Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்து ஊர்ப்பெயர்களின் சொற்பிறப்பியலாய்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Saturday, July 21, 2007

'தமிழ்நெற்' இல் வெளிவரும் ஈழத்து ஊர்ப்பெயர்களின் சொற்பிறப்பியலாய்வு - ஒரு கண்ணோட்டம்

உண்மையில் 'கமம்', ' காமம்' என்ற இடங்களைக் குறிக்கும் ஈழத் தமிழ்ச் சொற்களின் வேர்கள் சமக்கிருதமா?

ஈழத்தின் ஊர்ப்பெயர்களுக்குச் சொற்பிறப்பியலாய்வின் மூலம் விளக்கமளிப்பதன் மூலம் புராதன காலம் தொட்டுத் தமிழர்களும் தமிழ் மொழியும் இன்றைய தமிழீழத்தில் மட்டுமல்ல, ஈழம் முழுவதும் பரந்து வாழ்ந்துள்ளனர் என்பதையும், சிங்கள மொழியின் வளர்ச்சியிலும் உருவாக்கத்திலும் தமிழ் மொழியாற்றிய பங்கையும், எந்தளவுக்கு இன்றைய சிங்கள மொழி தமிழ்ச்சொற்களை இரவல் வாங்கியுள்ளது என்பதையும் காட்டும் வகையில் தமிழ்நெற்றின் இந்தப் பணிக்கு எனது நன்றியும் பாராட்டுக்களும் உரித்தாகுக.

ஆனாலும் இந்தச் சொல்லாய்வு ஆங்கிலத்தில் மட்டுமிருப்பதால் அதைத் தமிழில் மொழிபெயர்த்து தமிழர்கள் அனைவருக்கும் பயன்படச் செய்யவும், அவ்வாய்வைப் பற்றிய கருத்துப் பரிமாற்றத்துக்காகவுமே இச் சிறுமுயற்சி.

வலிகாமம்

வலி + காமம் = மணல் கிராமம்

வலி - மணல்

காமம் - கிராமம், பயிர் விளையும் கிராமம்

இன்றைய சிங்களத்தில் வலி என்றால் மணல் என்று பொருள் தரும், சங்கத்தமிழில் வால் என்றால் வெள்ளை, பால் எனப் பொருள்தரும். வால் என்பது பழந்தமிழில் உள்ள பாலைக்குறிப்பிடும் குறிப்புப்பெயரெச்சமாகும். சங்கத் தமிழில் வால் எக்கர் என்பது வெள்ளை மணல் திட்டுகள் அல்லது வெள்ளை மணல் தொடர்களை அழைக்கப் பயன்படுத்தப்பட்ட சொல் ஆகும். சிலப்பதிகாரத்தில் வாலுகம் என்று வெள்ளை மணலை அழைப்பதைக் கவனிக்கலாம்.

'கம' என்பது சிங்களத்திலும் பாலி போன்ற பரகத மொழிகளிலும் பொதுவான வேர் கொண்ட சொல்லாகத் திகழ்கின்றது, அதுவே ஈழத்தமிழில் காமம் என்று வழங்கப்பெற்று வருகிறது. மேலும், கமம் என்ற சொல் பயிர்செய்கை நிலத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.

சோழர்களின் 12 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் வலிகாமம் என்ற பெயருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் என்பது மணற்றி அல்லது மணல்தொடர் என்பதன் ஒத்த சொல்லாகவும் இருக்கலாம். ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தை மணற்றி என்று அழைத்ததாகக் கூறப்படுகின்றது. வலிகாமத்தின் சொற்பிறப்பியல் தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் இரண்டிலும் பொதுவாக உள்ள எளிமங்களை விளங்கிக்கொள்ள நல்ல ஏதுவாக இருக்கும்.

வலிகாமம் என்ற சொல் ஒரு கிராமத்தின் பெயராக இருந்து பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேசத்தைக் குறிக்கும் சொல்லாக மாறியுள்ளது. இன்று வலிகாமம் என்பது ஐந்து நிர்வாகப் பிரிவுகளைக் கொண்ட பிரதேசமாக உள்ளது, அவை வலிவடக்கு, வலிதெற்கு, வலிகிழக்கு, வலிமேற்கு மற்றும் வலிதென்மேற்கு ஆகும். வலிகாமம் என்பதை வலி என்றே யாழ்ப்பாண நிர்வாக ஆவணங்களில் பாவிக்கின்றனர்.

Valikaamam வலிகாமம்

valikāmam

vali+kaamam

The sandy village. Vali sand Kaamam village, large village, cultivation village In today's Sinhalese, veli means sand. In old Tamil, vaal is an adjective meaning white and a synonym of paal. In Changkam diction, vaal ekkar is white sand dunes or sandy streches. Vaalukam is another word used for white sand in classical texts such as Chilappathikaaram.

