Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் கடிதம் -திரைப்படம் நோர்வேயில் 02.02.2008

Featured Replies

காதல் கடிதம் - உலகத் தமிழருக்கான திரைப்பொங்கல்- நோர்வேயில் 02.02.2008

Soria Moria Kino, Oslo, Norway

02.02.2008

KL.21.00

உலகெங்கிலும் வாழுகின்ற எம் தமிழ் உறவுகளுக்கு வணக்கம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். ஆனால் நாங்கள் உடல் முதல் உயிர் வரை வலிகள் சுமந்த வண்ணமே வாழ்ந்து வருகின்றோம்: தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளில் உங்களுக்கு இணையத்தின் வாயிலாக என் இதயத்தின் பொங்கல் வாழ்த்துகள்.

காதல் கடிதம் இறுவட்டின் மூலம் ஏற்கனவே உங்களுக்கெல்லாம் அறிமுகமான ஓர் தமிழனின் உள்ளத்தில் இருந்து எழுகின்ற குரல். எங்கள் கலைகளின் வளர்ச்சி தொடர்பாகவும், எங்களுடைய காதல் கடிதம் திரைப்படம் சார்பாகவும் உங்களோடு மனம் விட்டுப் பேசவே இந்த மடலை எழுதுகின்றேன்.

எங்கள் திரைப்படத்துறையை எப்படி கட்டியெழுப்புவது? எங்களுக்கென ஓர் திரைக்களத்தை எங்கு நிறுவுவது போன்ற கேள்விகள் எழுந்த வண்ணமே உள்ளது. எம்முள் வாழ்கின்ற பல ஈழத்துக் கலைஞர்களின் கலைப்படைப்புக்கள் ஆங்காங்கே குறும்படங்களாகவும், முழுநீளத் திரைப்படங்களாகவும் பூத்துக்கொண்டிருக்கின்றது. இருப்பினும் எத்தனையோ நல்ல கலைஞர்கள் இந்த முயற்சியில் இறங்கி முயன்று பார்த்து மூச்சறுந்த நிலையில், போதிய ஒத்துழைப்புகள் இல்லாமல் கலைத்துறையில் இருந்து விலகிச் செல்லும் நிலையே புலம் பெயர் நாடுகளிலும் சரி தாயகத்திலும் சரி காணப்படுகின்றது. அங்குள்ள சூழ்நிலைகளைக் கடந்தும் அபூர்வமானதும், அற்புதமான படைப்புகள் சில வருவதை எண்ணி நான் பலமுறை வியப்படைந்திருக்கின்றேன்.

கடந்த ஜந்து வருடங்களுக்கு முன் இசை உலக வரலாற்றில் புதிய முயற்சியாக வெளிவந்த எங்கள் காதல் கடிதம் இசைத் தொகுப்பு பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த இசைத் தொகுப்பு தமிழ் மக்கள் மத்தியிலும், பத்திரிகைகள் மற்றும் தமிழ் ஊடகங்கள் அனைத்திலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. உலகத் தமிழ் உறவுகள் அனைவருமே உன்னதமான ஒத்துழைப்பை வழங்கியிருந்தீர்கள். அதன் பின் நாங்கள் என்ன செய்தோம் என்ற கேள்வி உங்களில் பல பேருக்கு எழுந்திருக்கும். அப்படி உங்கள் மனதில் பல கேள்விகள் எழுந்தால் அதுவும் நியாயமானது.

இந்த இசைத் தொகுப்பின் வெற்றிக்குப் பின் நானும் இசையமைப்பாளர் வி.எஸ்.உதயா அண்ணனும் இணைந்து இப்பாடல்களை வைத்துக் கொண்டு ஒரு திரைப்படம் உருவாக்குவதற்கான முயற்சியில் இறங்கினோம். அன்றில் இருந்து இன்றுவரை நாங்கள் என்னதான் எங்கள் வழமையான பணிகளில் முழுமையாக ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும்

காதல் கடிதம் திரைப்பட தயாரிப்பு பற்றிய தீப்பந்தம் ஒன்று எங்கள் மூளையின் ஒரு பகுதியில் எரிந்து கொண்டே இருக்கும். விடாமுயற்சியோடு நிறையவே விளையாடினோம்.

