Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அண்ணாவின் மறைவுக்கு கண்டனங்கள்.

Featured Replies

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் சிந்திய இரத்ததிலிருந்து ஏராளமான இளைஞர்கள் தோன்றி தமிழீழ விடுதலைப் போரை தொடர்ந்து நடத்துவார்கள் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்ச்செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து ஏராளமான இளைஞர்கள் தோன்றுவார்கள்: பழ.நெடுமாறன் -

ஒளி வடிவில்

http://www.ttntube.com

  • தொடங்கியவர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்ட செய்தி எம்மை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள

  • தொடங்கியவர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரை வான் குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்த சிறிலங்கா அரசாங்கத்தின் படுபாதகச் செயலை அனைத்துலக நாடுகள் கண்டிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • தொடங்கியவர்

இலங்கைத் தீவில் சமாதான முன்னெடுப்பாளராக செயற்பட்ட தமிழீழ இராஜதந்திரி பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை காட்டுமிராண்டித்தனமாக சிறிலங்கா அரசு படுகொலை செய்துள்ளது என்று பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • தொடங்கியவர்

சிறிலங்காவின் சுய சொரூபத்தை சர்வதேசம் புரிந்துகொள்ள வேண்டும் என்று சுவிஸ் தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • தொடங்கியவர்

பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வனைப் படுகொலை செய்வது என்பது சமாதான முயற்சிகளையும் படுகொலை செய்வதற்கு ஒப்பாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • தொடங்கியவர்

இலங்கையின் தற்போதைய நிலைமைகளின் எதிர்விளைவுகள் குறித்து நோர்வே அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் கவலை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

சனி 03-11-2007 13:34 மணி தமிழீழம் [செந்தமிழ்]

தமிழ்செல்வனின் இழப்பு பாரிய இழப்பு: எரிக்சொல்கைம் ஆழ்ந்த கவலை

நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் சிறீலங்காவின் சமாதான பேச்சு வார்த்தையில் அனுசரணையாளராகவும் பணியாற்றிய எரிக் சொல்கைம் இச்சம்பவம் தொடர்பாக ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பில் வெள்ளிக்கிழமை என்.ரி.பி செய்திச் சேவைக்கு செவ்வி வழங்கிய அவர் தமிழ்செல்வனின் இழப்பு பாரிய இழப்பு எனவும் அவரே சமாதான பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப் புலிகளின் முக்கிய தொடர்பு மையமாக செயற்பட்டவர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விதார் கல்கிசன் முன்னாள் நோர்வேயின் அரசுச் செயலரும் முன்னர் சமாதானப்பேச்சு வார்த்தை காலத்தில் பொறுப்புவகித்தவருமான அவர்கள் அச்செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கையில் சமாதான பேச்சு வார்த்தையில் தமிழ்செல்வன் அவர்கள் 10 வருடங்களுக்கு மேலாக முக்கி பங்கி வகித்திருந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச்செல்வன் மறைவு புலிகளுக்கு பின்னடைவு இல்லை: திருமாவளவன்

சனிக்கிழமை, நவம்பர் 3, 2007

சென்னை: விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் மறைவால் விடுதலைப்புலிகளுக்கு எந்தப் பின்னடைவும் ஏற்படாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சுப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இரங்கல் கூட்டம் சென்னை, தி.நகரில் உள்ள அந்த கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட திருமாவளவன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவரது மறைவு ஈழத் தமிழர்களுக்கு மட்டுமின்றி உலக தமிழர்களுக்கு இழப்பாகும். ஈழப்பிரச்சனையில் அரசியல் தீர்வே இறுதியானது என்று சொன்னவர் தமிழ்ச்செல்வன்.

அவரது இழப்பால் விடுதலைப்புலிகளுக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது. ஈழத்தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண மத்திய அரசு தலையிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து கோரிக்கை வைப்போம்.

மனித நேயமற்ற சிங்கள இனவெறியர்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவுவதை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

http://thatstamil.oneindia.in/news/2007/11...an-killing.html

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே அரசாங்கத்தின் சார்பில் ஒரு கண்டன அறிக்கை கூட வரவில்லையே...இவங்களை எல்லாம் எதுக்கு இனி நம்புவான்...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்செல்வன் அண்ணாவுக்கு வீரவணக்கம்! உங்கள் இழப்பு ஈடுசெய்வதற்கரியது. உங்கள் பணிகளில் இருந்தும் உங்கள் மறைவு நிகழ்ந்ததற்கான காரணிகளிலிருந்தும் பாடங்கள் கற்று மீண்டும் ஒருமுறை மேலெழுவோம்!

விடுதலை வேள்வி அதன்வாயிலில் நிற்கும் வேளையில் சிங்களவனின் இந்தச் சினமூட்டும் செயலினால் திசைமாறிடாமல் ஆதார செயல்திட்டங்களுடன் மேலும் நெஞ்சுறுதிகொண்டு விடுதலைப் பயணத்தைத் தொடருவோம்!!

  • கருத்துக்கள உறவுகள்

சனி 03-11-2007 16:55 மணி தமிழீழம் [செந்தமிழ்]

தம்பி தமிழ்ச்செல்வா "உன்னை எரிக்கவில்லை... ஏற்றியிருக்கிறோம்" - பாரதிராஜா

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு தமிழ்நாட்டிலிருந்து திரைப்பட இயக்குநர் பாரதிராஜா இரங்கல் செய்தி விடுத்துள்ளார்.

