Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'மொழியை காக்கின்ற பணியை செய்கின்றவர்களும் போராளிகள்': வெ.இளங்குமரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'மொழியை காக்கின்ற பணியை செய்கின்றவர்களும் போராளிகள் தான்': வெ.இளங்குமரன்

"மொழியை காக்கின்ற பணியை செய்கின்றவர்களும் ஒரு வகையில் இனப்பற்றுக் கொண்ட போராளிகள் தான் அவர்கள் பேனா தூக்குகின்ற போராளிகள் நாங்கள் துப்பாக்கி தூக்குகின்ற போராளிகள்".

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிளிநொச்சி தமிழ்ச் சங்க பணிமனையின் திறப்பு விழாவில் தமிழீழ கல்விக்கழக பொறுப்பாளர் வெ. இளங்குமரன் ஆற்றிய சிறப்புரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தனது சிறப்புரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மிகச் சிறப்பாக, கொண்ட குறிக்கோளோடு அவற்றை கடைப்பிடிப்பதில் பல்வேறு தடைகளை உடைத்தெறிந்து மற்றவர்களின் கருத்துக்களை விட தம் குறிக்கோளே முதன்மையானது எனக்கருதி இந்த தமிழ்ச்சங்க செயற்பாடுகள் இந்த மாவட்டத்தில் நடைபெற்றுக்கொண்டு வந்திருக்கின்றன.

அந்த வகையில் பார்க்கின்ற போது கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் கிளிநொச்சி தமிழ்ச் சங்கம் மொழியை காக்கின்ற பணியில் பல அரிய செயல்களை புரிந்திருக்கின்றன என்று கூறலாம். பல அடிகளை முன்வைத்திருக்கின்றது என்றும் கூறலாம். இந்த சிறிய தமிழ்ச் சங்க கட்டடத்தை நான் பார்கின்றபோது இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் 'பெங்களுர் தமிழ்ச்சங்கம்' என்று அல்சூர் ஏரிக்கு முன்னால் ஒரு மூன்று மாடி கட்டடமாக இருக்கின்றது.

அங்கு நாங்கள் பல தடைவைகள் சென்றிருக்கின்றோம். அந்த தமிழ்ச் சங்கத்தினருடன் நாங்கள் எமது அமைப்பு சார்ந்த பணிகளுக்காக சென்று கலந்து கொண்டிருக்கின்றோம். அங்குள்ள பணக்காரர்கள் தமிழ்ச் சங்கத்திற்காக அந்த மூன்று மாடி கட்டடத்தை அவ்வளவு அழகாக கட்டி வைத்திருக்கின்றார்கள். ஆனால் நாங்கள் இந்த 12 ஆண்டுகளில் கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் பணியை நோக்குகின்ற போது அந்த பணியளவுக்கு அவர்களது பணி அமைந்திருக்குமா என்பது ஐயமே.

குறிப்பாக கூற வேண்டுமானால் அந்த பெங்களுர் தமிழ்ச் சங்கம் தமிழினம் முழுமையாக போற்றுகின்ற திருவள்ளுவ பெருந்தகைக்கு ஒரு சிலையை கல்லுருவை அமைத்தது. அதற்கு அல்சூர் ஏரிக்கரையோரத்தில் அழகான பீடம் அமைத்து பீடத்தில் அந்த சிலையை நிறுவ 15 வருடங்களிற்கு மேலாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும், அந்த மாநில அரசின் இசைவு கிடைக்காத காரணத்தால், சிலை வைப்பதற்கு தடைவிதிக்கப்பட்ட தன்மையில் அந்த தமிழ்ச் சங்க கட்டடத்திற்குள்ளே சாக்குகளாலே கட்டி அந்த சிலை வைக்கப்பட்டுள்ள நிலையை நான் அங்கு இருக்கும் போதே பார்த்தேன் இன்றும் அந்த நிலை தொடர்கின்றது.

'இந்தியாவில் வள்ளுவன் தன்னை தந்த உலகிற்கே தந்த வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' என்று கூறுகின்றார்கள். அந்த தமிழ்நாட்டவர்கள் தமிழ் நாட்டுக்கருகில் வள்ளுவனை சிறை வைத்திருக்கின்றது போல சாக்கினில் கட்டி வைத்திருக்கின்ற அந்த சூழலிலே தாம் அமைத்திருக்கின்ற அந்த சிலையை தமது தமிழ்ச் சங்கத்திற்கு முன்னால் வைப்பதற்கு கூட அவர்கள் இயலாதவர்களாக வக்கற்றவர்களாக அந்த தமிழ்ச் சங்கப் பணி அங்கு நடைபெற்று கொண்டிருக்கிறது.

இங்கு எமது தமிழ்ச் சங்கத்தை நோக்குகின்ற போது இங்கு நாங்கள் எமக்கென எமது மண்ணிலே எமது ஆளுகைக்குட்பட்ட மண்ணில் வைத்திருக்கின்ற இந்த தமிழ்ச் சங்கம் ஒரு புதிராக இருந்தாலும் கூட இவற்றினூடாக நாங்கள் எமது மொழியை காப்பதிலும் கூட வளர்ப்பதற்கும் திட்டங்களை தீட்டி செயற்பட முடியும்.