ஓர் இலக்கை அடைவதற்கான அனைத்து முறைகளையும் பரிசித்துப் பார்த்தோம்.

எங்கள் வாழ்வை நாமே பதிவு செய்யவேண்டும். அதை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லவேண்டும் என்று எல்லோரும் எண்ணுவார்கள், ஆனால் அணில் போன்றே செயற்பட எத்தனை பேருக்கு இங்கே ஆர்வம் உள்ளது. நாங்கள் தார்மீகமான கடமையுணர்வோடு எங்கள் வேலையைத் தொடங்கினோம். இலங்கை, இந்தியாவில் வாழ்கின்ற எமது கலைஞர்களோடு, தமிழ்நாட்டில் உள்ள திரைப்படத்துறை சார்ந்த, தேர்ந்த கலைஞர்களின் ஆதரவையும் திரட்டி, இத்திரைப்படத்தை தயாரிப்பதற்கான வடிவமைப்பு வேலைகளை ஆரம்பித்தோம்.

ஆனால் ஓர் ஆச்சரியமான உண்மை என்னவென்றால் திரைப்படத்துறை சார்ந்து எனக்கு ஒரு துளிகூட அறிவோ, அனுபவமோ இருக்கவில்லை. ஆனால் இசையமைப்பாளர் உதயா அண்ணாவிற்கு நிறையவே இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஒரு திரைப்படம் தயாரிப்பதற்கான திட்டமிடுதல் வேலைகளை தொலைபேசி வாயிலாகவே ஒழுங்கு செய்தோம்.

கடந்த 2004ம் ஆண்டில் இருந்து ஒரு பக்கம் தயாரிப்பிற்கான வேலைப்பணிகளும், மறுபுறம் நல்ல ஒரு தயாரிப்பாளரைத் தேடும் படலமும் நடந்துகொண்டிருந்தது.

தமிழ்நாதம் இணையத்தளத்தின் மூலமும் ஏனைய தமிழ் ஊடகங்கள் மூலமும் இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தோம். இந்தத் திரைப்படத்திற்கான கதையை உதயா அண்ணாவின் மனைவி திருமதி வினோலியா உதயா அவர்கள் எழுத மறுபுறத்தில், தொழில்நுட்பக் குழுவை இணைக்கும் பணியில் முழுமூச்சாக உதயா அண்ணன் அவர்கள் செயற்பட்டார்.

இத் திரைப்படத் தயாரிப்பிற்கான திட்டத்தில் எத்தனையோ கலைஞர்களை வெளிநாடுகளில் இருந்தும் இணைப்பதற்கு முயன்றோம். கதாநாயகியாக ஈழத்தமிழ் பெண்ணே நடிக்க வேண்டும் என்று எண்ணி விளம்பரம் செய்திருந்தோம். ஒருவர் கூட முன்வராத நிலையிலே தமிழகத்தில் இருந்தே ஈழப்பெண்ணாக நடிப்பதற்கு அனிஷாவை தேர்ந்தெடுத்தோம். கதாநாயகனாக சிறிபாலாஐpயை தெரிவுசெய்தோம். இவை அனதை;துக்கும் உதயா அண்ணாவின் தமிழகத்தில் உள்ள நண்பர்களே பெரிய உதவியாக இருந்தார்கள்.

