் என்று கூறுவதாக குற்றம் சாட்டப்பட்டேன் தூயவனால். பின்புதான் அதன் தவறு புரிந்தது, தொகைகளின் தவறான பிரயோகமே கருத்தை சறுக்க வைத்து விட்டது.

ஒரு வேளை நான் பிராமணனாய் இருந்திருந்தாலும், என்பதே அந்த வசனத்தின் பொருள் ஆகும். தவறுக்கு மன்னிக்கவேண்டும்

பார்ப்பனியத்தின் மூடநம்பிக்கைச் சிறைகளின், அடிமைகளுக்கு,

மனிதத்தின் மகத்துவம் உணர்த்தி மனித உரிமைக்கு விடுதலை தரவந்த சிந்தனைச் சூரியனாகவே பெரியாரைப் பார்க்கிறேன்.

தவிர அவர் பர்ப்பானியம் என்ற இனத்தை வெறுக்கவில்லை அதன் பண்பத்தான் வெறுக்கின்றார்.

ஒருவனை வெறுத்து ஏசும் போது நாயே என்று விழித்தால், உண்மையில் அது ஒரு நாயின் பொருள் கொள்வதில்லை அது ஒரு பண்புப் பெயராகிறது.

இது போலவே பெரியாரின், பார்ப்பான் என்ற பிரயோகமும் ஆகும்.

ஒரு பொதுநல அக்கறை ஒன்று,

மனிதத்தை மிதிக்கின்ற எவற்றையும் வெறுக்கும்.

அது தெய்வநம்பிக்கையே! ஆனாலும்சரி.

ஏனெனில் அதன் சிந்தனை வைத்திருக்கும்

இலட்சியக்-கடவுட்-பண்பு,

பாவங்கள் தன்னை நினைத்துக் கொண்டிருப்பதைவிட நினைக்கமையையே விரும்பும்.

பசிநெருப்பில் உயிர் காய்ந்து கொண்டிருக்கும் வறுமைகளுக்கு முழங்கை காட்டிக்கொண்டிருப்பவனின் உள்ளங்கைகள் தெய்வதானங்களுக்கு மலர்கின்றதென்றால் இவனின் வழிபாடு, கடவுளின் பண்புக்கு சேறு பூசுகின்றது அல்லவா?

உன்கண்ணீர்த் துளி சுமக்கும் துன்பத்தை விளங்கும் அதேவகையில் மற்றவன் துன்பத்தையும் விளங்கவைக்கும் மனம் உனக்கிருந்தால் இருந்தால்;

உன்வாழ்க்கை தெய்வத்தை கவனம் செய்யவேண்டியதில்லை,

அப்படி வாழ்வு தெய்வத்துக்கு பிடிக்காமல் போனால் பௌகுத்தறிவே என்னுடைய கடவுள்.

இது போன்ற சிந்தனைகளுக்கு ஊற்றுவாயாய் அமைந்தததுதான் பெரியார் சிந்தனைகள்.

செவிவழி, செவிவழியாக; காலம், காலமாக; மக்கள் சிந்தனைகளில் கொட்டப்பட்ட பொய்களை தனி ஒருவனின் சிந்தனைகள் புறமுதுகிடச் செய்துருக்கின்றது எனில்; அதன் அறிவு வீரியத்தை சிந்திக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

1

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.