இது தமிழர்கள் அனைவரதும் கடமை என்பதை இந்த இடத்தில் எடுத்து கூறிக்கொண்டு இந்த தமிழ்ச் சங்கத்தின் பணியைப்பற்றி இங்கு பலரும் எடுத்து கூறினார்கள். தமிழ் மொழியை பேண வேண்டியதன் தன்மையினை வெற்றியரசன் அவர்கள் எடுத்து கூறினார். பேணவேண்டும் என்பது மட்டுமல்ல காத்து எடுக்க வேண்டும் பல்வேறு பணிகளை நாங்கள் இந்த மொழிக்காக ஆற்ற வேண்டிய தேவை இருக்கின்றது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கடைச்சங்கம் இருந்ததாக கூறுகின்றார்கள். கடைச் சங்கத்தின் நூல்கள் பல சான்றாக இருந்தன. மற்றைய சங்கங்கள் இருந்ததோ இல்லையோ என்பது பல்வேறு ஐயங்கள் வினாக்கள் தொடுக்கின்ற போது கடைச் சங்கத்தின் இலக்கியங்கள் இன்று எமக்கு கடைச்சங்கம் சிறப்பாக இருந்ததற்கு சான்றாக அமைகின்றது.

இன்று எமக்கு கடைச்சங்க காலத்தின் செயற்பாடுகள் அன்றைய தமிழ் இருந்த மேன்மையினை அந்த சங்க இலக்கியங்கள் மிகச்சிறப்பாக எடுத்தியம்புகின்றன. அந்த வகையில் அன்றைய இலக்கியங்கள் தூயதமிழில் அமைந்திருந்தன. அவ்வாறு இல்லாது விட்டாலும் கூட தமது மொழியில் இல்லாத சொற்களிற்காக பிறமொழி சொற்களை தமது மொழிக்கேற்ப மாற்றி பயன்படுத்துகின்ற வழமை இருந்தும் கூட நூற்றுக்கு இரு விழுக்காட்டுக்கு மேலே அங்கு பிறமொழிக் கலப்பு காணப்படவில்லை.

பிற்பாடு எமது மொழியில் பக்தி இலக்கிய காலம். அதற்கு பிற்பாடு சோழர் காலம் அப்போது ஏறத்தாழ மணிப்பிரவாள நடையுடன் ஐம்பதிற்கு மேற்பட்ட பிறமொழி சொற்கள் கலக்கின்ற காலமாக அது இருந்தது. அந்த வகையில் எமது மொழி எவ்வாறு தாழ்வடைந்தது என்பதை வரலாற்று ரீதியாக எடுத்து நோக்குவோமேயானால் இனம், மொழி, நாடு என வரிசைப்படுத்தி தமிழ்ச் சங்கத்தலைவர் பாவாணர் கூறுவதை எடுத்துக் கூறினார்.

எமது இனத்துக்கு மொழி தான் உயிர் போன்றது எமது மொழியை காப்பதனூடாக எமது இறைமையையும் மொழியையும் காத்துக்கொள்ள முடியும். அந்த வகையில் தான் எமது முன்னோர்கள் பணியாற்றி வந்தார்கள்.

சங்க காலத்துக்கு முன்பிருந்த இலக்கியங்களை நோக்குகின்ற போது எமக்கென ஆக்கி தந்த மொழிக்களஞ்சியமானது உலகின் வேறு எந்த மொழியிலும் அது இருக்காத அளவுக்கு மிகவும் தொன்மையான 90,000-க்கும் மேற்பட்ட சொற்களை களஞ்சியமாக கொண்டு படைக்கப்பட்டிருக்கின்றன.

அவ்வகையில் அக்காலத்தில் அத்தகைய வளம் கொண்ட மொழி இருந்ததில்லை அதற்கு பின்னர் உருவான பல மொழிகள் சொற்களை வளர்த்து கொண்டு உலகின் தேவைக்கேற்ப வளர்ந்து கொண்டிருக்கின்ற சூழலில் எமது மொழிக்கு எமது முன்னோர்கள் ஆக்கி தந்த சொற்களஞ்சியத்துக்கு மேலாக வேறு சொற்களை உருவாக்கவில்லை என்பது மட்டுமல்ல முன்னோர்கள் எமக்கென தந்த சொற்கள் பலவற்றை கைவிட்டு பிறமொழி சொற்களை கடன்வாங்கி தமிழினத்தை கடன்கார இனமாக தேவையற்ற முறையில் மாற்றி வைத்திருக்கின்றோம்.

அந்நிலை மாற வேண்டுமானால் எமது மொழியை வளர்க்கின்ற உலகின் ஏனைய மொழிகளுக்கு நிகராக எமது மொழியை கொண்டு செல்லக்கூடிய அளப்பரிய பணி எம் முன்னால் உள்ளது. இந்த வகையிலே தான் இந்த மண்ணிலே எமது தமிழீழ தேசியத் தலைவரின் வழிகாட்டலில் இழந்த மண்ணை மீட்கின்ற, இறைமையை மீட்கின்ற போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இப்போராட்டத்திற்கு வழிகாட்டுகின்ற தலைவர் அவர்கள், நாங்கள் பெறப்போகின்ற தமிழீழத்தில் வாழ்வதற்கு தமிழர் இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலே, இந்த மண்மீட்பு போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அதேவேளை எமது மொழியை பிறமொழி கலப்பிலிருந்து மீட்டெடுக்கின்ற அந்த அரிய பணியை தூய்மையானது என உணர்ந்து தான் இயக்கத்தின் ஒரு பிரிவாக தமிழ் வளர்ச்சி கழகம் என்ற ஒரு பிரிவை ஏற்படுத்தி, தமிழ் வளர்ச்சி கழகத்தின் குறிக்கோளாக எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று இருக்கக்கூடிய வகையில் செயற்பாடுகளை செய்யுமாறு பணித்திருந்தார்கள்.