Kaamam in Sri Lankan Tamil is a cognate of graama in Sanskrit. Kiraamam is another Tamil derivate of the word. While gama is the cognate in Sinhala and in some of the Prakrits such as Pali, it has become kaamam in Sri Lankan Tamil. Also note that the word kamam for cultivation land, is yet another derivate.

The usage of the word Valikaamam as an important place name is found in the Chola inscriptions of 12th Century A.D. It could perhaps be a synonym for ma'natti or ma'nal thidar (sandy stretch) by which the Jaffna peninsula was known.

The etymology of Valikaamam is a good example to understand the shared elements in Tamil and Sinhala languages.

Valikaamam which might have origninated as a name of a village, became the name of a region in the Jaffna peninsula. Today, it is devided into five administrative divisions, Valikaamam North, Valikaamam South, Valikaamam East, Valikaamam West and Valikaamam Southwest.

இந்த ஆய்விலுள்ள சில வேர்ச்சொற்களுக்கான விளக்கத்தை ஒப்புக்கொள்ள என்னுடைய நண்பர்களில் சிலர் மறுக்கின்றனர் எடுத்துக்காட்டாக,

"தமிழ்நெற்றின் கருத்துப்படி காமம் என்ற இலங்கைத் தமிழ்ச்சொல் சமக்கிருத '(g)கிராம" என்ற சொல்லிலிருந்து உருவானது. இன்னுமொரு தமிழ்ச்சொல்லாகிய கிராமம் என்ற தமிழ்ச்சொல்லும் அப்படி சமக்கிருதத்திலிருந்து உருவானதே. காமா என்பது சிங்களத்திலும் பாலி போன்ற பரகத மொழிகளிலும் பொதுவான வேர் கொண்ட சொல்லாகத் திகழ்கின்றது, அதுவே ஈழத்தமிழில் காமம் என்று வழங்கப்பெற்று வருகிறது. மேலும், கமம் என்றசொல் பயிர்செய்கை நிலத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது"

ஆனால் தமிழ்ச் சொற்பிறப்பியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி கமம் என்று வயல் அல்லது பயிர் செய்யப்படும் இடத்தைக் குறிக்கும் இலங்கைத் தமிழ்ச்சொல் உண்மையில் சிங்களவர்களால் பழந்தமிழிலிருந்து இரவல் வாங்கப்பட்ட தமிழ்ச்சொல்லே என்பதாகும்.

இலங்கையிலுள்ள கதிர்காமம் என்ற இடம் தமிழ்ச்சொல்லே, தமிழர்கள் அங்கு பண்டு தொட்டு வாழ்ந்தார்கள் என்பது புதைபொருளாராய்ச்சியாளர்களா

அட இப்படி எல்லாம் இருக்கிறதா? தகவலுக்கு நன்றிகள் நுணா

அப்படின்னா "கொடிகாமம்" இதன் அர்த்தம் என்ன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொடிகாமம்" என்பதன் அர்த்தம்,காமம் - கிராமம், பயிர் விளையும் கிராமம்.ஆகவே கொடியுடன் கொடி,செடி) கூடிய கிராமம் என அனுமானிக்கலாம் நிலா.ஆனால் நிச்சயம் இல்லை.

வட்டுக்கோட்டையின் அர்த்தம் யாருக்காவது தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டையின் அர்த்தம் யாருக்காவது தெரியுமா?

வட்டுக்கோட்டை என்ற பெயர் வட்டக் கோட்டை என்பதில் இருந்து மருவி வந்ததென்று ஒருசாராரும் மறுசாரார் வடுகக் கோட்டையில் இருந்து வடுகர் என்னும் தென்னிந்தியர்களின் கோட்டை என்றும் வாதிடுகின்றனர்.

  • 3 weeks later...

வண்ணார்பண்ணை என்ற இடத்தின் அர்த்தம் என்ன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வண்ணார்பண்ணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வண்ணார்பண்ணை தற்போதைய யாழ்ப்பாண நகரப்பகுதியில் அடங்கியுள்ள ஒரு பகுதியாகும். 'வண்ணார்' என்பது தமிழில் சலவைத் தொழில் செய்யும் சாதியினரைக் குறிப்பதால் முற்காலத்தில் இப்பகுதியில் மேற்படி சாதியினர் கூடிய அளவு வாழ்ந்திருக்கூடும் எனத் தெரிகிறது. இப்பகுதியில் நகர மத்திக்கு மிகவும் அண்மையில் "வண்ணான் குளம்" என அழைக்கப்படும் குளமொன்றும் உண்டு. இது மிக அண்மைக்காலம் வரை, துணி சலவை செய்வதற்கு, சலவைத் தொழிலாளர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது.

