Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வர்ணாச்சிரமும் கம்ப இராமாயணமும் தமிழ்த் தேசியத்தைப் பலவீனப்படுதுகின்றன- அ.பொ நடேசன்

Featured Replies

மாமனிதர் கணேசமூர்த்தி எழுதிய இலங்கை மண் என்னும் புத்தக வெளியீட்டு விழாவில் வழங்கிய உரை.

புலிகளின் குரல் கருத்துப் பகிர்வில் இருந்து.

http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...thupakirvu.smil

  • கருத்துக்கள உறவுகள்

அட.. பலப்படுத்துவதாக இங்கு பெரீய்ய பிரச்சாரமே நடக்கிறதே.. :rolleyes:

  • தொடங்கியவர்

இருண்ட காலத்து இதிகாசங்களின் தாலாட்டுப்பாடல்களில் தூங்கிக்கிடந்த எம்மக்களைத் தட்டியெழுப்பி, விடுதலைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சாதி, சீதனம், பெண்ணடிமைத்தனம் போன்றவற்றிற்கு காப்பரணாக நின்று அநீதியில் அமைந்த பழைய சமூக உறவுகளைத் தகர்த்தெறிந்து, புதிய சமூக உறவுகளைக் கட்டியெழுப்ப, புதிய புரட்சிகரமான கருத்துக்களை மக்களது மனதைப் பற்றிக்கொள்ளும் விதத்தில் முன்வைத்தார். சீதன முறைமை என்பது ஒரு பெண் அடக்குமுறை வடிவம் என்பதை அறிவுசார் உலகத்தில் இருந்து சமூகவியல் கண்ணோட்டத்துடன் எடுத்து விளக்கி, பெண் விடுதலைக்குப் போராடினார். சாதாரண மனிதனின் சாதாரணமான சமூகப் பிரச்சனைகளைக்கூட சாதாரண மனிதன் புரிந்துகொள்ளும் வகையில் சாதாரண மொழியில் எடுத்து விளக்கி சமூக விடுதலைக்காகப் போராடினார்.

தொண்ணூறுகளில் இவர் எழுதிய வானொலி நாடகமாக ஒலிபரப்பாகிய இராவணனை கதாநாயகனாகக் கொண்ட "இலங்கை மண்" எனும் கலைப்படைப்பை எவருமே மறந்துவிட முடியாது.

தமிழ் மன்னன் ஒருவன் ஆக்கிரமிப்பு மனோபாவம் ஒன்றுக்குப் பலியாக்கி அதில் உண்மைகளை திரிவுபடுத்தி பொய்மைகளை புனைவுபடுத்தி தமது இலக்கியக் கதையாடலுக்கான சுவையூட்டியாகச் சேர்த்துக் கொண்டவர்களின் முகத்திரையைக் கிழித்து உண்மையை அனைவருக்கும் உணரச் செய்தது இவருடைய படைப்பாகும். அத்தகைய காலத்தை மிஞ்சிய தமிழ் வரலாற்றை கலைநுகர்வாளர்களின் கண்முன் கொணர்வித்து நிறுத்தியது தமிழின் வாழ்வு மீது இவர் கொண்ட பற்றுதலுக்கு நற்சான்றாகும்.

திரு.பொன். கணேசமூர்த்தி அவர்களின் இனப்பற்று, விடுதலைப்பற்று ஆகியவற்றுக்கு மதிப்பளித்தும் எமது தேச வளர்ச்சிக்கு அவர் வழங்கிய உயரிய பங்களிப்பைக் கௌரவித்தும் “மாமனிதர்” என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன்.

பொன். கணேசமூர்த்திக்கு "மாமானிதர்" விருது வழங்கி தமிழீழத் தேசியத்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

http://www.puthinam.com/full.php?2b1Voge0d...d434OO3a030Mt3e

Edited by narathar

  • தொடங்கியவர்

அட.. பலப்படுத்துவதாக இங்கு பெரீய்ய பிரச்சாரமே நடக்கிறதே.. :)

உங்கினேக்க ஒண்டு இரண்டு தமிழ்த் தேசியம் எண்டா என்ன எண்டு தெரியாம துள்ளிக் குதிக்குது எண்டாப்போல நடக்க வேண்டியதுகள் நடக்காமலா இருக்கும்?

