Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒன்ராரியோ தேர்தலில் லிபரல் வெற்றி _ தமிழ் வேட்பாளர்கள் தோல்வி

Featured Replies

கனடா நாட்டின் ஒன்ராரியோ மாநில சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் லிபரல் கட்டு மீண்டும் அதிக பெரும்பான்மையுடன் அட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

கனடா தலைநகர் ஓட்டாவா மற்றும் கனடாவின் வணிகத் தலைநகர் ரொறன்ரோ பெருநகரங்களைக் கொண்ட ஒன்ராரியோ மாநிலத்திற்கான சட்டசபை 107 உறுப்பினர்களைக் கொண்டது. இதில் 41 உறுப்பினர்கள் ரொறன்ரோ பெரும்பாகத்தை பிரதிநிதித்துப்படுத்துபவர்

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி பழமைவாதக் கட்சியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றிய டால்ரன் மக்கென்ரி தலைமையிலான லிபரல் கட்சி மக்களிற்கு வழங்கிய பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாததுடன் ரொறன்ரோ மாநகர சபைக்கு வழங்க வேண்டிய பல மில்லியன் டொலர் நிதியை வழங்காததன் காரணமாக ரொறன்ரோ மாநகர சபையினால் வழங்கப்படும் பல்வேறு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதன் காரணமாக லிபரல் கட்சிக்கான ஆதரவு மக்களிடையே பலமாகக் குறைந்திருந்தது. ஒன்ராரியோ மாநிலததிற்கான தேர்தல் அறிவிப்பு வெளியாகியவுடன் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகளில் லிபரல் கட்சி பெரும்பான்மையை பெறாதென தெரிவிக்கப்பட்டது.

இதே பழமைவாத கட்சியின் மைக் கெரிஸ் 95ம் ஆண்டு பிரிமியரா வாந்த போது கல்வி மற்றும் மருத்துவ துறைகளுக்கான பண ஒதுக்கீட்டை மிகவும் குறைத்தார். அந்தகாலத்தில் பல பாடசாலை வேலைத்திட்டங்கள் தடைப்பட்டன. மாலை கல்வி, வயது கூடியவகர்களுக்கான மாலை நேர வகுப்புகள், புதிதாக குடியேறிய மாணவர்களுக்கான ஈ.எஸ்.எல். வகுப்புக்கள், புதியவர்களுக்கான மொழிதேர்ச்சி வகுப்புகள் என பலவும் பாதிக்கப்பட்டது. அதோபோல் பல பொது வைத்தியசாலைகள் மூடப்பட்டன. பல மருத்துவர்கள் மற்றும் தாதிகள் பாதிக்கபட்டதுடன் அவர்களது சேவே செய்யும் நேரங்கள் கட்டுப்படுத்தப்பட்டு அனேகமானோர் அமெரிக்காக்கு செற்றனர். அதன் விளைவு இங்கு பலருக்கு குடும்ம வைத்தியர்கள் இல்லை மற்றும்அவசர சிகிச்சை பிரிவில் தாமதம். இதை அதிகமான ஒன்ராறியன்ஸ் மறக்கவில்லை. அத்துடன் ஜேன் ரொறி முற்று முழுதாக நெகரிவ் தேர்தல் பிரச்சாரமே செய்தார். அடுத்தது நீங்கள் கூறிய பொதுப்பணத்தில் தனியார் பாடசாலை.

இதே பெடரல் பழமைவாத கட்சி (தற்போது ஆட்சியில் உள்ளவர்கள்) தான் எம்மவர்களின் தாயக உதவிகளை வெகுவாக முடக்கினர். முக்கியமாக உலகத்தமிழர் இயக்கத்தை தடை செய்து அது தொடர்பன அலுவலகங்கள் மற்றும் ஆதரவு வர்த்தக நிலையங்களை சோதனை செய்து அநேகமான ஆதரவாளர்களை பயப்படுத்தினர்.

அப்படியன இந்த கட்சிக்கு ஏன்தான் எம்மவர் வேட்பாளராக நிக்கின்றனரோ தெரியாது. தமிழ் மக்களும் பேருக்கு ஆதரவு வளங்குகின்றனர்.

  • தொடங்கியவர்

இதே பெடரல் பழமைவாத கட்சி (தற்போது ஆட்சியில் உள்ளவர்கள்) தான் எம்மவர்களின் தாயக உதவிகளை வெகுவாக முடக்கினர். முக்கியமாக உலகத்தமிழர் இயக்கத்தை தடை செய்து அது தொடர்பன அலுவலகங்கள் மற்றும் ஆதரவு வர்த்தக நிலையங்களை சோதனை செய்து அநேகமான ஆதரவாளர்களை பயப்படுத்தினர்.