[தொகு] அமைவிடம்

தற்காலத்தில் வண்ணார்பண்ணை என்று அழைக்கப்படும் பகுதி, நகர மத்திக்கு அண்மையில் தொடங்கி, காங்கேசந்துறை வீதி, கஸ்தூரியார் வீதி என்னும் வீதிகளை அண்டிச் சுமார் ஒரு மைல் தூரம் வரை வியாபித்து உள்ளது.

[தொகு] வரலாறு

யாழ்ப்பாண அரசர் காலத்தில் நல்லூர் தலைநகரமாயிருந்தபோது, வண்ணார்பண்ணை பனங் கூடல்கள் நிரம்பிய சிற்றூராக இருந்ததாகத் தெரிகிறது. பின்னர் போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தைத் தங்களது நிர்வாக மையமாக மாற்றிக் கடற்கரையோரமாகக் கோட்டையொன்றையும், அருகில் தங்கள் வாழ்விடங்களையும் அமைத்துக்கொண்ட பின்னர், இப்பகுதி படிப்படியாக வளர்ச்சியடையத் தொடங்கியது.

"http://ta.wikipedia.org

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இப்படிச் சொல்கின்றீர்கள். சிங்களவர்கள் இப்படி ஒரு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

http://www.geocities.com/place.names/sindex.htm

அப்ப நுணாவில் எண்டது.?

நுணாவில் Nunavil = අහුවිල, AHUVILA :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடதமிழீழத்தில் யாழ் குடாநாட்டின் தென் மூலையில் உள்ள தென்மராட்சியின் தலைநகரம் சாவகச்சேரி. ஏ 9 வீதி என்று அழைக்கப்படும் யாழ் நகருக்கும் இலங்கையின் புராதன நகரான கண்டிக்கும் இடையில் இணைப்பை ஏற்படுத்தும் பாதையில் உள்ள ஒரு அழகிய நகரம் அது.

சாவகச்சேரி நகரின் அயற்கிராமங்களாக மட்டுவில், நுணாவில், சங்கத்தானை, கச்சாய், மீசாலை, கைதடி போன்ற இடங்களைக் குறிப்பிடலாம். இன்னும் பல சிறிய இடங்களும் இருக்கின்றன. அதையும் பட்டியல் இட்டால் அதுவே தனியொரு கட்டுரை ஆகிவிடும்.

புவியியல் ரீதியாக நோக்கின் குடாக்கடலின் உப்புக்காற்று தூர இருந்து வருகிறது. ஆங்காங்கே வெண் மணற்தரைகள். பொதுவாக நிலத்தடி நீர் உவர்ப்புத் தன்மையாக இருக்கும். இருந்தாலும் நன்னீர் கிடைக்கும் இடங்களும் அதிகம் உண்டு. நிலத்தைத் தோண்டந்தோன்ட மணல் வந்து கொண்டே இருக்கும். வெகு ஆழத்தில் மட்டும் படிவுப்பாறைகள் தோன்றும். சில இடங்களில் வழமைக்கு மாறாக கருங்கற்பாறைகள் மட்டும் வருவதுண்டு. அப்படி ஒரு கிணறை அவதானித்து இருக்கின்றோம். அவர்கள் அந்தக் கிணற்றுக்கு எந்த சீமெந்து வேலையும் செய்யவில்லை. இயற்கையாகவே அந்த இடத்தில் கருங்கற்பாறைகள் உள்ளன.

தாவரங்கள் விலங்குப் பரம்பல்கள் என்று நோக்கின் நீண்டு வளர்ந்த தென்னைகளும் பனைகளும் பூவரசும் பலாவும் மாவும் நாவலும் இலுப்பையும் வாகையும் இலந்தையும் முருங்கையும் மரமுந்திரிகையும் ஈச்சும் அலங்கரிக்கும் ஒரு சோலை கொள் நகரம் சாவகச்சேரி என்றால் மிகையல்ல.

பறவைகளில் பலாக்கொட்டைக் குருவி, கொண்டைக்காரக் குருவி, அண்டங்காகம், அரிசிக்காகம், பச்சைக்கிளி, செம்பகம், மயினா, புலுனி, ஆந்தை மற்றும் மாடப்புறா, மணிப்புறா வகைகள் நிறைந்திருக்கின்றன. பல அரிய வகைப் பறவைகளையும் அவதானித்ததுண்டு. மாரி காலங்களில் பூமிப் பந்தின் வடதுருவத்தில் இருந்து இடம்பெயரும் பறவைகள் வயல்வெளிகளில் இருப்பதைக் காணலாம். குறிப்பாக பிளமிங்கோ வகைகளைக் கண்டதுண்டு.