தாங்கள் நினைப்பது , விரும்புவது தான் சரி எண்டு இருட்டறைக்க இருந்து எழுதுறவைக்கு வெளியால என்ன நடக்குது எண்டு என்னண்டு தெரியும்?

மாறும் காலங்களையோ சிந்தனைகளையோ உள் வாங்க முடியாதவர்கள் புலம்பிக் கொண்டு தங்கள் பிற்போக்கான எண்ணங்களுடன் சாவதைத் தவிர வரலாறு அவர்களுக்கு வேறு ஒண்டையும் விட்டு வைக்காது. :D

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சில பேர் புலிகள் ஏதோ திராவிடக் கொள்கைப்படிக் கதைத்து விட்டதாக நினைத்து மகிழ்ச்சி கொண்டாடுகின்றனர். ஆனால் இராமயணமே பொய் என்று புலம்பிய திராவிடக்காரர் கொள்கை வேறு, இராவணன் என்ற தமிழ் மன்னன் இருந்தான். அவனுடைய வரலாற்றைத் தவறாக எழுதிவிட்டார்கள். என்று இராமயணக்கதையை ஏற்கின்ற, ஆனால் அதில் உள்ள திரிபைக் கண்டிக்கின்ற புலிகள் வேறு என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மாமனிதர் கணேசமூர்த்தி அவர்கள் இறுதிக்காலம் வரை இறைபக்தனாகவே வாழ்ந்தார். அவருக்குத் தேசியத்தலைவர் கொடுத்த மரியாதைக்கு நாமும் தலை வணங்குகின்றோம்.

இலங்கை மண் நாடகமும் இராமாயணம் பொய் என்றுதான் சொல்கிறது. அதனால்தான் உண்மையயை ஆராய்ந்து அவர் எழுதியிருக்கிறார்.

இராமன் கடவுள் என்பது பொய்.

அனுமன் கடவுள் என்பது பொய்.

இராவணன் அரக்கன் என்பது பொய்

இப்படி ஆயிரம் பொய் சொல்கின்ற இராமாயணம் பொய். "இலங்கை மண்"தான் உண்மை.

இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை இது.

http://www.webeelam.com/KadduraiNaraks.htm

எமது தேசியத் தலைவரும், அரசியற்துறைப் பொறுப்பாளரும் போற்றிப் புகழ்கின்ற "இலங்கை மண்" நூலில் சொல்லப்பட்ட அதே விடயத்தை நானும் இக் கட்டுரையில் சொல்லியுள்ளேள்.

பா. நடேசன் அவர்கள் விடுத்த அறைகூவலை ஏற்று தொடர்ந்தும் தமிழர்களின் உண்மை வரலாற்றை ஆராய்ந்து ஆரியத்தின் முகத் திரையைக் கிழிப்போம்.

நடேசன் பிரபாகரன் போன்றோர் உதுகளை தனிமனிதர்களாக சொல்லியிருக்கலாம். அவர்களிற்கு பிடித்தமான உணவு சிற்றுண்டிகள் என்று இருப்பதில்லையா? அப்பிடித்தான் அவர்களிற்கு இலங்கை மண் பிடித்திருக்கலாம். அவர்களிற்கு அதிகம் பிடிக்காத உணவு நிறம் என்பன இருப்பது போல தான் கம்ப இராமாயணம் வர்ணாச்சிரமம் போன்றவையும் பிடிக்காமல் இருக்கலாம். உதுகள் அவையின்ரை தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள்.

எங்கடை போராட்டம் இராமாயணத்தை பொய் என்றும் வர்ணாச்சிரமம் பிழை என்று நிறுவ வெளிக்கிடவில்லை என்ற அடிப்படை விளக்கம் மில்லாததுகளை என்னவென்று சொல்ல...

இதுகளாலை தமிழ் இனி மெல்ல சாகும்.

எங்கடை போராட்டம் இராமாயணத்தை பொய் என்றும் வர்ணாச்சிரமம் பிழை என்று நிறுவ வெளிக்கிடவில்லை என்ற அடிப்படை விளக்கம் மில்லாததுகளை என்னவென்று சொல்ல...

இதுகளாலை தமிழ் இனி மெல்ல சாகும்.