இத் திரைப்படத்தை இயக்குவதற்காக இயக்குனர் சேரனிடம் பணிபுரிந்த உதவி இயக்குனர் முகேஷ் அவர்களையும், ஒளிப்பதிவாளராக பி.ஆர்.ராஐனையும் உதயா அண்ணா தெரிவுசெய்தார். இப்படிப் பல தொழிநுட்பக் கலைஞர்கள் தெரிவுசெய்யப்பட்ட நிலையில் தான் ஒரு சிறந்த தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும் என்று புலம்பெயர்நாடுகளில் நானும், இந்தியா, இலங்கையில் உதயா அண்ணாவும் தேடினோம். எத்தனையோ உறவுகள் எங்களோடு இணைவதாகச் சொல்லி இறுதியில் அனைவருமே விலகிக்கொண்டார்கள். என்ன சினிமா என்றால் வீண்போன துறையாகவே எம்மவர்கள் பார்ப்பதாலோ என்னவோ.? ஆனால் இலங்கையில் உள்ள உதயா அண்ணாவின் இனிய நண்பர் தேவதாசன் மூலம் தில்லைநாதன் தில்லைவண்ணன் என்கிற துடிப்புள்ள தயாரிப்பாளர் எங்களுக்கு அறிமுகமானார். திரைப்படத் தயாரிப்பு வேலைகள் அனைத்துமே துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. திரைப்படத் தயாரிப்பு வேலைகளுக்காக 25 நாட்கள் இலங்கையில் எம் திரைப்படக் குழுவினர் கடுமையாக உழைத்தார்கள். 75 வீதமான படப்பிடிப்பு பல இன்னல்களுக்கு மத்தியில் இலங்கையிலேயே நடைபெற்றது

இந்த வேளையில் எல்லாம் தமிழ்நாதம் இணையதளத்தின் ஊடாகவும்;, யாழ் இணையம், தமிழமுதம், பதிவுகள் போன்ற பலதரப்பட்ட இணையத்தளங்களும், உதவி புரிந்தன. இலங்கையில் சக்தி.எப்.எம் வானொலி மற்றும் தொலைக்காட்சி முழுமனதோடும், எங்களுக்கு யாழ்தேவிப் பாடல் காணொளியை உருவாக்குவதற்கு பெரிய உதவியாக அனுசரணை வழங்கினார்கள்.

இதன்பின் கனடாவில் உள்ள வானொலிகள், முறையே கனேடியத் தமிழ் வானொலி, கனேடியப் பல்கலாச்சார வானொலி, ஒலி.எப்.எம், கீதவாணி போன்ற ஏனைய ஊடகங்களும் முழுமையான ஆதரவை வழங்கின. தமிழ் பத்திரிகைகள் அத்தனையும் எங்களுக்கு, எங்கள் திரைப்படம் சார்ந்த தகவல்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க பெரிதும் உதவின. இங்கு யாரையாவது தவறவிட்டால் பெரியமனதுடன் பொறுத்துக் கொள்ளுங்கள்

இதே போன்று இங்கு ஐரோப்பாவில் ஐ.பி.சி தமிழ் வானொலி, நோர்வேயில் உள்ள தமிழ் முரசம் வானொலி முன்னாள் தமிழ் ஒளி தொலைக்காட்சி, தீபம் தொலைக்காட்சி, தரிசனம் தொலைக்காட்சி போன்றவையும் முழுமையான ஒத்துழைப்பையும் தந்தன. இதைவிடவும் யாழ் இணையத்தளம் இன்றுவரை எங்களை உற்சாகப்படுத்தி வருகின்றது. என் ஞாபக அறைகளில் எத்தனையோ இணையத்தளங்கள் நன்றியுணர்வோடு பதிவில் இருக்கின்றன. எத்தனை எத்தனையோ தனிப்பட்ட நபர்கள், ஊடக நண்பர்கள் என எங்களுக்கு ஒரு பெரிய நட்பு வட்டாரமே உருவாகியிருக்கின்றது.

காதல் கடிதம் திரைப்படம் உருவாவதற்கு எங்கள் ஊடகங்களோடு தமிழகத்தில் இருந்து வெளிவருகின்ற தமிழ்சினிமா.கொம், சினிசவுத், தற்ஸ்தமிழ், வெ;பஉலகம், இன்டியாகிளிற்ஸ் இணையப்பத்திரிகைகள், சஞ்சிகைகள்கூட பாரிய ஒத்துழைப்பைக் கொடுத்துள்ளன, கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஒரு சுழியத்தில் இருந்து ஆரம்பித்த கலைப்படைப்பு, எத்தனையோ இன்னல்களைத் தாண்டி திரையரங்குக்க வருவதற்கு தயாராக இருக்கின்றது.