அந்த வகையில் தமிழ் வளர்ச்சி கழகத்தினூடாக நாங்கள் தமிழீழத்தின் அடையாளத்தை அழிந்து விடாமல் நிலை நிறுத்துகின்ற வகையில், தமிழர்கள் தமிழ்ப் பெயரை இட்டுக்கொள்ள வேண்டும் என்பதோடு, தமிழ் வணிக நிலையங்கள், தெருக்கள், பள்ளிகள் எல்லாவற்றிலும் தமிழ்மொழி முழுப்பயன்பாட்டில் வரவேண்டும் என்பதோடு, என்றும் நாங்கள் எண்ணுகின்ற போது பேசுகின்ற போது எழுதுகின்ற போது தமிழை தமிழாக தூய்மையான தமிழாக பயன்படுத்துகின்ற அளவுக்கு எமது நிலை ஏற்பட வேண்டும் என்கின்ற வகையில் தான் தமிழ் வளர்ச்சிக் கழகம் தனது குறிக்கோள்களை வகுத்து புகழோர்களின் தொடக்கத்திலிருந்து தலைவரின் வழிகாட்டலின் கீழே கட்டளையின் கீழே இந்த தமிழ் வளர்ச்சிக் கழகம் செயற்பட்டு வருகின்றது. அதன் பொறுப்பாளராக இருந்த வகையில் யாழ்ப்பாண இடப்பெயர்வுக்கு முன்பதாகவே அரிய செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தோம்.

அந்நேரத்தில் தலைவர் அவர்கள் ஒரு நாள் அழைத்துக் கூறினார். இந்த மாவீரர்களின் பெயர்ப்பட்டியலை பார்க்கின்றபோது பெயர்களில் கிட்லர் முசோலினி என்ற பெயர்கள் எல்லாம் காணப்படுகிறது. இந்த பெயர்களை பார்க்கின்ற போது எதிர்காலத்திலே இந்த தமிழீழத்தை கிட்லர் முசோலினி எல்லாம் வென்றெடுத்து தந்தார்கள் என்று எமது வரலாறு கூறக்கூடாது. அதலால் எமது இயக்கத்தின் போராளிகளிற்கு நாங்கள் முதலில் தமிழ்ப் பெயர்களை சூட்டுவோம். மக்களிடம் இக்கருத்தை கூறுவதற்கு முதல் நாங்கள் அதை நடைமுறைப்படுத்தி மக்களிற்கும் வழிகாட்டியாக நாங்கள் திகழுவோம் என்றார்.

ஒரே நாள் ஒரு இரவுக்குள் தலைவரின் கட்டளைப்படி நாலாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளின் பெயர்களை தமிழ்ப் பெயர்களாக மாற்றினோம். அதுமட்டுமல்ல யாழ்ப்பாணத்திலே வணிக நிலையங்கள் அனைத்தும் தமிழில் சூட்டப்பட வேண்டும் என்ற ஒரு செயற்பாட்டை அறிவித்தது மட்டுமல்ல அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தி செயற்படுத்தினோம்.

அது மட்டுமல்ல இந்த தமிழ்மொழி காப்பு என்பதும் வளர்ப்பு என்பதும் எமது கல்வியினூடாக கல்வித்துறையினூடாக வளர்த்தெடுக்கப்பட வேண்டியது. எமது இந்த தமிழ்மொழியை வளர்க்கின்ற பணி, காக்கின்ற பணி பள்ளிகளின் ஊடாக வளர்த்தெடுக்கப்படுகின்றது என்ற வகையிலே நாங்கள் தொடக்கப்பள்ளி செயற்பாடுகளிலே இந்த தூயதமிழை வளர்த்தெடுக்கின்ற, அறிமுகப்படுத்துகின்ற பணியை மேற்கொள்ளுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டோம்.

ஏனென்றால் பல முதியவர்களிடம் போய் நீண்ட காலம் செலவழித்ததில் உள்வாங்கப்பட்டு அதனை பயன்படுத்தி நடைமுறைப்படுத்தி வந்தவர்களிடையே போய் நாங்கள் திடீரன ஒரே நாளில் நீ தூய தமிழிலே பேசியாக வேண்டும், உரையாட வேண்டும் என்று கூற முடியாது.

முழுமையாக மீண்டும் தூயதமிழை பேசுகின்ற நிலையை எமது இனத்துக்குள் கொண்டு வரவேண்டுமேயானால் அடிப்படையிலிருந்து மாணவர்களிடையே பிறமொழி கலப்பற்ற தமிழை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கின்ற ஒரு வேலைத்திட்டத்தினூடாக நாங்கள் தொடக்ககல்வி பாடத்திட்டத்தில் இருந்த பிறமொழிச்சொற்களை அடையாளம் காட்டி அந்த சொற்களிற்கு மாற்றமான தமிழ்மொழி சொற்களை அந்த இடத்தில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி நாங்கள் ஆசிரியர்களிற்கு ஒரு பயிற்சி வகுப்பினை மேற்கொண்டோம்.