விலங்குகள் ஊர்வனவற்றில் பாம்பு மிக அதிகம். விசமுள்ள பாம்புகளில் இருந்து விசம் குறைந்த சாரைப்பாம்பு, கோடாலிப்பாம்பு, மரங்களில் வாழும் பச்சைப்பாம்பு என்று பல பாம்புகள் உள்ளன. பூச்சிகளில் மட்டத்தேள், தேள், கறுப்புத் தேள், புலிமுகச் சிலந்தி என்று விச ஜந்துகளுக்கு குறைவே இல்லை. தேவாங்கு என்ற ஒன்று (குரங்கு போல சிறியது, இரண்டு பெரிய கண்கள் உண்டு) இரவில் மாமரங்களில் அதிகம் இருந்து ஓசை எழுப்பும். குரங்குகள் அட்டகாசமோ அது தனி. கீரி, கோழிகளைப் பிடிக்கும் மரநாய், உடும்பு மற்றும் ஓணான் போன்றவை பல வகைகளின் உண்டு. நிறைந்த உயிரினப்பன்மையை சாவகச்சேரியிலும் அவதானிக்கலாம்.

வீடுகளில் வளர்ப்புப் பண்ணைகளில் மாடு ஆடு கோழி நிறைந்திருக்கும். சிலர் முயலும் வளர்ப்பர். சாவகச்சேரி நகரின் சுற்றயலில் கிராமங்களில் கொய்யா நாவல் ஈச்சு நிறைந்த பற்றைக்காடுகள் நிறைந்து காணப்படுவதால் அவ்விடங்களில் உடும்பு, முயல், வெளவால் வேட்டையாடுதலை பொழுதுபோக்காகவும் சிலர் உணவுத் தேவைகளுக்காகவும் செய்வர்.

பழங்களில் பலாப்பழம், மாம்பழம், வாழைப்பழம் நாவற்பழம் கொய்யாப்பழம் அன்னமுன்னாப் பழம் மரமுந்திரிகை இலந்தைப்பழம் என்று பல வகைப் பழங்கள் இலவசமாகக் கிடைக்கும்.

மாம்பழத்தில் கறுத்தக் கொழும்பு, வெள்ளைக் கொழும்பு, விலாட், அம்பலவி, சேலம், கிளிச்சொண்டு (புளி மாங்காய்) என்று பலவகைகள் உண்டு.

தொடர்ந்து சாவகச்சேரியின் முக்கிய அம்சங்கள் குறித்து நோக்குவோம்,

நகரின் மத்தியில் சாவகச்சேரிச் சந்தை உண்டு. நவீன தொடர்மாடிக் கட்டிடத்துடன் கூடிய வியாபார நிலையங்களும் அங்கு உண்டு. சந்தைப் பகுதியில் வார இறுதியில் சந்தை கூடுதல் விசேடமாக இருக்கும். பல ஊர்களிலிருந்தும் வாகனங்களில் பலாப்பழம் மாம்பழம் மரக்கறி வகைகள் பனங்கிழங்கு மரவள்ளிக் கிழங்கு வாங்குவதற்காக அவை மலிந்திருக்கும் காலங்களில் மக்கள் படையெடுப்பர். நவீன வசதிகளுடன் கூடிய பஸ்தரிப்பு நிலையமும் நகரின் மத்தியில் அமைந்திருக்கிறது. சாவகச்சேரி புகையிரத நிலையமும் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த காலத்தில் ரயிலில் பயணித்து யாழ் நகர் சென்ற நினைவுகளும் இப்போதும் உள்ளன. சாவகச்சேரி புகையிரத நிலையம் விசாலமானதுடன் நீண்ட மேடையையும் கொண்டது. மேற்குலக நகரங்களில் உள்ளது போன்ற அடிப்படைக் கட்டுமானம் அங்கும் இருந்திருக்கிறது. ஆனால் நவீனத்துவமான கருவிகள் உபகரணங்கள் புகையிரதங்கள் இல்லை. மின்சாரத்தில் இயங்கும் அதிவேக, நவீன வடிவமைப்புள்ள புகையிரதங்களாக அன்றி டீசல் எரிபொருளில் இயங்கும் புகையிரதங்களே இயக்கப்பட்டன. நகரின் வர்த்தகச் செயற்பாட்டுக்கும் மக்களின் போக்குவரத்துக்கும் இந்த புகையிரத நிலையம் அளப்பரிய சேவை செய்தது. பின்னர் ஏற்பட்ட போர்ச்சூழல் அந்தப் பகுதியையே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாக்கிவிட்டது.