நீண்ட காலத்துக்கு பிறகு ஒரு உண்மையான நோக்கு....!

பட்டினியில் இருப்பவனுக்கு நிலாவை மட்டும் காட்டுறதை விட்டு போட்டு.. சோறு எண்டால் என்ன எண்டு காட்டுங்கோ... பிறகு நிலாச்சோறு ஊட்டலாம்... !

  • தொடங்கியவர்

நீண்ட காலத்துக்கு பிறகு ஒரு உண்மையான நோக்கு....!

பட்டினியில் இருப்பவனுக்கு நிலாவை மட்டும் காட்டுறதை விட்டு போட்டு.. சோறு எண்டால் என்ன எண்டு காட்டுங்கோ... பிறகு நிலாச்சோறு ஊட்டலாம்... !

யாருக்குச் சொல்லுறியள்? சமூக விடுதலையுடன் முன் நெடுக்கப்படாத போராட்டம் வெற்றி பெறாது என்றும் ஆரியச் சிந்தனைகளில் இருந்து விடுபடாத தமிழ்த் தேசியம் பலம் பெறாது என்றும் சொல்லுற அரசியற் பொறுப்பளார் நடேசனுக்கா?

பட்டினியிலா வாடும் மக்களுக்கு நீங்கள் தானே சோறு ஊட்டுறியள் புலத்தில இருந்து கொண்டு.

சமூக ஒடுக்குமுறைக்கும் சாதியச் சுரண்டலுக்கும் உள்ளானவன் போராடி மடியிறது புலத்தில் இருக்கிற உங்களுக்காகத் தானே. புலத்தில் இருந்து கனவு காணுங்கோ :)

அவனுடைய வரலாற்றைத் தவறாக எழுதிவிட்டார்கள். என்று இராமயணக்கதையை ஏற்கின்ற, ஆனால் அதில் உள்ள திரிபைக் கண்டிக்கின்ற புலிகள் வேறு என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மாமனிதர் கணேசமூர்த்தி அவர்கள் இறுதிக்காலம் வரை இறைபக்தனாகவே வாழ்ந்தார். அவருக்குத் தேசியத்தலைவர் கொடுத்த மரியாதைக்கு நாமும் தலை வணங்குகின்றோம்.

இராவணன் என்பவனின் வரலாற்றைத் தவறாக எழுதியவர்கள் யார்? ஏன் எழுதினார்கள்?

அரசியற் துறைப்பொறுப்பாளர் ஆரியர் என்று குறிப்பிடுவது யாரை?

எந்தத் தமிழ் தெரிந்த குழந்தைக்கும் புலிகளின் நிலைப்பாடு என்ன என்பது இலகுவாக விளங்கும்.இங்கே விதண்டாவாதாம் செய்யும் ஒரு சிலரைத் தவிர.

யாருக்குச் சொல்லுறியள்? சமூக விடுதலையுடன் முன் நெடுக்கப்படாத போராட்டம் வெற்றி பெறாது என்றும் ஆரியச் சிந்தனைகளில் இருந்து விடுபடாத தமிழ்த் தேசியம் பலம் பெறாது என்றும் சொல்லுற அரசியற் பொறுப்பளார் நடேசனுக்கா?

தானே நடக்க மாட்டாதாம் மூஞ்சூறு விளக்குமாத்தையும் சேத்து தூக்கிச்சுதாம்.. போராட்டம் சிங்கள ஆதிக்கத்துக்கு எதிரானது அதுக்கு எதிரா தமிழர்களை ஒண்டு திரட்ட முடியாத புலம்பெயந்த செம்மறியள், ஆரிய அடக்கு முறைக்காக ஒன்று திரளுவியளாம்...

தமிழ் வழர்ச்சிக்காக பாடுபட்ட ஒருவரை கௌரவிக்கும் நிகள்வில், அவரின் ஆக்கத்துக்கு மதிப்பளிக்கும் நிகள்வில் அது பற்றி நடேசன் அண்ணா பேசுவது பிழையானது அல்ல.... ஆனால் அதுதான் இப்ப போராட்டத்துக்கு முக்கியமாக முன்னெடுக்க வேண்டியது எண்டு விளக்கம் கொள்ளும் உங்கட அறிவுதான் பிழையானது...