ஆண்டு ஒன்றிலிருந்து ஐந்து வரையான பாட நூல்களை அவ்வாறு ஆக்கி அவற்றிலுள்ள பிறமொழி சொற்களை அடையாளம் கண்டு அவற்றை எவ்வாறு எல்லாம் பயன்படுத்தலாம் என்றெல்லாம் எண்ணி அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வருகின்ற போது அந்த பாடத்திட்டம் மாறிவிட்டது. அந்த பாடத்திட்டம் மாறியதனால் நாங்கள் அந்த செயற்பாட்டை அப்படியே கைவிட்டு மீண்டும் ஒரு செயற்பாட்டிற்குள் வரவேண்டிய நிலையிருந்தது. அதில் ஏற்பட்ட போர்ச்சூழல் தடங்கல்கள் அதனைவிட நாங்கள் கல்விக்காக வேறு யாரிடமும் எதிர்பார்த்து, எதிரிகளிடம் எதிர்பார்த்து காத்திருக்கின்ற அந்த நிலையில் இவற்றை நாங்கள் முழுமையாக வெற்றி கண்டுவிட முடியாது, வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி விட முடியாது.

ஏனென்றால் அவர்களால் வழங்கப்படுகின்ற புதிய பாடநூல்கள் எங்களுக்கு வருவதற்கு ஒரு ஆண்டு கடந்து தான் வருகின்றது ஐந்து ஆண்டுகளிற்குள் அந்தப்பாடத்திட்டம் மாறி இன்னுமொரு பாடத்திட்டம் வந்து விடும். அவற்றை வைத்து ஆய்வு செய்து அவற்றிலுள்ள பிறமொழி சொற்களை கண்டறிந்து அவற்றை பற்றி எமது ஆசிரியர்களிற்கு அதற்குரிய தமிழை கற்பித்து நாங்கள் அதனை நடைமுறைப்படுத்துகின்ற போது இன்னமொரு பாடத்திட்டம் வந்துவிடும்.

எனவே இதனை நான் எதற்காக இதை குறிப்பிடுகின்றேன் என்றால் ஒரு முழுமையாக மொழியைக்காக்கின்ற பணி தடையின்றி நாங்கள் திட்டமிட்டு செய்ய வேண்டுமேயானால் அவற்றிற்குரிய உரிமை ஆட்சி எம்மிடம் இருந்தால் தான் நாங்கள் ஒரு முழு நிறைவாக திட்டமிட்ட அடிப்படையில் எடுத்து செல்லக்கூடியதாக இருக்கும்.

அந்த வகையில் செய்வதற்கு இந்த அரசின் கல்விச்செயற்பாடானது பெரும் தடையாக இருந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தான் நாங்கள் அரசின் கடந்த கால பாடநூல்களைப்பற்றி கேட்டுக்கொண்டிருக்கின்ற போது மேலும் மேலும் பல நெருக்கடிகளை தமிழ்மொழியில் கொண்டு வருகின்றதை பார்க்கின்றோம்.

எமது தமிழ்மொழி பாடநூலில் பிறமொழி கலப்பு இருக்கின்றது என்பதால் தான் நாங்கள் பாடநூலில் கைவைக்கத் தொடங்கினோம். பின்னர் தமிழ்மொழி பாடநூலில் மட்டுமல்ல எல்லாபாடநூல்களிலும் இலக்கணப்பிழை சொற்பிழை எழுத்துப்பிழை இப்படி பல்வேறு வகையான வழுக்களோடு பாடநூல்களை அரசு திட்டமிட்டு வெளிவிடுகின்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

வரலாற்று பாடநுலை புவியியல் பாடநூலை இரண்டு ஆண்டுகளிற்கு முன்னால் எடுத்துக்கொண்டால் 1500-க்கும் மேற்பட்ட பிழைகள் இருப்பதை சுட்டிக்காட்டினால் அதனை அடுத்த முறை திருத்தி வெளியிடுகின்றோம் விடுதலைப் புலிகளோடு பேசி அவர்கள் கருத்தையும் ஏற்று செயற்படுகின்றோம் என்று கூறினார்கள்.

திருகோணமலையில் எமது மாவட்ட கல்விக் கழகப் பொறுப்பாளரை அனுப்பி கதைத்தோம். நூலில் திருத்தங்களைக் கூட கொடுத்தோம் அவற்றை பார்த்து விட்டு செய்வதாக கூறினார்கள். அவற்றை விட கூடுதலான பிழைகளோடு இந்த பாட நூல்கள் வெளிவருகின்றன. எங்களுக்கு இந்த கல்வியில் அவர்கள் திட்டமிட்டு மொழி அழிப்பு செயற்பாடுகளை மேற்கொள்வதோடு நாங்கள் அதனை பயன்படுத்திக்கொண்டு அந்த பாடநூல்களை பயன்படுத்திக் கொண்டு அதனை தொடர்ந்து செய்கின்ற நிலையில் அவை அரசு எந்த வகையிலும் தமிழினத்துக்கு எதிரான செயற்பாடுகளை செய்வதற்கு துணிச்சல் ஏற்படுகின்றது.