நக்ரின் மத்தியில் டிறிபேர்க் கல்லூரி என்ற புகழ்பூத்த கல்லூரி உண்டு. முன்னர் ஒரு காலத்தில் குடாநாட்டின் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாகவும் இது விளங்கியுள்ளது. பல கல்விமான்களை உருவாக்கிய பெருமை இக்கல்லூரிக்கு உண்டு.காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கூட தனது ஆரம்பக் கல்வியை அங்குதான் பயின்றுள்ளார். இக்கல்லூரியும் சாவகச்சேரி இந்துக் கல்லூரியும் தற்போதும் புகழோடு விளங்குகின்றன. சாவகச்சேரி இந்துக் கல்லூரி இலங்கையின் தேசிய பாடசாலைகளில் ஒன்றாக மிளிர்ந்து நிற்பதோடு தென்மராட்சியில் இருந்து பல மாணவர்களைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வரும் சிறப்பையும் பெற்று விளங்குகிறது. இவை இரண்டும் ஆண்கள் - பெண்கள் கலந்து கல்வி கற்கும் பாடசாலைகள் ஆகும். நகரின் மத்தியில் பெண்களுக்கான ஒரு கல்விக் கூடமும் உண்டு. அது சாவகச்சேரி இந்து மகளிர் மகா வித்தியாலயம் என்று அழைக்கப்படுகிறது. இவற்றைத் தவிர பல சிறிய கல்விக் கூடங்களும் உள்ளன. நகரின் வடக்கே நுணாவில் கிழக்கில் அமிர்தாம்பிகை வித்தியாலயம் என்ற ஒரு கல்விக்கூடம் உண்டு. அங்குதான் அடியேன் ஆரம்பக் கல்வி கற்றேன் (ஆண்டு 1 தொடக்கம் 3 வரை). தென்மராட்சியில் பலரைப் ஆண்டு 5 புலமைப் பரிசியில் பரீடசையில் சித்திபெற வைக்கும் பாடசாலையது. தமிழர்களின் சொத்தே கல்வி என்பதற்கு சாவகச்சேரி நகரை அலங்கரிக்கும் கல்விக் கூடங்களும் சாட்சி பகர்கின்றன.

நகரின் மத்தியில் இருந்து சற்று தெற்கு நோக்கி ஏ9 சாலை வழி செல்லின் சாவகச்சேரி பொது மருத்துவமனை இருக்குமிடத்தை போய் சேரலாம். நடுத்தர அளவிலான மருத்துவமனை அது. 24 மணி நேரமும் சேவை வழங்கி வருவதோடு நகரில் உள்ள மக்களின் சுகாதார வைத்திய வசதிகளை மேம்படுத்திய நிலையில் வைத்திருக்கவும் பணியாற்றி வருகிறது. போர்ச் சூழலால் பல இடர்களைக் கண்டும் தளராத உறுதியோடு அதன் பணியாளர்களும் வைத்தியர்களும் தாதியரும் சேவையாற்றி வருகின்றனர்.

நகரின் மத்தியில் சற்று ஒதுக்குப்புறமாக சிறப்பான பெரிய நூலகம் உண்டு. அறிவு தோன்ற முதலே அங்கு சென்று நூல்களைக் கிழித்து விளையாடியதில் எமக்கும் பங்குண்டு.சிறிது வளர்ந்த பின்னர் சிறுவர் நூல்கள் பலவற்றை கடன் வாங்கிப் படித்துள்ளோம். சிறுவர்கள் பெரியவர்கள் என்று அந்த ஊர் மக்களின் அறிவுப்பசிக்கு தீனியிட்ட நூலகங்களில் சாவகச்சேரி நூலகம் குறிப்பிடத்தக்க பங்களித்துள்ளது. சமீபத்திய போரின் பின் இப்போ அதற்கு என்ன கதி நேர்ந்துள்ளதோ தெரியவில்லை. இதைத் தவிர ஊரெங்கும் வாசிகசாலைகள் இருக்கின்றன. நாளந்த செய்தித் தாள்களை அங்கு படிக்கலாம்.

சாவகச்சேரி நகரை அண்டி ஒரு இடிந்த கட்டிடம் உண்டு. அதுதான் சிறீலங்கா அரசு தந்த அடிமைச் சின்னம். சிறீலங்கா பொலிஸ் நிலையம். அது அப்போ போராளிகளால் தாக்கி அளிக்கப்பட்டது. இப்போ மீண்டும் எழுந்து நிற்கிறதோ தெரியவில்லை. சாவகச்சேரி நீதிமன்றமும் இடிந்து போய்விட்டது. இப்போ அது எங்கே இயங்குகின்றது என்பதும் தெரியவில்லை.

தென்மராட்சி மக்கள் ஆன்மீக பற்றுதல் கொண்டவர்கள். சாவகச்சேரி நகரின் சுற்றயலிலும் சைவம் கிறிஸ்தவம் இஸ்லாம் ஆகிய மதங்களைப் பின்பற்றும் மக்கள் தாங்கள் வழிபட என கோயில்களும் கிறிஸ்தவ தேவாயலங்களும் மசூதிகளும் கட்டி வைத்துள்ளனர். சாவகச்சேரி நகரில் தமிழ் முஸ்லீம் மக்கள் சகோதரர்களாக நெடுங்காலம் வாழ்ந்து வந்துள்ளனர். பல வியாபார ஸ்தாபங்கள் முஸ்லீம்களுக்குச் சொந்தமானவையாகவும் விளங்கின.