ஆனால் நான் இங்கு இந்தக் கடிதத்தை எழுதுவதற்கு முக்கியமாக ஒரு தடைக்கல்லாக இருப்பது இத் திரைப்படத்தை சந்தைப்படுத்துதல் அல்லது உலகமெங்கும் வெளியீடு செய்வது. அது பற்றி உங்களோடு விரிவாக எங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளப் போகின்றேன். தமிழ்சினிமா தொடங்கி எழுபத்து ஜந்து ஆண்டுகள் கடந்து ஓடிவிட்டது. அமெரிக்காவின் படங்களுக்கு இணையான தொழில்நுட்பத்தோடு போட்டி போடத் தயாராக இருக்கின்ற நிலையில் நாங்கள் எங்கே நிற்கின்றோம்.? என்பதுதான் என் முதல் கேள்வி. எங்கள் திரைப்படங்கள் உருவாகாமல் இருப்பதற்கு என்ன காரணம்? புலம்பெயாந்த நாடுகளில் எல்லா வசதிகளோடு இருக்கின்ற எங்களால் ஏன் தமிழச் சினிமாவிற்கும், தமிழக சினிமாவிற்கும், பெருமை சேர்கின்ற வண்ணம் திரைப்படங்களைத் தயாரிக்க முடியாது. அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நாங்கள் ஏன் பின் நிற்கின்றோம்? இப்படி பல கேள்விகள் எங்கள் முன் உள்ளது.

இப்படியான சூழ்நிலையில் தான் காதல் கடிதம் திரைப்படம் தயாரிக்கப்பட்டு வெளிவர இருக்கின்றது. இத் திரைப்படத்தை திரையிடுவதற்கு திரையரங்குகள் கிடைக்காமல் இருப்பதற்கும், விநியோகம் செய்ய முடியாமல் இருப்பதற்கும் யார் காரணம்? எங்களுடைய இந்தக் காதல் கடிதம் திரைப்படம் 2006 ஆண்டே திரைக்கு வந்திருக்க வேண்டிய ஒர் திரைப்படம். ஆனால் இவ்வளவு காலமும் இத்திரைப்படத்தை வாங்க ஒருவரும் முன்வராத நிலையில் இருந்தோம். ஈழத்தமிழர்களாகிய எங்களில் சிலர் பெரிய விநியோக நிறுவனங்களை வைத்திருந்தும்கூட எங்களை ஊக்கப்படுத்தவோ, கைகொடுக்கவோ ஒருவரும் முன்வரவில்லை.!

இத்திரைப்படத்தை விற்பதற்கு எங்கள் தயாரிப்பாளர் ஒன்றரை வருடமாக போரடி வந்தார். ஆனால் திடிரென்று ஓர் நாள் தமிழகத்தில் உள்ள திரு ராமநாதன் என்கின்ற ஒரே ஒரு விநியோகஸ்தர் தான் எங்கள் திரைப்படத்தின் தரம், மேன்மை கருதி இதைத் தமிழகத்தில் வெளியிட முன்வந்திருக்கின்றார். ஆனால் இலங்கையில் தயாரிப்பாளரே திரையிட வேண்டிய நிலையில் தேவதாசன் மட்டுமே தனிமனிதனாக போராடிக் கொண்டிருக்கின்றார். அவருடைய ஆணித்தரமான முயற்சியை முறியடிக்கும் வகையில் பணம் படைத்த சக்திகள் சிலரால் இலஞ்சமாக வீசப்பட்டு, கிடைத்த மூன்று திரையரங்குகள்கூட மறுக்கப்படுகின்றது.

இது வர்த்தகம் தொடர்பான கலைத்துறையாக இருந்தாலும் காசு மட்டும் முதன்மையாக பார்க்கப்படுகிற மிகக் கீழ்த்தனமான நிலையில் எங்கள் தமிழ்ச்சினிமா மாறிக் கொண்டிருக்கிறது. இவர்களையும் நாங்கள் தான் உற்சாகப்படுத்தி வளர்க்கின்றோம். இதை தடுத்து நிறுத்தி தரமான கலைப்படைப்புக்கள் வெளிவர யார்தான் உதவுப் போகின்றார்கள்? இது எங்களைப் போன்று திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற அனைவருக்கும் உள்ள பெரிய பிரச்சனை.