உண்மையில் 2005 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டு பாடநூலில் ஜப்பான் மாணவர்களிற்காக ஜப்பானிய மொழியில் எழுதிய அந்தப்பாடநூலில், சீனா தொடர்பாக இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் சீனா மீது படையெடுத்த போது ஜப்பான் சீன மக்கள் மீது நடத்திய கொடுமைகள் மறைக்கப்பட்டு விட்டது என்று சீனாவில் உள்ள மக்கள், மாணவர்கள் ஆகியோர் கிளர்ந்தெழுந்து ஜப்பானிய தூதரகத்திற்கு எதிராக சென்று தாக்குதலை நடத்தினார்கள். பத்திற்கும் மேற்பட்ட சீன நகரங்களில் ஜப்பானியர்களின் செயற்பாடுகளை அவர்கள் தடுத்து நிறுத்தினார்கள். இது ஜப்பான் அரசு ஜப்பான் நாட்டு மாணவர்களிற்காக தமது தெரிவிலே ஆக்கிய அந்த நூலிலே உள்ள குறைபாடுகளை கண்டு கொதித்தெழுந்தார்கள்.

நாங்கள் எமது வரலாறுகளை உலகநாட்டு பணத்தினை எமக்காக கேட்டுப்பெற்று கொண்டு எம்மை, கூலிக்காக வந்தவர்கள் என்றெல்லாம் தமிழினத்தை இழிவுபடுத்தி வெளிவிடுகின்ற அந்த பாடநூல்களை நாங்கள் எமது பாடநூலாக ஏற்று கற்றுக்கொண்டிருக்கின்ற வரை தமது திணிப்பை எம்மீது திணித்துக்கொண்டிருப்பார்கள

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செய்தியை இணைத்தபோது.. பந்திகளுக்கு இடவெளி விட்டிருக்கலாம்.. அல்லது இணைத்தபின் ஒரு முறை பார்த்திருக்கலாம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள் கிசான். இப்பொழுது பந்திகளுக்கு இடையில் இடைவெளி இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

மொழியை காக்கின்ற பணியை செய்கின்றவர்களும் ஒரு வகையில் இனப்பற்றுக் கொண்ட போராளிகள் தான் அவர்கள் பேனா தூக்குகின்ற போராளிகள் நாங்கள் துப்பாக்கி தூக்குகின்ற போராளிகள்".

உண்மையிலை விடுதலை என்றால் என்ன? அதாவது மொழி, மண் ,மக்கள், கலாச்சாரம் இவைகளுக்கு கிடைக்கிற சுதந்திரம் தான் முழுமையான விடுதலையாகும் .இதைத்தான் அவர் மிகவும் தெளிவாக சொல்லுகிறார்...

Edited by Valvai Mainthan

மொழியை காக்கின்ற பணியை செய்கின்றவர்களும் ஒரு வகையில் இனப்பற்றுக் கொண்ட போராளிகள் தான் அவர்கள் பேனா தூக்குகின்ற போராளிகள் நாங்கள் துப்பாக்கி தூக்குகின்ற போராளிகள்".

உண்மையிலை விடுதலை என்றால் என்ன? அதாவது மொழி, மண் ,மக்கள், கலாச்சாரம் இவைகளுக்கு கிடைக்கிற சுதந்திரம் தான் முழுமையான விடுதலையாகும் .இதைத்தான் அவர் மிகவும் தெளிவாக சொல்லுகிறார்...

உம்மைப் போன்ற ஆழமான மொழியறிவுள்ளவர்களும் அப்பணியைத் தொடரலாமே வல்வைமைந்தா.......?

  • கருத்துக்கள உறவுகள்

'' உம்மைப் போன்ற ஆழமான மொழியறிவுள்ளவர்களும் அப்பணியைத் தொடரலாமே வல்வைமைந்தா.......? ''

இந்த கேள்வி ஒரு பொதுவான கேள்வியாக நான் எடுத்துக்கொள்கிறேன்.

'' உம்மைப் போன்ற ஆழமான மொழியறிவுள்ளவர்களும் அப்பணியைத் தொடரலாமே வல்வைமைந்தா.......? ''

இந்த கேள்வி ஒரு பொதுவான கேள்வியாக நான் எடுத்துக்கொள்கிறேன்.

கவனத்தில் எடுத்தமைக்கு நன்றிகள், உங்கள் பதிலென்னவோ மைந்தா.....?

  • கருத்துக்கள உறவுகள்

கண்டிப்பாக உங்க கேள்வியையிட்டு மகிழ்சியடைகிறேன்...ஆனால் அவ்வளவுக்கு எனக்கு அறிவு இல்லை

Edited by Valvai Mainthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீர்கொழும்பில் இருந்து புத்தளம் வரை உள்ள தமிழ்குடும்பங்கள் சிங்கள அரசின் திட்டமிட்ட நடவடிக்கையினால் சிங்களவராக மாறி உள்ளார்கள். அங்கே தமிழ்ப் பாடசாலைகள் இல்லை. அதனால் அவர்கள் சிங்கள பாடசாலையில் படிக்கிறார்கள். அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோ பிள்ளை இவ்வாறே சிங்களவராக மாறப்பட்டார். அவர் அவருடைய தகப்பனாருடன் தமிழில் கதைத்தார். ஆனால் அவரின் பிள்ளைகளுடன் சிங்களத்திலே கதைக்கிறார். மலையகத்தில் உள்ள பெரும்பாலான தமிழ்ப் பாடசாலை அதிபர்கள் சிங்களவர்கள். அதனால் அங்கும் தமிழில் கதைப்பது குறைவாக இருக்கிறது.