முதலிலை சிங்களவனாலை தமிழன் கொல்லப்படுவதை நிப்பாட்டி காட்டுங்கோ புலம்பெயந்த நாட்டிலை இருந்தாலும் ஊரிலை இருக்கிறவனுக்கு ஒருவேளை சுதந்திரமாய் சாப்பாட்டை காட்டுங்கோ... சுதந்திரமாய் தமிழனுக்கு ஒரு நாட்டை காட்டுங்கோ...

பிறகு ஐய்யனின் கோமணத்திலை உங்கட கொடிகளை பறக்க விடலாம்... அப்ப நீங்கள் கேக்கிறதுகள் தானாய் அமையும்...

பட்டினியிலா வாடும் மக்களுக்கு நீங்கள் தானே சோறு ஊட்டுறியள் புலத்தில இருந்து கொண்டு.

சமூக ஒடுக்குமுறைக்கும் சாதியச் சுரண்டலுக்கும் உள்ளானவன் போராடி மடியிறது புலத்தில் இருக்கிற உங்களுக்காகத் தானே. புலத்தில் இருந்து கனவு காணுங்கோ

வெறும் அரவேக்காட்டு தனமான பினாத்தல்....

புலம் பெயந்தவர்களின் போராட்டத்துக்குக்கான பங்களிப்பை உலகமே அறியும்.... இலங்கை அரசின் கொடுங்கோண்மையை உலகுக்கு சொல்வதும் புலம் பெயர்ந்தவைதான்...

தாயக மக்களுக்கான ஆதரவு என்பது புலம்பெயர்ந்தவர்களி பங்களிப்பு இல்லாமல் இல்லை...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இராவணன் என்பவனின் வரலாற்றைத் தவறாக எழுதியவர்கள் யார்? ஏன் எழுதினார்கள்?

அரசியற் துறைப்பொறுப்பாளர் ஆரியர் என்று குறிப்பிடுவது யாரை?

எந்தத் தமிழ் தெரிந்த குழந்தைக்கும் புலிகளின் நிலைப்பாடு என்ன என்பது இலகுவாக விளங்கும்.இங்கே விதண்டாவாதாம் செய்யும் ஒரு சிலரைத் தவிர.

திரு. நாரதர்

கதைப்பதாக இருந்தால் நேரடியாக்க கதைத்துப் பழகுங்கள்.

எது விதண்டாவாதம்.

புலிகளின் கருத்தை உங்களுடைய புளித்துப் போன திராவிடக்சாக்கடைக்கு முலாம் பூச அலைவது தான் விதண்டாவாதம்.

எப்பவாவது நேர்மையாக விவாத்திரு்ககின்றீர்களா? புலிகளைச் சாட்டி உங்களின் சாக்கடைக்கு அர்த்தம் கற்பித்ததைத் தவிர வேறு ஏதாவது செய்கின்றீர்களா?

  • தொடங்கியவர்

திரு தூயவன்,

மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டும் நீங்கள் பதில் சொல்லுங்கள், விதண்டாவாதம் இன்றியும் தனி நபர்கள் மீதான தாக்குதல் இன்றியும் கருத்தாடலாம்.

விடுதலைப் புலிகளின் அரசியற் பொறுப்பாளார் நடேசன் அவர்கள் ஆரியர் என்று கூறியது யாரை?

தேசியத்தலைவர் திரித்து எழுதப்படதாகக் கூறியது எதை? யாரால் ஏன் இது திரித்து எழுதப்பட்டது?

இங்கே நாங்கள் ஈவேரா பற்றியோ திராவிடக் கட்சிகள் குறித்தோ கருத்தாடவில்லை.

கருதாடலுக்குச் சம்பந்தமே இல்லாத விடயங்க்கள் பற்றி அலட்டிக் கொண்டிருக்க வேண்டாம்.அதனைத் தான் விதண்டாவாதம் என்று கூறி இருக்கிறேன்.

  • தொடங்கியவர்

தானே நடக்க மாட்டாதாம் மூஞ்சூறு விளக்குமாத்தையும் சேத்து தூக்கிச்சுதாம்.. போராட்டம் சிங்கள ஆதிக்கத்துக்கு எதிரானது அதுக்கு எதிரா தமிழர்களை ஒண்டு திரட்ட முடியாத புலம்பெயந்த செம்மறியள், ஆரிய அடக்கு முறைக்காக ஒன்று திரளுவியளாம்...