என்ன மக்களே உங்களிடம் தான் கேட்கின்றேன். எங்கள் குரல் கேட்கின்றதா? எங்கள் வாழ்வைத் தரமான, கனமான சினிமாப் படைப்பாக உருவாக்கி மக்கள் சிந்தனையை உயர்த்த வேண்டும் என்கிற இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், கலைஞர்களோடு கைகோர்த்து அவர்களின் குரலாகவும் ஓங்கி ஒலிக்கின்றேன்.! நீங்கள் உடுக்கின்ற உடை, உண்ணுகின்ற உணவு, குடிக்கின்ற தண்ணீர் முதல் வாழ்வின் அத்தியாவசிய தேவைகள் அனைத்துக்குமே பணம் கொடுத்து அனுபவித்து மகிழ்வீர்கள். ஆனால் பல வகையான கலைகளையும் உள்வாங்கிய சங்கமமாக வெளிவரும் சினிமாத் திரைப்படங்களையும், இறுவட்டுகளையும், காணொளிப்பதிவுகளையும் ஏன் காசு கொடுத்து வாங்கி மகிழக்கூடாது. எம்மைப் போன்று எத்தனையோ கலைஞர்களின் உள்ளக் குமுறல்களுக்கு உங்கள் காதில் விழவில்லையா..? கலைப் படைப்புக்கு ஒத்துழைப்புக் கொடுக்காத ஒவ்வொரு தமிழனும் இனி வெட்கப்பட வேண்டும். தமிழன் உயாந்தவனாக மாற புதிய சிந்தனைகள் வளரவேண்டும்.

இத்தனைக்கும் எம் தாயகத்தில் நிகழ்கின்ற அனைத்து அவலங்களையும் உணர்ந்து தார்மீக உணர்வோடு செயல்படுகின்றோம். இல்லையேல் அதற்கும் சிலபேர் விமர்சனம் என்ற பெயரில் ஏதாவது புதிதாகச் சொல்லி எங்கடை குரல்வளைய நசுக்க வருவினம். கலை மக்களுடைய வாழ்க்கையை பிரதிபலிக்க வேண்டும் என்பதில் உறுதியாகவும், தெளிவாகவும் இருக்கின்றோம். எத்தனை எத்தனை இழந்தோம்..? அத்தனையும் திரும்பப் பெறுவதற்கு இந்தக் கலைப்படைப்புகள் தானே எமக்கு ஆறுதல் தரும்;. அப்போது நெருப்பில் இருந்து எழுகின்ற பறவையின் உற்சாகம் எமக்கு வரும்.

ஆனால் நாங்கள் எல்லாத்துறையிலும் திறம்பட வளர்ந்திருக்கின்றோம் இந்தத் திரைப்படத்துறை ஒன்றைதவிர என்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சிதான். இதையும் ஏன் விட்டுவைப்பான் என்பதே எமது தீவிரமான கலைப்பயணத்தின் தொடக்கம்.

காதல் கடிதம் திரைப்படத்துக்கு எங்களை, உங்களை நம்பி பணம் முதலீடு செய்த உறவை எப்படி நாங்கள் காப்பாற்றப் போகின்றோம்.? இது எங்கள் சமூகத்தின் முன் நாங்கள் வைக்கின்ற உள்மன ஆதங்கம். காதல் கடிதம் கதையை, திரைக்கதையை, இசையை, பாடல்களை, ஒளிப்பதிவை, எங்கள் வாழ்விடங்களை நம்பி பணத்தைக் கொட்டி ஒரு நல்ல மனதுடன் வந்த தயாரிப்பாளரை தோல்வியடையச் செய்யப் போகின்றோமா..? அல்லது பல கோடி கைக்களாய் இணைந்து வெற்றியடையும் வகை செய்திடுவோமா. நான் தாயகத்தில் உள்ள உறவுகளை உரிமையோடு இப்போது கேட்க முடியாது.! அவர்கள் படுகின்ற துன்பங்கள், வேதனைகள், இழப்புகள் எல்லாவற்றையும் நாம் அறிவோம் ஆகவே புலம்பெயர்ந்த தமிழ் உறவுகள் உங்களிடம் தான் உதவிடக் கேட்கின்றோம். உங்களை நம்பியே எங்கள் படைப்பை நாங்களாவே வெளிக்கொணரவும் இருக்கின்றோம். நீங்கள் எப்படி எங்களை ஊக்கப்படுத்தப் போகின்றீர்கள்? எந்த வகையில் உதவப் போகி;ன்றீர்கள்.