இலங்கையில் உள்ள தமிழ்த் தொலைக்காட்சியான சக்தித் தொலைக்காட்சியில் பெரும்பாலன நிகழ்ச்சிகள் சன் தொலைக்காட்சியில் இருந்தே ஒளிபரப்பாகிறது. சன் தொலைக்காட்சியில் அதிகமாக ஆங்கிலச் சொற்களே தேவை இல்லாமல் உபயோகிக்கிறார்கள்( பெஸ்டு கண்ணா பெஸ்டு).

பிஜி நாட்டில் மூன்றாவது நான்காவது தலைமுறையில் உள்ள தமிழர்களுக்கு தமிழ் தெரியாது. ஆனால் கிந்தி தெரியும். அங்கே தமிழ் பாடசாலைகள் இல்லை. கிந்திப்பாடசாலையே உண்டு.

புலம் பெயர்ந்த நாடுகளில் லண்டனில் பிறந்த பிள்ளைகளில் பெரும்பாலோர் தமிழ் தெரியாமல் இருக்கிறார்கள். அவுஸ்திரெலியாவிலும் இதே நிலை. ஆனால் லண்டனை விட பரவாயில்லை. ஆனால் நோர்வே, பிரான்ஸ், ஜேர்மனி,சுவிஸில் உள்ளவர்களில் அதிகளவு தமிழ் உணர்வுடன் இருக்கிறார்கள். ஜேர்மனியில் தமிழாழயப் பாடசாலை 70க்கு மேல் உள்ளது.

கிறிஸ்தவ தமிழர்கள் ஆங்கிலப் பெயர்களை தங்களது பிள்ளைகளுக்கு பெயர் சூட்டுகிறார்கள். இந்து மதத்தினைச் சேர்ந்த தமிழர்கள் வட மொழிப் பெயர்களில் தமிழைச் சூட்டுகிறார்கள். இவர்கள் நட்சத்திரம் பார்த்து பெயர் சூட்டுவதினால் டி என்ற எழுத்தில் ஆரம்பிப்பதற்காக 'டில்சன்' என்ற சிங்கள பெயரில் பெயர் சூட்டுகிறார்கள்.

சிட்னியில் சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிக்கமால் சீனா, ஜப்பான் மொழிகளைக் கற்பிக்கிறார்கள். பிள்ளை வளர்ந்து சினர்களைக் கல்யாணம் செய்யும் போது 'என்ற பிள்ளை சீனரைக் கல்யாணம் செய்து விட்டதே' என்று கவலைப் படுகிறார்கள். சங்கீதம் , நடனம், மிருதங்கத்துக்கு முக்கியத்துவம் குடுக்கும் பெற்றோர்கள் தமிழுக்கு முக்கியத்துவம் குடுப்பதில்லை. ஈழப் போராட்டத்துக்கு ஆதரவான சிலர் கூட தங்கள் பிள்ளைகளுடன் தமிழில் கதைப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

'' புலம் பெயர்ந்த நாடுகளில் லண்டனில் பிறந்த பிள்ளைகளில் பெரும்பாலானோர் தமிழ் தெரியாமல் இருக்கிறார்கள். "

ஜயா கந்தப்பு உண்மையை எவ்வளவு தெளிவாக சொல்லியிருக்கிறீங்க...ஆனால் ஒன்றை மட்டும் தப்பாக சொல்லியிருக்கிறீங்க அதாவது லண்டனில் பிறந்த பிள்ளைகளை மட்டும் குறிப்பிட்டு கூறியிருக்கிறீங்க நீங்க லண்டனில் இருப்பதனால் தான் அப்படி எழுதியிருக்கலாம் என்று நான் விளங்கி கொள்கிறேன். இந்த மொழி விடயத்தில் நாம் கவலைப்படவேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன. அதாவது பிள்ளைகளை குறை கூறுவதை விட பேற்றோர் பக்கம் தான் எங்க கவனத்தை அதிகம் செலுத்த வேண்டியுள்ளது. நான் குறிப்படுவதை நீங்க ஏற்றுக்கொள்கிறீங்களோ இல்லையோ ஆனால் நூற்றுக்கு நூறு வீதம் உண்மை அதாவது தமிழில் பேச விரும்பும் பிள்ளைகளை பெற்றோர் தான் தடுக்கும் விடயமும் இங்கு நிறைய இடம்பெறுகிறது. இதற்கு வேறுபட்ட காரணங்களும் அவர்களினால் முன்வைத்து தங்களால் செய்யப்படும் முட்டால் தனத்தை நியாயப்படுத்தவும் முனைகிறார்கள். இதில் ஒரு காரணமாக பிள்ளைகள் வீட்டில் தமிழ் பேசினால் தங்களினால் (பெற்றோர்களினால்) ஆங்கிலம் பேசிப்பழகுவதிற்கு கஷ்ரமாக இருப்பதாக கூறுகிறார்கள். அடுத்ததாக ஒரு வேடிக்கையான காரணமாக பிள்ளைகள் தமிழில் பேசுவது தங்களுக்கு(பெற்றோருக்கு) கௌரவக் குறைவாக இருப்பதாக கருதுகிறார்கள். இதிலிருந்து யோசித்து பாருங்கள் தப்பு யாருடையது என்று...