சாவகச்சேரி மக்களின் வாழ்வியல் பெரிதும் விவசாயம் சார்ந்திருக்கிறது

நகரைச் சுற்றிய பகுதிகள் பொன் விளையும் பூமி என்றால் மிகையல்ல. நீண்டி நீடித்த வயல்களும் பச்சைப்பசேல் என்று தெரியும் நெற்பயிர்களுமாக ஆண்டு தோறும் வருட இறுதில் நகரின் சுற்றுப்புறம் பசுமை கொண்டிருக்கும்.

பயணப்பாதை நெடுகினும் பசுமை கோலோஞ்சி இருக்கும். கண்ணுக்கும் மனதுக்கும் ரம்பியமாக இருக்கும் அக்காட்சிகள். மாஞ்சோலைகளும் தென்னந்தோப்புக்களும் பனங்கூடல்களும் அழகுக்கு அழகு சேர்த்துக் கொண்டிருக்கும். இன்று சிங்களப்படைகளின் ஆக்கிரமிப்பால் பல தென்னைகளும் பனைகளும் வயல்களும் அவற்றின் செழிப்பிழந்து போயுள்ளன.

தென்மராட்சி மக்களின் பிரதானமாக நெற்பயிற்செய்கை செய்வோரே அதிகம். சிலர் தோட்டங்கள் செய்வர். இதை சாவகச்சேரி நகரை அண்டிய இடங்களிலும் தெளிவாகக் காணலாம். பாரம்பரிய நீரிறைப்பு முறைகளில் ஒன்றான துலாமிதித்தல் மூலம் நீர் இறைப்பை மேற்கொண்டு தோட்டங்களில் உள்ள கத்தரி, மிளகாய்,புடோல், பயற்றை, பூசணி, மரவள்ளி போன்ற மரக்கறிப் பயிர்களுக்கு வாய்க்கால்கள் வழி நீர் பாய்ச்சுவதைப் பார்த்திருக்கின்றோம். பலர் நவீன முறைகளையும் கையாள்கின்றனர்.சாவகச்சேரி கத்தரிக்காய்க்கு தனி மதிப்புண்டு.சாவகச்சேரி கத்தரிக்காய் வலிகாமம் பகுதியில் விளையும் கத்தரிக்காய் போன்று ஊதா கலந்தன்றி வெள்ளையாக குண்டாக சிறிதாக இருக்கும். பாடசாலையில் வெள்ளையாக குண்டா கட்டையாக இருப்பவர்களை வரணிக் கத்தரிக்காய் என்று பட்டம் சொல்வார்கள். காரணம் வரணியிலும் கத்தரி பயிரிடுதல் அதிகம். சாவகச்சேரி நகரின் சுற்றயலிலும் கத்தரிப் பயிர்ச்செய்கை நடந்தது. இப்போ அவர்கள் எல்லாம் இடம்பெயர்ந்து வெளிநாடுகள் போய்விட்டார்கள்.

மழைக்காலத்தில் வயல்களுக்குப் போனால் பெரிய அகன்ற வரம்புகளும் அவை நிரம்ப மழை நீரும் தேங்கி இருக்கும். மீன் குஞ்சுகளும் வாற்பேத்தைகளும் நீந்தி மகிழும் காட்சியை வரப்போர புற்தரையில் நின்று மணிக்கணக்கில் ரசிக்கலாம். கிளிகளும் புறாக்களும் குருவிகளும் "விசிற்" அடிப்பதுவும் கும்மாளம் அடிப்பதும் அழகோ அழகு.

நெற்பயிற்ச் செய்கையானது உழவியந்திரங்கள் அல்லது மாடு பூட்டிய கலப்பைகள் கொண்டு நிலத்தை உழவு செய்வதில் இருந்து ஆரம்பமாகும். மண்ணைப் பண்படுத்திய பின் விதைப்பு நடைபெறும். விதைப்பின் சிறிது காலம் காத்திருப்பர். மழை பெய்ததும் மழை நீர் தேங்கி நிற்க சகதிகளுக்குள் இறங்கி நாற்றுநடுதலில் ஆண்களும் பெண்களும் வேறுபாடின்றி தங்களை உழைப்பை நல்குவர்.