ஒரு ஆணிவேர் திரைப்படம் வந்தது, யாருமே எதிர்பாராத வெற்றி பெற்றது. அதன் பின் வந்த எங்கள் வாழ்வு சார்ந்த எந்தத் திரைப்படமும் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை! இதுதான் உண்மை. ஏங்கள் படைப்புகள் எம்மவர்களுக்கு நம்பிக்கையில்லையா? எமது உறவுகளால் மதிக்கப்படாமல் நாங்கள் எப்படி தமிழக உறவுகளிடம் மதிப்பளிப்பீர்களா என்று எதிர்பார்ப்பது.? அவர்களுக்கு நாங்களே பெரிய வர்த்தக சந்தையாகவும், முதுகெலும்பாக செயற்படுவது மகிழ்வான விடயம். ஆனால் எங்களின் நிலைதான் என்ன.?

வியாபார நோக்கோடு மட்டுமே வருகின்ற படங்கள் தான் வெற்றிபெற வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகிவிட்டதா? சிறிய முதலீட்டில் தயாரிக்கப்படுகின்ற படங்கள் வெற்றிபெறக்கூடாதா? இது எங்கள் உறவுகள் சிந்திக்க வேண்டிய நேரம்! அண்மையில் வெளிவந்து இராமேஸ்வரம் திரைப்படம் எங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பபைப் பெறாமல் போனதற்கு யார் காரணம்? ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்கு முன்பாகவே விசத்தனமான விமர்சனங்களை விதைப்பதில் இருந்து விடுபட்டு எம் இளம் சமுதாயம் எடுக்கின்ற புதிய முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டாமா..?

கிட்டத்தட்ட தமிழன் புலம்பெயாந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் எங்கள் வாழ்வை ஆவணமாக்குவதற்குரிய நவீன தயாரிப்புத் திட்டங்கள் இல்லாது வெறும் மேடை நிகழ்வுகளில் நனைந்து கொண்டிருக்கின்றோம். நாங்கள் திரும்பிப் பார்க்கும் போது காத்திரமான ஆவணப் படைப்புகளாக என்னதான் இங்கே. மிச்சப்போகின்றது, மிச்சியிருக்கின்றது? எங்கள் நிகழ்கால வாழ்வை அன்றன்றே பதிவு செய்து காட்டுவது போல் இறந்தகால, எதிர்கால் நிகழ்வுகைள பதிவுசெய்ய சினிமாவே சிறந்ததும், முதன்மை வாய்ந்த ஊடகமாகும்.

காதல் கடிதம் திரைப்படத்திற்கு, படைப்பின் தரம் சார்ந்து கிடைக்கப் பெறுகின்ற விமர்சனங்களைப் பார்க்கும் போது எங்களுக்கு மகிழ்வாக இருக்கின்றது. எங்கள் மக்களிடம் இருந்தும் பல விமர்சனங்களை எதிர்பார்க்கின்றோம். இக் கடிதத்தின் நிறைவுப் பகுதிக்கு வருகின்றேன். உங்கள் நாடுகளில் இருந்து இரண்டோ அல்லது ஐந்தோ குடும்பங்களாக அல்லது நண்பர்களாக இணைந்து எங்களுடைய இத்திரைப்படத்தை உங்கள் நாடுகளிலும் திரையிடுவதற்கு முன் வாருங்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் எப்படிச் செய்யலாம் என்பதைக் கூற நாங்கள் தயாராக இருக்கின்றோம். இதை வர்தக ரீதியிலோ அல்லது நட்புரீதியிலோ கதைத்து ஒரு மக்கள் விநியோக வலையை உருவாக்க காதல் கடிதம் திரைப்படம் முன் உதாரணமாக இருக்கட்டும். இந்த தயாரிப்பாளர் தொடாந்தும் நல்ல திரைப்படங்களை தயாரிக்க அவர் முதலீடு செய்த கோடி பணம் மீளப்பெற வேண்டும் என்பது எங்களின் பிரார்த்தனை. எங்கள் மத்தியில் பல தயாரிப்பு நிறுவனங்கள் தோன்ற வேண்டும் அதற்கு எங்கள் திரைப்படமும் வெற்றி பெற வேண்டும்.