இதிலிருந்து நான் கூற வருவது என்னவென்றால் விடுதலையுணர்வு அல்லது மொழிப்பற்று, கலாச்சாரம் போன்றன பிள்ளைகளுக்கு பெற்றோர்களாகிய நாங்கள் தான் ஊட்டவேண்டுமென்றும், பெற்றோர்களாகிய எங்களுக்கு இயற்கையாகத்தான் வரவேனும் என்றும் எனது கருத்தை கூறிக்கொண்டு தற்காலிகமாக விடைபெறுகிறேன்.

Edited by Valvai Mainthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் வல்வை மைந்தன். ஆங்கிலம் பேசும் பிறந்த பிள்ளைகள் தான் அதிகம் தமிழ் பேசுவதில்லை. அமெரிக்காவில் பிறந்த ஈழத்தமிழ் பிள்ளைகளில் 95 வீதமானவர்கள் தமிழ் கதைப்பதில்லை. லண்டனிலும் அதிக பிள்ளைகள் தமிழ் கதைப்பதில்லை. கனடாவில் பிள்ளைகளில் சிலர் தமிழ் கதைத்தாலும் அங்குள்ள மொத்த ஈழத்தமிழ்ப் பிள்ளைகளின் தொகையில் மிகவும் குறைந்த வீதமே. அவுஸ்திரெலியாவிலும் குறைவு. ஆனால் லண்டனை விட பரவாயில்லை.

முன்பு யாழில் வந்த இணைப்பினையும் வாசித்துப்பாருங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=1518

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்நேரத்தில் தலைவர் அவர்கள் ஒரு நாள் அழைத்துக் கூறினார். இந்த மாவீரர்களின் பெயர்ப்பட்டியலை பார்க்கின்றபோது பெயர்களில் கிட்லர் முசோலினி என்ற பெயர்கள் எல்லாம் காணப்படுகிறது. இந்த பெயர்களை பார்க்கின்ற போது எதிர்காலத்திலே இந்த தமிழீழத்தை கிட்லர் முசோலினி எல்லாம் வென்றெடுத்து தந்தார்கள் என்று எமது வரலாறு கூறக்கூடாது. அதலால் எமது இயக்கத்தின் போராளிகளிற்கு நாங்கள் முதலில் தமிழ்ப் பெயர்களை சூட்டுவோம். மக்களிடம் இக்கருத்தை கூறுவதற்கு முதல் நாங்கள் அதை நடைமுறைப்படுத்தி மக்களிற்கும் வழிகாட்டியாக நாங்கள் திகழுவோம் என்றார்.

ஒரே நாள் ஒரு இரவுக்குள் தலைவரின் கட்டளைப்படி நாலாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளின் பெயர்களை தமிழ்ப் பெயர்களாக மாற்றினோம்அதுமட்டுமல்ல யாழ்ப்பாணத்திலே வணிக நிலையங்கள் அனைத்தும் தமிழில் சூட்டப்பட வேண்டும் என்ற ஒரு செயற்பாட்டை அறிவித்தது மட்டுமல்ல அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தி செயற்படுத்தினோம்.

எங்கள் தலைவரைப் பார்த்தீர்களா?. ஆனால் புலம் பெயர் நாடுகளில் ஈழப்போராட்டத்துக்கு ஆதரவான தமிழர்களில் சிலர் தங்களது பிள்ளைகளுக்கு தமிழ் அல்லாத பெயர்களைச் சூடுகிறார்கள். பிள்ளைகளுடன் தமிழில் கதைப்பதில்லை. யாழ்கள உறவுகளே ஏன் யாழில் உங்கள் பெயரையும் தமிழில் மாற்றக்கூடாது?.உதாரணத்துக்கு யாழில் உள்ளவர்களின் சிலரின் பெயர்கள் ஜூட், விஷால்,கிஷான்,மக்ஸிமஸ்,கிறிஸ

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு உங்கள் சிந்தனைக்கு நான் சிரம் தாழ்த்துகிறேன்.....நிச்சியமாக எல்லோரும் இதை கவனத்தில் எடுப்பார்கள் இல்லையென்றால் இந்த தளத்தில் கருத்துக்களை பதிவு செய்வதிற்கு தகுதியற்றவர்கள் என்றுதான் நான் உணருகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டிலே அரச பாடசாலைகளில் தான் தமிழ் மொழியில் கற்பிக்கிறார்கள். ஒரளவு வசதி படைத்தவர்கள் தனியார் பாடசாலையில் கல்வி கற்கிறார்கள். தனியார் பாடசாலைகளில் ஆங்கில மொழியில் தான் கற்பிக்கப்படுகிறது. ஒரே ஒரு பாடம் தான் தமிழ் மொழி . ஆனால் அதிலும் மத்திய அரசாங்கத்தினால் நடாத்தப்படும் பரிட்சைக்கு தோற்றும் மாணவர்கள் படிக்கும் பாடசாலைகளில் தமிழ் மொழி ஆரம்ப நிலையில் தான் உள்ளது. மாணவர்கள் தமிழுக்கு பதிலாக கிந்தி,பிரென்சு, தெழுங்கு, கன்னட மொழி உள்ள பாடத்தினை தெரிவு செய்கிறார்கள்( இலகுவாக புள்ளிகள் பெறலாம் என்பதினால்). மானில தமிழ் நாட்டு அரசினால் நடாத்தப்படும் பரிட்சைக்கு படிப்பிக்கும் பாடசாலைகளில் தமிழ் மொழி உயர்ந்த நிலையில் இருந்தாலும், சில மாணவர்கள் தமிழை விட கிந்தி, பிரென்சு மொழியில் படித்தால் அதிக புள்ளிகள் பெறலாம் என்று தமிழைப் படிப்பதில்லை.