நெற்பயிர்களில் நெற்கதிர்கள் தோன்றிய பின் வயல்களின் நடுவே சிறிய சிறிய குடில்கள் அமைத்துக் காவலிருப்பர். குடிசைகளுக்கு அருகில் பூவரசம் தடிகளால் ஆக்கப்பட்ட சிறிய கண்காணிப்பு நிலைகள் இருக்கும்.பொதுவாக இரு தட்டுக்கள் கொண்டதாக அமைந்திருக்கும் இந்த நிலைகளில் சாக்கு அல்லது கோணிப்பைகள் கொண்டு தளமிட்டிருப்பர். சுமார் எட்டுத் தொடக்கம் 10 அடிவரை உயரமான இந்தக் கண்காணிப்புக் கோபுரங்களில் ஏறி இருந்து வயலை நோட்டமிடுவர். வயலின் நடுவே ஆங்காங்கே பானை வைக்கோல் பூவரசம் தடிகள் கொண்டு செய்யப்பட்ட பொம்மைகள் ( வெருளிகள் என்றும் சொல்வார்கள்) நெற்பயிர்களைத் தேடி வரும் பறவைகளை விலங்குகளை விரட்ட என்று செய்து நாட்டி இருப்பர். மேற்குலக நாடுகளிலும் கோதுமை வயல்களில் இதே போன்ற காட்சியைக் கண்ட போது தேசங்கள் மாறினும் மக்களிடையே சில பாரம்பரிய நடைமுறைகளில் இருந்த, இருக்கின்ற ஒற்றுமைகளை மாற்றமின்றி காணவும் உணரவும் முடிந்தது.

இரவுவேளைகளில் வயல்களில் இருக்கும் கண்காணிப்பு நிலைகளில் லாந்தர் என்ற மண்ணெய்யில் எரியும் விளக்குகளை வைத்திருப்பர். சிலர் சிறிய மின்பிறப்பாக்கிகள் (ஜெனரேற்றர்) மூலம் மின் விளக்குகளால் வெளிச்சமூட்டியும் இருப்பர். லாந்தார் அளிக்கும் மங்கிய ஒளியும் அகன்ற இருளும் மனதுக்குள் பயத்துடன் கூடிய ஒரு குசியை உண்டு பண்ணும். நள்ளிரவில் பனி இரவில் போர்த்து மூடியபடி, விழித்து எழுந்து கண்பாணிப்பரணில் ஏறி நின்று துணிச்சல் பொங்க கத்தி மகிழ்ந்த இரவுகள் வாழ்வின் வசந்த இரவுகள்.

சூடடித்தல், பிரமிட்டு வடிவில் வைக்கற்போர் வைத்தல் என்று பல நிகழ்வுகள் வயலோடு நெற்பயிற்செய்கைக்காலம் முடியும் வரை தொடரும். அது ஒரு கனாக் காலமாக இன்று நினைவில் விரிகிறது. காரணம் கூட மகிழ்ந்திருந்த பல உறவுகள் இன்று ஊரோடு இல்லை. நெற்பயிற்செய்கை காலம் ஒரு மன மகிழ்வுக்காலமாகவே முன்னரெல்லாம் மக்கள் மனங்களில் நிறைந்திருக்கும். வயற் சொந்தக்காரர்கள் ஆளுக்கு எத்தனை மூட்டை நெல் விளச்சல் என்று போட்டியும் போட்டுக் கொள்வார்கள்.

சிறியவர்கள் ஒன்று சேர்ந்து புதுநெல்லெடுத்து ஏ 9 சாலையில் சாவகச்சேரி நகருக்கு வடக்கே உள்ள 190 ம் மைல்கல் உள்ள இடத்தில் இருக்கும் அரிசியாலையில் குற்றுவித்து அல்லது அக்காமாரைப் பிடிச்சு உரலில் குற்றுவித்து புதுதாய் காய்க்கும் தென்னை மா பலா என்று மரங்களுக்கு பொங்கல் செய்து விழா எடுப்போம். கூடவே தென்னை மட்டையில் மட்டை செய்து கிரிக்கெட் விளையாடுவோம். இப்படி இன்பமாய் கழிந்த பொழுதுகள் பல.

சாவகச்சேரி நகர மக்கள் பல்வேறு நிர்வாகத் தொழில் திறமைகளையும் கொண்டவர்கள். பலர் அரச பணியாளர்களாக ஆசிரியர்களாக வியாபாரம் மற்றும் சுயதொழில் செய்வோராக என்று பல மட்டங்களில் தங்கள் நிர்வாகத் திறமைகளையும் காட்டி வந்துள்ளனர். பலர் நெசவுத் தொழிலில் கைதேர்ந்தவர்களாகவும் இருந்துள்ளனர்.

மேற்குலக நகரங்களில் பூங்காக்கள் அமைத்து வைத்து பொழுது போக்குவர். சாவகச்சேரியை எடுத்துக் கொண்டால் அதுவே ஒரு பூங்கா போன்றது. அத்துணை அம்சங்களும் தன்னகத்தே கொண்ட ஒரு இயற்கை எழில் கொஞ்சும் இடம் அது.

மக்கள் நிறைந்த அன்பானவர்கள். பழக இனிமையானவர்கள். என்ன கொஞ்சம் அதிகம் "சவுண்டு" விடுவார்கள். பக்கத்தில் நிற்கும் மகளை கூப்பிடவும் "பிள்ளோய்" என்று 100 மீற்றர்கள் கேட்கக் கத்துவார்கள்.