இத் திரைப்படத்தை தயாரித்த Water Falls Movie Makers நிறுவனத்துக்கு எங்கள் திரைப்படக் குழுவினர் சார்பில் மனமாhந்த நன்றிகளையும் இத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன். இதுவரையில் எந்தத் தமிழ்த் திரைப்படங்களிலும் இடம்பெறாத அழகு தளங்களில் காதல் காட்சிகள், பாடல் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு, வவுனியாவில் இத்திரைப்படத்தின் திருப்புமுனைக் காட்சி படம்பிடிக்கப்பட்ட போது, வவுனியாவில் வாழ்கின்ற தழிழ்; மக்கள் மனமுருகி அக்காட்சியோடு ஒன்றிப்போய் கண்ணீர் சிந்திய காட்சி எம் விழித்திரைகளில் இன்னும் உறைந்திருக்கின்றது.

தொழிநுட்பக் கலைஞர்கள்:

தயாரிப்பு: T.தில்லைவண்ணன் Water Falls Movie Makers . மூலக்கதை: வினோலியா

திரைக்கதை, வசனம், இயக்கம்: முகேஷ் ஒளிப்பதிவு: டீ.சு.ராஐன் இசை: வி.எஸ்.உதயா

பாடல்கள்: வசீகரன் (நோர்வே) கலை: கலைராஐ; நடனம் : காதல் படப் புகழ் கந்தாஸ்,

படத்தொகுப்பு: வாசு சலிம் நிழற்ப்படம் : சிற்றரசு

திரைப்படம் தொடர்பான செய்திகள், விளம்பரங்கள், விமர்சனங்களுக்கு இங்கே அழுத்தவும்.

www.wmmfilm.com www.vnmusicdreams.com www.tamilcinema.com www.cinesouth.com

www.indiaglitz.com பாருங்கள். திரையரங்கத்திற்கு வாருங்கள். உங்கள் அன்புக்கு நன்றிகள்.

என்றும் அன்புடன்

வசீகரன்

ஒஸ்லோ, நோர்வே

Edited by Tamizhvaanam

உங்கள் காதல்கடிதம் திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் வசீகரன்!

நிறைய கேள்விகள் கேட்டு இருக்கிறீங்கள். பதில் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் திரைப்படம் 'காதல்கடிதம்" வெற்றிபெறவேண்டும். வெற்றிபெறும். வாழ்த்துக்கள்.

வசீகரன் அண்ணா!!

உங்களிற்கு இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் :( ....உலக தமிழரின் திரைபொங்கலான "காதல் கடிதம்" பொங்கி வடிய வாழ்த்துகளை தெரிவிப்பதோடு :( ,உங்களினதும் மற்றும் "காதல் கடிதம்" பட குழுவினரதும் கடின உழைப்பு மற்றும் முயற்சி.."காதல் கடிதத்தை" வான் வரை கொண்டு செல்லும் :( ....இந்த படைப்பிற்கு நிச்சயமாக எம்மவர்களின் ஆதரவு இருக்கும்..எப்பவும் முதலில் நம்ம சனம் கொஞ்சம் தயங்கும் :D பிறகு ஒருத்தர் போக தாங்களும் போவார்கள் அது பழக்கபட்ட குணம் :( உடனே மாற்ற ஏலாது..காலம் போக..போக எம்மவர்களின் படைப்புகள் அதிகரிக்க...அதிகரிக்க...எங்கள் கலைஞர்களின் புகழும் வளர்ந்து நிற்கும்!! :(

"காலதிற்கேற்ற வண்ணம் எந்த படைப்பாக இருந்தாலும் இளைஞர்களின் பக்கபலம் என்றைக்கு எல்லா கலைஞர்களிற்கும் இருக்கும்" :(

"காதல் கடிதம்" வெற்றியுடம் உங்களை சந்திப்போம்...உங்களின் அயாராத முயற்சிக்கும் என்னுடைய வாழ்த்துகள்!! :)

நன்றி!!