அப்படியன இந்த கட்சிக்கு ஏன்தான் எம்மவர் வேட்பாளராக நிக்கின்றனரோ தெரியாது. தமிழ் மக்களும் பேருக்கு ஆதரவு வளங்குகின்றனர்.

கனடாவில் விடுதலைப் புலிகள் அமைப்பே தடைசெய்யப்பட்டுள்ளது. உலகத் தமிழர் அமைப்பு தடைசெய்யப்படவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து உலகத் தமிழர் அலுவலகங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதன்பின்னர் உலகத் தமிழர் அமைப்பின செயற்பாடுகள் எதுவும் முடக்கப்படவில்லை.

***********

Edited by harikalan

************

Edited by harikalan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர்கள் குறிப்பாக யாழ்பாணத் தமிழர்கள் பழைமைவாதிகளே. அவர்களுக்கு அரசியலில் பழைமைபேண்வாதம்தான் பிடிக்கும். இயல்பாகவே யாழ்ப்பாண பழைமைபேண் வாதிகளுக்கு ஆளும் வர்க்க சிந்தனைதான். தோல்தான் கறுப்பு மூளையெல்லாம் வெள்ளைத்தோல்தான். அதனால்தான் பழைமைபேண் கட்சிக்கு ஆதரவாக உள்ளார்கள். உண்மையில் நம்மைப்போன்ற தேசியத்தார் தொழிற்கட்சியை அல்லது தாராண்மைவாத கட்சியை அல்லது பசுமைக்கட்சியை அல்லது புரட்சிகரக்கட்சிகளைத்தான் ஆதரிப்பது பொருத்தமானது. ஆனால் பாசிபடிந்த மூளைகளுக்கு இதுவெல்லாம் புரியவைக்க முடியாது.

பாசி படராத கறுத்த தோல் கறுத்த மூளைகளின் புகழ் ஓங்கட்டும்.

Edited by தி.ஆபிரகாம்

  • தொடங்கியவர்

கனேடியத் தமிழர்கள் ஒவ்வொரு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் லிபரல் கட்சிக்கே வாக்களித்து வந்துள்ளனர். யாழ்ப்பாணத்தைத் பூர்வீகமாக் கொண்டுள்ள தமிழர்கள் மாத்திரமல்ல அனைத்துத் தமிழர்களுமே லிபரல் கட்சிக்கே வாக்களித்து வருகின்றனர்.

கனேடிய அரசியலில் தமிழர்களிற்கு இதுவரை தங்களை நிலை நிறுத்த முடியவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற மாநகரசபைச் தேர்தலில் போட்டியிட்டு நகரசபை உறுப்பினராக ஒருவரும், கல்விச்சபைக்கான பிரதிநிதியாக ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதுவே கனேடிய அரசியல் தமிழர்களின் உயர்நிலை.

இந்நிலையில் நடந்து முடிந்த ஒன்ராரியோ சட்டசபைக்கான தேர்தலில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஸ்காபரே மத்தி தொகுதியில் சாமி அப்பாத்துரை என்பவரை பழமைவாதக் கட்சி வேட்பாளராக நிறுத்தியது. மத்தியில் ஆட்சி நடத்தும் பழமைவாதக் கட்சி தமிழரின் போராட்ட சக்தியைத் தடை செய்தபோதும் கனேடியத் தமிழர்களிற்கு அரசியலில் பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் தமிழ் வேட்பாளரை நிறுத்தியமைக்காக கனேடியத் தமிழ் சமூகம் மகிழ்வடைந்ததுடன் அந்த வேட்பாளரின் வெற்றிக்கு உழைத்தது. ஸ்காபரே மத்திய தொகுதியில் பழமைவாதக் கட்சிக்கு ஆதரவளித்த தமிழர்கள் அதற்கு அருகில் உள்ள ஸ்காபரோ கில்வூட் தொகுதியில் புதிய மக்களாட்சிக் கட்சிக்காக உழைத்தது. காரணம் அங்கே யும் ஒரு தமிழ் வேட்பாளர் நிறுத்தப்பட்டிருந்தார். ஏனைய தொகுதிகளில் வழமைபோன்று லிபரல் கட்சிக்கே தமிழர்கள் தமது வாக்குகளை அளித்தனர்.