கொஞ்சம் கஞ்சத்தனம் இருக்கிறது. வேலிச் சண்டை பொதுவானது. பூவரசம் குழைக்கு, வேலி தாண்டிய பலாக் கொப்புக்கு, மாங்கொப்புக்கு என்று சண்டை பிடிப்பார்கள். குடும்பச் சண்டைகளுக்கும் குறைச்சல் இல்லை. இருந்தாலும் ஆண் பெண் வேறுபாடு அதிகம் இல்லை. எல்லோரும் சகஜமாகப் பழகுவார்கள். பெரியவர்களை மதிப்பார்கள். அயலூர்காரர்களை வரவேற்பார்கள் உபசரிப்பார்கள் மதிப்பார்கள்.

கிட்டத்தட்ட பிறந்ததில் இருந்து 10 வருடங்கள் அந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறோம். பின்னரும் அடிக்கடி போய் வந்திருக்கின்றோம். அந்த வகையில் அந்த மண்ணின் வாசனை நம்மோடு ஒட்டித்தான் உள்ளது. மண்வாசனையாச்சே போகுமா என்ன.

எம் தாய் எம்மை மட்டும் சுமந்தாள். நிலம் எல்லோரையும் சுமக்கிறாள். அந்த வகையில் எம்மைச் சுமந்த எம் மண்ணைப் பற்றியும் எங்களை அரவணைத்த மக்களைப் பற்றியதுமான இச்சிறுகுறிப்பை தாயகப்பறவைகளுக்கு பரிசளிக்கின்றோம்.

ஆக்கம் - குருவிகள்

_________________

வாழ்க்கை அநுதாபங்களிலோ கவர்ச்சியிலோ அமைந்துவிடக் கூடாது மனங்களின் புரிதலில் அமைய வேண்டும்.

நட்புடன்

இரசிகை

நன்றி --குருவிகள், ரசிகை, ஞாபமூட்டிய தயா அண்ணாவுக்கும்.

மாம்பழமும் ,பலாப்பளமும் செறிவாக கிடைக்கும் இந்த ஊரில், நல்ல பழங்களை எல்லாம் சந்தைக்கு அனுப்பிவிட்டு. குருவிகள் குடைந்த பழங்களை இந்தமக்கள் உண்ணுவார்கள்.... கேட்டால் அந்தபழங்கள் ட்தான் சுவையானவை எண்று விளக்கம் தருவதாலோ என்னவோ சாவகசேரி எண்றாலே மக்கள் " கொந்தல்" எண்று செல்லமாக அழைக்க படுகிறார்கள்... :):lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இது சாவகச்சேரியில் மட்டுமல்ல, பெரும்பாலான ஊர்களிலும் இந்த மாதிரி விளையாட்டுத் தான், பழங்களில் அங்கங்கே, வெட்டுப் போட்டுத் தான் சாப்பிடுவார்கள்.

உண்மையில் 90ம் ஆண்டு கோட்டை அடிபாடாகட்டும், யாழ் இடப்பெயர்வாகட்டும் எமக்கு ஆதரவளித்த ஊர் சாவகச்சேரி. யார் என்று அறியாமலேயே இருக்க இடம் தந்திருந்தனர். அதற்கு நன்றி சொல்லித் தான் ஆகவேண்டும். ஆனால் என்ன நாம் இருந்த இடம் கல்வயல். உவர் நிலம்... தண்ணிக்காக கோவில் கிணவு சென்று விடியவே லைன் கட்டி நிற்க வேண்டும். :):lol:

உண்மையில் 90ம் ஆண்டு கோட்டை அடிபாடாகட்டும், யாழ் இடப்பெயர்வாகட்டும் எமக்கு ஆதரவளித்த ஊர் சாவகச்சேரி. யார் என்று அறியாமலேயே இருக்க இடம் தந்திருந்தனர். அதற்கு நன்றி சொல்லித் தான் ஆகவேண்டும். ஆனால் என்ன நாம் இருந்த இடம் கல்வயல். உவர் நிலம்... தண்ணிக்காக கோவில் கிணவு சென்று விடியவே லைன் கட்டி நிற்க வேண்டும். :D:D

A9 பாதைக்கு அண்மையில் இருக்கும் கிழக்கு, மேற்கு நுணாவில் மக்கள் கூட இந்திய இராணுவத்துக்கு பயந்து கல்வயலுக்கைதான் பதுங்கினவர்கள்...!!

சரி உங்களுக்கு தாளையடி அம்மன் கோயில் ஞாபகத்திலை இருக்கும் எண்டு நம்புறன்.... (அது ஒருவிசயத்துக்கு பிரபல்யமான கோயில் :huh: )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.