தமிழ் வழர்ச்சிக்காக பாடுபட்ட ஒருவரை கௌரவிக்கும் நிகள்வில், அவரின் ஆக்கத்துக்கு மதிப்பளிக்கும் நிகள்வில் அது பற்றி நடேசன் அண்ணா பேசுவது பிழையானது அல்ல.... ஆனால் அதுதான் இப்ப போராட்டத்துக்கு முக்கியமாக முன்னெடுக்க வேண்டியது எண்டு விளக்கம் கொள்ளும் உங்கட அறிவுதான் பிழையானது...

முதலிலை சிங்களவனாலை தமிழன் கொல்லப்படுவதை நிப்பாட்டி காட்டுங்கோ புலம்பெயந்த நாட்டிலை இருந்தாலும் ஊரிலை இருக்கிறவனுக்கு ஒருவேளை சுதந்திரமாய் சாப்பாட்டை காட்டுங்கோ... சுதந்திரமாய் தமிழனுக்கு ஒரு நாட்டை காட்டுங்கோ...

பிறகு ஐய்யனின் கோமணத்திலை உங்கட கொடிகளை பறக்க விடலாம்... அப்ப நீங்கள் கேக்கிறதுகள் தானாய் அமையும்...

வெறும் அரவேக்காட்டு தனமான பினாத்தல்....

புலம் பெயந்தவர்களின் போராட்டத்துக்குக்கான பங்களிப்பை உலகமே அறியும்.... இலங்கை அரசின் கொடுங்கோண்மையை உலகுக்கு சொல்வதும் புலம் பெயர்ந்தவைதான்...

தாயக மக்களுக்கான ஆதரவு என்பது புலம்பெயர்ந்தவர்களி பங்களிப்பு இல்லாமல் இல்லை...

ஆரியர் ,வர்னாச்சிரமம்,வரலாற்றுத் திரிப்பு என்று யார் பிதற்றி இருக்கிறார்கள், விடுதலைப் புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளரும் ,தமிழீழத் தேசியத் தலைவரும். நீங்கள் அவையளப் பாத்தோ புலத்தில் இருந்து ஒரு நாட்டைக் காட்டுங்கோ எண்டு கேக்கிறியள்?

அவயள் எது எதுகாகக் எப்படி உயிரைக் கொடுத்துப்போராட வேண்டும் எண்டதை நீங்களோ தீர்மானிக்கிறது?ஏன் நீங்கள் காசு குடுத்தா உங்கட விருப்பங்களை நிறைவேற்ற அவை உயிரைக் கொடுத்துப் போராட வேணுமோ? காசைக் கொடுதுப் போட்டு பாதுகாப்ப இருந்து கட்டளை இட உங்களுக்கு என்ன தார்மீக நியாயம் இருக்கு? காசுக்காகா போராடும் மக்களை விலை பேசுறவன் உண்மையான தேசிய ஆதாரவாளன் இல்லை, வெறும் வியாபாரி.

உங்களுக்கு எதிராக எழுதியதை வாசித்து பார்க்கு்ம் பழக்கம் தங்களிக்கு இல்லை எண்டது தெரியும்...

பார்பணியத்தை எதிர்த்து போராடுங்கோ எண்டு விடுதலை புலிகள் மக்களுக்கு எப்போதும் சொன்னதில்லை... அப்படியான தேவையும் அவர்களுக்கு இல்லை....! அவற்றை எப்படி கையாள வேண்டும் என்பதில் சரியான தெளிவும், திறனும் அவர்களுக்கு இருக்கு...!

உங்களின் வெட்டி வேலைகளுக்குள் புலிகளை நீங்கள் எடுக்காதீர்கள்... உங்களால் உந்த பார்ப்பணிய கோவணத்தை அவிட்டு தலைபாகை கட்டுறதை விட்டு போட்டு தாயகத்துக்காக ஏதாவது செய்ய முடிந்தால் செய்யுங்கள்... அது தான் உங்களை பொறுத்தவரை தமிழருக்கு செய்ய வேண்டிய தொண்டாக படும் பட்சத்தில் செய்யுங்கள்... எனக்கு உங்களில் வெட்டி வேலைகளில் உடன் பாடு கிடையாது...!!