வரப்போகும் தேர்தல்களிலும் தமிழ் வேட்பாளர் ஒருவர் எந்தக் கட்சி சார்பாக நிறுத்தப்பட்டாலும் கட்சியைப் பாரக்காது தமது வேட்பாளருக்காக வாக்களிப்பார்கள்.

_ _ _

ஒரு வசனம் நீக்கப்பட்டுள்ளது. கருத்தாளர் மீதான கருத்தை தவிர்ப்பது நல்லது. அப்படி முறைப்பாடுகள் இருப்பின் நிர்வாகத்துக்கு அறியத்தரலாம். - வலைஞன்

Edited by வலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தடைசெய்தது பழைமைபேணும் கட்சி. பிரதிநித்துவம் என்னும் எலும்புத்துண்டை போட்டவுடன் இரக்கம் பொங்கி வழிகின்றதோ. லிபறல்களிடம் ( தாரண்மைவாதிகள்) மாற்றத்தை கொண்டு வரலாம். பழமைபேணுவோரிடம் (கொன்சவேற்றிவ் கட்சியில்) தலையால் கிடங்கு கிண்டினாலும் ஏதும் நடக்காது. உள்ளளும் புறமும் மாற்றத்தை கொணரும் கட்சிகளை அடையாளம் காணுவோர் புகழ் ஓங்கட்டும்.

*************

Edited by harikalan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"பாதத்திரம் அறிந்து பிச்சை போடு" என்றார்களே... பிச்சையிடுவதற்கே இப்படியான அலசல் இருக்கும்போது ஓட்டுப்போடுவதற்கு அலசல் இருக்கக்கூடாதா?

- கண்ணையும் பருத்தையும் மூடியவாறு புள்ளடி இடமுடியுமா?

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

தடைசெய்தது பழைமைபேணும் கட்சி. பிரதிநித்துவம் என்னும் எலும்புத்துண்டை போட்டவுடன் இரக்கம் பொங்கி வழிகின்றதோ. லிபறல்களிடம் ( தாரண்மைவாதிகள்) மாற்றத்தை கொண்டு வரலாம். பழமைபேணுவோரிடம் (கொன்சவேற்றிவ் கட்சியில்) தலையால் கிடங்கு கிண்டினாலும் ஏதும் நடக்காது.

இந்த நிமிடம்வரை எனது கருத்தும் இருவாகத்தான் இருக்கிறது.

************

Edited by harikalan

ஈழத்தமிழர்கள் குறிப்பாக யாழ்பாணத் தமிழர்கள் பழைமைவாதிகளே. அவர்களுக்கு அரசியலில் பழைமைபேண்வாதம்தான் பிடிக்கும். இயல்பாகவே யாழ்ப்பாண பழைமைபேண் வாதிகளுக்கு ஆளும் வர்க்க சிந்தனைதான். தோல்தான் கறுப்பு மூளையெல்லாம் வெள்ளைத்தோல்தான். அதனால்தான் பழைமைபேண் கட்சிக்கு ஆதரவாக உள்ளார்கள். உண்மையில் நம்மைப்போன்ற தேசியத்தார் தொழிற்கட்சியை அல்லது தாராண்மைவாத கட்சியை அல்லது பசுமைக்கட்சியை அல்லது புரட்சிகரக்கட்சிகளைத்தான் ஆதரிப்பது பொருத்தமானது. ஆனால் பாசிபடிந்த மூளைகளுக்கு இதுவெல்லாம் புரியவைக்க முடியாது.

பாசி படராத கறுத்த தோல் கறுத்த மூளைகளின் புகழ் ஓங்கட்டும்.

பழமைபேண்வாதம் என்று எதைச் சொல்கிறீர்கள்? அதற்கும் ஒன்ராரிய தேர்தலுக்குமான தொடர்பு என்ன? சிறிது விளக்கவும். :wub:

"தோல்தான் கறுப்பு மூளையெல்லாம் வெள்ளைத்தோல்தான்" என்றால்?

"நம்மைப்போன்ற தேசியத்தார்" என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்?

***************

Edited by harikalan

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியா தமிழர்கள் அதிகம் ஆதரிப்பது தொழிழ் கட்சியைய..ஆனால் அவுஸ்திரேலயாவை பொருத்தவரை லிபரல் வாறது தான் இந்த நாட்டிறக்கு நல்லம் ஆனால் லேபர் வந்தால் எங்களுக்கு நல்லம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூத்தோருக்கே நான் விளக்கவா?