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்

என் அன்புக்குரிய கலைஞன், சுவி, ஐமுனா(தம்பி)

அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். நீங்கள் வாழும் நாடுகளில் யாரவது காதல் கடிதம் திரைப்படத்தை திரையிட விரும்பின் என்னோடு தொடர்புகொள்ளவும்.

நோர்வேயில் 02.02.2008 சனிக்கிழமை மாலை காதல் கடிதம் திரையிடப்படுகின்றது. என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கின்றேன். காதல் கடிதம் திரைப்படம் தமிழகத்தில் ஒரே ஒரு திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது என்பதை யாழ்கள உறவுகளுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன். உங்கள் கருத்துகளுக்கும் ஒத்துழைப்புக்கும் இதயபூர்வமான நன்றிகள்

என்றும்

அன்புடன்

வசீகரன்.சி

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

யாழ்கள உறவுகளுக்கு மீண்டும் நீண்ட நாட்களின் பின் என் இனிய வணக்கங்கள்:wub:

என்னடா ஆளைக்காணவில்லையே என்று தேடியிருப்பீர்கள். எல்லாம் நாம் எழுதிய காதல் கடிதம் ஏற்படுத்திய மாற்றங்களால் உருவானது. எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகின்றேன்.

நாளைய தினம் எங்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்வில் ஓர் முக்கியமான நாள். எங்கள் காதல் கடிதம் திரைப்படம் நோர்வேயில் ஒஸ்லோ நகரிலுள்ள சூரியா மூரியா திரையரங்கில் வெளியாகின்றது. நோர்வேயில் இருக்கும் உறவுகள் முதல் முதலாக இத்திரைப்படத்தை பார்க்கப்போகின்றார்கள். 300 ஆசனங்களுக்கு மேல் முற்கூட்டியே விற்பனையாகிவிட்டது. இன்னும் 100 ஆசனங்கள் மட்டுமே இருக்கின்றன. ஆகவே நோர்வேஜில் இருக்கின்ற யாழ்கள உறவுகள் இத்திரைப்படத்தை பார்க்க விரும்பின் உங்கள் பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்.

Soria Moria Kino, Oslo, Norway

02.02.2008

KL.21.00

மேலதீக விபரங்கள் மற்றும் தொடர்புகட்கு இங்கே அழுத்தவும்:

http://www.vnmusicdreams.com/page.html?lang=eng

மீண்டும் உங்களை சந்திக்கும் வரை நன்றியோடு.

உங்கள் யாழ்கள உறவு

வசீகரன்.சி

0047 913 70 728

Edited by Tamizhvaanam

வணக்கம் வசீகரன், உங்கள் படம் நாளை ஹவுஸ்புல்லாக மக்கள் கூட்டத்தால் நிறைந்து ஓட வாழ்த்துக்கள்!

யாழ் கள உறவுகள் என்று பாத்தால் மோகன் அண்ணை, வாசகன், பரணி, நோர்வேஜின் அண்ணை இவையள மட்டும்தான் எனக்கு நினைவுக்கு வருது.

நோர்வேயில் உள்ள யாழ் வாசகர்களும் நிச்சயம் வருவார்கள் என்று நினைக்கின்றேன்.

நன்றி!

வணக்கம் வசி அண்ணா

காதல் கடிதம் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

80 களில் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி மாணவர்களால்

(ஆபாவாணான்) உருவாக்கப்பட்ட ஊமை விழிகள் திரைப்படம்

உருவான பின்பு அதை வெளிவரவிடாமல் பல முனைகளில்

இருந்து தொல்லைகள்,குழிபறிப்புக்கள் நிகழ்ந்த போதும்

மனம் தளராமல் விடாமுயற்சியுடன் திரையிட்டு வெற்றிக்கனியை

அவர்கள் சுவைத்ததுபோல நீங்களும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

உங்கள் ஏக்கம்,தாகம் எனக்கு புரிகின்றது.

காலப்போக்கில் மற்றவர்களும் புரிந்துகொள்வார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.