சன், ஜெயா, ராஜ், விஜய் தொலைக்காட்சிகளில் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் ஆங்கிலத்திலே கதைக்கிறார்கள். ( ' நெக்ஸ்ட் பார்டிசிப்பன்ட் ராஜா வுரம் மதுரை, டெல் மி, வை யு சுஸ் திஸ் சொங் என்று' கதைக்கிறார்கள்).

கலைஞ்சர் அவர்கள் தமிழ்த்திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர் சூட்டினால் வரி விழக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்க தயாரிப்பாளர்கள் எல்லொரும் தமிழ் பெயர்களை படங்களுக்கு சூட்டினார்கள்.( முன்பு மருத்துவர் தமிழ்குடிதாங்கியும் ,திருமாவளன் போன்றவர்கள் சொன்ன போது இதனை இவர்கள் கண்டு கொள்ளவில்லை.) மாதவன் நடித்த படமொன்றுக்கு 'ரெண்டு' என்று பெயர் வைத்தார்கள். சில நாட்களின் பின்பு தான் அவர்களுக்கு தெரிந்தது 'ரெண்டு' தூய தமிழ்ச் சொல் அல்ல 'இரண்டு' தான் தமிழ்ச் சொல் என்று. இதற்கு சினி சவுத் இணையத்தளம் 'தயாரிப்பாளர்கள் குழப்பம் அடையாமல் இருக்க, எது தூய தமிழ் என்று அறிவதற்கு ஒரு குழுவை நியமிக்க வேண்டும் என்று செய்தி வெளியிட்டு இருந்தது. ஈழத்தில் உள்ள சிறுவர்களிடம் கேட்டால் சொல்லுவார்கள் 'இரண்டா' அல்லது 'ரெண்டா' சரி என்று. இப்படி போகிறது தமிழ் நாட்டின் நிலமை.

புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களில் ஆங்கிலம் பேசும் நாடுகளில் உள்ளவர்களின் குழந்தைகள் பெரும்பாலனவர்கள் தமிழருடன் தமிழில் கதைப்பதில்லை. அடுத்த, அடுத்த சந்ததிகளில் புலம் பெயர்ந்த தமிழர்களில் 100 வீதமான தமிழர்கள் தமிழ் தெரியாத நிலைக்கு தள்ளப்படும் நிலை ஏற்படப் போகிறது.

ஆனாலும் ஈழத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆட்சியில் தமிழ் அழியாது.

புலத்தில் வாழும் உறவுகளே தமிழர்களுடன் தமிழில் கதையுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயர் சூட்டுங்கள். கிறிஸ்தவதமிழர்களே ஆங்கிலப் பெயரை சூட்டுவதை நிறுத்துக்கள். உங்கள் மதப் பெயரைத்தான் வைக்க வேண்டும் என விரும்பினால் தமிழில் சூசை, அந்தோணி என பிள்ளைகளுக்கு பெயர் சூட்டுங்கள். இந்துக்களே வடமொழிப் பெயர் சூட்டுவதை நிறுத்துங்கள். கடவுள்களின் பெயரை சூட்ட விரும்பினால் மாதுளன், பிரணவன், சரவணன், உமை என பிள்ளைகளுக்கு பெயர் சூட்டுங்கள்.

எங்கள் தலைவரைப் பார்த்தீர்களா?. ஆனால் புலம் பெயர் நாடுகளில் ஈழப்போராட்டத்துக்கு ஆதரவான தமிழர்களில் சிலர் தங்களது பிள்ளைகளுக்கு தமிழ் அல்லாத பெயர்களைச் சூடுகிறார்கள். பிள்ளைகளுடன் தமிழில் கதைப்பதில்லை. யாழ்கள உறவுகளே ஏன் யாழில் உங்கள் பெயரையும் தமிழில் மாற்றக்கூடாது?.உதாரணத்துக்கு யாழில் உள்ளவர்களின் சிலரின் பெயர்கள் ஜூட், விஷால்,கிஷான்,மக்ஸிமஸ்,கிறிஸ

என் பெயர் தூய தமிழ் பெயர் தானெ கந்தப்பு :unsure: ஆனால் உண்மை சனம் தான் கேட்க மாட்டன் என்ருதுகள்..பிள்ளையளுக்கு அழகான தமிழ் பெயர்களை வைக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கின்றார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் பெயர் தூய தமிழ் பெயர் தானெ கந்தப்பு :D ஆனால் உண்மை சனம் தான் கேட்க மாட்டன் என்ருதுகள்..பிள்ளையளுக்கு அழகான தமிழ் பெயர்களை வைக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கின்றார்கள்

தூயா, தூயவன், அருவி போன்றவை தூய தமிழ்ச் சொற்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.