பழைபேண்வாதம் ஆண்டான் அடிமை மனோநிலையை கொண்டிருத்தல், சுரண்டி வாழும் வர்க்க மனோநிலையை கொண்டிருத்தல், நால்வர்ண சாதிய மனோநிலையை கொண்டிருத்தல் இப்படியே நீட்டிக்கொண்டு போகலாம். மேலைநாட்டு கொன்சவேற்றிவ்களும் இப்படித்தான். அவர்கள் தங்கள் சமூக அமைப்புக்கேற்ற மனோநிலையை கொண்டிருப்பர். உதாரணத்திற்கு மன்னராட்சியை பேணுதல்...

வெள்ளை மூளை என்பது நம்மைப்போன்ற தேசியத்தார் ஐரோப்பிய துரைத்தன மனேநிலையை கொண்டிருத்தல்.

நம்மைப்போன்ற தேசியத்தார் என்பது ஆசிய, ஆபிரிக்க, தென்னமெரிக்க கண்டங்களைச் சோந்த மூன்றாம் உலகத்தார், அல்லது வளர்ச்சியடையாத தேசியத்தார்.

பழைபேண்வாதம் ஆண்டான் அடிமை மனோநிலையை கொண்டிருத்தல், சுரண்டி வாழும் வர்க்க மனோநிலையை கொண்டிருத்தல், நால்வர்ண சாதிய மனோநிலையை கொண்டிருத்தல் இப்படியே நீட்டிக்கொண்டு போகலாம்.

சரி. நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால், இந்த பழமைபேண் மனோநிலை யாழ்ப்பாணத்து சமூகத்துக்கு மட்டும் உரித்தானதா? தமிழ்ச்சமூகத்தின் போக்கே இப்படித்தானே? அல்லது யாழ்ப்பாண பழமைபேண்வாதம் தான் முழு ஈழச்சமூகத்திடமும் பரவிக்கிடக்கிறது என்று சொல்ல வருகிறீர்களா? புரியவில்லை.

ஒன்ராறிய தேர்தலில் போட்டியிட்டவரிடம் பழமைபேண் மனோநிலை உள்ளதா? சுவிசில், பிரான்சில், ஒஸ்ரேலியாவில், நோர்வேயில், பிரித்தானியாவில் தேர்தலில் பங்கெடுத்த தமிழ் வேட்பாளர்களிடமும், வாக்காளர்களிடமும் இது இல்லையா? அங்கெல்லாம் என்ன நிலை? :unsure:

**************

Edited by harikalan

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்ராறிய தேர்தலில் போட்டியிட்டவரிடம் பழமைபேண் மனோநிலை உள்ளதா? சுவிசில், பிரான்சில், ஒஸ்ரேலியாவில், நோர்வேயில், பிரித்தானியாவில் தேர்தலில் பங்கெடுத்த தமிழ் வேட்பாளர்களிடமும், வாக்காளர்களிடமும் இது இல்லையா? அங்கெல்லாம் என்ன நிலை? :unsure:

இளையன்,

அவர்அந்த கட்சியைதான் சொல்கிறார் என நினைக்கிறேன். அக்கட்சியில் வேட்பாளராக நின்ற சாமி அப்பாத்துரை என்ற தமிழரை அல்ல என நினைக்கிறேன். இல்லை எண்டால் நான் தான் தவறா விளங்கிறேனோ தெரியாது.

Edited by Sabesh

உங்கு வந்தேறுகுடிகளை எப்படிப் பாக்கிறார்கள் குறிப்பாக தமிழ் கனடியர்களை?

Migrants - the verdict: hardworking and skilled but with social problems in tow

· Impact mainly beneficial, concludes official study

· Rise in low-level crime and disorder also revealed

Alan Travis, home affairs editor

Wednesday October 17, 2007

The Guardian

The first official government study of the economic impact of the biggest wave of migration to Britain in recent years reaches an overwhelmingly beneficial verdict.

...

http://www.guardian.co.uk/immigration/stor...2192698,00.html

http://www.guardian.co.uk/immigration/stor...2192777,00.html

October 16, 2007

Migrants contribute £6 billion to UK economyPhilippe Naughton

Recent immigrants contributed about £6 billion to economic growth last year, earning more and paying more tax than native Britons, according to new Government figures published today.

The Home Office’s analysis of the economic impact of foreign workers came as Liam Byrne, the immigration minister, admitted that it had been a “mistake” to remove exit checks at Britain’s borders.

...

http://www.timesonline.co.uk/tol/news/uk/article2672639.ece

http://www.timesonline.co.uk/tol/news/poli...icle2673795.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.