ஒரு விடிவெள்ளியைக் கொன்று புலர்ந்த இந்த வெள்ளி விடியாமலே இருந்திருக்கலாம்

ஒரு அட்சயப் பாத்திரத்தை பிச்சைக்காரர்கள் தின்று தீர்க்க இந்த நாள் விழிக்காமலே இருந்திருக்கலாம்.

மரணத்தைக் கண்டு அஞ்சியதில்லை தம்பிகள்! அதுதான் அவர்களுக்கு முகவரி

வலிகளும் அவர்களுக்கு புதிதல்ல! அவர்களின் இரணங்கள்- சாதாரணம்! தழும்புகளை நெஞ்சில் சுமந்த வீர மறவர்கள்!

என்றாலும் அவர்கள் கண்ணீரில் நனையும்போது இங்கே கரிக்கிறது- அங்கே அவர்கள் காயப்படும்போது இங்கே குருதி கொதிக்கிறது

வான்வழியே விழுந்தது வெடி அல்ல- எங்கள் நெஞ்சில் விழுந்த இடி!!

தம்பி தமிழ்ச்செல்வா! நீ மாபெரும் இயக்கத்தின் அரசியல் வழிகாட்டி மட்டுமல்ல

தம்பி பிரபாகரனைக் காண வீரமண்ணிற்கு எமை அழைத்துச் சென்று விருந்தோம்பி உபசரித்து மறத் தமிழ் மக்களின் மற்றோர் உலகை எனக்குக் காட்டியவனும் நீ தான்!

அதனால்தான் அன்றே என் அரசியல் காவியத்திற்கு உன் பெயரிட்டேனோ?

ஈழத்திற்கான அமைதிப் பேச்சுவார்த்தையை, சமாதானப் பாதை நோக்கிய பயணத்தை உலகெங்கிலும் உள்ள அரசியல் அரங்குகளில் ஓங்கி ஒலிக்கச் செய்த தம்பியே! உமது இழப்பு ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்லாது- உலக உருண்டையின் மூலை முடுக்கெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கும் எம் தமிழர்கள் எல்லோருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அந்தோ!

அன்று சிங்கத்தை இழந்தோம்!

இன்று தங்கத்தை இழந்துவிட்டோம்!!

அகிம்சை வழியில் அறத்தை கையிலேந்திய திலீபனைக் கொன்ற கைகள்தான் இன்று உன்னையும் தின்றது!

திலீபன் இறந்தபோது அவன் தாய் கூறினாள்- "திலீபனைப் புதைக்கவில்லை..விதைத்திருக்க

  • தொடங்கியவர்

மனித குலம் நிச்சயம் மன்னிக்காது- குறிப்பாக தமிழர்கள் மன்னிக்கமாட்டார்கள்: மருத்துவர் இராமதாஸ்

ஈழத் தமிழர்களின் உரிமைக் குரலாம் தமிழ்ச்செல்வனை படுகொலை செய்த பாதகச் செயலை- இனவெறித் தாக்குதலை மனித குலம் நிச்சயம் மன்னிக்காது- அதிலும் குறிப்பாகத் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

Edited by yarlpriya

தமிழ் செல்வன், மற்றும் சக போராளிகள் தம் இன் உயிர் நீத்து, தமிழக உறவுகளின் கண்களில் நீர் பாயத் தொடங்கிவிட்டது. இவர்களின் எழிர்ச்சி நிற்சயம் மத்திய அரசை ஆட்டம் காண வைக்கும் என்பதில் ஐயம்மில்லை.

  • தொடங்கியவர்

சிங்கள அரசுக்கு இனியேனும் இராணுவ உதவிகளை இந்தியா நிறுத்த வேண்டும் என்று தமிழர் கழகத்தின் (தமிழ்நாடு) தலைவர் புதுக்கோட்டை பாவாணன் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • தொடங்கியவர்

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனைப் படுகொலை செய்த சிறிலங்கா அரசாங்கத்துடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டிக்க வேண்டும் என்று ஜனநாயக முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ஜெகத்ரட்சகன் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • தொடங்கியவர்

கொடுஞ்செயல்: விஜயகாந்த் அதிர்ச்சி

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை படுகொலை செய்தது கொடுஞ்செயல் என்று தமிழ்நாட்டின் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

Edited by yarlpriya

  • தொடங்கியவர்

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவு குறித்து தான் மிகவும் அதிர்ச்சியும் கவலையும் அடைதுள்ளதாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான தலைவர் றொபேர்ட் ஈவான்ஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • தொடங்கியவர்

பலபரிமாணம் கொண்ட பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை இழந்து தவிக்கின்றோம் என்று அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு (ஜெனீவா) தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

Edited by yarlpriya

  • தொடங்கியவர்

அனைத்துலக சமூகங்களின் புலிகளுடனான தொடர்பாடலுக்குரிய முதன்மைப் பிரதிநிதி தமிழ்ச்செல்வன்: ஜோன் ஹன்சன் பௌவர்

அனைத்துலக சமூகங்களின் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான தொடர்பாடலுக்குரிய முதன்மைப் பிரதிநிதியாக பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் செயற்பட்டார் என்று இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

Edited by yarlpriya

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.