இல்லா விட்டாலும் யாரும் உங்களை கட்டாய படுத்தவில்லை... வழமை போல வெட்டிதனமாக பார்ப்பண எதிர்ப்பு போராட்டம் நடத்துங்கள்... எனக்கு அது பற்றி கவலையும் இல்லை...

மேற் காட்டிய தலைப்பில் அரசியற் பொறுப்பளர் நடேசனும் தேசியத் தலைவரும் கூறி உள்ளவற்றை மட்டுமே எழுதி இருக்கிறேன், இதில் எனது கருதுக்கள் என்று எதுவும் எழுதவில்லை.இந்த நிலையில் என்னைப் பார்த்துச் சொல்வதற்க்கு எதுவும் இல்லை.சொல்லி இருப்பவை எல்லாம் புலிகள் கூறியவையே.

ஆகவே தலைப்புக்குச் சம்பந்தமாக சொல்வதற்கு எதுவும் இல்லாத விடத்து பேசாது இருப்பதே ஆரோக்கியமானா கருத்தாடலாக இருக்கும்.அதை விட்டு தனி நபர் தாக்குதலில் இறங்கினால் திருப்பித் தர வெகு நேரம் ஆகாது. யாழ்க் களத்தில் உங்களைப் போன்ற ஒரு சிலரின் தரமற்ற வார்த்தை பிரயோகங்களால் ஆரோக்கியமான கருதாடல்களை நடாத்த முடியாமலிருக்கிறது.

மேற் காட்டிய தலைப்பில் அரசியற் பொறுப்பளர் நடேசனும் தேசியத் தலைவரும் கூறி உள்ளவற்றை மட்டுமே எழுதி இருக்கிறேன், இதில் எனது கருதுக்கள் என்று எதுவும் எழுதவில்லை.இந்த நிலையில் என்னைப் பார்த்துச் சொல்வதற்க்கு எதுவும் இல்லை.சொல்லி இருப்பவை எல்லாம் புலிகள் கூறியவையே.

ஆகவே தலைப்புக்குச் சம்பந்தமாக சொல்வதற்கு எதுவும் இல்லாத விடத்து பேசாது இருப்பதே ஆரோக்கியமானா கருத்தாடலாக இருக்கும்.அதை விட்டு தனி நபர் தாக்குதலில் இறங்கினால் திருப்பித் தர வெகு நேரம் ஆகாது. யாழ்க் களத்தில் உங்களைப் போன்ற ஒரு சிலரின் தரமற்ற வார்த்தை பிரயோகங்களால் ஆரோக்கியமான கருதாடல்களை நடாத்த முடியாமலிருக்கிறது.

தமிழ் வழர்ச்சிக்காக பாடுபட்ட ஒருவரை கௌரவிக்கும் நிகள்வில், அவரின் ஆக்கத்துக்கு மதிப்பளிக்கும் நிகள்வில் அது பற்றி நடேசன் அண்ணா பேசுவது பிழையானது அல்ல.... ஆனால் அதுதான் இப்ப போராட்டத்துக்கு முக்கியமாக முன்னெடுக்க வேண்டியது எண்டு விளக்கம் கொள்ளும் உங்கட அறிவுதான் பிழையானது...

அரசியல் துறை பொறுப்பாளர் சொல்வதின் சுருக்கம் எப்படி எண்டால் வரலாற்று திரிபுகளை மாற்றி அமையுங்கள் என்பதுதான் வேண்டுகோள்... மாற்றி சரியானதாக அமைப்பதுக்கும் அதை ஒட்டு மொத்தமாக எதிர்ப்பதுக்கும் நிறைய வேறு பாடுகள்...

எதிர்ப்பதாக இருந்தால் இராமாயணம் என்பதை இலங்கை மண் எனும் நாடகமாக எழுத வேண்டியது இல்லை... அதை இலகுவாக நிராகரிக்க முடியும்...

அப்படி மாற்றி சரியான இதிகாசங்களை எழுத்துங்கள்...

எதிர்க்கிறோம் எண்று கிழம்பினது போதும் எங்களுக்கு இருக்கும் எதிரிகள் போதும்...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.